💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 21💋

20210815_113000-044f3cef

அத்தியாயம் 21

பெண்ணவள் மனம் படபடக்க, “சேய்யூ கோபமா?  நான் உங்கள ஹேர்ட் பண்ணும்னு சொல்லல, எனக்கு பயமா இருக்கு சேய்யூ இந்த இடம் புதுசு அதுவும் ஓபன் ப்ளேஸ், சாரி” என்று பயந்த குரலில் சொன்னாள். புதிய இடத்தில் கூடல் என்றால் பெண்கள் பயப்படுவது இயல்பு, அதிலும் முதலிரவு திறந்தவெளியில் என்றால் அவள் மனம் ஏற்றுக்கொள்ளுமா? 

அவள் மேல் இருந்தவன் எழுந்து அமர்ந்தான். அவளும் அமர்ந்துகொண்டாள். மனைவியின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவனாக, “உனக்கு இந்த இடம் புடிக்கும்னு சொன்னியா, அதான் இங்கவே வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கனும் நான், என்மேலதான் தப்பு சாரி” என்று மன்னிப்பு கோரியவன் உணர்ச்சிகள் அனைத்தும் அடங்கிப்போயின.

“சாரி எல்லாம் எதுக்கு சேய்யூ” என்று அவன் நுதலில் ஒரு முத்தம் கொடுத்தாள். அதுதான் அவள் கொடுத்த முதல் முத்தம்.

“ஏன் பியூ, நானே சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க விட மாட்டபோல?” என்று கனிந்த குரலில் தன்மையாய் கேட்டான். 

“எவ்ளோ முத்தம் நீங்க குடுத்தீங்க சேய்யூ! நான் ஏதாவது சொன்னேனா? இப்போ நான் ஒன்னே ஒன்னுதான் குடுத்தேன் அதுக்குபோய் குத்தம் சொல்லுறீங்க” என்றவள் கணவனைக் கடிந்துகொண்டாள். 

 

“சரி சரி கோச்சிகாத பொண்டாட்டி, இப்போ தூங்கலாம். இல்ல மாமனோட மனசு மல்லிக்கைபூ நினைப்புலயே இருக்கும்” என்றவன் இரு இமைகளையும் ஒரு முறை இமைத்து தலையை ஆட்டிக்கூறினான். 

கணவன் கூறுவதற்கு மேல் வேறு வார்த்தையின்றி அவள் ஒரு புறம் திரும்பி படுத்தாள். மன்னவனும் மடவாளின் அருகில் ஒட்டிக்கொண்டு அவள் மார்புக்கு குறுக்கே அவன் இடதுகையை கோர்த்து உறங்கலானான். 

செவ்வனே செவ்வானம் செங்கதிரவன் வந்து  செம்மைப்படுத்த, புதிய நாளை கூச்சலிட்டு வரவேற்கும் பறவைகள். மேய்பவன் பின்னே நடையிடும் மாடுகள். பச்சை பசேலென காற்றுக்கு வளைந்து கொடுக்கும் கதிரவனுக்கு பற்களை காட்டும் நெற்கதிர்கள்,  இயல்பான வளைவுகளுடன் நடக்கும் குமரிகள்.  குமரிகள் காதில் ஆடும் ஜிமிக்கிகள், அவர்களை பின்தொடரும் இளங்காளைகள். 

களத்து மேட்டில் குனிந்து நிமிர்ந்து வேலைப்பார்க்கும் பெண்கள். ஆலரமத்தை சுற்றியமர்ந்த கிழவன்கள், அருகில் வெற்றிலை இடிக்கும் கிழவிகள். 

இவற்றை ரம்மியமாக காட்டும் கிராமியம். நகரத்தை விட்டு கிராமத்திற்குள் வந்துவிடலாம் என்கிற ஆசை, காலையில் எழுந்து இக்காட்சிகளை பரணில் இருந்து பார்க்கும் பியானாவிற்கு. 

“சேய்யூ! சீக்கிரம் எழும்புங்க” என்று ஆரவாரப்படுத்தி அவனை எழுப்ப,

அவனோ, “கொஞ்சம் நேரம் தூங்கவிடு பியூ” என்று மல்லாக்க படுத்தான். 

அவனை தூங்கவிடாமல் எழுப்பி  காலைக்காட்சிகளை இரசிப்பதற்கு கீழே இறங்கினாள். அவனும் வேறுவழியின்றி உறக்கத்தை உடைத்தான். 

