யாழ் 6

IMG-20210214-WA0021-7118062a

யாழ் 6

யாழ்-6

அடுத்தநாள் கல்லூரி வந்த சரணையும் ராஷ்மிகாவையும், அவர்களது ஜூனியர் பெண் வந்து, “அக்கா, உங்க இரண்டு பேரையும் ஆடிட்டோரியம் வரச்சொன்னாங்க” என்று சொல்ல,

“யாரு?” ராஷ்மிகா புருவ முடிச்சுடன் வினவினாள்.

“உங்க க்ளாஸ்ல எல்லாரும் அங்கதான் இருக்காங்க. உங்க க்ளாஸ்மேட் தான் சொன்னாங்க” சொல்லிவிட்டு அவள் கிளம்ப,

“நம்மள எதுக்குடா?” ராஷ்மிகா யோசனையாய்க்,

“சரி வா. மொத்த க்ளாஸும் அங்கதான் இருக்கும் போல” சரண் சொல்ல இருவரும் ஆடிட்டோரியம் சென்றான்.

இரண்டு பேரும் உள்ளே நுழைய, யாரும் இல்லாததைக் கண்ட ராஷ்மிகா, “என்னடா? மொத்த க்ளாஸ்னு அவ சொன்னா. ஆனா, இங்க யாரையுமே காணோம்” என்றபடியே உள்ளே நடக்க, திறந்திருந்த மூன்று கதவுகளும் திடீரென்று அடைக்கப்பட்டது.

கதவு மூடப்படும் படீர் சத்தத்தில் இருவரும் திரும்ப, ஒரு நாலைந்து ஜிம்பாய்ஸ் போல இருந்தவர்கள் ஜன்னலையும் சேர்த்து அடைத்துக் கொண்டிருந்தனர்.

“ஏய்! யாரு நீங்க?” கேட்கப் போன சரணை ஒருவன் அடிக்க, “சரண்!” அலறிவிட்டாள் ராஷ்மிகா.

அவன் அடித்ததில் சரண் உதட்டின் ஓரம் ரத்தம் துளிர்க்க, தனது கைக்குட்டையால் துடைத்தவள், “ஐ வில் கால் தி போலீஸ்” என்று ஃபோனை எடுக்க, அவளது மொபைலைப் பிடுங்க, கண்மண் தெரியாமல் கோபம் வந்தது ராஷ்மிகாவிற்கு. சரியான முன்கோபி அவள். யோசிக்காமல் ஆவேசத்தில் வருவது. ஆனால், சிறு பிள்ளையிடம் வரும் கோபம் போன்றது.

ராஷ்மிகா, சரண் இருவருக்குமே என்ன நடக்கிறது என்றே சுத்தமாகப் புரியவில்லை. யாரோ, எவரோ என்றே தெரியாதவர்கள் அதுவும் ரௌடி போல காட்சி அளிப்பவர்கள், கல்லூரியில் தங்களிடம் ஏன் எதனால் என்று நினைத்தனர் இருவரும்.

இருவரும் யோசனையில் நிற்கும் போதே, ஸ்டேஜிலிருந்து வந்த ஷூவின் சத்தம் ‘கனீர்”கனீர்’ என்று ஒலிக்க, இருவரும் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினர்.

இடமும் வலமும் தனது ஆறடி முழு உயரத்திற்கும் நடந்து வேங்கையாய் கொண்டிருந்தவன், கீழிருந்த ஆள் ஒருவனைப் பார்த்து ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்தி வைத்தார்போல் மேலே கையைத் தூக்கி, ‘அவர்களை அனுப்பு’ என்பதுபோல சைகை செய்ய சரணையும் ராஷ்மிகாவையும் இழுத்துச் சென்றனர் அவர்கள்.

அப்போதுதான் ஸ்டேஜ் ஸ்கீரின் பின்னாலிருந்து சிவாவும், மான்சியும் வெளிப்பட்டனர். நால்வரையும் ஒரே இடத்தில் லைனாக நிற்க வைக்க, அங்கிருந்த ஒரு டேபிளில் போய் ஜம்மென்று ஏறி கம்பீரமாய் அமர்ந்தான் அஷ்வின்.

அவன் தனது கூலர்ஸை கழற்ற, அதை வந்து ஒருவன் பெற்றுக் கொண்டான்.

“இவங்க நாலுபேர் தானே, நேத்து ராக்கிங் பண்ணது” ராஷ்மியின் மேல் கண்களை வைத்துக்கொண்டே ஒருவனிடம் அஷ்வின் கேட்க, “ஆமா ஸார்” என்றான்.

தனது ஸ்லீவ்ஸை கைமுட்டி வரை கண்களை ரேசர் போன்று கூராக்கி மடித்துவிட்டவன், “இதுல யாரெல்லாம் என்ன பேசுனிங்க? லைன்னா நீங்களே சொல்லுங்க பாக்கலாம்” விரைப்பாகக் கைகளைக் கட்டிக் கொண்டு அஷ்வின் கேட்க, அஷ்வின் அமர்ந்திருந்த தோரணையே அனைவருக்கும் பயத்தைக் கிளப்ப, ஒருத்தி மட்டும் அசையாது முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அவனை.

