யாழ்-21

யாழ்-21

இன்றோடு இருவரும் இங்குவந்து எட்டு நாட்கள் முடிந்திருந்தது.

தனித்தீவில் தணலாய் தகிக்கும் அவையவனின் காதல் தீயையும், காம அணலையும் அணைக்கும் வழி தெரியாது பெதும்பையவள் சிணுங்கிக் கொண்டிருக்க, அவள் கேட்ட வழியில் வன்முறையாய் தன்னவளின் ஏங்கங்களை தாபமும், ஆசையுமாக அவன் நிறைவேற்றிக் கொண்டிருக்க, அவன் கட்டுப்பாட்டில் கிடந்தவளோ ஆயிரம் முறை சிலிர்த்து அடங்கிப்போனாள், வித்யுத்தின் மனைவி!

காலை வழக்கம்போல தன் மார்பில் கிடப்பவளை அவன் தேட, அவளோ ஒருக்களித்து மறுபுறம் படுத்திருந்தாள்.

வெள்ளைநிற ப்ளீஸ் ப்ளான்கட்டிற்குள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளின் அருகே சென்று பின்னிருந்து தன்னோடு அவளை அணைத்துக்கொண்டவன், “யாழ்!” என்றழைக்க, அவளோ முழித்துதான் இருந்தாள்.

“கூப்பிட்டே இருக்கேன்.. பேசேன்டி.. ஏன் இப்படி தனியா படுத்திருக்க?” அவன் வினவ,

“ஒண்ணுமில்ல” என்றவள் அவனைத் திரும்பிப் பார்த்தபடி படுத்தாள்.

“என்னாச்சுடி? சொன்னாதானே தெரியும்” என்றிட, அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

“நம்ம பேபிக்கு ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனா நீ..” என்றவள் சிறு தயக்கத்துடனே கேட்டாள். குழந்தைக்கு விசாலாட்சி கேட்டவுடன் ஏக்கப்பட்டவள் தான்.

ஆனால், அவனுடன் பிரிவில் இருந்து தற்போது இணக்க நிலைக்கு வந்தவளுக்கு, பிறகுதான் இருவரும் பேசிவைத்தது ஞாபகம் வந்தது. குழந்தையின் வரவை வேண்டாம் என்று நினைக்கிறாள் என்றில்லை.

ஆனால், யாரும் தங்களுக்கு இடையே வராமல் ஒரு வருடமாவது இருக்கவேண்டும் என்று மனம் ஏங்கியது.

தன் விரலால் அவளின் கன்னத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவன், “பேபி வந்தா என்னடி” என்று அவளைத் தன்னுடன் அவன் இறுக்கிப் பிடித்து, “நம்ம ஸ்பேஸுக்குள்ள நான் யாரையும் விடமாட்டேன்” என்றான்.

“குழந்தையை கூடவா?” அவள் சிறு கோபத்துடன் வினவ, இன்னும் வராத தங்கள் மகவிற்காக தன்னவளின் கோபம் அவனுக்கு மணவாட்டியின் மீது பொறாமையும், அதீத அன்பையும் விதைத்தது.

“குழந்தை வந்தா இன்னும் நம்ம ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங் ஆகும்” என்றவன் அவளைத் தன் கழுத்தில் புதைத்துக்கொள்ள, அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், “இன்னும் என்னால உன்னோட திடீர் மாற்றத்தை நம்பமுடியல” என்றாள்.

தன் கழுத்திலிருந்து அவளின் வதனத்தை மட்டும் தன்னை நோக்கி நிமிர்த்தியவன், “இப்பவும் சொல்றேன். எனக்கு அந்த விஷயத்துல கோபமாதான் யாழ். உன்னை பாக்கும் போதெல்லாம் சொல்ல முடியாத கோபம். அவசரக்குடுக்கை. அதேசமயம் சம்யுக்தா மேலையும் கோபம். நீ திட்டுனா இப்படிதான் அழுதுட்டு வாழ்க்கையே இழந்த மாதிரி வருவாளா. உனக்கு அங்கையே அறை விட்டிருந்து சொல்லி புரிய வச்சிருக்கலாம்” அவன் சொன்னதும் தோழியின் நினைவில் பெண்ணவளின் விழிகள் கலங்கியது.

