விழிகள் 12

eiGJ81L16854-30ccc173

“என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா முட்டாள்!” தன் காரியதரிசியை மனோகரன் முறைக்க, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தான் விஷ்ணு.

அவரை முறைத்துப் பார்த்த அகஸ்டின், ” ஐரா கம்பனீஸ்க்கு நான் யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.” என்று அலீஷாவை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இனி உங்களால என் ஃபேமிலிக்கு ஏதாச்சும் பிரச்சினை வந்திச்சு… அவ்வளவுதான்.” ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, மனோகரனோ ஏகத்துக்கும் அவனை முறைத்துத் தள்ளினார்.

தன்னவன் சொன்னதை கேட்ட அலீஷாவோ, “எதே, உன் குடும்பமா? என்னை பப்ளிக்கா அசிங்கப்படுத்திட்டு இவனை தனியா கூப்பிட்டு வச்சு திட்டும் போது புரியல. இப்போ புரியுது. குடும்ப சலுகை சாரு.” சிலுப்பிக்கொள்ள, “இதை மட்டும் வக்கனையா பேசு! நேத்து ராத்திரி கோல் பண்ணி வேலைய முடிக்க முடியாதுன்னு எதுக்கு சொன்ன? அதான் பேமன்ட் வாங்கினல்ல…” சற்று கடுப்போடு கேட்டான் விஷ்ணு.

“அது…” தலை குனிந்து வெட்கப்பட்டுச் சிரித்தவாறு அலீஷா, அகஸ்டினை நோக்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு அவன் முகத்தை திருப்பிக்கொண்டான் என்றால், விஷ்ணுவோ இருவரையும் மாறி மாறி முறைத்துப் பார்த்தான்.

“இதோ இந்த முட்டாள வேலைய கச்சிதமா முடிக்கச் சொல்லி ஏதேதோ ஏற்பாடு பண்ணி ஐரா கம்பனியில சேர்த்துவிட்டும் இவ வேலைய முடிப்பான்னு எனக்கு நம்பிக்கையே வரல. அதான், உங்க வீட்டுப் பொண்ணை கடத்தி கொஞ்சம் பயத்தை காட்ட நினைச்சேன். அந்த மஹேந்திரன் சரியான சென்ட்டிமென்ட் பார்ட்டி. கொஞ்சம் அவள வச்சு மிரட்டினதும் பதறிட்டான். நான் நினைச்ச மாதிரி இந்த இடியட் வேலைய முடிக்க முடியாதுன்னு சொல்லிட்டா. சரின்னு இன்னைக்குள்ள மஹேந்திரன வச்சு ஃபோர்மியூலாவ தெரிஞ்சிக்கிட்டு என்னைப் பத்தி தெரிஞ்ச இவள போட்டுத் தள்ளலாமேன்னு ப்ளான் போட்டேன். ஆனா, அதுவும் போச்சு.” கடுப்பாகச் சொன்னவர், “எனக்கு எதிரி வெளியில இல்லை. நானே சோறு போட்டு வளர்க்கிறேன்.” என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு.

“எதே, என்னை போட்டுத் தள்ளுவியா? அடிங்க… என் ரேன்ஜ்க்கு ஏத்த மாதிரி சின்ன சின்ன இடத்துல திருடிக்கிட்டு சிவனேன்னு என் பொழப்பை நான் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஏதோ என்னை மணி ஹீஸ்ட் ரேன்ஜ்க்கு நினைச்சி வேலைய கொடுத்து முன்னாடி அனுப்பிவிட்டு பின்னாடி  நீங்களா ஏதோ ப்ளான போட்டு சொதப்பியிருக்கீங்க. என்ன, அசிங்கப்படுத்துறீங்களா என்னை?” சேலை முந்தானையை இடுப்பில் சொருகி குழாய் சண்டை பிடிக்கும் பெண்கள் போல் அலீஷா எகிற,

“ஸப்பாஹ்…” இடுப்பில் கைக்குற்றி இருபக்கமும் தலையாட்டி சலித்துக்கொண்டான் அகஸ்டின்.

