வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 10

அன்று

வான் நதியில் ஒற்றை நட்சத்திரமாய்ச் சூரியன் வீற்றிருக்க. காலையில் எழுந்த மக்கள் தங்கள் வேலையைப் பார்த்து கிளம்ப. துரைச்சியோ, மருதுவின் வரவுக்காகக் காத்திருந்தாள்.

அவனின் வரவை அவளின் சிசு உணர்ந்ததைப் போல். மகிழ்ச்சியுடன் அவளை உதைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அந்த நேரம் அவளின் போன் ஒலிக்க, மருது தான் அழைக்கிறான் என்று ஆசையுடன் ஓடி வந்து எடுத்தாள் துரைச்சி.

துரைச்சியின் பேறுகாலத்தை ஒட்டி ஒரு வாரம் லீவ் எடுத்திருப்பதால் கடந்த ஒரு வாரமாக அவன் அழைக்கவில்லை.

அவன் ஏற்கனவே கூறி இருந்தான். போர் காலம் லீவ் கிடைப்பது ரொம்பவே கஷ்டம் உன் பிரசவத்தை வைத்து தான் லீவ் கிடைத்திருக்கிறது என்று கூறியிருந்தான்.

ஆனால் இப்பொழுது அவளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டிய அழைப்பு, அவளின் உயிரை வாங்குவதாய் இருந்தது.

மருதுவின் மேஜர் தான் அழைத்திருந்தார். ஒரு வாரமாக நடந்த தொடர் போரில் நான்கு நாட்களுக்கு முன்பே அவன் இறந்து விட்டான் என்றும். போர் முடியாத காரணத்தால் அவனைக் கண்டுபிடிக்க மேலும் நாட்கள் சென்று விட்டது.

அதற்க்கு மேல் போனை கையில் பிடிக்கத் தொம்பில்லாத துரைச்சி அப்படியே மயங்கி சரிய ஆரம்பித்தாள். போன் ஒலிக்கவே செந்தூரும் அவள் அருகில் தான் நின்றிருந்தான். அவள் முகத்தில் தோன்றிய உணர்வையும். விடாமல் வழியும் கண்ணீரை கண்டு அவளிடம் இருந்து போனை வாங்குவர்தற்குள் அவள் மயங்கி சரிந்திருந்தாள்.

அதற்குள் மேஜர் அங்கிருந்து, “ஹலோ… ஹலோ“ என இருமுறை அழைத்து விட்டார்.

போனை கையில் வாங்கிய செந்தூர், “ஹலோ“ என்க.

“நாளை மருது உடலை கிராமத்துக்குக் கொண்டு வருகிறோம்” அதற்கான ஆயத்த வேலையைச் செய்யும் படி பணித்தார் அவர்.

ஒரு நிமிடம் அவர் பேசிய சமாச்சாரம் அவனுக்குப் புரியவே இல்லை… மீண்டும் கேட்க அப்படியே உடைந்து போனான்.

அவ்வளவு தான் போச்சு… எல்லாமே போச்சு… தன் தங்கையின் வாழ்க்கை ஆரம்பித்து நொடியில் அழிந்து போனது… அதை அவனால் தாங்க முடியவில்லை.

மயங்கிய துரைச்சியைப் பார்பானா? வரும் அவனைப் பார்பானா? அவர்கள் வீட்டு வாரிசை பார்பானா?

“கடவுளே. எங்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை“ அவனால் தாங்க முடியவில்லை.

அதற்குள் வீட்டில் எல்லாரும் ஓடி வர… உடனே துரச்சியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருது இறந்த விஷயத்தைச் செந்தூர் யாரிடமும் இன்னும் கூறவில்லை…

எப்படிக் கூறுவான் அவன்? அவனால் கூறதான் முடியுமா? முதலில் துரைச்சியைப் பார்க்க எண்ணினான்.

தன் வீட்டில் யாரிடமும் கூறவில்லை. அவள் கீழே விழுந்ததில் அவள் வயிற்றில் பலமான அடி. அப்படியே மயக்க நிலைக்குச் சென்றுவிட்டாள் துரைச்சி.

