லவ் ஆர் ஹேட் 24

eiXICNC62363-51336783

யாதவ் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக அனிதா அவன் மேல் பழி சுமத்தி மொத்த பேரின் முன் அவனை அவமானப்படுத்த, அவனோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரித்விக்கு தான் அத்தனை அதிர்ச்சி!

“அனிதா, யாதவ் சார் இப்படி பண்ணியிருப்பாருன்னு எங்களுக்கு தோணல. எதுக்கு அவர் மேல தேவையில்லாம பழி போடுற?” என்று ரேகா அதட்டலாக கேட்க, “ஒரு பொண்ணு நான் பொய் சொல்வேனா? அதுவும் இந்த மாதிரி விஷயத்துல… நானும் இவன முதல்ல ரொம்ப நம்பினேன். நல்லா தான் டான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம். என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு அழைச்சிட்டு போனான். பழகிய நம்பிக்கையில தான் போனேன். ஆனா இவன்…” என்று சொல்லி பொய்யாக கண்ணீர் வடித்தாள் அனிதா.

அவள் சொன்னதை நம்பாது சில பேர் அப்போதும் அவளை சந்தேகமாக பார்க்க, ஒருசில பேர் நம்பிய அதிர்ச்சியில் யாதவ்வை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தனர். ஆனால், தன்னவனையே அழுத்தமாக பார்த்தவாறு அனிதாவின் எதிரே சென்று நின்றாள் ரித்வி.

“நிஜமாவே அவர் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரா?” இறுகிய குரலில் ரித்வி கேட்க, யாதவ்வோ உள்ளுக்குள் விரக்தியாக சிரித்துக்கொண்டான். ‘எல்லோர் போல் இவளும் தன்னை தவறாக நினைத்து விட்டாள்’ என்று… ஆனால், நடந்ததோ வேறு!

ரித்வி கேட்கவும், “ஆமா ரித்வி, இவன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். ஆனா, இவன் இவ்வளவு மோசமான ஆள்னு…” என்று அனிதா பேசி முடிக்கவில்லை, அத்தனை பேர் மத்தியில் அனிதாவின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்திருந்தாள் ரித்வி.

மொத்தப் பேரும் அதிர்ந்துப் போய் பார்க்க, யாதவ் கூட அறைந்த சத்தத்தில் சட்டென நிமிர்ந்து ரித்வியை அதிர்ந்து நோக்கினான். இதில் அனிதாவின் முகபாவனைகளை சொல்லவா வேண்டும்? கன்னத்தை பொத்திக்கொண்டு ரித்வியை அவள் மிரண்டு போய் நோக்க, கோபத்தில் முகம் சிவந்து அவளை கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ரித்வி.

“ரித்வி நீ…” என்று மீண்டும் ஏதோ பேச வந்த அனிதாவிற்கு அடுத்த கன்னத்தில் மீண்டும் ரித்வி தன் ஐவிரல்களை பதித்ததும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. எச்சிலை விழுங்கியவாறு அனிதா ரித்வியை நோக்க, மீண்டும் அடிக்க கையை ஓங்கியவள், “ச்சே!” என்று சலித்தவாறு கையை இறக்கி, “நீயெல்லாம் பொண்ணா? எப்படி இவ்வளவு கேவலமா நடந்துக்க முடியுது உன்னால? அவர் மேல இருக்குற உன் எண்ணம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? ஆனா, அதுக்காக இப்படி கீழ்தரமா இறங்குவேன்னு நான் எதிர்ப்பார்க்கல” என்று கத்த, அவளை உக்கிரமாக பார்த்த அனிதாவிற்கு ரித்வி பேசியதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