“ஸார் நாங்க..” குரலை லேசாக உயர்த்தியபடி சிவா ஆரம்பிக்க,

“அ.. கேக்கல.. இங்க பக்கத்துல வந்து சொல்லு” செருக்குடன் கண்களில் நக்கலையும் கோபத்தையும் தேக்கி அஷ்வின் கேட்க, சிவாவின் குரல் அப்படியே பயத்தில் உள்ளே சென்று அவனின் நாவறண்டது.

“ஸார், இல்ல ஸார். ஜஸ்ட் பேசிட்டுதான் இருந்தோம்” தன்னால் முடிந்த அளவு உள்ளே போயிருந்த குரலை, வெளி எடுத்து வந்து சொன்னாள் மான்சி.

“அதுதான் என்ன பேசுனிங்கன்னு கேட்டேன்” என்றான் தோரணையாக.

அஷ்வின் அதிலேயே வந்து நிற்கவும் மான்சி வாயை மூடிக்கொண்டாள். மூன்று பேரும் வாயை மூடிக் கொண்டு நிற்கவும் அஷ்வினே ஆரம்பித்தான்.

“ரைட். நான் ஒண்ணு கேக்கறேன். அதுக்கு பதில் சொல்லுங்க” என்றவன் தனது ஐ ஃபோனை எடுத்தான்.

“இங்க யாரு டிக்டாக் பண்ணுவீங்க” கேள்வியை நக்கலாக அஷ்வின் வினவ, சிவா, சரண், மான்சியின் பார்வையும் தங்களை அறியாமல் ராஷ்மிகாவின் மேல் விழுந்தது.

ஆனால், ராஷ்மிகாவோ எதையும் உணரா வண்ணம், அஷ்வினை பார்வையாலேயே முறைத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள்.

மூவரின் பார்வையை உணர்ந்த அஷ்வின், ‘அட இந்த அல்லிராணி தானா?’ மனதிற்குள் நினைத்தவனின் முகம் இறுகியது.

“இங்க வா” ஒற்றை விரலை நீட்டி அவளை அழைக்க, ராஷ்மிகாவோ அசையாது நின்றாள்.

அஷ்வின் அவனது கார்ட் ஒருவனைப்பார்க்க, “ஆ!” என்ற அலறல் சத்தத்தில் அனைவரும் திரும்ப, சிவாவுடைய கையைத்தான் ஒருவன் முறுக்கிக் கொண்டிருந்தான்.

‘அய்யயோ’ என்று பதறிய ராஷ்மிகா சிவாவை நாட நினைத்து நகரப்போக,

“ஐ செட் கம் ஹியர்!” அஷ்வின் சிங்கமாய் கர்ஜிக்க, ராஷ்மிகாவிற்குப் புரிந்தது. சிவா வலியில் துடிப்பதைப் பார்த்தவள், அஷ்வின் அருகில் கல்லாய் சென்று நின்றாள்.

“ஒரு டிக்டாக் டயலாக் இருக்கு. இந்தா பண்ணு” ராஷ்மிகா கையில் அஷ்வின் திணிக்க ராஷ்மிகா ஃபோனையே வெறித்தாள்.

“ஓ, டயலாக் ஆன் பண்ண மறந்துட்டேன்” அஷ்வின் ப்ளேபட்டனை அழுத்த, அதில் ஓடிய ஆடியோவைக் கேட்ட நான்கு பேருக்கும் அதிர்ச்சி. மான்சிக்கோ பயத்தில் உடல் நடுங்கி வியர்க்கத் துவங்கியது.

ஏனெனில், அது அவர்கள் நான்குபேரும் நேற்று கீர்த்தியிடம் பேசிய ஆடியோ. ஒன்றுவிடாமல் அனைத்தையும் ரெக்கார்ட் செய்திருந்தாள் அவள்.

“உன்பேர் என்னன்னு கேக்கறது நீதான?” அஷ்வின் கேள்வியில் ராஷ்மிகாவின் முகம் மாறவில்லை. அப்படியே நிற்க அஷ்வின் மற்ற மூவரின் பக்கமும் திரும்பினான்.

“இதுல யாரு என் தங்கச்சிகிட்ட ஹைட் அண்ட் வெயிட் கேட்டது. நீயா இல்ல இவனா?” சிவாவிடமும் சரணிடமும் கேட்க இருவரும் வாயைத் திறக்கவில்லை.

அஷ்வின் சரணின் சட்டைக்காலரில் கையை வைக்க, “ஸார், அவன் இல்ல. நான்தான்” தன்னால் நண்பனிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்று சிவா உள்ளே புகுந்தான்.

சரணின் சட்டைக்காலரை விட்ட அஷ்வின், “பொம்பள பசங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா?” கேட்டபடியே, தன் முன்னால் நின்றிருந்த சிவாவின் கழுத்திற்குப் பின் கையை கொண்டு சென்றவன் அழுத்திப் பிடித்தான்.

அவனின் செய்கையிலும், அவன் பார்வையில் இருந்த உக்கிரத்திலும் சிவாவிற்கு, சுனாமியாய் பயம் எழுந்தது.

