💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 14💋

eiHO4LK40803-2bfd2381

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 14💋

அத்தியாயம் 14 

 

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேர்லினின் உடல் நன்கு சோர்வடைந்திருக்க இருமவும் இயலவில்லை அவளால். 

 

பியானா, வேர்லினுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் பயத்தில் நகங்களை கடித்த வண்ணமே விழிகளில் விசனத்தோடு நீர் சிந்தியது.

 

“குட்டி உனக்கு என்னாச்சு டா, உடம்புக்கு ஒத்துவராதது எதுவும் சாப்பிட்டியா?” என்றவள் மனம் ஊசலாடியது.

“எதுக்கெடுத்தாலும் அழுறத நிப்பாட்டு பியூ” இவளும் அழுது வேர்லினின் தைரியத்தை நிலைக்குலைத்திடுவாள் என்று அவன் அப்படி கூறினான்.

 

“ஆமா பியானா, நீயே அழுதா வேர்லினுக்கு எப்படி தைரியம் வரும் ஏதாவது ஃபுட் பொய்சன் ஆகி இருக்கும்” என்று லக்ஷதா இருவரையும் ஆறுதல் படுத்தினாள்.

 

மருத்துவமனை வளாகத்தில் சனநெரிசல் அதிகம். அதனை கடந்து வைத்தியசாலைக்குள் சென்று வேர்லினை அனுமதித்தனர். 

 

வேர்லினின் இருமலை பார்த்த வைத்தியர்கள் அவளை பரிசோதிப்பதற்கு அஞ்சினர்.  நாட்டின் சூழ்நிலையில் கொரோனா தொற்றிற்கு உள்ளானோர் அதிகம்.  அதன் வீரியம் அவ்வாறு இருக்க  வேர்லினையும் தாக்கி இருக்குமோ என்கிற சந்தேகம் தோன்ற போலிமோர்சே செயின் ரேஅச்டின் (பிசிஆர்) பரிசோதனையை மேற்கொள்ளுமாறு தாதியர்களுக்கு வைத்தியர் கூறினார்.

 

“டாக்டர், என் தங்கச்சிக்கு கொரோனா இல்ல. ஜஸ்ட் இருமல் தான் விடாம இருமிக்கிட்டே இருக்கா கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்” என்று பியானா தங்கைக்கு கொரோனா தொற்றவில்லை என்பதை வைத்தியர்களிடம் உறுதி செய்ய போரடினாள். போராடி என்ன பலன் பரிசோதனையின் அறிக்கை இன்றி நம்புவதற்கு தயாராக இல்லை வைத்தியர்கள். 

 

“மிஸ் உங்க அவசரத்துக்கு அப்படி பண்ண முடியாது.  ரிப்போர்ட் வரும் வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” 

 

“அவங்க என் தங்கச்சிதான் டாக்டர். அவங்களுக்கு உண்மையாவே கொரோனா கிடையாது. டாக்டருக்கு படிக்கிற பொண்ணுதான். திடீர்னுதான் இருமல் வந்துச்சி ரெண்டு மூனூ நாளா சலி காய்ச்சல்னு எதுவுமே இருக்கல. நீங்க ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாமே” என்றவன் வைத்தியரிடம் பணிந்து நின்றான். 

 

“சார், நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் எங்களால பண்ண முடியாது. ஆஸ்பிடலுக்குனு ஒரு ப்ராசஸ் இருக்கு அது மாதிரிதான் செய்யலாம். பேஷன்டுக்கு சில வேளை கொரோனா வைரஸ்ஸா இருந்தா! என்ன பண்றது. நாங்க மத்த  பேஷன்ட்ஸ் பார்க்குறோம்.  ப்ரெக்னன்ட் லேடிஸ், பேபிஸ் இப்படி எல்லாரையும் பார்க்கனும். ஒரு வேளை இவங்களுக்கு கொரோனாவா இருந்தா மத்தவங்களுக்கும் அது பரவும். நீங்க கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. ரிப்போர்ட் வரும் வரைக்கும் வெய்ட் பண்ணுங்க” என்று கூறிய வைத்தியர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். 

 

தாதியர்கள் சிலர் தேவையான சில பொருட்களை ஆயத்தப்படுத்த ஒருவர் வேர்லின் மூக்கில் ஒரு துரும்பை இட்டு அதனை ஒரு போத்தலில் அடைத்து பரிசோதிக்க அனுப்பினார். 

 

“எப்போ ரிப்போர்ட்  வந்து எப்போ ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பாங்க” புலம்ப ஆரம்பித்தாள் பியானா. 

 

குறைந்தது ஒரு மணித்தியாலயத்திற்கு பிறகுதான் முடிவுகள் பெறப்படும். அதுவரை ஒவ்வொரு நிமிடங்களும் நிதானம் இழந்து யுகம் யுகமாய் கழிந்தது. 

