வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 15

Screenshot_2020-12-18-06-54-30-1-326981d4

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 15

Vv15

அன்றைய நிகழ்வின் பின் முழுதாய்  வீணா மித்ரனை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள். அத்தோடு கிருஷ்ணா மற்றும் மகிழ் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பியிருக்க மித்ரன் பலமுறை கிருஷ்ணனை சந்திக்க அழைத்தும் காரணம் கூறி மறுத்துக் கொண்டிருந்தான்.கிருஷ்ணா வந்ததும் அவனோடு ராஜ் அன்று இரவு வீணா தாமதமாய் வந்ததையும் மித்ரனே கொண்டு வந்து விட்டதையும் கூறியிருக்க, அவனும் வீணாவிடம் கேட்டு அவன் எதற்காக அழைக்கிறான் என்பதை புரிந்து மறுத்துக்கொண்டே இருக்கிறான்.

 

அன்று வெள்ளி நாளொன்று மாலையே அனைவரும் வீடு வந்திருக்க மாலைத் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வீணா,

 

“ம்மா,அக்காவுக்கு இப்போ ஏழாவது மாசம், இன்னும் ஒரு வாரத்தில் மாமா அக்காவை எங்க அப்பா வீட்ல கொண்டுபோய் விட்றதா சொன்னாங்க…”

 

“என்ன பட்டு இப்டி சொல்ற, அங்க யாரிருக்கா அவளை பார்த்துக்க. மாமாகிட்ட சொல்லி நாம நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துரலாம்.”

 

“நானும் இப்போ எத்தனை வாட்டி சொல்லிட்டேன் போய் அவங்களை பார்த்துட்டு வரலாம்னு, இல்ல இங்க ஒரு முறையாவது அழைச்சிட்டு வாங்கன்னு. இரண்டையுமே நீ செய்யல கிச்சா. பாரிப்போ, திடீர்னு போய் நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடவும் சங்கடமா  இருக்கு.மாசமா இருக்க பொண்ணு வேற மனசு கஷ்டப்படுவது போல் நடந்துக்கவும் கூடாது. “

 

கிருஷ்ணாவும் ராஜும் ஒருவரை ஒருவர் ஓர் அர்த்தப் பார்வை பார்த்துக்கொண்டதை மகிழ் கவனித்தாலும் கவனியாது இருந்துவிட்டாள்.

 

“அதான் ம்மா, அக்கா வீட்டுக்கு போக முன்ன நாம எல்லாம் ஒருவாட்டி போய் நம்ம சார்பா அவளை சந்தோஷப்படுத்திட்டு வரலாம்னு தோணுது. நான் தனியா போறதை விட எல்லோருமா ஒன்ன போகலாமான்னு…”

 

வாசுகியிடம் வீணா பேசிக் கொண்டிருக்க இடையே கிருஷ்ணா இப்படியாக கூற,

 

“நோ நோ… அங்கெல்லாம் அம்மாவால போக முடியாது. திடீர்னு ஏதாச்சும் நீங்க போனது தெரிஞ்சு உங்கப்பா பாட்டில்லாம் வந்துட்டாங்கன்னா அம்மாவுக்கு ப்ரோப்லம் ஆகிரும். அதெல்லாம் வேணாம்.நீ போறதே எனக்கு பிடிக்கல, அப்படியே போறதுன்னா நீ போய்ட்டு வா அம்மாவை கூட்டி போகாத.”

 

கிருஷ்ணா பட படவென வீணா பேசியதை பொருட்படுத்தாது பேசிவிட்டு மற்றவர் பதில் கூற முன்னமே எழுந்து உள்ளே சென்று விட்டான்.

 

“என்னங்க இப்டி பேசிட்டு போறான். இவ அப்பா வந்தா நமக்கென்ன. நாம வீணாவோட அக்காவை தானே பார்க்கப் போறோம். பட்டு மனசு கஷ்டப்படும்னு கூட தோணால அவனுக்கு, இப்படி கத்திட்டு போறான். “

 

“அவன் எதோ டென்ஷன்ல பேசிட்டு போறான். விடு வசு பார்த்துக்கலாம், பாரு வீணா அப்செட் ஆகிட்டா… போய் பாரு அவளை என்னன்னு, சின்னவ.”