“ஸா.. ஸாரி ஸார்!” என்றான் சிவா திக்கித் திணறியபடி. சரணோ ஏதாவது சிவாவை அடித்துவிடுவார்களோ என்ற நிலையில் நின்றான். மான்சிக்கோ கண்களில் குளம்கட்டி நின்றது. ராஷ்மிகாவோ நின்று இருந்த அதேநிலை.

“உன் அப்பா லெதர் ஷோரூம் கரெக்டா?” என்று கேட்ட அஷ்வின், “இன்னொரு தடவ இந்தமாதிரி ஆச்சு. லெதர் ஷோரூமுக்கு கண்டிப்பா பெரிய ஃபயர் ஆக்ஸிடென்ட் ஆகும்” சாதாரண புன்னகையோடு சொல்ல, சிவாவிற்கு உள்ளுக்குள் நடுங்கியேவிட்டது.

“அதே மாதிரிதான். உன் அப்பா ஜவுளிக்கடை. உன் அப்பா பிசினஸ்னு. எதுவும் இருக்காது” சரணையும் மான்சியையும் பார்த்து, தனது இரும்புக் குரலில் எச்சரிக்க எல்லோரும் தலையை ஆட்டினர்.

“ரிஷி! கெட் தெம் ஔட். எக்ஸப்ட் திஸ் கேர்ள்” என்று சொல்ல மூவரையும் கார்ட்ஸ் இழுக்க, சரணோ பயத்தோடு ராஷ்மியையும் அஷ்வினையும் மாறிமாறிப் பார்த்தான்.

சரணின் பார்வையை உணர்ந்த அஷ்வின், “ரிஷி சீக்கிரம். கெட் தெம் அவுட்!” ராஷ்மிகாவிடம் இருந்து தலையைத் திருப்பாமல் கட்டளையிட, மூவரையும் தூக்கிப்போகாதக் குறையாக இழுத்துச் சென்றனர்.

அவர்களை வெளியே அனுப்பியவுடன், “ரிஷி யூ ஆல் டூ கெட் அவுட்!” என்று சொல்ல சம்பளம் வாங்குபவன் பேசாமல் வெளியே சென்று கதவருகில் நின்றுவிட்டான்.

அவ்வளவுதான்.

ரிஷி வெளியே சென்ற அடுத்த நொடியே ராஷ்மிகாவின் ஐடிகார்டை பற்றி அருகில் அஷ்வின் இழுக்க, அவளோ நிலை தடுமாறி அவனருகில் நின்றாள்.

ஐடிகார்டிலுள்ள ராஷ்மிகாவின் விவரங்களைப் பார்த்தவன், “உன் தகுதி என்னனு, என் தங்கச்சியை அதட்டிருக்க?” என்றான் நக்கலோடு.

“ஓஓஓ! அவ்வளவு தகுதி பாக்கறவன் எதுக்கு இங்க சேர்த்த? யூ.எஸ், யூ.கேனு சேத்திருக்கலாம்ல. இல்ல நீயே ஒரு காலேஜ் கட்டி வச்சிருக்கலாம்ல உன் தங்கச்சிக்கு” ராஷ்மிகா திமிராய் ஒருமையில் அவனின் பார்வையைத் தாங்கிக் கேட்க,

அவளது ஐடிகார்டை அப்படியே தன் கையில் ஒரு சுற்று அஷ்வின் சுற்ற,
அவனுக்கும் ராஷ்மிகாவிற்கும் சிறிதளவே இடைவெளி இருந்தது.
அவனது நெருக்கத்திலும் கோபப்பார்வையிலும் கொஞ்சம் பயம் எடுத்தாலும் அதை வெளியே கடுகளவும் காட்டவில்லை ராஷ்மிகா.

ஒரு நிமிடம்தான். தன் முகத்தை நிதானத்திற்குக் கொண்டு வந்த அஷ்வின், “சரி, ஏதோ டிக்டாக் பண்ண சொன்னியே என் தங்கச்சிய. இப்போ என் ஃபோன்ல போடறேன். நீ பண்ணற!” ராஜதோரணையோடு அங்கிருந்த மேஜையில் ஏறி அமர்ந்தவன் கட்டளையிட, ராஷ்மிகாவிற்கு ஆத்திரமாக வந்தது.

“நான் போறேன். உன் இஷ்டத்துக்கு ஆடமுடியாது” அவள் நகர, அஷ்வினின் சொடக்கு சத்தம் அவளை நிற்க வைத்தது.

“ஏன்? என் தங்கச்சிய வேற காலேஜில் சேர்க்கலைன்னு கேட்டியே? இது எங்க காலேஜ்தான். பினாமி பேர்ல இருக்கு” அஷ்வின் சொல்ல, ‘இப்போ எதுக்கு இதை சொல்றான்’ என்று யோசித்த ராஷ்மிகாவிற்கு விளங்கியது.