பாட்டியின் பழைய வீட்டிற்கு நடந்தே செல்லலாமென்று முடிவு செய்தனர். தொலைவில் இல்லை, அருகில்தான். நடந்து செல்லும் வழியில், “சேய், எல்லார் வீட்டு வாசல்லையும் கோலம் போட்டிருங்காங்க. ரொம்ப அழகாக இருக்கு. பார்க்கும் போது கண்ண பறிக்குது” 

“கிரமத்துல அப்படிதான் பியூமா, காலைலயே எழும்பி சாணி தெளிச்சு கோலம் போடுவாங்க. கோலம் போட்ட பிறகுதான் வீட்டு ஆம்பிளைங்க வெளிய போவோம். 

நாங்க எப்போ சென்னை வந்தோமோ எங்கம்மா ஸ்டிக்கர் கோலத்துக்கு மாறிட்டாங்க. தேதி ஒன்னு ஆனா போதும் ஸ்டிக்கர் கோலத்த மாத்துவாங்க. இதுதான் சென்னை வாழ்க்கை!” என்று சலிப்போடு கூறினான். 

“நான் வேணும்னா கோலம் போடட்டுமா?” என்றவள் கேட்டாள். 

“உனக்கு கோலம் போட தெரியுமா?” என்றவன் வினா தொடுத்தான். 

“தெரியாது பட், கத்துப்பேன் சேய்” என்றவள் கோலமிடும் ஆர்வத்தோடும் தன்மையாகவும் செப்பினாள். 

“ஓகே பியூமா, ட்ரை பண்ணி பாரு” என்று அவள் கன்னம் தட்டினான்.  

வண்ண வண்ண நிறங்களில் மாறுபட்ட வடிவங்களில் வீட்டு வாசலில் இட்டிருக்கும் கோலங்கள் அவள் மனதை கொள்ளையடித்தது. 

கோலத்தை பார்க்கும் போது ஏதோ அவள் மனதில் எதிர்மறை எண்ணம் மறைந்து நேர்மறை எண்ணம் தோன்ற உத்வேகம் அளித்தது போல் ஓர் உணர்வு. 

சோம்பலின்றி அதிகாலை எழுந்து சூரியன் பார்க்கா வானை பெண்கள் பார்த்து, அய்யரவின்றி கோசலம் கரைத்து அதை வாசலில் தெளித்து முற்றுப்புள்ளியாய் ஆரம்பித்து பற்பல வடிவங்களாய் தோற்றமளிக்கும் கோலங்கள் அதன் மையப்பகுதியில் பார்வையை ஈர்க்கும் பூசணிப்பூ, வீட்டிலிருந்து வெளியே செல்பவர்களின் காரியங்கள் கோலத்தை பார்த்துவிட்டு செல்லும்போது நேர்மறை எண்ணம் தோற்றுவிப்பது இந்த கோலங்களுக்குரிய பெருமைதான். 

நடந்தவாறே பாட்டியின் வீட்டை அடைந்தனர் இருவரும், பழையகாலத்தில் கட்டிய பெரிய வீடுதான் சென்னைக்கு அனைவரும் செல்ல வீட்டில் வேலைப்பார்ப்பதற்கு காமட்சி பாட்டியை நியமித்தனர். 

இன்று இவர்களை வரவேற்றது காமாட்சி பாட்டிதான். 

“பாட்டி எப்படி இருக்கீங்க?” என்று பாசத்தோடு வினவினான். விடுமுறை நாட்களில் புறஞ்சேயனும் புகழும் வந்து செல்வது வழக்கம். 

“எனக்கு என்னயா நல்லாதா இருக்கேன். இதுதான் உன் சம்சாரமா?” என்று சிரிப்போடு கேட்டார் பாட்டி. 

“ஆமா பாட்டி, ரெண்டு பேரும் பார்க்க எப்படி இருக்கோம்” கண்களில் குறும்புத்தனத்தோடு கேட்டான். 

“பரமசிவனும் பார்வதியும் நேர்ல வந்த மாதிரி இருக்கு” என அவர்களை கைகளால் நெட்டி முறித்தார். பியானா பற்கள் தெரிய நகைந்தாள். 

“தேங்க்ஸ் பாட்டி” 

“சரிப்பா ரெண்டு பேரும் போயிட்டு குளிச்சுட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

அறைக்குள் சென்று குளியலை முடித்து வந்தனர். 

வாசனை மூக்கை துளைக்கும் அளவில் வறுத்த அரிசிமாவில்  முங்கில் குழலில் செய்த அச்சி கலையாத பிட்டும் கொண்டைக்கடலை குருமாவும் வேர்க்கடலை சட்னி நற்சுவையோடு நாவிற்கு விருந்துதான்.

இருவருக்குமே பிடித்தாமாய் இருந்தது அவ்விருந்து. 

உணவருந்தி முடிய புறஞ்சேயன்  ஓய்வெடுக்க, பியானா வீட்டை சுற்றிக் கிடக்கும் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தாள். 

