யாழ்

IMG-20210214-WA0021-244f2b5d

மெல்ல யாழ் மீட்டுதே

யாழ் – 1

டெல்லி

இந்தியாவின் தலைநகரம். கி.மு ஆறாம் நாற்றாண்டிற்கு முன்பிருந்தே மக்கள்
வாழ்வதாக தொல்லியல் சார்புகள் கொண்ட டெல்லி இப்போது அப்படியா இருக்கிறது?

பதினொரு மில்லியன் மக்கள்
தொகையோடு பரபரப்புடன் இயங்கிக் கொண்டு மற்றும் இந்தியாவில் எட்டாவது
பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள டெல்லி மாநகரம் தற்போது அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக அமைந்துள்ளது. மக்கள் போவதும் வருவதுமாக இப்போது போக்குவரத்து
நெரிசலும்.. வாகனங்களின் மாசும் சேர்ந்து தூய்மைக்கேடாய் ஆகிக்
கொண்டிருப்பது வருதத்திற்கு உரியதே!

அந்த டெல்லி மாநகரின் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு டெல்லியின்
பரபரப்பை விட அதிக பரபரப்புடன் காரில்
அமர்ந்திருந்தாள் ராஷ்மிகா.

“பையா… இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” – என்று தான் உட்கார்ந்திருந்த டாக்சி ட்ரைவரிடம் ஹிந்தியில் கேட்டாள் ராஷ்மிகா.

“தர்ட்டி மினிட்ஸ்” என்று பதில்
அறித்துவிட்டு அவர் திரும்பி விட ராஷ்மிகாவிற்கு திக் என்று இருந்தது.

தலையில் கை வைத்து அமரந்தவள் ‘போச்சு’, ‘போச்சு’, ‘இன்னிக்கு சாமி ஆட போறா அவ’ என்று அவளை நினைத்து
மனதிற்குள் முணுமுணுத்தாள் ராஷ்மிகா.

ட்ரைவரிடம் சீக்கிரம் போகச் சொல்லவும் அவளால் முடியவில்லை.. அவளிற்கே
தெரியும் டெல்லி ட்ராஃபிக் பற்றி.. தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவள் இன்று அவளிடம் மாட்டிவிட்டோம் என்று நினைத்து தலையில் குட்டிக் கொண்டாள். ஆனாலும்,

“பையா… டோன்ட் மேக் இட் மோர் தான் தர்ட்டி மினிட்ஸ்” – என்று சொல்ல அவரும்
யோசனையுடனே தலையை ஆட்டினார். அவர் தலை ஆட்டுவதைப் பார்த்து
மனதிற்குள் நொந்து கொண்டவள் “அய்யய்யோ.. இவரு தலை ஆட்றத பாத்தா லேட் ஆகிடும் போலயே” என்று
எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவளது எண்ணத்தைப் பொய்யாக்கி அவளை அந்த பள்ளியின்
முன் ஐந்து நிமிடத்திற்கு முன்னேயே இறக்கிவிட்டார் அந்த டாக்சியின் டிரைவர்.
வந்து சேர்ந்த நிம்மதியில் அவரசரமாக இறங்கியவள் ட்ரைவரிடம் காசைத் தந்து
நன்றியை உரைத்துவிட்டு வேகவேகமாக அந்த ஆர்.கே புரத்தில் அமைந்திருந்த
“டெல்லி பப்ளிக் ஸ்கூல்” உள்ளே நடந்தாள் ராஷ்மிகா.

உள்ளே நடக்க நடக்க ஆங்காங்கே போட்டிருந்த கண்களைக் கூசும் கலர்
லைட்டிங்ஸும்.. கண்களைப் பறிக்கும் சாக்லேட் ஸ்டால்ஸும்.. கண்களை மின்ன வைக்கும் க்ரான்ட் ஸ்டேஜ்களையும் பார்த்து சின்ன வாண்டைப் போல எழுந்த குஷியை அடக்க முடியாமல் தவித்தாள் ராஷ்மிகா. அதையும் மீறி “அய்யோயோ.. அல்ரெடி லேட்.. அவ வேற திட்டுவாளே..” என்று மூளையில் உறைக்க மீண்டும்
வேக நடையுடன் உள்ளே நடந்தாள் ராஷ்மிகா.