“என்ன உன் காலேஜ்னு மிரட்டுறியா?” அவள் தைரியமாக நின்று கேட்க,

“உன்னை என்ன பண்ண முடியும்? நீங்க, மேடம் பெரிய ஆளு” என்று அவளின் குருட்டு தைரியத்தைக் கேலி செய்தவன், “ஆனா, வெளில நிக்கற உன் ஃப்ரண்ட்ஸ் காம்பஸ் இன்டர்வியூ போக மாட்டாங்க” இரக்கமே இல்லாதவனைப் போலச் சொல்ல ராஷ்மிகாவிற்கு உறைத்தது.

அவளிற்குத் தெரியும் சரணிற்கு சொந்த கம்பெனி ஸ்டார்ட் செய்யும் ஐடியா என்றாலும், சிவாவும் மான்சியும் இதை நம்பியே இருப்பதை.

ராஷ்மிகா அப்படியே நிற்பதைக் கவனித்தவன், அவள் அருகில் வந்து அவள் சுதாரிப்பதற்குள் அவள் இடையை வளைத்துப் பிடித்து, ஒரு செல்ஃபியை எடுத்துவிட்டான். அவன் இடையைப் பிடித்த அதிர்ச்சியில் அவள் உறைந்து, அவனைப் பார்க்க அது போட்டோவாகப் அவனது அலைபேசியில் பதிந்திருந்தது.

“டெலிட் பண்ணுடா!” ஒருமையில் ராஷ்மிகா கத்த அந்த ஆடிட்டோரியம் முழுவதும் எதிரொலித்தது கீச்சென்ற அவளது குரல்.

அவளது கன்னத்தை அழுத்திப் பிடித்து, அவள் முகம் அருகே சென்றவன், “டா போட்ட.. பல்லை உடச்சிடுவேன்!” என்றவன் அவளிடமிருந்து விலகி,

“இந்த போட்டோ, நீ காலேஜ் விட்டுப் போறவரைக்கும் என்கிட்டதான் இருக்கும். நீ கிளம்பலாம்” அத்துடன், தன் பேச்சு முடிந்ததுபோல அவன் கிளம்பிவிட்டான்.

வெளியே வந்த அஷ்வின்குமார், தனது கூலர்ஸை வாங்கிக்கொண்டு தனது நடையின் கம்பீரம் குறையாமல் செல்ல சரண், சிவா, மான்சி எல்லோரும் உள்ளே ஓடினர்.

நண்பர்களைப் பார்த்தவள்,“மான்சி!” என்று, ஓடிச்சென்று தோழியை இறுகக் கட்டிக்கொண்டாள்.

சரணோ, “ஹே ராஷ்மி! ஆர் யூ ஓகே?” அக்கறையாக வினவ தலையை
மட்டும் ஆட்டினாள். ஆனாலும், அவளுடைய உதட்டின் நடுக்கத்தை கவனிக்கத் தவறவில்லை சரண்.

“ஸாரி ராஷ்மி! என்னாலதான் எல்லாம்” என்று மன்னிப்பைக் கேட்டான் சிவா. ஆனால், ராஷ்மிக்கோ மனம் இறங்கவில்லை.

“டேய்! நம்ம மேல தப்பில்லை விடு. நம்ம என்ன ராக் பண்ணோமா? கூப்பிட்டு பேர் கேட்டோம். சும்மா விளையாட்டுக்கு டிக்டாக் பத்தி நான் கேட்டேன். அவ்வளவுதான் விடு” என்றவளுக்கு அப்போது தான், அவர்கள் தன்னுடைய கைபேசியை பிடுங்கியது நினைவிற்கு வந்தது.

“சரண் என் ஃபோன் எங்க?” ராஷ்மிகா வினவினாள். அவளுடைய தந்தை அவளது பதினெட்டாவது பிறந்த நாளிற்கு கிஃப்ட் பண்ண ஃபோன் அது. அவளுடைய சென்டிமென்ட் ஃபோனும் கூட.

“ராஷ்மி, அத அவங்க தரமாட்டேன்னு சொல்டானுங்க” சரண் சொல்ல ராஷ்மிகாவிற்கு சொல்ல முடியாத ஆத்திரம் அஷ்வினின் மேல் எழுந்தது. எதைப்பற்றியும் அவள் பேசவில்லை. முக்கியமாக ஃபோட்டோ விஷயம். சரண் மணியைப் பார்க்க, அது பத்தைத் தாண்டியிருந்தது.

“சரி வாங்க. இன்னிக்கு க்ளாஸ் போக வேண்டாம்” என்றவன் ராஷ்மிகாவை வெளியே அழைத்துக்கொண்டு சென்றான். ஆனால், அவளது மனமோ தணியாமல் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது.

காரில் தனது கன்ஸ்ட்ரக்ஷனிற்கு சென்றுகொண்டிருந்த, அஸ்வினோ தங்கைக்கு ஃபோன் செய்தான்.

“தர்ஷு, இனிமேல் யாரும் உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க. ஃபீல் ப்ரீ” என்று தைரிய மூட்டினான்.

“அண்ணா, நீங்க எதுவும் அவங்களை திட்டலதானே?” அண்ணனின் குணம் அறிந்தவளாய் கேட்டாள் கீர்த்தனா.