“இத்தனை பேர் முன்னாடி சொல்றேன்னா நான் என்ன பொய்யா சொல்வேன்? என்ட், அவன் தப்பு பண்ணலன்னா வாய திறந்து பேசியிருக்கலாமே! அமைதியா தானே இருக்கான்” என்று பதிலுக்கு பேசியவள் ரித்வியை கூர்ந்து பார்த்து,  “ஆமா… நீ என்ன அவனுக்கு ஓவரா தான் சப்போர்ட் பண்ற. ஓஹோ! நானும் கொஞ்சநாளா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். நீ மட்டும் என்ன சும்மாவா? புருஷன வச்சிக்கிட்டு இவன் கூட தானே சுத்திக்கிட்டு இருந்த” என்று ஏளனமாக சொல்லவும், மீண்டும் அவள் கன்னத்தில் பதிந்தது ஐவிரல். ஆனால், இந்த முறை அறைந்தது ரித்வி கிடையாது. தருண்…

“ச்சீ… இவ்வளவு மோசமானவளா நீ? அதுவும் ரித்விய எப்படி நீ இந்த மாதிரி சொல்லலாம்? மொதல்ல உனக்கு யாதவ் சார் ரித்விக்கு யாருன்னு தெரியுமா?” என்று கோபமாக கத்தி கேட்ட தருண், யாதவ்வையும் ரித்வியையும் மாறி மாறி பார்த்து “அவர் தான் ரித்வியோட ஹஸ்பன்ட். இரண்டு பேருமே ஹஸ்பன்ட் என்ட் வைஃப்” என்று அழுத்திச் சொல்ல,

சுற்றியிருந்தவர்களுக்கு அந்த செய்தியில் அதிர்ச்சி என்றால், ‘இவனுக்கு எப்படி தெரியும்?’ என்ற ரீயியில் தருணை புரியாது நோக்கினர் யாதவ்வும், ரித்வியும்.

“சோரி ரித்வி, நீ ரேகா கூட பேசும் போது நானும் அங்க தான் இருந்தேன். சத்தியமா ஒட்டு கேக்கல. காதுல விழுந்திச்சி” என்ற தருண் அனிதாவை முறைத்து, “உன் பக்கத்துல தான் நானும் டான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். நீ யாதவ் சார் அ ஃபோர்ஸ் பண்ணி அழைச்சிட்டு போனதை நான் கவனிக்கலன்னு நினைச்சியா? பட், அப்போ அது புரியல. இப்போ புரியுது” என்று கேலியாக சொல்ல, அவனை நன்றியுணர்ச்சியுடனான ஒரு பார்வை பார்த்தாள் ரித்வி.

அனிதாவை அழுத்தமாக பார்த்த ரித்வி, “அவர் உன்னை அழைச்சிட்டு போனாரோ, நீ அவரை அழைச்சிட்டு போனியோ? உள்ள என்ன நடந்திச்சோ? அதை பத்தி எனக்கு தேவையில்லை. பட், ஐ அம் டேம்ன் ஷுவர்! ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்ட மூனு பேரை அந்த பொண்ணு கையாலயே தீக்குளிக்க வச்ச என் புருஷன் கண்டிப்பா தப்பு பண்ணியிருக்க மாட்டாரு. உன் வார்த்தையில உண்மை இல்லைன்னு நீ ஆரம்பத்துல சொன்ன பொய்யே காட்டி கொடுத்துட்டு. உன்னை மாதிரி பொண்ணுங்களால தான் தப்பே பண்ணாத ஆண்கள் கூட தப்பா பார்க்கப்படுறாங்க” என்றுவிட்டு தன்னவனின் முன் வந்து நின்றாள்.

யாதவ்வோ அவளையே கலங்கிய விழிகளுடன் இமைமூடாது பார்த்திருக்க, அவனின் கையை இறுப்பற்றியவள், “நான் உங்களை நம்புறேங்க” என்று சொல்ல, அவனுக்கோ அன்றொருநாள் ஆரனுடன் அவளை சம்மந்தப்படுத்தி பேசி காயப்படுத்தியது தான் நியாபகத்திற்கு வந்தது.

வீட்டுக்கு வந்தவன் தனதறை கட்டிலில் அப்படியே தளர்ந்துப்போய் அமர்ந்திருக்க, அவனுக்காக குளிர்பானம் கரைத்து கொண்டு வந்தவள் அதை அவனிடம் நீட்டி, “இதை கொஞ்சம் குடிங்க” என்று சொல்ல, அவனோ தரையை வெறித்தவாறு இருந்தானே தவிர, எதுவுமே பேசவில்லை.

