வில்லனின் வீணையவள் -11

Screenshot_2020-12-18-06-54-30-1-26690b05

வில்லனின் வீணையவள் -11

 

 

“என்ன பட்டு,கண்ண திறந்துட்டே கனவா?”
“ஆஹ்ன்,கனவெல்லாம் இல்லை ஹாப்பிக்கா.”

“அப்போ நான் பார்குறப்ப எங்கயோ பார்த்துட்டே தனியா சிரிச்சிட்டே இருந்த…”

“அதுவா,சும்மாதான்.” என்றாள்.
“நம்புறே மாதிரி இல்லையே…” மகிழ் கூற, அவள் கைகளைப் பற்றிகொண்டவள்
“அதை விடுங்க, போனதும் வீட்ல பேசிட்டு சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துருவீங்க தானே?.” என்றிட,

“பார்க்கலாம் பட்டு. இத்தனை நாள் நான் கேட்டு சரி சொல்லாதவன் இப்போ அவன் பிரென்ட் சொன்னதும் ஒருவார்த்தை மறுத்து பேசாம ஓகே சொல்றான். இதுவே திரும்ப அந்த நிஷாவால மித்துவுக்கு ஏதும் மனக்கஷ்டம் வந்துட்டா திரும்ப விரட்டி விட்ருவான். என்னை விட அவனுக்கு அவன் பிரென்டுதான் முக்கியம். என்னை புரிஞ்சுக்கவே இல்லை.”
மகிழின் கண்கள் நீர் திரண்டு விட வீணாவின் கைகளை விடுவித்துக்கொண்டு அறையினுள் செல்லபார்க்க, அவள் கைகளை விடாது பிடித்துக்கொண்ட வீணா,

“ஹாப்பிக்கா, வீராக்கூட உங்களுக்கு கோபமா?” என்றிட,
“ச்சே ச்சே, அவன் கூட நான் யேன் கோவிச்சுக்கப் போறேன். கிருஷ்ணா அவன் பிரெண்டோட மனசை மட்டும் பார்த்திருக்க வேணாம். இப்போ கூட அவனா கூப்பிட்டிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்…”

“ஹாப்பிக்கா, என்னால ஒன்னும் சொல்ல தெரில.ஆனா ரெண்டுபேருமே ரொம்ப மனசலவுல கஷ்டப்படுறீங்கன்றது மட்டும் நல்லாவே புரிது.எப்பவும் ரெண்டு பேருமே அடுத்தவங்க முன்னாடி உங்க முகத்துல அதை காட்டினது இல்ல. அதோட உங்களுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் உங்க கஷ்டத்தை பகிர்ந்துக்கிட்டதும் இல்லை கரெக்டா?’

மகிழ் ‘ஆம்’ என்பதாய் தலையாட்ட,

‘முதல்ல வீட்டுக்கு வாங்கக்கா,அம்மா அப்பாக்கெல்லாம் எவ்ளோ கஷ்டம், அதோட யாரும் உங்களுக்காக வாழாம இருக்கல்லயே.நீங்க ரெண்டு பேரும் எதுக்காக பிரிஞ்சு கஷ்டப்படணும். வீராக்காக அர்த்தமே இல்லாம பிரிஞ்சு இறுத்துடீங்க. இப்போ அவர் மூலமா சேரணும்னு இருக்கு.’

‘வீட்டுக்கு வந்து ஒன்னா இருந்து என்ன வேணா பண்ணிக்கோங்க.ப்ளீஸ் க்கா “

வீணா பேச பேச கேட்டுக்கொண்டிருந்தவள் அவள் கன்னம் வருடி ‘சரி’ யென்பதாய் கூற அடுத்து அவள் கூறியதில் சிரித்துவிட்டாள்.

“பாவம் வீரா கூட ரொம்ப கில்டியா பீல் பண்ணாங்கல்ல. நீங்க வீட்டுக்கு வந்துட்டா அவங்களும் ஹாப்பியா பீல் பண்ணுவாங்கல்ல.”

“ஓஹ் அப்போ நீ மித்து பீல் பண்றான் என்பதற்காகத்தான் இவ்ளோ பேசினா?”