“இல்லடாமா. சும்மா வார்ன் பண்ணி விட்டோம்” என்றவன், “சரி, லஞ்ச் சாப்பிட்டு தூங்கு. நாளையில இருந்து ஜாலியா காலேஜ் போ” அஷ்வின் சொல்ல,

“சரிண்ணா பை!” என்றுவிட்டு ஃபோனை அணைத்தாள் கீர்த்தனா.

அவளிற்கு நடந்த எதுவும் தெரியவில்லை. ஃபோனை வைத்த அஷ்வினுக்கோ ராஷ்மிகாவின் நினைப்பு வந்தது. முதலில் தோன்றிய புன்னகை மாறி, முகம் இறுக்கத்தைத் தத்தெடுத்தது. அனைத்தும் ராஷ்மிகாவின் மேலிருந்த கோபம்தான்.

நேற்று காலையில் இருந்தே அவனுக்கு அப்படித்தான் இருக்கிறது. அதாவது, நேற்று காலை அவளை அண்ணாநகர் சிக்னலில் பார்த்ததில் இருந்து. நேற்று காலை சிக்னலில், சிறுவனிடம் அவள் சைகை மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது பார்த்தது அவன் ராஷ்மிகாவை.

அவனுக்கு முதலில் பார்த்தபோது, இந்த சினிமாக்களில் வருகிற மாதிரி ‘குழந்தைத்தன்மை உள்ள பெண்ணா’ என்று பின்னாடி பாக்ரௌன்ட் மியூசிக் யாரும் வாசிக்கவில்லை. மாறாக ‘இது என்ன லூசு மாதிரி பண்ணுது ரோட்ல’ என்ற எண்ணமே எழுந்து எரிச்சலைக் கிளப்பியது.

அதுவும், “பை அஸு” என்று வலதுபக்கம் இருந்து, கடைசியாக அவள் தந்த ஃப்ளையிங் கிஸ், அந்தப் பையனின் இடப் பக்கம் இருந்த அஷ்வினிற்கு திடீரென ஏதோ இதயத்தை அதிரச்செய்தது. அவனிற்கு தெரியும் அந்தச் சிறுவனிற்கு அவள் சொன்னது என்று. ஆனால், “அஸு” என்று அவள் கடந்தது அவனை சம்மந்தமே இல்லாமல் எரிச்சலாக்கியது.

கன்ஸ்ட்ரக்ஷன் சென்றவன் வேலையில் அழகாய் ஒன்றிவிட, திடீரென அவர்களது தியேட்டரில் தீ விபத்து என்று தகவல் வர, அங்கே விரைந்தான். அங்கே சென்றுவிட்டு என்ன என்று பார்ப்பதற்குள் கன்ஸ்ட்ரக்ஷனில் குளறுபடி. எல்லாவற்றையும் சமாளித்து முடிக்க மணி ஐந்து ஆகிவிட்டது.

அப்போதுதான் கீர்த்தனாவின் கார் டிரைவர் கூப்பிட்டது அஷ்வினை, “சொல்லு முத்து” ஃபோனை எடுத்தவன் பேச,

“சார்..” என்றவனுக்கு பல் தந்தியடித்தது.

“சார், நம்ம தர்ஷினி அம்மாவ, ஏதோ பொண்ணு பேசி ஆடிட்டோரியம் கூப்பிட்டாங்க. தர்ஷினிம்மா போன அப்புறம், உள்ள ஒரு பத்து நிமிஷம் இருக்கும். வெளிய வந்த தர்ஷினி அம்மா மூஞ்சில அத்தனை கோபம் ஸார். அப்புறம்தான் பாத்தேன். பின்னாலேயே இரண்டு பசங்க இரண்டு பொண்ணுங்க வந்தாங்க. ரேக்கிங்கோனு தோணுது” முத்து சொல்லி முடிக்க, அஷ்வின் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

சிறிய வயதிலிருந்து தூக்கி வளர்த்த தங்கையை யாரும் கடியக்கூட விடமாட்டான். தங்கையை அன்னை தந்தையைவிட அதிக நேரம் கையில் வைத்திருந்தது அஷ்வின் தான். அதற்கு அவர்களுக்குள் இருந்த எட்டு வயது வித்தியாசமே காரணம்.
தங்கையை ஒவ்வொரு விஷயத்திலும் பொத்திப் பொத்தி பாதுகாத்தவன் தங்கள் வசதிக்கு வெளிநாட்டிலேயே படிக்க வைக்க முடிந்தும், தங்கையின் பாதுகாப்பு மற்றும் அவளைப் பிரிய நேரிடும் என்று தங்கள் கல்லூரியிலே சேர்த்துவிட்டான்.

ஆனால், அதற்கு அவர்களின் தாய் செல்வமணி சில கண்டிஷனும் போட்டார்.

“இங்கபாரு குமரா. அவ நம்ம காலேஜ்ல படிக்கிறத பத்தி எனக்கு ஒண்ணுமில்ல. ஆனா, அவ அங்க படிக்கிற பொண்ணுக பசங்க மாதிரியே, சாதாரணமா போயிட்டு வரட்டும். எந்த காரணத்துனாலையும் தர்ஷு காலேஜ் சேர்மன் பொண்ணுன்னு யாருக்கும் தெரியக்கூடாது” என்றிட சரியென்று ஒத்துக்கொண்டான்.