‘என் குட்டிக்கு எதுவுமே ஆகக்கூடாது. சின்னவயசுல இருந்து நான்தானே பார்த்துக்கிறேன். இப்போ நல்லா பார்க்காம தவறவிட்டுட்டேனா? நான் ஒழுங்கா கவனிச்சு பார்த்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது. என்னோடு கவனக்குறைவு தான் இதுக்கெல்லாம் காரணம்’ என்று பியானா வேர்லினை சிறுவயதில் கொஞ்சியது தன் பிள்ளை போல் பராமரித்ததும் அரவணைத்த நினைவுகள் எல்லாம் அவள் கண் முன்னே தோன்றி மறைந்தன.

 

“வேர்லினுக்கு கொரோனா எதுவும் இருக்காது. நீ அழாத” என்று அவளுக்கு ஆறுதலளித்தான்.

 

தாதியர் வந்து பரிசோதனையின் பெறுபேறு எதிர்மறை(நெகடிவ்) என்றவுடன், “சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க” என்று இறைஞ்சி நின்றாள் பியானா.

கொரோனா உடை அணிந்த வைத்தியர் வேர்லினை பரிசோதித்து இருமல் குறைவதற்கு மாத்திரை கொடுத்திருந்தனர்.

 

தாதியர் இங்கும் அங்கும் சென்றவாறு இருக்க, “சிஸ்டர் என் தங்கச்சிக்கு என்னாச்சு?”

 

“டாக்டர் வெளி வந்ததும் கேளுங்க மா” என்று கூறிவிட்டு சென்றார் தாதியர். 

 

அவள் இருமலிற்கான எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவளின் இரத்த மாதிரியை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். 

“எதனால இப்டி இருமுறாங்கனு தெரியல, ஹெவியா இருமுனதால தொண்டைக்குழி கொஞ்சம் புண்ஆகியிருக்கு இருமல நிப்பாட்டுறதுக்கு மருந்து குடுத்துட்டோம். பிளெட் சாம்ப்ப்ல் அனுப்பிருக்கோம். முடிவு வரட்டும் பார்க்கலாம்” என்று பியானாவிடமும் புறஞ்சேயனிடமும் வைத்தியர் கூறினார். 

 

பியானா கைகளை பிசகிக்கொண்டிருக்க, ஒரு தாதியர் வெளியே வந்து, “மேடம் உங்க சிஸ்டர் உங்கள கூப்பிடுறாங்க” என்றார்.

 

பதறிக்கொண்டு எழுந்து அறைக்குள் சென்றாள் பியானா. “வேர்லி மா இப்போ ஓகேவா டா.நீ என்னடா சாப்பிட்டா?”

 

மெதுவாக இங்கும் அங்கும் தலை அசைத்தவள் மூச்சை விட முடியாமல் பெரும் மூச்சை விட்டப்படி கைநடுக்கத்துடன் அவள் அணிந்திருந்த  ஆடையில் பாக்கட்டில் குப்பி போத்தலில் சேமித்து வைத்திருந்த குளம்பியை கையில் எடுத்தாள். சத்தமாக பேச முடியாமல் காற்றோடு கலந்த குரலில், “அக்கி… இத லேப்புக்கு குடுத்து… டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் வாங்கு” 

 

“ஏன் குட்டி, இதுல என்ன இருக்கு?” என்று சஞ்சலத்தோடு கேட்டாள் பியானா. 

 

“அவங்களுக்கு தொண்டை எல்லாம் புண் ஆகியிருக்கனால ரொம்ப பேசக்கூடாது” என்றார் தாதியர்.

தங்கையின் கேசத்தை தமக்கை தன் விரல்களால் வருடிக்கொடுத்து கலங்கி கண்களுடன் சலனத்தோடு அறையை விட்டு வெளியேறினாள்.

 

“வேர்லின் எப்படி இருக்கா?” என்று லக்ஷதாவும் புறஞ்சேயனும் ஒரு சேரக்கேட்டனர். 

 

“இப்போ இருமல் இல்ல. இத லேப்புக்கு குடுத்த டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் எடுக்க சொன்னா?” என்று இருவருக்கும் கவலையோடு தெரிவித்தாள். 

 

“ஓகே எனக்கு தெரிஞ்ச லேப்புல நான் குடுத்துட்டு கையோட ரிப்போர்ட் எடுத்திட்டு வாரேன்” என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் புறஞ்சேயன். 

 

புறஞ்சேயன் தனது தந்தைக்கு விசயத்தை கூற அவர் பாட்டியையும் அழைத்துக்கொண்டு வைத்தியசாலையை நோக்கி வண்டியை செலுத்தினார். 