“லுக், உங்க கம்பனிய விட பெரிய கம்பனீஸ் கூட ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஃபோர்மியூலாவ திருட ட்ரை பண்ணியிருக்காங்க. இது ஐராவோட ப்ரோடெக்ட்ஸ் ரீச் ஆனதுலயிருந்து நடந்துக்கிட்டு இருக்கு. சோ, அதை பத்தி ஐ டோன்ட் க்யார். பட், சைத்துவ கஷ்டப்படுத்தணும்னு மட்டும் நினைக்காதீங்க,கொட் இட்!” அழுத்தமாக உரைத்துவிட்டு வெளியேற இரண்டடி முன்னே வைத்தவன் சற்று நின்று, “நீங்க ஸ்பை வச்சது கூட தப்பில்லை. பட், இதோ இவள வச்சீங்க பார்த்தீங்களா, அதான் நீங்க பண்ண பெரிய தப்பு.” கேலியாகச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

போகும் அவனையே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் அலீஷா. அவனுடைய முறைப்பு, முகபாவனைகள் ஒவ்வொன்றையும் அணுஅணுவாக ரசிக்க வைத்தது அவளுடைய காதல் மனம்.

சரியாக, அவளெதிரே வந்து நின்ற விஷ்ணு, “உன்னை பார்த்த இரண்டாவது நாளே ப்ரோபோஸ் பண்ணேன். என்னை ரிஜெக்ட் பண்ணிட்ட. ஆனா, இந்த வெள்ளைக்காரன் பின்னாடி அலைஞ்சிக்கிட்டு இருக்க. அப்படி என்கிட்ட இல்லாதது இவன்கிட்ட என்ன இருக்கு?” என்று கேட்டு முறைக்க, அவனை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகப் பார்த்தாள் அவள்.

“அப்படி என்னதான்டா உன்கிட்ட இருக்கு?” அவன் காலை வாரிவிட்டு, மனோகரனை அவனைத் தாண்டி எட்டிப் பார்த்தவள், “நேத்து காலையில வரைக்கும் அந்த பொம்பளைக்கிட்ட திட்டு வாங்கி அசிங்கப்பட்டிருக்கேன். ஒழுங்கு மரியாதையா மீதி பேமன்ட்ட செட்ல் பண்ணிரு. இல்லை… இந்த அலீஷா வீரா யாருன்னு அப்போ புரியும்.” மிரட்டலாகச் சொல்ல, நெற்றியை எரிச்சலா நீவி விட்டுக்கொண்ட மனோகரன், “பேமன்ட்ட போட்டுத் தொலைடா!” என்றார் கடுப்பாக.

விஷ்ணுவோ பூம்பூம் மாடு போல் தலையாட்டி வைக்க, வெற்றிப் புன்னகை புரிந்தவள், சேலை முந்தானையை கையில் வைத்து சுற்றியவாறு, ‘இதுக்கப்றம்தான் நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் ரிஸ்க்தான். இருந்தாலும் பிடிச்சிருக்கு.’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு அகஸ்டின் சென்ற திசையையே பார்த்திருந்தாள்.

அன்றிரவு,

அலீஷா, அகஸ்டின் நெருக்கமாக நடனமாடியதும், அலீஷாவின் காதலை அகஸ்டின் ஏற்றதுமே ஆத்வியின் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தன. காதல் தோல்வி அவளுக்கும் அத்தனை வலியைக் கொடுத்தது. விழிகளிலிருந்து விழிநீர் வழிய, தரையை வெறித்தவாறு மாடியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் ஆத்விகா.

“ஆதி…” என்ற மஹியின் குரல். திடுக்கிட்டு நிமிர்ந்தவள், விழிநீரை அழுந்தத் துடைத்து, “சொல்…சொல்லு தீரா!” என்றாள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.  மஹிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவளுடைய விழிநீர் அவனுக்கும் காயத்தைதான் கொடுத்தது.

