யாழ்-2

IMG-20210214-WA0021-db6c35da

யாழ் -2

சென்னை

ஏர்ப்போர்ட் வந்ததில் இருந்து நூறாவது முறையாகத் தன் வாட்ச்-ஐப் பார்த்தான் அஸ்வின் குமார். இன்று அவனின் அருமைத் தங்கை தர்ஷினி. முழுதாக இரண்டு வருடம் ஜெர்மனியில் பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்து முடித்து இன்று தான் வருகிறாள். தங்கை வரும் நேரம் தெரிந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கு முன்னாயே சென்று அவனின் வேலைகளையும் தள்ளிவிட்டு
அவளுக்காகக் காத்திருந்தான் அஸ்வின் குமார்.

ப்ளைட் சொன்ன நேரத்திற்கு லேண்ட் ஆக தங்கையை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவன் எதிர்ப்பார்ப்பைப்
பொய்யாக்காமல் வந்து
கொண்டிருந்தாள் தர்ஷினி. ஐந்தரை உயரத்தில் படிப்பிற்கேற்ற கம்பீரத்துடனும் அழகுடனும் வந்தவளை
காண சகோதரனுக்கே உண்டான பெருமை வந்தது. வந்து நின்று தன் அண்ணனைத் தேடியவள் அவன் அவளைப் பார்த்து பல் வரிசைத் தெரிய சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு
“அண்ணா… ” என்று கையைத் தூக்கி ஆட்டியபடி ஓடி வந்தாள்.

“வெல்கம் பேக்.. தர்ஷு” என்று கையை முன் வைத்து குனிந்து தங்கையை வரவேற்க

“அண்ணா…” என்று பல்லைக் காட்டியவள் “என்ன அண்ணா.. நான் வரேன் நீங்க கூப்பிடாம நின்னுட்டே இருக்கீங்க?” என்று குறையாகக் கேட்க அவளின்
சகோதரன் சிரித்தான்.

“இல்ல.. தங்கச்சி மேடம் ரொம்ப நாள் அப்புறம் வந்திருக்கீங்க.. அதான் அண்ணனனை அடையாளம் தெரியுதா என்னன்னு பாத்துட்டே இருந்தேன்” என்று நக்கலடிக்க

“நான் படிக்கணும்ல.. அதான் அண்ணா வரவே முடில” என்று சிரித்தபடியே சொன்னவளை பொய்யாய் முறைத்து
சிரித்தவன்..

“அதான் பாத்தானே.. எல்லாத்துலையும் ஜஸ்ட் பாஸ்.. அப்புறம் எங்காச்சு ஊர்
சுத்தீட்டு பேஸ்புக்.. இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட்டுட்டு இருக்கிறது..” என்று சிரிக்க தர்ஷினியின் முகம் பொய்யாய் முறைத்து வேறு பக்கம் திரும்பியது.

“சரிசரி… செல்லக் குட்டில.. சிரிப்பியாம” என்று சொல்ல இரண்டு வருடம் பிரிந்த
அண்ணனனை அவளால் பொய்யாய்க் கூட கோவிக்க முடியவில்லை.

“சரி போலாம்” என்று சொல்ல..
அஸ்வினுடைய கார்ட் ரிஷி வந்து லக்கேஜை எடுத்துக் கொண்டான். அண்ணனும் தங்கையும் கார்ப் பார்க்கிங்
வந்து தங்களது ஆடி ஏ6 காரில் ஏற கார் வேகம் எடுத்தது. வரும் வழி முழுவதும் வளவளத்துக் கொண்டே வந்தவளுடன்
சலிக்காமல் பேசிக் கொண்டு வந்தான் அஸ்வின் குமார்.

“அண்ணா.. நான் நாளைல இருந்தே நம்ம ஆபிஸ்க்கு வரலாம்ன்னு இருக்கேன்” –
தர்ஷினி.

