வெண்பனி 21

IMG-20220405-WA0023-1accaf22

பனி 21

அருவியும் மரங்களும் பின்னணி காட்சியாக விரிய, காலை கதிரவனின் ஒளி பனியின் மேல் பட்டு ஒளிர, வெள்ளை நிற புடவையில் சிகப்பு பூக்கள் பூக்க, அழகாக மிளிர்ந்த அந்த பனி சிற்பத்தை, பனியின் கதிரானவன் தன்னை மறந்து ரசித்தான்.

காலையிலேயே குளித்து, அழகாக சேலை உடுத்தி, தங்கள் அறையின் பால்கனியில் நின்று, இயற்கையில் லயித்து போயிருந்த பனிமலரை கண்ட கதிருக்கு, எப்போதும் இல்லாத தாபம் மனம் எங்கும் வியாபித்தது. மெல்ல நடந்து அவளை பின்னிருந்து மென்மையாக கட்டிக் கொண்டான்.

அந்த அணைப்பு, தன் எண்ணங்களில் தொலைந்திருந்த பெண்ணை, முதலில் திடுக்கிட வைத்தது. உடனே தன் கணவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள், அவன் மார்புடன் தன் முதுகை சாய்த்து ஒன்றினாள். அவளின் இணக்கம் அவனுக்கு தாபத்தை அதிகரித்தது.

“கண்ணம்மா” என முனங்கியவன் அவளது கழுத்து வளைவில் தன் முகம் புதைத்தான்.

“ம்” ஒரே எழுத்து, முனகலாகவே பதில் வந்தது.

அவன் மீசை அவளின் கழுத்தில் உரச,”பிடிச்சிருக்கா?” ஒரு வார்த்தை கேள்வி, அதில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தது.

அவனது மீசையின் குருகுருப்பில் உடல் கூசி சிலிர்த்தவள்,”ரொம்ப” ஒரே வார்த்தை பதில், அவனுக்கு பல்லாயிரம் விடை சொன்னது.

“எது?” குரலில் தாபம் வழிந்தது. அவளது வாய்மொழியாக அறிய விரும்பியதோ?

அவனின் அணைப்பிலிருந்து விலகி, அவன் கண்களை நேர் கொண்டு சந்தித்து தெளிவாக, திடமாக சொன்னாள்,”நான் நிற்கும் இந்த ரிசார்ட், என்னை சுற்றி இருக்கும் அந்த அருவி, மரம், அங்கு வானில் மேலெழும் கதிரவன், என் முன்னால் நிற்கும், என்னை மட்டுமே நேசிக்கும் இந்த கதிர், எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.” ஒவ்வொன்றாக தன் விரல் கொண்டு சுட்டியவளின் ஆள்காட்டி விரல், கடைசியில் கதிர் அரசனின் மார்பை சுட்டி நின்றது.

‘தன் காதலை அவள் உணர்ந்து கொண்டாள்.’ இதை தவிர வேறென்ன வேண்டும் இந்த உலகில்? கதிர் அரசன் பேச்சற்று போனான். அதீத மகிழ்ச்சியில் பேச்சு வர மறுத்தது. அவனது இருபத்தி இரண்டு வருட தவம் இன்று நிறைவேறியது.

அவனை சுட்டிய அந்த கரத்தை பற்றி, தன்னை நோக்கி இழுத்தவன், காற்று கூட புக முடியாத அளவு அவளை இறுக தழுவினான். அவனின் இறுகிய அணைப்பு பெண்ணுக்கு மூச்சு முட்டியது. இருந்தாலும் விலக மனமில்லை. விருப்பத்துடன் அவன் அணைப்பில் பொருந்தி நின்றாள்.

நேரம் சென்றதே தவிர அவன் அணைப்பு சிறிதும் தளரவில்லை. முகத்தை மட்டும் நிமிர்த்தி, தன் பார்வையை அவன் முகத்தில் படர விட்டாள். அவனது கண்களில் தெரிந்தது, அவள் மீதான காதல். எந்த எதிர்பார்ப்புமின்றி, அவள் மீது அவன் கொண்ட அளவிட முடியாத காதல். பெண்ணால் பேச முடியவில்லை. தொண்டைக் குழியில் வார்த்தை சிக்கி கொண்டது.

“கதி.. உனக்.. என்னை அவ்வ… பிடிக்குமா?” தெரிந்தே கேட்கப்பட்ட கேள்வி. வாய் வார்த்தையாக பதில் வேண்டுமா? அவன் கண்கள் தான் ஆயிரம் பதில் சொன்னதே?