உள்ளே அந்த அறைக்குள் நுழைய “ஐய்ய்ய்.. ராஷ்மிகாகாகா கேம்” என்று
ஒரு வாண்டு ஆர்ப்பரிக்க,

“ஹேய்ய்ய்ய்” என்று அங்கிருந்த அனைத்து வாண்டுகளும் ஆர்ப்பரிக்க
அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல ஒருத்தி மட்டும் கையைக் கட்டிக் கொண்டு தன் ஒரு காலை மட்டும் தரையில் தட்டிக் கொண்டு ராஷ்மிகாவைப் பார்வையாலே துளைத்தாள்.

அவளின் பார்வையின் வீரியத்தை உணர்ந்த ராஷ்மிகாவோ அவளின்
அருகில் சென்று அவளை நோக்கிக் கீழே குனிய “க்ஹூம்” என்று அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டாள்.

“யாழ்….” – என்று அழைத்தாள்.

“…….” – பதிலில்லை.

“ஏய்.. இங்க பாருடி” என்று ராஷ்மிகா பிடித்துத் திருப்ப அவளோ சண்டிராணியாய் சிலுப்பிக் கொண்டு நின்றாள்.

“டோன்ட் டாக் டூ மீ” – என்றவள் போய் அங்கிருந்த அவள் உயரத்திற்கு ஏற்றவாறு இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

ராஷ்மிகா அங்கிருந்தக் கூட்டத்தைத் திரும்பிப் பார்க்க அவர்களோ ராஷ்மிகாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி ஒரு மாதிரி கேலியாக சிரித்தனர்.
பின்னர் எல்லோரும் அவரவர்
வேலைகளைப் பார்க்கத் துவங்க (மேக்கப் போட) ராஷ்மிகா தன் செல்ல மகள்
யாழ்மொழி அருகே சென்றாள்.

ஒரு கையை தாடையில் வைத்து முகத்தை ‘உம்’ என்று அமர்ந்திருந்த மகளின் அருகில் சென்று அவளைப் போலவே மகளைப் பார்த்தபடி அமர்ந்தாள் ராஷ்மிகா.

“யாழ்…” என்று ராஷ்மிகா இழுக்க..

“பேசாதிங்க ம்மா”… என்று
சிணுங்கினாள் யாழ்மொழி.

“சாரி டி… ட்ராஃபிக்ல மாட்டிட்டேன் டி நான் அதான் லேட் யாழ்” – என்றாள் மகளிடம்
ராஷ்மிகா.

“அங்க பாரு ம்மா.. எல்லாரோட அம்மாவும் சீக்கிரம் வந்துட்டாங்க.. நீ தான் லேட்”
என்று குற்றம் சாட்டிய மகளிடம் அவளால் எதுவும் பேசமுடியவில்லை. முகவும்
வாடிவிட்டது ராஷ்மிகாவிற்கு.

“சாரி டி தங்கம்.. அம்மா இனி இப்படி பண்ண மாட்டேன்” என்று இரு கைகளையும் காதில் வைத்து சோர்ந்த
முகத்துடன் கேட்க யாழிற்கு அவள் அம்மா முகத்தை அப்படிக் காண முடியவில்லை.

“சாரி ம்மா. சாரி.. சிரிங்க” என்று உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து இறங்கி ராஷ்மியைத் தாவிக் கட்டிப்
பிடிக்க அவளும் தன் மகளை கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.

“சரி வா.. ரெடியாகலாம்” என்று ராஷ்மிகா அழைக்க யாழின் கருமணிகள் அவளின் புது ட்ரெஸைத் தேடி மின்னின. இன்று யாழின் பள்ளியில் மாலை 4:00 மணிக்கு
நடக்கவிருக்கும் ஆன்யுவல் டேவிற்குத் தான் இத்தனை அக்கப்போர்.

“ம்மா…. இந்த லிப்ஸ்டிக் வேணாம்.. ரெட் போட்டுக்கிறேன்” என்று கண்களைச் சுருக்கிக் கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு
சிரித்தவள் “சரிடி.. வா பக்கத்துல” என்று மகளை அருகில் அழைத்து ‘ஆ’ காட்டச்
சொன்னவள்.. லிப்ஸ்டிக்கைப்
போட்டுவிட்டு கழுத்து வரை இருந்த முடிந்த முடியை நன்றாக சீவி தலையில் ஒரு ஹேர் பான்டை மாட்ட சிட்டாய்
இருந்தாள் அவளின் வாண்டு.