“என்னால தான?” அவள் கேட்க,

“எல்லாரும் காரணம்டி. ஒண்ணு நானோ வர்ஷித்தோ முன்னாடியே உனக்கும் அவளுக்கும் இதுல சண்டை வந்தப்ப கேட்டிருக்கணும். இல்ல நீ என்கிட்ட சொல்லி இருக்கணும். இல்ல சம்யு நீ திட்டியிருந்தாலும் எங்ககிட்ட சொல்லியிருக்கணும்”

“நம்ம பொண்ணுகளோட பெரிய பலவீனம்டி இது. என்ன பிரச்சனை வந்தாலும் சில சமயம் எங்களைவிட தைரியமா நிப்பீங்க. ஆனா, உங்க கேரக்டரை யாராவது ஏதாவது சொன்னா மட்டும் அப்படியே டவுன் ஆகிடறீங்க. ஒரு பொண்ணு ரோட்ல நடந்து போறதை வச்சு, அவ போட்டிருக்க ட்ரெஸை வச்சு எத்தனை பேரு கேவலமா பேசுவாங்க தெரியுமா?”

“ஆனா, தனக்கு புடிச்சவங்க மட்டும் தன்னை நம்புனா போதும்னு வாங்கடி. ஊருல ஆயிரம் பேசுவானுக” என்றவன், அவளின் முதல் கேள்விக்கான பதிலை அளிக்கத் துவங்கினான்.

“இங்க பாரு. எனக்கு அந்த கோபம் இருக்கு. உண்மையை சொல்ல போனா அப்பத்தா குழந்தையை பத்தி கேட்டப்ப எனக்கும் அந்த ஆசை வந்திடுச்சு. ஆனா, அதை நான் யாருகிட்ட கேக்க முடியும் சொல்லு. உனக்கிட்ட மட்டும்தான் கேக்க முடியும். அதே சமயம் லவ் இல்லாம உன்கூட சேரவும் மனசில்ல. உன் மேல கோபம் இருந்தாலும், உனக்கு என்மேல இருக்க லவ் தெரியும்..” என்றவனின் மார்பில் கன்னம் வைத்தவள் அவனைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டாள்.

“இருடி. கட்டிப்புடிச்சு என் மூடை மாத்தாத. நான் சொல்லிடறேன். இந்த இரண்டு மாசத்துல உன்னை நான் தள்ளி வச்சிருந்தாலும், கண்டுக்காம சுத்தியிருந்தாலும் நீ நைட்ல சிலநாள் ஏதோ நினைச்சிட்டு இருந்தது எனக்குத் தெரியும்டி. இரண்டு மனசா தவிச்சிட்டு இருப்பேன். கொஞ்ச நாள்ல நீ நல்லா தூங்க ஆரம்பிச்சுட்ட. ஆனா, என் தூக்கம்தான் பறந்திடுச்சு”

“நான் உன்னை தள்ளிவச்சு கஷ்டப்படுத்துனேன். ஆனா, மத்தவங்க உன்னை பேசும்போது என்னால முடியல. அதுதான் என் கோபத்தை தள்ளிவச்சேன். நீ ஒண்ணு கேட்ட தெரியுமா. சம்யுவா நீயான்னு. இப்பவும் அதுக்கு என்கிட்ட தெளிவான பதில் இருக்கு”

“சம்யு இஸ் மை சிஸ்டர் டி. அதைவிட எல்லாம் ஷேர் பண்ண கிடைச்ச பிரண்ட். எங்க வீட்டுப்பொண்ணு அவ. வேதா என்கிட்ட கேட்டிருந்தாலும் பதில் இருந்திருக்காது. ஏன்னா அவங்க இரண்டு பேரும் எனக்கு ஒண்ணுதான். அவங்கள வேற வேறைய பிரிச்சு பாக்க முடியாது”

“ஆனா, நீ..” என்று நிறுத்தியவன், தாங்கள் இருக்கும் நிலையை கண்களால் சுட்டிக்காட்டி, “இதுதான் நீயும் நானும். என்னதான் சம்யுவும், வேதாவும் எனக்கு பான்ட்னாலும், உன்னோட இடத்தையும், உரிமையையும் நான் யார்கிட்டையும் எதிர்பார்க்க முடியாது. நம்ம ரிளேஷன்ஷிப்பே வேற. நமக்குள்ள எந்த லிமிட்டும் இல்ல. ஆனா, அவங்களுக்கு என்கிட்டையும் எனக்கு அவங்ககிட்டையும் இருக்கு. சிம்பிளா சொல்லணும்னா..”