அவனின் மனநிலையை புரிந்து கலங்கிய விழிகளுடன் அவனையே சிறிதுநேரம் பார்த்திருந்த ரித்வி, மெதுவாக அவனருகில் அமர்ந்து, “என்னங்க, ஏன் இப்படி இருக்கீங்க? அதான் அவ சொன்னது பொய்னு தெரிஞ்சிருச்சே! என்ட், நீங்க அந்த தருண் கூட பேசினா என்னை திட்டுவீங்க. ஆனா, இன்னைக்கு அவன் தான் நமக்கு ஆதாரமா இருந்திருக்கான். இதெல்லாம் விட்டுத் தள்ளுங்க! எல்லாருக்கும் உங்கள பத்தி தெரியும். அவ எல்லாம் ஒரு ஆளுன்னு அவ சொல்றதெல்லாம்…” என்று சொல்லி முடிக்கவில்லை, அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான் யாதவ்.

அவளின் கழுத்துவளைவில் முகத்தை புதைத்து அவன் அழுக, அவளுக்கோ அதிர்ச்சி! அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை அவளுக்கு!

அவனை ஆறுதல்படுத்த கைகளை அணைக்க கொண்டு செல்வதும், மீண்டும் இழுத்துக்கொள்வதுமாக ரித்வி தடுமாறிக்கொண்டிருக்க, அவளை மேலும் தனக்குள் புதைத்துக்கொண்டே போனவன், “நான் எந்த தப்பும் பண்ணல ரிது. அவ தான் என்னை ஃபோர்ஸ் பண்ணி தனியா அழழைச்சிட்டு போனா. நானும் எதுவும் யோசிக்காம போயிட்டேன். மறுபடியும் காதல் அப்படி இப்படின்னு பேசினா. நான் முடியாதுன்னு ரொம்ப ஹார்ஷா சொன்னதும் இப்படி நடந்துக்கிட்டா. ரொம்ப அவமானமா போயிருச்சி” என்று அழுதவாறு சொல்ல, எப்போதும் விறைப்பாகவே திரியும் தன்னவனா இப்படி சிறுகுழந்தை போல் அழுவது? என்றிருந்தது ரித்விக்கு.

அவனின் அணைப்பிலிருந்து மெல்ல விலகி அவன் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவள், “ஏன் யது நீங்க அமைதியா இருந்தீங்க?” என்று கேட்க, “அவ என் மேல பழி சொன்னதுமே பல பேரோட பார்வை என் மேல தப்பா விழுந்திருச்சி. எதை வச்சி நான் தப்பு பண்ணலன்னு நிரூபிக்க?” என்ற யாதவ்வின் தழுதழுத்த குரலில் ரித்விக்கு தான் அத்தனை வேதனை!

“யது…” என்று அவள் மெதுவாக அழைக்க, அவனோ கலங்கிய விழிகளுடன் அவளை கேள்வியாக நோக்கினான். தன்னவனை மெதுவாக நெருங்கி அவனின் இரு கன்னங்களிலும் முத்தம் வைத்த ரித்வி, “நான் எப்போவும் உங்களை நம்புவேன். ஏன்னா, நான் உங்கள அவ்வளவு காதலிக்கிறேன். ஐ லல் யூ…”  என்று காதலோடு சொல்ல, அவனுடைய விழிகளோ அந்த வார்த்தைகளில் அதிர்ந்து விரிந்தன.

அவளோ அவனின் கன்னங்களை தாங்கி அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட, கண்களை அழுந்த மூடிக்கொண்டவன் அவளின் இடையை வளைத்து தன்னுடன் மெல்ல அணைத்துக்கொண்டான்.

ஒருவிதமான மாயவலையில் சிக்கியது போன்ற உணர்வு அவர்களுக்கு! இருவரும் இந்த உலகிலே இல்லை.

அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள் அதற்குமேல் தாங்காது வெட்கத்தில் தலை குனிந்துக்கொள்ள, ஒரு கையால் அவளின் இடையை வளைத்து பெருவிரலால் அவளின் முகத்தை நிமிர்த்தி தன் விழிகளுடன் அவள் விழிகளை கலக்க விட்டவன் நேரத்தை கடத்தாது அவளிதழுடன் தன்னிதழை அழுந்த பொருத்தியிருந்தான்.

நீண்ட நெடிய ஆழமான இதழ் முத்தம் அது!

அவள் மூச்சுக்காக திணறினாலும் அவன் விடுவதாக இல்லை. தன்னவளின் சுவாசத்திற்காக தன் மூச்சையே கொடுத்த யாதவ், அவளுக்குள் மேலும் மூழ்கிப்போக, திணறிப்போனது என்னவோ ரித்வி தான்.

அவளை முத்தமிட்டவாறே கட்டிலில் சரித்தவன் அவளிதழிலிருந்து தன்னிதழை பிரித்து தன்னவளின் விழிகளை ஆர்வமாக நோக்க, அவனின் எதிர்ப்பார்ப்பை புரிந்தவளுக்கோ அதை மறுக்கத் தோன்றவில்லை.

வெட்கச்சிரிப்பு சிரித்தவாறு அவள் விழிமூடி தலையசைக்க, லேசாக புன்னகைத்தவன் அடுத்தநொடி அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து முத்தமிட, இருவரின் உணர்வுகளும் தாறுமாறாக சுரந்து, அங்கு ஒரு அழகிய தாம்பத்தியம் இடம்பெற்றது.

அறை முழுக்க முத்தச் சத்தங்களும், இருவரின் சிறுசிறு முணங்கல்களுமே நிறைந்திருக்க, அவர்களின் அன்னியொன்னியத்தை பார்த்து நிலாவே வெட்கப்பட்டு தன் சூரியகாதலை காண ஓடிவிட்டது.

விடிந்ததும் தான் அவளைவிட்டு விலகிப் படுத்த யாதவ்வின் முகத்திலோ அத்தனை இறுக்கம்!

அடுத்தநாள் காலை,

ரித்வியோ சமையலறையில் பால் பொங்கி வடிவது கூட தெரியாது நேற்றிரவு நடந்த சங்கமத்தை நினைத்து வெட்கப்பட்டு சிரித்தவாறு நின்றிருக்க, அவளின் இடையை உரசியவாறு வந்து அடுப்பை அணைத்த கரத்தில் திடுக்கிட்டுவிட்டாள் அவள்.

தலையை மட்டும் திருப்பி அவள் பின்னால் பார்க்க, தன்னவளின் மூக்கோடு மூக்கை உரசிய யாதவ் குறும்பாக சிரித்தவாறு, “பால் பொங்குறது கூட தெரியாம அப்படி என்னடி நினைப்புல இருக்க? ஒருவேள…” என்று கேட்டு இழுக்க, அதில் குப்பென்று முகம் சிவந்தவள் வேறுபுறம் முகத்தை திருப்பி சிரித்துக்கொண்டாள்.

பின்னாலிருந்து அணைத்தவாறு அவளின் கழுத்தில் முகத்தை புதைத்து அவன் வாசம் பிடிக்க, “அய்யோ என்னங்க! உங்க மீசை குத்துது” என்று சிணுங்கியவாறு ரித்வி அசையவும், அவளிடையை இறுகப்பற்றியவன், “ஏன்டி சோடாபுட்டி! நேத்து பண்ணும் போது சும்மா தானே இருந்த? இப்போ மட்டும் விலகி போற” என்று பொய் கோபத்துடன் அதட்டினான்.

“என்னங்க…” என்று ரித்வி பொய்யாக முறைக்க, அவளை சிரித்தவாறு அணைத்துக் கொண்டவன், “சரி அதை விடு! இன்னும் இரண்டு நாள்ல அதிபா வீட்டுக்கு வர்றான்” என்று சொல்ல, “ஆமா… ஆமா… ஏற்கனவே ப்ளேன் பண்ண மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சி. இந்து, சந்து தான் அத்தனை ஏற்பாடும் பண்ணியிருக்காங்க. என்ட், முக்கியமா அதிக்கு எதுவும் தெரியக் கூடாது” என்று பேசிக்கொண்டே சென்றவளின் குரலில் அத்தனை உற்சாகம்!

