வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 3

Screenshot_2020-09-30-16-03-02-1-2c89e512

 அடை மழை பொழிந்து சற்று மட்டுப்பட்டிருக்க,நள்ளிரவு மணி இரண்டு என வாயிற்சுவரில் மாட்டப்பட்டிருந்த அக்காலத்து மரக்கடிகாரம் ‘டாங்’ என மணியடித்து உறுதிக்கூறியது. அவ்வொலியானது அமைதியாக இருந்த அவ்வீட்டில் திகிலை உண்டு பண்ணியது. 

இரண்டு தட்டு மாடி வீடு அது. வெளிப்பார்வைக்கு நவீன முறைப்படி வடிவமைக்கப்பட்ட வீடு.வெள்ளை நிறப்பூச்சு பூசப்பட்டிருந்தது.நுழைவு வாயிலிலிருந்து வீட்டின் வாயில் வரையிலான பகுதி சீமெந்து கற்கள் பதித்து,அழகிய பச்சை பசேலென செழிப்பான மரங்கள் நட்ட தொட்டிகளில் அலங்காரமாய் வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்தன. இருளோடு மழையும் சேர்ந்திருக்க அவை கண்ணுக்கு சரியாக புலப்படவில்லை. 

வீட்டினுள்ளோ கீழ்த்தளம் முழுவதும் பொதிகளாகவும் பெட்டிகளிலும் துணிவகைகள் அடுக்கப்பட்டிருந்தது. மேலேறி செல்ல கைப்பிடியற்ற படிகள் அமைக்கப்பட்டிருக்க,ஏறிச்சென்றாலோ அங்குமே அதே மாதிரியான அமைப்பு அதோடு ஓர் அறை அதன் கதவுகள் கண்ணாடியினால் அமைக்கப்பட்டிருந்தது. 

அறையை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல மேல்தளத்தில் அரைவாசியை  உள்வாங்கியிருந்த அவ்வறைக்குள் இரண்டு பக்க சுவரிலும் இருக்கதவுகள். ஒன்று குளியலறை மற்றொன்று  இன்னுமொரு அறை போலும்.

கட்டில் விரிப்பு தரையில் இருக்க தலையனை எங்கோ கிடந்தது.அறை முழுதும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. கதவோடு போடப்பட்டிருந்த கால் விரிப்பில் கால் தடுக்கி விழப்பார்த்தவன் கண்டது, வெள்ளை நிற பளிச்சென்று இருந்த தரையில் அங்காங்கே இரத்தக் கறைகள். அவசரமாக அறையில் கண்களை சூழல விட்டவன் மூடப்பட்டிருந்த மற்றுமொரு அறையை திறந்துக்கொண்டு நுழைய, அவ்வறையுமே பொருட்கள் சிதறியிருந்தது. 

அதை விடுத்து அடுத்து அவன் கண்களில் கண்டது, தலையிலிருந்து காதோடு வழிந்து கன்னம் நனைத்து கழுத்தோடு கீழிறங்கி உடுத்தியிருந்த வெள்ளை சட்டையில் படிந்து காய்ந்திருந்த இரத்தக்கறையை. அதோடு அவன் விழுந்து கிடக்கும் விதம் பார்த்தவன் உள்ளத்தை நடுங்கச்செய்ய அவனருகே மண்டியிட்டமர்ந்த கிருஷ்ணா மடிதாங்கினான் தன் உயிர் நண்பனை. 

“மித்ரா… டேய் மித்ரா…” கன்னம் தட்டி  அறையில் அவன் சத்தமிட்ட குரல் எதிரொலிக்க கேட்க வேண்டியவனுக்கோ கேட்கவே இல்லை. 

சில நிமிடங்கள் என்ன செய்வதென்று புரியா நிலை அவனுக்கு.சத்தியமாய் இவனை எதிர்பார்த்து வரவில்லை. பெண்ணவளை வீட்டில் கொண்டு சென்று வைத்தியம் செய்து முடிக்க அவள் சொல்லிய வார்த்தைக்காக இங்கு வந்தால், இங்கிருப்பவனோ தன் உயிர் தோழன். இரண்டு நாட்களாக எங்கெல்லாமோ அலைந்து திரிந்துக் கொண்டு தேடிய நண்பன் இங்கிருப்பான் என எதிர் பார்க்கவே இல்லை.

பெண்ணவள் கூறியதும் தான் கணித்து வந்த இடமும் ஒன்றாய் தம்முடையது என்றாலும் மித்ரனை எதிர் பார்க்கவில்லை. மித்ரன் ஆசையாக வாங்கிய வீடெனினும், அவர்களின் ஆடையகத்தின் மேலதிக துணிவகைகளை வைத்திருக்க சேமிப்பு கிடங்காகவே பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணா இதுவரை இங்கு வந்திருக்கவில்லை.அத்தோடு மித்ரனுக்கென்று ஓரறையும் அமைத்துக்கொண்டிருப்பான் என நினைக்கவும் இல்லை. அதனால் தான் அவனை தேடி அலைந்த இந்த இரு தினங்களிலும் இங்கு வரவில்லை. 