“அவங்கிட்ட கடமையும் பாசமும் அன்பும்னா, உன்கிட்ட உரிமையும் பாசமும்டி காதலும்டி” அவன் முடிக்க, அவன் நெஞ்சில் தலை வைத்திருந்தவள் தலையை மட்டும் ஆட்ட, அவள் செய்கையில் புன்னகைத்தவன், தன்னவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

“பட் நான் பயந்தேன்டி. நீ என்னையும் சம்யுவையும்..” அவன் முடிப்பதற்குள் அவனை நிமிர்ந்து தீப்பார்வை பார்த்தவள்,

“பர்ஸ்ட் உன் அப்பத்தா கூட சேந்து சீரியல் கதை பேசறத விடு. உங்க இரண்டு பேர் பிரண்ட்ஷிப்பை கலங்க படுத்தி பிரிக்கற அளவுக்கு நான் வில்லி இல்ல” கோபம்கொண்டு அவள் முதுகு காட்டிப் படுத்துக்கொள்ள, அவளை பிண்ணிருந்து அணைத்தவன்,

“முழுசா பேசவிடேன்டி. அன்னிக்கு நீ அப்படி கேட்டப்ப நான் பர்ஸ்ட் புரியாம.. அப்புறம்தான் புரிஞ்சுது. நீ பொசசிவ்நஸ்ல பேசறேன்னு. மத்தபடி என் பாப்ஸை எனக்குத் தெரியாத” அவளின் கழுத்தை முகர்ந்து கொண்டு, அவளின் முன் அங்கங்களில் அவன் தன் வேலையைக் காட்ட, அவனின் கரத்தைத் தட்டிவிட்டவள்,

“பேசாம போ. எனக்கு உன் மேல எப்பவும் நம்பிக்கை குறைஞ்சது இல்ல. சம்யுவையும் உன் விஷயமா நான் சந்தேகப்பட்டது இல்ல” என்றாள்.

“நானும் அதைத்தானேடி சொல்ல வந்தேன். இப்ப எதுக்கு கையை தட்டி விடற?” சிறுகோபத்துடன் வினவியவன், முன்னே கையை வைத்திருந்த இடத்தில், மீண்டும் கரம்வைத்து அழுத்தத்தைக் கூட்டி, அவளின் கன்னத்தில் அவன் ஆயிரம் முத்தம் வைத்தும் அவள் மசியவில்லை.

“என்னடி பண்ணனும்னு நினைக்கற?” அவன் திட்ட, போர்த்தியிருந்த ப்ளான்கட்டை மேலே தூக்கியவள், தன் காலைக் காட்ட, அவளை முறைத்தவன், தனது மீசையை முறுக்கிவிட்டபடி, திரும்பி படுத்துக் கொண்டான்.

‘திமிரு பிடிச்சவன். ஈகோ புடிச்சவன். அந்த நேரத்துல மட்டும் இதெல்லாம் காணாம போயிடும். இப்ப மட்டும் மொத்த திமிரும் குடி வந்திரும்’ மனதுக்குள் அவள் கணவனை வறுத்துக் கொண்டிருக்க, அவளின் மனதை குளிர்வித்திருந்தான், அவளின் கொண்டவன்! அவளின் காலைத் தொட்டிருந்தான்!

அவள் தலையைத் திருப்பிப் பார்க்க அவனோ அவளின் காலருகில் அமர்ந்திருக்க, அதரங்களில் லேசாய் உதித்த புன்னகையோடு நன்றாகத் திரும்பிப் படுத்தவளின் கால் விரல்களைப் பிடித்தவன், “யாழ் அம்மையாரே. அடியேனின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்” கூற, அத்தனை பெருமையாய் இருந்தது அவளுக்கு கணவனின் செய்கையில்.