அவளின் மயக்கத்தைத் தெளிய வைக்க மருத்துவர்கள் பலமணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாயத்தும், காமாட்சியும் கவலை படிந்த முகத்துடன் துரைச்சி இருந்த அறையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் அவர்களைத் தேடி ராஜாவும், மருதுவின் அப்பத்தாவும் ஓடி வந்தனர்.

அவர்களை முகத்தைப் பார்த்ததும் அவர்களுக்கும் மருது செய்தி தெரிந்து போனது என அறிந்து கொண்டான் செந்தூர்.

அவர்களை உள்ளே வர விடாமல் பாதியில் தடுத்த செந்தூர். அப்படியே வெளியில் அழைத்துச் சென்றான்.

மேஜர் அவனிடம் விசயத்தைக் கூறும் பொழுதே. அவர்கள் வரும் நேரத்தை ராஜாவின் நம்பர் கொடுத்து… அவனைத் தொடர்பு கொள்ளக் கூறியிருந்தான்… அப்படித் தான் ராஜாவுக்கு விஷயம் தெரிந்திருந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான்.

ராஜா அப்படியே உடைந்து போனான். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. அப்பத்தா வாயில் துணியை வைத்து அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.

அடுத்து என்ன செய்வது என்று கூட யாருக்கும் தெரியவில்லை. அங்கு உயிருக்கு போராடிய நிலையில் துரைச்சி… மருதுவோ இங்குச் சடலமாக அவளை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.

பனிகளுக்கு நடுவே நாட்டைக் காக்க அவர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

தொடர் குண்டுவெடிப்பில் மருதுவின் மார்பை குண்டு பதம் பார்க்க. அந்தப் பனி பாறையில் இருந்து கீழ் நோக்கி உருள ஆரம்பித்தான் அவன். அவனின் உயிர் போகக் கூடிய கடைசி நேரத்தில். சட்டை பையில் இருந்த அவர்களின் திருமணப் போட்டோவை எடுத்துக் கைகளில் வைத்திருந்து “டேய் தேவ் உன்னை நம்பி தான் அத்தையையும். என் பொண்ணையும் விட்டு இந்த உலகத்தை விட்டுப் போகிறேன். துரைச்சி என்னை மன்னித்து விடு. நீ ஆசைப்பட்ட வாழ்கையை உனக்கு அழித்தனா? என்று எனக்குத் தெரியவில்லை. நம்குழந்தையை நல்ல படியாக வளர்த்து என் மருமகன் கையில் சேர்த்துவிடு“ என மனத்தால் அவர்களிடம் கூறி அப்படியே உயிரை விட்டான்.

அந்த இறுதி நொடிகள் கூட அவனின் கை அந்தப் போட்டோவை இறுக்கபிடித்திருந்தது. அதில் துரைச்சியும், தேவ்வும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்கள் அப்படியே அந்தப் பனியில் உறைந்து மரகட்டையாகிப் போனான் மருது. அப்படி ஒரு நிலையில் தான் அவனை மீட்டனர் அவன் குழுவினர். அவனின் கை இரத்த கறைகளுடன் மூடிய நிலையில் அப்படியே உறைந்து. உலர்ந்து போனது அந்தப் புகைப்படத்துடன்.

ராஜா, மருது நிலையைக் கூற செந்தூராலும், அப்பத்தாவாவிலும் காது கொடுத்து கேட்கமுடியவில்ல. அந்த நேரம், “அப்பா தாத்தா. உங்களைக் கூப்டுறாங்க“ என்றபடி தேவ் வந்து கூற.

எல்லாரும் பஞ்சாயத்தை நோக்கி விரைந்தனர். அப்பொழுது தான் துரைச்சி இருந்த அறைகதவை திறந்து கொண்டு வெளியில் வந்த மருத்துவர். அவர்கள் முன் வந்து நின்றபடி கையில் இருந்த க்ளவுஸை கழட்டிக் கொண்டே, “ரெண்டு பேரில் யாரையாவது ஒருத்தரை தான் காப்பாற்ற முடியும். அப்படியும் தாயை காப்பாற்றினால் அவள் நினைவை மீண்டும் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே? அவளின் மூளை தன் செயலை அப்படியே நிறுத்தி விட்டது. குழந்தையை மட்டுமே முழுதாகக் காப்பாற்ற முடியும். உங்களின் முடிவை பொறுத்து தான் யாரை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்“ எனக் கூறி அவர் அறை நோக்கி சென்றுவிட்டார்.