 

மகிழ் போய் பாரும்மா கிருஷ்ணா என்ன பண்றான்னு.எவ்ளோ நிதானமா எல்லாம் பண்றவன் இப்டி பேசிட்டு போறான். அம்மான்னு வந்துட்டாலே இந்த பசங்க இப்படித்தான் போல. “

 

மகிழும் அவ்விடம் விட்டு நகர, ராஜ் மனதிலும் கவலை. அத்தோடு பழைய நினைவுகளும் ஒன்றிணைந்து கொண்டது.

 

***

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் ராஜ் மற்றும் குணசீலன் ஒரு வைத்திய துறை வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்க இவர்களுடன் கிருஷ்ணாவும் பாடசாலை விடுமுறை என்பதால் சென்றிருந்தான். அதிக மழை காரணமாக ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி மூவரும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மழை சற்று மட்டுப்படவும் செல்லலாம் என்று. அவர்களின் வண்டி அருகே பாதை ஓரமாக போடப்பட்டிருந்த மரக்குற்றி அருகே யாரோ இருப்பதாய் கிருஷ்ணன் காண மழை நீரினால் தெளிவில்லாமலும் இருக்க தன் தந்தையிடமும் காட்டி அவருமே பார்த்து யாரோ இருப்பதை கண்டு அவசரமாக வண்டிவிட்டிறங்கி குணசீலனுடன் சென்று பார்த்தார்.

 

பெண்ணொருவரை அங்கே காணவும் அவசரமாக அவரை தூக்கிக்கொண்டு வந்து வண்டியின் பின் இருக்கையில் கிடத்தி அவரை பரிசோதிக்க அவர் பின்னந்தலையில் இருந்து இரத்தம் வண்டியின் இருக்கையை நனைப்பதை கிருஷ்ணா பதட்டத்தோடு காட்ட அவரது உடலும் காய்ச்சலினால் அம்மழைக் குளிரிலும் அனல் என்று தகித்துக்கொண்டிருந்தது.

 

“குணா வண்டிய கிளப்பு.அரை மணித்தியாலத்துக்குள்ள போயிரலாம். இடைல எங்கேயும் போனா யாரு என்னன்னு விவரம் சொல்ல வேண்டி இருக்கும்.”

 

சரியென்று ராஜ் முன்னால் வந்து அமரவும் வண்டியை அவசரமாக நிதானமாக செலுத்தினார் குணசீலன். கிருஷ்ணாவின் மடியில் பெண்ணவரின் கால் வைத்திருக்க கிருஷ்ணா அவரது காலை தடவிக்கொடுத்த வண்ணமே இருந்தான். வைத்தியசாலை  வரவும் அவசரமாக சிகிச்சை ஆரம்பிக்க அவர் குணமக்கப்பட்டார். மார்கள் பால் கட்டுப்பட்டு அதனால் ஏற்பட்ட காய்ச்சல் என்றுணர ‘அவரை காப்பாற்றிய இடத்தில் குழந்தையும் இருந்திருக்குமோ, தாங்கள் கவனிக்க வில்லயோ என அவ்விடம் சென்று மீண்டும் பார்த்ததோடு அக்கம் பக்கம் விசாரித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 

 பழைய நினைவுகள் மறந்து இருந்தவர் அவ்வப்போது,

‘என் பொண்ணு நா இல்லன்னா ரொம்பகஷ்டப்படுவாள் ‘ எனும் விதமாய் புலம்பல்கள் இருக்கும். அவர் சற்று உடல் தேறி வர, கிருஷ்ணா அவன் தந்தை ராஜுடன் அடம் பிடித்து அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். சிலநாள் தாயாகி அவரைக் கவனித்தவன், பின் அவரை தனக்கு தாயாக்கி தந்தையின் மனம் மாற்றி வாசுகிக்கு முப்பதாவது வயதில் அவருக்கும் துணையாக ஆக்கினான்.