“நல்லா இருக்கா ம்மா?” என்று
தன் அன்னையின் போனில் முன் கேமராவைப் பார்த்தபடியே கேட்ட மகளைக் கண்டு அவளின் மனமோ
“சிறகாய் அடித்தது”.

“க்யூட்டா தான்டி இருக்க.. சீன் போடாம போ” ஏற்று மகளிடம் வம்பிழுக்க “நானா? நீ தான் சீன்.. உன்ன விட நான் க்யூட் ன்னு கண்ணு வக்கதே தாய்க்கிழவி” என்று மகள் சொல்ல அங்கிருந்து ஓட்டம் பிடித்து தன் படையுடன் சேர்ந்து கொண்டாள் அந்த நான்கு வயது சண்டிராணி. ராஷ்மிகா தலையில் அடித்துக் கொண்டாள்.. தெரியாமல் தன்
அன்னையை “தாய்க்கிழவி” என்று ஒரு நாள் யாழின் முன்னால் கூப்பிட்டதை
எண்ணி இப்போது சலித்தாள்.

யாழ்மொழியின் க்ளாஸ் டீச்சர் அந்த அறைக்குள் நுழைந்தவர் “நாங்க இப்போ கிட்ஸை மெயின் ஸ்டேஜ்க்கு கூட்டிட்டு
போறோம்.. அவங்க டான்ஸ் ப்ரோக்கிராம் முடிஞ்சதும் நீங்க வந்து என்கிட்ட இன்பார்ம் பண்ணி கூட்டிட்டு போயிடுங்க”
என்று பாதி ஆங்கிலத்திலும்
ஹிந்தியிலும் சொல்லிக்கொண்டு எல்லாக் குழந்தைகளையும் கூட்டிச்
செல்ல ராஷ்மிகாவும் பெற்றோடு பெற்றோராக சென்று ஸ்டேஜ் முன்னால்
அமர்ந்து விட்டாள். தினமும் மாலை வந்து யாழைக் கூட்டிப் போக வருவதால் அவளுக்கு ஓரளவுக்கு சில பெற்றோடு
பழக்கம் இருந்தது. அதனால் கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தாள்.

“குட் ஈங்னிங் டூ ஒன் அன்ட் ஆல் ப்ரசன்ட் ஹியர்.. வீ அன்ட் அவர் மேனேஜ்மென்ட் வெல்கம் யூ வார்ம்லி டூ அவர் 75th ஆன்யுவல் டே” என்று ஆரம்பிக்க எல்லோரும் ஸ்டேஜ் பக்கம் திரும்பினர். பின் ப்ரினிசிபால்..கரெஸ்பான்டன்ட் என அனைவரும் பேசி முடிக்க ஒருவழியாக ஆறு மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

“ஹியர் வீ ஹாவ் அவர் எல்கேஜி பட்ஸ் டூ ஹாவ் எ டான்ஸ் பர்ஃபாமன்ஸ்” என்று
ஒரு ஆசிரியர் சொல்லி முடிக்க ஸ்டேஜின் ஸ்கீரின் இரண்டு பக்கங்களில் பிரிந்து சென்று ஸ்டேஜின் நடுவில் இருந்த குட்டி குட்டிக் வாண்டுகள் ரெட் களர் ஃபுல் ப்ராக்கில் நின்றிருந்தனர். பின்னர் பாட்டு
ஆரம்பிக்க ஒவ்வொரு வாண்டும் ஒவ்வொரு ஸ்டெப்பை ஒவ்வொரு மாதிரி
கோணத்தில் போட்டனர். மழலையில் தவறுகள் கூட அழகுதான் என்பதற்கேற்ப
ஆளுக்கொரு ஸ்டெப் போட அதை ரசித்த படி நின்றிருந்தனர் அந்தக்
குழந்தைகளின் பெற்றோர். அதில் ராஷ்மிகாவும் ஒருத்தி. யாழ்மொழியின் ஒவ்வொரு அசைவுகளையும்
செல்போனில் படம் பிடித்தபடி தன் மகளின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“க்யூவ் எ வெரி பிக் க்ளாப்ஸ் ஃபார் திஸ் யங் லிட்டில் ப்ளார்ஸ்” என்று அவர்கள்
நடனம் முடிய ஸ்டேஜில் இருந்த ஆசிரியர் சொல்ல எல்லோருடைய கைதட்டல்களையும் அந்த மழலைகள் வாங்கின.