ஃபோனை அணைத்தவன் வீட்டிற்கு கிளம்பி செல்லும் வழியில்தான் சரணின் காரில் மோதியது. தன் மேல் தவறு இருந்ததால்தான் அவன் காரை நிறுத்தியதும்.

அதற்குள் காலையில் அவன் பார்த்த அதே பெண் அவன் முன் வந்து, “ஏய்! கண்ண எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வர?” என்று சண்டைக்குவர அஷ்வினின் கோபம் ஏறியது.

“எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வரணும்னு நினைக்கற?” ஏளனமாய்க் கேட்க ராஷ்மிகாவிற்கு வாயைப் பிடுங்கியது போல ஆனது.

“மரியாதையா வந்து சாரி கேளு” ராஷ்மிகா வாதாட, அஷ்வினின் கோபம் கரையைக் கடந்தது. சிறியவயதில் இருந்து ராஜகுமாரனாய்
வளர்ந்தவனை ஒருத்தி இப்படி அதட்ட அவனிற்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

“ஏய், யாருடி நீ? ஓவரா பேசற. அது ஒரு காரு. அத லைட்டா உரசுனதுக்கு இப்படி குதிக்கற. இந்தா, இதான வேணும் உனக்கு. போய் ரெடி பண்ணிக்கோ” தனது டாஷ்போர்டை திறந்து பணத்தை எடுத்து, ராஷ்மிகா கையில் திணிக்க அவ்வளவுதான், அவளின் தன்மானத்தை அது சீண்டிவிட்டது.

“பணம் இருக்கற திமிராடா. பேஸிக் மேனர்ஸ் கூட இல்லதா நீயெல்லாம் வேஸ்ட்” என்று அவன் தந்த பணத்தை, அவன் மேலேயே வீசிவிட்டு சரணை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ராஷ்மிகா.

மற்ற நேரமாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. இப்போது, அங்கே தங்கை வேறு அழுது கொண்டிருப்பாளோ என்பது நினைவு வர ராஷ்மிகா மேலுள்ள கோபத்தை காரின் மேல் காண்பித்தான் அஷ்வின்.

வீடு வந்தவன் நேராக தங்கையின் அறைக்குச் செல்ல அறைக் கதவைத் திறந்தவன், முகம் கோபத்தில் வாடி உட்கார்ந்திருந்த தங்கையைக் கண்டான்.

“தர்ஷு என்ன ஆச்சு?” தங்கையின் அருகில் சென்று ஆறுதலாய் தோளில் கை வைத்து உட்கார்ந்தவன் தங்கையின் அமைதியைக் கண்டான்.

“என்ன ஆச்சுன்னு சொன்னா தானே தர்ஷு தெரியும்” தலையை வருடி விட்டபடிக் கேட்க தனது ஃபோனை எடுத்து அந்த ரெக்கார்டிங்கை போட்டுக் காண்பித்தாள் கீர்த்தனா. எதற்கும் இருக்கட்டுமென்று அவள் ரெக்கார்ட் செய்தது இப்போது உதவியது அவளுக்கு.

“இது எங்கே? நம்ம காலேஜ்ல நடந்ததா?” கோபம் கொப்பளிக்க தங்கையிடம் கேட்க, அவளோ, ‘ஆம்’ என்பது போலத் தலையாட்டினாள்.

“நம்ம ஸ்டூடன்ட்ஸா?” அஸ்வின் கேட்க, அதற்கும் ‘ஆமாம்’ என்று தலையாட்ட, ஃபோனை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் சென்றான் அஷ்வின்குமார்.

அஷ்வினுக்கு ரெக்கார்டிங்கில் கேட்ட ஒரு பெயர் நியாபகம் இருந்தது.

அதாவது சரண், “சரி விடு ராஷ்மிகா” என்று சொன்னது.

உடனே காலேஜில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவருக்கு ஃபோன் செய்தவன், ராஷ்மிகாவின் பெயரைச் சொல்லி விஷயத்தைத் தெரிவிக்க அவரோ, “ஸார் நம்ம காலேஜ்ல இரண்டு ராஷ்மிகா இருக்காங்க” என்றார்.

உள்ளே நுழைந்தவன், “தர்ஷு, ராஷ்மிகா பாக்க எப்படி இருப்பா? ஏதாவது அடையாளம்?” என்று கேட்க,

“அவ ஐடி கலர்டேக் கலர் ரெட் ண்ணா” என்றாள் கீர்த்தனா. அவர்கள் கல்லூரியில் ஒவ்வொரு டிபார்ட்மெண்டிற்கும் ஒவ்வொரு கலர்டேக்.

அஷ்வின் அதைத் தெரிவித்து விசாரிக்க, அந்த வகுப்பின் மொத்த பேருடைய ஃபோட்டோ மற்றும் டீடெயில்ஸ் வந்தது.

முதலில் ராஷ்மிகாவின் ஃபோட்டோவைத் தேடி எடுத்தவன் அவளது புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான்.

‘இவளா?’ என்று இருந்தது அவனுக்கு.

“தர்ஷு ஷீ இஸ் தட் கேர்ள் ரைட்?” கேட்க, “ஆமா ண்ணா” என்றாள்.