யாரை காப்பாற்றுவது, பெத்தவர்களால் எந்த மகளைத் தான் காப்பாற்ற வேண்டாம் என்று கூறமுடியும். பதில் சொல்ல முடியாத காமாட்சி தலையில் கைவைத்து அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.

தேவ்வோ, “பாப்பா… அத்தை“ என்று அவன் அழுது கொண்டிருந்தான். அங்கிருக்கும் நிலை அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனின் அத்தை மருத்துவமனையில் இருக்கிறாள் என்று மட்டும் அவனுக்குத் தெரிந்தது.

அப்பொழுது அவர்களை நோக்கி ஓடி வந்த நர்ஸ், “சீக்கிரம் ஏதாவது பதில் சொல்லுங்கம்மா. இரண்டு பேரையும் காப்பாற்ற முடியாமல் போகப் போகிறது“ என ஒரு அதட்டல் போட.

அப்பத்தா அவளை நோக்கி வந்து, “எங்களோட பேர பிள்ளையை எப்படியாவது காப்பாற்றிக் கொண்டுங்கள்“ எனக் கையெடுத்து வணங்கி கேட்க. அடுத்தக் கட்ட வேலைகள் துரிதமாக நடந்தது.

அடுத்தக் கொஞ்ச நேரத்தில் பெண் குழந்தையைக் கொண்டு வந்து மருத்துவர் காமாட்சி கையில் கொடுத்தவர் கூடுதல் சந்தோஷ விஷயமாக, “இறைவன் புண்ணியத்தில் உங்கள் மகளும் கண் முழித்து விட்டாள்“ எனக் கூறினார்.

எல்லாரும் மகிழ்ச்சியில் துள்ள. செந்தூர் முகம் வேதனையில் சுருங்கியது. குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு துரைச்சியைக் காண எல்லாரும் உள்ளே சென்றனர்.

அவர்கள் உள்ளே செல்லவும் அவளின் நிலை படு மோசமாக மாறிக் கொண்டிருந்தது. குழந்தை பிறக்கும் பொழுது குழந்தையின் அழுகுரலில். அவள் உடல் தூக்கிக் போட அப்படியே கண்ணைத் திறந்தாள் துரைச்சி. நன்றாக இருந்தவள் குழந்தையின் முகத்தைக் கண்டதும் அவள் நிலை மீண்டும் மாற. மருத்துவர்கள் அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தனர்.

தன் தாயை நோக்கி குழந்தையை வாங்க கையை நீட்டினாள் துரைச்சி. அவள் கையில் மெதுவாகக் குழந்தையைக் கொடுத்தார் காமாட்சி.

குழந்தையைக் கையில் தூக்கியவள் எல்லார் முகத்தையும் பார்க்க. கடைசியாகக் கதவு நிலையருகில் கலங்கிய முகத்துடன் தன் அண்ணன் நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டவள்.

அவனைக் கண்ணால் அழைக்க. ஓடி வந்து தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டான் செந்தூர். அவன் கையைப் பிடித்துக் கொண்டே குழந்தைக்குப் பால் புகட்டியவள் திக்கி மெதுவாக “தே… தேவ்“ என அழைக்க.

“அத்தை“ என்றபடி கேவலுடன் துரைச்சி அருகில் அவன் வந்தான். அவன் கையில் குழந்தையைக் கொடுத்த நிலையில் அப்படியே தன் உயிரை விட்டாள் துரைச்சி.

ஒரு வரவை எண்ணி சந்தோசபடுவதா. இல்லை இரு உயிர் போனதை எண்ணி துக்கபடுவதா? யாரால் என்ன தான் செய்யமுடியும்.

மருதுவின் உடல் ஊர் அருகில் வந்து விட்டது எனத் தகவல் வர. அப்பத்தா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க. அதற்க்கு மேல் தாக்கு பிடிக்காத செந்தூர் நடந்ததைக் கூறினான்… யாருக்கும் எதற்கும் நேரமில்லை.

