வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 10

Screenshot_2020-12-18-06-54-30-1-fd382e80

அறைக்கதவை  திறக்க அது திறந்தால் தானே. சத்தமாய்  முயற்சிக்கவும் முடியாது. அவன் எழுந்துவிட்டால்… மீண்டுமாய்  முயற்சித்தாள்,ஹ்ம் ஹ்ம் அவளுக்கு வேறு கழிவறை செல்லவேண்டிய கட்டாயம் வேறு. மீண்டுமாய் கதவில் கைவைக்கப் பார்க்க தானாக  திறந்துக்கொண்டது.

 

உள்ளே காலெடுத்து வைக்க கட்டிலின்  நடுவே சம்மணமிட்டு அமர்ந்திருந்தவன் இவளைப் பார்த்து ‘வா’ என்னும் விதமாய் தலையசைக்க உள்ளே வந்தவள் அவசரமாக கைகளை பின்னுக்கு மறைத்துக்கொண்டாள்.

 

“எங்க போய்ட்ட… இவ்ளோ நேரம் ஆச்சு. எப்படியும் இங்கதானே திரும்ப வருவ அதான் வெய்ட் பண்றேன்.”

 

வீணாவோ முழிக்க,

“சரி கைல என்ன?” மித்ரன் கேட்டிட,

 

“அது ஒன்னுமில்லை.” கைகளை பின்னிருந்து எடுக்காமலே கூறினாள்.

 

“நீயா காட்டிட்டா ஓகே. இல்ல நானா பார்த்து எடுத்தேன்னா திரும்ப தர மாட்டேன்.”

 

அவனிடம் எப்படிக்கட்டுவாள்… ‘ஒன்னில்லை’ என்றே ஒப்பிக்க அவனோ சட்டென கட்டிலை விட்டு இறங்கி இவளருகே வர,இவளும் பின்னாகி போக அவன் கோபம் அதிகரிக்க துவங்கியது.

 

அவளை நெருங்க சட்டென  பின்னிருந்த கைகளை உயர்த்தி தன் முகத்துக்கு நேரே காட்டி முகத்தினை மறைத்துக்கொண்டு அழத்துவங்கி விட அவள் கைகளில் இருந்ததைக் கண்டவன் அப்படியே நின்றுவிட்டான்.

 

அவனிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வராது போக நிமிர்ந்தவள் அவளையே பார்த்திருப்பைக்கண்டு  குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டவள் அரைமணிநேரமாவது கடந்திருக்கும் வெளியே வர. வந்தவள் அவனைத் தேட அவனோ சென்றிருந்தான்.அவள் அசதியில் அங்கேயே உறங்கிவிட்டு மதியம் போலயே விழித்துக்கொண்டாள். விழித்தவள் கண்டது தன் அருகே இவளைப் பார்த்தவாறு உறங்கிக்கொண்டிருக்கும் மித்ரனையே. பயத்தில் அவசரமாக கட்டிலை விட்டிறங்க அவனும் எழுந்துகொண்டான்.அவள் அவனை பயத்தோடு பார்க்க உணவு மேசையை கட்டியவன் உண்ணுமாறு கூறிவிட்டு ‘சாரி’ என்றான்.எதற்காக கூறினான் என்பதை புரிந்துக்கொண்டவள் அவனை கணக்கில் கொள்ளாது  உணவுமேசையில் அமர்ந்து உண்ண துவங்கினாள்.

 

அவள் பயந்து பார்க்கும் பார்வையை விட கோபமாய் பார்க்கும் பார்வை  அவனை ஏனோ வாட்டியது. உண்டுக்கொண்டிருப்பவளுக்கும் இவன் என்ன ரகம் என்றே புரிந்திட முடியவில்லை.முதல் மாதம் அவனை நினைத்து பயந்தே முடித்திருந்தாள். இப்போது கடந்த மூன்று நாட்களாக அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக  இருந்தது.அவனுடைய மேசையில் இருந்த அவன் கோப்புகளை படித்துப்பார்த்தவள் அவன் பெரியதொரு ஆடையகம் நடத்துபவனாகவும், பிரபலமான ஒருவனாகவும் இருக்கவேண்டும் என்பதைக் கண்டுகொண்டாள்.

