ரசவாச்சியே விழி சாச்சியே!
ரசவாச்சியே விழி சாச்சியே!
அத்தியாயம் – 8
உள்ளே நுழைந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். இரண்டு நாள் முன் வீடியோ காலில் வந்தவன் இப்பொழுது கண் முன் நின்றான்.
‘இவன் எப்படி உள்ளே வந்தான்? செக்யூரிட்டி என்கிட்ட பெர்மிஷன் கேட்காம எப்படி உள்ளே விட்டான்?” இவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அசோகன்தான் காலையிலே, செக்யூரிட்டியிடம் இவனை பற்றி கூறியிருந்தார் என்பது ஆரா அறியாதது.
“ஹலோ…” இவள் முகத்துக்கு நேரே கையை ஆட்டினான்.
“ஹான்… சிட். மிஸ்டர்…” இழுக்க,
“மிஸ்டர் நிதின்” என்றான் சிரிப்புடன்.
‘இவன் என்ன எல்லாத்துக்கும் சிரிச்சுகிட்டே இருக்கான்?’ யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
“இப்போதான் கோவை லேன்ட் ஆனேன். ஐ கம் யூ ஸீ டூ ரைட் அவே.”
“வாட் யூ வான்ட் நிதின்?” அவள் கேட்க,
‘தெரியும் நீ இப்படிதான்னு.’ எண்ணியவன், “ஹேய்! நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் யூ நோ?” என்றான் சிரித்தபடி.
“சோ வாட்?”
“சோ வாட்… ம்ம்ம்…” தலையை ஆட்டியவன் அவளை கூர்ந்துப் பார்த்தான்.
பதிலுக்கு இவள் பார்வை, அவனை எரித்தது.
“வொய்? வாட்ஸ் ராங்க் வித் மீ?”
“நான் கெட் அவுட் சொல்லுறதுக்கு முன்னாடி நீயா வெளிய போனா நல்லா இருக்கும்.” உன் கேள்விக்கு என் பதில் இதுதான் என்பது போல் அவள் கூற,
அவன் முகம் மீண்டும் சிரிப்பைத் தத்தெடுத்தது.
“யூ நோ…” மீண்டும் இவன் ஏதோ கூற வரும்முன்.
“ஸ்டாப்…” இவள் தடுக்க,
“நாளைக்கு ரொம்ப ஃபீல் பண்ணுவ. எதுக்குன்னா…” மேலே கூற வருமுன்.
“கெட் அவுட். நானே கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளும்முன் வெளிய போயிடு.” இப்பொழுது அவள் குரல் உச்ச டெசிபலில் ஒலித்தது.
“சீ யூ சூன்.” என்றபடியே நின்று ஒரு நொடி அவளை கூர்ந்துப் பார்த்துவிட்டு வெளியே சென்றான் நிதின் உமேரா!
வெளியே சென்ற நிதினோ, அங்கு நின்று வேலை செய்துக் கொண்டிருந்த சைத்தனை பார்த்துச் சென்றான்.
“பிளடி இடியட்.” இவள் திட்டிக் கொண்டிருக்க, அருகில் இருந்த ஃபோன் அலற, கையில் எடுத்துப் பார்க்க, ஆண்டாள்தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
இவன் மேல் இருந்த கோபம் அப்படியே ஆண்டாள் மேல் பாய, “எல்லாம் உன்னாலதான் கிழவி. என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டியா நீ?” கத்தினாள்.
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து, என்னையும் என் பையனையும் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” பதிலுக்கு கத்தினார் அவர்.
“என்ன உளறுற நீ?”
“ஆரியனை காணும். எங்க போனான்னே தெரியல?”
“அவனை பார்த்துக்காம நீ அங்க என்ன செய்யுற?” இவள் கத்த,
“நான் இனி இங்க இருக்கலடி சிங்காரி. நீயாச்சு உன் அண்ணன் ஆச்சு. எனக்கு ஆயிரம் ஆஸ்ரமம் இருக்கும். என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.” அவளுக்கு மேல் கத்தியவர் டொக்கென்று அழைப்பை நிறுத்தினார்.