ராஜாவும். செந்தூரும் அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். இருவரையும் எண்ணி அவர்களுக்குத் துக்கப் பட நேரம் இருக்கவே இல்லை.

எல்லா வேலைகளும் படு வேகமாக நடந்தேறியது. அடுத்த மூன்று மணிநேரத்தில் இராணுவ தலைமையில் மருதுவுக்கு மரியாதை செய்தனர்.

அப்பொழுது திடீரென மருதுவின் கை அவர்களை நோக்கி சரிய. அவன் கையில் இருந்த ரத்த கறைகளுடன் சுருட்டி வைக்கபட்டிருந்த போட்டோ அப்படியே செந்தூர் காலடியில் விழ. எடுத்துப் பார்த்தவன் அப்படியே உடைந்து போனான். இத்தனை பாசமான இவனை குழந்தையுடன் வாழ குடுத்து வைக்க வில்லையே?

பல சடங்குகளுக்குப் பின் மருதுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிறந்த பச்சை குழந்தையுடன் தேவ் அங்கு இருந்து மருதுவுக்கு இறுதி சடங்கு நடத்துவதைக் கண்டவர் கண்களில் ரத்த கண்ணீர் வடிந்தது.

துரைச்சியின் உடலை. மருதுவின் இறுதி சடங்கு ஆரம்பிப்பதற்க்கு முன்னாடியே அவளுக்கு இறுதி சடங்கு நடத்த செந்தூர் ரொம்பவே கஷ்டபட்டான்.

ஆனால் மருத்துவர்கள் அவர்களின் விதிமுறையைத் தாண்டி தர மறுத்து விட்டனர். அதற்குள் மருதுவின் இறுதி சடங்கு ஆரம்பிக்க அவனால் முடியாமல் போனது.

அந்த ஊர் வழக்கம் மிகவும் கொடுமையானது. கணவர் இறந்த பிறகு அந்தப் பெண்ணின் அடையாளத்தை முற்றிலும் மாற்றிவிடுவார்கள். தன் தங்கை அமங்கலியாக இல்லாமல் சுமங்கலியாகத் தகனம் செய்யவேண்டும் என்று எண்ணி தான் அவன் அத்தனை கஷ்டப்பட்டான் ஆனால்? விதி செய்யும் கோலம் யார் தான் கணிக்க முடியும்.

பெண்களின் வாழ்வில் அந்த “அ“ வும் “சு“ வும் செய்யும் ஜாலம் மிகவும் கொடுமையானது. அதனால் தான் ஒவ்வொரு பெண்ணும் என்றாவது ஒரு நாள், “அவருக்கு முன் என் உயிர் போகவேண்டும். நான் சுமங்கலியாகச் சாக வேண்டும்“ என்று வேண்டுவாள்.

துரைச்சியை ஊருக்குக் கொண்டு வர மாலையாகியது. வீடே அழுகையில் நிறைந்திருந்தது. யாரை தேற்றுவது. ஒரு கரையில் காமாட்சியும். தங்கமும் பிறந்த குழந்தையை வைத்து மருத்துவமனையில் வாசம் இருந்தனர்.

அந்தக் கொடுமையான நாளும் உதயமாகியது. யார் வாழ்விலும் இப்படி ஒரு நாள் வரவே கூடாது என்று எண்ணும். அந்தக் கொடிய நாள் துரைச்சி வாழ்விலும் விடிந்தது.

அவளின் குடும்பத்தார் யாரும் அவள் அருகில் வரவே இல்லை. வரவில்லை என்பதையும் தாண்டி அவர்கள் செய்யும் கொடுமைகளைக் காண அவர்களுக்குக் கண் இல்லை. எத்தனை ஆசையாக. பாசமாக வளர்த்த மகளை அப்படி ஒரு கோலத்தில் காண. அவர்களுக்குத் தெம்பு இல்லை…

காலையில் அவளைக் குளிக்க வைத்து. பட்டுடுத்தி. மஞ்சள் பூசி. பொட்டு வைத்து. தாலியில் மஞ்சள் பூசி. பூ வைத்து. சுமங்கலியாக நாற்காலியில் அமர வைத்தார்கள். செந்தூர் வீட்டின் உள் வரவே இல்லை…

அடுத்தக் கொஞ்ச நேரத்தில் அவளிடம் இருந்த சுமங்கலிக்கான அடையாளம் அத்தனையும் அழித்து அவளை இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

@@@@@@@@

காரிகையிடம் கோபமான மூர்த்தி நேராக வந்து சேர்ந்த இடம் மருத்துவமனை.

