யாழ்-31(2)

யாழ்-31(2)

அன்றிரவு வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவளை அவன் ஏக்கத்துடன் பாவமாய்ப் பார்க்க, “என்ன லுக்கு. மூடிட்டு படுடா” அவள் அவனை சீண்ட,

“எது மூடிட்டு படுக்கவா?” என்று எழுந்தவன், அவளின் அருகே செல்ல, “பக்கத்துல வந்த கொன்னுடுவேன்” என்றவள் சென்று படுக்கப் பார்க்க,

“நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ஓவரா போற. சரின்னு சொல்லி மூணு மாசம் தள்ளியிருந்தா கொழுப்பு கூடிட்டுச்சுல உனக்கு” என்றவன் அவளை படுக்கையில் தள்ளிவிட்டு, அவளின் மேல் அமர்ந்து அவளை அழுத்த,

“டேய்! டேய்! எருமை உன் வெயிட் தாங்குவனா நான். இறங்குடா” அவனின் இடையைப் பிடித்து அவள் தள்ள, அவன் அவள் இடை பிடித்து தன் வேலையைக் காட்டத் துவங்கினான்.

“டேய் என்னடா பண்ற?” அவள் கூச்சம் தாளாமல் விலகப் பார்க்க, அவளின் உடையில் கை வைத்தவன் தன்னவளை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்திருந்தான் இரண்டு நிமிடத்தில்.

வெட்கம் கொண்டு போர்வைக்குள் மூழ்கியவளின் நாணத்தை ரசித்தவன், அவனும் போர்வைக்குள் சென்று எலி வேலை செய்ய, “டேய் கூசுது. விடுடா” என்றவள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்களின் மகளோ சத்தத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அச்சோ பாப்பு” என்றவள் உடையை அணிந்துகொண்டு, கணவனை கூட கண்டுகொள்ளாமல் அவன் முதுகின் மேலேயே ஏறிச் சென்றுவிட, அவன்தான் ஒரு மீட்டர் ஆழம் படுக்கையில் புதைந்து வெளிவந்தான்.

“சரிடி சரிடி. அம்முமா அழக்கூடாது. தங்கம்ல பாப்பு. வைரம்ல அம்மு. அப்பாவை அடிக்கலாமா?” என்றவள் படுக்கையில் அமர்ந்து தன்னையும் மகளையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த கணவனின் அருகே சென்று, அவனின் மூக்கை பிடித்து இழுத்து, அடிப்பது போல செய்ய, அழுகையில் திறந்திருந்த பொக்கை வாய், சிரிப்பில் விரிந்து கொண்டது.

பிறகு ஒருவழியாய் தூங்க வைத்தவள், “ஹப்பாஆ” என்றபடி கணவனின் மடியில் ஏறி அமர்ந்தாள்.

“ஹப்பா! வெயிட் எவ்வளவுடி” அவன் வினவ,

“சிக்ஸ்டி டா. ரொம்ப குண்டு ஆகிட்டேனோ. குறைக்கணும்” என்று வருத்தப்பட, “இதுவும் அழகாதான் இருக்கு. இப்பதான் கரெக்டா இருக்க. எனக்கு ப்ளாட்டா இருக்கிறதைவிட கொழுக்குமொழுக்குனு இருந்தாதான் பிடிக்கும்” என்றவன் தன் கை கொண்டு இடங்களைச் சுட்டிக் காட்டி, விளையாடவும் செய்ய,

கணவனின் தலையில் தட்டியவள், “பொறுக்கிடா நீ இந்த விஷயத்துல” என்றாள்.

“இந்த விஷயத்துல உங்கிட்ட இப்படி இருக்கத்தான்டி பாப்ஸ் புடிக்குது” என்றவன் அவளின் நெஞ்சில் தலை சாய, கணவனின் தலை கோதியவள்,

“டேய் ஒன் இயருக்கு பேபி பார்ம் ஆகக்கூடாதுனு அத்தை ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க” என்றவள் அவனுக்கு எதனால் என்று விளக்கினாள்.

“அதை நான் பாத்துக்கறேன். என்னை நீ பாத்துக்க” என்றவன் அவள் நெஞ்சில் வன்மையாய் முகம் புதைக்க, அவனின் மூன்று மாச ஏக்கம் அவளுக்கு முப்பது வருடம் போல தோன்றியது. அவனின் அழுத்தம் அப்படி.