பெண்ணவள் காயத்திற்கு மருந்திட்டு முடிய மகிழோடு வாசுகியும் அறையை விட்டு வெளியேறிய நேரம், கிருஷ்ணாவை அருகே அழைத்த பெண்ணோ,

“நான் இருந்த வீட்ல,அங்கு இருந்த ஒருத்தரை தள்ளி விட்டுட்டேன். அவங்களுக்கு ஏதும் ஆகியிருக்குமோன்னு இப்போ எனக்கு பயமா இருக்கு.முடியும்னா அவங்கள பார்த்துட்டு வரீங்களா ப்ளீஸ்?”

“இடம் எதுன்னு உன்னால சரியா சொல்ல முடியுமா? சொன்னா போலீசை நேரா அங்கேயே போ சொல்லிருவேன்.”

“அச்சோ! வேணாம் வேணாம்…” அவசரமாக மறுத்தவள், 

“நீங்க முடியும்னா போய் பாருங்க,போலீஸ் எல்லாம் வேணாமே ப்ளீஸ்.”

“சரி பார்க்கலாம்…” என்றவன் அடுத்த கணமே அவளிடம் இடத்தை குறிப்பாய் கேட்டு இங்கு வந்திருந்தான். 

நண்பனின் மடியை உணர்ந்தானோ, தன்னால் காயப்பட்டவள் நண்பனால் காக்கப்பட்டுவிட்டாள் என்பதை உணர்தானோ,எதுவோ ஒன்று அவனுக்கு ஊட்டம் தர அவனிடத்தில் மெல்லிய அசைவு.மீண்டுமாய் நண்பனை எழுப்பினான்.

“மித்ரா… என்னை பாரேன்… டேய்!” அவன் கன்னத்தில் கிருஷ்ணா வேகமாய் தட்ட,  பெரும் இருமல் ஒன்றோடு சுயநினைவு திரும்பியது.

தன் நண்பனைக் கண்ட மித்ரன், 

“கிருஷ்…ணா தப்பு பண்றேன்டா,எனக்கு புரிது… என்னால என்ன பண்ணனும் தெரிலடா… பாவம்டா அவ…” முனங்களாக வெளிவருகிறது அவனிடம் வார்த்தைகள். 

மீண்டுமாய் இருமுகிறான். இப்போது நாசி வழியே வழிகிறது இரத்தம்.

“டேய் மித்ரா,என்ன பண்ணுதுடா?  என்னாச்சு உனக்கு?” அவனை அமர வைத்தவன்,தான் தனியே வந்த மடத்தனத்தை எண்ணி தன்னையே  சபித்துக்கொண்டு, கைத்தாங்களாக நண்பனை பற்றிக்கொண்டு தாங்கி ஒருவாறு எழுப்பினான். 

தனக்கு சமமாய் வளர்ந்து நிட்பவன், திடமான உடலமைப்பை கொண்டவன்,தன் மனபலத்தோடு உடல் திடத்தை இழந்திருக்க தனியே அவனை தாங்குவதென்பது கடினம் தான்.இருந்தும் தன் மனபலம் கொண்டு தட்டுத்தடுமாறி படிகளில் இறக்கி நண்பனை வண்டியில் ஏற்ற மீண்டுமாய் சுயநினைவை இழந்திருந்தான் மித்ரன்.

அவசரமாக வண்டியை கிளப்பியவன், அலைபேசியில் மித்ரனின் தந்தைக்கு  அழைப்பு விடுதான். 

“அப்பா,ராகவா கிடைச்சுட்டான். நான் நம்ம ஹாஸ்பிடலுக்கு தான் வரேன்.அப்பா மித்ராக்கு… “என அவன் நிலையை கூறியவன் அவசரமாக அவன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு வைத்தான். வைத்தவன் வண்டியின் வேகத்தை இன்னுமாய் அதிகப்படுத்தினான்.பாதை கண்ணுக்கு மறைய கண்களை அவ்வப்போது துடைத்து விட்டுக்கொண்டான்.தன் உயிர் நண்பனுக்காக கண்ணீர் சிந்துகின்றான்.

துரு துறுவென இருப்பவன், மற்றவர்களோடு அதிகம் பேசவில்லை எனினும் அவனருகே இருப்பதுவே போதும் எனும் இதம் தரும் ஒருவன் இவன்.அன்பு வைத்தால் அதற்கு எல்லை தன் உயிரே என்று பழகுவான்.அதே அதீத அன்பு ஒருநாள் அவனை ஏமாற்ற,தன் உயிர் நண்பன் மாறிப்போன விதம் அதிகளவு கிரஷ்ணாவையே பாதித்தது. முதலில் இவனையுமே அருகே அழைத்துக்கொள்ள தயங்கியவன் சில நாள் சென்றே சரியானான்.(சரியானான் என இவன் நினைத்திருந்தான்.)

பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் முன் வண்டி நிறுத்தப்படவும் புயலென வண்டி விட்டிறங்கியவன் இவன் வரவுக்காய் காத்திருந்த ஊழியர்களோடு ராகவின் தந்தையும் பதற்றத்தில் இருக்க அவசரமாக  உள்ளே அழைத்து செல்லப்பட்ட மறுநொடியே மித்ரனுக்கான சிகிச்சைகள் ஆரம்பமானது. 

விடியலை நோக்கி செல்லும் இரவின்  முடிவில் வைத்தியசாலைக்கு மித்ரனோடு வந்திருந்தான் கிருஷ்ணா. காலை ஏழு மணி,அப்போதுதான் அவசர சிகிச்சை பிரிவுக்கு மித்ரனை மாற்றிவிட்டு வெளி வந்தார் மித்ரனின் தந்தை குணசீலன்.

பரம்பரையே வைத்திய துறையை சேர்ந்தவர்கள். இவர் தந்தை ஆரம்பித்த வைத்தியசாலையை அவருக்கு பின் இவரும் சிறப்பாக நடத்தி வருகிறார். தனக்கு பின் தன் மகன் செய்வான் என எதிர் பார்த்திருக்க அவனோ தனக்காக வேறுபாதை அமைத்துக் கொண்டான். இப்போது மகள் வழியாக வந்த மருமகன் தலைமை மருத்துவராக இருந்துக் கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளையும் பொறுப்பாக தன் மனைவியின் துணைக்கொண்டு செய்கிறான்.அதனால் சற்று ஓய்வாக இருக்க மகனை நினைத்து கடந்த சில வருடங்களாக மனக்கஷ்டத்தில் இருக்கிறார் மனிதர். 

சில நிமிடங்களாய் அமர்த்திருந்தவாறே கண்ணயர்ந்த கிருஷ்ணா,குணசீலன் அவன் தோள் தொடவும் எழுந்துக்கொண்டான். 

எழுந்துக்கொண்டவன் அவர் கைகளைப்பற்றிக்கொண்டு, “ப்பா என்னாச்சு அவனுக்கு? “

“தெரிலடா.என் பையன் உயிரோடு இருக்கறதே எனக்கு போதும்னு தோன வச்சுட்டான்.”

கிருஷ்ணாவின் அருகே அவரும் அமர்ந்து கொள்ள, “இப்போ எப்டி இருக்கான் ப்பா, அவனை பார்க்கட்டுமா?”

“இன்னும் எந்திரிக்கல பா… ரெண்டு மணிநேரம் கழிச்சு தான் நினைவு திரும்பும்.”

“தலையில ரொம்ப காயமாப்பா? பார்த்ததும் ரொம்ப பயந்துட்டேன்ப்பா.”

குணசீலனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவன் தன் நண்பனுக்காக வருந்தி, அத்தோடு மித்ரன் இருந்த நிலைக் கண்டு பயந்திருந்தவன் வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்றழைத்தாலும் அவர் நிலை புரியாது வைத்தியர் ஒருவரிடம் கேட்கும் கேள்விகளையே குணசீலனிடம் கேட்டுக்கொண்டிருந்தான். 

“தலையில காயம் அவ்வளவா இல்லப்பா. தலை ஒரு பக்கமா காதோடு தான் அடிபட்டிருக்கு. அதுக்கெல்லாம் தையல் போட்டாச்சு ஸ்கேனும் எடுத்து பார்த்தாச்சு. பயப்படும் படியா ஒன்னில்ல.அதிகளாவான பிரஷர் அதான் நாசி வழியா ப்ளீட் ஆகிருக்கு.” 

இதுவெல்லாம் மிக சாதாரணம் எனும் வகையில் குணசீலன் கூற கிருஷ்ணாவோ, 

“பைத்தியக்காரன் ப்பா இவன் ப்ச்…” தன் கையை அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் ஓங்கி அடித்தவன், 

“அவளே அங்க குடும்பம் பிள்ளைனு செட்லே ஆகிட்டா.ஏன் தான் இவன் இப்படி இவனை வருத்திக்கிறானோ, என்னால முடிலப்பா கொஞ்ச நாளாவே ரொம்ப ரூடா நடந்துக்குறான். என் முகம் பார்த்துகூட பேச மாற்றான். அதோட ஈவினிங் ஆனதும் அவசரஅவசரமா கிளம்பி போய்டுறான். எத்தனையோ வாட்டி பாலோவ் பண்ணிருக்கேன்.எப்படியும் என்னை டைவர்ட் பண்ணிருவான்.”