பழையகால பொருட்களை சேமித்து வைத்திருந்தார் முத்தாயி பாட்டி. ஒலிப்பெருக்கி, கறுப்புநிற இறுவட்டு(சிடி), ஆட்டுகல், அம்மிக்கல், அரிசி குத்தும் உரல், உலக்கை, சாய்வு நாற்காலி, பரம்பரை கட்டில் என அனைத்தையும் பக்குவமாய் பத்திரபடுத்தி வைத்திருந்தார். 

இவற்றை எல்லாம் பார்த்தவள், ‘அடேங்கப்பா! சிவாஜி, எம்ஜிஆர் காலத்து ஸ்பீக்கர், சிடி எல்லாம் இருக்கே’ என்று வியந்துபோனாள். 

மணி பகல் மூன்றை தாண்ட களத்து மேட்டிற்கு சென்று வரலாம் என்று கிளம்பினர். 

“இங்க இருக்க இடங்களுக்கு நடந்தே போய் பார்க்கலாம். கார் வேணாம். அப்படி கால் வலிச்சா ஆட்டோ புடிச்சா வந்துருவோம்” 

“ஆமா சேய்யூ கார்ல போன கிராமத்து மண் வாசனையே தெரியாது” 

அவன் தோளில் பியானா சாய்ந்தவாறு, இருவரின் கைகள் பின்னிப்பிணைந்தபடி பொடி நடையாய் களத்துமேட்டிற்கு வந்தனர். 

வந்தவர்களுக்கு வயலிலிருந்து ஜில் ஜில் ஜிகர்தணடா பால் கொடுத்தனர். 

“சேய் இப்படி எல்லாம் சாப்பாடு குடுத்து குடுத்து உங்க ஊர்லயே இருக்க வச்சிருவாங்க போல” என்று அவள் கூறிமுடிக்க,

சில உறவினர்களும் வந்து சேர பியானாவை தனது மனைவியென அறிமுகப்படுத்தினான். 

பல சொந்தகளுக்கு மத்தியில், “இவதான் என் பொண்டாட்டி, இவதான் என் பொண்டாட்டி” என்றவன் கூற, அதை பியானா கேட்க, அவள் உச்சி குளிர்ந்து போனது.

மணி நான்கை கடக்க, களத்துமேட்டிலிருந்து வீட்டிற்கு  நடையிட்டனர். செல்லும் வழியில் சில குமரிப்பெண்கள் குதூகலமாய் ஆற்றில் மஞ்சட்குளித்து விட்டு மாரளவு பாவாடை அணிந்து அதன் மேல் புடவையை போர்த்திக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் நடந்து வர, சிலர் குளிக்கச் செல்வதைப் பார்த்தவள், “சேய் இவங்க எல்லாம் எங்க போயிட்டு வாராங்க?” 

“பக்கத்துல ஆறு இருக்கு பியூமா, அங்க குளிச்சுட்டு வாராங்க” 

அப்பெண்களை பார்த்தவளுக்கு மனதில் ஆசை பொங்கியது. இதுவரை ஆற்றில் குளித்ததும் இல்லை. “நாமளும் குளிச்சுட்டு வருவோமா, ஆசையா இருக்கு” என்று அவனிடம் கேட்டாள். 

“என்ன, உனக்கு ஆத்துல குளிக்க தெரியுமா?” 

 

“தெரியாது, நீங்க கத்து குடுங்க சேய்” 

“சரி” என்று ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றான். இன்னும் சில பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். 

“இந்த பக்கம் வேணாம், அந்த பக்கம் போவோம் பியூமா” என்று அவள் கையைப்பற்றி இழுத்தான். 

“ஏன் சேய், இந்த பக்கம்தான் நிறைய பொண்ணுங்க குளிக்கிறாங்க. அப்போ நாமளும் குளிப்போம் இந்த பக்கம், ஜாலியா இருக்கும்” என்றவள் கண்கள் விரிய எடுத்துரைத்தாள்.

“என்னாது, ஜாலியா?” அவன் வியப்பில் கூறினான். 

“ஆமா சேய், நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா குளிச்சா போரடிக்கும். அங்க பாருங்க எல்லாரும் சிரிச்சு பேசிக்கிட்டு குளிச்சுட்டு இருக்காங்க” 

“ஆமா ஆமா, உனக்கு ஜாலியாதான் இருக்கும். என் ஜோலியே முடிஞ்சிரும்!” என்றவன் கூற,

“ஏன் அப்படி சொல்லுறீங்க?” என்றவள் முகம் வாடியது. 