படுக்கையில் கிடத்தியவனிடம், “சத்தம் வராமடா. பாப்பு முழிச்சிப்பா” என்றிட, மகளை எட்டிப் பார்த்தவன், “ஆண்டவன் பாத்துப்பான்” என்றான்.

“எது அவருக்கு வேலை இல்லியா. இதெல்லாம் ஒரு வேலைன்னு பாப்பாரா?” சிரித்தவளின் இதழில் தன் இதழ் வைத்து உரசி, தன்னவளின் தாபத்தை தூண்டிவிட்டவன், அவள் மூச்சோடு தன் மூச்சினைக் கலந்தான்.

நீண்ட நேரம் அவளின் இதழ் ஓரங்களில் முத்தம் வைத்து சீண்டியவனின், முதுகை தன்னோடு இறுக்கியவள், “கிஸ் மீ வருண்” விழிகள் மூடி கிறக்கமாகக் கூற, பெண்ணவளின் குரலில், அவனின் மோகத்தீ பற்றி எரிந்தது.

தன்னவளின் இதழை ஆட்கொண்டவன், தன்னவளின் வன்மையான இதழ் ஒற்றலில் திகைத்துதான் போனான். அவளும் இத்தனை ஏக்கங்களை சுமந்திருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை.

“வ.. ரு.. ண்” தன்னவளின் முனகலில், தனது மூன்று மாத சாமியார் வேஷத்தைக் கலைத்தவன், அவளின் உடையில் கை வைக்கும் முன், அவள் அவன் உடையில் கை வைத்திருந்தாள்.

“என்னடி இவ்வளவு பாஸ்டா இருக்க இன்னிக்கு?”

“பின்ன உன்னை மாதிரி ஆமை ரேசுக்கு வந்த மாதிரி பொறுமையா இருக்க முடியுமா?” என்றவள் அவனின் சட்டை பட்டன்களை கழற்றி, அவனின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவனின் நெஞ்சில் முகத்தை வைத்துக் கொள்ள, காளையவனைக் கேட்கவா வேண்டும்.

“குழந்தை பிறந்த உடம்புனு பாவம் பாத்தா, நீ என்னையே கலாய்க்கறியா?” என்றவன் அடாவடியாக செயலில் இறங்க, அவனின் ஒவ்வொரு வன்மையான தொடுகையிலும், உஷ்ணமான முத்தங்களிலும், முரட்டுப் பிடிகளிலும், சிணுங்கி தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவள், அவனுக்கு முத்தங்களையும், கடிகளையும், கீறல்ஙளையும் பரிசாகக் கொடுக்க, குழந்தை பிறந்த பிறகு அவளின் உடலில் ஏற்பட்டிருந்த ஒவ்வொரு மாற்றங்களையும் அழகாய் ரசித்தவன், தன் இதழால் அவைகளை சிலிர்க்கச் செய்து, வெற்றிடங்கள் இல்லாது நிரப்ப, தன்னவளின் சிணுங்கல் சத்தங்களில் அவனின் ஆண்மை வேகமெடுக்க, ஆமை ரேசில் தொடங்கியவன், சிறுத்தையின் வேகத்தில் முடிந்திருந்தான்.

தன் மார்பில் படுத்து உறங்கும் மனைவியின் தலை முடிகளைக் கோதிக் கொண்டிருந்தவன், அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

மகள் அசையும் சத்தத்தில் தலையைத் திருப்பியவன், மனைவியின் தூக்காம் கலையாது மெதுவாக எழுந்து தனது ஷாட்ஸை அணிந்தவன், மகளை எட்டிப் பார்க்க, அவளோ விழித்திருந்தாள்.

“தங்கமா தூங்கலையா நீங்க?” மெதுவாக அவன் கிசுகிசுத்து தூக்க, அவளோ பசியில் அழத் தொடங்கிவிட்டாள்.

மனைவியின் அருகே சென்று அமர்ந்தவன், “யாழ் பாப்பா அழுகறா?” என்றிட அவளிடம் அசைவில்லை. அடித்துப் போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தாள்.

