வரமென வந்தவளே

அத்தியாயம் 08

ஒருவருடம் முடிந்ததே வாசவிக்கு தெரியவில்லை. தாய் தந்தையரை பிரிந்து இருப்பது  கவலையாக இருந்தாலும் , ஆதியின் அன்பால் அதை சிறிது ஒதுக்கி வைத்திருந்தாள்.

அவளுக்கு ஆதி உற்ற துணையாக இருந்து ,அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்க கொள்ள , கொஞ்சம் கொஞ்சமாக அவளின் நிலையிலிருந்து சிறிது வெளி வந்திருந்தாள்.

பெரிதாக யோசிப்பதை தவிர்த்து இருந்தாலும் , அப்போ அப்போ அவளது இந்த பிறவி குணம் தலை தூக்க தான் செய்தது.

இதில் மாறாத ஒரே விடயம் என்றால் , அது அவள் ஏவியின் மீது வைத்திருந்த வெறுப்பு மட்டுமே..

ஏனோ அவளுக்கு ஏவி என்ற பெயரை கேட்டாலே அத்தனை கடுப்பாக இருந்தது. அவனை பற்றி முதலில் பேசியது தான் ,அதன் பிறகு அவனை பற்றி மோனிக்கா எதையும் பேசுவது இல்லை. ஆனாலும் அவனை பற்றி அவள் மனதில் வரையருத்திருந்த பிம்பம் மாறவே இல்லை.

ஆதியுடனான நட்பு கரத்தினாலே , அவனுடன் தோழர்களிடமும் பேச தொடங்கி இருந்தாள் வாசவி ‘ அண்ணா ‘ என்ற அழைப்போடு.

இந்த ‘அண்ணா ‘ என்ற அழைப்பிற்கு நெஞ்சு வெடித்தது என்னவோ கர்ணனிற்கு மட்டுமே..

ஒருவருடம் கடந்திருந்த நிலையில் ‌அவர்களுக்காக நடத்தப்படுக்கின்ற தேர்வு முடிந்திருந்தது.

தேர்வு முடிந்தமையால் , கல்லூரியில் ஒரு மாத காலத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார்கள். அதற்கு முன்பு அவர்களுக்கான ரிசல்ட் வந்திருக்கவே , ஆதியின் புண்ணியத்தில் வாசவி நல்ல மதிப்பெண்களே பெற்றிருந்தாள்.

எப்பொழுதும் வருடாந்தோரும் நடைப்பெறுவது போல் இந்த முறையும்  நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கௌரவிக்கும் விழா ஒன்று வைத்திருந்தனர்.

அதில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைவரும் கலந்து கொள்வார்கள்.

அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு இணங்க கல்லூரி நிறுவினர்கள் அவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கும்.

இதோ வருடாந்தோரும்  ஆதியும் ராமும் இந்த பரிசினை தட்டி செல்வார்கள். செல்வ செழிப்பு இருக்கிறதாலோ‌ , தன் தாத்தாவின் மருத்துவமனை இருக்கு என்று மிதப்பு எல்லாம் எதுவும் இல்லாமல் படித்தான் ஆதி.

இவனை போலவே தான் ராமும்.. என்ன ஒரு வித்தியாசம் என்றால் , ஆதியை சுற்றி நிரம்ப  பணம் இருக்கிறது . ஆனால் ராமிடம் அதிகமான அன்பும் பாசமும் அவனை சுற்றி நிறைந்திருந்தது.

இந்த அன்பும் பாசமும் தான் ஆதி ராமிடம் நட்பு கரம் நீட்டியதற்கு காரணமாகும்…

அடுத்தநாள் மாலையில் அந்த நிகழ்வு இருக்க , எப்போதும் போலே சோகத்தில் உம்மென்று  அமர்ந்திருந்தாள் வாசவி.

அவள் பக்கத்தில் மோனிகா அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அடியேய், எதுக்கு டி இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க..?” என சிறிது கடுப்புடனே கேட்க

“அதான் நான் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்னு தெரியுதுல. அப்புறம் எதுக்கு கேள்வி கேக்குற நீ ” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

‘இவள மாதிரி ஒரு பீசை நான் பார்த்ததே இல்ல பா. நாலஞ்சு உயிர் கொல்லி வச்சி இருக்கிறவன் எல்லாம் நல்லா தான் இருக்காங்க. ஆனா , நான் இந்த ஒரு உயிர் கொல்லியை வச்சிக்கிட்டு அல்லோல் பட்டுக்கிட்டு இருக்கேன் ‘ என‌ மனதளவில் ஒரு புலம்பு புலம்பி தள்ளினாள்.

