வில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 2

Screenshot_2020-12-18-06-54-30-1-321f819c

Vv. final2

 

மித்ரன் வீடு வந்ததுமே தன் அன்னை தந்தை அறைக்குச் சென்று வீணாவை பிடித்திருப்பதாகவும் அவளை திருமணம்  செய்துகொள்ள கேட்டவன், அவள் குடும்பம் பற்றி ஆராய வேண்டாம் அவள் கிருஷ்ணாவின் தங்கை அவ்வளவே என்று கூறிட புரிந்த அன்னை தந்தையோ அவன் வாழ்வு சிறக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தினர்.

 

அதன் பின் கிருஷ்ணாவின் வீட்டினரோடு வந்து பேசி இருவருக்குமாய் திருமணம்  நடத்தலாம் என்று முடிவு செய்திட விடயம் அறிந்த வீணா,மறுத்து ஏதும் கூறவில்லை எனினும் அவள் விருப்பமின்மை அவள் முகம் தனில் தெளிவாய் காட்டியிருந்தாள்.அவர்கள் எப்போதும் பேசிக்கொள்ளும் வெளி இருக்கையில் அமர்ந்திருந்த வீணாவின் அருகே அமர்ந்த கிருஷ்ணா, சிறிது நேரம் வீணாவின் எந்த எதிர்வினையும் காணாது அவனே பேசினான்.

“பட்டு, உன் மனசுல இருக்கது நல்லாவே உணர முடிது.நீ மித்ரனை எந்தளவுக்கு நேசிக்கிறணும் உணர முடிது.அவன் நினைவில் திரும்ப அந்த நாட்கள் வந்தா தானே அவனுக்கு கஷ்டமா இருக்கும். அதோட தப்பா எதுவுமே நடக்கவும் இல்லையே பட்டுமா. உங்க ரெண்டு பேரோட புரிந்துணர்வும் அன்பும் ஒன்னா இணைய இரண்டு பேருமே சந்தோஷமா வாழலாம் , நீயும் நம்மலோடயே இருக்கிற பீல் இருக்கும். அவனும் உன் மேல ரொம்ப காதலா இருக்கான்டா. யோசிச்சி பாரு. உன்கூட அவன் இப்போ ஒருவாரமா பேசணும்னு சொல்லிட்டு இருக்கான் நீதான் அவனை அவொய்ட் பண்ணிட்டே இருக்க. அவன் ஏன் வேணாம்னு கேட்டா அதுக்கான. பதில் உன்கிட்ட இருக்கணும். அப்டி உனக்கு இருக்குன்னா ஓகே. ஆனா ஏற்கனவே அவன் ரொம்ப உடைஞ்சு காயப்பப்பட்டு போனவன். எங்களை விடவும் உனக்கு அது நல்லாவே புரிஞ்சிருக்கும். யோசிச்சி ஒரு முடிவு பண்ணுடா. காலைல உன்ன கண்டிப்பா மீட் பண்ணனனும் சொல்லிருக்கான். “

வீணா அவனோடு எதுவும் பதில் பேசாத போதும் அவன் தோள் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரம் அவளோடு இருந்தவன் அவள் தலை கோதிவிட்டு உள்ளே வருமாறு கூறி அவ்விடம் எழுந்து செல்ல வீணா அதே இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள்…

 

மாலை மங்கி வளர் பிறை நிலவு மேகங்களிடையே வளம் வர ஆரம்பித்திருக்க அதன் வழி இவள் கண்களும் அலைந்தப்படி இருந்தது. இரு பொழுதுகள் ஒளி தரும் கதிரவன் இரவுக்கும் ஒளி கடனாய் கொடுத்து மறைவதை மறந்து இரவின் இருள் நிலவுக்கு ஏன் அத்தனை முக்கியம் என்று புரியவே இல்லை.இனி வாழப் போகும் காலம் தானே அதிகம்.அதற்காய் சிறு பொழுது எனைத் தாக்கிச் சென்ற நிகழ்வைக் கொண்டு என் காதலை மறைப்பதில், என் எதிர்காலத்தை தவிர்ப்பதில் ஏற்படும் வலி எனக்கு மட்டுமல்லாமல் அவனுக்கும் சேர்த்து தானே.

