விழிகள் 18

eiGJ81L16854-74f66195

“மெதுவா பண்ணு மஹி, ரொம்ப கூலா…. ரொம்ப ஸ்மூத்தா இதோட சேர்த்துரு. அவ்வளவுதான், முடிஞ்சது.” தனக்குத்தானே பேசி தான் இணைக்க வேண்டியதை இணைத்து நிமிர்ந்து நின்றறன், ‘உஃப்ப்…’ என்று பெருமூச்சுவிட, இத்தனை நேரம் அவன் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்து ஆர்வமாக அவன் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்த அலீஷா, “பாஸ்…” என்று உற்சாகமாக அழைத்தாள்.

மஹியோ இரு புருவங்களை உயர்த்தி அவளை நோக்க, “எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு. இனி நீங்கதான் என் பாஸ். நீங்க பெரிய மொபைல் ஆர்ட்டிஸ்ட்டா வந்ததும் என்னைதான் உங்க அசிஸ்டன்ட்டா வச்சிக்கணும். ஏமாத்தக் கூடாது.” குழந்தைத்தனமாகச் சொன்னாள் அலீஷா.

இருவரையும் கன்னத்தில் கை வைத்து அரைத்தூக்கத்தில் ஆத்வி பார்த்துக்கொண்டிருக்க, மஹியிடம் கெஞ்சிக் கூத்தாடி அவனிடமிருந்து வாங்கிய அவனின் அலைப்பேசியில் விளையாடி நேரத்தை கழித்துக்கொண்டிருந்த அகஸ்டின், விழிகளை மட்டும் உயர்த்தி அலீஷாவை நோக்கினான். அவனுடைய விரல்கள் விளையாட்டில் இருந்தாலும் விழிகளோ அடிக்கடி அலீஷாவின் மீதுதான் படிந்து மீண்டது.

சரியாக அதேநேரம், இவர்களிருக்கும் அறையின் கதவு தட்டப்பட, ஆத்வியோ வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள். அங்கு வாசலில் நின்றிருந்த அழகான யுவதியோ ஆத்வியைப் பார்த்ததும், “மிஸ்டர்.மஹேந்திரன்…” என்று  கேள்வியாக இழுக்க, “யெஸ், ஐ அம் ஹியர்.” என்றவாறு கைகளை துடைத்துக்கொண்டு வாசலை எட்டிப் பார்த்தவன், “வாவ் மிஸ்.நடாஷா!” என்றான் உற்சாகமாக.

அவளோ மஹியைப் பார்த்ததும் ஆத்வியை தள்ளி விடாத குறையாக வேகமாக வந்து, “குட் டூ சீ யூ மஹேந்திரன்.” என்று அணைத்துக்கொள்ள, பதிலுக்கு சிரிப்புடன் மஹியும் அணைத்துக்கொள்ள,  ‘ஆஆ…’ என இருவரையும் வாயைப் பிளந்த வண்ணம் ஆத்வி பார்த்திருந்தாள் என்றால், கையிலிருந்த அலைப்பேசியை நழுவவிட்டு அகஸ்டினும் அதே பாவனையில் அமர்ந்திருந்தான்.

மஹியோ நடாஷாவை அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்து அவளெதிரே அமர்ந்துக்கொள்ள, மஹியை தாண்டி அங்கு அரைகுறையாக செய்யப்பட்டிருந்ததை எட்டிப் பார்த்தவள், “இப்போதான் ஆரம்பிச்சிருக்கீங்க போல! பட், இன்னும் அஞ்சு நாள்தானே இருக்கு, அதுக்குள்ள பெஸ்ட் பீஸ் உங்களால ரெடி பண்ண முடியுமா என்ன?” சாதாரணமாகக் கேட்டாள்.

“ஐ ட்ரை மை பெஸ்ட்.” சிரிப்போடுச் சொன்னவாறு எதேர்ச்சையாக திரும்பியவன், விழி விரித்து தன்னை பார்த்துக்கொண்டிருந்த தன் நண்பர்களை அதிர்ந்துப் பார்த்தான்.

பின் குரலைச் செறுமி, கண்களால் அவர்களை அமரச் சொன்னவன், “இவங்க பெயர் நடாஷா. நான் கலந்துக்கப் போற ஷோவ நடத்துற ஆர்ட் கேலரில இவங்க வர்க் பண்றாங்க. இந்த ஷோவுக்காக நான் ரிஜிஸ்டர் பண்ணதிலிருந்து என்னை கைட் பண்றவங்க இவங்கதான். என்ட், நான் யாருன்னு இவங்களுக்கு தெரியும்.” தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்த, “ஓஹோ…” ஒரு மார்கமாக இழுத்தவாறு அவளை மேலிருந்து கீழ் அளவிட்டான் அகஸ்டின்.