“மத்த மூணு பேர் யாரு?” அஷ்வின் விசாரிக்க, நான்கு பேரையும் பெயரோடு குறித்துக்கொண்டான்.

ராஷ்மிகா பேசிய பேச்சு முழுதும் அவனது மூளையில் திரும்பத் திரும்ப ஓட ஆத்திரம் தான் வந்தது அவனிற்கு. ஒரு பெண்ணிற்கு எப்படி இப்படித் திமிர் இருக்கலாம் என்று.

அவள் கொஞ்சம்கூடத் தன்னிடம் குரலை இறக்காமல், ஒரே தொணியில் பேசியது அவனின் ஈகோவைத் தூண்டி விட்டது. அதுவும் ஒரு பெண் என்று நினைத்து அவள் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டான். அதுதான் அடுத்த நாள் அவன் அப்படி நடந்து கொண்டது அவளிடம். ஆனாலும், அவனிற்கு அவ்வளவாக திருப்தியில்லை.

ராஷ்மிகாவை ஏனோ சும்மாவிடவும் அவனுக்கு மனமில்லை. அவளின் திமிரை ஆட்டம் காண வைக்க எண்ணி அவன் மனம் விஷமமாய் சிரித்தது.

***

“எனக்கு வேணாம் போம்மா” வீட்டில் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் ராஷ்மிகா.

“வந்ததுல இருந்து ஒண்ணும் சாப்பிடல நீ. இந்த பாலையாவது குடி ராஷ்மி..” தாய் அதட்ட எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

மகளின் முகத்தை உற்று கவனித்தவர், அப்போதுதான் அந்த பிடிவாதத்திற்குள் ஒளிந்திருந்த முகவாட்டத்தை கண்டார்.

“ஏன்டி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவளது தாடையை திருப்பிக்கேட்க, தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள் அவரின் மகளே.

இருநொடிகள் அமைதி காத்தவள், “அப்பா வாங்கிக் குடுத்த ஃபோனைத் தொலைச்சுட்டேன் ம்மா” என்றவளின் குரலிலேயே தெரிந்துகொண்டார் மகள் எவ்வளவு சோகமாய் இருக்கிறாள் என்று.

இருந்தாலும் மகளின் அலட்சியத்தை கண்டிக்கவும் அவர் தவறவில்லை.

“என்ன ராஷ்மி இது? இப்படியா அசால்டா இருப்ப” சிறிது கடிந்தவர், “சரி விடுடி. வேற வாங்கிக்கலாம்” என்று மகளை சமாதானம் செய்து பாலைப் பருக வைத்தவர்,

“சரி, அப்பா வரட்டும். நைட் வெளில சாப்பிடப்போலாம் சரியா?” என்று சொல்ல, அம்மாவிற்காக சிரித்து வைத்தாள். மனதிற்குள் ஃபோன் போன கவலை ஒருபக்கம் என்றால், அவன் எடுத்த போட்டோவை நினைத்து மறுபக்கம் மனம் சோர்ந்தாள்.

“ராஷ்மி” என்றழைத்தவர், “அப்பா இன்னும் அரைமணி நேரத்துல வந்திடுவாரு. ரெடியா இரு!” கல்யாணி சொல்ல போய்க் கிளம்பி வந்தாள் ராஷ்மிகா.

பிஸ்தா நிற பச்சை சுடிதார் டாப் அணிந்து, வெள்ளை தங்க நிற பாண்ட் துப்பாட்டாவிலும், அதற்கு ஒற்றைக் கல் வைத்தத் தோடும், கையில் சன்னமான ப்ரேஸ்லட், மெல்லிய செயின், லைட்டான மேக்கப் என்று மகள் ஜொலிக்க அவளின் அழகில் கர்வம் கொண்டவருக்கு காரணமில்லாமல் உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது.

வீட்டிற்கு வந்த சக்திவேலும் மகளின் முகவாட்டத்தை கவனித்துவிட்டு, “ராஷ்மி ம்மா. ஃபோன் தானே விடு. அப்பா ஒரு ஐஞ்சு நிமிசத்துல ரெடியாகிட்டு வந்திடறேன். வெளில போலாம்” என்றவர் ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வந்தார்.

அவர்கள் சென்றது சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ரூஃப் டாப் ரெஸ்ட்டாரண்ட். அங்கு சென்றும் பெற்றோருக்காக முகத்தை நன்றாக வைத்திருந்தாளே தவிர, உண்மையான சந்தோஷத்துடன் அவளால் இருக்க முடியவில்லை.

“ராஷ்மி குட்டி. இந்தா. அப்பா உனக்கு ஒண்ணு வாங்கினேன்” என்று ஒரு கவரை டேபிளின் மேல் எடுத்து வைத்தார்.

கவரை பிரித்த ராஷ்மிகாவிற்கோ ஆச்சரியம். அதில் முப்பத்தி ஆறாயிரம் மதிப்புள்ள நியூ மாடல் மொபைல் பாக்ஸ் இருந்தது.

“அப்பா!” என்று ராஷ்மிகா வாய்ப் பிளக்க, அவரோ புன்னகைத்தார்.