எதிர் காலத்தை எதிர் கொண்டு இறந்த காலத்தின் தாக்கத்தை அதைக் கொண்டே நிவர்த்தி செய்யலாமே.’

 

‘ஆனாலும் அவன் மனம் அதைக் கொண்டு காயப்பட்டால்…’

 

வீணாவின் மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்க வீட்டினுள்ளே வாசுகி இவளை அழைக்கும் சத்தம் கேட்கவும் எழுந்து உள்ளே சென்றாள். சரி எதுவென்றாலும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றவள் அன்றைய. இரவை கழித்து காலை எழுந்ததும் அவனுடன் என்னவென்று பேச அதை மனதில் போட்டு உலன்றுக்கொண்டே தன் வேலையிடம் வந்து சேர்ந்தாள். வந்து சிறிது நேரத்திலேயே தன் கணினித் திரையில் மித்ரன் தன் தளம் உள்ளே நுழைந்ததைக் கண்டவள் அவசரமாக எழுந்து வெளியில் சென்றாள். சென்றவள் வாடிக்கையாளர்கள் இருக்குமிடமே சுற்றிக்கொண்டிருக்க மித்ரன் அவள் தவிர்க்கும் விதம் ரசித்தாலும் தவிக்கும் மனமும் அவள் விரல்கள் கோர்த்து பிசைவதைக் பார்த்து உணர்ந்தாலும் ஒருக்கட்டத்தில் அவளே அறியாது அவள் அறைக்குள் போய் அமந்துக் கொண்டான். எப்படியும் வந்தாகத் தானே வேண்டும்.

 

வீணாவும் சிறிது நேரம் செல்ல தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள தன் அறை நுழைந்தவள் தன் இருக்கையில் சுவர் பக்கமாய் திரும்பி அமர்த்திருந்த மித்ரனை கவனிக்க வில்லை. அதன் அருகே சென்று தன் மேசையில் சாய்ந்து நின்றுகொண்டவள் தண்ணீர் அருந்த, அவளையே பார்திருந்தான். அவன் வாசனை அவள் உணர்ந்தாலும் பிரம்மை யென்றே நினைத்துக் கொண்டாள்.அவன் இருந்த பக்கம் திரும்ப அவனை எதிர் பாராதவள் தடுமாற்றம் கொள்ள சட்டென அவளிருக்கையில் இருந்து எழுதவன் அவளுக்கு எதிரே நின்றான். வீணா தலை நிமிர்ந்து பார்க்க சங்கடமாய் உணர அவன் அடுத்துக்கேட்ட வினாவில் கலங்கிய கண்களோடு ஏறிட்டாள்.

 

“வீணா உனக்கும் என்னை பிடிக்கவே இல்லையா? “

 

‘உனக்கும் ‘ என்று மித்ரன் கேட்டிட அவன்குரல் இருந்த வேதனையில்,

மனம் தாங்காது,

“அச்சோ அப்டில்லாம் ஒன்னும்…’

 

“வீட்லயும் சரியா யார்கிட்டயும் பேசல, வீணா நீ இங்கையும்..ஒருவாரமா வரல, வந்தும் இவ்ளோ நேரம் என்னை தவிர்த்துட்டே இருக்க நானும் என்னன்னுதான் நினைச்சுக்க?’

 

“அப்டில்லாம் ஒன்னுல்ல.’

“அப்போ நான் வீட்ல நீ ஓகே சொன்னன்னு சொல்லிரட்டுமா?”

“இல்ல வேணாம் அது அப்றம் உங்களுக்குத் தான்…”

ஏதோ கூறவந்தவள் சட்டென நிறுத்தி விட்டு அவன் எதிரே திரும்பிக் கொண்டாள்.

 

“வீணா என்னை பாரு… ” அவள் பின்னோடு நின்றுக்கொண்டவன் அழைக்க அவள் பேசாத்திருக்கவும், சரி வேணாம். ஆனா ஏன்னு நீ உண்மையான காரணம் என்னனு நீ இப்போ என்கிட்ட சொல்லணும். அதுக்கப்றம் நா உன்னை ஒன்னும் கேட்கப்போறதில்லை. “

 

வீணாவின் பதில் இல்லாது போக அவளை  தன் பக்கமாக திருப்பினான். அவனை நிமிர்ந்து பாராத்திருந்தவளை தன் ஒரு விரல் கொண்டு நாடி பிடித்து நிமிர்த்தியவன்,

“வீணா என்னை பாரு?”

