வில்லனின் வீணையவள் அத்தியாயம் 14

Screenshot_2020-12-18-06-54-30-1-161606c9

Epi 14.

சட்டென்று கதவு மூடிக்கொள்ளவும் பயந்தவள்,அக்கதவை பற்றி தெரியும் என்பதால் அவசரமாக திறந்துப்பார்க்க அதுவோ திறப்பேனா என்று அடம் பண்ணியது.

‘அச்சோ! இது வேற. சரி செக்யூரிட்டி வரச்சொல்லி திறந்துக்கொள்ளலாம் ‘ என்றெண்ணியவள் அவளிருந்த அறை அதனோடு பிணைந்த நினைவுகள் என அசைப்போட்டப்படியே பதினைந்து நிமிடங்கள் போல கடத்தியவள் நேரமாவதை உணர்ந்து, காவலாளியை அழைக்க தொலைபேசியெடுக்க அது வண்டியிலேயே வைத்து விட்டு வந்திருந்தாள்.

‘அச்சோ! அந்த ஆளு வேற பத்து மணியாகும்னாரே என்ன பண்றது?’

 

கதவைத் தட்டிப்பார்க்க அந்த அறை (soundproof) ஒலித்தடை செய்யப்பட்டிருக்க இவள் தட்டுவது கேட்கவில்லை.வீணா வீட்டுக்கு வர தாமதமாகவும் வாசுகி அழைத்து பார்த்திட அவள் அலைபேசியும் எடுக்கப்படாமலிருக்க,

 

“என்னங்க பட்டு இவ்ளோ நேரம் வராம இருக்க மாட்டாங்க, கிச்சாவுக்கு பேசி என்னனு பார்க்க சொல்லுங்களேன்.”

 

“பதட்டப்படாத வசு இப்போ கிருஷ்ணாவ பேசலாமா, இரு மித்ரனுக்கு கால் பண்ணி பார்க்கலாம். கண்டிப்பா அவனுக்கு தெரிஞ்சிருக்குமே.”

 

“அட ஆமால்ல நான் மறந்தே போய்ட்டேன். இருங்க நானே பேசுறேன்.”

 

வாசுகி மித்ரனுக்கு அழைக்க இரண்டு முறை அலைபேசி அடித்து ஓய்ந்தும் எடுக்கவில்லை.

 “என்னங்க இவன் எடுக்க மாட்டேங்குறானே.”

 

வாசுகி கூறிக் கொண்டிருக்கவுமே அந்தப்பக்கம் மித்ரன் திருப்பி அழைத்தான்.

“ஹலோ ம்மா, சாரி நல்லா தூங்கிட்டேன். என்ன இத்தனை வாட்டி கால் செய்திருக்கீங்க…?

 

“சாரி டா மித்ரா, நம்ம பட்டு இன்னும் வீட்டுக்கு வரல, ஈவினிங் பேசி கிளம்புறேன் சொன்னா, அப்புறம் அவசர வேலை ஒன்னு முடிச்சிட்டு கிளம்பிருவேண்ணா. ஆனா இன்னும் வரலடா. “

 

“சரிம்மா எங்க இருக்காங்கன்னு  கேட்கலாமே?”

 

“மித்ரா அவ போன் ரிங் போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்குறா டா.”

 

“சரிம்மா நான் பார்த்துட்டு என்னனு இன்னும் பத்து நிமிஷத்துல கால் பண்றேன் ஓகே வா, டென்ஷன் ஆகாம இருங்க.”

 

மித்ரன் பகல் நடந்த நிகழ்வோடு அப்படியே வீட்டுக்கு திரும்பியிருந்தவன் அப்படியே உறங்கியிருந்தான். எழுந்து முகம் கழுவி வீட்டுக்கு உடுத்தியிருந்த அரைக் காட்சட்டை டீஷர்ட் சகிதம் கிளம்பியவன், தனக்கு பகல் அழைத்து பேசிய முகமையாளர் மாலை இரண்டு அழைப்புகளை எடுத்திருப்பதைக் கண்டவன்,அவருக்கு அழைத்தான்.

 

“என்ன ரவி, கால் பண்ணிருந்தீங்க என்னால அட்டென்ட் பண்ணமுடில.”