 

ஆனால் இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்.அவன் முகமே கூறுகிறதே  இதெல்லாம் அவன் பழக்கம் இல்லை என்று. ‘என்னாலையும் வெளியில் செல்ல முடியவில்லை. நான் வெளியில்  சென்றாலாவது இவனுக்கு வேண்டியவர்களோடு பேசி சொல்லலாம்.’ அவள் யோசிக்க அவள் மனமோ,

‘முதலில் உன் வீட்டிற்கு செல்லும் வழியைப்பார்’ என்றிட வீட்டின் நினைவு வர ‘அக்கா என்ன செய்கிறாளோ, அப்பா,பாட்டி திட்டினாலும் நான் இல்லாம ரொம்ப பயந்திருப்பாங்க எப்படியும் இவன் கூட சமாதானமாக பேசி போக வேண்டும்’ என்று  நினைத்துக்கொண்டாள்.

 

உண்டு முடித்தவள் எழுந்து அவலைறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டாள். அவனின் எந்த சத்தமும் வரவில்லை. பின் சிறிதுநேரம்  செல்ல அவனறையில் பொருட்கள் உடையும் சத்தம் கேட்க வீணாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது.மெதுவாக எழுந்து இவள் அறைக் கதவை திறந்து பார்க்க அவனறையில் இருக்கும் பொருட்கள் எல்லாம்தலைகீழாக கிடந்தது. அவன் கைகள் இரண்டும் ஓங்கியபடி  கையில் அவனது மடிக்கணினி இருக்க இவளைக் கண்டவன் ஓர் நொடி அவள் முகம் பார்த்து பின் அதனை கட்டிலில் போட்டான்.

 

வீணா வியப்புடன் பார்த்தாள். ‘என்னைப் பார்த்ததும் கோபம் தணிகிறது, என்னதான் செய்கிறான், அர்த்தமின்றி என்னை வேறு வதைக்கிறான்.’

 

அப்படியே கட்டிலில் அமர்ந்தவன் கைகளைக் கோர்த்துக்கொண்டு நிலத்தை பார்த்து,

“உனக்கு கூட என்னை பிடிக்கலல?”

 

இவளுக்கு சரியாக அவன் கூறியது  விளங்க வில்லை.

“என்ன? ” வீணா கேட்கவும்,

அவளை நெருங்கியவன் அவளை இடையோடு வளைத்து அவள்  கன்னத்தை தன் ஒற்றைக்கையால் அழுந்த பிடித்தவன்,

 

“நல்ல குடும்பப்பெண்ணாட்டம் உடுத்தி  முகத்தையும் அதற் கேற்றாற் போல வச்சிருக்க உனக்கே என்னை பிடிக்கல. அவளும் அப்படித்தானே இருந்தாள். என்கூடவே எனக்கு பிடிச்ச போல இருந்தவள், திடிர்னு என் மேல  இருந்தது லவ்வே இல்லையாம்,ஜஸ்ட் பழகினாளாம்…சொல்றா.நீ கூட பாரு ஒரு பயமே இல்லாம என்கூட தைரியமா ஒரு அறைக்குள்ள என்கூட இருக்க. என்னை விட்டு போகணும்னு கூட தோணாம.’

 

‘இதுவே ஒரு நல்ல பொண்ணா இருந்தா தப்பிச்சு போகத்தான்  பார்ப்பா, இல்ல இவ்வளவு நாளைக்கும் அவளை ஏதாச்சும் பண்ணிப்பா. கரெக்டா?”

