வில்லனின் வீணையவள் -epi12

Screenshot_2020-12-18-06-54-30-1-77a7e113

வில்லனின் வீணையவள் -epi12

வீணாவின் சகோதரி தாமரைக்கும்  சராவணனுக்கும் திருமணம் முடிந்து இருவரும் சரவணன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகாமையில் முன்னமே தங்கியிருந்த குடியிருப்பொன்றில் வசித்து வருகின்றனர்.

திருமணம் முடித்த புதிதில் மற்றவர் பற்றி நினைக்க நேரமில்லாது அவர்களின் உலகில் இருந்தவர்கள் குடும்பம்,விருந்து,சீர் என்று முழுதும் அனுபவித்து முடிந்து இப்போதுதான் சுற்றத்தை உணர ஆரம்பித்திருந்தனர்.

 

வீணா தன்னை வந்து சந்தித்தது பற்றி கூற வேண்டாம் என்று கூறியிருந்தாலும் அவன் மனதில் சகோதரிகள் இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும் உறவுகள் தொடர வேண்டும் என்று தாமரையுடனான இம்மூன்று மாத பழக்கத்தில் நினைத்துக்கொண்டான். தன் மாமனாரின் குணம், அவர்கள் வாழ்ந்த சூழலையுணர்ந்தவன்  எத்தனைக்கலாம் இவர்கள் மனதால் வருத்தியிருப்பார்கள் என்பதை உணர்ந்து தன் மனைவியை நன்றாகவே பார்த்துக்கொண்டான்.

 

“என்னாச்சு வேலை விட்டு வந்ததுல இருந்தே யோசனையாவே இருக்கீங்க? “

கணவனுக்கு தேநீரை கொடுத்து  அவனருகே அமர்ந்தவாறு தாமரைக்கேட்க,அவள் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டவன்

 

“ஒன்னுமில்லைடா… சும்மாதான். தனியா வீட்ல இருக்க போரிங்கா இல்லையா?ஹாப்பியா இருக்கியா  தாமர?”

 

“ரொம்ப ஹாப்பியாதான் இருக்கேன். என்னாச்சு திடீர்னு இப்டி கேட்குறீங்க?”

 

“இல்ல… இந்த டைம்ல வீட்டாளுங்க உன் பக்கத்துல இருந்தா ஹாப்பியா இருக்கும்ல அதான்.”

 

“எனக்கு தான் வோமிட் லாம் இல்லையே… எனக்கு அப்படியெல்லாம் தோணலைங்க. ஆனா பட்டுவ மட்டும் பார்க்கணும்னு அடிக்கடி தோணுது. அவ எப்டியிருக்காள்னு பார்த்துட்டா மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.”

“கண்டிப்பா பார்க்கலாம்டா… “

 

“நீங்களும் அவளை தப்பா நின்னச்சுடீங்களா?”

 

“ச்சே ச்சே. அப்டில்லாம் இல்ல.”

 

“பாவங்க அவ. அப்பா என்கூட, தம்பி கூட சிரிச்சு பேசுறப்ப எங்களையே பார்த்திருப்பா. அவ கண்ணு ரெண்டுலயும் ஏக்கம் கொட்டி கிடக்கும், அவளை என்னால முடிஞ்ச மட்டும் பாசமா பார்த்துட்டேன் ஆனா அம்மா, அப்பாவோட பாசத்தை கொடுத்தேனான்னு தெரில… ‘

 

‘அவளுக்கு அமைர துணை மூலமா கடவுள் அவளுக்கு அதை கொடுத்துறணும். அன்னக்கி அவளை கூட்டி வந்தவர் கண்டிப்பா நல்லா வச்சுப்பாங்கண்ணு தோணுது. அவளுக்கு பிடிச்சது போலயே அவ  வாழ்க்க அமஞ்சிரனும்…”

 

தாமரைக் கூற கேட்டுக்கொண்டு இருந்த சரவணன், அன்றும் வீணாவோடு வந்த கிருஷ்ணாவை அவள் கணவன் என்று தவறாக நினைத்தது போலத்தான் இவளும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

 

“சரிமா சீக்கிரமே நாம வீணாவை பார்க்கலாம்.” என்று கூறினான். சரவணன். அடுத்தநாளே அதை செய்யவும் செய்ததான்.