எல்லோரும் தங்கள் குழந்தைகளை நோக்கிப் போக ராஷ்மிகாவும் யாழ்மொழியைச் சென்று “சூப்பர் டி.. சூப்பரா இருந்துச்சு” என்று கையில்
தூக்கிக் கொள்ள

“நான் அவ்ளோ டாலன்ட் ம்மா.. ஐம் ப்ரெய்னி டூ” என்று பெருமை பேசினாள் யாழ்மொழி.

“ஏண்டி அப்ப எனக்குலாம் மூளை இல்லயா” என்று கையில் தூக்கி வைத்துக் கொண்டே கேட்டு மகளை
முறைக்க யாழோ அவளின் பிஞ்சுக் கைகளை அவள் வாயில் வைத்து நக்கலாக சிரித்தாள்.

“ம்மா… உங்க கிட்ட இருக்கா” என்று கேட்டு “ஹாஹாஹா” என்று தன் ஜோக்கிற்கு தானே தலை மேலே தூக்கி வானத்தைப் பார்த்து சிரித்தாள் யாழ்மொழி.

மகளின் சிரிப்பில் மெய் மறந்து அவளை ஒரு கணம் ரசித்தவள் “இரு இரு. வீட்டுக்கு போயிட்டு பாத்துக்கறேன்” என்று மகளை பொய்யாக மிரட்டியவள்
யாழின் க்ளாஸ் டீச்சரிடம் சொல்லிவிட்டு யாழுடன் ஸ்டேஜில் இருந்து வெளியே
வந்தாள் ராஷ்மிகா.

“ம்மா… என் ப்ரண்ட்ஸ் கூட
விளையாடறேன்” என்று யாழ்
ஆரம்பித்தாள்.

“வீட்டுக்கு போலம் யாழ்.. இல்லனா லேட் ஆகிடும்” – ராஷ்மிகா கொஞ்சம் ஸ்டிரிக்டானக் குரலில்.

“ம்மா… ப்ளீஸ்.. நாளைக்கு இருந்து சம்மர் லீவ்.. நான் அவங்கள பாக்க முடியாது டூ
மன்த்ஸ்-க்கு” என்று சிணுங்க ஆரம்பிக்க

“சரி.. ஒன்லி ஃபார் ட்வென்ட்டி மினிட்ஸ்” என்று கீழே யாழை இறக்கிவிட தனக்காக
காத்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் போய் சேர்ந்து கொண்டாள் அந்த சண்டிராணி.

மகள் விளையாடிக் கொண்டிருந்த அழகைக் கண்டு கொண்டிருந்தவள் பின்
அவளுக்கு எதாவது வாங்கலாம் என்று சாக்லேட் ஸ்டாலிற்குள் நுழைந்தாள்.
மகளுக்குத் தேவையான வெரைட்டியான சாக்லேட்ஸை வாங்கினாள். தனக்கும்
சாக்லேட்ஸ் பிடிக்கும் என்பதால் அள்ளிப் போட்டவள்.. ஒரு பை நிறைய
சாக்லேட்ஸை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

வந்தவள் மகள் விளையாடிக்
கொண்டிருந்த இடத்தைப் பார்க்க அவளைத் தவிர எல்லா வாண்டுகளும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். ஒரு
நிமிடம் அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்க அவள் மகள் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “குட்டிக் குரங்கு.. எப்பப் பாரு என் ஹார்ட் பீட்ட அதிகம் ஆக்கறதே இவ வேலையா
போச்சு” என்று அருகில் சென்று அவளைத் தூக்கினாள். நல்லவேளை
யாழ் அவள் க்ளாஸ் மேட்டின் அம்மா பினிதாவுடன் தான் பேசிக் கொண்டு இருந்தாள்.

“ஏண்டி ஒரு இடத்துல நிக்க மாட்டியா நீ” என்று மகளைக் கேட்க..

“ம்மா.. ஆன்ட்டி கிட்ட பேசிட்டு இருந்தேன்.. நீங்க தான் பயந்துட்டீங்க” என்று சொல்ல

“நல்ல சமாளி” என்றவள்.. “ஹாய்.. பினிதா எப்படி இருக்கீங்க” என்று ஹிந்தியில் கேட்டபடி அவரிடம்
திரும்பினாள்.

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிக் கொண்டிருக்க “ஆன்ட்டி..” என்றபடி எல்லோரும் வர
ராஷ்மிகா அவர்களுக்குத் தன் கையில் இருந்த சாக்லேட்ஸ்களைத் தந்தாள்.
இப்படித் தான் எல்லாக் குழந்தைகளிடமும் அன்பாக இருந்து அவர்களைத் தன்பால்
இழுத்து வைத்திருந்தாள்.