சிரித்துக்கொண்டே கேட்க,
“அப்படியும் சொல்லலாம் தான்…” என்று இழுத்த வீணாவும் சிரித்துவிட “கேடி.”என்றவள் சரிடா திங்செல்லாம் பாக் பண்ணிடு ஈவினிங் கிளம்பலாம் என்றிட இருவருமே மனம் இதமாகி இருக்க முகம் சற்று பொலிவுடன் காண அம்மகிழ்வுடனே வீடு வந்து சேர்ந்தனர்.

நடு இரவாகியிருந்தது இருவரும் வந்து சேர.மகிழ் இவளை விட்டதும் அதே வண்டியில் கிளம்பிட வீணா உடைமாற்றி தனக்காய் விழித்திருந்த வாசுகியோடு சிறிதுநேரம் அளவளாவி விட்டே உறங்கினாள். அவரும் பலநாள் பிரிந்திருந்தது போல அவளோடு கதைத்து விட்டே உறங்கச்சென்றார். ஏனோ வீட்டுக்கு வந்திருந்த உறவினன் பற்றி கூற மறந்து போனார்.

இரவு நேரம் சென்று உறங்கியிருந்தாலும் காலை எழும் நேரமே விழிப்பு வந்திட காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அறை பெல்கனியில் வந்து நின்றவள் கீழே தோட்டத்தினைப் பார்க்க கிருஷ்ணா காலை உடற்பயிற்சி முடிந்து இவள் அறைப்பக்கம் இருந்த இருக்கையில் அமர வருவதைக்கண்டவள் அவசரமாக அறைக்குள் சென்று தண்ணீர் கூஜாவை எடுத்து வந்து தினம் செய்யும் அபிஷேகத்தை நடத்திட,
கீழ தோட்டத்திற்கு வந்த கிரிஷ்னாவிடம் அன்னையோ வீணா வந்துவிட்டதாகக் கூற அவனோ இருக்கையில் அமராது அப்படியே வீட்டினுள் நுழைய அங்கே அமர்ந்ததென்னவோ மித்ரன்.

தான் அமரவும் தன் மேல் கொட்டிய குளிர் நீர் உடற்பயிற்சியில் வியர்த்திருந்த உடலுக்கு சுகமாய் இருக்க கைகள் இரண்டையும் விரித்து அனுபவித்தவனை பார்த்து ராஜ் சிரிக்க,

” இதுக்குதான் இவ்ளோ அவசரமா வீட்டுக்குள்ள போனானா? ” என்று ராஜிடம் கேட்டுக்கொண்டே அவர் பதில் கூற முன்னமே தோட்டத்தில் இருந்த நீர்க்குழாயை அவசரமாக எடுத்தவன்
மேலே இருந்த அறை நோக்கி கீழிருந்த
வண்ணமே நீர் இரைத்தான்.

கீழே நீர் ஊற்றியவள் எப்போதும் போல ஒழிந்து கொண்டிருந்தவள் மீண்டுமாய் எட்டிப்பார்க்க அவள் மேல் மழையாய் பொழிந்தான் மித்ரன்.

“அச்சோ கிச்சா எண்ணப்பன்ற?…” துள்ளிக்குதித்த வண்ணம் வீணா கத்த,

‘இது யாருடா?’ என மித்ரனும் பார்க்க அறையினுள் நுழைந்த கிருஷ்ணா, “என்னாச்சு பட்டு? ” எனக் கேட்டுக்கொண்டே வந்தவன் அவள் இருந்த நிலைபார்த்து முழித்தவன் கீழே எட்டிப்பார்க்க,
மித்ரன் நனைந்து அத்தோடு கையில் நீர்க்குழாயை வைத்துக்கொண்டிருக்க

“டேய் மித்ரா என்ன பண்ற?” எனக் கேட்க மேலே பார்த்த மித்ரன்,
” டேய் அப்போ நீதான் பொண்ணாட்டம் கத்துனதா? ” எனக்கேட்டுக்கொண்டே மீதும் குழாயை அவர்கள் நோக்கி நீட்டினான். இப்போதானால் கிருஷ்ணாவும் நனைய அவனையே பார்த்திருந்த வீணா மித்ரனின் முகத்தில் தெரிந்த தெளிவு, அதில் குடிகொண்டிருந்த சிரிப்பு என்பன அவள் மனதில் ஏதோ செய்ய அவளை தோளோடு அணைத்தவன் கீழே எட்டி,

“டேய் மித்ரா நிறுத்து அதை. பாரு இவளும் தொப்பலா நனஞ்சுட்டா… ” என்றிட,அப்போதுதான் வீணாவைக் கண்டான் மித்ரன்.