 

“பரவால்ல சார்,ஈவினிங் நம்ம மாலுக்கு வந்து உங்ககிட்ட பேசிக்கலாம்னு இருந்தேன், வீணா மேம் நீங்க கிளம்பிட்டதா சொன்னாங்க, கண்டிப்பா இன்னைக்கே சரி பார்க்கணும் அதான் அவங்களே நம்ம குடோன் போய் பார்க்குறேன்னு சொன்னாங்க. அங்கேயும் ஒர்க் முடிஞ்சதுன்னு கொஞ்சம் முன்னாடித்தான் பேசி சொன்னாங்க.”

 

“ஓஹ், ஓகே ரவி கொஞ்சம் இன்னைக்கு உடம்புக்கு முடில அதான், சரி காலைல பேசிக்கலாம்.”

 

வீணா குடோன் சென்றிருப்பாள் நினைத்துக்கொண்டவன், ‘இன்னும் அங்கிருந்து இன்னும் கிளம்பல போலயே.’

 

யோசித்தப்படியே கிளம்பியவன் குடோன் வந்தடைய வாகன நெரிசலோடு பத்து மணியாகிவிட்டது.

வாசுகிக்கு அப்போதே அழைத்து அவள் வேலையில் தாமதமாகுவதாகவும் அவனே அழைத்து வருவதாகவும் கூற, சரி என்றுவிட்டனர்.

 

வீணாவிற்கு பசி வேறு. பகலும் சாப்பிடாததால் மயக்கம் வரும் போல இருக்க அடிக்கடி தண்ணீரை மட்டுமே குடித்துகொண்டிருந்தாள். திடீரென இவள் குளியலறைக்குள் சென்றிருக்கும் போது அதன் யன்னல் வழியே இருவரது பேச்சுக்குரல்கள் கேட்டது, குடிப்பதற்கு ஏற்பாடு செய்வதுபோல.

‘வாயிலில் ஒருவன் தானே இருந்தான், அவனோடு தங்க துணைக்கு இன்னும் யாரும் அழைத்து வந்திருப்பானோ?’

தான் உள்ளிருப்பது தெரிந்தால்’, யாரையும் நம்பி அழைக்கவும் பயந்து அப்படியே இருந்து விட்டாள்.

 

‘இந்த இடமே என்னை சிக்க வைக்கவேன்னு கட்டின இடம் போல.ச்சே போனை வேற வச்சுட்டு வந்துட்டேன்.’

 

நேரம் செல்ல, வீட்டில் தன்னை தேடுவார்களே,என்ன செய்யலாம் யோசித்தப்படியே அமர்ந்திருந்தாள். அப்படியே கட்டிலில் உறங்கியும் போய்விட நேரம் பத்தை தொட்டிருந்தது.

 

மித்ரன் வண்டியை விட்டிறங்கவும் அருகே ஓடிவந்த காவலதிகாரி,

 

“சார் ஏதும் பிரச்சினையா ?” என்று கேட்டிட,

“பிரச்சினைனா தான் வரணுமா?”

கேட்டவாறே மித்ரன் வண்டிவிட்டுறங்கினான்.

 

“அப்டில்லாம் இல்லை சார், எப்போவும் கிருஷ்ணா சார் தான் வருவாங்க, ஈவினிங் வீணா மேடமும் வந்தாங்க அதான்…”

 

“ஓஹ்! சும்மாதான். இந்தப்பக்கமா வரவும் அப்படியே பார்த்துட்டு போகலாம்னு.”

 

“சரி சார், வாங்க போகலாம்.இவர்கள் பேசியப் படியே வர உள்ளிருந்து தள்ளாடியப்படியே வந்த ஒருவன்,

 

“டேய், என்னடா பொண்ணோட செப்பல் ஒன்னு உள்ளே இருக்கு, யாரோடது  என்னை ஏமாத்தணும்னு நினைக்காத அக்காட்ட சொல்லிருவேண்டா…”

 

மித்ரன் ஒன்றும் கூறாது அவனையே பார்த்துக்கொண்டிருக்க,

 

‘இவன் வேற நேரம் காலம் தெரியாம ‘

கவலாளி புலம்புவதும் மித்ரன் காதில் கேட்டது.