ஆனால் அவன் பதில் வழங்கினான் தன் முத்தத்தால். இத்தனை வருட தவம், ஆசை, ஏக்கம், தாபம், அவனது அளவிட முடியாத காதல், என அனைத்தையும் அவளுக்கு உணர்த்துவது போல், அவள் முகம் முழுவதும் அவனது உதடுகள் பயணித்து, அவளது இதழ்களில் இளைப்பாறியது.

முதல் இதழ் அணைப்பு, தன் மனதிற்கு இனியவளுடன், விலக வேண்டும் என துளி கூட எண்ணமில்லை. அள்ளி பருகினான் மலரின் இதழ் தேனை. பருக பருக தாகம் பெருகியது. அமுதம் சுறந்தது. எவ்வளவு பருகினாலும் தீராத தாகம்.

நீண்ட நேரம் கடந்து, அவள் மூச்சுக்கு திணறிய பிறகே, அவளது இதழ்களுக்கு விடுதலை கிடைத்தது. பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

வெட்கத்தால் சிவந்த முகமும், தன் முத்தத்தால் சிவந்து துடிக்கும் இதழ்களும், மூச்சுக்காக ஏறி இறங்கிய மார்பும் அவனின் தாபத்தை அதிகரித்தது. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், அவள் முகத்தை தன் இரு கைகளில் தாமரை என தாங்கினான்.

“பனி ஐ நீட் யூ ரைட் நவ். ஐஅம் நாட் ஏபிள் டு கண்ட்ரோல் மை செல்ப். (இப்பவே எனக்கு நீ வேணும். என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை)” குரலில் தாபம் வழிந்தது.

அவன் கண்களை நேர் கொண்டு சந்திக்க முடியாமல் பெண்மை தடுக்க, விழி தாழ்த்தி தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

அவளது சம்மதம் கிடைத்த அடுத்த நொடி, பூவென பூம்பாவையை கரங்களில் ஏந்தினான். பாவையோ விழி விரித்தாள். அந்த விழி வீச்சு ஆழிப்பேரலை என அவனை உள்ளிழுத்து கொண்டது. அவனும் விரும்பியே அதில் தொலைந்தான்.

பால்கனியிலிருந்து அவளை தூக்கி சென்றவன், தங்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைத்த, அந்த அறையிலிருந்த மஞ்சத்தில் அவளைக் கிடத்தி, அவளையே மஞ்சமாக்கி, அவள் மேல் சரிந்தான். மீண்டும் முற்றுகை போராட்டம் தொடங்கியது இதழில். எங்கு தொடங்கி எங்கு முடிய?

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன

பார்வை பார்த்து கலந்ததென்ன

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன

பார்வை பார்த்து கலந்ததென்ன

எனது உதடுகள் உந்தன் மார்பில்

போகும் ஊர்வலங்கள்

நகங்கள் கீறியே முதுகில் எங்கும்

நூறு ஒவியங்கள்

எங்கு துவங்கி எங்கு முடிக்க

எதனை விடுத்து எதனை எடுக்க

என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன

பார்வை பார்த்து கலந்ததென்ன 

நிண்ட வருட காத்திருப்பு முடிந்தது. வெட்கம் மறந்து, ஆடை துறந்து, அவனே அவளுக்கு ஆடையாகி அவளை ஆட்கொண்டான். “கதிர் மாமா வேண்டாம்” என்ற பலவீனமான மறுப்புகளை, “வேண்டும்” என மாற்றினான்.

“கண்ணம்மா என்னை பைத்தியமாக்கறடி, பனி ரொம்ப படுத்தறடி” என்ற அர்த்தமற்ற பிதற்றல்களும்.  “கதிர் மாமா” என்ற குளரல்களும் கவிதையானது.

நேரம் செல்ல செல்ல அவனது வேகம் கூடியது. அவனது ஆவேச தாக்குதலை எதிர்பார்க்காத பெண்ணும் நிலை குலைந்து போனாள்.

முத்தத்தில் ஆரம்பித்து மொத்தத்தையும் கொள்ளையிட்டான் அந்த மாய கண்ணன். மது அருந்தாமலே போதை ஏறியது. தெளிய விரும்பாத போதை. மேலும் அமிழ்ந்து போக துடிக்கும் ராஜ போதை. அவனும் அதில் அமிழ்ந்து போனான் விருப்பத்துடன்.

கதிரவன் உதிக்கும் போது ஆரம்பித்த பயணம், அவன் உச்சியை அடைந்த பிறகும் தொடர்ந்தது.

தட்டு தடுமாறி பயணித்தாலும், முதல் கூடல் இருவருக்குமே தித்தித்தது. திருப்தியுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு,”ஐ லவ் யு பனி” அவனது காதலை அவளுள் விதைத்துவிட்டே விலகினான். இப்போது அவன் மார்பை தலையணையாக்கி பாவை தலை சாய்ந்தாள்.

