வெண்பனி 18

IMG-20220405-WA0023-215e5fe0

பனி 18

“போ புள்ள! நீ சும்மா, சும்மா அடிச்சு என்னை மறக்க வச்சிருவ. நான் எதுல விட்டேன்?” என சந்தேகமாக வினவினான் கௌதம் கிருஷ்ணா.

“ம் ஸ்கூல்ல என்ன பார்த்ததுல விட்ட.” என முறைத்தாள் பனிமலர்.

“நீ நல்லா சப்பியா அமுல் பேபி மாதிரி இருப்ப. உன்ன நெருங்கி வந்து பேசினதில்லை. (தவறு கதிர், அன்புவை மீறி பேச முடியலைன்னு சொல்லி இருக்கனுமோ?) அப்பறம் ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் வந்துட்டேன். ரெண்டு வருஷம் அப்படியே ஓடிருச்சு. நான் மூணாவது வருஷம் படிக்கும்போது, நீயும் அன்புவும் மறுபடியும் என் வாழ்க்கையில் வந்தீங்க.” இனிய கனவுக்குள் நுழைந்து விட்டான்.

“அன்னைக்கு பைக்ல இருந்து இறங்கி, ஹெல்மெட்டை கழட்டிட்டு காலேஜ சுத்தி பார்த்த பாரு ஒரு பார்வை, அதுலயே நான் டோட்டல் பிளாட். உன் கண்ல என்னமோ இருக்கு?” என்றவன் அவள் விழிகளை இமைக்காமல் ரசித்தான்.

அவனது இமை சிமிட்டா பார்வை பெண்ணுக்கு சங்கடமளிக்க,”கௌதம்” என்றாள் மென்மையான குரலில்.

அவளது குரலில் தன்னிலை மீண்டவன், தன் தலையை உலுக்கி, தன்னை சமாதானப்படுத்தி மீண்டும் தொடர்ந்தான்.

“உன் வாயால ஐ லவ் யூ கேக்கணும் ஒரு ஆசை. அதனால ராகிங்ற பேர்ல ப்ரொபோஸ் பண்ண சொன்னேன். நீயும் சாதாரணமா சொல்லிட்டு போய்ட்ட. ஆனா அது எனக்கு மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.

அப்ப எனக்கு உன்னை அடையாளம் தெரியல. ஸ்கூல் படிக்கும்போது சப்பியா இருந்த பெண், இப்ப மெலிந்து நல்லா அழகா ஆயிட்ட. உன் முகம் மட்டும் எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது. நீங்க போனதுக்கு அப்புறம், பிரெண்ட்ஸ் நீ யாருன்னு சொன்னாங்க. அப்புறம் எனக்கு ஞாபகம் வந்தது.” இங்கே பேச்சை நிறுத்தினான்.

தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, சிறிது தயக்கத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்தான்,”என் ஃப்ரெண்ட்ஸ், உனக்கும் அன்புக்கும் வீட்ல கல்யாணம் பேசி வச்சிருக்காங்கன்னு சொன்னான்.” இதைக் கேட்கவும் அவள் கோபம் கொண்டு முறைத்தாள்.

“ஹே! நான் அன்னைக்கு நிலைய சொன்னேன்.” பதறினான். அதில் கொஞ்சம் சமாதானமானாள்.

“மறுநாளும் உன் கூட பேச முயற்சி பண்ணி, பேசினேன். நீயும் பேசின, ஆனால் வெட்டி விட்ட மாதிரி பேசிட்டு போயிட்ட. அப்ப தனா பொறாமையோடு உங்களை பார்த்தாள். அவ கிட்ட பேச்சு கொடுத்தேன். அவளுக்கு அன்பு மேல கிரஷ் இருக்குன்னு தெரிஞ்சது. உன்கிட்ட நெருங்க அது ஒரு வழியா, எனக்கு தெரிஞ்சது. அதனால் தனா கூட நட்பு கரம் நீட்டினேன்.

அவ அன்பு கூட சேர்வதற்கு நான் ஹெல்ப் பண்ணா? என் கூட உன்னை சேர்க்குறதுக்கு அவ ஹெல்ப் பண்றதா ப்ராமிஸ் பண்ணா. ஜஸ்ட் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங். அவ எனக்கு பண்ண ப்ராமிஸ்காக, உன்கிட்ட என்னை மேரேஜ் பண்ண சொன்னா. தனாவை நான் மிரட்டல” என சொல்லி முடித்தவனின் முகம் கசங்கியிருந்தது.

†††††

அன்று குற்றாலத்தில் வைத்து கதிர், மலரை அழைத்துச் சென்ற பிறகே கௌதம் மனம் தெளிந்தான். ‘மலர் தன் தற்காலிக தேவையில்லை. வாழ்நாள் தேவை. அவளை மனதார நேசிக்கிறேன். என்ன செய்தாவது அவளை அடைய வேண்டும்.’ என மனம் வைராக்கியம் கொண்டது.