அவர்களுக்கும் யாழ்மொழி எப்படியோ அப்படித்தான் ராஷ்மிகாவும் ஒரு பெஸ்ட்
ப்ரண்ட். பாதிக்குப் பாதி காலியாகிவிட அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பியவள் “பை பினிதா” என்று  கிளம்பினாள். மீண்டும் சாக்லேட் ஸ்டாலிற்குள் புகுந்து அம்மாவும் மகளும் சேர்ந்து மறுபடியும் ஒரு பையை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

மகளைத் தூக்கிக் கொண்டு ராஷ்மிகா வெளியே வர அவள் முன்னேயே புக் செய்த டாக்சி காத்துக் கொண்டிருந்தது.
உள்ளே ஏறிக்கொள்ள அவர்கள் அப்பார்ட்மெண்ட்ஸ் பகுதி இருந்த த்வாரகா இருந்த இடத்தை நோக்கி கார்
பறந்தது. தனது அப்பார்ட்மெண்ட்ஸ் வந்தவுடன் இறங்கிய ராஷ்மிகா யாழைக்
கீழே இறக்கிவிட்டு பணத்தை தந்து டாக்சியை அனுப்பி வைத்து விட்டு மகளின் கையைப் பிடித்துக் கொண்டு
நடந்து வந்து இருவரும் லிப்ட்-இன் உள்ளே புகுந்தனர்.

“ஏண்டி சைலன்ட்டாவே வர?” என்று அதிசயமாய் வாயை மூடிக் கொண்டு வரும் மகளிடம் கேட்டாள் ராஷ்மிகா.

“டைய்ர்ட் ம்மா” என்று கையைத் தூக்கி உடம்பை வளைத்தவளைக் கண்டு வந்த
சிரிப்பை அடிக்கியவள் மகளை வம்பிற்கு இழுத்தாள்.

“ஆமா.. அப்படியே வேலை வெட்டி முறிச்சிருக்க.. டையர்ட்டாமா…” என்று
கிண்டலடித்தவள் “எனக்கு தான் டி டையர்டா இருக்கு” என்று ராஷ்மிகாவும் சோம்பலை முறித்தாள்.

“ஆமா.. இந்த நியூ டெல்லியவே நீங்க தான் காப்பாத்தீட்டு இருக்கீங்க” என்று அன்னையின் காலை வாரியவள் டக்கென்று லிப்ட் கதவு திறந்தவுடன் வெளியே ஓடினாள்.

இரண்டு நொடி கழித்தே தன் மகளின் பேச்சு ராஷ்மிகாக்குப் புரிய “ஏய்… நில்லு டி.. ” என்று பின்னேயே துரத்திக் கொண்டு ஓட… யாழ்மொழியும் சிக்காமல்
முன்னால் ஓடி அவர்கள் ப்ளாட்டின் முன் சென்று நின்றாள்.

தன் முன் மூச்சு வாங்க நின்ற தன் அம்மாவைக் கண்டவள் கேலியாய் வாயைத் திறந்து சிரித்தாள். அவளைக் கண்டு முறைக்க முயன்று தோற்ற
ராஷ்மிகா.. மகளின் தலையை
செல்லமாய் பரபரவென்று கலைத்து விட்டு காலிங் பெல்லை அடித்தாள். கதவு திறக்க “லஷ்மி மா” என்று ஒருசேர அம்மாவும் மகளும் கூவியபடி உள்ளே சென்றனர்.

லஷ்மி அம்மா வேறு யாரும் இல்லை.. ராஷ்மிகா யாழ்மொழி தங்கி இருக்கும்
ப்ளாட்டில் வேலைக்கு இருக்கும் பெண்மணி. ஏனோ அவரும் தமிழ் என்பதால் அவரோடு பிரியம் ராஷ்மிகாவிற்கும் யாழ்மொழிக்கும். “என்ன மா.. இவ்ளோ லேட் ஆயிடுச்சு” –
என்று லஷ்மி கேட்க..

“இதோ இவ தான் ப்ரண்ட்ஸ் கூட விளையாடணும்னனு கேட்டா லஷ்மி மா.. அதான் லேட்” – என்று ஷோபாவில்
எல்லாவற்றையும் வைத்தபடி பதிலை தந்தாள் ராஷ்மிகா.