“ஏன் மா.. ஒரு ஒன் மன்த் சில்
பண்ணிக்கோ” – அஸ்வின் குமார்.

“இல்லனா.. போர் அடிக்கும்.. நானும் வரேன்னா.. ப்ளீஸ்” – என்று கேட்க

“சரி சரி.. வந்து ஆபிஸை இரண்டு பண்ணப் போற.. பாவம் என் ஸ்டாஃப்ஸ்லாம்” – என்று வம்பிழுக்க “போண்ணா எப்போமே ஜோக் தான் உனக்கு” – என்று சொல்ல நீலாங்கரைக் கடற்கரை பக்கம் இருந்த அவர்கள் வீடும் வந்தது.. வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று தான் சொல்ல வேண்டும்.

மகளும் மகனும் இறங்க ஆரத்தியோடு மகளை வரவேற்க நின்றிருந்தார்
அஸ்வின் குமார் மற்றும் தர்ஷினியின் அன்னையுமான செல்வமணி. கூடவே தந்தை நாகேஷ்வரனும் நின்றிருந்தார்.
அஸ்வினும் தர்ஷினியும் இறங்கி வர.. அன்னை தந்தை கண்டு ஓடி வந்த தர்ஷினியை “நில்லு தர்ஷு.. ஆரத்தி
எடுத்துக்கறேன்” என்று சொல்ல நின்றவள் தன் அன்னை ஆரத்தி சுற்ற
சிரித்தபடி நின்றிருந்தாள்.

“நில்லு குமரா.. உனக்கும் எடுத்தறேன்” என்று அஸ்வினை நிற்க வைத்து
அவனுக்கும் சுற்றினார். அஸ்வின் குமார் எப்போதுமே வீட்டில் “குமரா”, வெளியில்
“அஸ்வின்”.

ஆரத்தியை சற்றி முடித்த செல்வமணி வேலைக்கார பெண்மனியிடம் ஆரத்தித்
தட்டைக் குடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார் செல்வமணி. எதுவும் பேசாமல் உள்ளே சென்ற அன்னையைப் பார்த்த
இரு பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன என்பதைப் போல பார்த்துக் கொண்டனர்.

பிள்ளைகளின் முகத்தைக் கண்ட நாகேஷ்வரன் பிள்ளைகள் இருவரின் அருகில் வந்து “உங்க அம்மா கோவமா இருக்காளாம்” என்று இருவரின் காதில் கிசுகிசுத்தார்.

“அண்ணா.. இத இப்படியே விடக் கூடாது” என்று வீராங்கனையைப் போல கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துச் சொல்ல “ஆமா விடக்கூடாது” என்று கைகளைக் கட்டிச் சொன்னவன் “வா உள்ள போலாம்” என்று சொல்ல.. வளர்ந்த பிள்ளைகளின் சிறு
பிள்ளைத் தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டே பின் தொடர்ந்தார் நாகேஷ்வரன்.

உள்ளே சென்ற செல்வமணி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார.. தன்
அன்னையின் இருபக்கமும் சென்று அமர்ந்தனர் தர்ஷினியும் அஸ்வினும்.
“அம்மா… சிரிம்மா…” என்று தன்
அன்னையின் தோளில் சலுகையாய் சாய்ந்தபடி உட்கார்ந்தபடி கேட்டாள்.

“உனக்கு இந்த அம்மா இப்போ தான் நியாபகம் வந்தனா?” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கேட்க அவரது
முகத்தை நிமிர்ந்து பார்த்த தர்ஷினி தன் அன்னையின் கண்ணில் கண்ணீரின்
ரேகையைக் கண்டாள்.