 

இதை பார்த்துக்கொண்டிருந்த செல்வமும் ரஞ்னாவும் இவர்களும் இதற்கு மேல் வீட்டிலிருந்தால் புகழ்முரசன் இவர்களை இகழ்ந்துரைப்பார் என்று செல்வமும் ரஞ்சனாவும் பெயரிற்காவது வைத்தியசாலைக்கு செல்வோம் என்று முச்சக்கரவண்டியை பிடித்து வந்தனர். 

 

பாட்டியும் புகழ்முரசனும் வந்த வேகத்திற்கு பதறிக்கொண்டு  வேர்லின் உடல்நிலையை பற்றி கேட்க, லக்ஷதா நடந்தவற்றை கூறினாள். 

 

“இந்த மூஞ்சிங்கள பார்க்கத்தான் கூட்டிட்டு வந்தீங்கல அத்தை. இந்த கிழவிய யாரு வரசொன்னா?” என்று செல்வத்தின் காதில் ஓதினாள் ரஞ்சனா. 

 

“சத்தமா பேசாத அதுங்க  காதுல விழுந்திச்சு நம்மல இருக்க விடமாட்டாங்க. கிழவி சாகப்பொழச்சு வந்துச்சு அதனால இத்துப்போனாலும் செத்துப்போகாது” என்று ரஞ்சனாவிடம் கூறினார் செல்வம். 

 

இரத்தம் மாதிரி மற்றும் குளம்பி இவற்றின் பரிசோதனை அறிக்கை(ரிப்போர்ட்) வருவதற்குள் போதும் போதும் என்றானது. 

 

வைத்தியர் வந்து இரத்த மாதிரியின் அறிக்கையை பார்த்துவிட்டு பியானாவை உள்ளே அழைத்தார். “நான் சொல்லுறத பதற்றப்படாம மெதுவா கேளுங்க” 

 

வைத்தியர் அப்படி கூறியதுமே பியானாவின் இருதய துடிப்பு கூடி மனம் பதற ஆரம்பித்தது. 

 

“உங்க தங்கச்சி… அபோஷன் மருந்து குடிச்சிருக்காங்க” என்றார் வைத்தியர். 

 

“எ…என்ன டாக்டர் சொல்லுறீங்க!” ஆச்சர்யமா பதற்றமா பயமா என்னவென்று அவளால் உணரமுடியுவில்லை.

 

“ஆமா, அபோஷன் மருந்து குடிச்சிருக்காங்க. பட், ப்ரெக்னன்ட் ஆகல. அதனாலதான் இருமல் வொமிட்டிங் எல்லாம். ப்ரெக்னன்ட் ஆகாம அபோஷன் மருந்து குடிக்க கூடாது. கருப்பபை பலவீனம் ஆகிரும்” 

 

“என் தங்கச்சிக்கு எதுக்கு அபோஷன் மருந்து குடிக்கனும்!” என்றவள் பதறினாள். 

 

“ரிலேஷன்ஷிப்ல இருந்து இருக்கலாம். அதனால கூட மருந்து குடிச்சிருக்கலாம்” 

 

“நோ நோ… டாக்டர்  என் தங்கச்சி அந்த மாதிரி பொண்ணு இல்ல” என்று உறுதியாகவும் சத்தமாகவும் கூறினாள்.

 

“சிஸ்டர் கண்முழிச்சதும் அவங்க கிட்டவே கேட்கலாம்” என்று கூறிய வைத்தியர் இவ்விடத்தை விட்டு நகர்ந்தார். 

 

வெளியே வந்த பியானாவின் முகத்தில் சலனம் தென்பட லக்ஷதா என்னவென்று வினவினாள். நடந்தவற்றை பாட்டி, புகழ்முரசன், லக்ஷதா மூவருக்கும் கூற செல்வமும் ரஞ்னாவும் கேட்டுக்கொண்டுதான் இருந்தனர்.

 

“எனக்கு முன்னாடியே தெரியும். முடிய வெட்டிக்கிட்டு இவ ஆடுன ஆட்டம்.   மேனாமினிக்கி மாதிரி காலேஜ் போவளே. அதான் வாயித்துல வாங்கிட்டு வந்து யாருக்கும் தெரியக்கூடாதுன்னு மருந்த குடிச்சு கலைச்சிறலாம்னு நினைச்சிருப்பா. இப்போதான் எல்லாம் வெட்டவெளிச்சம் ஆகிருச்சே!” என்று இருகைகளை ஆட்டிக்கொண்டு இகழ்ந்து உரத்த குரலில் கூறினார் செல்வம். 

 

செல்வம் கூறியதை கேட்டு பாட்டிக்கும் புகழிற்கும் எதுவும் கூறமுடியவில்லை. அவர்கள் தலைகுனிந்து நிற்க, “இங்க பாருங்க அத்தை. நீங்க என்னை பத்தி என்ன வேணாலும் பேசுங்க. என் தங்கச்ச பத்தி பேசுறதுக்கு எந்த உரிமையும் இல்ல. அதுக்கு இடம் தரவும் மாட்டேன்” என்றவள் பற்களை கடித்துக்கொண்டு கூறினாள்.

