யாழ்-31(1)

யாழ்-31(1)

“எப்பதான் வருவ?” யாழ் திட்ட,

“ஒரு ஹவர்டி” என்றான் தனது காரிலிருந்த ப்ளூடூத் மூலம் மனைவியிடம்.

“என்னவோ பண்ணு. எப்ப பாரு லேட். நான் குளிக்க போறேன். குளிச்சு முடிச்சு வர்றதுக்குள்ள வந்திடு” திட்டியவளின் திட்டைக்கூட சிரித்தபடியே வாங்கியவன், “ம்ம்” என்று வைத்துவிட்டான்.

இன்னும் இரண்டு நாட்களில் மகளின் பெயர்சூட்டு விழா இருக்க, இவன் முன்னால் வந்துகொண்டிருக்க, அடுத்தநாள் மொத்த குடும்பமும் வர இருந்தது.

மகள் பிறந்த அன்றுதான் வாழ்க்கையிலுள்ள மொத்த பயத்தையும், வேதனையையும் அனுபவித்திருந்தான். அதே சமயம் அவள் பிறந்த நொடி, தன்னவள் மறுஜனனம் எடுத்து மகளைப் பெற்றெடுத்த நொடி, அவனின் மனதில் பெய்த இன்ப சாரல்களுக்கும், பூக்களுக்கும் அவளே இல்லை.

மகளை முதன்முதலாக கையில் ஏந்தியவன், அவளின் மென்மையில், அவளின் ஸ்பரிசத்தில், மனதில் ஆர்ப்பரிப்புகள் நிறைந்த அலைகளாய் தொலைந்துபோனான். தன் அன்னையைப்போல அதே இதழ்களும், முக அமைப்பும் கொண்ட மகளை நெஞ்சோடு சின்னதாய் அணைத்தவன், மகளின் பஞ்சுக்கன்னத்தில் முத்தமிட, அவளோ, ‘ங்’ என்றாள் தந்தையின் மீசைகுத்துவது தாளாமல்.

“மீசை குத்துதா அம்மாக்கு” மகளைக் கொஞ்சியவன், மனைவியைப் பார்க்க, அவளோ உறங்கிக் கொண்டிருந்தாள்.

‘இவளுக்குத் தன்னால் எத்தனை போராட்டம்!’ நினைத்தவனுக்கு மனைவியின்மேல் அத்தனை மரியாதை கூடியது. அன்றிலிருந்து அவள் திட்டும் அனைத்தையும் வாங்கிக்கொண்டு திருப்பி சண்டையிட்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாய் போக பழகிக்கொண்டான்.

மாமனார் வீடு வந்ததும் காரிலிருந்து இறங்கியவன், உள்ளே செல்ல, வீட்டின் பின்பக்கம் கதவில் சாய்ந்து, பெண்ணவள் தனது தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள். தன்னவளின் அழகை, அவளின் நீளமான சிகையை பின்னிருந்து ரசித்தபடி மெதுவாக, சத்தம் செய்யாமல் சென்றவன்,

“பாப்ஸேஏஏ” என்று பின்னிருந்து அவளை இறுக அணைத்துத் தூக்க,

“ஐயோ மாப்பிள்ளை” என்ற ராஷ்மிகாவின் அலறலில் மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்த யாழும், பேத்தியை நெஞ்சோடு படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டே வெளியே வந்த அஷ்வினும், வீட்டிற்கு பைலை எடுக்க வந்திருந்த த்ரூவும் இதைப் பார்த்துவிட, நெஞ்சில் அணுகுண்டைப் போட்டது போல வெடித்துப் போனான் வித்யுத் வருணன்.

ராஷ்மிகா சற்று டயட் இருந்து உடல் எடையைக் குறைத்திருக்க, யாழ்மொழி சற்று பூசியிருக்க, இன்று குளித்துவிட்டு மகள் வைத்திருப்பது போலவே நைட்டியை அவள் அணிந்ததால் வந்த கோளாறு இது.