“கிழவி… கிழவி…” இவள் இங்கிருந்து கத்த, சத்தம் இல்லாமல் போக மீண்டும் மீண்டும் அழைக்க அழைப்பை ஏற்கவே இல்லை ஆண்டாள்.
“ச்சை” கையை டேபிள் மேல் குத்தியவள் வெளியே சென்றாள்.
அப்பொழுதுதான் காலையில் டிரைவரை அழைக்காமல், தான் மட்டும் வந்தது நினைவில் வர, தன்னைத்தானே தலையில் தட்டிக் கொண்டாள்.
‘இப்ப இருக்கும் டென்சன்ல கார் ஓட்ட முடியாது.’ எண்ணியவள் கண்களை சுழல விட, இவன் கண்களில் அங்கு நின்றுக் கொண்டிருந்த சைத்தன் விழுந்தான்.
‘எல்லாரும் எங்க போய் தொலைஞ்சான்க?’ யாரும் இல்லாமல் சைத்தன் மட்டுமே நிற்க, இவள் யோசித்துக் கொண்டிருக்கையில், இவளை தாண்டி சென்றான் சைத்தன்.
சைத்தனை அழைத்தவள், காரை எடுக்கக் கூறினாள்.
“ஒரு நிமிஷம் மேடம். குடோன்ல சேர்க்க வேண்டிய பார்சல் சொல்லிட்டு வந்திடுறேன்.” என்று அவன் கிளம்ப,
“சரி” என்றவள் காரை நோக்கி நடந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில், “மேடம்” என சைத்தன் வந்து நின்றான்.
“வீட்டுக்கு காரை விடு.” என்றவள் அப்படியே தலையை சாய்த்துக் கொண்டாள்.
ஏதோ அவளை மீறி நடப்பதுப் போல தெரிய, கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
அவள், ஆரியனை பற்றிய எண்ணத்தில் இருக்க, அவனிடம் வீட்டின் அட்ரெஸ் கூறவில்லை.
ஆனால், வெளியே பார்க்க சரியான பாதையில் சென்றுக் கொண்டிருந்தான் சைத்தன். ‘எப்படி தெரியும்?’ எதையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை.
வண்டி சிக்னலில் நிற்க, அருகில் ஒரு சிறுமி டோர் கண்ணாடியை தட்ட, ஏதோ தோன்ற கண்ணாடியை இறக்கியவள், ‘என்ன?’ என்னும் விதமாகப் பார்த்தாள்.
கையில் இருந்த சில்வர் உண்டியலை ஆரா முன்னே நீட்ட, அந்த சிறுமியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள், முகத்தை சுழித்து கையை கொண்டு மூக்கை மூடியவள், ‘தள்ளு’ என்னும் விதமாக அந்த சிறுமியை பார்த்து தலையசைக்க, அப்படியே விலகி நடந்தாள் அந்த சிறுமி.
இவள் சிறுமியிடம் கவனமாய் இருக்க, அந்த பக்கம் வந்து ஏறிய நிதினை கவனிக்கவில்லை.
“கர்ஃசீப் இந்தாங்க மேடம்.” ஒரு கை அவள் முன் நீள, ‘சைத்தன்தான் தருகிறான்.’ என அதை வாங்கி முகத்தில் வைத்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
“கரெக்ட் டைமுக்கு வந்திட்ட நிதின்.” பின்னால் திரும்பிப் பார்த்து சிரித்தான் சைத்தன் உமேரா!
“நீ சொல்லி நான் எது செய்யாம இருக்கேன்டா.” சிரித்தபடிக் கூறினான் நிதின் உமேரா!
“தட்ஸ் ஃபைன்.” சிக்னல் விழவும் காரை மெதுவாக நகர்த்தினான் சைத்தன்.