குற்றாலத்திலிருந்து திரும்பிய பிறகு தனா, அன்புவுடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள். அன்பு, மலருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மறைமுக சண்டையிட்டாள். அதனால் மலர் அடிக்கடி தனித்து விடப்பட்டாள். தனியே சென்றாள் என சொன்னால் சரியாக இருக்குமோ? அந்த தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கௌதம், அவளுடனான நட்பை இறுக்கினான். இது அனைத்தையும் நடத்தியது மாஸ்டர் மைண்ட் கௌதம் கிருஷ்ணா என்பது யாருக்கும் தெரியாது.

அதன் பிறகு அவளது மனதை நெருங்க பலவழிகளில் முயன்றதுண்டு. ஆனால் மலர், அவனை நட்பு என்ற எல்லையை தாண்டி அனுமதித்தில்லை. இப்படியே அவர்கள் நாட்கள் இரண்டு வருடங்களை கடந்தது.

கௌதம் படிப்பை முடித்து தன் தந்தையுடன் இணைந்து தொழிலை கவனித்துக் கொண்டான். அடிக்கடி வெளியே வைத்து மலரை, அன்புவுடன் சந்தித்து, தன்னை மறக்க விடாமல் வைத்திருந்தான். தன் காலில் நிற்க முடியும், என்ற நம்பிக்கை வரவும் மலரிடம் தன் காதலை மீண்டும் தெரிவித்தான். 

“கௌ! எனக்கு நீ பிரிண்ட் மட்டும்தான். அதைத் தாண்டி நான் யோசித்தில்லை. யோசிக்கவும் மாட்டேன். நீ வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.” என மீண்டும் மறுத்தாள்.

“ஏன் மலர், உனக்கு என்னை புடிக்கல. என்கிட்ட படிப்பில்லையா? அறிவில்லையா? அழகில்லையா?”

“உன்கிட்ட எல்லாம் இருக்கு, நான் ஒத்துக்கிறேன். நீ என்னோடு பிரண்ட் அவ்வளவுதான். அதை தாண்டி என்னால் யோசிக்க முடியாது.” என உறுதியாக பெண்ணவள் மறுத்தாள். 

பொறுமையாக பேசி, அவளை சம்மதிக்க வைக்க முடியாது, என்பதை உணர்ந்தவன் மிரட்டலில் இறங்கினான். “இங்க பாரு புள்ள, இது நம்ம அன்னைக்கு குற்றாலம் போனப்ப எடுத்த போட்டோ. இந்த போட்டோவை உங்க வீட்ல, காமிச்சு நம்ம ரெண்டு பேரும் விரும்புறோம்ன்னு சொல்லி நான் கல்யாணத்துக்கு கேட்பேன். நீ சம்மதிக்கிற” என கட்டாயப்படுத்தினான்.

முதலில் அவன் சொல்வதைக் கேட்டு பயந்தாலும், அந்த போட்டோவில் தப்பாக எதுவும் இல்லை. ஜஸ்ட் இரண்டு பேரும் எடுத்த செல்பி. அதில் மனம் தெளிந்தவள், அவனை அலட்சியமாக பார்த்து,”உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ?” என கூறி சென்று விட்டாள்.

அவள் சொல்லியதில் கோபம் கொண்டவன், நேரே சென்று நின்றது தனலட்சுமியிடம். 

†††††

“தனா, மலர் என்னோட காதல மறுத்துட்டா. நீ மலர் கிட்ட, ‘கௌதம நீ கல்யாணம் பண்ணா தான், நான் அன்புவ கட்டிகுவேன்னு சொல்லு’ அன்பு மேல இருக்க பாசத்துல அவளும் என்னை கட்டிக்கவா.

“கௌதம், ப்ளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணா, நல்லாவா இருக்கும்?” என தனா தயங்கினாள்.

“மலரோடு மனசு வெள்ளை காகிதம் மாதிரி. அதனால அதுல என் பேரை எழுதுறது ஈஸி. அதை நான் பார்த்துக்கிறேன். எனக்கு தேவை அவளை கல்யாணம் முடிக்கணும்.”

அப்படியும் தயங்கியவளை,”நான் மலர் கூட சேருறதுக்கு, நீ ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்க. அதை மறக்காத.” என அவள் மனதை கரைத்தே மலரிடம் அனுப்பி இருந்தான்.

அவளும் தயங்கியவாரே மலரிடம்,”கௌதம் உன்னை உண்மையா, விரும்புறான். நீ ஏன் அவனை கல்யாணம் பண்ணிக்க கூடாது?”

தனாவை விசித்திரமாக பார்த்த மலர்,”அப்ப என் மனசுல விருப்பம் வேண்டாமா?” புருவம் உயர்த்தினாள்.