“நான் எப்போ அம்மா உங்கள மறந்தேன்.. நியாபகம் வர” என்று ஐஸ் மழையை வைக்க திரும்பி மகளை முறைத்த
செல்வமணி “எவ்வளவு நாள் உன்ன வர சொல்லி கெஞ்சி இருப்பேன் நானு.. அப்போலாம் வர முடியல.. இப்ப மட்டும் வந்து கொஞ்சறியா?” என்று கேட்டார்
செல்வமணி. அவருக்குத் தான் தெரியும் அந்தக் கஷ்டம்.. நாகேஷ்வரனும் அஸ்வினும் பிசினஸ் என்று சென்று
விட்டால் தனியே உட்கார்ந்து இருக்கும் கொடுமை அவருக்கே. அதிலும் மகள்
மேற்படிப்புக்கு சென்ற பிறகு மிகவும் மோசமாகிப் போனது.

“அண்ணா.. நீயாது அம்மா கிட்ட
கொஞ்சம் சொல்லேன்” என்று
சகோதரனை சப்போர்ட்டிற்கு இழுத்தாள் தர்ஷினி.

கால் மேல் கால் போட்டு ஷோபாவின் ஒரு பக்கம் கையை வைத்தபடி கம்பீரமாய்
உட்கார்ந்திருந்த அஸ்வின் தங்கை கூப்பிட்டதும் “அம்மாமா…” என்றழைக்க
சரட்டென மகனிடம் திரும்பியவர் “சொல்லு குமரா.. நீ என்ன சொல்லப் போற.. நீயும் காலைல போன நைட்
வரவன்.. என்னைய பத்தி என்னிக்காவது யோசிச்சு பாத்திற்கிங்களா யாராவது..
என்கூட இருந்தவளாம் பேரன் பேத்தி எடுத்துட்டா.. எனக்குலாம் தான் அந்தக்
குடுப்பண இல்ல” – என்றவர் முகத்தில் சோகத்தின் நிழல் வந்தது. தன் தந்தை நகேஷ்வரனை பிள்ளைகள் இருவரும் நோக்க அவரின் முகத்திலும் சிறிது வருத்தம் இருந்தது.

“அட அம்மாவே.. இதுக்கு தான் இவ்வளவு சோகமா.. நான்லாம் கல்யாணத்துக்கு ரெடிப்பா” என்று தர்ஷினி தன் தோளை
ஆட்டி கண்ணடித்து சொல்ல அங்கிருந்த மூவரும் சிரித்தனர்.

தங்கையை சந்தேகமாகப் பார்த்த அஸ்வின் “என்ன தர்ஷு.. ஜெர்மன்ல யாராவத பாத்து வச்சிட்டு தான் வந்தையா?” என்று வம்பிழுத்து
செல்வமணியின் முறைப்பை அஸ்வின் தர்ஷினிக்கு வாங்கித் தர

“அப்பா…. இங்க பாருங்க ப்பா” என்று காலை தரையில் உதைத்து சிணுங்கிக் கொண்டு சென்று தந்தை நகேஷ்வரன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“சரி சரி விடுடா” என்று மகளை தோளில் சாய்த்துக் கொண்டார் அவர். “அம்மா.. பசிக்குது” என்று சட்டை மேல் வயிற்றை நீவியபடி தர்ஷினி சொல்ல
“போய் குளிச்சிட்டு வா தர்ஷு.. எல்லாம் ரெடியா எடுத்து வக்கிறேன்” என்று மகள்
கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன சந்தோஷத்தில் தர்ஷினியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை தந்துவிட்டு
சமையல் அறைக்குள் சிட்டாய் சென்றார்.

தர்ஷினியும் போய் குளித்துக் கொண்டு வர டைனிங் ரூமில் தடபுடலாக விருந்தே தயாராகி இருந்தது. மட்டன் பிரியாணி,
சிக்கன் சுக்கா, நண்டு மற்றும் இறால் மசால் என அங்கு ஜூனியர் குப்பன்னா
மெஸ்ஸையே தயாராக்கி வைத்திருந்தார். உள்ளே நுழைந்த தர்ஷினி மூச்சை
இழுத்து இரண்டு வருடத்திற்கு பிறகு கிடைத்த வீட்டு சாப்பாட்டின் மணத்தை நன்கு அனுபவித்தாள். பிறகு தனக்காகக் காத்திருந்த அண்ணனுடனும் தந்தையுடனும் சென்று அமர்ந்தவள் “அண்ணா… ஆஆஆஆ” என்று வாயைத்
திறந்தாள்.