ஒரு வாரத்திற்கு முன். அகிலை அழைக்க ஹாஸ்டல் போகும் வழியில். ஏதோ சிந்தனையில் காரை ஓட்டி வந்தார் ஸ்வேதா. எதிரே இன்னொரு கார் வருவதையும் கவனிக்காத ஸ்வேதா நேராக அதில் இடிக்க. அப்படியே மயக்கமானார்.

ஒரு வாரம் ஆகியும் இன்னும் அவள் கண்விழிக்கவில்லை. யாரும் இல்லாத அவளை அவர் பார்ப்பாரா? அம்மாவின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அகிலை பார்ப்பார? இதில் காரணமே இல்லாமல் தன்னைச் சந்தேகபடும் காரிகைக்குப் பதில் சொல்லுவார? இருக்கும் கணத்தை அவரால் தாங்கமுடியவில்லை.

இதில் அகில் வேறு, “அங்கிள் மம்மி எப்போ என்னைப் பார்ப்பாங்க“ கண்ணீருடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டபடியே இருக்க அவரால் பதில் கூற முடியவில்லை.

அவனின் கையை ஆறுதலாகத் தட்டிக் கொண்டுத்தவர். மருத்துவர் கூறும் பதிலுக்காகக் காத்திருந்தார்.

அன்று முழுவதும் ஸ்வேதா. கண்விழிக்கவேயில்லை. மூர்த்தியும் வீட்டுக்கு செல்லவில்லை.

இரவு முழுவதும் மூர்த்தி யோசிக்க அவர் மேலயே அவருக்குக் கோபம் வந்தது. “அவளிடம் நடந்ததைக் கூறியிருக்கலாமோ?“ என யோசித்தவர்.

காலையில் முதல் வேலையாகக் காரிகையிடம் மன்னிப்பை வேண்ட எண்ணினார். தான் எந்தத் தவறும் செய்யவில்லையே காரிகை தான் சொல்வதை ஏற்றுக் கொண்டு. என்னை மன்னிப்பாள் என்று எண்ணியவர். இப்பொழுது தோழியை எண்ணி கவலையில் ஆழ்ந்தார்.

அடுத்த நாள் காலையில் ஸ்வேதா மெதுவாகக் கண்விழிக்க. சற்று ஆசுவாசமானவர். அவளிடம் கூறிக் கொண்டு தனது வீடு நோக்கி சென்றார்.

இத்தனை நாள் இருந்த டென்ஷன் எல்லாம் அவரை விட்டு பறந்து போனது. மனம் முழுவதும் மனைவியும். மகனும் நிறைந்து இருந்தனர்.

முகத்தில் தோன்றிய சந்தோசத்துடன் வீடு வந்தார். பூட்டி இருந்த வீடு அவரை வரவேற்றது.

அவுட் ஹௌசில் சென்று வேலைக்காரியிடம் விவரம் கேட்க, “அம்மா நேத்து நைட் வெளிய போனாங்க இன்னும் வரலை. நீங்க வந்தா சாவியைக் குடுக்கச் சொல்லிட்டு. என்னையும் ஊருக்குக் கிளம்பச் சொல்லிட்டாங்க. உங்களுக்காகத் தான் இத்தனை நேரம் இருந்தேன்“ என்றவள். அவர் கையில் வீட்டு சாவியையும். அவள் தங்கி இருந்த அவுட்ஹவுஸ் சாவியும் அவர் கையில் திணித்து விட்டு. தன் பொருட்களுடன் வெளியில் சென்றாள்.

அவள் பின்னே சென்றவர், “எப்படி? எங்க போனா?“ என விபரம் கேட்டவர் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

‘ஐயோ! ஏதாவது தவறான முடிவெடுத்து விடுவாளோ? விஷ்ணுவை எப்படிச் சமாளிப்பாள்’ மிகவும் பயந்து போனார்.

