வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 9

இன்று

காரிகை அவளால் அவள் கார்மெண்ட்ஸ் தோல்வியைத் தாங்கவே முடியவில்லை. அவரின் கண் முன்னால் அவரின் தொழில் ராஜ்ஜியம் சரிந்து கொண்டிருப்பதை அவரால் உணரமுடிந்தது. காரிகையின் கோபம் விஷ்ணு மேல் திரும்பியது.

‘அவனின் கவனம் தொழில் மேல் இல்லை’ என்று எண்ணிய காரிகை அவனை அழைத்தார்.

“பார் விஷ்ணு… நீ பண்ணுறது எதுவுமே எனக்கு சரியாப் படலை. நமக்கு வர வேண்டிய ஆர்டர் எல்லாம் எங்கையோ போகுது. தொழிலை கவனிக்க முடியலன்னா என்கிட்ட சொல்லு. நானே பழைய மாதிரி பார்த்துக் கொள்வேன்“

“என் மீது நம்பிக்கை வைத்து தானே இந்தத் தொழிலை என் கையில் தந்தீங்க. இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் நான் பார்த்துகிறேன். சீக்கிரமே எல்லாருக்கும் ஒரு முடிவை கட்டுறேன்” வன்மமாகக் கூறிக் கொண்டான்.

“நீ என்ன பண்ணுவியோ. ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது விஷ்ணு. இனி மேல் யாரும் நம்ம தொழில் பக்கமே வரக் கூடாது“ கண்டிப்புடன் கூறிவிட்டாள் காரிகை.

“காரிகை கார்மெண்ட்ஸ் எப்பவும் அழியக் கூடாது. அது தோற்கவும் கூடாது. தியாகராஜ் நமக்கு எதிரா வந்ததால் தான் அவனிடம் பேசி என் வழிக்குக் கொண்டு வந்தேன். யாரை என்ன செய்ய வேண்டும் என்று உனக்கே நல்லா தெரியும். அவளுடைய தகுதியை அவளுக்குக் காட்டு. நேற்று வந்தவள் இந்த ஆட்டம் காட்டுகிறாளா?“ கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டார்.

அவள் அழித்த மூர்த்தியின் கார்மெண்ட்ஸ். அவளை விட வளர்வதை அவளால் தாங்க முடியவில்லை. காரிகைக்கும், மூர்த்திக்கும் தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது.

அங்கு பட்டறைக் கட்டுவதில் தான் இருக்கிறது இருவருக்குமான வெற்றி… தோல்வி..

அவர் இருந்த இடத்தில் இன்னொருத்தியை அவரால் நினைத்து பார்க்கமுடியவில்லை. மீண்டும் தானே தொழிலில் முன் வர வேண்டும் என்று எண்ணினாள். பல ஊடகங்களில் இருந்தும். பலர் கேலி பார்வையில் இருந்து அவளைக் காத்தது. காப்பது அவளின் தொழில் மட்டுமே. யாருக்காகவும். எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டாள். அதற்காகத் தான் விஷ்ணுவையே அவள் உருவாக்கினாள். அவளுக்காக. அவளின் நலனுக்காக.

அதற்கடுத்து வந்த நாட்களில் இருவருக்கும் தொழில் போட்டி அதிகரிக்க. கீர்த்தி வெற்றி வாகை சூடியவளாய் வலம் வந்தாள். விஷ்ணுவோ அவளிடம் உண்மையாகவே தோற்றுக் கொண்டிருந்தான்.

“தனக்கு ஒரு வாய்பில்லாமலா போகும்“ கொதிப்புடன் அவளை வீழ்த்தும் நாளுக்காகக் காத்திருந்தான்.

இப்பொழுது அவளை வீழ்த்தும் ஒரே வழி. அவள் ஊரில் அவன் சாயபட்டறையை ஆரம்பிப்பது தான். அதைக் கட்ட விடாமல் தடுக்கத் தான் அவள் தன் தொழிலில் விளையாடுகிறாள் என்று அன்றே அவன் அறிந்து கொண்டான்.

அவளுக்குப் பயந்து எடுத்த காரியத்தைப் பாதியில் விட அவன் ஒன்றும் பேடி இல்லை. வீரன்! நினைத்ததை முடிப்பவன்!

முடித்தே தீருவான். அந்த பலன் அவனிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது!

“ஹாய் வினு“ என்றபடி விஷ்ணுவை நோக்கி வந்தாள் ரிஷிபா.