 

அவளையே கேட்க இவள் என்சொல்வாள். “என்னை நல்ல பொண்ணுங்களுக்கு பிடிக்காதா? ஏன்  நான் நல்லவன் சுட்டிதானே, அதான் இப்போ கெட்டவன் ஆகிட்டேன்ல. ஒரு பொண்ணுகூட தனியா இருக்கேன். நம்மளுக்கு தான் கல்யாணமே ஆகலை. ஒன்னுமே நடக்கல. ஆனா வெளில என்ன சொல்வாங்க… நானோ நீயோ சொன்னா நம்புவாங்களா இல்ல ல்ல? அப்போ நான் இப்போ கெட்டவன் தானே. பொண்ணுங்களுக்கு இப்டி இருந்தா தானே பிடிக்குது.’

 

‘ உனக்கு பிடிக்கலைன்னா என்ன ” கூறியவன், அவளை விடுவிக்க நிலைத் தடுமாற கீழே விழுந்தாள் வீணா. ஏற்கனவே வயிற்றுவலியால் அவதிப் பட்டுக்கொண்டிருந்தவள் இவன்  செய்கையில் இன்னுமாய் சோர்ந்துபோனாள்.

 

சிறுது நேரத்தில் கிளம்பி சென்றும்  விட்டான். வீணாவிற்கு என்ன செய்வதென்றே புரியாநிலை.

 

‘அவன் கூறுவதுபோல நான் தப்பானவளா அதுதான் அவனோடு இருக்கிறேனா? அவன் கூறியதுபோல நான் என்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமோ…கடவுளே வெளியில்  சென்றால் என்னவெல்லாம் கேட்க வேண்டி வருமோ என்னை தப்பானவளாகவே நினைத்திடுவார்களோ ‘

 

‘ச்சே ச்சே வீட்ல அப்டில்லாம் நினைக்க மாட்டாங்க. என்னைப்பற்றி அவங்களுக்கு தெரியும்.. நான் அப்படி பட்ட பெண்ணில்லைன்னு. இப்போவும்  என்னை தேடிட்டே இருப்பாங்க.’

 

வீணா பலதையும் யோசித்துக்கொண்டு இருக்க ஒன்று மட்டும் புரிந்தது.மித்ரன் காதல் கொண்டு அப்பெண்ணால் அவன் மனம் நல்ல வலியை அனுவித்துக்கொண்டிருக்கிறது.ஆனால் ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறான். அவளுக்கு புரியவே இல்லை. இப்படியே நாட்கள்  செல்ல வீணா அவனோடு பேச பலமுறை முயற்சித்தும் தோல்வியே கண்டாள்.அமைதியாக சில நாள் இருந்தான்,சிலநாள் உறக்கத்தில் இருப்பவளை எழுப்பி ‘அவனை பிடிக்கிறதா?’ கேட்டான், வார்த்தைகள் கொண்டு காயம் செய்தான்.

*****

வீணா அவனோடு அவ்விடம் வந்து கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆகி இருந்தது.மித்ரன் மாலை வந்து உறங்கியவன் காலை நேரம் கடந்து பகலை தொடும் நேரமே எழுந்தான். அவன் எழ வீணாவோ அவனருகே இருந்த மேசையில் அவனுடைய புத்தகங்களில் ஒன்றை எடுத்துப்படித்துக் கொண்டிருக்க, இவன் எழுந்ததும் அதனை மூடி விட்டு அவள் அறையினுள் புகுந்துக்கொண்டாள்.

அவனடித்து, ஏசி, பேசி காயம் செய்து விட்டு செல்ல இவளும் அதற்கு பழக்கப்பட்டு விட்டாள் போலும்.