ஒரு நிமிடம் தங்கையின் செயலில் மனம் நெகிழ்ந்தவன் பிரியாணியையும் நண்டு
மசாலையும் எடுத்து தங்கைக்கு ஊட்டி விட்டான். பின் தந்தை நாகேஷ்வரன்
மற்றும் தாய் செல்வமணி என
அனைவரும் மாற்றி மாற்றி ஊட்ட வயிறு முட்ட உண்டு முடித்தவள் “ஏஏஏஏஏப்ப்ப்ப்ப..
போதும்” என்றாள் ஏப்பத்தை விட்டபடி.

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு தர்ஷு” என்று அன்னை ஊட்ட வர “ய்யோ.. அம்மா முடிலம்மா வயிறு ஃபுல்லா இருக்கும்மா”
என்று வயிறு முழுவதும் இருக்க உட்கார முடியாமல் கொஞ்சம் சாய்ந்து
உட்கார்ந்தவளைக் கண்டு மூவரும் சிரித்தனர்.

“சரி இந்தா.. கடைசி வாய்” என்று அஸ்வின் தங்கைக்கு தயிர் சாதத்தை ஊட்ட.. அண்ணனுக்காக ஒரு வாய்
வாங்கியவள் எழுந்து சென்று சாப்பிடாத கையைக் கழுவிக் கொண்டு வாயைத் துடைத்தாள்.

அனைவரும் வந்து சிறிது நேரம் பேச அஸ்வின் குமாரின் செல்போன் அடித்தது. போனைப் பார்க்க அவன் பி.ஏ நிரஞ்சன் தான் அழைத்திருந்தான். போனை
எடுத்தவன் “யெஸ் நிரஞ்சன்” என்றான்.

“……” – நிரஞ்சன் சொல்லிய செய்தியைக் கேட்டு அஸ்வினின் முகம் இறுகியது.

எழுந்த அஸ்வின் “அப்பா.. நான்
கிளம்பறேன். பை அம்மா.. பை தர்ஷு” என்று கார் கீயை எடுத்துக் கொண்டு கிளம்பியவனிடம்

“குமரா.. எப்பப்பா வருவே..” என்று செல்வமணி கேட்க “தெரியாதும்மா” என்று கிளம்பினான். மகன்
செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த செல்வமணி பெருமூச்சை விட்டார்.

“ஏன்மா… இப்படி ஒரு பெருமூச்சு” என்று கேட்டாள் தர்ஷினி.

“எல்லாம் உன் அண்ணன் வாழ்க்கையை நினச்சு தான் தர்ஷு.. பிடியே குடுத்து பேச
மாட்டேங்கிறான்.. எதுவும் சொல்ல மாட்டிறான்.. 31 முடியப் போகுதுல” என்று அங்கலாய்த்தார்.

“அம்மா.. என் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அண்ணா தானா வழிக்கு வந்திடுவார்.. நோ வொர்ரிஸ்” என்றவள்
தான் தூங்கிச் செல்வதாகக் கூறிவிட்ட அவளுடைய அறைக்குள் நுழைந்து விட்டாள்.