மெல்ல சென்று அவளருகில் அமர்ந்தவன், “ஆர் யூ ஓகே? எனக்கு உன் சிரிப்புல எதுவோ தப்பா தோனுது. நீ நல்லாதானே இருக்க?” வேதனை நிறைந்த குரலில் கேட்க, அடுத்தகணம் அவளாலும் அழுகையை அடக்க முடியவில்லை. “தீரா…” என்ற கேவலுடன் அவன் மார்பில் விழுந்த ஆத்வி, “அகி அந்த பொண்ண காதலிக்கிறான். அவனுக்கு என்னை பிடிக்கல. என் காதல் அவனுக்கு புரியல்லையாடா? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப வலிக்குது.” மார்பில் முகத்தைப் புதைத்து அழ, அதிர்ந்துவிட்டான் மஹி.

‘வாட்! அகி லவ் பண்றானா? அதுக்கு வாய்ப்பில்லையே…’ உள்ளுக்குள் நினைத்து அதிர்ந்தவனுக்கு, அவள் மார்பில் முகத்தைப் புதைத்து அழுவது திகைப்பாக இருந்தது. அதுவும், அன்று இவள் அகியை காதலிப்பது தெரிந்ததும் இவன் மானசீகமாக கதறிய கதறல்களை இன்று மஹியின் மார்பில் புதைந்து, அகி அலீஷாவை காதலிப்பதாக நினைத்து ஆத்வி கதறுகிறாள்.

முதலில் இரு கரத்தை அணைப்பது போல் கொண்டு வந்து, சென்று தடுமாறிய மஹி, பின் ஒரு முடிவோடு அவளை இறுக அணைத்துக்கொண்டான். இந்த கொடிய வலியை அவனும் அனுபவித்தவன்தானே! அதுவும், ‘மனதின் குமுறல்களை யாரிடமாவது கொட்டி அவர்களிள் மடியில் சாய்ந்து ஆறுதல் கிடைக்காதா?’ என்று அன்று ஏங்கியவன் அவன்.

தன்னவளே அத்தகைய வலியை அனுபவிக்கும் போது விட்டுவிடுவானா என்ன?

“எல்லாமே சரியாகும் ஆதி.” தலையை  தடவிவிட்டவாறு தன் மார்பில் கோழிக்குஞ்சைப் போல் அடைக்கலம் தேடியவளின் முகத்தையே விழிகள் கலங்க அவன் பார்த்திருக்க, விம்மி விம்மி அழுதவாறு விழிகளை மூடியிருந்தாள் ஆத்விகா.

அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அன்று,

கீர்த்தி சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருக்க, “ரொம்பநாளாச்சு வேலைப் பார்த்து.” என்று சொன்னவாறு சமையலறைக்குள் நுழைந்த அலைஸ், அடுப்பிலிருந்த சாம்பாரை கிளறினார்.

அவரை தயக்கமாக ஏறிட்ட கீர்த்தி, “அக்கா, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று சொன்னதும், அலைஸ் அவரை கேள்வியாக நோக்க, “அது… நம்ம ஆத்விக்கு மஹி பொருத்தமா இருப்பான்னு எனக்கு தோனுது. நீங்க என்ன நினைக்கிறீங்க.” திக்கித்திணறிக் கேட்டார் கீர்த்தி.

கீர்த்தி சொன்னதைக் கேட்டதுமே அலைஸின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, “வாவ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு கீர்த்தி. கண்டிப்பா மாயாவும் ரொம்ப சந்தோஷப்படுவா.” உற்சாகமாக அவர் வார்த்தைகள் வெளிவர, கீர்த்திக்கோ ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி!