 

மித்ரனும் சற்று சோர்வாகவே  உணர்ந்தான்.அப்படியே கட்டிலே  கதியென்று கிடந்தான் இரவு வரையிலும். வீணாவும் எத்தனையோ முறை பார்க்க அவன் எழும்புவதாக இல்லை. அருகே சென்று பார்க்கவும்  பயம் எப்போ பதுங்குவான் பாய்வான் என்று தெரியாதே. அவனை அப்படி பார்க்கவும் மனதிற்கு ஏதோ நெருட எழுந்து அருகே சென்றாள். நன்றாக  உறங்கிக்கொண்டிருந்தான்.

 

தலையணையை அணைத்து அதில்  தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்தான்.கட்டிலின் கீழே அமர்ந்தவள் அவன் முகம் பார்க்க  பார்த்தவள் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

‘உன்னால கோபப்படவே தெரில வீரா… சின்னப் பையனாட்டம் முகத்தை வச்சிட்டு எதுக்கு இவ்ளோ வில்லத்தனம்  பண்ற. உனக்கு சுத்தமா இது செட்டாகவே இல்ல. உன்னை ஒருத்தி ஏமாத்துனா அவளை டார்ச்சர் பண்றதை விட்டு என்னை எதுக்குடா இம்ச பண்ற?’

 

மித்ரனின் முகம் பார்த்தவாறே மனதில் பேசிக்கொண்டிருந்தாள்…அவள் அக்காவிடம் அவனுக்காக ஒரு வில்லன் வடிவத்தில் காதலன் கேட்டது நினைவுக்கு வர தன்னையே நொந்துக்கொண்டாள். நல்லவன் ஒருத்தன் கெட்டவனா மாறி, சேச்சே மாறுவதாக நினைத்து இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்றால், உண்மையாய் அவன் கெட்டவனாகவே இருந்திருந்தால் அவன் மனதில் காதலோ காதலெங்கே குறைந்தது மனிதம் எனும் எண்ணமாவது இருக்குமா என்பது சந்தேகம் தானே. நினைத்தவள் இவனையே பொறுத்துக்க முடில, இதுல வில்லனா ப்பா சாமி எனக்கு யாரும் வேண்டாம் என்ற முடிவுக்கு  வந்துவிட்டாள்.

 

இதுல வேற ‘உனக்கும் என்னை பிடிக்கலையா பிடிக்கலையான்னு’  கேட்டுட்டே இருக்க? யாருக்குடா உன்னை பிடிக்காது? உன்னை பார்க்கப் பார்க்க பிடிக்குது. எனக்கு  இப்படி தான் நீ அறிமுகமமாகனுமா? ‘

 

மனதோடு பேசிக்கொண்டிருந்தவள் உதடுகள் அதனை மெல்ல முணுமுணுக்க அவன் செவி வழியே அவனை அறியாது அவளுமே அறியாது அவன் மனதில் நுழைந்தது.

 

” உன் மனசுல இருக்க கஷ்டத்தை யார்கூடவாவது பகிர்ந்துக்க வீரா… உன்னால அதுக்கப்புறம் நிம்மதியா மூச்சு விட முடியும். சீரா மூச்சு விடக்கூட நீ யோசிக்கிற வீரா…

இப்படியே இருதேன்னா உன்னால இதை விட்டு மீள முடியாது. உன் மனசளவுல பெரியதா இருக்க பிரச்சினை மிக சின்னதாகவே  தோணுது எனக்கு. மனம் திறந்து பேசிட்டா எல்லாம் சரியா போயிரும். உன்னை நேசிக்கிற உன் அன்பை மொத்தமா வாங்கிக்க உனக்காகவே ஒருத்தி வருவா நீ கண்டிப்பா நல்லா இருப்ப. இவ்ளோ பெரிய தொழில் பண்ற உன் மனசை பகிர்ந்துக்க  உனக்கு யாருமில்லையா? இவ்ளோ என்கூட காரணமே இல்லாம சண்டை போடற, டார்ச்சர் பண்ற எங்கிட்ட கூட பேசலாம் …”

 

பேசிக்கொண்டே அவள் கை அனிச்சையாக அவன் தலை முடியை வருட சிலநொடிகள் அவனே உணராது அதனை அனுபவித்தவனோ பட்டென அவன் இரு கண்களையும் திறந்தான்.