சட்டென நடாஷாவின் முன் கையை நீட்டி, “ஐ அம் அகஸ்டின். மஹியோட கசின். யூ லுக் கோர்ஜியஸ். ஷெல் வீ கேட்ச்அப் டூநைட்?” ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அப்பட்டமாக வழிய, “அது.. ஆங்…” என்ன சொல்வதென்று தெரியாது அவள் தடுமாறினாள் என்றால், தன்னவனை மூச்சு வாங்கியவாறு முறைத்துப் பார்த்த அலீஷா, “பொம்பள சோக்கு கேக்குதா உனக்கு?” மெதுவாக கேட்டவாறு அவனின் இடுப்பில் கிள்ளி வைத்தாள்.

அதில், “அவுச்!” என்று கத்தியவன், பக்கவாட்டாகத் திரும்பி அவளை முறைக்க, இவர்களின் கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மஹிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

லேசாகச் சிரித்து, “மஹி, ஐ க்னோ, யூ ஆர் நிவ் டூ மும்பை. சோ, உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க. நீங்க ஒரு பெஸ்ட் பீஸ் ரெடி பண்ணுவீங்கன்னு நான் நம்புறேன். ஆல் த பெஸ்ட்.” என்றுவிட்டு எழுந்து வாசல் வரை சென்று, தன்னை வழியனுப்ப வந்தவனை தயக்கமாக திரும்பிப் பார்த்தாள் நடாஷா.

“அது… இஃப் யூ டோன்ட் மைன்ட், சன்டே நைட் மீட் பண்ணலாமா? சின்ன பார்ட்டிதான். நீங்க தப்பா நினைக்குற அளவுக்கு எதுவும் கிடையாது.” அவள் தயங்கியவாறு சொல்லி முடிக்க, “அது…” மலங்க மலங்க விழித்த மஹியின் பார்வையோ தன்னையே நகத்தை பரபரப்பாக கடித்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்த ஆத்வியின் மீதுதான் படிந்தது. அவளுக்கோ கொஞ்சமும் பொறுக்கமுடியவில்லை.

அவளையும் மீறிய பொறாமை கலந்த கோபம்!

‘தீரா, நோ சொல்லு! நோ சொல்லு!’ உள்ளுக்குள் கூச்சல் போட்டவாறு ஒருவித படபடப்போடு தன்னவனின் பதிலுக்காக அவள் காத்திருக்க, அவனோ “ஷுவர்.” என்றுவிடவும், அவளுக்கு தலையே சுற்றிவிட்டது.

நடாஷாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. சிரிப்போடு அவள் அங்கிருந்து நகர்ந்திருக்க, மஹியை முறைத்தவாறு நின்றிருந்தாள் ஆத்வி.

அவளை மேலும் கடுப்பேற்றும் விதமாக, “பாஸ், யாரந்த ஃபிகரு? சும்மா பளபளன்னு இருக்காங்க.” அலீஷா ஆர்வமாக கேட்க, “அதான் சொன்னேனே அலீ! ரொம்ப நல்ல பொண்ணு.” மஹியும் சாதாரணமாகச் சொல்ல, “உங்களுக்கு ஏத்த ஆளு பாஸ், அதுவும் அந்த பொண்ணுக்கு உங்க மேல ஒரு கண்ணு.” சிரிப்போடு சொன்னாள் அவள். ஆத்விக்கு இதையெல்லாம் ஏனோ ஜீரணிக்கவே முடியவில்லை.

“ஏய், எப்போவும் அடுத்தவங்க விஷயத்துலதான் மூக்கை நுழைப்பியா? மைன்ட் யூவர் ஆன் பிஸ்னஸ்!” கோபத்தோடு கத்திவிட்டு ஆத்வி வெளியேற, ‘அங்க சொன்னா, இங்க ஏன் பொங்குது?’ உள்ளுக்குள் யோசித்தவாறு ‘ஙே’ என ஆத்வியை நோக்கினாள் அலீஷா.

அன்றிரவு,

சாப்பிட்டதுமே மஹி தனதறையில் வேலையை ஆரம்பிக்க, இத்தனைநேரம் அவனுக்கு உதவி செய்துக்கொண்டிருந்த அலீஷா, அகஸ்டினை தேடி ஆத்வி இருக்கும் அறைக்குள் நுழைய, அவளை சந்தேகமாகப் பார்த்தவாறு மஹியிடம் சென்றாள் ஆத்வி.

