💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 20💋

20210815_113000-c3bf0349

அத்தியாயம் 20

இதழ்களை சிறை செய்து  நாவிரண்டும் கத்தி சண்டை தொடுத்து உமிழ்நீர் இனிமையாய்  இடமாறி பக்குவமாய் சில பற்தடங்கள் பதிய பாவையோ பயந்து நிற்க  பாதுகாவலனோ  பாவப்பட்ட அதரத்திற்கு ஆதரவாய் அடைக்கலம் கொடுத்தான் இதைவிட உவமை உண்டோ முத்தத்தை முலாமிட,  இவற்றை விட்டு இன்னும் புறஞ்சேயன் மீளவில்லை. 

தன்னவள் தலைகுனிந்திருக்க, அவன் கைகளால் அவள் தலையை நிமிர்த்தி, “நான் கேட்டதுக்கு பதிலே வரல?” என்றவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி ஆவலோடு மீண்டும் கேட்டான். தேன்நிலா செல்வதற்கு அனுமதி கேட்க இன்னும் பதில் கிடைக்கவில்லை.

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் குங்குமப்பூவாய் அவள் முகம் சிவந்திருக்க பாதி உதட்டை கடித்து மீதி உதட்டை பிதுக்கி தெரியாதென்று கூறினாள் பாவை. 

“அப்போ போகலாம்னு அர்த்தம்?” என்று கிசுகிசுப்பான குரலோடு சீண்டும் பார்வையோடும்  பாவையின் விழிகளை கூர்ந்து நோக்க,  அவன் கேட்கும் கேள்விகளுக்கு இதற்கு மேல் பதில் கூற முடியாது போலும் வெட்கத்தோடு அவன் மார்பில் தஞ்சமடைந்து கூறினாள். 

‘ஹாஹா, வொர்க்அவுட் ஆகுதே’ என்று மனதில் எண்ணியவாறு வாய்ப்பை பயன்படுத்தி தன்னவளை ஆசையோடு கட்டித்தழுவினான். 

“ஒரு டூயட் போலாமா?” என்று காந்தப்பார்வையோடு அவன் கேட்க, அவன் பார்வையின் ஈர்ப்புக்கு பாவையின் கண்கள் தயங்கினாலும் கைகள் தானாகவே அவன் கைகளோடு கோர்த்தது. கைபேசியில் ஒரு பாடலை ஒலிக்கச் செய்தான்.  

மழைப் பொழிந்திடும் நேரம்

ஒரு குடையினில் நாமும்

நடப்பதை எதிர் காணும்

கனவுகள் பிழையா?

வரம் ஒன்றுக் கொடு போதும்

கலவரங்களும் தீரும்

தனி மரம் என நானும்

இருப்பது முறையா?

என் தாரகை

நீ தானடி

கண் விழியால்

கொல்லாதடி

தள்ளாதடி

கை விரலால்

சேராமல் போனால் வாழாமல் போவேன்

உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்

நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான் பெண் பூவே

என அவ்வரிகளுக்கு தன்னவளின் இடையில் கையை வைக்க, அவள் கண்களை விரித்து வாயை பிளந்தாள். அத்தனை கூச்சம் அந்த தொடுகை பெண்ணவளுக்கு. 

அவளை இடையோடு நேராக தூக்கி ஒரு முறை சுற்றி, நிறுத்திவிட்டு அவளின் ஒற்றை காலை அவன் இடையில் வைத்து, அவன் கையில் அவளை ஏந்தியவாறு ஒருபுறமாக சாய்த்து, ஒரு பார்வை அவளை, அப்பார்வையிலே விழுங்குவது போல் அத்தனை ஏக்கத்தோடு அவனது கண்கள் கதை சொன்னது. 

பார்வையெல்லாம் கடந்து கன்னத்தோடு கன்னம் உரசி அவன் மூக்கின் நுனி அவள் கழுத்தை தேடி பயணம் செய்தது. அவள் கழுத்தில் முகத்தை ஆழமாக பதித்தான். பெண்ணவளின் உடலெங்கும் ஜில்லிட்டு சிலிர்க்கும் அளவிற்கு,  அவள் கழுத்தில் ஆழப்பதியும் ஈர உதட்டின் முத்தமொன்றை கொடுத்தான். 