“ஹேய் சாரி சாரி நான் நீன்னு நினச்சுட்டேன்…”

வீணாவோ சட்டென கிருஷ்ணாவிடம் இருந்து விடுபட்டு அவளறைக்குள் சென்று குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

மித்ரனும் அவசரமாக வீட்டினுள் நுழைந்து அறைக்குள் வந்து நுழையவும் வீணாவின் பின்னே அவளை அழைத்தவாறே “பட்டு” என பின்னே ஓடியவன்,
“அம்மா… ” என்ற சத்தத்தோடு தரையில் வழுக்கி விழுந்திருந்தான்.

வீணா அவன் இட்ட கூச்சலில் அவசரமாக குளியலறைக் கதவைத் திறக்கப்பார்க்க, மித்ரனின் சிரிப்பில் உள்ளேயே இருந்துவிட்டாள்.

“டேய் என்னடா இது?” என அவனை எழுப்பியவாறு சத்தமாக சிரித்து விட,

“எரும, முதல்ல என்னை எழுப்பி விடுடா” என இடுப்பை பிடித்தவாறே கிருஷ்ணா கூற,

“அச்சோ என்னாச்சுடா இடுப்பு சூழுகிகிச்சா? இப்போ என்ன பண்றது?” என்றுக்கேட்டவன் அப்டியே கிருஷ்ணாவோடு தரையில் அமர்ந்து விட்ட சிரிப்பை தொடர இவனுக்கோ வலி பின்னியெடுத்தது.

“டேய் உண்மையா வலிக்குதுடா…?’

‘அப்போ மகிழ் வந்தா என்ன பண்ணுவ? அச்சோ பாவம்டா நீ ” என சொல்லி இவன் சிரிக்க,

“அந்தளவுக்கு வலி இல்ல சரியப்போயிரும்.” என கிருஷ்ணா அவசரமாகக் கூற இன்னுமாய் மித்ரன் சிரித்திட, கிருஷ்ணாவும் வீணா உள்ளிருப்பதை மறந்து எதுவோ கூற இருவரும் பேசப்பேச வீணாவோ காதுகள் இரண்டையும் கைகளால் மூடிக்கொண்டவள்,

“டேய் கிச்சா இப்போ நீ வெளில போகல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
எனக் கத்த அடித்து பிடித்து இருவரும் எழுந்தனர்.

“பக்கி உள்ள அவளை வச்சுக்கிட்டு அச்சோ…” என தலையில் கிருஷ்ணா அடித்துக்கொள்ள மித்ரனோ அவனின் முதுகில் ரெண்டு போட்ட வண்ணமே,

“அந்த பொண்ணு என்னை என்ன நினைச்சிருக்கும் எரும எரும, முதல்லயே சொல்றதுக்கென்னடா? “
மெதுவாக அவனைக் கடிந்துக்கொள்ள
அதுவும் வீணாவுக்கு நன்றாகக் கேட்டது.

“இன்னும் போகலையா கிச்சா? “

“இதோ போயாச்சே… ” என்றபடி அறைவிட்டு இருவரும் வெளியில் ஓடி விட்டனர்.

“பட்டு,வெளில தரை முழுசும் தண்ணி, பார்த்து வா.”என மீண்டும் அறையினுள் தலையை மட்டும் நீட்டி கிரிஷ்ணா கூற,

“போகலையா இன்னும்?” என கத்தினாள்.

“நான் என் ரூம்ல இருக்கேன்.”என்று கத்திக்கொண்டே அவனறைக்கு ஓடியே விட்டான்.
பின் அனைவரும் குளித்து கிளம்பி வர, வீணா அறையிலிருந்து அவர்களை கத்தி அனுப்பிவிட்டிருந்தாலும் மித்ரன் முன்னே எப்படி சகஜமாய் இருப்பது என்று கையை பிசைந்துகொண்டு இருக்க வேலைக்கு செல்லவும் நேரமாவதை உணர்ந்தவள் இனி எப்படியும் இப்படி அடிக்கடி சந்தித்து தானே ஆக வேண்டும் என்று உணர்ந்தவள் அத்தோடு தன்னாலேயே மித்ரன் தன்னை பற்றி நினைவு வந்து கஷ்டப்பட்டு விடக்கூடாது அவனது சிரிப்பும் நிம்மதியான இம்முகமும் எப்போதும் இது போலவே என்றுமே இருக்கவேண்டும் என்றெண்ணிக்கொண்டவள் தன் கைப்பையையும் அலைபேசியையும் எடுத்துக்கொண்டே உணவு மேசையை நோக்கிச் சென்றாள்.