ராஷ்மிகா மருமகனின் பிடியில் கிலி பிடித்துப்போய் நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நிற்க, வித்யுத்தின் மனமோ, ‘பொண்டாட்டிக்கும் மாமியாருக்கமாடா வித்தியாசம் தெரியாது’ காறி உமிழ, சங்கடத்துடன் மாமியாரைப் பார்த்தவன், “ஸாரி அத்தை. யாழ்னு நினைச்சுட்டேன்” என்றான்.

ராஷ்மிகாவும் என்ன சொல்ல முடியும். “பரவாயில்லை மாப்பிள்ளை” என்றிட,

அஷ்வின் பேத்தியிடம், “பாத்தியாடா குட்டிமா. உன் பாட்டிக்கு இன்னும் குமரினு நினைப்பு. ஹீரோயின் மாதிரி இயற்கையை ரசிச்சுட்டு தலை கோதறாளாமா” நக்கலாக சொல்லிவிட்டு நகர, வித்யுத் வருணனுக்கு சிரிப்பு வர, ராஷ்மிகா கணவனிடம் புயலைப் போல செல்ல, த்ரூவ் மாமனிடம் கண்ணைக் காட்ட, பார்க்காமலேயே புரிந்து கொண்டவன், மனைவியின் அறைக்குள் அவளைத் தாண்டிச் செல்ல, அவன் பின்னேயே சென்றவள் கணவனின் முதுகில் ஓங்கியடித்தாள்.

“ஏன்டா எனக்கும் எங்கம்மாக்கும் வித்தியாசம் தெரியாதா?”

“ஏய் அதே நைட்டி உன்கிட்ட இருக்குல்ல. ஸோ கன்ப்யூஸ் ஆகிட்டேன்டி” என்றவனை முறைத்தவள், “அவசரத்துக்கு பொறந்தது” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்று, மகளின் உடைகளை மடித்து வைக்கத் துவங்கினாள்.

“ஏய் நான் வந்திருக்கேன். நீ பாட்டுக்கு உன் வேலையை பாத்தா என்ன அர்த்தம்” அவன் அதட்ட,

“பின்ன உன்னை மடியில போட்டு கொஞ்சணுமா?” என்றவள் மடித்த துணிகளை கப்போர்டில் வைத்துவிட்டுத் திரும்ப நினைக்க, அவளை பின்னிருந்து அணைத்திருந்த அவளின் கணவன், அவளின் முடியை முன்னால் தூக்கிப்போட்டு, அவளின் கழுத்தை வாசம் பிடிக்க,

“நைட் வச்சிக்கலாம். இப்ப பாப்பு எப்ப வேணாலும் அழுவாடா” அவள் எச்சரிக்க,

“ஒரு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் டி. ப்ளீஸ்” அவளின் முன்னங்கத்தில் விளையாடியபடி கிறக்கமாகக் கெஞ்ச, தன்னிலை இழக் ஆரம்பித்தவளோ,

“எனக்கு உன்னோட பிரியாணி தான் பிடிக்கும்” உதடுகள் பிரிந்து உஷ்ண மூச்சை வெளியிட்டபடி சொல்ல, அதில், ‘பக்கென்று சிரித்துவிட்டான் அவளது கணவன்.

“அப்ப நம்ம க்ரில்ட் சிக்கன்?” அவன் வினவ,

“அப்ப கண்டிப்பா கார்ல ஏசி வேணும்” என்றாள் அவளும் சிரிப்பும் மோகமுமாக. அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன், “எப்படி டி கார்னு கண்டுபிடிச்ச?” அவளின் அதரங்களைத் தடவியபடி வினவ,

“அது ஒரு பாக்ஸுக்குள்ள தானே சூடு ஆகும். ஸோ கார் வந்து பாக்ஸ். நம்ம வந்து..” இழுத்தவள் அதற்கு மேல் சொல்ல முடியாது உதடு கடிக்க, “ஓஹோ! தேறிட்ட போ” அவன் நெற்றியில் முட்டிச் சொல்ல,

“எல்லாம் ஸாரோட ட்ரெயினிங் தான்” என்றவள் அவனின் இதழை அடக்க பேராசை பட்டு தன்னை நோக்கி அவனை இழுக்க, “யாழ்” என்ற தந்தையின் குரலில் படக்கென்று விலகியவள், உடையை சரிசெய்து கொண்டு சென்று கதவைத் திறக்க,

“குட்டிமா தூங்கிடுச்சு” என்றவன் மகளின் கையில் பேத்தியைத் தந்துவிட்டுக் கீழே செல்ல, தந்தையையே பார்த்திருந்தாள் அவள்.