ரெட் கலர் ஸ்லீவ் லெஸ் அணிந்து. என்னைப் பார். என் காலை பார் என்ற அலங்கோலத்தில் வந்தாள் அவள்.

அவளின் உடை அலங்காரம் அவனை முகம் சுழிக்கச் செய்தது. அதே நேரம் அவன் மனம் காரணமே இல்லாமல் கீர்த்தியை நினைத்து. அவளின் உடை அலங்காரத்தையும் கம்பேர் செய்து பார்த்தது. ஆனால் அதைப் பற்றிய எண்ணத்தை முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் பிரயத்தனம் பட்டான்.

அவளை கண்ட பின், இவளை பார்க்க அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் காரிகை? அவளுக்காய் பார்க்க வேண்டியிருக்கிறதே?

இவளை கவனிக்காமல் அப்படியேவிட்டால், காரிகையின் காதுக்கு விஷயம் சென்றுவிடும் அதை அவன் விரும்பவில்லை.

 அவன், அவனைப் பற்றியும், அந்த அவளை பற்றியும் நிறைய அறியவேண்டி இருந்தது. அதற்காகவே இவளிடம் நடிக்க ஆரம்பித்தான்.

“ஏய். ஷிபா. வாட் எச் சர்ப்பிரைஸ்“ என்றபடி மெதுவாக அணைத்து விலகியபடி “ஜூஸ் ஆர் டீ“ உபசரணையில் ஆரம்பித்தான்.

“வேண்டாம் வினு. என்கேஜ்மென்ட் ஷாப்பிங் போகணும் கொஞ்சம் வாரீங்களா?“ கொஞ்சலாகவேக் கேட்டாள்.

அவனுக்கு இவளின் இந்த செயல் கொஞ்சமும் பிடிக்கவில்லை. மனம் சொல்லாமல் கொள்ளாமல் அவளை நோக்கி ஓடியது.

அவள் என்ன? அவள் கண்களில் தெரிந்த திமிர் என்ன? இப்படியான வழிசல் கொஞ்சமும் அவளிடம் காணவில்லையே? அப்பப்பா… என்ன பொண்ணுடா அவ? சிலாகித்துக் கொண்டான்.

நாற்காலியில் சாய்ந்து இருந்து. நாடியில் ஒரு கையை வைத்து யோசித்தவன், மெதுவாக வலது புருவத்தை வருடிக் கொண்டான்.

அவனையே பார்த்திருந்தாள் ரிஷிபா. கோதுமை நிறத்தில். ஆறடிக்கும் மேல் உயரத்தில். கூர்மையான கண்களுடன். முகத்தை மறைத்து விழுந்த ஒற்றை முடி கற்றை. சாக்லேட் நிறத்தில் ஷர்ட் அணிந்து கம்பீரமாக அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவள் மனதில் ஆழ புகுந்தது.

‘எத்தனை ஆண்களைப் பார்த்திருக்கிறேன். இவனிடம் அப்படி என்ன இருக்கிறது என்று என் மனம் இவன் பின்னே ஓடிவருகிறது. இவனைப் பற்றி நன்கு அறிந்து இவனிடம் சரணடைய என் மனம் ஏன் ஆசைக் கொள்கிறது’ நெஞ்சில் விடை தெரியாத பல கேள்விகளுடன் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்திருந்தாள்.

“சாரி ரிஷிபா… நான் இதை சொல்ல எனக்கே சங்கடமாதான் இருக்கு. ஆனா வேற வழி இல்லை. எனக்கு முக்கியமான ஒரு கால் மீட்டிங் இருக்கு. நீயே போயிட்டு வாயேன்” என்றான் முகத்தில் வரவழைத்துக் கொண்ட சோகத்துடன்.

“எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா?“ சிணுங்கலுடன் கொஞ்சினாள் அவள்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. காரணமே தெரியாமல் ஏதோ ஒன்று அவன் மனத்தை வியாபித்திருந்தது. அவளுக்கு காட்டாமல், “அர்ஜென்ட் வேலை இருக்கு ரிஷிபா.“ என்றான் அவள் முகம் நோக்கி.

“ஓகே. நானே பாத்துக்கிறேன்” என்றபடி அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து சென்றாள் அவள்.

“ஊப்” மூச்சை இழுத்து விட்டவன் கை, அவனையும் அறியாமல் அவளை அழைத்தது.

அவசர வேலையில் இருந்தவள் போன் அழைக்கவே. யார் என்று பார்க்காமல், “ஹலோ. கீர்த்தி ஹியர்“ என்றாள்.