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

என் காதல் எடையென்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ

விலகிடாய் நகிலா ஓ ஓ

நகில நகில நகிலா ஓ ஓ ஓ

விலகிடாய் நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

முத்தத்தில் மூழ்கி போன பெண்ணவள் இயல்பான கூச்சத்துடன் உற்றவனை தள்ளி விட, அவள் கைவிரல்கள் மாட்டிக்கொண்டனவே அவனிடத்தே. 

கைவிரல்களைப்பற்றி அவள் இரு கைகளையும் அவன் கைகளுடன் கோர்த்து ரோமியோ ஜூலியட் கப்பலில் கைகளை விரித்து நிற்பது போல் இருவரும் நின்றனர். அப்படியே பெண்ணவளின் மார்புக்கு குறுக்கே அவள் கைகளை அவன் கைகளோடு சோர்த்து கட்டிக்கொண்டான். 

கைகள் கட்டிக்கொண்டிருக்க உதட்டிற்குதான் வேலை. அவள் முதுகில் இதழோவியம் வரைய ஆரம்பித்தான். முதுகின் எல்லை கடந்தும் இடையை தொடும் அவன் முத்தங்கள். சில வினாடி மோனநிலையில் சிறு சிறு அசைவுகளுடன் கூடிய ஒரு நடனம் இடம்பெற்றது. 

மோனநிலையுடன் கூடிய  ஒரு நடனம் இடம் பெற அந்நிலையை கலைப்பது போல் அவனது கைபேசி குக்கூ குக்கூ, என்று கூச்சலிட்டது. 

பற்களை கடித்தவன், “அட ச்சே, இந்நேரத்துல யாருயா?” என்று கைபேசியை எடுத்து பார்த்தால் “நினைச்சேன்,  நினைச்சேன் அவனேதான், மூக்கு வேர்த்த மாதிரி கால் பண்ணுறானே!” என்று அழைப்பை அழுத்தி காதில் வைத்தான். 

“சொல்லுடா, ஏன்டா இந்நேரத்துல கால் பண்ணின?” எரிச்சலோடு வினவினான் புறஞ்சேயன். எதிர்முனையில் வினய். 

“சொல்லுவடா சொல்லுவ, ஏன் நான் உங்க மோனநிலைய மோசம் பண்ணிட்டேனா, ஆபீஸுக்கு வந்து எத்தன நாள் ஆச்சி?” என்று வினய், புறஞ்சேயனின் பொறுப்பற்ற நிலையை உணர்த்த, புறஞ்சேயன் தலையில் கையை வைத்தான். 

“ஐயோ! மறந்தே போயிட்டேன் மச்சான்” அப்போதுதான் அலுவலக ஞாபகம் வந்தது. வீட்டில் நடந்த கலவரத்தில் அவன் இப்போதுதான்  சற்று ஓய்ந்திருந்தான். 

“ஆபிஸுக்கு கிளம்பி வாடா, நீயில்லாம எல்லா பைலும் பென்டிங்க்ல இருக்கு. வந்து சைன் பண்ணி குடுத்துட்டு போ. பார்சல் டெலிவரி பண்ணணும்” என்றவன் கூறும்போது மணி நான்கு. 

“இதோ கிளம்புறேன் டா” என்று வினயிடம் கூறிவிட்டு பியானாவையும்  கிளம்ப சொன்னான்.  

பியானாவோ அவனையே வெறித்து பார்த்தவண்ணம் இருக்க, “பியூமா உன்னதான் ரெடியாக சொன்னேன்” என்று அவளை உலுக்கினான். 

அவன் கொடுத்த முத்தம் அவளை பிரம்மிப்பில் ஆழ்த்தியதுதான் உண்மை. ஆதலால்தான் திகைத்துப்போய் இருந்தாள் பெண்மை.

இருவருக்கும் கையிற்கு எட்டிய சந்தர்ப்பம் வாயிற்கு எட்டவில்லையென நேர்ந்தது. 

சீக்கிரமாக உடைகளை மாற்றிக்கொண்டு அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டனர் இருவரும். 