‘வேண்டாம்’ என எப்படி சொல்ல முடியும்? ஆனால் அந்த கட்டாயத்தில் தான் இருந்தாள் தனா, தான் செய்து கொடுத்த சத்தியத்திற்குகாக.

“உன் மனசுல யாரும் இல்ல. எப்படியும் வீட்ல பாக்குற யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போற.  அதுக்கு உன்னை நினைச்சு ஏங்குற கௌதம, கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே. அவன் காதலாவது சக்சஸ் ஆகும்.”

“கல்யாணம் என்னோட சொந்த விஷயம். அதுல நீ தலையிடாத.” மலர் மொழிந்தாள்.

தனமும் வேறு வழி இல்லாமல் மிரட்டினாள். “சரி மலர்! உன்னோடு கல்யாணம் உன்னோட விருப்பம். அதே மாதிரி என்னோட கல்யாணம் என்னோட விருப்பம். நீ கௌதம கல்யாணம் பண்ணிக்கலைன்னா, நான் அன்புவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றாள் உறுதியாக.

மலர் ஒரு கணம் அதிர்ந்துவிட்டாள். எரிச்சல் வந்தது,”என்னோட கல்யாணத்துக்கும், அன்புக்கும் என்ன சம்பந்தம்?”

“சம்பந்தம் இருக்கோ? இல்லையோ? இதுதான் என்னோட முடிவு. நீ கௌதமை கட்டிகிட்டால், நான் அன்புவை கல்யாணம் பண்ணுவேன்.” 

அன்புக்கு, தனா மேலிருக்கும் விருப்பம் பனிமலர் அறிந்தது. அவனின் வாழ்விற்காக, தன் வாழ்வை கௌவுதமிடம் பனையம் வைக்க முடிவு செய்தாள். 

கௌதமை அழைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள். அவள் சம்மதம் கிடைத்தவுடன், வேகமாக கௌதம் வீட்டில் பேசி, விடிந்தால் திருமணம், என்பது வரை வந்தும், மலரின் சந்தோஷத்துக்காக கௌதம் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டான்.

அதில் எதிர்பாராத விதமாக கதிர், பனிமலரின் திருமணம் நடந்து முடிந்தது. தவறு அப்படி சொல்லக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கதிர், தன் பனியை, தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான் என்பது சரியாக இருக்கும். இல்லையென்றால் வீட்டிலிருந்து இவள் வரை, அனைவரிடமும் அவன் போராடி இருக்க வேண்டும்.

†††††

“திருந்தினது தான் திருந்தின, கொஞ்சம் முன்னாடியே திருந்தியிருந்தால், நான் கதிர்கிட்ட இருந்து தப்பிச்சிருப்பேன். அவராவது அவர் விரும்பின தீப்தியை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருந்திருப்பார்?” என்றாள், இவ்வளவு நேரம் பொறுமையாக அவன் பேசுவதை கேட்ட பனிமலர்.

“நீ அப்படி வேற கனவு கண்டுகிட்டு இருக்கியா? கதிர் உன்னை விட்டிருப்பான்னு நினைக்கிறாயா?” பூடகமாக, கௌதம், மலரிடம் கதிரின் எண்ணத்தை தெரிவித்தான். 

அது புரியும் அளவு பனிமலர் இருந்திருந்தால், என்றோ கதிரின் காதலை புரிந்து கொண்டிருப்பாளே? எதுவும் புரியாமல் அடுத்த பேச்சுக்கு தாவினாள்.

“இப்போ அன்புவுக்கும் தனாவுக்கும், என்ன பிரச்சனைன்னு தெரியல? அவனும் முறுக்கிட்டு நிக்கிறான். அவளும் கண்ண கசக்கிட்டு இருக்கா?” மலரின் குரலில் வருத்தம் கொட்டி கிடந்தது.

“எதனால நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்னு அன்பு கிட்ட சொல்ல போனா. மேபி அதுல ஏதாவது பிராப்ளமாகி இருக்கலாம்.” இதைக் கேட்கவும் பெண் திகைத்துப் போனாள். 

அன்பு தன் மேல் வைத்திருக்கும் பாசத்தால், மறுபடியும் தனாவை ஏற்றுக் கொள்வான் என்பது சந்தேகமே என்று அவளுக்கு தெரியும், “அவனை எப்படி சரிபடுத்தி? எப்படி அவளுடன் சேர்த்து வைப்பது? சப்பா இப்பவே கண்ண கட்டுதே.” என வாய்விட்டு புலம்பினாள். 

அதில் மனம் விட்டு சிரித்த கெளதம்,”இது லவ்வர்ஸ் பிராப்ளம். நீ இடையில மாட்டிட்டு முழிக்காத. நீ உன் வாழ்க்கையை பாரு. அவங்க தானா சேர்ந்துக்குவாங்க.” என மலருக்கு அறிவுரை வழங்கினான்.