‘கோபமாக இருந்தால் எரிமலையாக வெடித்துச் சிதறி அருகிலேயே போக இயலாத வண்ணம் இருக்கிறான். அதே பாசமாய் இருந்தால் சமுத்திரமாய் அவனுள் தன்னை மூழ்கடித்துவிடுகிறான்’ நினைத்தவள், கணவனைப் பார்த்து உதட்டைக் குவிக்க,

அதன் அழகில் சொக்கியவனுக்கு, போர்வை மேலேறி அழகாய் இருந்த அவளின் இரு வெண் கால்களும் தெரிய, விரல்களில் இருந்த தன் கரத்தை அவளின் கால்களுக்கு கொண்டுசென்று வருடியவன், மேலும் ப்ளான்கட்டிற்குள் கரத்தை கொண்டு செல்ல, அவனைப் பார்க்க இயலாமல் வெட்கத்தில் மேலே பார்த்தவளுக்கோ இருவரும் இருக்கும் காட்சி கண்ணாடியில் விழ, முதலில் சங்கோஜமாய் இருந்தவள், இப்போது கணவனிடம் கண்களாலேயே தங்களின் அழகிய (அலங்)கோலமான பிம்பங்களைக் காட்டினாள்.

அன்றே உலகம் அழிந்துவிடுவதைப் போன்று தன்னவளை தன்னுள் புதைத்துக் கொண்டவன், தயக்கமின்றி தடையின்றி அவளுடன் சேர, தன்னவனின் ஆசை இந்த ஜென்மத்தில் முடியாது என்று புரிந்து கொண்டவள், அவனைத் தன்னுள் இறுக்கிக்கொள்ள, தன்னவளின் முகம் காட்டிய பரவசத்தைக் கண்டு ஆண்மகனாய் சிலிர்த்துப் போனவன், தன்னவளின் சிவந்த வதனத்தை அணுஅணுவாய் சேர்த்து வைத்து கவிஞனாய் ஆனான்.

காதல் இல்லாத காமமும், காமம் இல்லாத காதலும் புரியாத பாடத்தை மனப்படாம் செய்வதற்கு சமம்!

இருவரும் பத்து நாட்கள் நிம்மதியாய் கழித்துவிட்டு சோழவந்தான் வந்து இறங்க, உள்ளே நுழைந்த இருவரின் முகமும் அப்படியே சிரிப்பை நிறுத்தியது.

தாத்தா பாட்டியிலிருந்து பூஜாவரை அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, வேதா தலைகுனிந்து விசாலாட்சி அமர்ந்திருந்த ஷோபாவின் பின்னே நின்றிருந்தாள்.

வெற்றிக்கு பின்னே நின்றிருந்த இன்பமித்ரனும் முகம் இறுகி, விட்டால் இடியாய் முழங்கக் காத்திருக்கும், ராட்சசன் போல அதிக கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான்.

திவ்யபாரதியோ மகளை அடித்துச் சாத்தியிருக்க, வேதாபாரதியின் கன்னங்கள் கன்றியிருக்க, அழுது வடிந்திருந்த முகத்துடன், வீங்கிப் போயிருந்த விழிகளுடன், நின்றிருந்த தங்கையைக் கண்ட வித்யுத்திற்கு ஏதோ புரிவதுபோல இருந்தாலும், அடிக்கும் அளவுக்கு என்ன தவறுசெய்துவிட்டாள் என்று நினைத்தவன் அன்னையைத்தான் முதலில் முறைத்தது.

“வா வித்யுத்” வெற்றி, “வாங்க இரண்டு பேரும் உக்காருங்க” என்றிட, வர்ஷித்துடன் வித்யுத் அமர்ந்துகொள்ள, யாழ் பூஜாவுடன் அமர்ந்துகொண்டாள்.

சின்ன அண்ணன் வந்துவுடன், அதுவரை அடக்கிக்கொண்டிருந்த வேதாவின் அழுகை விசும்பலாக மாற, அவளை யாரும் சென்று சமாதானம் செய்யாமல் இருந்தனர், திவ்யபாரதிக்கு பயந்து.

அன்று காலை கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க திவ்யபாரதி தோட்டத்திற்குச் செல்ல, தண்ணீரைப் பார்த்துக் கொண்டு திரும்பியவளின் விழிகள் இன்பமித்ரன் தங்கியிருந்த வீட்டைப் பார்த்து உறைந்துவிட்டது.