“இல்லைக்கா, அகியும் இருக்கான். ஆனா, நான் மஹி கூட ஆத்விய யோசிச்சதுல உங்களுக்கு எதுவும் கோபம் இல்லையே?” தயக்கத்தோடு கீர்த்தி கேட்க, அலைஸிற்கு சிரிப்புதான் வந்தது.

“ஒருவேள, ஆத்விக்கு நீ அகிய கேட்டிருந்தா, நானே கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டேன். இவன் குணத்துக்கு இவன மாதிரியே ஒரு பொண்ணுதான் அமையணும். என் மருமகளோட வாழ்க்கைய கெடுக்க நான் விரும்பல.” அடக்கப்பட்டச் சிரிப்போடு அவர் சொல்ல, கீர்த்தியின் இதழ்களும் சிரிப்பில் விரிந்தன.

“ஏன், என் மருமகனுக்கு என்ன குறைச்சல்? துடுக்குத்தனம் ஜாஸ்தி. அதிகம் பேசுவான். ஆனா, ரொம்ப நல்லவன். மஹி கொஞ்சமும் மாயா மாதிரி கிடையாது. ஆனா, சிலநேரம் அகிய பார்க்கும் போது மாயாவ பார்க்குற மாதிரியே இருக்கும்.” கீர்த்தி சிலாகித்துச் சொல்ல, “அது என்னவோ உண்மைதான். அவன் பேச்சு கேக்காம பிடிவாதம் பிடிக்கும் போது மாயாவோட நியாபகம்தான் வரும். அவளோட வளர்ப்புல்ல, அதான்.” பதிலுக்கு சொல்லி நொடிந்துக்கொண்டார் அலைஸ்.

வாய்விட்டுச் சிரித்த கீர்த்தி, “இன்னும் ஒரு வாரத்துல மாயா வாரதா சொல்லியிருக்கா. வந்ததும் மஹி, ஆத்வி கல்யாணத்தை பத்தி பேசலாம்.” பேசிக்கொண்டே எதேர்ச்சையாகத் திரும்ப, விழி விரித்து தன் தாய் சொன்னதைக் கேட்டு ஆத்வி அதிர்ந்து நின்றிருந்தாள் என்றால், அவளுக்கு பக்கத்தில் அதே அதிர்ந்த பாவனையில் நின்றிருந்தான் மஹி.

மாடியிலிருந்து காலை உணவுக்காக ஹோலுக்கு வந்தவர்கள், பேச்சு சத்தம் கேட்டு சமையலறை பக்கம் சென்றிருக்க, இரு பெரியவர்களும் பேசியது சரியாக இரு இளசுகளின் காதிலும் விழுந்துவிட்டது. அதனாலே இந்த அதிர்ச்சி!

“ஆத்வி, மஹி இரண்டு பேரும் எப்போ வந்தீங்க? சாப்பிட எடுத்து வைக்கவா?” கீர்த்தி எதுவுமே நடவாதது போல் பேச, “அத்தை, இதுக்கு முன்னாடி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க? அது எப்படி?” மஹி திகைப்போடுக் கேட்டான்.

“ஏன் மஹி? என் பொண்ணுக்கு உன்னை விட நல்ல பையன் கிடைப்பான்னு எனக்கு தோனல. அதுவும், மாயாவோட பையன் அவனோட துணைய எப்படி பார்த்துப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும். உனக்கு ஆத்விய பிடிக்கல்லையா என்ன?” கீர்த்தி நிதானமாக கேட்க, “மாம்…” பற்களைக் கடித்தாள் ஆத்வி. மஹிக்குதான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“அத்தை அது… ஆத்வி என்னோட ஃப்ரென்ட்.” மஹி திக்கித்திணறிச் சொல்ல, “ஃபோர் வாட் மஹி? உன்னை விட ஆத்விய யாராலேயும் புரிஞ்சிக்க முடியாது. மொதல்ல ரோஹனும் மாயாவும் வரட்டும், இதைப் பத்தி பேசலாம். கண்டிப்பா அவ சந்தோஷப்படுவா. என்ட், உங்க விருப்பம் இல்லாம உங்க கல்யாணம் நடக்காது. நிறைய டைம் இருக்கு. யோசிங்க. யாரையாச்சும் லவ் பண்றீங்கன்னா கூட தைரியமா சொல்லலாம்.” சிரிப்புடன் அலைஸ் பேசிக்கொண்டேச் செல்ல, “அத்தை ப்ளீஸ்…” கிட்டதட்ட விழிகளைச் சுருக்கி கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் அவள்.