 

“சார் அவன் கொஞ்சம் ஓவரா உள்ள விட்டுட்டான் சார்.அதான்,” என்று தலை தாழ்த்திக் கூற,

 

“உங்களை மட்டும் வேலைக்கு வச்சிருக்கதா தான் கிருஷ்ணா சொன்னதா நினைவிருக்கு. இது யாரு புதுசா?”

 

“சார் அது நான் தனியா இருக்கதால அப்பப்ப அவனை துணைக்கு வச்சுப்பேன், நம்பிக்கையான ஆள்தான் சார், இன்னைக்கு கொஞ்சம் அதிகமாச்சு இல்லன்னா ரொம்ப நல்லவன் சார்.”

 

“உங்களுக்கு தனியா இருக்க முடியலைன்னா எங்ககிட்டல்ல நீங்க சொல்லிருக்கணும், நீங்களா ஆள் சேர்த்துட்டா சரியா மிஸ்டர்?”

 

“கணேஷ் சார்.”

 

“ஆங்! கணேஷ், நம்பிக்கையானவர்னா உங்களுக்கு தானே, அப்போ உங்களுக்கு விசுவாசமா தானே இருப்பார்.”

 

“அப்டில்லாம் இல்ல சார்.தப்பான எந்த நோக்கத்திலும் அவனை சேர்த்துக்கல,”

 

“சரி விடுங்க,மேல யாரும் இருக்காங்களா?”

 

“இல்ல சார் நாம ரெண்டு பேரும் மட்டும் தான்.”

 

“சார்… பொய்சொல்றான்…’ மித்ரன் அருகே வந்தவன் ரகசியம் போல அவனருகே வந்து,

 ‘சார் பொண்ணு செப்பல் ஒன்னு இருக்கு நான் பார்த்தேன். என்னன்னு கேளுங்க. வீட்ல தங்கமா பொண்டாட்டி வச்சுட்டு இதெல்லாம் என்னன்னு விசாரிங்க சார்…”

 

“அவன் உலர்ரான் சார், அது ரொம்ப நாளாவே இருக்கு, நீங்க வேணும்னா போய் பாருங்க சார்.”

 

மித்ரன் போகமாட்டான் என்று நினைக்க, மித்ரனோ படிகளில் அவசரமாக ஏறிச்சென்றான். அவன் மேல் தளத்திலிரருந்த அறைமுன்னே நிற்க,

 

“சார் அதோட சாவி என்கிட்ட இல்ல, எப்போவும் திறந்தே தான் இருக்கும் இன்னைக்கு மூடிருக்கு.” என்று கூறிக்கொண்டே காவலதிகாரி திறந்துப் பார்க்க, மித்ரன் கையில் இருந்த வண்டிச்சாவியோடு கோர்திருந்த இருந்த ரிமோட் வகை சாவியொன்றை அழுத்திவிட்டு கதவைத் திறக்க அது  திறந்துக்கொண்டது. கவலதிகாரி அவனை வியந்து பார்த்துக்கொண்டிருக்க, லேசாக கதவை திறந்து மித்ரன் உள் நுழைய காவலாளி அவனை தொடர்ந்து நுழைய முன்னே அது மூடிக்கொண்டது. உள் நுழைந்தவனுக்கோ தன் எதிரே கட்டிலில் சுகமாய் உறங்கிக் கொண்டிருப்பவளைக் கண்டதும் ஒரு வினாடி திகைத்து விட்டான். வெளியிருப்பவர்களுக்கு இவள் உள்ளிருப்பது தெரியாது என்பதை புரிந்துக்கொண்டான். தெரிந்திருந்தால் இவள் நிலை, இக்காலத்தில் யாரை நம்புவது.’

அவளருகே சென்றவன் அமர்ந்து அவளை எழுப்ப, அவளோ மயக்கம் சேர்த்து உறக்கத்தில் இருந்தாள்.