****

“மாச்சான், அங்கயே நில்லு!” என்று வாசலிலேயே நிற்குமாறு வியர்த்து விறுவிறுக்க வினய் கூற, அதை கேட்டு பயந்துபோய் நின்றனர் புறஞ்சேயனும் பியானாவும். 

ஏற்றுமதிக்கு ஒழுங்கு செய்த ஆடைகள் எதிலும் தடை ஏற்பட்டதோ என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது இருவருக்கும். அப்படி ஏற்றுமதி செய்யவிட்டால் அலுவலகம் நட்டத்திற்கு உள்ளாகிவிடும். 

புறஞ்சேயனுக்கு அருகில் ஓடி வந்த வினய், சில பத்திரங்களை புறஞ்சேயனின் கையில் கொடுத்து, “சீக்கிரமா சைன் பண்ணு டா” என்றவன் மூச்சை இழுத்து விட்டான். 

நான்கைந்து ஒற்றை தாள்களில் ஆறேழு கையொப்பங்களை கடகடவென்று இட்டு முடிய, “ஏன்டா, உயிர் போற மாதிரி கத்துற, ஆர்டர்ஸ் கேன்சல் ஆகிடுச்சோனு பயந்தே போயிட்டேன் டா” 

“ஆமா டா, ஆபீஸ்குள்ள வந்து பியானா கொஞ்சி கெஞ்சி, நீ சைன் பண்ணுறதுக்குள்ள எக்ஸ்போர்ட்டிங்க் ஷிப் அப்ரோடுக்கு போய் சேர்ந்திரும் அதான் வாசல்லே நிறுத்துனேன்” என்று சிலாகித்தான் வினய்.

‘ஐயையோ! அண்ணா இப்படி சொல்லுறாங்களே. நம்ம உள்ள ஓடிரலாம்’ என்று பியானா, அவள் காதில் எதுவும் விழாதது போல் உள்ளே நுழைந்தாள். 

புறஞ்சேயன் பற்களை காட்டிக்கொண்டு தலையில் கையை வைத்து அரிப்பதை போல் முகபாவம் செய்ய, “ரொம்ப அரிக்காத டா, குரங்குக்கே சந்தேகம் வந்துரும் இதுல யாரு குரங்குனு” என்று வினய் புறஞ்சேயனை ஓட்டினான். 

“சரிடா, உள்ள போய் பொறுமையா பேசலாம்” என்று லக்ஷதாவிற்கு நடந்த அனைத்து அக்கிரமத்தையும், பியானாவின் தந்தை இருக்கும் நிலையையும் ஒன்று விடாமல் விசனத்தோடு வினயிக்கு விளம்பினான் புறஞ்சேயன்.

அனைத்தையும் கேட்ட வினயிக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. 

“ச்சே! ஏன்டா அவள சும்மா விட்டீங்க. ரஞ்சனாவ நீ கல்யாணம் பண்ணிருந்தா? உன் கதி அதோகதி! பியானாவோட அப்பா கிடச்சதே பெருசு” நல்லவேளை தனது நண்பன் தப்பிக்கொண்டான் என வினயின் மனம் ஆறுதல் பெற்றது. 

“அதுனாலத்தான் கல்யாணமே வேணாம்னு இருந்தேன்” என்று கூறினான் புறஞ்சேயன். 

“அக்கா, எங்கிட்டவும் பேபி இல்லனு சொல்லி ஃபீல் பண்ணிருக்காங்க” விசனத்தோடு வினய் தெரிவித்தான். 

“எல்லா கெடுதலும் நல்லவங்களுக்குதான் வரும். நல்லங்களதான் ஆண்டவன் சோதிப்பான்.  அக்காக்கு குழந்த பொறக்கும்னு என் மனசு சொல்லுதுடா” என்றவன் மனதில் பட்டதை கூறினான். 

இப்படி கூறும் புறஞ்சேயனுக்கு நடக்கவிருக்கும் கெடுதலும், பேரிழப்பும் யார் அறிவார்? 

நடந்தவாறே பேசிக்கொண்டு அலுவலக அறையை அடைந்தனர். அறையில் பியானாவும் க்றிஸ்யாவும் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். “டேய், உனக்கு எப்போதுடா கல்யாணம் நீயாவது பிரியாணி போடுவியா?” என்று விளையாட்டாய் வினயிடம் வினவினான் புறஞ்சேயன். 

“எனக்கே வீட்ல பழைய சோறுதான் கிடைக்குது” என்று அப்பாவியாய் கூறினான் வினய்.

“பேசாம உன்னோட பிஏவ கரக்ட் பண்ணிரு, முடிகூட மேகி நூடுல்ஸ் மாதிரி அழகா இருக்கு” என்று புறஞ்சேயன் கூறும் போது மூவருமே அதிர்ந்து போனார்கள். 

க்றிஸ்யாவிற்குதான் அதிமான அதிர்வு. மனம் படபடத்தது. 

“ஏன்டா, நீ உன் பிஏவ கரக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி எதும் தேறுன மாதிரி தெரியல, இதுல நான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு அல்லோலப்படுனுமா? இன்னும் ஒன்னு, எனக்கு மேகி நூடுல்ஸ் பிடிக்காது!” என்று விளையாட்டாய் கூறினான் வினய். 

‘இவன் மூஞ்சிக்கு நானே ஓவர்தான்!’ என்று மனதில் கருகினாள் க்றிஸ்யா. 

அத்தோடு வெளி வேலைகளை பார்ப்பதற்கு பியானாவும் க்றிஸ்யாவும் வெளியே கிளம்பிவிட்டனர். 

“மச்சான் நாங்க தேறிட்டோம் டா” என்று பல்லை காட்டியவாறு புறஞ்சேயன் விளம்பினான். 

“அப்படி ஒன்னும் தெரியலயே?” என்று குதர்க்கமாய் வினய் கூறினான். 

 “நாங்க ஹனிமூன் போகபோறோம் மச்சான். எண்ணி பத்தே மாசத்துல உனக்கு தாய்மாமன் போஸ்டிங்க் கன்ஃபார்ம்!” என்று புறஞ்சேயனின் கண்கள் அகலவிரித்து பற்கள் தெரிய குறுநகைந்தான். 

“டேய், நீங்க யோயோ பண்ணுறதுக்கு சாக்கு, எனக்கு தாய்மாமன் போஸ்டிங்கா? சரிடா சரிடா எப்படியோ நல்லாருங்க” என்று தம்பதியரை மனமார வாழ்த்தினான் வினய். 

வினயிடம், பாரிஸ் செல்வதற்கு விமான நுழைவுச்சீட்டு ஒழுங்கு படுத்துமாறு இருவரின் கடவுச்சீட்டை கொடுத்தான். வினயும் சரி என்று கூறி அவனது அறைக்குள் செல்ல, பியானா மாத்திரம் அறைக்குள் நுழைந்தாள்.

“பியூமா, ஹனிமூனுக்கு பாரிஸ் போறோம்” என கண்களை சிமிட்டிக்கொண்டு ஆர்வத்தோடு கூறினான். 

“ஐய்யோ! ஏன் சேய், நூறுமாடி பில்டிங்கும், பத்துமாடி ஹோப்பிங்க் மாலும் பார்த்துப் பார்த்து கண்ணெல்லாம் பாழாப்போச்சு. 

கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை பச்சையா பூத்துகுலுங்குறது பார்க்கனும் ஆசையா இருக்கு சேய். 

நம்ம வீடு மாதிரி இல்லாம, கும்கி படம் அப்புறம், அசுரன் படத்துல வயல்ல வேலை பார்க்குறவங்க தங்குறதுக்கு வீடு கட்டிருப்பாங்கல்ல  அதுல ஒரு நாளாவது தங்கனும் ப்ளீஸ் சேய்” என்று பணிந்து கேட்டாள். 

“இப்போ அந்தமாதிரி களத்துமேட்டு பரண் கட்டுறாங்களானு தெரியல, காஞ்சிபுரம் போகலாம் ஓகேவா?” என்று கூறியவன் வினய் விமான நுழைவுச்சீட்டு வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்பினான். 

“ஓ போலாமே” என்று சிரித்த முகத்தோடு கூறினாள். 

அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மூன்று மணிநேர பிரயாணம்தான் காஞ்சிபுரம். வீட்டிற்குச் சென்று தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்துவிட்டு வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிட்டு பாட்டியின் கால்களில் விழ, “ரெண்டு பேரா போயிட்டு மூனு பேரா திரும்பி வரனும்” என்று மகிழ்ச்சியோடு ஆசிர்வதித்தார். 

கஞ்சிப்புரத்தை நோக்கிய அப்பயணம் இனிதே ஆரம்பமானது. 

பியானா தன்னவன் தோளில் சாய்ந்துகொள்ள புறஞ்சேயன் சீறாக சீருந்தை செலுத்தினான். 

****

மூன்று மணி நேரம் பயணத்தில் பியானாவிற்கு நன்கு உறக்கம். இன்று இரவு உறக்கத்தை தொலைத்து ஆக வேண்டுமே! காஞ்சிபுரத்தை அடைந்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு பியானாவை எழுப்பி பச்சை பசேல் என்று பூத்து குலுங்கும் அழகை காண்பித்தான் புறஞ்சேயன். 

அவளோ, “இந்த நைட்ல எப்படி சேய்யூ இரசிக்க முடியும்?” என்றவள் நொடிந்துகொண்டாள். 

“இன்னைக்கு நைட் இங்கதான் தங்க போறோம் பியூ காலைல எழுந்து இந்த அழகையெல்லாம் இரசிக்கலாம் டா” 

“அப்படியா, இங்க எங்க தங்குறது சேய்யூ ?” அவள் கேட்பதும் சரிதானே, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தங்கும் விடுதியோ அல்லது உணவு விடுதியோ இருப்பதற்கான தடயமே அங்கு இல்லை. 

“வா காட்டுறேன்” என்று வயலிற்குள் அழைத்துச்சென்று, “இதோ இங்கதான்!” என்றான் அவள் திகைக்கும் அளவிற்கு. 

“சேய்யூ, சூப்பர்! இதெல்லாம் இப்போ இருக்காதுன்னு சொன்னீங்க?” என்றவள் திகைப்பில் வினவினாள். 

“இது நம்ம வயல்தான் பியூமா, இதுதான் களத்துமேட்டு பரண். இது ரொம்ப பழையது. அங்க பாரு அதுதான் வயல்ல வேலைப்பார்க்குறவங்க தங்குற குட்டி வீடு. இப்போ எல்லாம் மாறிப்போச்சு. சரி நீ ஆசப்பட்டு கேட்டியேனு ரிப்பெர் பண்ணி க்ளீன் பண்ணி வைக்க சொன்னேன்” பொண்டாட்டியின் ஆசையை நிறைவு செய்வதில் அத்தனை இணக்கம் அவனுக்கு. 

“அப்போ ஏன் சேய்யூ எங்கிட்ட சொல்லல்ல?” 

“உன்னோடு ஆசையெல்லாம் நிறைவேத்துறது மட்டும்தான் என் வேலை பியூமா. இன்னைக்கு நைட் களத்து மேட்டு பரண்ல தங்கலாம். 

மார்னிங் நம்ம அப்பாய்யோட பழைய வீடு இருக்கு அங்க போலாம். அதையும் ரெடி பண்ணி வைக்க சொல்லிட்டேன்” என்று தன்மையாக கூறினான். ஆனால் அவள் கேட்டதுக்கு பதில் வரவில்லை.

களத்துமேட்டு பரணியில் இருக்கும் ஏணியை கொண்டு இருவரும் ஏறிச்சென்றுப் பார்த்தால், உறங்குவற்கு பாய் தலையணை வைத்து அதற்கு போர்வை விரித்து வைத்திருக்க, நறுமணம் பரப்பும் மல்லிகைச்சரம் காற்றில் கலந்து நாசியை கூசச்செய்தது. பரணின் இடது புறத்தில் இரவு உணவு ஏற்பாடுகள் கச்சிதமாய் காட்சியளித்தது. 

“எங்கிட்ட எதுவுமே சொல்லல நீங்க” என்று குற்றம் கடிந்தாள். கடந்து வந்து நான்கு  மணிநேரத்திற்குள் இத்தனை வேலைபாடுகளை செய்து முடித்திருந்தான். இவ்வளவு ஏற்பாடுகளை செய்தது பியானாவின் அருகில் இருந்துதான் ஆனால், அவளுக்கு தெரியாது. 

“சர்ப்ரைஸ் சொல்லிட்டு செஞ்சா நல்லா இருக்காது பியூர் கோல்ட்.  வெல், இப்போ போய் சாப்பிட்டு அப்படியே” என்று ராகம் பாடியவாறு ஒற்றை புருவத்தை இருமுறைகள் உயர்த்தி பியானாவை ஆவலோடு எதிர்நோக்கினான். 

அவளோ, “சாப்பிட்டு தூங்கப்போறோம் அவ்ளோதான்!” என்று முடித்தாள். 

“ஒரு கை பார்க்கலாம்” என்று மீசையை முறுக்கினான். 

விருந்தென்று ஒன்றுமில்லை. தோசை, சாம்பார், சட்னி, வடை என அவ்வளவுதான். இருவருக்கும் போதுமாக இருந்தது. 

 உணவருந்தி முடிய பியானா விரித்து வைத்த பாயில் ஒருபுறம் திரும்பியவாறு படுத்துக்கொண்டாள். அவள் படுத்திருந்த விதமே புறஞ்சேயனை தூண்டியது. 

அவள் அருகில் சென்று மல்லிச்சரத்தை கேசத்தில் சொருகிவிட்டு, “மல்லிப்பூ செம்ம வாசம்ல” என்று அவன் கால்களை அவள் மேல் போட்டுக்கொண்டான்.

“ஆமா, இப்போ யாரு இல்லனு சொன்னா, கால கொஞ்சம் எடுக்குறீங்களா?” என்றவள் கூற, இருள் சூழ்ந்த கங்குலில், களத்து மேட்டு பரணில் இருக்கும் குப்பி விளக்கின் ஒளி அவள் முகத்தை தங்கநிறத்தில் காண்பிக்க கூந்தலில் சூடிய மல்லிச்சரம்மும் குப்பி விளக்கின் ஒளியில் அவள் அழகை மெருகூட்டியது.

“ஏன்டீ தங்கம், இந்நேரத்துல இந்த ஸ்டாபெரி லிப்ஸ் இப்படி எல்லாம் பேசலாமா?” என்று அவளை கொஞ்சி, இதழ்களை வருடியவாறு கூறி அவள் மேல் முழுவதுமாய் சாய்ந்தான்.

“இந்த ப்ளேஸ்!” என்று அவள் கூறிமுடிக்கும் முன், 

“விட்டா இப்படியே பேசிக்கிட்டே இருப்ப” என்று அவள் மேல் அவன் இருக்க, அவள் இதழ்களை சிறை செய்ய ஆரம்பித்தான். கைகளும் சிறைசெய்து இருக்க அவளால் தடுக்க இயலவில்லை. 

இதழ் முத்தம் மூச்சை முட்ட விடுவித்தவன், “உனக்கு ஓகேதானே?” என்று கிசுகிசுப்பாக கேட்டு விட்டு, மீண்டும் அவள் இதழ்களை கவ்வினான். அவனுக்கு மோகம் தலைக்கேற இதழ் சிறை போதாமல் அவளை முழுவதுமாய் சிறை செய்ய மோகப்பார்வையை அவள் மீது வீச, “பயமா இருக்கு சேய்யூ” என்று மெலிதானகுரலில் அவள் கை விரல்களை இறுக்கிக்கொண்டாள்.

அவன் உடையை தளர்த்த ஆயத்தமானான். “சேய்யூ இது ஓபன் ப்ளேஸ். யாரும் பார்த்திருவாங்க” என்று அவள் பயத்தோடு கூறினாள்.

உச்சக்கட்டத்தில் இருந்த அவனோ, “இவ்ளோ தூரம் வந்துட்டோம். யாரும் வர மாட்டாங்க பியூமா இது நம்ம இடம்” 

“சேய்யூ, ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்று கெஞ்சி கேட்டாள். 

“நம்ம எதுக்கு வந்தோம்னு மறந்துட்டு பேசுறியே பியூமா” என்று இல்லாளிடம் இறைஞ்சினான். 

நான் சடுகுடு

ஆடும் போது, நீ தொடுகிற

எல்லைக் கோடு விடு விடு

என்று பட பட வென்று

பறந்தவள் நீ தானே!  

***