†††††

“சாரி கண்ணம்மா. உன்னை ரொம்ப  கஷ்டப்படுத்திட்டேனா? என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.” மென்மையாக அவள் கூந்தல் கோதினான்.

‘இல்லை’ மறுப்பின் தலையசைவு பெண்ணிடம்.

தன் மார்பில் புதைந்திருந்த அவளது முகத்தை நிமிர்த்தி ஆராய்ந்தான். அவளது விழியோரம் ஒரு சொட்டு கண்ணீர் தேங்கி நின்றது, ஆனால் முகத்தில் ஒரு நிறைவு. உடல் களைத்து சோர்ந்திருந்தாலும் முகம் பிரகாசமாக ஜொலித்தது. அவள் முகத்தையே ஆசையாக தழுவியது அவன் பார்வை.

நீண்ட நெடிய ஒரு நிமிடம் அவன் கண்களை காண முடியாமல் நாணம் தடுக்க, அவளது விழி மூடிக்கொண்டது. மூடிய இமைகளில் தன் இதழை பதித்து,”கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. கோயிலுக்கு போயிட்டு வரலாம். அப்புறம் தூங்குறதுக்கு டைம் கிடைக்குமா தெரியாது.” குறும்புடன் கூறி கண் சிமிட்டினான்.

வெட்கம் பிடுங்கி தின்ன, “ச்சீ போ கதிர். நீ ரொம்ப மோசம்.” சிணுங்கி அவனை விட்டு விலகி படுத்தவள் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

கதிர் சிந்தனையில் ஆழ்ந்தான். ‘அன்று அத்தையின் செயினை கொடுத்த போதும், இப்போது தங்களின் கூடலின் போதும், நெகிழ்ந்திருந்த பெண் தன்னை மறந்து, கதிர் மாமா என்று அழைத்தாள். தெளிவாக இருக்கும்போது ஏன் என்னை கதிர் மாமா என்று அழைக்கவில்லை? எப்போதிருந்து இந்த விலகல்?’ என்று மூளையை வண்டாக குடைந்தது.

கேள்விக்கு கிடைத்த விடை உவப்பானதாக இல்லை. அவள் முகத்தையே சிறிது நேரம் வெறித்தவன், அவளுடன் பேச வேண்டும் என முடிவு செய்து அவளை கட்டிக்கொண்டு படுத்தான். 

மாலை நேரம் தன் துயில் கலைந்து எழுந்தான். ஆழ்ந்து உறங்கும் பெண்ணை பார்த்து,”ஸ்வீட் பனி குட்டி” என கொஞ்சியவனுக்கு பசி எடுத்தது. அப்போதுதான் ஞாபகம் வந்தது அவர்கள் காலை, மதியம் இரு வேலையும் உண்ணவில்லை.

“டேய் லூசு கதிர். இப்படி சாப்பிடுறதை கூட மறந்து போற அளவுக்கா, உன் புத்தி அவகிட்ட மயங்கி கிடக்கு? உன்னோட பனிய பட்டினி போட்டு, அவளை காலையிலிருந்து படுத்தி எடுத்திருக்க? அவ உன்ன சரியான அலைஞ்சானு நினைக்கப் போறா” என அசடு வழிய வாய்விட்டு புலம்பினான்.

“மறுபடியும் பேசி டயத்தை வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் சாப்பாடு ஆர்டர் பண்ணு.” என தன் தலையிலேயே கொட்டிக் கொண்டவன், தொலைபேசியை எடுத்து அவர்களுக்கு உணவு கொண்டுவர பணித்துவிட்டு குளியலறை புகுந்தான்.

கதிரின் அசைவிலேயே விழித்து விட்ட பனிமலர், கண் திறக்க முடியாமல் சோம்பி படுத்திருந்தாள். அவன் புலம்பியதை கேட்டவளுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் விழி மலரவில்லை.

அவன் குளியலறை புகுந்ததும், மெல்ல கண் திறந்த பனிமலரின் முகத்தில், வந்தமர்ந்து கொண்டது அழகான புன்னகை. ‘கதிருக்கு என் மேல் எவ்வளவு காதல்?’ என நினைத்தவளின், நினைவடுக்கில் நேற்றைய நிகழ்வுகள் அழியா காட்சியாக.

†††††

திடீர் திருமணத்தால் கதிர் அரசனின் ரிசார்ட்டை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. சிறிது தேக்கத்திற்கு பிறகு மின்னல் வேகத்தில் அனைத்தும் நடந்தது. 