தவறு செய்துவிட்டதாக அவர் மனம் அடித்துக் கொண்டது. ‘என்ன தான் தோழியாக இருந்தாலும் இப்படியா இருப்பது’ மனம் அவரையே கேள்விக் கேட்டது.

‘தன் மனைவி. தன் மகன் என்று அவர்களையே நம்பி இருந்தது. கடைசியில் புரியாமல் போனாளே?’ அவரால் அதைத் தாங்க முடியவில்லை.

அவளுக்கு உறவென்று யாரும் இல்லையே. அவனை வைத்துக் கொண்டு எங்குச் சென்றிருப்பாள். அவருக்குத் தெரிந்து அவளுக்குப் பெரிதாக நட்பு என்று எதுவும் இல்லை. தானே அவளைத் தொலைத்து விட்டோமே? மனம் அழுகையில் குலுங்கியது.

காரை எடுத்துக் கொண்டு நாயாக அலைந்தார் எங்கும் அவளைக் காணவில்லை. சென்றவள் எங்குச் சென்றாள் என்று தெரியாமல் மிகவும் தளர்ந்து போனார்.

இரவு வீட்டில் விஷ்ணு அழுவது போலும். என்னை ஏமாற்றி விட்டாயே என்று மனைவி வந்து கேள்வி கேட்பது போல் பயங்கரமான கனவுகள் அவரைத் துரத்த. நடை பிணமானார்.

ஆயிற்று இன்றோடு காரிகை அவரை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஸ்வேதா விஷயம் கேள்விப்பட்டு உடைந்துப் போனாள். இன்னும் தோழனுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல் வலு கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அகில் படிக்கும் ஹாஸ்டல் பக்கம் வீடு பார்த்து சென்றுவிட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தொழில் அவர் கையை விட்டு போகும் நிலைக்கு வர. மேனேஜர் வந்து கார்மெண்ட்ஸ் நிலையை எடுத்துக் கூறினார்.

மூர்த்திக்கு நன்கு தெரியும் தொழில் தோற்றுப் போனால் மனைவியால் தாங்கமுடியாது. என்றாவது அவள் என்னைத் தேடி வருவாள் என்று. அவளுக்காகத் தொழிலை மீண்டும் கையில் எடுத்தார்.

ஆயிற்று ஆறு மாதம். காரிகை இன்னும் அவரை நோக்கி வரவில்லை. தொழில் ஓரளவு உயர்ந்தது.

எங்காவது தொழில் சம்மந்தமாக மூர்த்திச் செல்ல நேரும் பொழுது. வழியில் பள்ளியை பார்த்தால். வாசலிலையே தவம் இருப்பார் “இங்காவது மகன் இருப்பானா? கண்ணில் படுவானா?” என்றபடி பள்ளி விடும் வரை காத்திருப்பார்.

அன்றும் அப்படித் தான் ஒரு மதிய நேரம். ஒரு பள்ளியை பார்த்தார். இன்றும் அதே போல் அங்குக் காத்திருந்தார். சாப்டாமலே தவம் இருந்தார்.

ஆயிற்று மணி நான்கு. பள்ளி குழந்தைகள் ஒவ்வொன்றாக வெளியில் வர ஆரம்பித்தனர்.

தூரத்தில் அவன் விஷ்ணு. பார்த்தவர் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். மகனை பார்த்துச் சரியாக ஆறு மாதம் ஆகிவிட்டது.

மகன் கொஞ்சம் வளர்ந்தது போல் அவர் கண்களுக்குத் தெரிந்தது. பள்ளி கேட் விட்டு வெளியில் வந்தவன். இரண்டு பக்கமும் சாலையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டு சாலையைக் கடந்து வந்தான்.

மகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கார் அருகில் வரவும் மகன் மெதுவாக. அந்தக் காரைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் வரவும். காரை திறந்து கொண்டு மூர்த்தி இறங்கி அவன் முன் காட்சி தர. அவரை நிமிர்ந்துப் பார்த்தவன் அப்படியே தலையைக் குனிந்து அவரைத் தாண்டிப் போக. உடைந்து போனார்.

“கண்ணா“ என்றபடி மூர்த்தி அழைக்க.