மகளைக் கொண்டு வந்து அவளுக்காக பிரத்தேயாகமாக அஷ்வின் செய்து வரப்பட்ட, தேக்கு மரத்திலான, ஆங்காங்கே வெள்ளியும் தந்தமும் இணைந்து இருந்த அமைப்பான தொட்டிலில் மகளைக் கிடத்தியவள்,

“எங்கப்பா தம்பி பிறந்தப்பகூட இங்க இருந்து நான் பாக்கல. ஈவ்னிங் வந்து பாத்துப்பாரு. மத்தபடி பிசினஸ் தான். அதோட சரி. இப்ப என்னனா ஃபுல் டைம் பேத்தி கூடதான் இருக்காரு” மகளின் முடியை ஒதுக்கி முத்தமிட்டுக் கணவனிடம் சொன்னவள்,

“என்ன பேரு முடிவு பண்ண வருண்?” கேட்டாள்.

“நாளைக்கு சொல்றேன்” அவன் கூற,

“சம்யுக்தா தானே?” அவள் கேட்க, புன்னகைத்தபடியே குளியலறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.

“கீழ சாப்பிட போலாம்” என்றவள் அன்னையுடன் சேர்ந்து அனைவருக்கும் பரிமாற, திருமணமான் பின்கூட வராத பொறுப்பு அவளுக்கு மகள் பிறந்ததும் வந்திருந்தது.

தாய்மை அவளை பயங்கரமான குடும்ப இஸ்திரியாக மாற்றியிருந்தது.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, பிருந்தாவின் தந்தை வந்தார். “வாங்க” வரவேற்ற அஷ்வின் அவரை அமர வைக்க, “இவரு மாப்பிள்ளை, வித்யுத் வருணன்” அஷ்வின் அறிமுகம் செய்து வைக்க, வித்யுத்தை பார்த்தவர் மெல்லிய புன்னகையை சிந்தி கை குலுக்கினார்.

அமர்ந்தவர், “என் பொண்ணு பிருந்தா விஷயமா பேச வந்தேன். உங்க பையனும் என் பொண்ணும் லவ் பண்றாங்க. ஷ்யாம் சொன்னான். முதல்ல வேணாம்னு நினைச்சேன். ஆனா, எம்பொண்ணு ரொம்ப பிடிவாதமா இருந்தா. நாங்க அலையன்ஸ் பாக்கலாமானு கூட நினைச்சோம். ஆனா, நேத்து உங்க பையன் வீட்டுக்கே வந்து பேசுனதுல, யாரு தலையிட்டாலும் எதுவும் நடக்காதுனு புரிஞ்சுக்கிட்டேன்” என்று கூற, அஷ்வினுக்குள் மெல்லிய புன்னகை. மகனின் தைரியத்தில் கர்வமும் கூட.

குரலை சரிசெய்தவன், “உங்க ரீசன் எனக்குப் புரியுது. பட் இரண்டு பேருக்கும ஒருத்தரை ஒருத்தர் புடிச்சிருக்கும்போது நாம எதுவும் சொல்லக்கூடாது” கூற, அவரும் அமோதிப்பது போல தலையசைத்தார்.

அவருக்கு தேனீர் எடுத்து வந்த யாழ்மொழியைப் பார்த்தவர், “குழந்தை எப்படி இருக்காமா? எத்தனை மாசம்?” வினவ,

“நல்லா இருக்கா அங்கிள். மூணாவது மாசம் நாளைக்கு தொடங்குது. தூங்கிட்டு இருக்கா” என்றவள், கணவனுக்கு அருகே அமர்ந்துகொள்ள, இருவரும் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டனர்.