அவள் மெதுவாக கழங்கிய விழிகளோடு அவனை ஏறிட, இந்த கண்கள்ல நான் பார்த்தது காதல் இல்லேன்னு சொல்றியா, என்னை பார்க்குறப்ப எல்லாம் என்னையே சுத்திவர இந்த கண்ரெண்டுக்கும் சொந்தக்காரி எனை காதலிக்கவே இல்லையா? தூக்கத்துலயும், உனை நீ அறியாமையும் நீ வெளிப்படுத்துற வீராக்கு என்ன அர்த்தம் சொல்றீயா?’

 

‘ஒரு காரணம் சொல்லு ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு. இல்ல ஒன்ஸ் நாம பேசிட்டு இருக்கப்ப கிருஷ்ணா சொன்னானே நா உன்னை ஸ்டாப் முன்ன திட்டிட்டேன்னு அதான் ரீசனா, அதை மனசுல வச்சுட்டு தான் வேணாம்னு சொல்றியா? ரொம்ப ரூடா நடந்துக்கிட்டனா சொல்லு வீணா? “

 

மித்ரனின் வலி மிகு வார்த்தைகள் அவளை தாக்க, கண்களில் நீர் வழிய. அவனையே பார்திருந்தவளுக்கு பேசத்தான் முடியவில்லை.

” நீ என்னை பார்க்குறப்ப இருக்க காதலை விட நா உன்ன பார்த்துருவனோன்னு உன் கண்ல இருக்க பதட்டம் தான் அதிகமா பார்திருக்கேன் வீணா.’

‘நா என் சுயம் மறந்திருந்தப்ப தப்பா உன்கிட்ட நடந்துட்டேனா வீணா?”

 

“அச்சோ அப்டில்லாம் இல்லை. நா உங்களை ரொம்ப நேசிக்கிறேன். என்னால நீங்க இல்லாத. வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடில, உங்க மேல உயிரையே வச்சிருக்கேன். ” கூறியவள் அவன் நெஞ்சோடு தன் முகம் புதைத்து அழுது கரைந்தாள். அவள் காதல் நன்குணர்ந்திருந்தவன் தன் நெஞ்சோடு சாய்ந்திருந்த தன்னவளை அணைத்துக்கொண்டவன் அவள் தலையில்  தன் கன்னம் வைத்துக்கொண்டான்.

 

வீணா உன் மனசுல ஏதோ வச்சு வருத்திக்கொண்டு இருக்க. அதுவும் நம்ம சம்பந்தப்பட்டது. எனக்கு தெரியவேணாம்னு நினைக்கிற. கரெக்டா? ‘

அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,

 

‘அப்போ இதுக்காகத்தான் நீ என்னை வேணாம்னு சொல்ற.நாம கல்யாணம் பண்ணினதுக்கு அப்றம் அதைப்பற்றி தெரிய வந்துட்டாலும் நாம இருக்க சூழ்நிலை பொறுத்து, நம்ம புரிந்துணர்வுகள் கொண்டு அதை அப்போ பார்த்துக்கலாம். அதுக்காக நீ உன் வாழ்க்கை இப்டி கஷ்டப்படுத்திக்காத. என்னையும் தவிக்க விடாத. “

 

“நா கிருஷ்ணாக்கு கால் பண்ணி நீ ஓகே சொல்லிட்டேன்னு சொல்லவா? ரொம்ப சந்தோஷப்படுவான்.”

 

“இல்ல அது… “

 

இனிமேல் அது,இது என்று ஒன்றும் இல்லை. அவள் கண்ணோடு கன்னம் சேர்த்து தன் உள்ளங்கையால் அழுந்த துடைத்தவன், அவள் நெற்றியில் இதழ் பதித்து,

“ஐ லவ் யூ சோ மச் வீணா. என் நேசம் மொத்தமும் உனக்காக மட்டுமே தரணும்னு நினைக்குறேன் உன் எல்லாமும் நானே இருக்கணும்னு நினைக்குறேன்.நாம நிறையா பேசணும் வீணா. உன் கூட உன்னை ரொம்ப லவ் பண்ணி அப்றம் கல்யாணம் பண்ணிக்கணும் தோணுது. பட் வீட்ல சீக்கிரமா பண்லாம் சொல்றாங்க. அதான் யோசிச்சிட்டு இருக்கேன். “

 

அவன் பேச அவன் காதல் உணர்ந்தவள் அவன் நினைவு திரும்பி எதாவது நிகழ்ந்தால் அதை சரிசெய்ய கடவுளை அப்போதிருந்தே துணைக்கு அழைக்க ஆரம்பித்து விட்டாள்.