“லஷ்மி மா.. பசிக்குது” என்று வயிற்றில் கை வைத்தபடி பாவமாகக் கேட்ட யாழை
கண்டு உருகியவர் “நீ ட்ரெஸ் மாத்திட்டு வாடா சாமி.. நான் உனக்கு சாப்பிட எடுத்து வாரேன்” என்று உள்ளே புகுந்து கொண்டார்.

ராஷ்மிகாவும் யாழ்மொழியும் உடையை மாற்றிக் கொண்டு வர அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினார் லஷ்மி.. சப்புக்
கொட்டி சாப்பிட்ட இருவரும் “அஹா ஓஹோ” என்றபடியே அந்த சாப்பாத்தியையும் சென்னாவையும் காலி
செய்தனர்.

“நீங்களும் சாப்பிடுங்கம்மா” என்று ராஷ்மிகா சொல்ல “நீங்க சாப்பிடுங்க டா..நான் அப்புறம் சாப்பிடறேன்” என்று
மறுத்தவர் அவர்களுக்கு
தேவையானவற்றை பக்கத்தில் இருந்து செய்தார்.

சாப்பிட்டுவிட்டு இருவரும் கையைக் கழுவிக் கொண்டு மகளுக்கும் கையை கழுவி விட்டு வாயைத் துடைத்து விட்டாள். “லஷ்மி மா மறக்காம சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுட்டு தூங்குங்க” என்று
மகள் பேசிக் கொண்டிருப்பதை தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ராஷ்மிகாவிற்குக் கேட்டது.
சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள் “மேடம்… அதெல்லாம் லஷ்மிம்மா கரெக்டா பண்ணிடுவாங்க..
நீங்க வந்து இந்த பாலைக் குடிங்க” என்று டம்ளரை நீட்ட யாழின் முகமோ அந்த
டம்ளரைக் கண்டவுடன் கோணலாக மாறியது.

“ம்மா….” என்று யாழ் சிணுங்க ஆரம்பிக்க “நீ குடிச்சா தான் சாக்லேட்ஸ் யாழ்” என்று
அதட்ட.. முகச் சுளிப்புடனே வாங்கி மொடக் மொடக்கெனப் பாலைப் பருகினாள் யாழ்மொழி.

பருகியவளின் வாயின் மேல்
வெள்ளையாய் மீசை அமர்ந்திருக்க அதைக் கண்டு சிரித்தவள் “சரி வா.. சாக்லேட் சாப்பிடலாம்” என்று
அழைத்தாள். அறைக்குள் நுழையும் முன் “லஷ்மி மா குட் நைட்” என்று சொல்லிவிட்டுப் போக அவரும் சாப்பிட்டு
விட்டு அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குப் போகத் தயாரானார்.

“எனக்கு தான் இந்த சாக்லேட்” – ராஷ்மிகா.

“ம்மா…. எனக்கு தான்” – யாழ்மொழி.

“நோ நோ.. எனக்கு” – என்று ஒரே வைரட்டி இருந்த அந்த கோகோ சாக்லேட் வகைக்கு
அம்மாவும் மகளும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

“ம்மா… எவ்ளோ சாக்லேட்ஸ் இருக்கு நீ அதை சாப்பிட்டுக்கோ” – என்று
சிணுங்கினாள் யாழ்மொழி.

“போடி முடியாது.. நீ அதை எல்லாம் சாப்புடு” – என்க்ஷு ராஷ்மிகா சாக்லேட் கவரை பிரிக்கப் போக,

“ம்மா……” என்று கத்தியவள்.. அவளின் அம்மாவின் மேல் பாய்ந்து சாக்லேட்டைப்
பிடுங்கப் பார்த்தாள். மகளை அப்படியே அள்ளி கட்டிலில் சாய்த்து குறுகுறுப்பு மூட்ட “ம்மா… ம்மா…ஹா.. ஹா.. ஹா”
என்று சிரிக்க ஆரம்பித்தாள் யாழ்மொழி.

மகளை ரசித்தவள் “சரி இந்தா.. சாக்லேட்” – என்று ராஷ்மிகா கையை நீட்ட, வாங்க
வந்த மகளிடம் இருந்து சாக்லேட்டை பின்னே நகர்த்தினாள்.