கண்களில் நீர் திரள குணசீலனோ,

“அவன் பைத்தியம் தான், இவ்வளவு நாளும் அவன் அவனோட சுயத்தை இழந்துட்டுதான் இருந்திருக்கான் பா.” அவர் உடல் குலுங்க கிருஷ்ணா அவரின் தோள் சுற்றி அணைத்துக்கொண்டவன், 

“ப்பா என்ன சொல்றீங்க? “தான் பேசியதை தவறாக புரிந்துக்கொண்டாரோ என கிருஷ்ணா அஞ்சி அவரிடம் கேட்க, 

“மித்தராவோட நல்ல நேரமோ என்னவோ அவன் தலையில அடி பட்டிருக்கு.அதோட ஏதோ ஒரு நிகழ்வு அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்திருக்கு.கிட்டத்தட்ட நூறு நாளா அவன் மைண்ட் நார்மலா இல்ல. அவன் எழுந்ததும் தான் இனி என்ன பண்ணனும்னு முடிவு பண்ணலாம்.

“மஞ்சு அம்மாக்கு சொல்லணுமே ப்பா? “

மித்ரனின் அன்னைக்கு இன்னும் மகனைப் பற்றிக் கூறியிருக்கவில்லை. 

“ஒன்னும் சொல்லாம இருக்கவும் முடியாது கிருஷ்ணா.ரெண்டு நாளா அவன்கூட பேசணும்னு ஒரே அடம்.”

”இன்னும் ரெண்டு நாள் பார்த்துட்டு சொல்லலாம்ப்பா.”

சில நிமிடங்கள் கடந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொண்டு, மித்ரன் இருந்த அறைக்குள் நுழைந்தான் கிருஷ்ணா. அவனருகே நாற்காலியொன்றை போட்டு அமர்ந்துகொண்டவன் நண்பனை பார்க்க இன்னும் கண் திறக்கவில்லை.ஒரு பக்க தலைமுடி இறக்கப்பட்டு காயத்திற்கு மருந்திட்டு கட்டு போடப்பட்டிருந்தது. முகமெல்லாம் கருத்து நோயாளியென படுத்திருந்தான்.

அவன் மூடிய விழிக்குள் ஒளிந்திருக்கும் அவன் கடந்த கால கடலளவு என நினைக்கும் பிறர் கண்ணுக்கு சிறு மழைதுளியென விளங்கும் துயர் இன்னும் அவனை வாட்டிக்கொண்டிருக்க,

அவன் சுயமின்றி இருந்த சிலமாதங்களில் அவன் கைகள் வீணையொன்றை மீட்டின என்பதை அறிவான் எனில் அவன் நிலை? 

மித்ராவை பார்த்திருந்த கிருஷ்ணாவின் நினைவு அவர்களின் கல்லூரிக்காலத்தை நோக்கி இழுத்துச்சென்றது.

‘வீரமித்ரன்’ பெயரில் பொதிந்திருக்கும் மித்ரமே அவன் முகத்தில் எப்போதும் பிரகாசமாய் வீற்றிருக்கும்.அவன் உடல் மொழியே காட்டிவிடும் அவன் வீரத்தை. படிப்பது மருத்துவக்கல்லூரியில், மருத்துவன் மனம் இரும்பாகவும் கைகள் பூவாகவும் இருக்குமாம். இவன் மனமும் பூவிலும் மென்மையானது . 

கோவையில் பிரபல மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருட இறுதியில் இருக்கிறான். அடுத்து பயிற்சிகள் தொடங்கிவிடும். மேற்படிப்புக்காக மித்ரனும் அவனுடைய நெருங்கிய கல்லூரி நண்பர்களும் வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருந்தனர். இவர்கள் மூன்றாம் வருடத்தில் இருக்க முதலாம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்த நிஷா எனும் பெண்ணோடு காதல் கொண்டிருந்தான்.அவள் கல்லூரி நுழைந்ததே மித்ரனின் காதலியாக. காதலென்றால் அனைவரும் பார்த்து பொறாமைக்கொள்ளும் காதலாக திகழ்ந்தது.இருவரும் அன்னை வழி உறவாக இருக்க நிஷா பிளஸ் டூ முடியவும் ஓர் உறவினர் வீட்டின் வைபவத்தில் கண்டு கொண்டனர்.இருவருமே ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துவிட்டனர்.அவளும் மருத்துவ துறையே தேர்ந்தெடுத்திருக்க வீட்டினரும் இவளை அவனுக்கு அறிமுகம் செய்து உதவுமாறு கூற இருவரும் அவ்வப்போது சந்தித்தும் கொண்டனர். 