“யாழ்.. பாப்பா அழுகறாடி. எந்திரிச்சு பால் குடு” அவன் உலுக்க, தூக்கக் கலக்கத்தில் இருந்தவளோ, ஏதோ நினைவில்,

“நீ குடு” என்று படுத்துக்கொள்ள, “எது நான் குடுக்கவா?” பேந்தப் பேந்த முழித்தவன், மகளின் அழுகை அதிகமாக, “ஏய் எந்திரிடி” என்று அவளை உலுக்கி அதட்ட, மகளின் குரல் மூளைக்குச் சென்றடைய அடுத்த நொடி எழுந்து அமர்ந்தவள், மகளைக் கையில் வாங்கி பாலைக் கொடுக்க, அவளுக்கோ நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த வன்மையான கூடலில் தூக்கம் தூக்கமாக வர, குழந்தையை தூக்கிப் பிடிக்கவே மிகவும் சிரமப்பட்டாள்.

அவளின் சிரமத்தைக் கண்டவன் அவளின் பின் சென்று முட்டியை மடக்கியபடி அமர்ந்து, அவளின் கைகளுக்கு கீழே தன் கரங்களை கொண்டு சென்றவன், மகளை தன் கைகளில் ஏந்தி, “நீ என் வயிறு மேல தலை சாச்சிக்கடி” என்றிட, “இல்லடா பரவாயில்ல” என்றவள் சிறிது நேரத்தில் கண்ணயர, சிறிது நேரம் மகளைத் தாங்கிப் பிடித்திருந்த வித்யுத் கீழே குனிந்து பார்க்க, மனையாளும் அவனின் வயிற்றில் பின்தலையை சாயத்து தூங்கியிருந்தாள். மகளும் பாலைக் குடித்துவிட்டு வாய் பிளந்து தூங்கியிருக்க, இருவரையும் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

மனைவியை அவன் படுக்க வைக்க, தூக்கம் கலைந்தவளிடம், “நீ தூங்குடி. நான் பாத்துக்கறேன்” என்றவன் மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துவிட்டு, ஏப்பம் வந்தபின் தொட்டிலில் கிடத்தியவன் மனைவியோடு வந்து படுத்துக் கொண்டான்.

பெயர் சூட்டும் தினமும் வர, வீடே விழாக்கோலம் தான்.

வர்ஷித்தின் மகன், அபிஜித்தைக் கையில் எடுத்த யாழ், “அச்சோடா தங்கம் கியூட்டா இருக்க. உன்னையும் சித்தியையும் எல்லாரும் பிரிச்சு வச்சுட்டாங்க” என்று மகனைக் கொஞ்சியபடி குறைபட, வெற்றியோ பேத்தியை தன் கையில் இருந்து யாரிடமும் கொடுக்கவில்லை.

“நீ எப்படா குட் நியூஸ் சொல்லப்போற?” வித்யுத் மித்ரனை இடித்தபடிக் கேட்க,

“வேதா சின்னப் பொண்ணுதானே இன்னும் இரண்டு வருஷம் ஆகட்டும்” என்றிட, “ஸ்ஸ்” என்று ரகசியமாக கணவனை அழைத்தாள் வேதா.

நண்பர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றவன், “என்ன வேதா?” கேட்க, அவனின் கரத்தில் ப்ரெக்னன்சி கிட்டை வைத்தவள், “அப்பா ஆகிட்டீங்க” என்று கூற, அவனுக்கோ அதை வெளிப்படுத்த முடியவில்லை.

தாய் தந்தையை சிறு வயதிலேயே இழந்தவனுக்கு, மீண்டும் தன்னுடைய இரத்தத்தில் தன்னுடைய மனைவியின் வயிற்றில் உதித்த தன் குழந்தையை நினைத்து கண்கள் கலங்கியே விட்டது.

“என்ன இது அழுகறீங்க?” அவன் கண்ணை அவள் துடைத்துவிட, “எனக்கு வருதேடி” என்றான் அன்று அவள் சொன்னது போலவே.

கணவனை அணைத்தவள், “தாங்க்ஸ்” என்றிட, “எப்ப தெரிஞ்சுது?” கேட்டான்.

கணவனின் நெஞ்சில் சுகமாய் சாய்ந்து கொண்டவள், “ஒரு வாரமாவே தோணுச்சு. இன்னிக்குதான் செக் பண்ணேன்” என்றவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “நம்ம குழந்தை” என்றான் கரகரத்த குரலில்.

“ம்ம் ஆமா. நம்ம குழந்தை” என்றவள் கணவனை நிமிர்ந்து பார்க்க அவளின் இரு கன்னங்களும் சிவந்ததிருந்தது.