****

 

“ஓஹ் என்னை விட்டுட்டு இன்னைக்கு எல்லோரும் சாப்டாச்சா? எப்போல இருந்து இந்த பழக்கம்?” கேட்டுக்கொண்டே கிருஷ்ணா   படியிறங்க, அவனின் பேச்சை பொருட்படுத்தாது மேசையில் வீணாவோடு மகிழ் கதை அளந்தபடி இருக்க மறுப்பக்கம் ராஜ் மற்றும் வாசுகி  பேசியபடி உணவருந்திக்கொண்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் இவர்கள் சென்று மகிழ் வீட்டில் பேசியிருக்க  அடுத்தவாரம் மகிழின் அண்ணன் மனைவி இருவரும் வருவதாகவும் அத்தோடு ஒரு வரவேற்பு வைத்து இங்கு அழைத்து வரலாம் என்று மகிழ் வீட்டினர் பேச,’அதெல்லாம் வேண்டாம்’ என்றவன் யாரின் பேச்சையும் கேளாது மகிழை கையோடு அழைத்து வந்துவிட்டான். இதில் ஏகக்கடுபோடு இருவீட்டினரும் பெரியவர்களை மதிப்பதில்லை என்று திட்ட, மித்ரனும் முறுக்கிகொண்டான்.மகிழும் கோபமாய்

சுற்றிக்கொண்டிருக்கிறாள்.

 

கிருஷ்ணா வந்து அவளருகே அமரவும் அவனுக்கான உணவை தட்டில் வைத்து பரிமாறியவள் மீண்டுமாய் வீணாவின் பக்கம் திரும்பி அமர்ந்துகொள்ள அவள் காதருகே குனிந்த கிருஷ்ணாவோ

 

“ரொம்ப திருப்பாதடி நடிக்கிறன்னு கண்டுபிடிச்சிருவாங்க.” என்றுவிட்டு  உணவருந்த,

 

முழித்தவள், தன்னை யாரும் கவனிக்கின்றனரா எனப் பார்க்க இந்தப்பக்கம் வீணாவோ,

 

“அண்ணி நான் பார்க்கல” என்றுவிட்டு  எழுந்தாள். அவள் வீட்டுக்கு வரவும் அண்ணி என்று பேச கற்றுக்கொண்டாள். அவளை முறைத்த மகிழ் சிரித்துக்கொண்டு தானும் எழுந்துகொள்ள,

 

“கிச்சா இன்னைக்கு என்கூட வர்றதா சொன்னீங்க வெயிட் பண்ணட்டுமா?”

 

“போலாம் பட்டு வெய்ட் பண்ணு வந்துர்றேன்.’ என்றவன் வாசுகியை பார்க்க திருப்பிக்கொண்டார் மகனோடு.

 

‘நானும் எத்தனை நாளுக்கு இந்த திருப்பல்னு பார்க்குறேன், ரொம்ப ஓவராதான் பண்றீங்க. கூட்டி வான்னு முன்ன திருப்பிட்டு இப்போ, எதுக்கிந்த திருப்பல்.? அவனென்னான்னா போனை அட்டென்ட் பண்ண மாட்டேன்றான். “

திட்டிக்கொண்டே படியேறி அறைக்குள் சென்றான். அவன் பின்னே மகிழும் செல்ல வாசுகி அருகே வந்த வீணா,

 

“எதுக்கிப்போ இப்படி இருக்கீங்களாம்.”