கல்லூரி விட்டதும் நண்பர்கள் இவர்களை கேலி செய்தவண்ணம் முன்னே செல்ல  இருவருமாக சற்று தூரம் நடந்து செல்வார்கள்.இரண்டு தரிப்பிடங்கள் கடந்து அவன் அவனுடைய வண்டியிலும் நிஷா  அவளது இருசக்கர வண்டியிலும் செல்வாள். இதுதான் அவர்களின் சந்திப்பு நேரம்.இது தவிர்த்து எப்போதாவது இருவரும் ஏதாவதொரு உணவகத்திலோ, நூலகத்திலோ சந்தித்துக்கொள்வார்கள். அதுவே அவர்கள் உறவு வலுவடைய போதுமானதாய் இருந்தது.அலைபேசியில் பேசிக்கொள்வதால் சந்திப்புகள் அப்போதைய உறவுக்கு போதுமானதாகவே இருந்தது.

மித்ரன் அப்போதே உயர்ரக வண்டியில் தான் வருவான். எப்போதும் நிஷா அவனோடு சென்றதில்லை.மிக எளிமையாகத்தான் உடைகள் அணிவாள். அதுவே அவளுக்கு மிக பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.வீட்டில் எப்போதும் பாவாடை தாவணிதான்.அதன் தரம் பெரிதெனினும் எளிமையாக இருப்பவளை அவனுக்கு நிரம்ப பிடித்தது.அவளிடம் அதிகமாய் ஈர்த்ததும் அதுவே எனலாம். 

காதலும் வளர்ந்தது. இருவருக்குமான உறவு மிக இறுகிக்கொண்டே செல்வதாக மித்ரன் நினைத்திருக்க, நிஷாவோ அவனுறவிலிருந்து தளர்ந்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் ஞாயிறு நாள் ஒன்றில்  சந்தித்துக்கொள்ள இருவருமாக சிறிது ஷாப்பிங் செய்து விட்டு உணவகத்தில் வந்தமர,இருவருக்குமாய் ஆர்டர் செய்து விட்டு அவள் பக்கம் திரும்பியவன் அவள் முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கி விட்டான். மித்ரனை பார்த்து சிரித்த நிஷா,

“எப்பவுமே என்னை பார்த்ததும் உங்க முதல் வேலை இதான்.”

“ஹ்ம்ம் ஏனோ அதை பிடிக்கல நிஷா.அந்த கற்றை முடிமேல கோவமா வருது.”

அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு அவள் கைவிரல்களுக்குள் தன் கைவிரல்களை  நுழைத்துக்கொண்டவன், “ரெண்டு நாளா எதுக்கு அவசரமா கிளம்பி போய்ட்ட?”

நிஷா பதில் சொல்ல தடுமாறவும், அவனே, “ரொம்ப பீல் பண்ணேன்.நீ இல்லாம அந்த வழியா நடக்கவே முடில.பசங்க வேற ரொம்ப கிண்டல் பண்ணிட்டானுங்க.இதுல உன் பிரெண்ட்ஸ் வேற என்ன கலாய்க்குறாளுக.”

அவன் கைவிரல்களோடு பிணைத்திருந்த விரல்களை மெதுவாக பிரித்தெடுத்தவள், “மித்து,நம்ம ரெண்டு பேருக்கும் இடைல இருக்கது காதல் இல்லையோன்னு தோனுது”

அவள் கூறவும்,மித்ரனின் சிரிக்கும் விழிகள் புருவம் மேலேற அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.சில நாட்களாகவே அவளிடம் சில மாறுதல்கள்.வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றே நினைத்திருந்தான். அதை பேசிக்கொள்ளவும் இருவருக்கும் சில நாட்களாக நேரமிருக்கவில்லை.

நிஷாவின் வீட்டினர் மித்ரனின் அன்னை மஞ்சுளாவின் அண்ணியின் அண்ணன் மகள்.வசதியானவர்கள் என்றாலும் இவர்களோடு சேர்ந்துபோகும் ரகம் இல்லை. கல்யாணம் என்று வந்தால் சற்று போராடவேண்டியிருக்கும் என்றும் உணர்ந்தே இருந்தான். எனவே அது போல ஏதும் பிரச்சினை என்றே நினைத்திருக்க ‘நாம் கொண்டிருக்கும் நேசம் காதலே இல்லை என்கிறாளே.’

“என்னாச்சு நிஷா,ஏதாவது உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்னா? இல்ல வீட்ல ஏதும்… “

“அப்படியெல்லாம் இல்ல மித்து. கொஞ்ச நாளா எனக்கு தோனுது.அதான் உன்னை அவொய்ட் பண்ணி பார்த்தேன்.எனக்கு நீ இல்லாம இருக்க முடியுமா,ஏதாவது பீல் ஆகுதான்னு.ஆனா… “

“ஆனா?” அவன் கேள்வியாக அவளை ஏறிட்டு பதிலை கூறுமாறு கூற, 

“ஆனா எனக்கு எப்போவும் போலத்தான் இருக்கு.நீ சொல்றது போல எனக்கு ஒன்னும் தோனவே இல்லை.”