மித்ரனின் வீட்டிற்குள் இருந்து மகள் வெளியே தூக்கக் கலக்கத்துடன், அதேசமயம் கண்களால் சுற்றுயும் முற்றியும் பார்த்துக்கொண்டே, சிறு பயத்துடன் வெளியே வருவதைப் பார்த்த திவ்யபாரதியின் மனம், ஒரு தாயாய் அரண்டு போய்விட்டது.

அன்னை நின்றிருந்ததை பார்த்த வேதாபாரதியின் முழு வதனமும் வெளுத்துப் போய்விட, “ஏய் இன்னும் நீ கிளம்பல?” அவள் பின்னேயே வந்த இன்பமித்ரனும் திவ்யபாரதியைக் கண்டு வெளிப்படையாய் திகைத்துப் போனான்.

மித்ரனை வியர்வைப் பூக்கள் பூக்க திரும்பிப் பார்த்த வேதாபாரதி அன்னையிடம் செல்ல, மகளின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் திவ்யபாரதி. அவளுக்கு பதிலாக இந்த இடத்தில் வேலை செய்பவர்கள் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்கள் நினைத்து பயந்தவள், இன்னும் நாலு அறையை விட்டாள்.

நேற்று இரவு வெந்தைய நிற பாவாடையும் வாடாமல்லி நிற தாவணியும் அணிந்து கோயிலுக்கு அன்னையுடன் சென்று வந்த வேதாபாரதி, மித்ரனிடம் உடையைக் காண்பித்துவிட்டு பிரசாதத்தைக் கொடுக்கலாம் என்று அனைவரும் உறங்கியபின் பூனைபோல அங்கு சென்றாள்.

தோட்டத்தில் சும்மாக சாற்றியிருந்த அவன் வீட்டிற்குள் விளையாட்டுத் தனமாய் நுழைந்தவள், அவன் செய்துவைத்திருந்த உணவை வேறு கட்டுகட்டென கட்டத் துவங்கினாள்.

சாப்பிட்டு முடித்தவள், அவனுக்காக காத்திருக்க அவளுக்கோ தன்னையறியாமல் தூக்கம் வந்தது. அவன் வந்தால் கண்டிப்பாக எழுப்பிவிடுவான் என்று நினைத்தவள் அங்கேயே தூங்கிவிட, நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வந்தவன் லைட்டை கூட போடவில்லை. வந்தவுடன் வேறொரு பக்கம் கவுந்துவிட்டான்.

காலை அவளுக்கு முன்னேயே எழுந்தவன், திரும்பிப் படுக்க, வேதா தரையில் படுத்திருப்பதைக் கண்டு பதறியடித்து எழுந்தவன், “வேதா” என்று கர்ஜிக்க, தூக்கத்தில் இருந்து எழுந்தவள், இருக்கும் இடம் உணர்ந்து அவசர அவசரமாக எழ, அவளின் முன் பக்க தாவணி, நகர்ந்து அவளின் பளிங்கு வயிற்றையும், அதற்கு மேல் இருந்த இளமையையும் அவளவனுக்கு காட்ட,

தன் விழிகள் அங்கு பயணம் செய்தது இரண்டே நொடிகள் என்றாலும், சடுதியில் திரும்பி நின்றவன், “தாவணியை இழுத்துவிடு” அதட்ட, தன்னை ஆராய்ந்தவள், பதட்டத்துடன் தன்னை சரிசெய்து கொண்டவள், “நேத்து..” தொடங்க, அவனோ கோபத்தில் கண்கள் பளபளக்க திரும்பியதில், அவனின் கோபத்தில் பேதையவள் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

“கிளம்புடி” அவன் ஆத்திரத்துடன் உதிர்த்த வார்த்தையில், தன்னை தவறாக நினைத்துவிட்டானோ என்று எண்ணியவள்,

“வேணும்னு பண்ணல” தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, விபூதி இருந்த குட்டிப் பொட்டலத்தை அந்த மேசையில் வைத்தாள்.