இருவரின் அன்னியோன்யமும், காதலும் புரிந்தவர் அவர்கள் வாழ்க்கையை எண்ணி மெய்யாலுமே மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தார். (இருவரும் தனிமையில் நாயா பேயா என்று அடித்துக் கொள்வது வேறு டிப்பார்ட்மெண்ட்)

“மாப்பிள்ளை எங்க காணோம்?” பிருந்தாவின் தந்தை கேட்க,

“நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சாப்பிட்டு கிளம்புனான்” அஷ்வின். இரு தந்தைகளுக்குமே இப்போது திருமணம் செய்து வைக்க எண்ணமில்லை. மூன்று வருடம் கழித்து என்ற முடிவில் இருந்தனர்.

பிருந்தாவின் தந்தை சென்றபின் மகளின் அழுகுரல் கேட்க, மேலே ஓடிய யாழ், அவளைத் தட்டிக் கொடுக்க, அவளோ நிறுத்துவேனா என்று அடம்பிடித்தாள்.

“பாப்பு.. பாப்பு..” ஆயிரம் முறை சலிக்காமல் கொஞ்சியவள், மகளின் குட்டிக் கண்ணில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டு, “என்னாச்சு என் பாப்புக்கு.. யாரு என்ன சொன்னா?” பேசியவள், “அப்பாவா?” கணவனை சுட்டிக்காட்டி கேட்டவள், “அடிபோடலாமா அப்பாவா?” கேட்டு வித்யுத்தின் கன்னத்தில் அவள் மெதுவாக அடிக்க, குட்டி தேவதையோ கிளுக்கிச் சிரித்தாள்.

மகளைக் கையில் வாங்கியவன், “அம்மாவை அடி போடலாமா?” என்று மனைவியின் நெற்றியில் லேசாய்த் தட்ட, பொக்கை வாய் தெரிய சிரித்தவளைக் கண்டு வித்யுத்திற்கு சிரிப்பு வர, மகளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மகளை படுக்கையில் கிடத்தி, அருகில் படுத்தவன், மகளின் கைகளை பிடித்துக் கொண்டு, அதற்கு முத்தமிட்டு மகளுடன் பேசியபடி விளையாட, “டேய் என்னடா அவளை மட்டும் கொஞ்சற?” என்றவள் அவன் முதுகில் சரமாரியாக அடிக்க, அனைத்தையும் வாங்கியவனின் கவனம் மகளின் மேலிருந்து சிதறாமல் இருக்க, அடித்து அடித்து டயர்டாகிப் போனவள்,

“உன்னை எங்க கவனிக்கனுமோ அங்க கவனிச்சிருக்கறேன்” என்றிட, மகளைக் கொஞ்சியபடியே திரும்பாமல், மனைவியின் கரத்தைப் பற்றியவன், “நீ கவனிக்கிறதுக்கு தான் வெயிட்டிங்” என்று திரும்பியவன்,

“மூணு மாசம் ஆச்சுடி” என்றான் ஏக்கத்துடன்.

“ச்சு ச்சு” கணவனுக்கு அவள் பரிதாபப்பட,

“ஏங்கிப் போயிருக்கேன்” என்றான் மனையாளின் உடையை பார்வையால் உரித்தபடி.

“நீ ஏங்கி இல்ல. காஞ்சு போயிருக்க. எங்கம்மாவை மாத்தி கட்டிப் பிடிக்கும் போதே தெரிஞ்சுது” என்றவள் அவனின் கரத்தை உதறிவிட்டு, “இரண்டு நாளைக்கு பட்டினி கிட” என்று வெளியே சென்றுவிட,

“பாத்தியா பாப்பு.. உங்கம்மாக்கு கொழுப்பு நிறைய கூடிக்கிடக்கு.. அப்பாவை அலைய விடறா” என்றவனுக்கு அவள் கை கால்களை உதறி, “ங்” என்ற பதிலையே தந்தாள்.

31(2) – போட்டிருக்கேன்.. 31(1) லிங்க் கீழ இருக்கு.