அவள் அவன் கண்கள் இரண்டையும் பார்த்த நொடி பயந்து கைகளை இழுத்துக்கொள்ள முன் அவனோ அவள் கைகளை பிடித்துக்கொள்ள பயத்தில் வீணா கையை இழுத்துக்கொள்ள அவன் விடுவானா…

 

அவள் கண்களை உற்று  நோக்கியாவன் சில வினாடிகள்  அவளையே பார்த்திருந்தான்.பின்  மீண்டுமாய் அவள் கைகளை விடுவித்து விட்டு மீண்டும் உறங்கிப்போனான். வீணாவின் உடல் பயத்தில் வியர்த்து நடுங்கவே ஆரம்பித்து விட்டது.

‘என்ன காரியம் செய்கிறேன். அவள் கைகளை பார்த்தவள் எப்படி அவன்  தலைகோதியது எனை அறியாமலே நிகழ்ந்த ஒன்று, என் மனம் இவனை விரும்புகிறதா?’ நெஞ்சில்  கைவைத்துக்கொண்டவள்

‘அது சும்மா எதேர்ச்சியா பண்ணது’  தன்னைத்தானே கூறிக்கொண்டவள் எழுந்துக் கொள்ள பார்க்க அவன் உடலில் நடுக்கத்தை உணர்ந்தாள்.

 

அவன் கைகள் மிக குளிர்ந்து இருக்க  நெற்றிதொட்டுப்பார்க்க அனலாய் கொதித்தது. என்ன செய்வதென்றே  வீணாவுக்கு புரியவில்லை. எழுந்தவள் அவனை எழுப்ப அவனுக்கோ கண்களை திறக்கவும் முடியவில்லை. அவசரமாக துணியொன்றை எடுத்து  ஈரப்படுத்தி அவன் நெற்றிக்கு வைத்தவள் அன்று தலைவலி மாத்திரை இருந்தது நினைவுக்கு வர அதனை எடுத்து வந்தாள். எப்படி கொடுப்பாள் அவனை எழுப்ப வேண்டுமே.என்ன செய்ய அவனை எழுப்ப அவன் அசையவும் இல்லை. கட்டிலில் ஏறி தட்டுத்தடுமாறி அவனோடு விழுந்து பிரண்டு எப்படியோ அவனை சாய்த்து அமர வைத்தவள் அவன் வாயில் இரு வில்லைகளை இட்டு தண்ணீர் புகட்ட அவளுக்கோ மலையை பிரட்டி முடித்த களைப்பு.

அவனது அலைபேசியை தேட அதைக்கூட அவன் அவனது  வண்டியிலேயே வைத்துவிட்டு வந்திடுவான் என்பதை அறியாது தேடியே களைப்புற்றாள்.

 

கதவை திறக்க உடைக்க அதற்கும்  வழியில்லை, அவனோடு இருந்த மாத்திரையை சரியாக நேரத்திற்கு கொடுத்து இருக்கும் உணவை  அவனுக்கே ஊட்டிவிட்டு இரண்டு நாட்களாக அவனை தாயென பார்த்துக்கொண்டாள்.இரண்டு நாள் சென்றே சற்று தெம்பாக உணர்ந்தான்  மித்ரன்.

இவ்விரண்டு நாட்களும் வீணாவுக்கு அவள் மனதோடு போராட்டம். அவன் குழந்தை என இவள் மடியில் உறங்கிக்கொண்டு உறக்கத்திலேயே அவன் வலிகளை பகிர தலைகோதி அவனை  அரவணைத்துக்கொண்டாள். பல ஆறுதல் கூறினாள்.