 

“ஹாஹா… அப்படியே இடம் குடுத்தாட்டாலும்… எங்கிட்ட இருந்த உரிமை எல்லாம் நீ வந்து பறிச்சிட்ட. எங்கடா… பணக்கார பசங்க இருப்பாங்கனு அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வலைவீசி தேட வேண்டியது. அக்காவாச்சும் கல்யாணம் பண்ணிட்டுதான் வந்தா, தங்கச்சி புள்ளையே… பொத்துட்டு வருவாபோல” 

 

லக்ஷதா பியானாவின் கையை பற்றினாள். “அவங்க குணமே அப்படிதான். வேர்லின் முழிச்சதும் என்ன நடந்துச்சினு கேக்குற வழியப்பார்ப்போம்” என்று அவளை ஆறுதல்படுத்தினாள். 

 

“இல்ல அக்கா, என் தங்கச்சிய எப்படி வளர்த்தேனு எனக்குதான் தெரியும். அப்படி தப்பான வழிக்கு போகமாட்டா எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று லக்ஷதாவிடம் கூறிவிட்டு வேர்லினின் கல்லூரி விரிவுரையாளருக்கு தொலைப்பேசியில் அழைப்பை விடுத்து விடயத்தைக்கூறி மருத்துவமனைக்கு வருமாறு பணிந்துக்கேட்டாள். அவளின் கோரிக்கைக்கு இணங்க அவரும் வருகை தந்திருந்தார். 

 

“வேர்லின் அப்படி பட்ட பொண்ணு கிடையாது. அவ ரொம்ப போல்ட்” என்று விரிவுரையாளர் எடுத்துறைத்தார். 

 

“சொல்லுங்க சார் நல்ல சொல்லுங்க இவங்க காதுல கேட்கட்டும்” என்று கூறியவாறே பியானாவின் விழியோரம் நீர் ஓடியது.

“அப்புறம் எதுக்கும் அவ அபோஷன் மாத்திர சாப்பிட்டாலாம்?” மீண்டும் இகழ்ந்துரைத்தார் செல்வம். 

 

“அவ டாக்டருக்கு படிக்கிற ஸ்டுடன்ட் சோ ஏதாவது டிரை பண்ணி பார்த்திருப்பா. எந்த பசங்க கிட்டவும்  பிரெண்ட்ஷிப் வச்சிக்கிட்டத நான் பார்த்ததே இல்ல” என்று வேர்லினின் பக்கத்தை நியாயப்படுத்த முயன்றார் விரிவுரையாளர். 

 

“ஏன், அபோஷன் மாத்திரையே… தான் டிரை பண்ணிப் பார்க்கனுமா, வேற மாத்திரையே கிடையாத என்ன?” என்று சரமாரியாக அதே கேள்விகளை கேட்டார் செல்வம். 

 

ஒருவழியாக புறஞ்சேயன் குளம்பியின் அறிக்கையுடன் வந்திருந்தான். “இங்க என்ன நடக்குது இவ்ளோ சத்தமா இருக்கு எவ்ளோ பேஷன்ஸ் இருக்காங்க. கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா ச்சே?” எரிச்சலுடன் கூறினான் புறஞ்சேயன். 

 

நடந்தவற்றை புறஞ்சேயனுக்கு பியானா விழியோரம் நீரோடு விளக்கினாள். 

 

“வேர்லின் காஃபியதான் சாம்ப்பல் குடுத்திருக்கா. அதுலயும் அபோஷன் மருந்து கலந்திருக்குறதா தான் போட்டுருக்கு பியூ” என்று கவலையோடு தெரிவித்தான்.

 

“எந்த ரிப்போர்ட் எதை சொன்னாலும் என் தங்கச்சி வாயல சொல்லும் வரைக்கும் எதையும் நம்பமாட்டேன்” தங்கையின் மீது அதித நம்பிக்கையால் முடிவாக பியானா அப்படி கூறலானாள்.

 

பியானா கூறியவற்றை கேட்டுகொண்டிருந்த ரஞ்சனா, 

“அத்தை நாம போகலாம்” என்று அவர் காதில் மெதுவாக கூறினாள்.

 

“இல்ல. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுதான் வருவேன்” என்று தீவிரமாகவும் முடிவாகவும் கூறினார் செல்வம். 

 

“டெபனட்லி வேர்லின் எதாவது ப்ரூஃப் பண்ணுவா வெய்ட் பண்ணுவோம்” என்றார் விரிவுரையாளர். 

 

வேர்லின் விழி திறக்கும் வரை காத்திருந்தனர். 

 

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!