அனைவரும் அமர்ந்திருக்க இவளுக்காகவே காத்திருந்தனர்.

“மோனிங் டா பட்டு… ராஜ் கூற,
“மோனிங்ப்பா…” என்றவாரே அவரருகே போய் அமர்ந்துகொண்டாள். எதிரே

இருந்தனர் கிருஷ்ணாவும் மித்ரனும். “மோனிங் வீணா. மித்ரன் சகஜமாய் கூற,
“மோனிங் சார்.” என்று இவளும் கூறி சற்றே இதழ் பிரியாமல் சிரித்தவள் பக்கத்திலிருந்த வாசுகியிடம் பேச,

“இதென்ன ஆபிஸா? சார் சொல்ற, இவனும் எனக்கு கிருஷ்ணா போலத்தான், அவன் கூட சகஜமா பேசுற போலயே இவன்கூடவும் வீட்ல பேசலாம், வெளில வேண்டியது.” என்றிட

“ஓகே மை லார்ட் என்றவள்”, சாப்பிட ஆரம்பித்தாள்.
கிருஷ்ணா சற்று ஆச்சரியமாகவே அவளை பார்த்திருந்தான். அவனுமே வீணா எப்படி நடந்துகொள்வாள், ஏதும் மனக்கஷ்டம் ஏற்படுமா என நினைத்திருக்க அவளோ சகஜமாய் பேச
அவளையே பார்த்திருந்தான். அவனைப் பார்த்தவள், அவனை முறைக்க இழித்து வைத்தான்.பின் மாலை மகிழ் வீடு செல்வதாக பேசிக்கொண்டு உண்டனர். வீணாவும் அவசரமாக உண்டவள் அனைவரிடமும் கூறிக்கொண்டு செல்ல கிருஷ்ணா அவள் பின்னே வந்து அவள் வண்டியில் ஏறி கிளம்ப முன்,

“சாரிடா பட்டு.அவன் வரான்னதும் என்னால அவொய்ட் பண்ண முடில.உனக்கு கஷ்டமா இருக்கா?”

அவனைப் பார்த்தவள், ஓர் நொடி அமைதியாய் இருந்துவிட்டு பின்,
“எவ்ளோ நாளைக்குத்தான் கண்ணாமூச்சி விளையாடலாம்.அவங்க உங்க பிரென்ட்.அதோட நானா அவங்களுக்கு முன்ன போய் நிற்க போறதில்லை. இப்படி சந்திக்க நேர்ந்தா அவொய்ட் பண்ண போறதும் இல்ல. அவங்களுக்கு நினைவு வந்தா தானே கஷ்டப்படுவாங்க. இல்லன்னா சகஜமா இருக்கலாம். நான் பார்த்தவங்களுக்கும் இவங்களுக்கும் ரொம்ப வித்தியாசம்ணா. ஆனா இப்படித்தான் அவங்க உண்மை முகம் இருக்கும்னு அப்போவே புரிஞ்சது.’இதைக் கூறும் போதே அவள் முகம் ஒளிர்ந்து காணப்பட்டது.

‘அந்த நிஷா என்ன பாவம் பண்ணாங்களோ இவங்களை இழந்துட்டா…ஹ்ம்ம். சரிண்ணா டைமாச்சு கிளம்புறேன்.” என்றவள் அவள் இருசக்கர வண்டியை கிளப்பியிருந்தாள்.

‘நீ அதிஷ்டம் பண்ணிருப்ப பட்டு நிச்சயமா இவன் உனக்கு கிடைக்க,அவனுமே…’ மனதில் நினைத்தவண்ணம் அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தவன்,மித்ரனின் “கிளம்புவமா கிருஷ்ணா.” எனும் சத்தத்தில் தான் நடப்புக்கு வந்தான்.
“இதோ கிளம்பலாம்டா.” என்றவன் பெற்றோரிடம் கூறிக்கொண்டு கிளம்பினர்.

கிருஷ்ணாவும் மித்ரனும் ஒன்றாகவே மிக நீண்ட நாட்களின் பின்னர் அவர்களது தலைமையகம் அமைந்த ஆடையகத்திற்கு வந்தனர்.மித்ரனின் இடத்தில் இருந்து இவ்வளவு நாளும் பார்த்துக்கொண்டவன் அவனை அவன் இருக்கையில் அமரவைத்து அதற்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன்,
“இப்பதான் நிம்மதியா இருக்குடா. அங்கோடி இங்கோடின்னு ப்பா முடில.”

“ரொம்ப சாரிடா கிருஷ்ணா.என்னாலேயே என்னை புரிஞ்சிக்க முடில.அவ்ளோ மனதைரியம் இல்லாதவனா டா நான்? இப்டி இவ்ளோ நாள் இருந்திருக்கேன் .”

“விடு மித்ரா. எல்லாம் நல்லதுக்குத்தான். கடவுள் எதையும் காரணமில்லாம நடத்த மாட்டான்.’

‘நல்ல வேளை பட்டு சீக்கிரமாவே புரிஞ்சி நல்லபடியா மேனேஜ் பண்ணிட்டு போறா.அவ இல்லன்னா கண்டிப்பா நான் கொஞ்சம்தடுமாறியிருப்பேன்.

‘யூ க்நொவ்,லாஸ்ட் ஒன் இயர்ல நல்ல லாபம் டா. அதுக்கும் முக்கிய காரணம் நம்ம பட்டு தான் ஐ மீன் வீணா. அதை ஆரம்பிச்சதுமே ரொம்ப அவசரப்பட்டுட்டோமோன்னு இருந்தது பட் அதை வச்சே இந்த ரெண்டு கிளைகளையும் இன்னும் ப்ரகாசமாகிட்டான்னு தான் சொல்லணும்.”
இப்படியாக இருவரும் இடைப்பட்ட காலங்களில் நடந்த வர்த்தகம் தொடர்பான விடயங்களை பேசிகொண்டவர்கள்,
“கிருஷ்ணா நீ ஸ்டோர் போகணும்னு சொன்னியே நானும் வரட்டுமா?”
“வேணாம்டா, நான் போய்ட்டு வரேன் நீ கொஞ்சம் அக்கௌஸ் பார்க்க வேண்டி இருக்கு அதை முடியும்னா பார்த்துரு.

“சரிடா அப்போ ஈவினிங் வரேன் ரெண்டுபேருமே வீட்டுக்கு போய்ட்டு அப்படியே மகிழ் வீட்டுக்கு போகலாம்.”

“ஹ்ம்ம் ஓகே.” என்றவன் கிளம்ப தொடர்ந்து இரண்டு மணித்தியாளங்களாய் கணினியில் கண்களும் கைகளும் வேலையில் ஈடுபட்டிருக்க, அவனுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த வேலையால் அவனுக்கு தேநீர் வைத்து விட்டு செல்ல, மித்ரனும் கைகளை நீட்டி பின் மேல் உயர்த்தி சோம்பல் முறித்தவன் ஒரு மீடர் தேநீர் பருகினான். அவனது அலுவலக அலைபேசி ஒலிக்கவும் அதை எடுத்து காதினில் வைத்து ஹலோ சொல்ல முன்னமே,
“கிச்சா எதுக்கு என்னை வரவேணாம் சொன்ன,நானும் வசுகூட மகிழ்வீட்டுக்கு போக வரேன்…”
யாரெடுத்தது என்று பார்க்காமல், கிருஷ்ணா என நினைத்து வீணா பேச, அந்தப்பக்கம் சத்தமில்லை என்றதும், “கிச்சா லைன்ல இருக்கியா இல்லையா?”

“ஹலோ வீணா.இட்ஸ் மீ மித்ரன்.”என்றிட இவளோ அலைபேசியை பட்டென்று வைத்துவிட்டாள்.