 

இருவரும் மனம் ஒன்றி வீடு வர முன்னமே கிருஷ்ணா வீட்டினருக்கு கூறியிருக்க அவர்கள் அன்றைய நாளே மித்ரன் வீட்டினர் வந்து மித்ரனின் அன்னை அவளை அருகே அழைத்து அவள் தலைகோதி முத்தம் இட்டவர் தன் மகளின் துணைக் கொண்டு வீணாவின் தலை நிறைய மல்லிகை சூடி மித்ரன் அவள் கை பிடித்து மோதிரம் அணிவித்து விட்டு அவளுமே அவனுக்கு அணிவித்து அவளை இன்னும் உரிமை ஆக்கிக் கொண்டான். வீணாவின் மனநிலை மாறும் முன்னே கிருஷ்ணா இதை பண்ணி முடித்திட வாசுகியோ,மித்ரன் வீட்டினரோ நாள், நேரம் பார்க்கலாம் என்றதையெல்லாம் மறுத்து இதை 

நடத்தியிருந்தான்.

 

வீணா ‘ தன் அக்காவால் வர முடியாது’என்று கூறியும் கூட பொருட் படுத்தவில்லை என்று கோபம் காட்ட அதையெல்லாம் கணக்கில் கொள்ளவே இல்லை அவன். அதன் பின்னர் திருமண நாள் தாங்களே பார்ப்பதாகவும் அதுவும் சீக்கிரமாகவே நடக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் ஆசைக் கொண்டிருக்க,இவர்களுக்கு திருமண நாள் மூன்று மாதங்கள் கழிந்தே இருந்தது.அப்போதைய நேரம் தாமரையால் கலந்துகொள்ள முடியாது என்று மறுத்த வீணா இன்னும் இரண்டு மாதங்கள் போய் வைக்கலாம் என்றாள்…

 

மித்ரனோ தான் இன்று கூறிய ( காதலித்து பின் திருமணம்)ஆசைக்காக செய்கிறாள் என்றிக்க, அவளோ இவ் இடைப்பட்ட காலத்தில் மித்ரன் நினைவு வந்துவிட்டால் அவன் மனநிலை எப்படியென்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் நடக்கலாம் என நினைத்தாள்…

 

அதன் பின்னே மகிழும் கர்பமாகி விட வீட்டில் சந்தோஷத்திற்கு குறை இருக்க வில்லை. எப்போதும் போல வீணா வேலைக்கு சென்று வர மாலை இருவருமாக சிறிது நேரம் அவர்களுக்காக நேரம் செலவிட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் உணர்ந்து நடந்தனர். அவனை ஏன் அந்தப்பெண் விட்டுச்சென்றாள், அவன் தனக்கென்று கடவுள் எழுதி இருப்பான், ஆம் அதை மித்ரனின் ஒவ்வொரு செயலும் அவளுக்கு உணர்த்தியது. இவ்வாறு இருக்க ஒருமுறை  ‘அவள் அப்பா, தம்பி பார்க்க வேண்டுமா?’ என்று மித்ரன் கேட்கவும் அவள் விரும்பவில்லை. ஏனென்றால் தாமரை அவள் தம்பியோடு பேசிப் பார்த்து வீணாவை கண்டதாகக் கூற அவனோ அவளோடு ஒட்டோ – உறவோ வைக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் “உன்னோடு கூட ஜஸ்ட் அக்காங் கிற பீல் தான் மத்தபடி ஒன்னும் இல்ல என்று ” கூறிட தாமரை அதை வீணாவிடம் வேறு விதமாய் கூறி இருந்தாள். எனவே இவளும் அதை உணர்ந்து மறுத்து விட்டாள்.

 

இவ்வாறு இனிதாக இவர்கள் காதலித்து திருமண பந்தத்தில் இணைய இருவருக்கும் 

கிடைத்த சந்தர்ப்பதை உணர்ந்து அனுபவித்தனர்…