 

“பாவம்டா மகிழுக்கும் அவங்க வீட்டாளுங்களுக்குமே எவ்ளோ ஆசை இருந்திருக்கும். இப்படி கூட்டி வந்துட்டான். “

 

“வசும்மா, ரெண்டுமே சேர்ந்து நம்மளை ஒட்டுதுங்க. அவங்க ரெண்டு பெரும் ஹாப்பியா இருக்காங்க. நம்மளுக்கு அதுதானே வேணும். “

 

உண்மையாவா சொல்ற? ரெண்டும் முறச்சுகிட்டே இருக்குதேன்னுதான்  எனக்கு யோசனைடா. “

 

“ப்ரோமிசா வசும்மா. வேணும்னா  டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் ஓகேவா. நெஸ்ட் வீக் அவங்க அண்ணா வந்ததும் சின்னதா ஏற்பாடு பண்ணிக்கலாம். நீங்க வேணும்னா வீரா… இல்ல நம்ம மித்ரன் சார் கூட பேசுங்களேன்.”

 

“சரிடா நான் பேசுறேன். அவன்ட பேசுனாதான் இவனை அடக்குவான்.”

 

“நானும் இதைத்தான் சொன்னேன் நம்ப மாட்டேன்றா பட்டும்மா.” ராஜும் கூற.

 

அவர்கள் இங்கே இப்படி பேச மேலே  அறையினுள் மகிழ் நுழையவும் அவளை இடையோடு வளைத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்ட கிருஷ்ணா,

“என்னடி என்னை பார்த்து இப்படி இந்த வாயை சுழிக்கிற அவள் உதடுகளை இரு விரல்களால் இழுத்தவன் தன் இதழை அதனருகே கொண்டுசெல்ல அவன் உதட்டில் பட்டென அடித்தவள்,

 

“என்னை இன்னைக்காச்சும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு கிளம்புறீங்களா? ரெண்டுநாள் என்னால முடில.”

 

“ஓஹ்! ரொம்பதான் அழுத்துக்குற எத்தனை நாளா தனியா  இருந்திருக்கேன் தெரியுமாடி?”

 

“யாரு இருக்க சொன்னா? நீங்களாத்தான் விரட்டுனீங்க…”

 

“அச்சோ மகிழ், எத்தனை வாட்டி சாரி கேட்பேனாம், சொல்லி காட்டிட்டே இருக்க நீ.”

 

அவனை இருக்கி அனைத்துக்கொண்டவள்,

” நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு  எனக்குதான் தெரியும். உங்க பக்கத்துலேயே உட்கார்ந்துட்டு எழுந்துவர்ரப்ப,எல்லா நேரமும் கூட்டி போகமாடடீங்களான்னு. ஆனா எப்போவும் அதை பத்தி பேசுனதே இல்லை. அவன் நெஞ்சில் குத்தியவள்,

‘இப்போ மித்து சொன்னதுக்காக… “

 

அவள் பேச்சிற்கு முற்றுப்புள்ளி  வைத்தவன், மீண்டும் பூவாய் ஓர் இதழொற்றி அவளை விட்டு,

 

“ரொம்ப சாரிடா இனி எப்போவும்  கஷ்டப்படுத்த மாட்டேன். ப்ரோமிஸ், இப்படி சொல்லி காட்டிட்டே இருக்காத கஷ்டமாயிருக்கு.”

 

சரியென்றவள், “ஆனா அப்பப்போ  பனிஷ்மென்ட் உண்டு” என்றிட,

 

“ரொம்ப ஆவலாய் எதிர் பார்ப்பேன்.” என்றிட, சிரித்துக்கொண்டவள்,

 

“வீட்ல நம்மளை விட சின்னவள்  இருக்கா. அதை எப்போவும் மண்டைல வச்சுக்கணும் புரிஞ்சுதா. இப்போ கிளம்புங்க.”

 

“சரிடா, நீ ரெஸ்ட் பண்ணிக்கோ. அப்போதான் நைட்க்கு…” அவனை பேசவிடாது அறைவிட்டு தள்ளிக்கொண்டு வந்தவள் கீழே அவர்கள் இருப்பதைக் காணவும் சமத்தாய் இறங்கி வந்தனர்.

 

சொல்லிக்கொண்டு வீணாவும் கிளம்பினாள் அவனுடன்.

 

வீணாவின் பொறுப்பில் இருந்த ஆடையகம் வந்திரங்கினர் இருவரும்.