“நிஷா ரெண்டு பேரும் மூனு வருஷமா லவ் பண்றோம். இப்போ வந்து இது லவ்வே இல்லேங்குற.என் மேல கோபமா இருக்கியா? உன்னை ஏதும் கஷ்டப்படுத்திட்டேனா? ஏன் திடீர்னு இப்படியெல்லாம் சொல்ற?”

“உன்னை லவ் பண்றேன்னா,எனக்கு எல்லாமே நீயாதானே இருக்கணும் மித்து.”

“அப்படித்தானே இன்னைக்கு வரைக்கும் இருக்கேன்.”

“அச்சோ மித்து,என்னை சொல்ல விடேன்.”

”உன்கிட்ட எனக்கு இருக்கது ஜஸ்ட் இபெக்ட்டுவேஷன் (infectuation).ஒரு வித ஈர்ப்பு,உன்மேல நான் ரொம்ப பாசமா இருக்கேன்,ஐ க்நொவ் இட் வெள்.பட், இட் ஜஸ்ட். உன்னை முதல் முதலா பார்த்ததுமே உன்கூட பேச ரொம்ப பிடிச்சது.அப்றம் பழக இன்னுமே பிடிச்சது.உன்கூட இப்படி உட்கார்ந்து இருக்க இன்னும் இன்னும் பிடிக்குது. ஆனா உன்னை எனக்கானவனா, அதை தாண்டி வேறேதும் தோனல மித்து.” 

“பொய் சொல்ற நிஷா.உன் வார்த்தை ஒவ்வொன்னும் பொய்யா நீ உன் நுனி நாவினாலதான் சொல்ற உனக்கு என் மேல ஒரு பீலுமே இல்லேன்னா,நீ என்னை ஒரு வட்டத்துக்குள்ள மட்டும் தான் வச்சிருத்தேன்னா அதை தாண்டி எப்பவுமே என்னை வர விட்டிருக்க மாட்ட,நீயும் வந்திருக்க மாட்ட,சரி நீ என்னை லவ் பண்ணல.ஜஸ்ட் பிரெண்டா பழகின…”

“இல்ல மித்து… நீ புரிஞ்சிக்க மாட்டேன்ற.”

“சரி பிரெண்டுக்கும் மேல லவ்வருக்கு கீழ என்னை பார்த்திருக்க,அப்படித்தானே? அப்போ எதுக்குடி அன்னைக்கு அவ்வளவு கிலோசா நின்னப்ப விலகி போகல? அப்றம் எதுக்குடி முத்தம் தந்தப்ப என்னை விலக்கல?” 

நிஷாவின் இடக்கையை முழங்கைக்கு மேலாக மித்ரன் அவனது வலக்கையினால் அழுத்தி பிடித்து அருகில் இழுத்தவன் பற்களுக்கு இடையே வார்த்தைகள் கடித்து வெளிவர,அவள் இதுவரைக்கும் கண்டிராத மித்ரனின் முகத்தை அதுவும் மிக அருகில் கண்டவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.இன்னுமாய் கையில் அழுத்தத்தை கூட்டியவன், 

“அப்போ ஜஸ்ட் பழகுறவங்க கூட இதெல்லாம் சகஜமான ஒன்னுன்னா,லவ் பண்றவன் கூட எல்லாமுமா  இருந்துருவியா? ச்சே…” அவள் கைகளை உதறிவிட்டான். 

“என்னவெல்லாம் நினைச்சிருந்தேன், உன்கூட என் முழு வாழ்க்கையையுமே பகிர்ந்துக்க… ச்சே” 

அதற்கு மேல் மித்ரனால் பேச முடியவில்லை.தன் காதல் பொய்த்து போகும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை அவன்.கல்லூரி முழுதும் இவர்களின் காதல் தெரியும். இவர்கள் சொல்லாமலேயே அனைவரும் தெரிந்துகொண்ட விடயம்.இதுவரை பொது இடங்களில் தகாத முறைகளில் இருவருமே நடந்துக் கொண்டதில்லை.பார்ப்பவர் ரசிக்கும் படியான காதலர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.அவன் கொண்ட நேசம் பொய்த்து போனதை எண்ணி நெஞ்சம் விம்ம, 

“மித்து நான் ரொம்ப நாளா யோசிச்சுதான் உன்கூட பேசலாம்னு வந்தேன்.கண்டிப்பா உனக்கும் என்மேல இருக்கது காதலா இருக்காது.கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன்.”