பகல் முழுவதும் ரிசார்ட் வேலையில் ஈடுபட்டு சோர்ந்து போகும் கதிர், இரவு நேரம் பனியின் அணைப்பில் இழந்த சக்தியை மீட்டுக் கொள்வான். 

இப்படியே நாட்கள் கடந்தது. அவர்கள் திருமணம் முடிந்த மூன்றாவது மாதம், திடீரென ஒரு நாள்,”இன்னும் பதினஞ்சு நாள்ல ரிசார்ட் திறக்கிறோம்” என குடும்பத்திலுள்ள அனைவருக்கும் அறிவித்தான். 

ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்ததால் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. பர்வதமும் சுசிலாவும் பூஜைக்கு என்ன தேவை என பட்டியலிட ஆரம்பித்தனர். பழனிவேல், கார்த்திகேயன், தியாகராஜனும் யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என பட்டியலிட தொடங்கினர். வழக்கம்போல் சுகந்தியும் தீப்தியும் பெரிதாக காட்டிக் கொள்ளாமல் வயிறெறிந்தார்கள்.

ரிசார்டின் அலங்காரங்கள் பனிமலர், அன்பரசனின் பொறுப்பு. ஆனால் அவர்களை ரிசார்ட் பக்கம் தலை வைக்க கூட விடவில்லை கதிர் அரசன். அதில் காண்டான அவர்கள்,”நீயா எங்களை  கூப்பிடும் வரை, நாங்கள் அங்க வர மாட்டோம்.” என சபதமே எடுத்துக் கொண்டார்கள்.

ரிசார்ட் திறக்கும் நாள் அழகாக விடிந்தது.

பனிமலர் கண் விழிக்கும் போது கணவன் அருகிலில்லை. ‘ரிசார்ட் சென்றிருப்பான்’ என்பதை உணர்ந்தாள். அப்போது அவள் கருத்தை கவர்ந்தது மேஜையில் இருந்த ஒரு பார்சல். 

அது புடவையாக இருக்கும் என சரியாக யூகித்து, அதை தன் கரத்தில் எடுத்தாள். ‘வானவில்லாக என் வாழ்வில் வந்து, என் வாழ்க்கையை வண்ணமாக மாற்றிய என் அழகான தேவதைக்கு உன் இனியனின் இனிய பரிசு’ என எழுதியிருந்த வாசகத்தை கண்டு மெய் மறந்தாள்.

பார்சலில் இருந்து ஒரு அழகான பட்டுப் புடவை, அவளை பார்த்து கண் சிமிட்டியது. மகிழ்ச்சியுடன் அதை அணிந்தவள், கதிர் சொல்லியது போல் ஒன்பது மணிக்கு அன்பரசனுடன் ரிசார்ட்டை அடைந்தாள்.

அவளை கண்ட கதிரின் கண்கள் மின்னியது. முகத்தில் நிறைவான புன்னகை. 

அவர்கள் சுற்றி முற்றி தேடியும் ரிசார்டின் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் பெயர் பலகைகள் அனைத்தும் மெல்லிய துணியால் மூடப்பட்டிருந்தது.

அவர்களது தேடலை கண்ட கதிர் பனியின் காதில் ரகசியமாக, “அது சஸ்பென்ஸ்” என கண் சிமிட்டி சென்றான். அவனை இவள் முறைத்து நின்றாள்.

கடிகாரத்தில் மணி பத்து என்றது. அனைவரும் நுழைவாயிலை அடைந்தனர். அங்கு மின்னிக்கொண்டிருந்த பெயர் பலகையை பார்த்து ஸ்தம்பித்தனர் நண்பர்கள் இருவரும்.

அவன் இத்தனை நாள் அவர்களை அந்த ரிசார்ட் பக்கம் வராமல் தடுத்ததற்கும், பெயரை மறைத்து வைத்ததற்கும் காரணம் புரிந்தது.

அதில் மின்னி கொண்டிருந்தது ‘ஸ்ணோ ரேஸ் ரிசார்ட்(snow rays resort).’

தங்கள் இருவரின் பெயரையும் இணைத்து அந்த பெயரை தேர்தெடுத்து இருந்தான். 

 ஊர் உலகத்திலுள்ள அனைவரும், ஏன் தன்னை பெற்ற தகப்பனிலிருந்து, தன் குடும்பத்தினர் வரை, அவளை துரதிஷ்டசாலி என ஒதுக்க, ‘இல்லை இவள் என் அதிர்ஷ்ட தேவதை’ என ஊருக்கு பறைசாற்றியிருக்கும் கதிரின் காதல் வெப்பத்தில் பனி உருகி போனது.

அடுத்து அவன் செய்த செயலில், இருவரும் மயக்கம் போடாமல் இருந்தது ஆச்சர்யமே!!!!!