என்னவென்று பார்த்த மகளிடம் “ஒரு கிஸ் தா அம்மாக்கு” என்று கேட்க
யாழ்மொழி முத்தம் கொடுக்க வந்தவள் முத்தத்தைப் பதித்துவிட்டு இறுகக் கட்டிப்
பிடித்தாள். “லவ் யூ ம்மா” என்றாள் யாழ்மொழி. எப்போதுமே இருவரும் சொல்லிக் கொள்வது தான்.

அவர்கள் நிலையை கலைக்கவென்ற ராஷ்மிகாவின் செல்போன் அலறியது. “நான் தான் எடுப்பேன்.. நான் தான்
எடுப்பேன்” என்று பெட்டில் இருந்து இறங்கி ஓடிய மகளிடம் “ஏய்.. பாத்துடி”
என்றாள் ராஷ்மிகா.

போனை எடுத்துப் பார்த்தவள் “ஹை…” என்று குஷியில் கத்திவிட்டு போனை எடுத்துக் காதில் வைத்தாள். அவள்
குஷியிலேயே யார் என்று ராஷ்மிகா அறிந்துகொண்டாள்.

“குஜிலி” – என்று போனை யாழ்
எடுத்தவுடன் அழைத்தான் ஒருவன். அந்த ஒருவன் வேறு யாரும் இல்லை அவளுடைய தாய்மாமான் ஹர்ஷவர்தன்
தான்.

“சொல்லு மாமா” – என்றாள் யாழ்மொழி குஷியாக.

“எப்படி இருக்க அக்கா மகளே?” – எனக் கேட்டான் ஹர்ஷவர்தன்.

“நான் நல்லா இருக்கே மாமா.. நீங்க?” – என்று வினவியவளை வம்பிழுத்தான்.

“இந்த மாமன் நீ இல்லாம நல்லா இல்ல குஜிலி.. பேசாம மாமன வந்து சீக்கிரம்
கல்யாணம் பண்ணிக்கோ” – என்று நெஞ்சில் கை வைத்தபடி அவன் அந்தப் பக்கம் இருந்து அவன் பேச

“நான்லாம் உன்ன கல்யாணம்
பண்ணிக்க மாட்டேன் போ.. நீ பாட் பாய்” என்றாள் யாழ்மொழி சீரியஸாக.

“நானா.. ஏய் என்ன குஜிலி இப்படி சொல்லிட்ட” – என்று வருத்தமாக ஹர்ஷா கேட்க “ஆமா.. அன்னிக்கு நீங்க டெல்லி வந்தப்ப பக்கத்து பில்டிங் பூஜா சர்மா அக்கா கூட பேசிட்டு இருந்தல லிப்ட் கிட்ட
நின்னு” என்று குற்றம் சாட்டி குட்டை உடைக்க

“ஷ்.. ஷ்.. குஜிலி.. அதெல்லாம் வெளில சொல்லக் கூடாது” என்று கெஞ்சினான் அவனோ.

“ஹா.. ஹா.. அப்ப தாத்தா பாட்டி கிட்ட சொல்றேன் மாமா” – என்று சிரிக்க அவனோ அங்கே “குஜிலி ல… மாமா உனக்கு இங்க வந்தா ஐஸ்க்ரீம் வாங்கி
தருவேனாம்.. ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

“அந்த பயம்” என்று யாழ்மொழி சொல்ல, அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதைக் கேட்ட ராஷ்மிகா வந்து மகளிடம் இருந்து போனை வாங்கினாள்.

“ஏய்… என்னடி என் தம்பிய ரொம்பத்தான் மிரட்டுற..” என்று மிரட்ட..

“பெரிய தம்பி.. நீயும் உன் தம்பியும்.. ஹாஹா” என்று பயமே படாமல் சொன்ன
யாழ்மொழி போய் பெட்டில் அமர்ந்து கோகோ சாக்லேட்டை உண்ண ஆரம்பித்தாள்.

“அடிப்பாவி” என்று வாய்விட்டே
சொன்னவளை தம்பியின் குரல் கலைத்தது. “பாத்தியா.. உன் புள்ளைய.. எப்பா.. எனக்கு கல்யாணம் ன்னா கல்யாணப் பொண்ண கொஞ்சம் லேட்டா
தான் காமிக்கணும் அக்கா.. இல்லனா அவ்வளவு தான் என் மானத்த கப்பல்ல ஏத்திடுவா போல” என்று சீரியஸாகக்
கூற ராஷ்மிகா சிரித்தாள்.