“உன்னை போலயே அடுத்தவங்களும் இருப்பாங்கன்னு நினைக்காத நிஷா.என் காதல் எந்தளவுக்குன்னு உன்னால புரிஞ்சிக்க முடில.நீ காதல்ன்னா என்னன்னு நினைச்சிருக்கியோ அது காதலான்னு முதல்ல முடிவு பண்ணிக்கோ. அப்றம்…”

“அரையும் குறையுமா உடுத்திக்கிட்டு விதம் விதமா நாளுக்கு ஒருத்தனோட போறவளுங்களைக் கூட நம்பிறலாம்.ஆனா உன்னை போல அடக்கமா,அம்சமா வீட்டுக்கு அடங்கினவளுங்களை எப்போவுமே நம்பக்கூடாதுடி.”

“நீ என்கிட்ட ஒரு பீலுமே வரலைன்னதெல்லாம் சுத்தப் பொய். என்னை விட உனக்கு எடுப்பா ஒருத்தன் சிக்கிருப்பான்.அவனை பிடிக்க என்னை கலட்டி விடற.நாம பிரிஞ்சுரலாம்னு சொல்லிருந்தாக்கூட மனசு ஏத்திருக்கும்டி. ஆனா பாரு நீ சொன்ன காரணம்,’

‘ஏன்டி இப்படி பண்ற… உன்னை இப்ப கூட கோவமா பார்க்க வரல.”

இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.சில நொடிகளை அவனை அமைதி படுத்திக்கொள்ள எடுத்துக்கொண்டவன், 

“இதுவே உன்னை கடைசியா பார்க்குற நிகழ்வாகட்டும்.” மேசை மீதிருந்த அலைபேசியை எடுத்தவன் அவ்விடம் விட்டு புயலென நகர்ந்தான்.அவன் கிளப்பிய வேகத்தில் அவனது இருச்சக்கர வண்டி சென்று நின்ற இடம் தன் உயிர் நண்பனின் வீடு. 

வீட்டினுள் நுழைய அவனை எதிர்கொண்ட வாசுகி அவன் முகம் காணவுமே, பயந்தவராக 

“மித்ரா என்னாச்சுடா? அவன் கன்னம் வருடி கேட்க ‘ஒன்னில்லை’ என தலையே அசைந்தது.வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டு வெளி வர மறுத்தன. 

‘வா’ என அவனை கிருஷ்ணாவின் அறைக்கு அழைத்து சென்றவர்,அவனை கட்டிலில் அமரவைத்து அவனருகே அமர்ந்துகொண்டவர், 

“ரொம்ப மனசு கஷ்டமாயிருக்க,அதை விட ரொம்ப கோபமா இருக்கடா. அதுனால இப்போ எது பேசுனாலும் தப்பா தெரியும். கொஞ்சம் ரிலாக்ஸா இருடா.கிச்சா இப்போ வந்துருவான்.உனக்கு சாப்பிட ஏதும் எடுத்துட்டு வரேன்.” என மித்ரனின் தலைகோதிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.

கிருஷ்ணா மித்ரனை விடவும் ஒருவயது பெரியவன் இருந்தும் இருவரும் நெருங்கிய உயிர் நண்பர்கள்.கிருஷ்ணாவின் தந்தை 

ராஜ்,மித்ரனின் தந்தை குணசீலனோடு நல்ல நட்பில் இருப்பதோடு இருவரும் வைத்தியர்களாக இருக்க பிள்ளைகளின் நட்புக்கு அது வழிவகுத்தது.மித்ரன் தன் தந்தையின் துறையை தேர்ந்தெடுக்க, கிருஷ்ணாவோ வர்த்தகதுறை தேர்ந்தெடுத்து படித்தான்.இப்போது ஓர் ஆடையகத்தை தொடங்கி இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறான்.தன் தந்தையின் பண உதவியோடு ஆரம்பித்தவன் திறம்பட ஆடையகம் வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

வீட்டினுள் நுழைந்தவன் அவசரமாக அறைக்கு சென்று பார்க்க கட்டிலில் சாய்ந்திருந்த நண்பன் விட்டத்தை வெறித்திருந்தான்.இவன் வரும் அரவம் கேட்கவும் எழுந்தவன்,

 “கிருஷ்ணா வெளில போலாம்டா.”

நண்பனின் தோற்றம் என்னவோ நெருட சரியென்றவன் உடையும் மாற்றாது அவனை அழைத்துக்கொண்டு மிக நீண்ட தூரம் சென்றான் கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணம்.பாதை அமைதியடைந்து இவர்களது வண்டி மட்டும் நின்றிருந்தது. வண்டியில் கண்ணாடியை இறக்கிவிட்டவன்,இருக்கையை சாய்வாக வைத்து அமர்ந்துகொண்டான்.மித்ரனை திரும்பிப் பார்க்க அவன் எப்போதோ இருக்கையை சாய்வாக வைத்து சாய்ந்தமர்ந்திருந்தான். 