 

“வீணா எந்திரி.வீணா…’ அவள் கண்ணங்களை மெதுவாக தட்டி எழுப்ப அவள் எழும்புவதாய் இல்லை.மெதுவாக அவளை விட்டு எழுந்தவன் தண்ணீராவது தெளிக்கலாம் என நினைக்க, அவன் கைகளை பற்றிக்கொண்டவள்,

 

“வீரா எதுக்குடா இப்டி பண்ற? வில்லனா தான் என்கிட்ட வந்திருக்கணுமா? உன்ன நெருங்கவும் முடியாம, தூரமா இருக்கவும் முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு…”

 

வீணா, ‘வீரா ‘என்று கூறவுமே தன்னைத்தான் கூறுகிறாள் என்பதை உணர்ந்துக்கொண்டவன், அவள் கூறுவது தான் விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

 

“உன் அருகே இருந்து உனை பாராதிரிப்பது எதைகைய வலியினை தரும் என்பதை நீ அறிய வாய்ப்பில்லை…

நானறிந்து என் வீரா எனக்கில்லை…”

 

அவள் புலம்பல்கள் கேட்டிட மித்ரனோ  வீணாவினை பார்த்தப்படி அமந்துவிட்டான்.

 

‘ஏதோ எல்லோருமா சேர்ந்து ஏமார்த்திட்டு இருக்கீங்கன்னு மட்டும் புரிது. என்ன பண்ணி வச்சிருக்கேன்னு தெரிலயே…..

டேய் கிருஷ்ணா நீ மட்டும் என் கைல சிக்குவல்ல அப்ப இருக்கு.”

 

கிருஷ்ணாவிடம் என்ன ஆனாலும் கேட்டு தெளிந்துக் கொள்ள நினைத்தான். தனக்கும் வீணாவுக்கும் இடையே ஏதோ  நடந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவு.

 

இப்போது வீணாவை அழைத்து செல்வதே முக்கியமாய் இருக்க, கதவைத் திறந்தவன் அது மூடிக்கொள்ளாது சுவரோரம் இருந்த தடுப்பில் மாட்டியவன், கவலாளியிடம் வண்டிச்சாவியை கொடுத்து கதவைத்  திறக்குமாறு கூறி அவனை கீழே போகச் செய்து வீணாவை தூக்கிக்கொண்டு படியிறங்கினான். வண்டியின் பின் இருக்கையில் அவளை கிடத்தி கதவைச் சாற்றியவன் வண்டியை செலுத்திக்கொண்டு அடிக்கடி அவள் உறங்குவதை முன் கண்ணாடி வழியே பார்த்தப்படி வந்தான்.

 

வீணா வீட்டருகே வண்டியை நிறுத்தவுமே ஓடிவந்து விட்டனர் வாசுகியும் ராஜும்.

 

“உங்க பட்டு நல்லா தூங்கிட்டாங்க, எழுப்புனா எழும்புவாளா தெரில.”

 

வாசுகி கதவைத் திறந்து அவளை எழுப்பப் பார்க்க ராஜ்,

“வசு பாவம் இரு நான் தூக்கிட்டு போறேன். எழுப்பாத.” என்றிட,

 

அங்கிள் இருங்க நான் கூட்டிட்டு வரேன், என்றவன் அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டான். அவன் நெஞ்சோடு சுகமாய் சுருண்டு அவன் கழுத்தோடு தன் மூச்சுக்காற்று உரசிட கை கோர்த்துக்கொண்டவள் தன் தூக்கத்தை  தொடர அவளை அவன் கட்டிலில் விடும் பொழுது கழுத்தோடு கோர்திருந்த கையால் தன் பக்கம் இழுத்தவள் அவன் கன்னங்களில் இதழ் பதித்திட பார்த்திருந்த இருவருக்கும் ஆச்சர்யம், மித்ரனுக்கும் ஒன்றும் செய்திட முடியாது வெட்கமாகிப் போக, அவ்விடம் இலகுவாக்க ராஜ்,

 

“வசு மித்ரனுக்கு காபி போடு சாப்டு கிளம்பட்டும்.” என்றிட  அவர் அறை விட்டு வெளியே செல்ல இவனும் ஒருமுறை அவளை திரும்பிப் பார்த்தவன் தன் கன்னம் தடவிக்கொடுக்க இதழ்களில் ஏனோ ஓர் இளநகை,இனிய இனிதான புன்னகை.