இவர்களின் இது போன்ற எண்ணத்தை மஹி சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. அவன் நினைத்தால் இப்போதும் அவன் மனதின் எண்ணத்தை உரைத்து அவளை கரம் பிடிக்க முடியும். ஆனால், கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய எண்ணத்தை திணிக்க அவன் விரும்பவில்லை. அவர்கள் பேசுவதற்கு என்ன பதிலளிப்பது, ஏது பதிலளிப்பது என்று தெரியாது திணறியவனுக்கு ஒரு யோசனைதான் தோன்றியது.

அடுத்தகணம் “அத்தை, நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.” பட்டென்று மஹி சொல்லிவிட, “வாட்?” அலைஸும் கீர்த்தியும் அதிர்ந்துப் பார்த்தார்கள் என்றால், விழி விரித்து தன் தோழனை நோக்கினாள் ஆத்விகா. அதற்கு மேல் அவனும் அங்கு நிற்கவில்லை. மூன்று பேரின் பார்வையை உணர்ந்து விறுவிறுவென தனதறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டான் அவன்.

‘ச்சே! முதல்ல அகஸ்த்துக்கிட்ட பொய் சொல்றது எப்படின்னு கத்துக்கணும். இப்படி உண்மைய உளறி வைச்சிட்டேனே…’ மானசீகமாக புலம்பியவாறு திரும்பியவன், கதவு திறக்கப்படும் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பினான்.  அங்கு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு கதவு நிலையில் சாய்ந்து நின்றிருந்தாள் ஆத்வி.

“நான்தான் உன்னை என் ஃப்ரென்டா பார்க்குறேன். பட், நீ… என்கிட்டயே மறைச்சிட்டல்ல!” ஆத்வி கோபமாகக் கேட்க, “அது ஆதி… அது வந்து…” எப்படி சமாளிப்பதென்று தெரியாது மஹி திணற, அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவளின் விழிகளில் சிக்கியது கட்டிலை ஒட்டிய மேசையின் மீதிருந்த கண்ணாடியிலான ஜாரும் அதனுள்ளிருந்த நூலினால் கட்டப்பட்ட சின்னச் சின்ன காகித சுருட்டுகளும்.

அதைப் விழிகள் மின்னப் பார்த்தவள், “ஆமா… அது என்ன?” என்று கேட்டவாறு வேகமாக அதை நெருங்கி, ஜாரினுள் கைவிட்டு அதை எடுக்கப் போக, அடுத்தகணம் அவளுடைய கரத்தை இறுகப் பிடித்திருந்தான் மஹி.

“இது அந்த ஒருத்திக்காக நான் எழுதினது. அவளுக்கு மட்டும்தான் இதைப் படிக்க முழு உரிமை இருக்கு.” அவன் அழுத்தமாகச் சொல்ல, ஆத்விக்கோ முகம் கருத்து சுருங்கிவிட்டது. “ஓ… சோரி!” தயக்கமாகச் சொன்னவாறு அவனின் பிடியிலிருந்து கையை அவள் உறுவி எடுக்க, அவனுக்கே அவளுடைய முகச் சுணக்கத்தில் ஒருமாதிரி ஆகிவிட்டது.