“நான் கிளம்பறேன்” அவள் சொல்லிவிட்டுக் கிளம்ப,

“சீக்கிரம் போய்த் தொலை” என்றவனின் பேச்சில் பெண்ணவளுக்கு அவமானமாய் இருந்தது. சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டு பயத்துடன் வெளியே வந்தவள் அன்னையிடம் கையும் களவுமாக மாட்டிவிட்டாள்.

எங்கே மித்ரனை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று நினைத்த வேதா, “அம்மா நீங்க நினைக்கற மாதிரியில்ல” தொடங்க, “எனக்கு நீ லவ் பண்றது தெரியும் வேதா. மித்ரனைப் பத்தியும் தெரியும். அன்னிக்கு உன்னை தேடி வந்தப்பவே எல்லாம் கேட்டுட்டேன்”

“ஆனா, கல்யாணம் ஆகாதபொண்ணு நீ. நீ காதலிக்கற பையனாவே இருந்தாலும் இப்படி காலங்காத்தால அவன் ரூமுக்குள்ளார இருந்து வந்தா என்னடி நினைப்பாக. வேற யாராவது பாத்திருந்தா. எல்லாரும் உன்னை பெத்தவ இல்ல. நீ தப்பு பண்ணமாட்டேன்னு நம்ப. நானும் சரி காலேஜ் முடிக்கட்டும்னு இருந்தா.. இன்னிக்கே உங்கப்பா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவை கட்டறேன்” என்றவள் தரதரவென்று மகளை இழுத்துக்கொண்டு செல்ல, மித்ரன் திவ்யபாரதி அழைக்காமலேயே அவள் பின்னால் சென்றான்.

பேத்தியை மருமகள் இழுத்து வருவதையும், வேதா கதறலுடன் அன்னையிடம் ஏதோ கெஞ்சிக்கொண்டே வருவதையும், இருவரின் பின்னேயே வரும் மித்ரனையும் கண்ட விசாலாட்சி, மேலே பார்க்க வெற்றி எழுந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.

மகன் இப்போதெல்லாம் கோபப்படாமல் இருந்தாலும், வெற்றிவேந்தனின் கோபம் அறிந்தவர்தானே அவரும். ‘ஆத்தா புள்ளமேல இவன் கை வச்சிடாம..’ அவர் வேண்டி முடிக்கவும், வெற்றி கடைசி படியில் இறங்கவும், திவ்யபாரதி மகளை இழுத்துவந்து விடவும் சரியாக இருந்தது.

மகள் அழுதுகொண்டு நிற்பதை கண்ட வெற்றி, மனைவியையும், மித்ரனையும் கண்டவனுக்கு ஏதோ புரிய, திவ்யபாரதி காலையில் நடந்ததை கணவனிடம் கூற, தந்தையின் பார்வையில், திகைப்பும் கிலியும் படர, தாவணியின் முடிச்சை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

வெற்றி இன்பமித்ரனைப் பார்க்க, அவனோ வெற்றியின் பார்வையை தைரியமாக தாங்கி நின்றான்.

“வேதா” தந்தையின் கணீர்க் குரலில் அச்சமும் நடுக்கமும் போட்டி போட நிமிர்ந்தவள், தந்தையைப் பார்த்தவுடன், அவன் மார்பிலேயே புதைந்துவிட்டாள்.

“எனக்கு இவரைதான் ப்பா புடிச்சிருக்கு. இவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன். வேறு யாரையும் பண்ணமாட்டேன். இவரையும் பண்ண விடமாட்டேன். இவரு நீங்க எல்லாம் என்ன நினைப்பீங்கனு என்னை ஏத்துக்கவே மாட்டிறாரு ப்பா”

“நேத்துகூட கோயில் பிரசாதம் குடுக்கப் போய் தெரியாம அங்கேயே தூங்கிட்டேன். நைட் அவரு வந்து என்னை பாக்கமா தூங்கிட்டாருப்பா. யாரும் தப்பா நினைக்காதீங்க ப்பா” தன் நெஞ்சில் சாய்ந்து கதறும் மகளின் கண்ணீரில் அவனின் கோபம் இறங்கித்தான் போனது. காதலின் வலியை அவனும் அறிவானே!

மனைவியின் முகத்தைப் பார்த்தான் வெற்றி.