 

“பட்டு, ஸ்டோர்ல இருந்து திங்ஸ் வந்திருக்கு நான் பார்த்துட்டு வந்துர்றேன் நீ கேபின் போ.” என  அவளை உள்ளே அனுப்பியவன் பொருட்கள், ஆடைகள் என சரிபார்த்து முடிக்கவே மணி பதினொன்றை தொட்டிருந்தது. கிருஷ்ணா இரண்டாம் தளதினுள் லிப்ட் வழியே வெளிவர தூரமே பரீச்சயமான முகம் ஒன்றைக், காண சிந்தித்தப் படியே வர தன் முன்னால் சென்ற ஒருவரின் கையிலிருந்த ஆடை ஒன்று நழுவி விழுந்தது. அதை எடுத்தவன் அவர் தோள் தொட்டு கொடுக்க திரும்பியவனோ இவனைப்  பார்த்ததுமே,

“ஹல்லோ கிருஷ்ணா ” என்று கை நீட்டி நலம் விசாரிக்க தூரத்தில் தெரிந்தது யாரென்பத்தை ஊகித்துக்கொண்டான்.

 

“வாட் அ சர்ப்ரைஸ்… எப்டி இருக்கீங்க சரவணன்? ஷாப்பிங் போலயே… வெரி ஹாப்பிய போர் யூ. “

 

“உங்களையும் சேர்த்தே பார்க்க கிடைக்கும்னு நினைக்கவே இல்லை.” என்று சரவணன் கூற, 

 

“அப்போ பட்டுவ மீட் பண்ணீங்களா?”

 

“இன்னும் இல்லை. இப்போதான் வந்து ஜஸ்ட் டென் மினிட்ஸ் இருக்கும்.”

 

இவர்கள் பேச இருவரையும் பார்த்த வாறே தாமரை இவர்கள் அருகே வர,

“தாமர, இவங்களோடது தான் இது, இவர் மிஸ்டர்.கிருஷ்ணன் ” என்று அறிமுகப்படுத்த,

 

“இவங்க அன்னைக்கு… என்று ஏதோ கூற வர இன்னும் சில பேர் ஆடைகள் தேர்தடுத்தவன்னமும் பணிபுரிவோரும் இருக்க,

“சரவணன் வாங்க உள்ள போய் பேசலாம்” என அலுவலக அறையினுள் அழைத்துச் சென்றான்.

 

“யேங்க,பட்டு எங்கன்னு கேளுங்களேன்.” சரவணனை கேட்டவாரே தாமரை வர இதைக் கேட்ட கிருஷ்ணனின் இதழ்கள் புன்னகையில் மலர அறையை தட்டியவாறே உள்ளே நுழைந்தான். தாமரையை அழைத்தவண்ணம் பின்னால் வந்த பணிப்பெண்,

 

“மேம், நீங்க கேட்ட சைஸ் இருக்கு பார்க்குறீங்களா?” என்றிட, சரவணனுக்காக வாங்க நினைத்த பரிசை அவன் அறியாது வாங்கி பரிசளிக்க நினைக்க,

 

“நீங்க உள்ள போங்க நான் பார்த்துட்டு வந்துர்றேன்.” என்று தாமரை அப்பெண்ணோடு செல்ல இவன் உள்ளே நுழைந்தான்.

 

“பட்டு யார் வந்திருக்கா  பாரு.” என்றிட சரவணனைக் கண்ட வீணா,

 “அவள் இருக்கை விட்டு எழுந்து உள்ளே வர வேற்றவள் அவன் பின்னே கண்ணைக் கொண்டு செல்வதை பார்த்து,

” யாரை தேடற,அவர் மட்டும் தான் வந்திருக்கார் ” என்று கிருஷ்ணன் கூற  சரவணன் அவனை பார்க்கவும் கண் சிமிட்டினான்.

 

“ஓஹ்…’என்றவள்,

‘ என்ன விஷயமா வந்திருக்கீங்க மிஸ்டர்? என்று சரவணனிடம்  பட்டென கேட்டிட,

 

“என்ன பட்டு இப்படித்தான் பேசுவாங்களா?”