“நீ எப்படி கரெட்டா வந்து ஏறின?” நிதினிடம் கேட்டபடியே காரை செலுத்தினான் சைத்தன்.
“நம்ம ஆட்கள் ரெண்டு பேர் பின்னாடி கார்ல வந்துட்டு இருக்காங்க. நான் மில் வாசல்லதான் நின்னுட்டு இருந்தேன். நீ கிளம்புறப்ப உன் கூடவே வரணும்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள நீ கால் பண்ணவும் உஷார் ஆகிட்டேன்.” சிரித்தபடியே கூறினான்.
“சரி… என் ஃபோன் குடு.”
“என் கார்ல இருக்குடா. ஸ்பாட் வந்ததும் சொல்லு. எடுத்திடலாம்.”
“ஓகே. அம்மா தேடினாங்களா?”
“தேடினாங்களாவா? ஒரே போர்டா. எப்பவும் ஃபோன் மேல ஃபோன் உன்னை மாதிரியே பேசி சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு. அதிலும் குரல் வேற கண்டு பிடிச்சுட்டாங்க. என்னடா குரல் ஒரு மாதிரி இருக்குதுன்னு கேட்க, இங்க கிளைமேட் சரி இல்லன்னு சமாளிச்சு வச்சிருக்கேன். நீயே சமாளிடா சாமி.” சலித்துக் கொண்டான்.
“மாமா பேசினாங்களா?”
“பேசினாங்களான்னா கேட்கிற. மிஷின் ரிப்பேர்னா அமெரிக்காவில இருக்குறவனுக்கு கால் பண்ணுறாங்க. என்னடா இப்படி வளத்து வச்சிருக்க பெரியப்பாவை.” சலித்தபடி கேட்டான் நிதின்.
“நீ அப்படியே அமெரிக்கா ஓடிட்ட. இங்க எல்லாம் பார்க்கிறது யாரு? நான்தான்… சோ என்னை தேடத்தான் செய்வாங்க.”
“ஆனாலும் நீ நல்லா பிளான் போட்டிருக்க, அமெரிக்கா வர மாதிரி வந்து ரெண்டு நாளுல கிளம்பி இங்க வந்துட்டு குடும்பத்தை எப்படி சமாளிக்க சொல்லிருக்க? என்னாலையே நம்ம முடியல நீ இவ்வளவும் பண்ணுறதை.”
“ஹா… ஹா…” எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டான் சைத்தன்.
“சிரிடா… நல்லா சிரி. இது கூட எப்படிடா குப்பை கொட்டின?” அருகில் இருந்த ஆராவை பார்த்துக் கேட்டான் நிதின்.
“இது பொண்ணாடா. யப்பா சாமி. வெடுக்கு வெடுக்குன்னு வெட்டுக்கிளி மாதிரி குதிக்கிறாடா. நமக்கு வேலை ஆகணும்னு அமைதியா பொறுத்து போயிருக்கேன்.”
“நானும் அதுதான்டா யோசிச்சேன். உனக்கும் பொறுமைக்கும் கடல் தாண்டிய தூரமாச்சே. எப்படி இப்படி இருந்திருக்கன்னு இப்போதான் தெரியுது. அவனை பத்தி ஏதாவது தெரிஞ்சதா?”
“இல்லடா. இவ வீட்டு பக்கம் போகவே முடியல. அவ்ளோ செக்யூரிட்டி… குடும்பமே ஃப்ராடு குடும்பம் போல. அதுதான் இத்தனை பாதுகாப்பு.” யோசனையாக கூறினான் சைத்தன்.
“சரி விடு அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இவளை என்ன பண்ண போறா? அடுத்து உன் பிளான் என்ன?”
“ரெண்டு நாள் முன்னாடி நம்ம கார்மெண்ட்ஸ்க்கு ஒரு மெயில் பண்ணிருப்பேன். அதுல இருக்கும் அட்ரெஸ்க்கு ஒரு இண்டர்வியூ லட்டர் போட்டு விடு.”
“யாருக்குடா?”