திவ்யபாரதியின் விழிகள் பேசின!

அவள் கணவனிடம் கண்களாலேயே இறைஞ்ச, அதற்குள் வேதாவின் கதறலில், வர்ஷித்தும், பூஜாவும் கீழே ஓடிவந்தனர்.

“எல்லாம் குளிச்சிட்டு வாங்க. அப்பா எந்திரிச்சு வரட்டும். அப்புறம் பேசிக்கலாம்” என்ற வெற்றி, அனைவரையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைக்க, விசாலாட்சிதான் பேத்தியுடன் சென்றார். சேனாதிபதி விழிக்க, விசாலாட்சி அவரிடம் பொறுமையாய் பக்குவமாய் விஷயத்தைக் கூறினார்.

“நீங்க அவளை அடிச்சிடுவீங்களோன்னு பயந்துட்டேன்” திவ்யபாரதி புகுந்தவுடன் அறைக்குள் கணவனிடம் பேச, மனைவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவன், “குளிச்சிட்டு வா பாரதி” என்றான்.

கணவன் மகளை கைவைத்து விடுவானோ என்று நினைத்தவள் தான் மகளின் கன்னத்தைப் பழுக்க வைத்தது. இந்த தாய்ப்பாசத்தை வேறு புரிந்து கொள்ளவே முடியாது.

கிளம்பி வந்தவள், “மித்ரனுக்கே அவளை குடுத்திடலாம்” என்றிட, “ம்ம்” மட்டும் பதிலளித்தான்.

அனைவரும் கீழே இறங்கி வந்து ஒன்றுகூடவும், வித்யுத்தும், யாழும் வரவும் நேரம் சரியாக இருந்தது.

சிறிது நேரம் அமைதியாக இருந்த சேனாதிபதி, “என்ன முடிவுல இருக்க வெற்றி” மகனிடம் வினவ,

“கல்யாணம் தான் ப்பா. என்ன பண்ண முடியும் சொல்லுங்க. மூணுல ஏதாவது ஒருத்தருக்காவது நானா பாத்து பண்ணி வைக்கணும்னு ஆசைப்பட்டேன். எதுக்குமே குடுத்து வைக்கல” அவன் தன் ஆதங்கத்தைக் கொட்ட, வர்ஷித், வித்யுத்துக்கே குட்டு வாங்கிய உணர்வு.

திவ்யபாரதிக்கோ கணவனின் பேச்சில் கோபம் வந்தது. மனதில் இருந்ததை தன்னிடம் மட்டும் சொல்லி இருக்கலாம் அல்லவா. மகன்களின் திருமணமே முடிந்த பின் கணவன் இவ்வாறு கூறினால் மருமகள்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்த திவ்யபாரதி, பூஜைவையும், யாழையும் பார்க்க, இருவரும் சங்கடமாய் அமர்ந்திருந்தனர்.

“மாமா! நீங்க இப்படி பேசறது கஷ்டமா..” பூஜா முடிப்பதற்குள், வர்ஷித்தின் ஒற்றைப் பார்வையில், அவன் மனைவியின் குரல் உள்ளே சென்றது.

“உங்க கல்யாணத்தை நான் குறை சொல்லல பூஜா. பசங்களுக்காகனு இல்லாம முழுமனசோட நான் உங்களை ஏத்துக்கிட்டோம். பெத்தவங்களா எங்க ஆசையும் தப்பு இல்லியே?” நியாயமாய் வெற்றி கேட்க, தலை குனிந்தவள், “ஸாரி மாமா” என்றாள்.

“உங்களுக்கு இஷ்டம் இல்லனா வேணாம் ஸார்” மித்ரன் பொட்டில் அடித்ததுபோன்று கூற, “அப்ப நானும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” தலையை குனிந்துகொண்டே அடுத்த நொடியே வரட்டுப் பிடிவாதமாய் சொன்ன தங்கையைக் கண்ட இரு சகோதரர்களுக்கும் சிரிப்பு வந்தது.

திடீரென சிறியவளாய் இருந்தவள் இப்போது பெரிய மனுஷியாகி, ‘கட்டினால் இவனைத்தான் கட்டுறேன்’ என்று நிற்பது அவர்களுக்கு வியப்பாகவும் இருந்தது.