 

வீணாவோ மனதில், ‘தான் அன்று அத்தனை பேசியும் இவர் அக்காவை பார்க்கவே இல்லையா, என்ன மனுஷன் என்று அவனை திட்டித்தீர்க்க, 

 

“நான் ரொம்ப பிஸியா இருக்கேன் பேசிட்டீங்கன்னா என் வேலையை பார்க்க ஈஸியா இருக்கும். “

 

கதவை  யாரோ தட்ட,

 “யெஸ் கம் இன்.” என்றவள்  வந்தவளைக்கு கண்டு இமையிரண்டும் சிமிட்ட நொடி மறந்து விறைத்து விட  அதை விட அறையினுள் நுழைந்தவளோ வீணாவைக் கண்டதும் நிலைத் தடுமாறி பின்னாக,

 

“ஹேய் பார்த்து” என சரவணன் தாங்கி வீணாவை பார்க்க இவர்களை தான்  பார்த்திருந்தாள் பெண்ணவள்.

 

“இவங்க என்னோட வைப் தாமரை, கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆகுது  என்றும் கூற, இவர்களைப் பாத்திருந்தவள் கிருஷ்ணாவிடம் உண்மையா என்று கண்களாலேயே கேட்க, அவனும் இப்போ தான் டா நானும் மீட்டாகினேன் என்றான்.

 

‘பட்டு’ என வீணாவின் கைகளை தாமரை பற்றிக்கொள்ள அவளைக்  கட்டி அனைத்துக்கொண்டவள் தன் மகிழ்வை வெளிப்படுத்த வழிதெரியாது இருக்கி அணைத்தப்படி கண்ணீர் விட்டாள்.

 

இவர்களைப் பார்திருந்த சரவணன்

 

” உங்க பாசப்போர்ல என் பையனை நசுக்கிடாதீங்க தாங்கமாட்டான்.” 

என்றிட வீணாவோ தாமரை முகம் பார்க்க செந்தாமரை என சிவந்திருந்தது. அதன் பின்னே, அன்று வீணாவை கிருஷ்ணாவோடு சென்ற நாள் விரட்டிய பின்பு அவளுக்கு கிடைத்த சுவர்க்கம் பற்றி பேசினாள். மறந்தும் அதற்கு முன்னைய மித்ரனுடனான நிகழ்வுகளை  கூறவில்லை.தாமரையும் அவளின் திருமண நிகழ்வுகள் பற்றி பேசினாள். மறந்தும் அப்பாவை, பாட்டியைப் பற்றி பேசிட வில்லை.

பகல் உணவும் சேர்ந்தே உண்டவர்களை வீட்டுக்கு அழைக்க கண்டிப்பாக இன்னொரு நாள் வருவதாகக் கூறி விடைபெற்றனர்.

 

போகும் போது வீணாவின் கைபிடித்த தாமரை,

“பட்டு, அன்னைக்கு நீ நினச்சா மாதிரி உனக்கானவன் கிடைச்சிட்டான்னு நினச்சேன். ஆனா இப்போ…” வருந்திக் கூற,

 

“அதெல்லாம் வீணா ஆசை பட்டது போலயே அவங்க வாழ்க்கை அமையும் சிஸ்டர், ஹாப்பியா போய்ட்டு வாங்க…”

என்று கூற, அது யாரென்று பார்க்க மித்ரன் தான் கிருஷ்ணாவோடு அருகிருந்தான்.

 

இவர்களும் யாரென்று பார்க்க ,

 

“இவங்க ரெண்டு பேரோடது தான் இந்த டெக்ஸ்டைல் ” என்று வீணா கூறிக்கொண்டே மித்ரனை பார்க்க, அவனும் இவளைப் பார்த்து சிரித்தான்.