“அருணுக்கு”
“யாருடா அது?” யோசனையாகக் கேட்டான் நிதின்.
“அதெல்லாம் பிறகு சொல்லுறேன்.” என்றவன், “அவன் என்னை பத்தி ஏதாவது கேட்டா, எனக்கு கான்பரன்ஸ் மட்டும் போடு நான் பேசுறேன். வேற என்ன பத்தி எதுவும் மூச்சு விடக் கூடாது.
அசோகனுக்கு விசுவாசி அவன். ஆனா, எனக்கு கொஞ்ச நாள் தங்க இடமும், நல்ல நட்பும் தந்தான். அந்த நட்புக்கு நான் செய்யும் கைமாறுதான் இந்த வேலை.
எனக்கு இங்க ஏரியா சரியா தெரியல, கூகுள் வச்சு ஒரு சூப்பர் இடம் கண்டு பிடிச்சிருக்கேன். அங்க முதல்ல இவளை கொண்டு போகலாம். பிறகு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.
முதல்ல இவளோட ஃபோன் எடுத்துக்கோ, அடுத்து இவ கையில் இருக்க பர்ஸ் இதெல்லாம் எடுத்து. மும்பை போ…
அங்க போய் இவ அப்பன் வீட்டுக்கு இதை எல்லாம் கொரியர் பண்ணு. மும்பை மட்டும் போட்டு அனுப்பி விட்டு, அடுத்த ஃப்ளைட் பிடிச்சு இங்க கோவை வா.
அடுத்து நேரே மில் போ. உன்னை இவ அப்பன் மிஸ் பண்ண நினைக்கமாட்டான். சோ உன்னை முழுசா நம்புவான். நீ சொல்லுற மாதிரி அவனை ஆட வை. கொஞ்சம் சுத்த வை.
எப்படியும் அவன் போலீஸ் போகமாட்டான். அப்படி போனாலும், நீ போகவிடாமல் பார்த்துக்கோ. போனாலும் ஒன்னும் கிழிக்க முடியாது… ஹா… ஹா…” சிரித்தவன்,
“இவ அப்பன் ஆக்டிவிட்டிஸ் எனக்கு பாஸ் பண்ணு. என்னை தேடாத மாதிரி பார்த்துக்கோ. அது எப்படி பார்த்துக்குறது என்கிட்ட கேட்காதே அது உன் சாமர்த்தியம்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவன் வீட்டில் நுழை, அவனை தேடு. அவன் கிடைச்சதும் சொல்லு, அவனை தூக்கிட்டு இவளை விட்டுடலாம். யாருக்கும் எந்த சந்தேகமும் வராத மாதிரி விளையாடணும் நிதின்.
இந்த விளையாட்டின் முடிவில் ஒரு உயிர் போகலாம், இல்லை ஒரு உயிர் கிடைக்கலாம். எல்லாம் உன் கையில் இருக்கு. ஒவ்வொரு அடியும் யோசிச்சு கவனமா எடுத்து வை. கவனம் சிதறினா. ரெண்டு பேருமே மாட்டிக்க வாய்பிருக்கு,
என் தேவை, அங்க தேவைபட்டாலோ, இல்லை அசோகன் என் மேல சந்தேக படுற மாதிரி தெரிஞ்சாலோ எனக்கு இன்ஃபார்ம் பண்ணு நான் அங்க வாரேன்.
நான் இருக்க இடம் நீ கூட தெரிஞ்சுக்க வேண்டாம். அவசியம் வந்தா உன்கிட்ட சொல்லுறேன். நம்ம ஆட்களை இவளோட காரை எடுத்துட்டு போய் எதாவது மலையில் இருந்து தள்ளிவிட சொல்லு, இல்லனா எரிக்க சொல்லிடு. ஒரு தடயம் கூட கிடைக்கக் கூடாது.
அப்போதான் இவ அப்பனுக்கு வலி தெரியும். இவன் காவு வாங்கின ரெண்டு உயிரோட வலி புரியும்.