“ஹாய் பேபி“ உல்லாச சிரிப்பு அவனிடம்.

“நீயா? என்ன வேணும்?” கடுப்புடன் வினவினாள்.

“நீ தான்“ நமட்டு சிரிப்புடன் கூறினான் அவன்.

“ஏய்“ பல்லைகடித்துக் கொண்டாள்.

“ஏய்யா! அட! இது கூட நல்லாருக்கே… ரொமாண்டிக் வோர்ட் இது உனக்கு தெரியுமா?” அப்பட்டமான நக்கல் அவனிடம்.

“ஓவரா பேசாத?” அவள் பல்லை கடிக்க…

“ச்சீ… ச்சீ… நீ அணில் கொத்திய மாம்பழம்டி. நீ எனக்கு வேண்டாம். அதற்குள் பெரிசா கற்பனை பண்ணாதே“ கேலியாகக் கூறினான்.

அவன் அப்படிப் பேசியதில் அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

“விஷ்ணு… திஸ் இஸ் லிமிட். நீ லிமிட் தாண்டி பேசற?“ என்றவளின் கோபம் டெசிபலில் ஒலித்தது.

அவன் அவளைச் சீண்டவே அழைத்தான். ஆனால் அவள் குரல் வேகமாக ஒலித்ததில் கோபமானான். அதிலும் இதுவரை அவனை எதிர்த்து யாருமே பேசியதில்லை. அப்படி இருக்கையில் அவள் குரலை உயர்த்தவும் ஆக்ரோசமானான்…

“என்னடி லிமிட். நீ தான் லிமிட் தாண்டிப் போற. பொண்ணா லட்சணமா அடங்கி இருக்கணும்… அப்படியும் இல்லன்னா குழந்தை குட்டியை பெத்து வளர்க்க போகனும். அதை விட்டுட்டு என்கிட்ட மோத வந்திருக்க.

தி கிரேட் விஷ்ணு காரிகை டி! காட்டில் இருக்கும் சிங்கம். யாருக்கும் அடங்கமாட்டான் இந்த விஷ்ணு. யாராலையும் அடக்கவும் முடியாது. இதில் நீ..? ஹா… ஹா…

ஆப்டர் ஆல் ஒரு பெண்மான் எனக்குப் போட்டியா வந்திருக்க. சிங்கம் வேட்டையாடி பார்த்ததில்லைல அது தான் இந்த ஆட்டம் ஆடுற. எல்லாத்துக்கும் முற்று புள்ளி வைக்குறேண்டி. சிங்கம் எப்படி மானை வேட்டையாடும்ன்னு நீ பார்த்திருக்க மாட்ட. உனக்கு காட்டுறேண்டி… சீக்கிரமே காட்டுறேன்.

இந்த விஷ்ணு யார்? நீ யார்? உன்னை, என்னால என்ன பண்ணமுடியும்னு அப்போ தெரியும்“ ஆக்ரோஷமாக கூறியவன்,

“சரியா ஐந்து மணிக்கு கே.எப்.சி. வார! வரணும்… நீ வராத அடுத்தச் செகண்ட் நான் அங்க உன் வீட்டில் இருப்பேன்…“ கத்தியவன் கோபத்துடன் அழைப்பை நிறுத்தினான்.

விஷ்ணு பேசி முடித்ததும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. நான் உனக்கு அத்தனை கேவலமாகப் போய்விட்டேனா? விடமாட்டேன். உன்னை என்னிடம் வந்து கெஞ்ச வைக்காமல் விடமாட்டேன் ஆத்திரமாக எண்ணிக் கொண்டாள் மனோகீர்த்தி தேவேந்திரன்!.

விஷ்ணுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவளிடம் பேசி முடித்த பிறகு தான் அவன் பேசிய பேச்சின் தீவிரம் புரிந்தது. அவன் மனது அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்கிறது என்பதை ரிஷிபாவிடம் பேசும் பொழுதே அறிந்து கொண்டான்.

இது அவனுக்கும். அவன் தொழிலுக்கும் நல்லதில்லை. எல்லாம் இன்றே முடித்துக் கொள்ள வேண்டும். அவள் பின்னே செல்லும் மனதை கடிவாளமிட்டுக் கொண்டான்.

***

விஷ்ணு கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கீர்த்தி அலுவலக வளாகத்தில் நுழைந்தது அந்த வெள்ளை நிற ஆடி. அதில் இருந்து அவன் இறங்கியதும். வாயில் காவலன் கார் கதவை திறந்து விட்டுச் சலியூட் அடித்து விலகி நின்றான்.