 

“என்னடா இப்படி சொல்லிட்ட? “

 

“பின்ன அவங்களும் ஏதோ பீல் பண்ணி பேசுறாங்க நீங்களும் சோகமா கேட்டுட்டு இருக்கீங்க. கிளம்புரப்ப கொஞ்சம் ஹாப்பியா கிளம்பட்டுமே. அதுக்குதான். வேறொன்னும் இல்லை… பேசிட்டு வா நான் உள்ள வெய்ட் பண்றேன்.”

என்று இவர்களிடம் கூறிக்கொண்டு உள்ளே சென்றான் மித்ரன்.

 

வீணாவும் அவனையே பார்திருந்ததை கவனித்த கிருஷ்ணா என்னவென்று அவளிடம் கண்களாலேயே கேட்க தோள் குலுக்கி ஒன்றுமில்லை என்றாள்.

 

சரவணன் மற்றும் தாமரை வண்டியில் செல்லவும்,

“கிச்சா நான் வீட்டுக்கு போகட்டுமா? “

கேட்கவுமே, மித்ரன் கிருஷ்ணாவை அழைத்து இருவரையும் அலுவலக அறைக்கு வருமாறு கூறினான். “என்னனு பார்த்துட்டு கிளம்புடா வா.” என அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

கிருஷ்ணனுடன் வீணாவும் உள்ளே நுழைய மித்ரன் அலைபேசியில் யாருடைனோ பேசிக்கொண்டிருக்க இருவருக்கும் இருக்கையை காட்டி அமரும் படி சைகை செய்ய இருவரும் அமந்து கொண்டனர்.

 

“கிருஷ்ணா, இங்க வர்றது ஈஸியா இருக்கும்ல உனக்கு.வீக்லி ரெண்டு நாள் இங்க வந்து பார்த்துக்கோ ஒரு ரெண்டு மாசம் தான். யேன்னா வீணாவை என்னோட ப்ராஞ்சுக்கு ஷிப்ட் பண்ணலாம்னு இருக்கேன்.”

 

வீணா கிருஷ்ணாவை பார்க்க அவனோ அவளை கண்களால் அமைதி படுத்திவிட்டு,

 

“என்ன திடிர்னு மித்ரா, வீணா  இங்கயே நல்லா தானே பண்ணிட்டு இருக்கா?”

 

“யெஸ் நல்லா பண்றதுனாலத்தான் அங்க கூட்டி போகலாம்னு இருக்கேன்.”

 

“இல்ல. நான் இங்கயே இருக்கேன். ஐ பீல் கம்போர்டப்ல் ஹியர்… “

 

“உங்களுக்கு என்கூட ஒர்க் பண்ண பிடிக்கலையா? “

 

வீணா பதில் கூற முன்,இடை புகுந்த  கிருஷ்ணா,

“அப்டில்லாம் இல்லைடா. அவள் இங்க இருந்து பழகிட்டாளா அதான். இல்ல வீணா?”

 

 ஆம்’ என்பதாய் அவளும் தலையாட்ட,

 

“நோ. தேர் இஸ் சம்திங், நானும் கவனிச்சுட்டுதான் இருக்கேன். நான் இருக்கப்ப நீங்க நார்மலாகவே இல்ல.எதுன்னாலும் ஓப்பனா பேசி சொல்வ் பண்ணிக்கலாமே. டெல் மீ வட்ஸ் யூர் ப்ரோப்லேம்.”

 

மித்ரன் கோபமாகவெல்லாம் பேசவில்லை. ஆனால் அவனின் வார்த்தைகள் ஏதோ செய்ய வீணாவின் கைகள் நடுங்க கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது. உணர்ந்த கிருஷ்ணா,

 

“உனக்கிப்போ இவ அங்க வரணும்,அவ்ளோ தானே. விடு நாளைக்கு அங்க வந்துருவா, அதுக்கேன் இத்தனை கேள்வி கேட்குற.”