“டேய்.. நான் தான் சொல்லிருக்கேன் ல.. அவ நீ எது பண்ணாலும் நோட்
பண்ணுவா.. உன் வால டெல்லி வந்தா சுருட்டி வைன்னு” என்றவள் “அதுவும் இல்லாம நீ அந்த பூஜா சர்மாவுக்காக வந்த மாதிரி தான் இருந்துச்சு லாஸ்ட்
டைம் வந்தப்ப.. கடலை போடறது ஒரு அளவுக்கு வேணும் டா தம்பி” என்று
கலாய்த்தாள் ராஷ்மிகா.

“அய்யோ அக்கா.. நீயுமா.. நான் சும்மா பேசவேன் க்கா.. ஆனா உன் தம்பி ஒரு நல்ல பையன்னு உனக்குத் தெரியாதா” என்று பவ்யமாய் சொல்ல ராஷ்மிகா சிரித்தாள்.

“இருக்கட்டும் டா ஹர்ஷா.. இருக்கட்டும்” – ராஷ்மிகா அழுத்தமாகச் சொல்ல சிறிது
நேரம் இருவரும் பேசினர்.

“அக்கா…” – ஹர்ஷவர்தன்.

“சொல்லு ஹர்ஷா.. ஏதாவது
சொல்லணுமா?” – ராஷ்மிகா.

“இருக்கா சித்தி பேசறாங்கலாம்” என்று
போனைக் கல்யாணியிடம் ஹர்ஷவர்தன் போனைத் தந்துவிட்டான்.

“ராஷ்மி..” என்று சந்தோஷமாக ஒலித்தது ராஷ்மிகாவின் அன்னையின் குரல்.

“அம்மா… எப்படி ம்மா இருக்க?” என்று வினவ “நல்லா இருக்கேன் ராஷ்மி.. பாப்பா ஆன்யுவல் டே டான்ஸ் சூப்பரா
இருந்துச்சு.. என்ன அழகு” என்று ஆன்யுவல் டே வீடியோவை ராஷ்மிகா
ஹர்ஷவர்தனிற்கு அனுப்பி இருக்க அதைப் பார்த்துப் பேசி பேத்தியின் பெருமையை பாடினார் அவர்.

“ஆமா அம்மா..” என்று புன்னகை புரிந்தவள் மகளைத் திரும்பிப் பார்க்க யாழோ உட்கார்ந்த இடத்தில் வெரும்
சாக்லேட் கவருடன் தூங்கி இருந்தாள். போனைக் காதில் வைத்துப் தோள்பட்டையில் வைத்து அமுக்கிக் கொண்டவள் மகளை நன்கு படுக்க வைத்து போர்த்தி விட்டு அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்றாள்.

“ராஷ்மி.. ” – கல்யாணி.

“சொல்லுங்க மா” – ராஷ்மிகா.

“உன்கிட்ட பெரியப்பா ஏதோ பேசணுமாம்” என்று பெரியப்பா சிவக்குமாரிடம் போனைத் தந்துவிட்டார் கல்யாணி.

“ராஷ்மி.. நான் பெரிப்பா பேசறேன்டா” – என்று அவர் பேச “சொல்லுங்க பெரிப்பா..
நல்லா இருக்கீங்களா?” – என்று இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.

“ராஷ்மி.. பெரிப்பா சொன்னா
கேப்பதானே?” என்று கேட்டார்
சிவக்குமார்.

“கண்டிப்பா பெரிப்பா” – என்று
யோசிக்காமல் பதில் வந்தது
ராஷ்மிகாவிடம் இருந்து.

“வர்ற புதன்கிழமை நம்ம ஹர்ஷவர்தன்-கு நிச்சயதார்த்தம் டா நீ சென்னை
வந்துடு” – என்று முடித்தார்.

ஐந்து நொடி அமைதி காத்த ராஷ்மிகா “சரி பெரிப்பா.. வரேன்” என்றாள் ராஷ்மிகா.

“சரி ம்மா நீ தூங்கு.. நாளைக்கு போன் பண்றோம்” என்று வைத்துவிட்டார் சிவக்குமார்.

வைத்தவர் தன் மனைவி விஜயலட்சுமி, கல்யாணி.. ஹர்ஷவர்தனிடம் திரும்பி
கை கட்டை விரலைத் தூக்கிக்
காண்பித்தார். அங்கே டெல்லியில் யோசனையுடனே படுக்கைக்குச் சென்று மகளின் அருகில் படுத்தாள் ராஷ்மிகா.