அவனோ தீவிரமாக தன் வேலையில் கவனமாக இருக்க, இரு கைகளையும் ஊன்றி கட்டிலில் அமர்ந்தவள், “எனக்கு என்னவோ அந்த அலீஷா பொண்ணைப் பார்த்தா சந்தேகமா இருக்கு தீரா. அவ பேச்சு, நடந்துக்குற விதம் எதுவும் அன்னைக்கு ஆஃபீஸ்ல பார்த்த மாதிரி இல்லை. என்ட், இவன் அவள ப்ரொபோஸ் பண்ணதும் ‘லவ் யூ டூ’ன்னு சொன்னதை என் காதால கேட்டேன். ஆனா, இப்போ அகிக்கிட்ட ஏதோ ஒரு ஒதுக்கம் தெரியுது. டிட் யூ நோட்டீஸ் தட்?” சந்தேகத்தோடுக் கேட்டாள்.

அவள் புறம் பார்வையை திருப்பாது, “ஆதி, அது அவங்களோட பர்சனல். நாம அவங்கள பத்தி இப்படி யோசிக்கிறது ரொம்ப தப்பு. காய்கறி முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்! அப்போ பார்த்துக்கலாம். இப்போ இது நமக்கு தேவையில்லை.” என்றுவிட்டு மஹி மிகவும் கவனமாக செய்துக்கொண்டிருக்க, ‘க்கும்!’ நொடிந்துக்கொண்டவாறு எதேர்ச்சையாக திரும்பியவளின் விழிகளில் சிக்கியது மேசையிலிருந்த காகிதம்.

எப்போதும் தன்னவளிடம் பேசுவது போல் தன் மனதிலிப்பதை ஒரு வர்ண காகிதத்தில் எழுதி அதை அந்த காகிதங்களை சேர்த்து வைத்திருந்த ஜாரினுள் போடாமல், மஹி மேசையில் வைத்திருக்க, அதைப் பார்த்தவளுக்கு விழிகள் மின்ன, ஒரு ஆர்வம்.

‘எப்படியும் தீரா அந்த பொண்ணோட பெயர இதுல எழுதியிருப்பான். ஆத்வி, அவனுக்கு தெரியாத மாதிரி போய் அதை எடுத்துரு!’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மெல்ல மேசையை நெருங்கியவள், ஆர்வத்தில் வேகமாக அதையெடுத்து அதிலுள்ளதை படிக்க ஆரம்பிக்க, “திருந்த மாட்டல்ல நீனு?” என்ற மஹியின் இறுகியகுரல் அவளின் காதருகில் கேட்டது.

திடுக்கிட்டு திரும்பியவள், காகிதத்தை பின்னால் மறைத்து, “என்…என்னாச்சு தீரா?” எதுவும் தெரியாத பாவனையில் கேட்க, “பேப்பர கொடு!” கைகளை நீட்டி கண்டிப்புக் குரலில் கேட்டான் அவன்.

அவனுடைய இறுகிய முகத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவள், “அது… அது எந்த பேப்பர்?” என்று சொல்லி முடிக்கவில்லை, “அடுத்தவங்களோட பர்சனல்ல தெரிஞ்சிக்க ஆசைப்படுறது மேனர்ஸ் கிடையாது. முன்னாடியே சொல்லியிருக்கேன் ஆதி, கொடுத்துரு!” ஒவ்வொரு வார்த்தைகளாக அவன் அழுத்தமாக கேட்க, அதில் முகம் சுருக்கினாள் அவள்.

உதட்டை பிதுக்கியவாறு அவனிடம் கையை நீட்டி, பின் “சோ வாட்? இன்னைக்கு நான் தெரிஞ்சிக்கிட்டே ஆகணும். சோரி தீரா!” என்றுவிட்டு அறைக்குள் ஆத்வி ஓட, “திஸ் இஸ் டூ மச்!” சட்டை கையை மடித்துவிட்டவாறு துரத்த ஆரம்பித்தான் மஹி.

அவளும் அறைக்குள்ளேயே அவனுக்கு போக்குக் காட்டி வட்டமடிக்க, அவனும் அவளை விட்டபாடில்லை. “ஆதி, மரியாதையா கொடு! இல்லைன்னா…” கிட்டதட்ட அவன் இயல்பை விட்டு மிரட்டவே ஆரம்பிக்க, அவளோ பார்க்கும் ஆர்வத்தில் அவனின் மிரட்டலை எல்லாம் கண்டுக்கொள்ளவேயில்லை.