அவளின் சிரிப்பில் மெய்மறந்து அவளிதழ்களை இருவிரலால் பிடித்த யாதவ், “நாளைக்கு விடிஞ்சதுமே ஊருக்கு கிளம்பலாம் சோடாபுட்டி” என்று சொல்லியவாறு இதழை நெருங்க, அவன் கையை தட்டிவிட்டவள், “எதுக்கு நாளைக்கு? இன்னைக்கே போகலாமே” என்று உதட்டை சுழித்தவாறு சொன்னாள்.

“ஸப்பாஹ்!” என்று இடுப்பில் கைக்குற்றி இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவன், “உன்னெல்லாம் வச்சிக்கிட்டு…” என்று திட்டியவாறு அடுத்தகணம் தன்னவளை கைகளில் ஏந்திக்கொள்ள, “என்ன பண்றீங்க? விடுங்க என்னை! சமைக்கனும்” என்று பதறிவிட்டாள் ரித்வி.

“எதுக்கு சமைக்க? அதான் என் பசிய தீர்க்க நீ இருக்கியே… இன்னைக்கு முழுக்க இரண்டு பேரும் அறைய விட்டு வெளிலயே வரக் கூடாது. வீட்டுல இருந்து கோல் வந்தாலும் அட்டென்ட் பண்ண கூடாது. அவ்வளவு தான்” என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்து கதவை காலால் சாத்தியவன், அன்று முழுவதும் அவளை விட்டு விலகவேயில்லை.

“என்னங்க முடியலங்க. போதும்! ரொம்ப டயர்டா இருக்கு” என்று ரித்வி ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் சொல்லும் போது அவளை விட்டு விலகிப் படுப்பவன், அடுத்த சிலநிமிடங்களில் மீண்டும் தன் சில்மிஷத்தை ஆரம்பிக்க, களைப்பாக இருந்தாலும் தன்னவனின் ஆசையை விரும்பியே தீர்ப்பாள் அவள்.

அடுத்தநாள் இருவரும் தயாராகி மாத்தளைக்கு செல்வதற்கான ரயிலில் ஏறிக்கொள்ள, இதற்கு முன் சென்று வந்த இரண்டு பயணங்களின் போது இல்லாத நெருக்கம் இந்த பயணத்தில்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தவர்களை பார்த்த இந்திரனும், சந்திரனும், “இது தான் வீட்டு ஃபங்ஷன்க்கு வர்ற இலட்சணமா?” என்று கோபமாக கேட்க, மஹாதேவனோ யாதவ் ரித்வியின் கோர்த்திருந்த கரத்தை தான் திருப்தியுடன் பார்த்தார்.

ரித்வியை நோக்கும் போது யாதவ்வின் கண்களில் தெரியும் மென்மை, ரித்வியின் கண்களில் தெரியும் காதல்  இருவருக்குமிடையிலான அன்னியொன்னியத்தை அப்பட்டமாக எடுத்துக்காட்ட, இதை இளசுகள் கவனித்தார்களோ, இல்லையோ? பெரியவர்கள் கவனித்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.

எப்படி ஒரு சந்தர்ப்பத்தில் நடந்த திருமணம்! இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுமோ, தாம் செய்தது தவறாகி விடுமோ? என்று அவர்கள் இருவரையும் நினைத்து கவலைப்படாத நாளில்லை வீட்டு பெரியவர்கள்.

காலையில் வீட்டுக்கு வந்த போது ரித்வியும் யாதவ்வும் ஒன்றாக இருந்தது தான். அதன்பிறகு ரித்வி உத்ரா, வைஷ்ணவியுடன் அறையில் இருக்க, யாதவ்விற்கோ வேலைகள் குவிந்து கிடந்திருந்தன.