அவன் அருகில் வந்தவன், “அங்கிள் இருக்காங்களா?” எனக் கேட்க.

“மேடம் இருக்காங்க சார்”

“வெல்…” என்றபடி அவனைத் தாண்டி அலுவலகத்தில் நுழைந்தான் ரிஷி தியாகராஜ்.

தொழில் விஷயமாய் மூர்த்தியை பார்க்க அவன் இங்கு வந்ததால் செக்கியூரிட்டி சரியாக அடையாளம் கண்டு கொண்டான்.

அதிலும் இப்பொழுது அவள் அந்தப் பெண் கீர்த்தி அவரின் தொழிலை எடுத்து நடத்தி விஷ்ணு கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறாள். அவளிடம் நேரில் பேச எண்ணி இங்கு வந்திருக்கிறான்.

கீர்த்தி, விஷ்ணுவை பார்க்கும் பார்வையில் தொழில் போட்டியை தாண்டிய ஏதோ ஒன்று அவனுக்குத் தெரிந்தது.

‘இவர்களுக்குள் ஏதோ இருக்கிறது’ இது தான் அவர்களைப் பார்த்த நொடியில் இருந்து தோன்றியது.

“வெல்கம் சார் யாரை பார்க்கணும்?“ ரிஷப்ஷனில் இருந்த பெண் அவனைப் பார்த்து கேட்டாள்.

“மீட் யுவர் பாஸ்“ என்றபடி கண்களைச் சுற்றி சுழல விட்டான் ரிஷி.

“பைவ் மினிட்ஸ் வையிட் பண்ணுங்க சார். மேடம் மீட்டிங்ல இருக்காங்க“

“ஒ… இட்ஸ் ஓகே“ என்றவன் அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒவ்வொரு இடமும் நேர்த்தியாக இருந்தது. இருக்க வேண்டிய இடத்தில் அந்தந்த பொருட்கள் இருந்தன. பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.

அவள் சொன்னது போலவே ஐந்து நிமிடம் கழித்துக் கம்பீரமாக அறைக்கதவை திறந்து கொண்டு வேக நடையுடன் அவளின் அறையை நோக்கி சென்றாள் கீர்த்தி.

அருகில் இருந்த இண்டர்காம் ஒலிக்க. “எஸ். மேம்“ என்றவள், “சார் உங்களை மேம் கூடுறாங்க. லெப்ட் சைட் ரூம்“ என்றவள் தன் வேலையில் மூழ்க.

அவளின் அறையை நோக்கி சென்றான் ரிஷி. மெதுவாகத் தட்டி விட்டுக் காத்திருந்தான்.

அவளின் “எஸ். கம்மிங்“ என்ற அவளின் குரல் கேட்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் ரிஷி.

அன்று பார்ட்டியில் வைத்து, இவளையே கண்ணெடுக்காமல் இவளை பார்த்திருந்தான் என்பது அவள் நினைவில் வந்தது.

அவனை யோசனையாகப் பார்த்தவள். பின் முகத்தைச் சாதரணமாக வைத்துக் கொண்டு அவனைப் புன்னகை முகமாக வரவேற்றாள்.

“ஐ ஆம் ரிஷி. ரிஷி தியாகராஜ்“ அவள் பக்கமாகக் கொஞ்சம் குனிந்து கையைக் குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 “என்ன விஷயம்?“ நேரடியாக விசயத்துக்கு வந்தாள் கீர்த்தி.

அவளை மெச்சுதலாகப் பார்த்தான் ரிஷி.

“ஐ… ஆம் ரிஷிபா பிரதர்” என்றான் அடுத்ததாக.

“சோ வாட்?”

‘உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா?’ அவன் மனம் கேள்விக் கேட்டது.

“உங்ககிட்ட பேசணும்” என்றவனின் கண்கள் அவளையேப் பார்த்து வைத்தது.

“யா.. லெட்ஸ் கோ” என்றவள் எழ,

கேள்வியாக பார்த்தவனின் முகத்தை கண்டு சிரித்தவள்,

“விஷ்ணு கூட கே.எப்.சி. ல இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. வாங்க அங்க பேசிட்டு அப்படியே போகலாமே?” என,

“யா ஷுயர்” என்றபடி அவளோடு எழுந்து வெளியே சென்றான் ரிஷி.

இருவருக்கும் மனம் முழுவதும் பெருத்த யோசனையில் இருந்தது.

கொ(வெ)ல்வாள்.

தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!