கட்டிலின் மேல் ஏறியவள், “தீரா, வேணாம். பேர மட்டும் பார்த்துட்டு நானே கொடுத்துருவேன். இப்படியெல்லாம் துரத்தினேன்னா மொத்தத்தையும் பார்ப்பேன்.” என்று பதிலுக்கு மிரட்ட, “அடிங்க…” என்று கத்தியவாறு ஓட எத்தனித்த அவளின் காலைப் பிடித்து மஹி இழுத்துவிட, அப்படியே கட்டிலில் குப்புற விழுந்தாள் ஆத்வி.

அதைப் பயன்படுத்திக்கொண்டவன், கிட்டதட்ட அவள் மேல் படர்ந்து அவளிடமிருந்து அந்த காகிதத்தை பிடுங்க முயற்சித்தான்.

ஆனால், ஆத்வியும் விட்டுக்கொடுக்காது பின்னால் கைகளை மறைத்து, கொடுக்க மறுத்து அலுச்சாட்டியம் செய்ய, உடல்கள் உரச  தாங்கள் இருக்கும் நிலையை இருவரும் உணரவில்லை. ஆனால், அதுவும் சில நொடிகளே! முதலில் சுதாகரித்தது என்னவோ ஆத்விதான்.

இருவரும் மூச்சுகாற்று கலக்கும் தூரத்திற்கு நெருங்கியிருக்க, சட்டென பேச்சை நிறுத்திவிட்டு மஹியின் முகத்தை அதிர்ந்துப் பார்த்தாள் அவள். அதேநேரம், “ஆதி, அடம் பிடிக்காத! இது ரொம்ப தப்பு, கொடு…” சொல்லிக்கொண்டே அவளின் முகத்தை நோக்கியவனின் செயலும் அவளின் பார்வையில் சட்டென நிற்க, இருவரும் ஒருவரையொருவர் இமை மூடாது பார்த்துக்கொண்டனர்.

ஆத்வியோ விழிகளால் தாங்களிருக்கும் நிலையைப் பார்த்துவிட்டு மஹியை நோக்க, அவனோ அவளையேப் பார்த்திருந்தான். இருவருக்கும் என்ன உணர்வென்றே தெரியவில்லை.

அதுவும், அவள் மேல் அளவு கடந்த காதல் கொண்டவன் அவன்! அவளுடைய நெருக்கமும், வாசமும் அவனை பித்தம் கொள்ளச் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழந்தவன், மெதுவாக அவளுடைய இதழில் பார்வையைப் பதித்தான்.

தன்னை மீறி அவளிதழை நோக்கி குனிந்த மஹி, மீண்டும் விழிகளை மட்டும் உயர்த்தி அவள் விழிகளைப் பார்த்தவாறு அவளிதழில் தன்னிதழை பொருத்த, தானாகவே மூடிக்கொண்டன அவளின் சிப்பி இமைகள். அடுத்து இவனுடைய விழிகளும் மூடிக்கொள்ள, இதழுக்குள் புதையாது இதழ்கள் இரு உரசல்களைதான் செய்திருக்கும் இருவர் உடலிலும் அந்த புது உணர்வில் ஒரு சிலிர்ப்பு!

ஆனால், சிலிர்ப்பு அடங்கியதுமே தன்னிலைக்கு வந்த மஹிக்கு தன் மேலே அத்தனை ஆத்திரம்!

“ஷீட்!” என்று கத்தியவாறு மொத்த பலத்தையும் சேர்த்து அவளை உதறிவிட்டு அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டவன், அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியிருக்க, அவன் உதறியதிலும், காகிதத்தை பிடுங்கிய விதத்திலும் வலி எடுத்தாலும், பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்த ஆத்விக்கு எதுவுமே புரியவில்லை.

அதேசமயம் அகஸ்டினை தேடி அறைக்குள் நுழைந்த அலீஷாவிற்கு ஜன்னல் வழியே மும்பை நகரை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவனைப் பார்த்ததும் இதழ்கள் குறும்பாக வளைந்தன.

வெளியே வெறித்தவாறு நின்றிருந்த அகஸ்டினின் இடையை வளைத்து அவள் அணைத்துக்கொள்ள, திடுக்கிட்டுப் பார்த்தவன், அவளுடைய கை வளைவுக்குள் வைத்து அப்படியே திரும்பி அலீஷாவை முறைத்தான். ஆனால், அவளோ தன் நெற்றியில் ஒட்டியிருந்த அவன் மார்பில் அழுந்த முத்தமிட்டவள், நாடியை மார்பில் குற்றி நிமிர்ந்து ஒற்றை கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள்.