 

அவன் செவி வழி நுழைந்ததா பார்க்கவில்லை, ஆனால் ஏதேதோ பேசினாள். அவனும் கண் மூடிக் கேட்டுக்கொண்டிருந்தான்.இரண்டு நாட்களின் பின்னர் அவன் சென்றிட  வீணாவுக்கோ அவளறைக்கு செல்லவே முடியவில்லை. மிகவும் சோர்வாகி விட்டாள். சரியாக உண்ணவில்லை. இருந்த உணவையும் அவனுக்கு கொடுத்து அவனை எழுப்பி விட்டு  பசிக்கும் போதெல்லாம் தண்ணீரை அருந்தி பசியாற்றிக்கொண்டிருந்தாள்.

 

மித்ரன் சென்று மேலும் இரண்டு நாள் கடந்து திரும்பி வந்தான்.வீணாவும் ஒரு முடிவுடன் இருந்தாள். ‘அவனோடு பேசி  எப்படியாவது போய்விட வேண்டும்.இப்படியே இருப்பது இருவருக்குமே ஆபத்து. எனக்கு என் வீடு உள்ளது.இவன் நிலை என்ன  இப்படியே விட்டால் இவன் கண்டிப்பாக இன்னும் மனம் பதித்து விபரீதமாகிவிடும், நல்ல நிலையில் இருக்குமொருவன் வீழ்ந்துவிடக்கூடாது.’

 

அவன் நலனையே  யோசித்துக்கொண்டிருக்க உள்ளே நுழைந்தான். மற்ற நாட்களில் இரவு  எட்டு மணிப்போல் வருபவன் அன்று மாலையே வந்திருக்க வீணாவோ அவன் கைலியையும் அவன் டீஷர்டினையும் அணிந்திருந்தாள்.அவள் உடைகள்  அவன் கட்டிலில் இருக்க அவசரமாக எடுத்துக்கொண்டு அவளறைக்குள் புகுந்தவள் அவள் உடையை மாற்ற மித்ரன் கதவைத் திறக்க முயன்றான். இவளோ அவசரமாக பாவாடையை  மட்டும் அணிந்துகொண்டு மேலே அவனின் ட்ஷிர்ட் உடுத்தியிருக்க கதவைத் திறந்தான். பின் அவளைப் பார்த்ததும் மீண்டும் அவனறைக்குச் சென்று விட இவளும் அவன் பின்னோடு சென்று,

 “எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும் “

அவனோ இவளை பொருட்படுத்தாது அவன் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, இவளும் விடாது கேட்டுக்கொண்டே  இருந்தாள்.ஒரு கட்டத்தில் இவள் பேச்சைக் கேட்கமுடியாது அவளைப் பார்த்தவன்,

“சொல்லு” என்பதாய் பார்க்க ,

 

“எனக்கு வீட்டுக்கு போகணும், என்னை ரொம்பத்தேடுவாங்க. அதோட நீங்க இப்படியே இருந்தா ரொம்ப ப்ரோப்லேம் ஆகிரும் ப்ளீஸ் நல்ல டாக்டரா  பார்க்கலாம். ட்ரீட்மென்ட் பண்ணா கண்டிப்பா உங்க மைண்ட் ரிலாக்ஸாகி உங்களுக்கு இதிலுருந்து ரிலீவ் கிடைக்கும். கண்டிப்பா உங்கள நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் “

அவள் பேசும் வரை பார்த்துக்கொண்டே இருந்தவன் அவள் நிறுத்தியதும்  அவன் பார்த்த பார்வையில் பயந்து ஓரடி பின்னெடுத்து வைக்க இவனும் அவளை நெருங்கியவன்,

 

“அப்போ நீ என்னை பைத்தியம்னு சொல்ற அப்படித்தானே?”