 

வாசுகியின் குடும்பத்தினர் மீண்டும் வந்து விட்டால் பிரச்சினை ஆகும் என்று அவரது குடும்பம் பற்றி விசாரித்து அங்கே சென்று அவரது குடும்பத்தை பார்த்தவருக்கு, அவரை தன்னோடு வைத்துக்கொள்வதே நல்லது என்று யோசித்தாலும், எதற்கும் ஒருமுறை  அவர் வீட்டினரோடு பேசிப் பார்த்தார். அவரின் கணவனோ, கணவரின் அன்னையோ மிகக் கேவலமாய் பேசிவிட அவருக்கு வேறு பிள்ளைகள் இருப்பதும் தெரியாது போக அப்பொழுதே அவருக்கான விடுகை பத்திரம் தயார் செய்து தனக்கு மட்டுமே சொந்தமாய் வாசுகியை ஏற்று இன்று வரை காத்து வருகிறார்.பழைய நினைவுகளை வாசுகி மறந்திருந்தாலும் தனக்கு ஓர் மகள் தன்னையே ஒட்டிக்கொண்டு திரிவதாய் உணரும் நினைவுகள் அடிக்கடி வருவதை  உணர்ந்திருக்கிறார். ராஜூடனும் இதைப் பகிர அவரை காப்பாற்றிய நேரம் அவரிருந்த நிலை கூறி சில நேரம் இறந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

 

அவரும் காலம் செல்ல அதற்கேட்ப வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அந்த மகளை தவிர்த்து தனக்கு இன்னொரு மகளும் மகனும் இருப்பதை மறந்திருக்க ராணி  என்று அழைக்கப்பட்டு வந்த ராணி வாசுகி அம்மாள் கிருஷ்ணாவுக்கும் ராஜுக்கும் வாசுகி ஆனார்.

 

கடந்த நினைவுகளில் மூழ்கி இருந்த ராஜ் மித்ரனின் குரலில் மீண்டார்.

 

“ஹாய் அங்கிள். முன் வாயில் இருந்து இவ்ளோ நேரம் அழைக்கிறேன் யாரையும்  காணோம். இங்க வந்து பார்த்தால் நீங்க மட்டும் தான் இருக்கீங்க கிருஷ்ணா எங்க? ஆன்ட்டி எங்கே ஒருத்தரையும் காணோம். வீட்ல தானே இருக்கதா மகிழ் சொன்னா.”

 

“உள்ளதான் எல்லாம் இருக்காங்க மித்ரா. வந்து உட்காரு வருவாங்க. “

என அவனை தன் அருகே அமர்த்திகொண்டார்…

 

“என்னாச்சு? அங்கிள் மூட் சரியில்லையே.”

 

“அப்டில்லாம் ஒன்னில்ல ப்பா. நம்ம பட்டு பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.

 

“ஏன், வீணாவுக்கு என்னாச்சு? நல்லா தானே இருந்தா.”

 

அவன் முகத்தையே பார்திருந்த ராஜ், அவன் முகத்தில் அவளுக்கான தேடலைக்  கண்டவறாக,

“ஒன்னில்லப்பா, அவ அக்காவை பார்க்கப் போகலாம்னு கேட்டா, அதோட. வசு நாம எல்லோருமா போகலாம்ன்னு கேட்கவும், கிருஷ்ணா பட்டுனு வேணாம்னு சொல்லிட்டான். அதோட எல்லோரும் கொஞ்சம் மூட் அப்செட்.” என்றார்.

 

“கிருஷ்ணாவுக்கு என்னாச்சு, இந்த கொஞ்ச நாளாவே அவனை பிடிக்க முடில. இப்டிலாம் பேச மாட்டானே. சரி வாங்க. உள்ள போகலாம். என்னனு பார்க்குறேன். ஆன்டி எங்க?”

“பட்டு என்ன பண்றான்னு பார்க்க போனா. “

இருவரும் பேசியப்படி எழுந்து உள்ளே சென்றனர்.

“நா மேலே போய் என்னனு பார்க்குறேன்.” அவரை விட்டு மடியேறிய மித்ரன் கிருஷ்ணாவின் அறை மூடியிருக்கவும் அதையடுத்து இருந்த வீணாவின் விசும்பல் சத்தம் கேட்க மனம் தாங்காது அவளறை வாயில் திரையை விலக்கி பார்க்க, வாசுகியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு,

 

“கிச்சா வேணாம்னா நாம போக வேணாம் ம்மா. ஏதாச்சும் காரணம் இருக்கும்.அப்றம் நாம போய் ஏதாச்சும் தப்பா ஆச்சுன்னா திரும்ப திட்டுவான்.”

 

“பட்டுமா, அழாத டா. அம்மாக்கும் கஷ்டம்ல. அவன் கெடக்குறான் லூசு. நாம கண்டிப்பா நாளைக்கு போறோம். அவ்ளோதான். அம்மா பேச்சைக் கேட்பியா மாட்டியா?”

 

“அய்யே இதென்ன. அம்மாவும் பொண்ணுமா அழுந்துட்டே இருக்கீங்க. பார்க்க சகிக்கல. நானும் எவ்ளோ நேரம் தான் பார்த்துட்டே இருக்கது.”

மித்ரனின் குரல் கேட்டு சட்டென. எழுந்துக்கொண்ட வீணா  கண்களையும் துடைத்துக்கொள்ள நீண்ட நாட்களாக தன்னை தவிர்த்துக் கொண்டிருந்தவளை கண்டவனுக்கு அள்ளி அணைக்கும் ஆவல்.தன் மனதை அடக்கும் வழிதெரியாது தன் நிலையே தனக்கு புரிந்திட முடியாது முதலில் வந்த வேலையை கவனிக்கலாம் என்றெண்ணி,

 

“என்ன நாளைக்கு தேவையான திங்ஸ்லாம் வாங்க வெளில போகணுமா இல்ல லிஸ்ட் போட்டு தரீங்களா நானும் கிருஷ்ணாவும் போய் எடுத்துட்டு வந்துர்றோம்.”

 

“கிச்சா ஓகே சொல்டானா டா மித்ரா?” வாசுகி கேட்க,

 

“அவன் சொல்லாம நா எப்படி ஓகே சொல்லிருப்பேன். நாளைக்கு கண்டிப்பா அங்க போறோம். ஓகே வா?”

 

“அப்பன்னா ஓகே தான்.சும்மா என் கண்ணீரை வேஸ்ட் பண்ண வச்சுட்டான். நானும் மகிழ் அப்றம் வீணாவும் டிரஸ் எடுத்துர்றோம். நீயும் கிச்சாவும் மத்த பொருளெல்லாம் வாங்கிருங்க நம்மல வர்றப்ப. பிக்கப் பண்ணிக்கோங்க. “

 

“ஓகே, அப்போ கிளம்புங்க. நான் கீழ வெய்ட் பண்றேன்.”

 

மித்ரனும் வாசுகியும் பேசும் வரையில் தன் விரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தவள், தன்னோடு பேசுவான் என்றென்ன அவனோ  வாசுகியோடு பேசியவாறே கீழிறங்கி விட்டான்.தான் தான் அவனை பேசவிடாது தவிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து அவன் தன்னோடு பேசாது செல்கிறான் என்று ஏங்கியவளாய் அவன் நின்றிருந்த இடம் பார்த்திருந்தாள்.

கீழே வர கிருஷ்ணா அமர்ந்திருந்த எதிர் இருக்கையில் அமர்ந்த மித்ரன் அவன் முகம் பார்க்க, எதோ யோசனையில் இருப்பதைக்  கண்டவன் மகிழ் வரவும்,

” மகி எனக்கு ஒரு ஸ்ட்ராங் டீ, அதோட உங்க புருஷருக்கும்.”

அவளும் சிரித்தப்படி தலையாட்டி சமையல் அறைப்பக்கம் செல்ல,

 

“என்னாச்சுடா கிருஷ்ணா? ஒரு வாரமா  உன்ன பார்க்கலாம்னா அப்பொய்ன்மெண்ட் தரவே மாட்டேங்குற. அவ்ளோ பிஸி ஆகிட்ட.”

 

“அப்டில்லாம் ஒன்னில்ல ” கூறிய கிருஷ்ணா ‘ அட எப்படி இவனை மறந்தேன், கேள்வியா கேட்டு என்னை ஒரு வழிப் பண்ணிருவானே.’மனதினுள் கூற,

 

“ஒன்னும் உன்னைக் கேட்க மாட்டேன் கிருஷ்ணா. கொஞ்சம் வெளில போகணும் வரியா போய்ட்டு வரலாம்.”

 

“ஹ்ம் போலாம்டா.”

 

மகிழ் தேநீர் கொண்டு வரவும் இருவருமாக. அருந்தி விட்டு கிளம்ப,

 

“மகிழ், ஆன்ட்டி வெளில போகணும்னாங்க. டிரைவர் அழைச்சிட்டு போய்டு அனுப்பிருங்க. நாம வர்றப்ப பிக்கப் பண்ணிக்கிறோம்.” மித்ரன் கூற,

 

“இல்ல, கிரிஷ்…” மகிழ் எதோ சொல்ல வர, கிருஷ்ணா தலையசைத்து போகுமாறு கூறினான்.

 

“ஆஹ்! மகிழ் ஆன்ட்டி எதோ திங்ஸ் வாங்கணும்னாங்க, லேட் பண்ணாம எனக்கு என்னன்னு மெசேஜ் பண்ணிரு.”

 

மித்ரனை முறைத்த கிருஷ்ணா முன்னால் சென்று விட, தான் பார்த்துக்கொள்வதாய் மித்ரன் மகிழிடம் கூறி விடைப் பெற்றான்”

 

“மித்ரா நாளைக்கு அவங்க வீட்டுக் கெல்லாம் போக முடியாது. உனக்கு சொன்னா புரியாது. “

 

“ஏன் புரியாது.சும்மா கோவப்பட்டா ஆச்சா, என்னனு சொல்லேன். ” வண்டியை கிளப்பியவாரு மிதரன் கேட்க,

 

“மித்ரா…” என்று ஆரம்பித்தவன், காரணத்தைக் கூற. இடை புகாமல் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

வண்டியை நெருக்கடி இல்லாது நெடுஞ்சாலை விட்டு கிளை வழிப் பாதையொன்றில் சற்று ஓரமாய் நிறுத்தியவன்,

 

“கிருஷ்ணா, எவ்ளோ நாளைக்கு இப்டி ஒளிச்சி வச்சுக்க போற. ஆன்ட்டி ஓகே. வீணா, அவளை நினைச்சு பார்த்தியா தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவா?”

 

“அதான் வேணாங்குறேன் மித்ரா.”

 

“நாளைக்கு அவங்களை சந்திக்க விடு. அப்றம் என்னாகுதோ அதுக்கு ஏற்ற மாதிரி  பாத்துக்கலாம். என்னன்னாலும் நான் உன்கூடத்தான் இருப்பேன்.”

 

“மித்ரா அம்மாடா…”

 

“டேய் கிருஷ்ணா…” அவன் கைகளைத் தன் கைக்குள் பொத்திக்கொண்டவன் அவங்க எப்போவும் உன் அம்மாதான். அதுக்காக அவங்க உரிமையையும் தடுக்க கூடாதில்லையா? “

 

“ஹ்ம் புரிது… “

“அதை விடு நாம வேற விஷயமா கொஞ்சம் பேசலாமா?”

 

“என்ன,எதை பற்றி சொல்ற” கிருஷ்ணா கேட்க,

 

“அது” அன்னைக்கு என்னை நீ ஹாஸ்பிடல் கூட்டி வர்றதுக்கு முன்ன எனக்கும் வீணாக்கும் என்ன பிரச்சினை? “

 

“மித்ரா அப்டில்லாம் ஒன்னுல்லையே, அவ ஜஸ்ட் நம்ம ஸ்டாப், அவ்ளோதான்.”

 

“இல்ல நீ அன்னைக்கு சொன்ன ஸ்டாப் முன்னாடி எதோ திட்டிட்டேன்னு…”

 

‘இது எப்போ சொன்னேன்…’ முழித்த கிருஷ்ணா, அது சும்மா தான் எதோ…

 

“பொய் சொல்ல வரலைன்னா விடு.எதுக்கு மேல மேல இன்னும் சொல்லிட்டே இருக்க.எனக்கும் வீணாக்கும் நம்ம குடோன்ல என்ன நடந்தது?ஏதாச்சும் தப்பா அவகிட்ட நடந்துக்கிட்டேன்னு தோணிட்டே இருக்கு, ஆனா என்னால யோசிக்கவே முடில, மண்டை வெடிக்கிறாப்ல இருக்கு. “

 

“மித்ரா அப்டிலாம் இல்ல. அது…” கிருஷ்ணா சொல்வதா வேண்டாமா என்று யோசிக்க,

 

“ப்ளீஸ் டா எனக்கு என்னன்னு தெரிஞ்சா அதுக்காக என்னால என்ன பண்ண முடியும்னு பார்க்கலாம். அதுவுமில்லாம எனக்கு எதோ அவ மேல ஓர் ஈர்ப்பு, காதலான்னு தெரில, ஏற்கனவே காதல்னு நானும் என்னால அடுத்தவங்களும் பட்டது போதும்.”

மித்ரன் வருந்திக் கூற,கிருஷ்ணா அன்று என்னானது என்று கூறி முழுதும் சொல்லி முடிக்க வெளியே கொட்டும் மழையோடு திடீரென இடித்த இடியோடு கூடிய மின்னல் இவர்கள் காரினுள் ஒளியூட்ட நிகழ்வை உணர்ந்தனர்.

 

“அன்னைக்கும் இப்படித்தாண்டா மழை, அவளை பார்த்ததும் எங்கம்மா தான் என் கண் முன்ன, என்னைப்பார்த்து பயத்திலேயே மயங்கிட்டா. அப்றம் அவ சொன்னதை வச்சு நம்ம குடோனை தான் சொல்றான்னு கெஸ் கூட பண்ண முடியாம போய் சேர்ந்தேன். அங்க உன்ன பார்க்கவும், ப்ச், என்னால என்ன பண்றதுன்னே புரில. உன்கிட்ட சொல்லவேணாம், உன் முன்ன அவ இருக்க உனக்கு அவகூட இருந்தது நினைவு வந்துட்டா நீ வருத்தப்படுவன்னு தான் உன் இடத்துக்கு அவ வர விரும்பல. ‘

 

‘நீ அதை எல்லாம் நினைச்சு மனசை கலங்கப் படுத்திக்காத. உனக்கு அது நினைவுல இல்ல, அவளும் அதை அப்போவே விட்டுட்டா… “

 

“அவ இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தா?’

 மித்ரன் கூற. அவனை கேள்வியாக கிருஷ்ணா பார்க்க,

‘ ஆமாடா அவ என்னை விரும்புறாளோன்னு தோணுது. அவ கண்ணு, அவ செயல் ஒவ்வொன்றும் என்னை என் காதலை எனக்கு நினைவு படுத்துது.”

 

சரிடா,என்கிட்ட சொன்னதை வீணா தெரிஞ்சுக்க வச்சுக்காத. நானும் காட்டிக்கல. நா கொஞ்சம் யோசிக்கணும் அப்புறம் நாம இதைப் பற்றி பேசலாம். முதல்ல நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய்ட்டு வருவோம். இருவருமாகப் பேசிக்கொண்டு கடையில் பெண்கள் மூவரையும் ஏற்றிக்கொண்டு வீடு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!