“வேதாந்தம் குரூப்ஸ்” என்றால்
தென் இந்தியாவில் தெரியாதவர் எவரும் இல்லை. அஸ்வின் குமாரின் கொள்ளு
தாத்தா அதாவது நகேஷ்வரனின் தாத்தா
ஆரம்பித்தது. பின் அஸ்வினின்
தாத்தாவும் அஸ்வினின் தந்தை
நகேஷ்வரனும் அதைக் தமிழ்நாடு முழுதும், அந்த வம்சத்தின் இரத்தமான அஸ்வின் அதை தென்இந்திய அளவில் கொண்டு வந்துவிட்டான். அவர்கள்
இறங்கி கால் பதிக்காத தொழில்கள் இல்லை. அவர்கள் சொத்துக்கள் இல்லாத இடங்கள் இல்லை. மால்கள்..
ஹாஸ்பிடல்ஸ்..மலை பிரதேசங்களில் எஸ்டேட்.. ரெசார்ட்.. ஃபைவ் ஸ்டார்
ஹோட்டல்ஸ்.. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.. பொறியியல் கல்லூரிகள்.. ஸ்கூல்ஸ்.. சினிமா தியேட்டர்ஸ்.. நகைக் கடைகள்..
என அனைத்தையும் கட்டி ஆண்டு வந்தான் அஸ்வின் குமார். அதில் அவனுக்கு மிகவும் பிடித்தது அவனுடைய
கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட் தான். அதற்காகவே சிவில் எடுத்துப் படித்தான். வீட்டில் அவனுடைய அன்பில் அனைவரும் நனைவர் என்றால் வெளியில் அவனை எதிர்த்து கை அசைக்க எவரும் இல்லை..
கண் அசைவில் அடக்கி விடுவான் எதிரில் இருப்பவரை. சில
அரசியல்வாதிகளே அவனிடம் உதவி கேட்டு வருவதும் உண்டு. அவனைப் பிடித்தவர்கள் உண்டு.. ஆனால்
பிடிக்காதவர்கள் பலர் உண்டு. அவனைப் பற்றி எல்லாவற்றிலும் திருப்தி அடைந்த குடும்பத்தால் அவன் தனி மரமாய் இருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது ஆடி ஏ6 காரை சீறிப் பாயும் வேகத்துடன் ஓட்டிச் சென்ற அஸ்வின் குமார் காரை நிறுத்தியது நாவலூரைத்
தாண்டி தான் இப்போது எடுத்திருக்கும் ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் கட்டிக்
கொண்டிருக்கும் இடத்தில். காரில் இருந்து இறங்கியவன் தனது காஸ்ட்லி டியோர் கூலர்ஸை மாட்டியபடி இறங்க
அவனுக்காகக் காத்திருந்த நிரஞ்சன் ஓடி வந்தான். கூடவே ஒருவர் வந்து அவனிற்கு அந்த வெயிலில் குடையைப்
பிடித்தபடி நின்றார்.

“ஸார்…” என்று அவன் ராகம் இழுக்க “நான் கேட்டது எல்லாம் ரெடியா?” என்று வளவளவெனப் பேசாமல் நேரடியாகக் கேட்டான்.

“வந்து.. ஸார்” என்று இழுக்க…

“ஸீ… இந்த மாதிரி இழுத்து பேசுனா எனக்கு இர்ரிடேட் ஆகும்.. டக்குன்னு சொல்லு நிரஞ்சன்.. வார்ஸ் தி ப்ராப்ளம்”
என்று கேட்டான்.

“நம்ம சாயில் டெஸ்ட்டிங் டாக்குமெண்ட் மட்டும் காணோம் ஸார்” என்ற
நிரஞ்சனிடம் முகத்தில் எதையும் காட்டவில்லை அஸ்வின் குமார். அப்படிக்
காட்டிவிட்டால் அவன் அஸ்வின் அல்லவே?

“ஓகே.. வேர் ஆர் தெம்” என்று அஸ்வின் கேட்க..

“அங்க இருக்காங்க ஸார்.. வாங்க போகலாம்” என்று சொல்ல.. அஸ்வினின்
பார்வையைக் கண்ட நிரஞ்சனுக்கு உள்ளே ஒரு நிமிடம் திகில் பரவியது.

“ஸா.. ஸாரி சார்.. நான் அவங்கள இங்க கூட்டிட்டு வரேன்” என்று அங்கிருந்து
நகர்ந்தான்.