 

“நீ கிளம்பு,” என வீணாவை பார்த்து கிருஷ்ணா கூற,விட்டால் போதுமென செல்ல அவசரமாக இருக்கையை விட்டு எழுந்தவளைப் பார்த்தவன்,

 

“நீங்க இன்னும் என் கேள்விக்கு

பதில் சொல்லல வீணா. என்கூட என்ன ப்ரோப்லம்னு கேட்டேன். “

 

“அப்டில்லாம் ஏதும் இல்லை.” என்று வீணா கூற அவளை நம்பாத பார்வையே பார்த்தான்.

 

” மித்ரா, கொஞ்ச நாள் முன்னாடி அவளை ஸ்டாப்ஸ் முன்னால கொஞ்சம் ஓவரா திட்டிட்ட, அதான் திரும்ப அப்டி ஆகிட்டா சங்கடம் ஆகிரும்ல அதான் உன் முன்ன வர மாட்டேங்குறா. மத்தபடி ஒன்னில்லை.”

 

“எப்போ நான் திட்டுனேன்…’ சில வினாடிகள் தாமதித்து,

‘ஓஹ் எனக்குதான் கொஞ்ச நாள் பித்து பிடிச்சிருந்தேன்ல…”

 

கண்கலங்க அவனை வீணா பார்த்திருக்க,

 

“மித்ரா என்ன பேசுற நீ?” கிருஷ்ணா கடிய,

 

“பின்ன என்னடா. இப்படி என்னென்ன பண்ணி வச்சிருக்கனோ தெரில. ச்சே.’ மேசை மீது கைகளை ஓங்கிக் குத்திக் கொண்டவன்,

‘அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி வீணா. உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் போல. “

 

“அச்சோ அப்டில்லாம் இல்லை. கிருஷ்ணாவை முறைத்தவள், நான் நாளைக்கு அங்க வரேன். எக்ஸ்க்யூஸ் மீ…” என்றவள் அறைவிட்டு வெளியேறினாள்.

 

கிருஷ்ணாவோ மனதினுள் ‘இவனை சமாளிக்க அப்டி சொல்லிட்டேன், அதுக்கு அவ கோவிச்சுக்குறா.நல்ல வேல இவன் எப்போ என்னனு கேட்கல, இல்லன்னா என் தலை  உருண்டிருக்கும்.’

 

“கிருஷ்ணா, முன்னமே இதெல்லாம் சொல்ல மாட்டியா, பாரு உன்னாலதான் திரும்ப அவளை ஹர்ட் பண்ணிட்டேன். போய் பாரு என்னன்னு.” மித்ரன் அவனைச் சொல்ல,

 

“யேன் சொல்ல மாட்ட எனக்கிது தேவை தாண்டா, அவட்ட போய் என்ன திட்டு வாங்கணுமோ.” வாய்க்குள் முனங்க, 

 

“டேய் கிருஷ்ணா உன்னைத்தான், என்னடா உட்கார்ந்துட்டே இருக்க போய் என்னனு பாரு, “

 

“ஆஹ்! இதோ போறேன்.’ எழுந்தவன்,

‘வர வர என்னை மதிக்கிறதே இல்ல நீ. உன்னை விட மூத்தவன்டா நானு.ரெண்டு நாளா போன் பண்ணாக்கூட பேசமாட்டேன்ற.”

 

“ஹ்ம்ம் ஆமா. இப்படி அடிக்கடி எனக்கு நினைவு படுத்தி விடு மூத்…தவன்னு. அதைப் பத்தி பேசலாம் அப்பறமா. முதல்ல வீணா என்ன பண்றான்னு பாரு.”

 

அவனை முறைத்துக்கொண்டே கிளம்பினான்.

 

இருக்கையில் சாய்ந்து மித்ரன் அமர, வீணாவின் முகம் இவனை ஏக்கமாய் அடிக்கடி தழுவுவதை நினைவுப்படுத்திப் பார்த்துக்கொண்டான்…

‘நாளைல இருந்து பக்கத்துல தானே இருப்பா என்னனு பார்த்துக்கலாம் ‘ மனதில் கூறிக்கொண்டான்.

 

நாளை அவள் அங்கே செல்ல மித்ரனின் இவளுடனான நினைவுகள் திரும்பிடுமா,

என்ன நடக்கும் பார்க்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!