அவரை ஒரு நொடி நின்று பார்த்தவன். பின் பிடிவாதமாகத் தலையைத் திருப்பி. “நீ வேண்டாம். என் அப்பா நீ இல்ல அவனுக்குதான் நீ  அப்பா“ என்றபடி அழுது கொண்டே ஓட.

அவனின் பின் தொடர்ந்து போனார் மூர்த்தி. அருகில் இருந்த அப்பார்ட்மென்டில் மகன் நுழைய அவன் பின்னே வந்தவர் காரை நிறுத்தி விட்டு அவன் பின்னே ஓடினார்.

பக்கத்து வீட்டில் சாவியை வாங்கிய விஷ்ணு கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று அப்படியே அடைத்துக் கொண்டான்.

வெளியில் நின்ற மூர்த்திப் பல முறை கதவை தட்டியும் மகன் திறக்கவே இல்லை. மனைவி வரும் வரை வீட்டில் வாசலில் இருந்த படியில் காத்திருந்தார். பசி மயக்கம் வேறு அவரை வாட்டியது.

அருகில் உள்ள துணி மில்லில் கணக்கராக வேலை செய்கிறாளாம் காரிகை. ஏழு மணிக்கு தான் வருவாளாம். அருகில் விசாரித்துக் கொண்டார்.

“ஏன் இந்தப் பிடிவாதம். ராணியாக ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருந்தவள். அடுத்தவனிடம் கூலிக்கு வேலை செய்கிறாளாம்“ கேட்டவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“வரட்டும் அவள்“ காத்திருந்தார்.

மிகவும் களைப்பாக வந்தாள் காரிகை. வீட்டின் வாசலில் லைட் போடாமல் இருக்க அவர் இருந்ததை அவள் கவனிக்கவில்லை.

“விஷ்ணு ஏன் இன்னும் லைட் போடவில்லை. உடம்பு சரியில்லையா“ என்றபடி தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து வீட்டின் உள் செல்ல அவளின் பின்னே வீட்டின் உள் நுழைந்தார் அவளின் கணவர் மகேந்திரமூர்த்தி.

“யார்“ என்றபடி திரும்பி பார்க்க அவரைச் சத்தியமாக அவள் எதிர் பார்க்கவில்லை.

எதுவும் கூறாமல் மகனை சென்று பார்க்க. அவன் அப்படியே தலையைத் தலைகாணியில் புதைத்து தூங்கி கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்றவள் அவனை மடியில் தாங்க கண்களில் கண்ணீர் தடம். அழுதிருப்பான் போல.

மூர்த்தி ஹாலில் அமர்ந்திருந்தார். நேரம் ஆகியதே தவிர இருவரும் வெளியில் வரவே இல்லை. பொறுத்து பார்த்த மூர்த்தி எழுந்து கொண்டார். காரிகை அவரை அவமானபடுத்தியதை போல் உணர்ந்தார்.

மனதில் மிகவும் பயங்கரமான அடி வாங்கினார். செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவித்தார். ஒரு முறை ஒரே ஒரு முறை அவள் இருந்த அறை கதவைப் பார்த்தவர் இடத்தை விட்டு எழுந்தார். எழ முடியாமல் பசி மயக்கம் தடுத்தது. அதையும் பொருட்படுத்தாமல் கதவை பிடித்து மெதுவாக எழுந்து தள்ளாடி வெளியில் சென்றார்.

அடுத்தடுத்து மீண்டும் வந்தார். காரிகை அவர் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை. ஒரு நாள் அவர் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தையும். காரிகை பவனத்தையும். இருவர் பெயருக்கும் மாற்றி எழுதிய பத்திரத்தை கையில் கொடுத்து சென்றார்.

அதன் பிறகு அவர் அவர்களைப் பார்க்க வரவே இல்லை. இவர்களும் அவரைத் தேடி செல்லவில்லை. காரிகை மீண்டும் அவள் கையில் தொழிலை எடுத்துக் கொண்டாள்.

கொ(வெ)ல்வாள்.

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்.

சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

வீண்படு பொய்யிலேநித்தம் விதிதொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை

காண்பது சக்தியாம்இந்தக் காட்சி நித்தியமாம்.