நான் சொன்னதை எல்லாம் சரியா செய்திடு. மீதியை நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் காரை அந்த காட்டுவழியே செலுத்தினான்.
நாலைந்து நாட்கள் இந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தவன், அவ்வளவாக ஆள் நடமாட்டாம் இல்லாமல் இருக்கவும் இதை தேர்வு செய்திருந்தான்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்ததால் இவனுக்கு மிகவும் வசதியாய் போயிற்று.பாதி வழியில் காரை நிறுத்தியவன், அவளிடம் இருந்த எல்லாத்தையும் எடுத்து நிதின் கையில் கொடுத்து,
“நான் சொன்ன மாதிரி செஞ்சிடு. ஒரு தடயமும் இருக்கக் கூடாது. உன் கை ரேகை முதற்கொண்டு பார்த்துக்க. இது விளையாட்டு இல்லை நிதின். உன் விளையாட்டு புத்தியை மூட்டை கட்டி வச்சிட்டு நான் சொன்னதை செய்து முடிச்சுட்டு கால் பண்ணு. நம்மாளுங்க கிட்ட இருந்து என் ஃபோன் வாங்கிட்டு வா.” நிதினிடம் கூறியவன்,
அவள் கையில் இருந்த ஃபோன் & பர்ஸ் எடுக்க, இவனது ஃபோனை கையில் கொடுத்து அவளதை வாங்கி சென்றான் நிதின்.
ஆராவை, தூக்கி தோளில் போட்டு, அந்த பாதையில் நடந்தான் சைத்தன்.
கண்கள் பழி வெறியில் சிவந்திருந்தது!
அவளை அணைத்திருந்த இறுகிய கை கூறியது, அவன் பழி வெறியை!
***
ஆள் அடையாளம் இல்லாத அடர்ந்த காடு. அடிக்கடி கேட்க்கும் மிருங்கங்களின் சத்தமும், அருவியும் ஒலியும் என அந்த இடமே மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது.
அன்று கொண்டு வைத்திருந்த பையை பிரித்து அதிலிருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தான்.
சமையல் செய்வதற்கான பொருட்கள், அவற்றுக்கான பாத்திரங்கள் மற்றும் ஒரு போர்வை, அத்தியாவசிய மருந்து அடங்கிய பாக்ஸ். ஒரு விளக்கு. நாலைந்து பவர்பேங்க் ஃபுல் சார்ஜுடன்.
தனக்கு தேவையான எல்லாம் எடுத்து வைத்தவன், அவளை பார்த்தான். இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள். ‘இவ முழிக்குறதுக்குள்ள எல்லாம் முடிக்கணும்.’ தனக்குள் கூறிக் கொண்டவன், அவளுக்காக தயாரித்து வைத்திருந்த சங்கிலியை எடுத்தான்.
இரண்டு பாறைகளின் ஓரத்தில் மரம் இருக்க, சங்கிலியின் ஒரு பக்கத்தை மரத்தில் பூட்டிவன் மற்றொரு பக்கத்தை அவள் கையேடு இணைத்து பூட்டினான்.
இன்னொரு நீள சங்கிலியை எடுத்து ஒரு பக்கத்தை மரத்தில் பூட்டிய சங்கிலியில் இணைத்தவன் மற்றொன்றை அவளது காலோடு இணைத்துக் கட்டினான்.
மரத்தில் பூட்டிய சங்கிலியை அவன் பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்து திருப்தியாக இருக்க, வெளியே இருந்த இன்னொரு பாறையில் அமர்ந்துக் கொண்டான். கண்கள் அவளை விட்டு எங்கும் அசையவில்லை.
அவளுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் வீரியம் எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியாததால் அவளையே பார்த்திருந்தான்.
‘திடீரென்று எழுந்து கத்தி ஆர்பாட்டம் செய்தால், அது வேறு பிரச்சனை.’ என்று எண்ணியவன் அவளையே பார்த்திருந்தான்.