மனைவி மாலை ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்ல, டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இருந்து கிளம்பியவர், நேரே சென்றது ஒரு புது ஃபோனை வாங்கத்தான்.

அருகில் அமர்ந்திருந்த தந்தையைக் கட்டித் தோளில் சாய்ந்தவள், “ஸாரி, அண்ட் தேங்க்ஸ்ப்பா” என்றாள் புன்னகையோடு.

“எப்போமே நீ சிரிச்சுட்டே இருக்கணும்டா” என்று தலையில் செல்லமாய் அவர் கை வைத்துச் சொல்ல கல்யாணிக்குத்தான்,

‘இவ கல்யாணம் ஆகிப் போகும்போது என்ன அட்டகாசம் பண்ணப் போறாங்களோ’ என்று எண்ணி பெரு மூச்சு ஒன்று வெளிப்பட்டது

“ஃபர்ஸ்ட் செல்ஃபி நம்ம மூணுபேரும் எடுக்கலாம்” ராஷ்மிகா சொல்ல, மூவரும் எழுந்து நின்று ஒரு செல்ஃபியை எடுத்தனர்.

ஆர்டர் கொடுத்த உணவுகள் வர, ராஷ்மிகா அனைத்தையும் மறந்துதான் போனாள். தந்தை தாயுடன் உட்கார்ந்து சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்தவள், கைகளைக் கழுவிக் கொண்டுவர சக்திவேலும் கல்யாணியும் எழுந்து சென்றனர்.

அதற்குள் தொழிலில் தெரிந்த ஒருவரை பார்க்க நேரிட மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்து, அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார் சக்திவேல்.

இங்கே ஒருத்தி சும்மா உட்காரப் பிடிக்காமல், ஃபோனை எடுத்து தன்னைத் தானே செல்ஃபி எடுக்க ஆரம்பித்தாள். சில செல்ஃபிகளை எடுத்து முடித்தவள் போட்டோவைப் பார்வையிட, ஏதோ வித்தியாசமாகத் தெரிய போட்டோவை ஜூம் செய்து நன்றாக ஊன்றி கவனித்தாள்.

இவர்களுக்கு பின்னால் இருந்த இரண்டு பேர் அமரக்கூடிய டேபிளில் தான் அஷ்வின் உட்கார்ந்து, இவளைக் கழுகு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இவர்களுக்கு முன்னாடியே வந்து தன் நண்பன் தேவாவைப் பார்ப்பதற்காக அமர்ந்திருந்தான். தேவா ஃபோன் செய்து ட்ராஃபிக்கில் இருப்பதால் வரத் தாமதமாகுமென்று சொல்ல, அவனுக்காகத் காத்து இருந்தான் அஷ்வின்.

அப்போதுதான் அங்கு வந்த ராஷ்மிகாவைக் கண்டான்.

ரூஃப் டாப் என்பதால் காற்றில் அவர் விட்டிருந்த ஃப்ரீ ஹேரில் கருங்கூந்தல் அலையாக பறக்க, அதற்கு இணையாக துப்பட்டாவும் பறக்க வந்தவளைப் பார்த்தவன், அவளையே தான் துளையிடும் பார்வையால் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

அதையும் நம் சண்டிராணி கண்டுபிடித்துவிட்டாள்.
ராஷ்மிகா திரும்பி அவனை முறைக்க, அஷ்வினால் சும்மா இருக்க முடியவில்லை. இரு கரங்களையும் ஷோபாவின் இரு பக்கமும் வைத்து கால்மேல் கால்போட்டு திமரோடும், அதேசமயம் ஆளுமையோடும் அமர்ந்திருந்தவனைப் கண்டவளுக்கு,

‘ஹோட்டல் ஓனர் மாதிரி எப்படி உக்காந்திருக்கான் பாரு’ என்று மனதிற்குள் நினைத்து மண்டையில் புகைச்சலை ஏற்றிக்கொண்டு அவனை முறைத்தாள்.

‘சும்மா பார்த்ததிற்கா இந்த முறைப்பு’ என்று நினைத்தவன் அவளை மேலும் வம்பிற்கு இழுக்க எண்ணியவன்,

கண்களை வாளின் கூர்மையைப் போல் கூராக வைத்தவன், ‘டப்’ என்று ராஷ்மிகாவைப் பார்த்துக் கண்ணடிக்க, அவனின் செயலில் அதிர்ந்து விதிர்விதிர்த்துப் போனவள், ‘சை.. கருமம்டா சாமி’ முணுமுணுத்து உதட்டைச் சுளித்து திரும்பிவிட்டாள் ராஷ்மிகா.

சக்திவேலும், கல்யாணியும் வர அங்கிருந்து பெற்றோருடன் நகர்ந்தாள் ராஷ்மிகா.

அஸ்வினின் விழிகள் தன்னைத் தொடர்வதை உணர்ந்த ராஷ்மிகா, ‘முழிய பிதுக்கிருவேன்டா கேடி சோடா’ மனதிற்குள் அஸ்வினைத் திட்டிக்கொண்டே வந்தவள், எதிரில் வந்தவனை பார்க்காமல் இடித்து விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!