“சோ..சோரி ஆதி. இதுல இருக்குற ஒவ்வொன்னும் அவக்கிட்ட நான் சொல்ல ஆசைப்பட்டது. அவ மேல இருக்குற ஃபீலிங்ஸ், அவளோட நான் ஷெயார் பண்ண நினைச்ச ஒவ்வொன்னையும் இப்படி எழுதி போட்டு வைப்பேன். என்னோட மனசு ஆதி இது.” மஹி வலி நிறைந்த புன்னகையோடுச் சொல்லி முடிக்க, “வாட்?” அவனை அதிர்ந்து நோக்கினாள் ஆத்வி.

“எழுதி வைப்பேன்னா என்ன அர்த்தம்? காதலிக்கிறேன்னு சொன்ன, அவக்கிட்ட இன்னும் உன் காதலை சொல்லல்லையா தீரா?” திகைப்போடு அவள் கேட்க, ‘உன்கிட்ட என் காதலை சொல்லாததும் நல்லதுதான் ஆதிம்மா. முகத்துக்கு நேரா நீ என்னை ரிஜெக்ட் பண்ற கொடுமைய நான் அனுபவிக்கல்ல.’ உள்ளுக்குள் நினைத்தவாறு, ‘இல்லை’ எனும் விதமாக அவளைப் பார்த்தவாறு தலையாட்டினான்.

சிறிதுநேரம் அவனையேப் பார்த்திருந்தவள், பின் விரக்திச் சிரிப்போடு, “காதலை சொல்ல தாமதிக்காத! நமக்கு பிடிச்சவங்க இன்னொருத்தர் கூட இருக்குற வலி ரொம்ப கொடுமை!” என்றுவிட்டு, “சீக்கிரம் அந்த பொண்ணு யாருன்னு எனக்கு சொல்லிரு! வீட்டுல பேசி என் தலைமையில உனக்கு ஜாம்ஜாம்னு கல்யாணத்தை நான் பண்ணி வைக்கிறேன்.” பெரிய மனுஷி தோரணையில் பேசியவாறு நகர்ந்தாள்.

ஆனால், போகும் தன்னவளைப் பார்த்து இப்போது விரக்திப் புன்னகை புரிந்தன மஹியின் இதழ்கள்.

அடுத்தநாள்,

அந்த பாதையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தியவாறு  சென்றுக்கொண்டிருந்த அகஸ்டின், ‘ப்பாஹ்! என்ன காத்து… இன்னைக்கு நாளே நல்லா இருக்கும் போலயே!’ என்று உள்ளுக்குள் நிம்மதியாக நினைத்து முடிக்கவில்லை, மொத்த நிம்மதியையும் குலைப்பது போல் அவனுடைய முதுகில் சிறிய கூராங்கல் பட்டு விழுந்தது.

அதில் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன், “யார்ரா அது?” வாய்விட்டே கேட்டவாறு சுற்றி முற்றி பார்த்துவிட்டு, மீண்டும் வண்டியை உயிர்ப்பிக்கப் போக, மீண்டும் அவனுடைய தலைக்கவசத்தில் பட்டுத் தெறித்தது இன்னொரு கல். அதில் பிபி எகிற, தலைக்கவசத்தை கழற்றி வண்டியில் வைத்துவிட்டு வேகமாக இறங்கி நின்றான் அவன்.

“எவன்டா அவன்? தைரியமிருந்தா முன்னாடி வாங்கடா! முதுகுல கல்ல விட்டு அடிக்கிறீங்க. வெட்கமா இல்லை?” அகஸ்டின் சுற்றியிருப்பவர்களின் பார்வையை சற்றும் கண்டுக்கொள்ளாது கத்த, “ஏய் ரசகுல்லா!” என்றொரு அழைப்பு!

அகஸ்டின் சத்தம் வந்த திசையை நோக்க, கையிலிருந்த கல்லை தூக்கிப் போட்டு பிடித்தவாறு கேலிச் சிரிப்புடன் வீதியோரத்திலிருந்த மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தாள் அலீஷா. அவளை மேலிருந்து கீழ் பார்த்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி!