வில்லனின் வீணையவள் – 9

மித்ரன்,வீணாவை அவ்விடம் கூட்டி வந்து ஒரு வாரமாகியிருந்தது. நெற்றிக்காயதிற்கு மருந்திட்டு இருந்தாலும் உள்ளே இன்னுமே வலி இருந்தது. இன்னுமாய் வீக்கம், அவ்விடம் சிவந்து தலையை குனியும் போது வின் வின் என்றே வலி உயிரெடுத்தது.

 

மித்ரன் அவளை விட்டு சென்றதோடு நேற்று தான் ஆறுநாட்களின் பின் வந்திருந்தான்.அவன் அவள் நெற்றிக்காயதிற்கு மருந்திட்டு விட்டு  சென்றிருக்க அடுத்தநாள் மதியம் போலயே விழித்தாள். விழித்தவள் சுற்றம் உணரவே சில நேரம் எடுத்தது. பின் மெதுவாக எழுந்தவள் அவள் இருந்த அறையை சுற்றிப்பார்க்க  அவள் தரையில் அமர்ந்திருந்த ஒற்றைப்படுக்கையின் மெத்தை தவிர்த்து ஒரு மூலையில் ஒரு பை இருந்தது. வேறெதுவும் இருக்கவில்லை. அது கூட அவளது சான்றிதழ்கள் இருந்த பை அவசரமாக எடுத்து பிரித்து பார்த்தவள் அவள் உறங்கிய மெத்தையின் கீழ் வைத்தாள்.

 

பின் மெதுவாக எழுந்து சென்றவள்  அவறையின் ஜன்னல் வழியே பார்க்க பிரதான பாதை சற்று தூரமாய் வரிசையான வாகனங்களின் நெருக்கடியோடு காணக்கிடைத்தது. அத்தோடு தூர அடுக்குமாடிகள், குடியிருப்புகள் என இருக்க நகர் புறம்  என்று உணர்ந்தாள். வீட்டின் முன் பகுதி பெரியளவில் நிறைய வாகனங்கள் நிறுத்த எதுவாக பரந்த சிமெந்து கற்கள் பதித்து காணப்பட்டது.

 

அவலறையின் கதவுகளை மெதுவாக  திறந்து தலை மட்டும் விட்டு எட்டிப்பார்க்க, அவ்வறை விசாலமாய் நடுவே பெரியதொரு படுக்கை அதன் இடப்பக்க சுவரோடு பொருத்தப்பட்ட  நான்கு கதவுகளைக்கொண்ட நீண்ட அலுமாரி. மறுபக்கம் ஒரு கணினி மேசை அதில் சில புத்தகங்கள், பைல்கள் என அடுக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்கு வலப்பக்கத்தில் ஒரு  குளிர்சாதனப்பெட்டி அதோடு அருகே ஒரு சிறு உணவு மேசை ஒரு இருக்கையோடு.அதில் சில பைகள்.

 

அவ்வறையை விட்டு வெளியே செல்ல மனதிற்கு சற்று பயமாக இருக்கஅவ்வறையில் அலுமாரியோடு இருந்த கதவு குளியலறை என ஊகித்தவள் அதனை திறந்தாள். சுத்தமாகவே இருந்தது.சில நாட்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க ஒருவித வாடை.குளித்து சுத்தமாக வேண்டும் என்று  உணர்ந்தவள் மாற்றுடைக்கு எங்கு போவாள்.அலுமாரியைத் திறக்க அதில் மூன்று வெறுமையாகவும் ஒன்றில் ஒருசில உடைகளும் இருந்தது.அவனுடையது போலும்.

 

காட்சட்டைகள், டீ ஷ்ர்ட்கள் என இரு கைலி இருக்க அது புதிதாக  பிரிக்கப்படாமல் இருந்தது.அதில் கைலி ஒன்றையும் டீஷர்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டவள் குளித்து அவள் உடைகளை கழுவிக் கொண்டவள் கைலியை எப்படியோ தட்டுத்தடுமாறி  உடுத்திக்கொண்டாள்.

 

அவள் உடைகளைஅறையிலிருந்த  மேசையில் கதிரையில் என விரித்து விட்டு மின்விசிறியை இயக்க விட்டாள் மேசையில் இருந்த பையை பார்க்க அதில் சில பிஸ்கட் பாக்கெட்கள் இருந்தன அதை அவசரமாய் பிரித்து விக்க விக்க சாப்பிட்டாள் அதற்கு மேல் அருந்த நீர் தேட குளிர்சாதனப்பெட்டியை திறந்தவள் அதிலிருந்த தண்ணீர் போத்தலைத் திறந்து நீர் வாயிலியிலிருந்து ஒழுக  பருகினாள். பின்மீண்டுமாய் மீதமிருந்த பிஸ்கட்களை உண்டு முடித்தாள்.மேசையின் மேலிருந்த பையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த தண்ணீர்  போத்தல், உண்ண என்ன இருந்ததோ அனைத்தையும் போட்டுகொண்டு அவளிருந்த அறையில் கொண்டு சென்று வைத்துக்கொண்டாள்.

 

இப்போது உடம்புக்கு சற்று தெம்பாக  உணர்ந்தாள் அறையின் ஜன்னல்கள் கண்ணாடி தடுப்புகளால்  அமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் திறக்கும் படிஇல்லை. கதவு  அடைக்கப்பட்டால் அறையிலிருந்து யார் கத்தினாலும் வெளியே கேட்க வாய்ப்பும்  இல்லை புரிந்துக்கொண்டவள் மெதுவாக அறைக்கதவைத் திறக்க முயற்சித்தாள். ஹ்ம் ஹ்ம்… முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது அவனோ அதனை மூடிவிட்டே சென்றிருந்தான்… கண்ணாடிக்கதவுகள் எதைக்கொண்டு கொண்டு உடைக்க, மரக்கதவை  விடவும் பலத்துடன் இருக்குமோ தோன்றியது பெண்ணுக்கு.

 

சோர்வாய்  வந்து கட்டிலில்  அமர்ந்துக்கொண்டாள். தலை வலி. குளித்து வேறு இருக்கிறாள். மீண்டுமாய் காய்ச்சல் வரும் போல உணர்ந்தாள்.குடிக்க மாத்திரைகள்  ஏதும் இருக்குமா தேடிப்பார்த்தாள்…

 

அன்று அவன் அவளுக்கு மருந்திட எடுத்த பெட்டி இருந்தது. அதில்  தலைவலிக்கு அருந்த மாத்திரை இருக்க அதை அருந்தியவள், சோர்வில்  அப்படியே உறங்கிப்போனாள். இதுவே அடுத்து வந்த நாட்களும் தொடர்ந்தது. 

 

அன்று வெள்ளி மாலை நேரம்…

வீணாவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் நெற்றிக் காயம் அப்படியே வீங்கி வலியிருந்தது. இவளோ உள்ளறையில் இருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இவளுக்கிங்கே இதயம் படபடக்க, உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது…

 

காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு அவன் அறை வரும் வரை கேட்டுக்கொண்டே இருந்தாள், ஆனால் அவனின் நடைச்சத்தம் தான் கேட்கவே இல்லை.

‘போய்ட்டானோ?’ மெதுவாக எழுந்து  அவளறைக்கதவைத் திறந்து பார்க்க மேசையின் அருகே அமர்ந்து  உண்டுக்கொண்டிருந்தான். பார்த்ததும் மிக மெதுவாக கதவை அப்படியே சாற்றிவிட்டு மெத்தையில் அமர்ந்துக்கொண்டாள்.

இவள் கதவை மிக மெதுவாக  திறந்தாலும் அதை உணர்ந்தவன்  போல அவனிதழ் இடையே ஓர் சிரிப்பு…

 

‘அச்சோ! சாப்பிட்டு ரொம்ப தெம்பா வந்து என்ன பண்ணப்போறானோ?’ யோசித்தவண்ணம் மெத்தையில்  அமர்ந்திருந்தாள்.அன்று அவனது உடையை உடுத்த எடுத்தவள் இவளுடை காயும் வரை அதை உடுத்திய்க்கொண்டிருந்து பின் அவளதை அணிந்துகொள்வாள். இன்றோ அவனது உடையை அணிந்திருக்க  இவளது பாவாடை தாவணி அவனறையில்.

 

மித்திரன் அவன் அறையில் அவன் கொண்டுவந்த உணவை உண்டுவிட்டு 

எழுந்தவன் நிமிர அவள் தாவணி  அவன் கட்டிலில் விரித்து விட்டிருக்க அவள் பாவாடை அலுமாரிக்கதவில்  காய்வதற்கு ஏதுவாக தொங்கவிடப்பட்டிருந்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். பின் அவளைரையின் கதவுகளை  திறந்துகொண்டு உள்ளே செல்ல வீணா மெத்தையின் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அதில் தலை வைத்து அமர்ந்திருந்தாள். இவனைக் கண்டதும் இன்னுமாய் சுவரோடு ஒட்டிக்கொள்ள கதவில் சாய்ந்தவாறே இவளையே  உற்று பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் திரும்பி செல்லப்பார்க்க இவளோ அவசரமாக

 

“சார்…”என்றுவிட,

நின்று திரும்ப இவளுக்கோ அதற்குமேல் அவனிடம் என்ன எப்படிக் கேட்க  புரியாது உடல் இன்னுமாய் நடுங்க,

 

“என..க்..கு.. என்.. ங்.. க.. வீட் டுக்கு… போகணும் ப்ளீஸ்…”கைகள் அனிச்சையாய் கூப்பி அவனிடம் கேட்க, 

 

அவனோ அவளருகே மிக சாதாரணமாய் வந்தவன் அவள் முன் மண்டியிட்டு அவள் கூப்பியிருந்த கை இரண்டையும் அவன் வலக்கையினால்  மாணிக்கட்டோடு பிடித்தவன்,

 

“இவ்ளோ அடக்கமா,அமைதியா கேட்டா நான் விட்ருவனா? உன்னை விட அடக்கமா அமைதியான, ஒழுக்கமான  பொண்ணு நான் பார்த்திருக்கேன்டி. இப்படித்தான் பேசுவீங்கடி,இப்படி பேசியே நம்மளை அழிச்சிருவீங்க.

 

‘அவன் வார்த்தைகள் அவன்  வாயிலிருந்தா வருகின்றது? வாய் அசைவது தெரியவில்லை அவன் பேசும் போது. கண்கள் சிவந்து கோபம் முகத்தில் வெளிப்பட முகமும் சிவந்து அவள் கைகளை பிடித்திருக்கும் அவன் கையின் பிடிப்பு இன்னும் இன்னும் அதிகரிக்க பெண்ணின் கைகள் சிவந்து வலியெடுக்க ஆரம்பித்து விட்டது.

 

கண்களில் நீர் வழிய,”நான் நீங்க நினைக்கிற மாதிரில்லாம் இல்லை. நீங்க என்னை… தப்பா…”

அவள் கூறி முடிக்கவில்லை அவன்  கைகள் இப்போது அவள் கழுதை பிடிர்த்திருந்தது.

 

“நான் தப்பாகத்தான் புரிஞ்சிருந்தேன். உன்னை போல பொண்ணுங்க எல்லாம் அன்பான, ஒழுக்கமான, அடக்கமான, மனசை புருஜிக்குற  பொண்ணுங்கன்னு, தப்பாதான் புரிஞ்சிருக்கேன். பார்த்தா எல்லாம் மாற்றமா இல்ல இருக்கு. இப்படித்தான் என்னை பேசிப் பேசியே ஒருத்தி உயிரோடையே கொன்னு போட்டுட்டா. அவளைப் போல இருக்கவள் எவளும் இனி என்னை போல ஒருத்தனை ஏமாத்திர கூடாது இல்லையா. உன்னை பார்த்ததும் எனக்கு … அவளைத்தான் தோணுச்சு.”

 

“நான் அப்டில்லாம் ஒன்னும் தப்பானவ இல்லேங்க. வீட்ல என்ன தேடுவாங்க  ப்ளீஸ் வீட்டுக்கு போகணும்…”

 

“போகனும்னு நினச்சவ இந்த அஞ்சு  நாளைல போயிருக்க வேண்டியது தானே. எதுக்கு இங்கயே இருந்த. உனக்கு போகப் பிடிக்கலை அதான்  இங்கயே இருந்திருக்க. பாரு என் டிரஸ் கூட போட்டிருக்க, சோ எனக்கும் இப்போ உன்னை அனுப்பணும்னு தோணலை.  நினச்சா பார்க்கலாம்.”

 

அவள் கழுத்தோடு சேர்ந்திருந்த அவன் விரல்கள் அவள் கழுத்தை விடுவிக்க  கன்றி சிவந்திருந்தது. அதோடு அவன் கண்களுக்கு அவள் நெற்றிக்காயம் பட அதுவோ பழுத்திருக்கும் போல சலம் கட்டி வீங்கியிருந்தது. அதற்கு தையலிட்டு 5 நாட்களாகியிருந்தது. மீண்டும் அவள் கன்னத்தை அழுந்த  பிடித்தவன் அவள் கத்தக்கத்த அவள் காயத்தை அழுத்தி சுத்தம் செய்து மருந்திட்டான்…

இதுவரை மனதளவில் வீட்டில் காயப்பட்டவள் உடலளவில் தன் அக்கா பூவாய் தாங்கியே வளர்த்தாள்.வலி தாங்க முடியாது அழ அவளை பொருட்படுத்தாது சென்றுவிட்டான்.

 

அவன் வாய் வலி வந்த  வார்த்தைகளின் வலிதாங்க மாட்டாள்  என்றுணர்ந்து அதற்கு பதிலாய் இவ்வலியையும் அவளுக்கு தர வார்த்தைகளால் ஏற்பட்ட வலி குறையும் என்று செய்தானோ அவனே அறியான்.

 

இப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது. அன்று மித்ரன் ‘தப்பித்து சென்றிருக்க  வேண்டியதுதானே’ என்று கூறிச்சென்ற பின் எதைக் கொண்டு தப்பிக்கலாம் என்று கூறினான் என்றே யோசித்த வண்ணம் அறையை ஆராய,  அறையிலிருந்து வெளி செல்ல இருப்பது அவனின் அறைக்கதவு மட்டுமே. ஜன்னல் வழியே செல்ல கண்ணாடியினை உடைக்க வேண்டும் அதற்கு தகுந்த எதுவும் அறையில்  இல்லை.அவன் இருக்கும் போதே சென்றால் தான் உண்டு.

 

அவன் கடந்த மாதத்தில் சரியாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வந்திடுவான். இன்று வந்தவன் தொடர்ந்து மூன்று நாட்களாக காலை செல்பவன் மாலை  வந்திட வீணாவுக்கு பயம் அதிகரிக்க துடங்கி விட்டது.மற்றைய நாட்களில் போல அவளை வார்த்தைகளால் வதைக்க வில்லை.இரவு அங்கே தங்குபவன் பிதற்ற ஆரம்பித்தான். யாரையோ திட்டிதீர்த்தான்.பின் அழ ஆரம்பித்துவிட்டான். சிறு பிள்ளை என அழுந்து களைப்புற்று அப்படியே  உறங்கியும் போனான். இதுவே தொடர ஆரம்பித்தது.

 

அன்று வீணாவிற்கு மாதாந்திர சிக்கலினால் வயிற்று வலி உயிரெடுக்க அவளுக்கான மாற்று உடைகளோ உள்ளாடைகளோ, அந்நாளுக்கு  தேவையான நேப்கினோ இல்லை. என்ன செய்வாள் விடியலிலேயே இவளுக்கு உறக்கம் களைந்து எழுந்தவள் மெதுவாக அவனறையை எட்டிப்பார்க்க மித்ரன் ஆழ்ந்த  உறக்கத்தில் இருக்க மெதுவாக கதவருகே சென்றவள் அதனை திறந்துப்பார்க்க கதவு அவள் நேரத்திற்கு திறந்துக்கொண்டது.

அவள் திறக்காது என்றே பலமாக இழுக்க அதுவானால் திறந்திட சற்று தடுமாறி அவள் தலையை அதில் அடித்துக்கொள்ள அதன் சத்தத்தில் மித்ரன் கட்டிலில் அசைய வீணா  பயத்தில் நடுங்கிப்போனாள்.

 

மீண்டும் மித்ரன் உறங்குவதை  பார்த்தவள் மெதுவாகக் கதவை சாற்றிவிட்டு படிவழியே இறங்கி கீழே  வர மஞ்சள் வண்ண விடிவிளக்கின் ஒளி படர கீழ்தளம் முழுதும் பொதிகளும், பெட்டிகளுமே இருந்தது. வீணாவிற்கு அவை பார்க்க சற்று பயமாக வேறு இருந்தது. இன்னும்  விடிந்திட வில்லை அதோடு அந்நேரம் அத்தளத்தில் படர்ந்துள்ள ஒளியின் நிறம், இன்னும் வேறுயாராவது இருந்து விட்டால் என்ன செய்வது மெதுவாக சென்று ஒவ்வொரு பையினருகிலும் என்னதாக இருக்கும் எனப் பார்க்க  ஒரு சில பைகளில் துணிவகைகள் தான் என்பதைக் கண்டுகொண்டாள். கண்டுகொண்டவளோ பின் அவளுக்கு தேவையான உடைகள் இருக்கின்றனவா என தேடிப்பார்க்க அவள் நேரம் ஒரு பெட்டியில் அவளுக்கு தேவையான உள்ளாடை வகைகளும் இன்னுமொரு பெரிய பொலித்தீன்  பொதியில் நேப்கின் பாக்கெட்டுகளும் இருந்தது, அவசரமாக அவள் ஆயுதமாய் பற்களைக் கொண்டு எலியாகி அப்போலீத்தீன் பையை கடித்து பிய்த்தவள்அவளுக்கு தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொண்டாள்.

 

சற்று மனதில் அவள் உடல் வலியையும் பொருட்படுத்தாது உற்சாகம் வந்திருந்தது. அவன் ஏழ முன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு எப்படியாவது  வெளியில் செல்ல வழி கண்டு பிடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாக மாடியேறியவள் அறை முன்னே மூச்சு வாங்க நின்றாள்.