அவள் அவனை அன்னார்ந்து பயத்தோடு விழி விரித்துப் பார்க்க ,

 

“சொல்லுடி எனக்கு பைத்தியமா? ” அவன் கத்த,

” அச்சோ அப்டில்லாம் இல்ல. நீங்க ரொம்ப நல்லவங்க அப்டில்லாம் இல்லை… ப்ளீஸ் நான்  சொல்றதைக் கொஞ்சம் கேளுங்களேன்… “

 

“எதுக்கு நீ சொல்றதைக் கேட்கணும்… ஹ்ம் யாருடி நீ எனக்கு எதுக்கு கேட்கணும்னுகிறேன்…”

 

“உங்களுக்கு நான் யாருமில்லை தான். நீங்க என் பேச்சைக் கேட்கவேணாம். எதுக்கு என்னை இங்க வெச்சிருக்கீங்க. என்னை விட வேண்டியது தானே?”

 

“முடியாதுடி உன்னை விடமாட்டேன். நீ எனக்கு வேணும்.”

கூறியவாறு அவளை நெருங்கியவன் அவளை இடையோடு சேர்த்துக்கொண்டான்.

 

“வீரா…என்ன பண்றீங்க “

அவன் கோப்புகளில் அவன் பெயரைப் பார்த்தவள் அன்று முதல் அவனை  ‘வீரா’ என்றே அழைத்தாள்.

 

“அதான் நீ எனக்கு யாருமில்லைனு  சொன்னேல்ல.இதையே இப்போ நீ வெளில போய் சொன்ன நம்புவாங்களா இல்லைல? “

 

“நீங்கதான் அப்படி…”அவன் தானே  முதலில் அப்படிக் கூறினான். அதை இவள் கூறப்பர்க்க,பேச விட்டால்தானே.

 

“நீ இனி என்னவள் மட்டும் தான் அவளை தன்னோடு இன்னுமாய்  சேர்த்துக்கொண்டு மித்ரன் கூற அவன் செய்கை வீணாவிற்கு மனதில் பெரும் பயத்தை விளைவித்தது. அவன் நிலை  நன்றாகக் புரிந்துக்கொண்டவள்,

 

“வீரா நீங்க இப்போ சுயமா இல்லை. ப்ளீஸ் பிறகு இதை நினச்சு ரொம்ப  கஷ்டப்படுவீங்க, வேணாம் நீங்க ரொம்ப நல்லவங்க. நீங்களே உங்களை மன்னிக்க மாட்டீங்க ப்ளீஸ் வேணாமே”,  அவன் செய்கைகளை தடுத்துக்கொண்டே கூறினாள்.அவன் கைகள் அழுத்தத்தோடு அவளுக்கு வலிக்க எல்லை மீறிச்செல்ல மனவலியோடு உடல் வலியும் சேர்த்து அவனை தன்னால் முடிந்தமட்டும் பலம் கொண்டு அவனை தள்ளி விட்டாள்.

நான்கைந்தடி பின்னகிப் போனவன் நிலைத் தடுமாறி விழப்பார்க்க இவளும் 

அதற்குள் அறைக்கதவை திறக்க  முற்பட்டாள்.கதவு திறந்துகொள்ளாமல் இருக்க திரும்பி அவனைப் பார்க்க இவளை நோக்கி மித்ரன் வருவதைக் கண்டவுடன் வேண்டாம் என தலையை இடவலமாக ஆட்டியவள் பின்னாகி அடியெடுத்து வைக்க அவனும் அவளை நோக்கி முன்னேறினான்.

 

இவளோ அவளிருந்த அறையினுள் நுழைந்துகொள்ள இவளை மித்ரன் எட்டிப்பிடிக்க அவ்விடம் கொட்டியிருந்த  நீரில் வழுக்கி மித்ரனுடன் வீணாவும் விழ மித்ரனின் தலை பலமாக பின்னாக தரையில் அடிப்பட அவன் மேல் விழுந்து மறுபக்கம் சரிந்த வீணாவின் நெற்றி சுவரில்  இடித்திக்கொண்டது. ஏற்கனவே காயப்பட்டிருந்த இடத்திலேயே பட சரியாக மருந்திடாமல் ஆராமல் இருந்த காயம் பிளந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.