பின் அஸ்வின் கேட்காமலேயே அவனுக்கு மட்டும் சேர் வர அதில் அமரந்தவன் அமர்த்தலாய் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். அவனது ப்ராஜெக்ட்-ஐ குலைக்க வந்திருந்த அரசு அதிகாரிகள்
அவன் முன் நிற்க தன் முன்
நின்றிருந்தவர்களை சேரின் பின்னால் சாய்ந்தபடி கண்கள் இடுங்க நோக்கினான்.

“ஸார் நீங்க இங்க அம்யூஸ்மென்ட் பார்க் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்” –
என்றார் ஒருவர்.

அஸ்வின் நிரஞ்சனைப் பார்க்க… நிரஞ்சன் “எங்களுக்கு என்ன ரீசன்னு
தெரிஞ்சாகணும் ஸார்” – என்று கேட்டான்.

“இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் தப்பா இருக்கு.. அப்புறம் சாயில் டெஸ்ட்
டாக்குமெண்ட் இல்ல” என்று அவர் குற்றம் சாட்டினார்.

நிரஞ்சன் ஏதோ பேச வர “நிரஞ்சன்” என்ற அழைப்பில் அவனை ஒரே வார்த்தையில் அடக்கியவன் அந்த
அதிகாரிகளிடம் திரும்பினான்.
“கவர்ன்மென்ட் பத்தி தப்பா பேசறீங்களே” என்றவன் “அதுவும் ஒரு அமைச்சர் பத்தி
தப்பா சொல்றீங்களே” என்று அமர்ந்தபடி ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அஸ்வின்
குமார் கேட்க.. அவர் புரியாது முழிக்க எழுந்த அஸ்வின் அவரது தோளில் கையை வைத்து “என்ன ஸார்
புரியலையா? இந்த டாக்குமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ணதே உங்க கவர்ன்மென்ட் அதிகாரிக தான்.. அவங்களையே தப்பா
சொல்றீங்களே..” என்று கேட்க.. கூலர்ஸ் போட்டிருந்த போதும் அவனுடைய கண்களை கவனித்தவருக்கு பயம் எடுத்தது. அதுதான் அஸ்வின்… எதிரில் இருப்பவர் எவராக இருந்தாலும் அவனிடம் அவர்கள் பாட்ஷா செல்லாது.
அவன் முடிவு எடுத்தால் எடுத்தது தான்.

“நிரஞ்சன்” என்று அழைத்து “என் கார்ல சீட்ல பேக் கவர்ல ஒரு பேப்பர்ஸ் இருக்கு
எடுத்துட்டு வா” என்று கட்டளையிட நிரஞ்சன் மின்னலாய் சென்று எடுத்து
வந்தான்.

“ஸார் இது என் ஆபிஸ்ல மிஸ் ஆன சாயில் டெஸ்ட் ரிப்போர்ட்.. உங்களுக்கு வேணும்ன்னா இன்னும் எத்தனை காப்பிஸ் வேணும்-ன்னு சொல்லுங்க”
என்றவன் அவர் காதின் அருகில் சென்று “உங்களுக்கு தெரியாத விஷயம் சொல்லட்டா.. இந்த ப்ராஜெக்ட்ல உங்க
போக்குவரத்துத் துரை அமைச்சர் முத்தையாவும் இருக்கார்.. இன்பாக்ட் இட்ஸ் ஹிஸ் ப்ராஜெக்ட்” என்று சொல்ல அந்த அதிகாரிக்கு பகீர் என்று இருந்தது.

“உங்கள யார் இங்க அனுப்சாங்கன்னு தெரியும்.. ஐ ஹேவ் எ ப்ராப்பர் டாக்குமெண்ட்ஸ் அன்ட் அப்ரூவல்ஸ்” என்றவன் “உங்கள அனுப்னவங்க கிட்ட
நானே பேசிக்கறேன்.. அப்படி நம்பிலாம் இனி வராதீங்க.. ஐ வில் நாட் சேம் ஆல் தி டைம்” என்று ஆறடிக்கும் நிமிர்ந்து நின்று அவன் சொல்லி பயத்தைத் தொண்டையில் இறக்க.. அவர் பயத்தின்
உச்சியில் நின்றார். அஸ்வினைப் பற்றித் தெரிந்தும் எவனோ ஒருவன் தந்த தைரியத்தை நம்பி வந்த தன்னைத் தானே நினைத்து நொந்தார்.