மனைவியை வெளியே அழைத்து வந்தவன் அங்கிருந்த லட்டுகளில் இரண்டை எடுத்து முதலில் தன் குழந்தைக்கான தாய் மாமன்களுக்கு ஊட்டி விட்டவன், “நல்ல விஷயம் கேட்டிங்கள்ள. நீங்க கேட்ட நேரம் உங்க தங்கச்சி சொல்லிட்டா” என்றிட, அவனுக்கு பின்னிருந்த வேதாவை இருவரும் எட்டிப் பார்க்க, வெட்கப்பட்டவளோ கணவனின் முதுகோடு ஒன்றிவிட்டாள்.

அவளை முன்னோ இழுத்தவன், அவளை அழைத்துச் சென்று பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அனைவரிடமும் ஆசி வாங்கினர். திவ்யபாரதிக்கு கண்கள் கலங்கியே விட மகளின் நெற்றியில் முத்தமிட்டவள், “இப்படியே நீ சந்தோஷமா இருக்கணும்” என்றாள்.

“என்ன நாங்க குடுத்தது வேலை செஞ்சிடுச்சு போல?” இரு அண்ணிகளும் வந்து நின்று கேலியில் இறங்க, “போங்க அண்ணி” நகரப் பார்த்தவளை பூஜா பிடித்து நிறுத்த,

“அப்புறம் எந்த கலர் வொர்க் அவுட் ஆச்சு? ரெட்டா ப்ளாக்கா?” உடையின் நிறத்தை இருவரும் ஆர்வமாய்க் கேட்க,

“ச்சி போங்க அண்ணி. இரண்டு பேரும் மோசம். அண்ணனுக பாவம். எப்படித்தான் வச்சு சமாளிக்கறாகளோ” நிற்க முடியாமல் பேசிவிட்டு ஓடிவிட்டாள் மித்ரனின் மனைவி.

“இவ அண்ணனை பத்தி இவளுக்கு தெரியுமா?” இரு பெண்களின் அதரங்களும் ஒரே நேரத்தில் முணுமுணுக்க, திரும்பி இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டவர்கள், பக்கென்று சிரித்துவிட்டனர்.

ரோஸ் கோல்ட் சட்டையணிந்து, பட்டு வேஷ்டி அணிந்து வித்யுத் நிற்க, ரோஸ் கோல்ட் புடவையில், வளைகாப்பன்று கணவன் கொடுத்த வைர வளையல்களை அணிந்திருந்தவள், ரோஸ் கோல்ட் பட்டுப் பாவடையில், மகளைத் தொட்டிலில் கிடத்த, அவளோ அனைவரையும் கண்களை உருட்டி உருட்டி பார்த்து கை கால்களை சுறுசுறுப்பாக உதைத்துச் சிரித்தாள்.

த்ரூவின் செவிகளில் வித்யுத் பெயரைச் சொல்ல, மாமனை ஒரு முறை பார்த்து புன்னகைத்தவன், மருமகளைக் கையில் ஏந்தி, அவள் செவியருகில் சென்று, “வருணமொழியாழ்” மூன்று முறை கூற, கணவனை திகைப்பும், புன்னகையுமாக யாழ் பார்க்க, அவனோ மித்ரனைக் கண் காட்டினான்.

அவன் தேர்ந்தெடுத்த பெயர் அல்லவா இது!

சம்யுக்தாவின் ஞாபகமாய் பெயர் வேண்டாமென்று கூறிவிட்டான். அது சிலருக்கு சங்கடங்களைக் கூட ஏற்படுத்தலாம் என்று வித்யுத்திடம் கூறியவன், இருவரின் பெயரையும் சேர்த்து, “வருணமொழியாழ் அழகா இருக்கு. அதுதான் என்னோட சாய்ஸ்” கூறியிருக்க, அவனும் அதையே முடிவெடுத்துவிட்டான்.

யாழ் மித்ரனைக் கண்டு புன்னகைக்க, அவனும் புன்னகைத்தான். அதிகம் பேச்சில்லாத உறவு. ஆனால், அத்தனை பாசமும், அன்பும், அக்கறையும் நிறைந்த உறவு இருவருக்குள்ளும்.

அன்று முழுவதும், தனு தங்கையை, வருணமொழியாழ் வருணமொழியாழ் என்றழைக்க, பாவம் அந்த குட்டி முட்டைக்கோஸுக்கு புரிந்தால் தானே.