சிறிது நேரம் வழியில் வலியில் அப்படியே செய்வதறியாது இருந்தாள். பின் மெதுவாக எழுந்து அவனைப் பார்க்க கண் மூடிக்கிடந்தான். அவனை மடிதாங்கியவள் அவனை எழுப்ப அவனோ மூர்ச்சையாகி இருக்க செய்வதறியாது அழுதுகரைந்தாள். பின் அவன் பின்னந்தலையிலிருந்து வழிந்த இரத்தத்தை உணர்ந்தவள் நன்றாக பயந்து போக,அவனை மெத்தையில் கிடத்தியவள், மெத்தைக்கடியே வைத்திருந்த அவள் சான்றிதழ்கள் அடங்கிய பையினை எடுத்துக்கொண்டு அவனைப் பார்த்தவள்,

 

“வீரா யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு சீக்கிரமா வரேன். அதுவரைக்கும் கடவுளே நீதான் துணை இருக்கணும் “என்று அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் அவள் நெற்றிக்காயதினையும் பொருட்படுத்தாது அறை கதவினை மித்ரனின் காட்சட்டை பாக்கெட்டில் இருந்த சாவியினைக்கொண்டு திறந்தவள் அது மூடு படாமல் இருக்க இடையே காகிதமொன்றை மடித்து வைத்தாள். பின் அவசரமாக கீழிறங்கி வாயிட் கதவையும் திறந்துகொண்டு வெளியே வர அடைமழை அவளை வரவேற்றது.

 

என் செய்வாள்… வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த மித்ரனின் ஜீப் வண்டியை தாண்டி சென்றவள், ‘மீண்டும் உள்ளேயே சென்றிடலாமா?’ என்று யோசித்து மீண்டும் யாரும் உதவிக்கு வருவார்களா என நடக்க தொடங்கினாள்.அடை மழை, மாலை நேரம் வண்டிகளும் அவ்வளவாக இல்லை. இவள் வந்தப் பாதை பிரதான பாதையை அடைய அதில் ஒருசில வண்டிகள் சென்று வந்துக் கொண்டிருந்தன. பாதையின் மறுபக்கம் மாறி அங்கே இருந்த ஓர் மரத்தின் அருகே போய் நின்றுக்கொண்டாள்.

நெற்றிக்காயம் வலியெடுக்க  ஆரம்பிக்க சரியாக உண்ணாமல், உறங்காமல், உடல் வலியும் சேர்த்துக்கொள்ள மிகவும் சோர்வாகவே உணர்ந்தாள். கடினப்பட்டு தன்னை திடமாய் இருக்க மனதோடு போராடி அவன் உயிருக்கு ஏதும் ஆகிட வேண்டாம் எனக் கடவுளை வேண்டிக்கொண்டு அவள் நடந்துவந்தப்பாதையையும், உதவிக்கு யாரும் வருவார்களா என இப்பாதையையும் குளிரில் நடுங்கியவண்ணம் பார்த்திருந்தாள்.

 

அப்போது தூரத்தில் இவள் இருக்கும் திசை நோக்கி வந்தது கிருஷ்ணாவின் ஜீப் வண்டி.

 

கடந்து வந்த துயர் நாட்களின் நினைவில் கண்களில் நீர்வழிய அதனை துடைத்துக்கொண்டு மீண்டாள். மீண்டவள் அன்று அந்த ஜீப் வண்டியைக் கண்டு பயந்ததை எண்ணி இதழோரம் ஓர் புன்னகை.அன்று அவன் வந்திராவிட்டால் அவள் நிலை, மித்ரனின் நிலை…

நினைத்தவள் இறைவனுக்கு நன்றி கூறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!