“டேய்! உன் மாமனார் வீட்டாளுங்க வருவாங்களா என்ன?” என்று யாதவ் ஒருமாதிரி குரலில் கேட்க, “இல்லைடா, உத்ரா அழைச்சிப் பார்த்தா, நானும் கடமைக்காக அழைச்சேன். ஆனா, அந்த பாட்டி வர முடியாதுன்னு சொல்ல மத்தவங்களும் அவங்கள மறுத்து எதுவும் பேசல. நானும் அதுக்கு மேல அவங்களை வற்புறுத்தல” என்று சந்திரன் சொல்லி முடிக்க, “நல்லதா போச்சு!” என்று ஏளனமாக சொன்ன யாதவ்விற்கு தேவகி வீட்டாற்கள் வராமல் இருந்ததே அத்தனை நிம்மதி!

எல்லோரும் ஒவ்வொரு வேலைகளை இழுத்துப்போட்டு செய்ய, அரைகுறையாக தனக்குக் கொடுத்த வேலையை செய்துவிட்டு அடிக்கடி ரித்வியை பார்க்கவென்று பெண்கள் இருக்கும் அறை வாசலில் பாவம் போல் நின்றான் யாதவ். ஆனால் அவளை பார்க்க மற்றவர்கள் விட்டால் தானே!

“எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு ரித்வி. யாதவ் மாமா உன்னை இவ்வளவு சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டாரு” என்று வைஷ்ணவி குரலில் அத்தனை சந்தோஷத்தோடு சொல்ல, புன்னகையுடன் அவளை அணைத்துக்கொண்டாள் ரித்வி.

அன்றிரவும் ரித்வியை வைஷ்ணவி விடாது தன்னுடனே அறையில் உறங்க சொல்ல, இங்கு பூட்டியிருந்த பெண்களின் அறையை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது யாதவ் மட்டுமல்ல, சந்திரனும் தான். காரணம், உத்ராவும் பெண்களுடனே இருந்துவிட்டாள் அல்லவா!

எப்படியோ அன்றையநாள் கழிந்து அடுத்தநாள்,

காரில் தன் வீடு இருக்கும் பகுதிக்குள் நுழையும் போதே அதிபனுக்கு சந்தேகம்! வீதியோரங்களிலிருந்த அலங்காரங்கள், கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘இன்னைக்கு ஊருல யாரு வீட்டுலயாச்சும் ஃபங்ஷனா என்ன?’ என்று அதிபன் நினைத்து முடிக்கவில்லை, தன் வீட்டை அலங்கரித்திருந்த மலர்கள், விளக்குகளின் அலங்காரத்தை பார்த்து திகைத்துவிட்டான் அவன்.

‘நம்ம வீட்டுல ஃபங்ஷனா? என்ன நடக்குது இங்க? என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லல்ல’ என்று யோசித்தவாறு காரிலிருந்து இறங்கி, சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டு தன் பையை தூக்கியவாறு உள்ளே நுழைந்த அதிபன், தன்னைத் தாண்டி அலைப்பேசியில் பேசியவாறு வேகமாக செல்ல போன இந்திரனை பிடித்து நிறுத்தினான்.

“டேய் இந்து! என்னடா நடக்குது இங்க? நானும் இந்த வீட்டு பையன் தான்னு மறந்துட்டீங்களா என்ன?” என்று சற்று கோபமாகவே அதிபன் கேட்க, அவனை சலிப்பாக பார்த்த இந்திரன், “வந்ததுமே ஆரம்பிக்காத! நம்ம ரோஸ்மில்க்கு தான் நிச்சயதார்த்தம். அய்யய்யோ! அவ கல்யாணம் முடிஞ்சதும் நான் ரோஸ்மில்க்குன்னு கூப்பிட கூடாதாம். ஆனாலும் பரவாயில்லை, அவ கல்யாணம் பண்ணி போனாலும் அவ என் அத்தைப் பொண்ணு தான். அவ புருஷன் முன்னாடியும் கூப்பிடுவான் இந்த இந்திரன்” என்று பேசிக்கொண்டே சென்றான்.

ஆனால், இது எதுவும் அதிபனின் காதில் விழவே இல்லை. ‘தன்னவளுக்கு நிச்சயதார்த்தமா?’ என்ற அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றிருந்தான் அவன்.

ஷேஹா ஸகி