அவள் பேசவுமே யாரென்று புரிந்தவன், மீண்டுமாய் அவளுக்கு எடுக்க கைகள் நடுங்க இதயம் படபடக்க காதினில் அலைபேசியை வைத்தவள்,
“ஹலோ வீணா, இந்தப்பக்கம் யாருன்னே கேட்காம இப்படித்தான் பேசுவீங்களா? ஒரு கால் முறையா பேச தெரில. உங்களை நம்பி எப்படி அவ்ளோ பெரிய பொறுப்பை இந்த கிருஷ்ணா தந்திருக்கான்.”

இவளின் சத்தம் ஏதுமின்றி அமைதியாக இருக்க,
‘லைன்ல இருக்கீங்களா வீணா?’

“யெஸ்… சார்.”
மித்ரனின் இதழ்களில் புன்னகை,ஏதோ அவளை சீண்ட வேண்டும் என்று அவனுள்ளம் உந்த,
“தென் அன்செர் மீ.”

“அம் சாரி, கிச்சா தான் சாரி ஐ மீன் கிருஷ்ணா சார்தான் இருப்பாங்கன்னு சொல்லி பேசிட்டேன்.நீங்க எடுப்பீங்கன்னு நினைக்கல.”

“கிருஷ்ணாவே எடுத்திருந்தாலும் பர்சனல் எல்லாம் எதுக்கு பேசுறீங்க?அதுவும் ஆபிஸ் நம்பருக்கு.”

“சாரி சார் இனி பேசல…”

“வீணா…”

மித்ரன் கோபமாய் பேசுகிறான் என்றெல்லாம் வீணாவுக்கு தோன்றவே இல்லை.அவன் கோபக்குரல் கேட்டிருப்பவளுக்கு இது தன் உயரதிகாரி தன்னை பேசுவதாகவே எண்ணி கேட்டிருந்தாள்.

“வீணா… அ யூ தேர்?”

“இருக்கேன் சார்.”

“கோபமா பேசிட்டேன்னு கோவிச்சிடீங்களா?”

“நீங்கதான் கோபமா பேசவே இல்லையே, பட் இனி போன் பேசுறப்ப அந்தப்பக்கம் யாருன்னு கேட்டுட்டு நிதானமா, ஒபிஸியலா மட்டும் பேசுறேன் சார்.வச்சுறட்டுமா?”

“ஓகே, ஈவினிங் வசு ஆன்ட்டி
கூட நீங்களும் கிளம்பி இருங்க மகிழ் வீட்டுக்கு போகலாம் பை.”
என்று கூறி அலைபேசியை வைத்தான்.

அவனோடு உரையாடியதென்னவோ, சாதாரணமாகத்தான் ஆனாலும்
இப்படி இனி அடிக்கடி பேச நேரிடுமே. இதிலெல்லாம் என்னை அவனுக்கு நினைவு வரப்போவதில்லையே. ஆனால் எனக்கு அவன் நினைவுகளை அணுவணுவாய் நினைவு படுத்துகிறதே…

அவனோடு நெருக்கமாய் பழகவில்லை, அன்பு பகிரவில்லை,உறவுகள் ஏதுமில்லை ஆனாலும் ஏதோ ஒன்று என்னில் அவனுக்காய் இருக்கிறதே. அவனுள் ஒழிந்திருந்த நேசம் அதைக் கண்டுகொண்ட நாள் முதல் அதை என் மனம் வேண்டுகிறதே…
அவனிடம் எப்படிக் கேட்பேன்…
அவன் மனம் ரணப்படாமல் அவன் நேசத்தினை எனக்காய் எப்படிக் கேட்பேன்.
அலுவலக மேசையின் மீது தலை வைத்து அங்கிருந்த காகித மொன்றில் கிறுக்கினாள் பெண்ணவள்.

“வீரா எனக்கு மட்டும் யேன் நீ வில்லனாய்…
உன் நேசம் அதை எனக்கு மட்டுமே தந்திருக்கலாம்…
முன்னமே நீ அதை பகிர்ந்திருக்க இப்போதானால் எப்படி உனை கேட்டிடுவேன்…
ரணமின்றி உன் மனம்
அத்தோடு உன் முழு நேசத்தினை மொத்தமாய் பெற வழிதேடுகிறேன்…

வலியின்றி வழிதேடும் எனக்கு வளியாய் என்னுள் நுழைவாயா?
காத்திருக்கிறேன்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!