மித்ரன் அவளை முறைக்க, “உனக்கு வேதாவை பிடிச்சிருக்கா மித்ரன்?” வெற்றி கேட்க, அதவரை தலை குனிந்து அமர்ந்திருந்தவள் விலுக்கென்று நிமிர்ந்தாள்.

எங்கே தன்னை நிராகரித்துவிடுவானோ என்று உள்ளுக்குள் பதறித் துடிதுடித்துப் போனவள், ‘என்னை விட்டுவிடாதே’ என்று விழிகளாலேயே இறைஞ்ச, அவளையே பார்த்திருந்தவன், அவளின் கெஞ்சும் பார்வையிலும், துடிக்கும் இதழ்களையும், மார்பகங்கள் பயத்தில் மூச்சு வாங்க நிற்பதையும் கண்டு, தன்னை இழுத்துப் பிடித்துக் கொண்டவன், “கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுங்க ஸார்” என்று அனைவரின் வயிற்றிலும் பாலை வார்த்தான்.

“ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் அவ என்கூட அங்கதான் இருக்கணும்” என்றிட, யாரும் அதை மறுக்கவில்லை. ஏற்கனவே சுயமரியாதை அதிகம் பார்ப்பவன் அவன். இதெல்லாம் அவன் சொல்லக் கூட தேவையில்லை. அந்தளவு அவனை அவர்களுக்குத் தெரியும்.

அனைவரும் அவரவர் வேலையில் அடுத்து மூழ்கிவிட, அவனின் பின்னே செல்ல நினைத்த வேதாவால் முடியவில்லை. அவனுடன் அவளுக்கு பேசவேண்டும். ஆனால், அவன் அந்த நினைப்பு இல்லாதவன் போல கிளம்பிவிட்டான்.

அறைக்குள் வந்த யாழ், “வருண். நான் வேதா பேசறதை அல்ரெடி நிறைய தடவை பாத்திருக்கேன்” அவள் சொல்ல,

சிறு அதிர்வுடன் மனைவியை முறைத்தவன், “அப்புறம் ஏன்டி சொல்லலை?” வினவினான்.

“நீ நான் சொல்றதை கேக்கற நிலைமைலயா இருந்தா?” அவள் வினவ, அதுவும் சரிதானே என்று நினைத்தவன் அலுவலகம் கிளம்ப, அவளும் க்ளாஸிற்கு கிளம்பினான்.

இருவருக்கும் நிறைய வேலைகள் காத்திருந்தது.

வேதாவோ அன்னையிடம் பேசினாள்.

“எனக்கு உன்மேல கோபம் இல்ல வேதா. நான் ஏற்கனவே உங்காப்பா கிட்ட நாலஞ்சு வருசம் முன்னாடி பேசியிருக்கேன். நம்ம மித்ரனுக்கே வேதாவை குடுக்கலாமானு. உங்க அப்பாவும் அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு. ஏன்னா யாரு மனசு எப்படி மாறும்னு தெரியாது. ஒருவேளை நாங்க கனவு கண்டு உங்கள்ள ஒருத்தருக்கு வேற யாராவதை புடிச்சிருந்தா அப்படிங்கற எண்ணம் உங்கப்பாக்கு”

“நான் உன்னை அடிச்சதுக்கு இன்னொரு காரணம். மித்ரன் நல்ல பையனா இருந்தனால நேத்து உனக்கு எதுவும் ஆகல. இதே மாதிரி கேர்லெஸ்ஸா இருந்து எங்காவது நீ தூங்கியிருந்தா?” அன்னை கேட்கும்போதே அவளின் உடல் நடுங்கியது.

“அப்பாக்கு என்மேல கோவமா ம்மா?” அவள் பரிதவிப்புடன் கேட்க, “அதெல்லாம் இல்ல. நீ போய் எதையும் அலட்டிக்காம இரு” என்றவள் அப்போதுதான் எழுந்து வந்த தனுவை தூக்கிக்கொண்டு செல்ல, அறைக்கு வந்த வேதாவோ மித்ரனுக்கு அலைபேசியில் அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள்.

காலம் யாருக்கும் காத்திராமல் சிரிப்புடன் காத்திருந்தது!