வேகமாக அவளுடைய கரங்களைப் பிடித்து உதறிவிட்டவன், “என்னடி, ரொம்ப தைரியமோ? நான் யார்கிட்டேயும் இவ்வளவு பொறுமையா பேசினது கிடையாது. என்னை நெருங்கணும்னு நினைக்காத!” அழுத்தமாக ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, அலீஷா என்ன சும்மாவா? மீண்டும் அவனை நெருங்கி விழிகளைப் பார்த்து, “லவ் யூ ரசகுல்லா.” என்றாள் காதலாக.

அந்த வார்த்தைகளைக் கேட்டு அகஸ்டினின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன. “ஆஹான்! ஏய் எலி, எந்த தைரியத்துல என்னை லவ் பண்றேன்னு திரிஞ்சிக்கிட்டு இருக்கன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு. அதுவும், ஒரு திருடி நீ! நீ என்னை காதலிக்கிறது எனக்குதான் அசிங்கமா இருக்கு. உன்னால நீ யாருன்னு கூட வெளிப்படையா சொல்ல முடியல, இதுல உனக்கு எட்டாக்கனியா இருக்க என் மேல ஆசை!” கொஞ்சமும் யோசிக்காது வார்த்தைகளை விட்டு வாயைப் பொத்திச் சிரித்தான் அவன்.

இதுவரை தோன்றாத தாழ்வுமனப்பான்மை அலீஷாவுக்கு இப்போது தோன்ற ஆரம்பித்தது. அன்று அவளுடைய அம்மா சொன்னதில் முளைக்க ஆரம்பித்தது, இப்போது அகஸ்டின் பேசிய வார்த்தைகளில் அவளுடைய மனதை தாக்கிவிட, உள்ளுக்குள் உடைந்துவிட்டாள் அவள்.

ஆனால், முயன்று தன்னை மீட்டெடுத்து அவனை நேருக்கு நேராக பார்த்தவள், “திருடன் என்னைக்கு தன்னை காட்டிக் கொடுப்பான்? ஆனா,  நீ சொல்லலாமே தினு! போ, போய் சொல்லு, நீதான் தைரியமான ஆளாச்சே!” கேலியாகச் சொல்ல, விழி விரித்தான் அவன். ஏனோ அவனும் அவளைப் பற்றி சொல்லாது மறைத்து அலீஷாவை காப்பாற்றத்தானே செய்கிறான்!

“அது நான்… நான் வந்து…” அவனுடைய வார்த்தைகள் தடுமாற, “ஷ்…” என்றவாறு மேலும் அவனை நெருங்கி நின்று, “தினு, நிஜமாவே இப்போ நான் திருடுறது இல்லைடா. விட்டுட்டேன். இனி நேர்மையா சம்பாதிக்க போறேன். உன்னோட அந்தஸ்த்துக்கு நான் இல்லைன்னாலும் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். அது நம்ம வாழ்க்கைக்கு போதாதா?” விழிகளில் ஏக்கத்தோடு கேட்டாள் அலீஷா.

சில நொடிகள் அவளை வெறித்த அகஸ்டின், “மொதல்ல பண்ண பாவத்துக்கெல்லாம் பிரயாச்சித்தமா காசி, ராமேஷ்வரம்னு போய் பாவத்தை கரைச்சிட்டு வா!” கேலியாகச் சொல்லிவிட்டு நகர போக, அவனின் முழங்கையைப் பிடித்து இழுத்தவள், அடுத்தகணம் அவனுடைய பின்னந்தலையில் கைவிட்டு குனியச் செய்து அவனிதழில் அழுந்த முத்தமிட்டிருந்தாள்.

முத்தத்தை கொடுத்த வேகத்தில் அவனை விட்டு விலகி தன்னவனின் கோலரைப் பற்றி தன் முகம் நோக்கி இழுத்த அலீஷா, “ஆமா ரசகுல்லா, பாவத்துக்கு பிரயாச்சித்தம் தேடணும். நான் பண்ணதோட சேர்ந்து நீ பண்ணதுக்கும். திருடுறது பாவம்னா, நம்மள நேசிக்கிறவங்கள மனசால காயப்படுத்துறது பெரிய பாவம். அதைதான் சார் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருக்க, அதிர்ந்து நின்றான் அவன்.