“மித்ரா…”

“…”

சில பல நிமிடங்கள் வாகனங்களின் இரைச்சல் இன்றி அமைதியான பாதை வழியே இருவரும் இருளை பார்த்திருந்தனர். 

மித்ரன் மனம் திறந்து தன் முழுவதும் உரைப்பதென்பது கிருஷ்ணாவிடம் மட்டுமே. தன் முழு பாரத்தையும் கொட்ட கேட்டிருந்தவனுக்கு அதிர்ச்சிதான். 

இப்போது தன் நண்பனை தேற்றுவது தான் முக்கியமாக இருக்க,சொல்லிமுடித்தவனோ இவனை பார்த்து, 

“நான் நாளைல இருந்து காலேஜ் போகல.”

“மித்து ட்ரைனிங் ஆரம்பிச்சுருவாங்க டா.”

“வேணாம் டா.எப்போன்னாலும் இன்னொரு முறை எனக்கு அவளை பார்க்க வேணாம். அந்த பீல்டுன்னா எப்படியும் சந்திக்க நேரும். ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாத.”

“மித்ரா உன் லைப்.கடைசி நேரத்துல பின்வாங்குற.உன் எதிர் காலத்தையே பாதிக்கும் டா.நல்லா யோசிச்சுக்கோ.”

தன் நண்பனின் முடிவு துளியேனும் மாறாது என்பதை நன்கறிந்தவன் முடிவு உறுதியாக முன் மாற்ற நினைக்க, 

“நான் உன்கூட சேர்ந்துக்கலாம்ன்னு இருக்கேன்.வேணாம்னா சொல்லு”

“உன் இஷ்டம்” என்றுவிட்டான் கிருஷ்ணா. 

மருத்துவத்தை வேரோடு தன்னிலிருந்து பிரித்து விட்டான்.தன் வீட்டினர் எவ்வளவு கூறியும் கேட்க மறுத்தான். காரணமும் சொல்ல மறுத்தான். தெரிந்தவன் கிருஷ்ணா ஒருவனே.அவன் மூலமே குணசீலன் தெரிந்துக் கொண்டார்.

இப்படியாக ஒருவருடம் பகுதிநேர வர்த்தக துறை சார்ந்த படிப்புகளை தனக்கு சாதகமாக படிக்க கற்றுக்கொண்டவன், நண்பனோடு சேர்ந்து ஆடையகத்தை விரிவு படுத்தினான்.மூன்று வருடங்கள் சென்றிருக்க இன்னும் இரண்டு கிளைகள் ஆரம்பித்திருந்தனர். கிருஷ்ணாவை விட வர்த்தக சூட்சமங்களை கண்டறிந்து, ‘பக்கா பிஸ்னஸ் மேன்’ எனும் பெயர் கொண்டு பிரபலமானான்.வீட்டினரோடும் அதிக பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள மறுத்தான். தன் தங்கையின் திருமணத்தின் போதும் மூன்றாமவனாக நின்றிருந்தான்.

ஏதோ பெரும் ஏமாற்றம்.’எங்கனம் என் அன்பை தூக்கி எறியலாம்.எவ்வளவு கண்ணியமான காதலை அள்ளி வழங்கியிருந்தேன்,என்னை ஏமாற்ற நினைத்தவள் நல்லவளாக இருந்திருக்க முடியாது.நான் பொய்யாக நேசம் கொள்ளவில்லையே’ காதல் தந்த வலியினால் வெறுத்தான் எதை வெறுத்தான் என்பது அவனுக்கே புரியா நிலை.

அன்று கிருஷ்ணாவோடு பகிர்ந்தது தான் அதன் பின் அவன் யாருடனும் மூன்று வார்த்தைக்கு மேல் பேசியிருக்க மாட்டான். தொழிலில் மட்டுமே அவன் கவனம் இருக்க மனமோ நாளுக்கு நாள் பாரமாகி வெடித்து சிதறும் தருவாயில் இருந்தது.இது அறியாத கிருஷ்ணா நண்பன் தனக்குள் ஒடுங்கிக்கொண்டான் அவனை அதிலிருந்து மீட்டவே வழி செய்ய, நண்பனின் மனதை திறக்க முற்படவில்லை.  

மித்ரனின் மனம் பாராமாகிட அவன் பாரத்தை அவனே அறியாது இறக்கி கொள்ள பயன் படுத்திய வழி என்னவோ பெண்ணவளுக்கு வில்லனாகிப்போனான். 

உறங்கிக்கொண்டிருப்பவனை பார்த்திருந்த கிருஷ்ணா நண்பனின் கடந்த காலத்தை எண்ணி முடிக்க நண்பனிடத்தில் மெல்லிய அசைவு. 

 

***