அவரின் முக மாறுதலைக் கண்ட அஸ்வின் நிரஞ்சனிடம் திரும்ப அவன் பார்வையை உணர்ந்தவன் “ஸார் நீங்க
போகலாம்” என்று அவர்களை அழைத்துப் போக தனது கூலர்ஸை ஒரு தரம் ஸ்டைலாக கட்டை விரலால் ஏற்றிய  அஸ்வின் தனது காரில் வந்து ஏறினான்.

காரில் வர வர அப்படியே போனை ப்ளூடூத் மூலம் செய்தவன் “ஹலோ மிஸ்டர் பொன்னுரங்கம்… யார்ன்னு
தெரியுதா.. பேர் சொல்லணுமா” என்று
கேலிக் குரலின் மிகுதியில் கேட்டவன் “ஸீ. இந்த ஸ்கூல் பசங்க விளையாட்டு எல்லாம் இங்க வேண்டாம்.. இப்படி
எல்லாம் நீங்க பண்ணா சிரிப்பு வருது மிஸ்டர்.. எக்ஸ் எம்.எல்.ஏ” என்றவன் கடைசி வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க அதில் எதிரில் இருந்தவரின் ப்ரெஷர்
ஏகத்துக்கு எகிரியது.

“எக்ஸ்.எம்.எல்.ஏ… எதுக்கும் நைட் பீபி டேப்லெட் போட்டுக்கோங்க” என்று
நக்கலாகப் பேசியவன் போனை வைத்துவிட்டான்.

அஸ்வின் குமார் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர மணி ஒன்பதரை ஆகி இருந்தது. வீட்டிற்கு வந்தவனிடம் மதியம் தூங்கி எழுந்ததால் தூக்கம் வராமல் டி.வியைப் பார்த்துக் கொண்டு இருந்த தர்ஷினி பேச்சுக்
கொடுத்தாள். “அண்ணா சாப்டலாமா?” என்று கேட்க,

“நீ இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்க அவள் இல்லை என்பது போல் தலை ஆட்டினாள்.

“அம்மா அப்பா தூங்கிட்டாங்களா? – அஸ்வின் குமார்.

“ம்ம் அப்பவே அண்ணா” – என்று சொல்ல இருவரும் டைனிங் ஹாலில் அமர்ந்தனர்.

“அண்ணா.. நான் ஒரு ஒன் வீக் அப்புறம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ் வரேன்னே” என்று சாப்பிடும் போது தர்ஷினி
அஸ்வினிடம் கேட்க தங்கையை கண்களைச் சுறுக்கிப் பார்த்தான் அஸ்வின்.

“அண்ணா.. ப்ளீஸ் ன்னா… எனக்கு சில் ஔட் பண்ணனும்-ன்னு இப்போ தோணுது” என்று தர்ஷினி அழகாய் தன் முட்டைக் கண்களைச் சுருக்கிக் கேட்க.. ,

“உனக்கு என்ன இஷ்டமோ அதப் பண்ணுடா” என்றவன் சாப்பிட்டு விட்டு எழ.. தர்ஷினியும் வேலையாட்கள் வந்து எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.

“சரிடா குட் நைட்.. நைட் கண்ணா முழிக்காம தூங்கு” – என்று அஸ்வின் சொல்ல

“ஓகே அண்ணா..” என்றபடி அவளும் அறைக்குள் நுழைய அஸ்வினும் தன் அறைக்குள் புகுந்தான்.

விதி அண்ணன்னையும் தங்கையையும் பார்த்து சிரித்தது.