“இது என்ன லவ்வர்ஸ் பிராப்ளமா? எல்லாம் நீ பண்ண வேலை” அவனை முறைத்தாள்.

“முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இனி நான் ஒன்னும் பண்ண முடியாது.” என அலட்சியமாக தோளை குலுக்கினான்.

இப்படி அலட்சியதுடன் இருப்பவனை, என்ன சொல்ல? “சரி கௌ! நீ உடம்ப பாத்துக்கோ. நான் கிளம்புறேன்” என்றவள் கதிருடன் கிளம்பிவிட்டாள்.

†††††

கோபத்திலிருந்த கதிர் எதையும் பேசாமல், அவளை வீட்டில் விட்டு தன் ரிசார்ட் வேலையாக சென்று விட்டான். 

அவர்கள் கல்லூரி விடுமுறையில் இருந்ததால் அன்பு வீட்டில் இருந்தான். மலர் நேரே சென்று நின்றது அன்புவிடம். அவள் தன்னுடன் பேச வந்ததை கண்டு மகிழ்ந்து போனான் அன்பரசன்.

“அரசு! உனக்கும் தனாவுக்கும் என்ன பிரச்சனை?” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

“எங்களுக்குள்ள என்ன பிரச்சனை? ஒன்னும் இல்லையே.” என மழுப்பினான்.

“எங்க என் முகத்தை பார்த்து சொல்லு?”

அவளது முகம் பார்த்து எங்கனம் பொய் சொல்வது,”சின்ன பிரச்சனை தான் சரியாயிடும். அதைப்பத்தி கவலைப்படாத.” அவளை சமாதானப்படுத்த கூறினான்.

அதில் சமாதானமாகி விட்டால், அது பனிமலர் அல்லவே. “என்னுடைய மேரேஜ் தான் உங்க ரெண்டு பேத்துக்கும் பிரச்சனையா?”

திகைத்தவன், “நீ லூசு மாதிரி எதையாவது யோசிக்காத.”

இல்லை என்று சொல்லவில்லை அதை மனதில் குறித்துக் கொண்டவள்,”நான் கட்டாயத்துக்காக தான் கௌதமை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சேன். தவறு ஃபுல்லா கௌதம் மேல மட்டும் தான். தனா அவனுக்கு ஒரு சிறு உதவி செய்தாள். தவறு செய்த கௌதமையே நான் மன்னிச்சிட்டேன்.” 

“கௌதம் பிரச்சனை வேற. தனா பிரச்சனை வேற. அதை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாத.” சிறிது இடைவெளி விட்டான். 

“மலர் உனக்கு கதிர் மேல கோவம் இருக்கும்ன்னு எனக்கு தெரியும். ஆனா அவன் நல்லவன். அவனை புரிஞ்சுக்கோ.” என்றான் அன்பரசன் தயங்கியவாறு.

ஒரு பெருமூச்சுடன்,”அரசு, எனக்கு கல்யாணம் முடிஞ்சது. என் கணவன் கதிர் மட்டும்தான். அதில் எந்த மாற்றமுல்லை. இதை ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுக்கும். அதை நினைச்சு கவலைப்படாதே. எல்லாம் சரியாகிடும்.” என்றாள் ஆறுதலாக. 

அவனுடன் பேசி விட்டு வெளியே வந்த பெண், அங்கு நின்ற கதிரை கண்டு திகைத்தாள். சிறிது நேரம் முன் விட்டு சென்றவன், திடீரென மீண்டும் கண்முன்னால் நின்றால்.

முதலில் திகைத்தாலும் உடனே சுதாரித்து அவனது முகத்தை ஆராய்ந்தால், அவன் முகத்தில் அவளை விடும் போது இருந்த கோபம் குறைந்து சாந்தமாய் இருந்தது. ஏனென்று தெரியாமல் பெண்ணின் மனம் நிம்மதி கொண்டது.

அவள் சொன்ன,’என் கணவன் கதிர் மட்டும்தான்’ என்ற வாசகம் அவனது கோபத்தை போக்கியிருந்தது, அதை அவள் புரிந்திருந்தால் அவர்கள் வாழ்வு இன்றே மலர்ந்திருக்கும். ஆனால் அவள் கதிரின் காதலை திகட்ட, திகட்ட அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருந்ததால், இப்போது அவள் எதுவும் புரிந்து கொள்ளவில்லை. 

“வா கோயிலுக்கு போயிட்டு வரலாம். ஏதோ சாங்கியமம்.” என்றவன், அவள் விரும்பும் பரமேஸ்வரனை காண கூட்டிச் சென்றான்.

பைக்கில் செல்லும் அவர்களையே வன்மத்தோடு பார்திருந்தது இரு ஜோடி விழிகள்.