“என்னென்னு சொன்னா தானே டி எனக்கு உன்னோட பிரச்சனை தெரியும் . நீ இப்படி அமைதியா இருந்தா எப்படி”

” நான் அமைதியா இருக்கேன்னு தெரியுதுல அப்போ எதுக்கு டிஸ்டர்ப் பண்ற. கொஞ்சம் தனியா விடு ” என முகத்தில் அறைந்தார் போல் பேச

இவளின் குணம் அறிந்த மோனிகா அவளின் செயலை கண்டு கோபம் கொள்ளாமல் பேசினாள்.

” சரி மா தாயே நான் போறேன். நீ இப்படி இயற்கை கூடவே டூயட் பாடு ” என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அந்த நேரம் பார்த்து வந்த ஆதி மோனியை பார்த்து ” என்னாச்சி.?” என்க

” உங்க ரோஸ்க்கு கப்பல் கவுந்துடுச்சி போல. ஒரே சோக கீதம் தான் போங்க  “

” எதுக்கு சோகம்.?”

” அப்படியே உங்க ரோஸ் எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க .அட போங்க னா. அவ‌ எப்படியும் உங்க கிட்ட தான் சொல்லுவா அதை கேட்டுக்கோங்க ” என அவ்விடத்தை காலி செய்தாள்.

அவளை நோக்கி சென்றவன் ,” என் வாசுக்கு என்ன ஆச்சி.? மூட் அப்செட்ல இருக்க மாதிரி தெரியுறாங்களே.?”

” ஆமா ஆதி , மீ அப்செட் தான்..”

” ஏன்னு சொன்னா நானும் தெரிஞ்சிப்பேன்ல ” என்று சொன்ன அடுத்த நொடி அவன் சட்டையை கொத்தாக பிடித்து மூச்சு வாங்க நின்றாள்.

” ஹே! என்ன மா பண்ற நீ.?”

” எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணேன்னு தானே சொன்ன , அப்புறம் எப்படி அந்த ஏவி நல்ல மார்க் வாங்கினான்.”

அடக்கப்பட்ட சிரிப்புடனே ,” அவன் நல்லா படிச்சிருப்பான். அதான் ஸ்கோர் பண்ணிட்டான். “

” நீ ஏன் பண்ணல.?”

” இங்க பாரு டா , யாருக்கு என்ன வருதோ அதை ஏத்துக்கிட்டு தானே ஆகனும் . அவன் மார்க் வாங்கிருக்கானா அதுக்கு நாம சந்தோஷபடனுமே தவிர , இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது “

” நீ என்ன எல்லாமோ சொல்லுற. ஆனா எனக்கு ஏதும் புரியல போ ” என்று அவன் சட்டையிலிருந்து கை எடுத்தாள்.

தன் சட்டையை சரி செய்த ஆதி ,” சரி அதை விடு வாசு மா. நீ நல்ல மார்க் வாங்கி இருக்கிற. எனக்கு எதுவும் ட்ரீட் இல்லையா என்ன.?”

” ட்ரீட் வைக்கனும்மா என்ன வச்சிட்டா போச்சி ” என்று புன்னகைத்தாள்.

பின் , சிறிது நேரம் அவளுடன் பேசி விட்டே வீட்டிற்கு சென்றான் ஆதி.

வீட்டிற்கு வந்தவனுக்கு நாளைய விடியலை நினைக்கும்போதே திக்கென்று இருந்தது.

அடுத்தநாள் மாலை , அனைவரும் கிளம்பி ஆயத்தமாகி ஆடிட்டோரியம் சென்று விட , நித்ய வாசவியும் மோனிக்காவும் கூட அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தனர்.

கூடத்தில் அவளின் கண்கள் அலைபாய்வதை கண்ட மோனிக்கு சிரிப்பாக வந்தது.

” யாரையோ பலமா தேடுறீங்க போலையே மேடம்.?”

“ம்ம்ம் , ஆதியை தேடுறேன். காலையில இருந்து என்னைய பார்க்க வரவே இல்லை.‌ அவனுக்காக தான் நான் இங்க வந்ததே ” பேசியவளின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்கொத்தி நின்றது.

ப்ளாக் பேண்ட் அண்ட் ஒயிட் சேர்ட் வியர் பண்ணி இருந்த ஆதியை கண்டவளின் விழிகளுக்கு வேறெதுவும் தெரியவில்லை.

அவனையே விழிகளால் பார்த்தவளை நோக்கி கையசைத்த ஆதியை பார்த்து மெலிதாக சிரித்தாள்.

” மச்சான்! எனக்கு பயமா இருக்கு டா. இன்னைக்கு எப்படியும் அவளுக்கு தெரிஞ்சிடும் நான் தான் ஏவின்னு. எப்படி ரியாக்ட் செய்ய போறாளோ தெரியல மச்சி “

” விடு மச்சி , கோச்சிப்பா தான் .பட் , உன்கூட பேசாம அவளால இருக்க முடியாது டா. நீ கவல படாத ” என ராம் சொல்ல

” எப்படி ராம் கவல படாம இருக்கிறது. அவ கூட பேசாம என்னால இருக்க முடியாதே ” என சோகமான குரலில் தலையை குனிந்தவாறே சொல்ல

” இது நட்பா.? காதலா ஏவி.?”

” கண்டிப்பா நட்பு கிடையாது டா. அதுல எனக்கு சந்தேகமே இல்லை. முதல் முறை மால்ல பார்த்ததுமே ஏதோ ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு தான் அவளை அன்னைக்கு   கவனிக்க வச்சது. அவ கீழ விழுந்ததும் மனசு பதறிடுச்சி டா . அதுக்கப்புறம் அந்த பீச்ல பார்க்கும் போது அவளோட சிறுபிள்ளை தனமான செயல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதுலயும் அவ கடல்ல கால வச்சி உள்ளே போகவும் என் உசுறே என்ன விட்டு போன மாதிரி இருந்தது. கோபம் கோபமா வந்தது . அதுனால தான் அன்னைக்கு அவளை அடிச்சதே. அவ கூட இருக்கும் போது ஐ ஃபீல் லைட் டா. ஏதோ இத்தனை வருடம் கிடைக்காத அன்பு இவ மூலமா‌ கிடைக்கும்னு தோணுது மச்சி ” என‌ உணர்ந்து கூறினான்.

நண்பனின் பேச்சினை கேட்ட ராம்க்கு நண்பன் காதலில் விழுந்து விட்டது நன்றாகவே புரிந்தது. ஆனால் இது எந்த வகையில் சாத்தியம் என்பது தான் புரியவில்லை.

இவனது காதலுக்கு உயிர்ப்பு இருக்கிறதா இல்லையா என வரும் காலங்களில் தான் தெரியும்.

வாசவியின் கண்கள் ஆதியை மட்டுமே சுற்றி கொண்டிருந்தது. இதில் ஏவியை பற்றி மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

ஃபன்க்ஷன் ஆரம்பமாகிட , முதலில் மேனேஜிங் டேரெக்டர் அடுத்ததாக முதல்வர் எல்லாரும் சிறிது நேரம் பேசிவிட்டு விழாவை தொடங்கினார்கள்.

தொடக்க நடனமாக பரதநாட்டியம் வைத்திருக்க , அது முடிந்தவுடன் பரிசு வழங்கும் விழா தொடங்கியது.

முதலில் ஃபைனல் இயர் மாணவ மாணவிகளிடமிருந்து ஆரம்பித்தது முதல் வருடம் வரையும் நடந்தேறியது.

காலேஜ் டாப் த்ரீ மட்டும் அறிவிக்காமல் இருக்க , வாசவியை தவிர்த்து மற்ற அனைவருக்குமே அது யாரென்று நன்றாகவே தெரியும் . அவர்கள் ஏவி ஏவி என்றே சொல்லியவர்கள் யாரும் அவனின் முழு பெயரை சொல்லவில்லை.

இதோ அவளுக்கு ஆதி தான் ஏவி என்று தெரியும் நேரமும் வந்தது.

முதலில் மூன்றாவது இடம் வந்த ஒரு  மாணவியின் பெயர் சொல்லி அவர்களுக்கான பரிசு தந்தனர்.

பின் இரண்டாவதாக ராமின் பெயர் சொல்லவும் கண்கள் அவனை விட்டு அகலாமலே அவனுக்கான கைத்தட்டலை கொடுத்தாள் வாசவி.

இதனை பார்த்த மோனி நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

அடுத்ததாக அனைவரும் எதிர்ப்பார்த்து நோக்கிய , பெண்களின் கனவு கண்ணனின் பெயரை அழைத்தனர்.

தன் உலகத்தில் இருந்த‌ நித்ய வாசவியை சுயநினைவிற்கு கொண்டு வந்தது அதித்ய வரதன் என்ற பெயர் வாசிப்பு.

அந்த பெயரை கேட்ட நொடி அவள் கண்கள் திகைப்பை காட்ட , ஆதியை பார்த்த படி இருந்தாள்.

ஆதிக்கு தவிப்பாக இருந்தது. அவள் கண்களில் தெரிந்த திகைப்பை பார்த்தவனுக்கு மனம் வேதனையுற்றது.

அவளை பார்த்தவாறே மேடையை நோக்கி நடையிட்டவனுக்கு வாசவியை எப்படி சமாளிப்பது என்ற யோசனை தான்.

இந்த மூன்று வருடத்தில் இந்த முறை தான் , தான் ஏன் முதல் மாணவனாக வந்தோம் என்றிருந்தது. படிகள் ஏற ஏற அவனுக்கு தவிப்பாக இருந்தது.

அவனுக்கான பரிசை வழங்க , வாசவியின் கண்களில் விழி நீர் இப்பவா அப்பவா  என்றிருந்ததை கண்டவனுக்கு அவளை ஓடி சென்று அணைத்து தன் விளக்கத்தை கூற வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அதை எல்லாம் முகத்தில் காட்டாமல் சிரித்த முகமாக ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தான்.

ஏவி தான் ஆதித்ய வரதன் என்று தெரிந்த நொடி அவளால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

தன்னை ஏமாற்றி விட்டானே என புரிந்த நொடி அத்தனை நேரம் இருந்த இலகு தன்னை மாரி ஏதோ நெருப்புக்குள் நிற்பது போல் இருந்தது.

அவளால் அங்கே அமர கூட முடியவில்லை. உடனே மோனிகாவிடம் தனக்கு தலை வலிப்பதாக கூறி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அவளையே பார்த்து இருந்தவனுக்கு , வாசவி வெளியே செல்வதை கண்டவன் திரும்பி நடக்க பார்க்க , அவனை பிடித்து கொண்ட சீஃப் கெஸ்ட் அவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரமெல்லாம் தவிப்போடு தான் அங்கே நின்றிருந்தான்.‌ அவர் என்ன கேட்டார் இவன் என்ன பதில் சொன்னான் என்று எதுவுமே அவனுக்கு தெரியாது. அவனின் எண்ணம் முழுவதையும் வாசவி ஆக்ரமித்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவனை விடவும் , அடித்தோம் பிடித்தோம் என்று அந்த இடத்தை காலி செய்தவன் வாசவியை தேடிச் சென்றான்.

ஆதி அவளை தேடி அலையவெல்லாம் இல்லை . அவனுக்கு தெரியும் அவள் எங்கிருப்பாள் என்று.

நேராக அவர்கள் தினமும் சந்தித்து கொள்ளும் இடத்திற்கு செல்ல , அவனை சோதிக்க விடாமல் அங்கேயே தான் நிலவை வெறித்த படி நின்றிருந்தாள்.

ஒரு ஆசுவாச மூச்சை இழுத்து விட்டவன் ,” வாசு ” என்றழைக்க

கண்களில் நீர் நிரம்ப திரும்பி பார்த்தவள் , அவனை கடந்து செல்ல முயன்றாள்.

அவளின் இடக்கரத்தை பிடித்து” வாசு மா நான் சொல்றதை கொஞ்சம் கேளேன் மா “

” நான் எதுக்கு கேக்கனும் சொல்லு. என்னை ஏமாத்திட்ட தானே நீ. நான் நினைச்சது சரின்னு ஆகிப்போச்சி பார்த்தியா. நீ நல்லவன்னா இருந்திருந்தா எப்பவோ நீ தான் ஏவின்னு என்கிட்ட சொல்லி இருப்ப . பட் நீ சொல்லாம மறச்சி என்கூட பழகி இருக்கல. நீ ப்லே பாய் தான் ” என அவனின் கரத்தை தன் கரத்திலிருந்து விடுவித்தாள்.

” வாசு மா..” கலங்கிய குரலில் அழைக்க

” இனி நீ அப்படி என்னை கூப்பிடாத “

” நான் சொல்றதை கொஞ்சம் கேளு டா மா. நான் வேணும்னு எல்லாம் அப்படி பண்ணல “

” என்னை நீ ஏமாத்திட்டல . வருண விட உனக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனா நீ என்னை.. என்னை ஏமாத்திட்ட ” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது.

” ப்ளிஸ் டா மா அழுகாத. எனக்கு கஷ்டமா இருக்கு டா. எங்க நான் தான் ஏவின்னு சொன்னா பேசாம பொய்டுவியோன்னு பயந்து தான் சொல்லல ” என தன்னிலை விளக்கத்தை ஆதி கொடுக்க

” போ போ நான் இனி உன் கூட பேசவே மாட்டேன். நீ யாரோ நான் யாரோ.‌ இந்த ஆதி எனக்கு வேணாம்.‌ நீ வேணாம் போ ” என்று அழுகையுடனே அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

அவள் சென்ற வழியை பார்த்து கண்கள் கலங்க நின்றிருந்தான் ஏவி என்கிற ஆதித்ய வரதன்.

கல்லூரியில் இருக்கும் அனைத்து பெண்களும் அவனை சுற்ற , அவனோ இந்த பேதை பெண்ணின் பின்பு சுற்றுகிறான்.

இனி அவள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வாளா..??