“பிறகென்ன பியூ, அத்தன பொண்ணுங்க குளிக்கிற இடத்துக்கு நான் எப்படி வரமுடியும்! வந்தா கல்லால அடிப்பாங்கா. இது ஒன்னும் ஃபாரின் இல்ல. ஒரு ஸ்சும்மிங்ஃபூல்ல எல்லாரும் சேர்ந்து குளிக்க, இது கிராமம் பசங்களும் பொண்ணுகளும் தனித்தனியாதான் குளிப்பாங்க” 

“ஓ அப்படியா! நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி இருக்கு நான் என்ன பண்ண முடியும்?” 

“அதுதான் நீ அவங்களோட குளி,  நான் வெய்ட் பண்ணுறேன்” என்றவன் ஒதுங்கி நின்றான். 

“சேய்யூ! அவங்க எல்லாம் யார்னு தெரியாது. அப்புறம் எப்படி நான் போயிட்டு குளிக்கிறது” என்றவள் முணுமுணுத்தவாறு முணங்கினாள். 

சிரித்தவாறே, “இதுக்குதான் முதல்லே சொன்னேன் அந்த பக்கம் போவோம்னு” 

“ஓகே சேய்யூ” என்று பெண்கள் குளிக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் சென்று 

அவள் அணிந்திருந்த டாப் லெகினுடன் ஆற்றிற்குள் புறஞ்சேனின் கையை பிடித்துகொண்டே இறங்கினாள். 

“சேய்யூ செம்மயா இருக்கு, பேசாம நம்ம ஃபேமிலியோட இங்க ஷிஃப்ட் ஆகிருவோமா?” கிராமியத்தின் ரம்மியமான அழகில் தவழும் அவள் மனம். இயற்கை மாறாத காட்சிகளுக்கு கொள்ளைபோனது அவள் கண்கள்.

“அப்புறம், கம்பெனிய யாரு பார்க்குறது?” என்று கேள்விகளை அடுக்கிகொண்டே சென்றான். 

அவன் கூறுவதெல்லாம் அவள் செவிகளுக்கு செல்லவில்லை. நீரின் குளிர்மையை இரசித்தவாறு நடந்தாள். இடுப்பு வரை நீர் இருக்க முங்கி முங்கி எழுந்தாள் பியானா. 

அவன் வேணுமென்று பியானாவின் மேல் விழப்போக அதை கவனித்த பியானா ஒதுங்கிக்கொள்ள தண்ணீரில்தான் விழுந்தான். பாவம் புறஞ்சேயன்! 

முகத்தை துடைத்து எழுந்தவன், “ஏன் பியூ புருசன் விழுறத பார்த்திட்டு இருக்கியே,  கொஞ்சம் புடிச்சா என்னவாம்?” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கேட்டான். 

“தெரியாம விழுந்தா ஓகே, நீங்க தெரிஞ்சேதான் வேணும்னு விழுந்தீங்க. அதான் சும்மா இருந்தேன் சேய்யூ” என்று நமுட்டு சிரிப்புடன், ஆற்றுநீரை அள்ளி அவன் மேல் தெளித்தாள். 

“ஏய், என்மேலயா தண்ணீ தெளிக்கிற, இரு உன்மேல தெளிக்கிறேன்” என்று ஆற்றுநீரை கைகளால் வாரி வாரி அவள் மேல் தெளித்தான். 

மன்னவனுக்கு சளைத்த மங்கையல்ல அவள். பதிலுக்கு பதிலுக்கு மாறி மாறி நீரை இரைத்தாள்.  கொஞ்சலும் சிறுதாய் ஊடல் கொண்டனர் அந்த ஆற்றங்கரையில். 

“இவ்ளோ நேரம் விளையாடினோம்தானே, இப்போ வீட்டுக்கு போகலாம். ஆற்றைவிட்டு வெளியே மனமில்லாம் வெளியே வந்தாள். 

“போயே ஆகனுமா?” என்றவள் முகம் தொங்கியது.

“மணி ஆறு ஆச்சு இப்போ வீட்டுக்கு போவோம். நாளைக்கும் இதோ மாதிரி வருவோம்” என்று சமாதானப்படுத்தினான். 

நீரின் உள்ளே இருக்கும் வரை எதுவுமே பெரிதாக தெரியவில்லை. 

வெளியே வந்தபின் அவள் உடலோடு ஆடை ஒட்டியிருக்க, ‘பொண்டாட்டி டிரஸ் இப்படி இருக்கே!’ என்று அவன் விழிகளும் மனமும் பதறியது. 

அவன் அணிந்திருந்த சட்டையை கழட்டி அவளுக்கு கொடுத்தான். 

அவன் செய்கையில் அவள் வாயை பிளக்க, “என்ன சேய்? இது ரோடு” 

“நீ சர்ட்ட போடு பியூமா?” 

“எனக்கு குளிரல சேய் வேணாம்” 

‘ஐய்யோ! படுத்துறளே’ பியானாவை பார்க்கும் போது இம்சித்தது அவன் மனம். 

“சேய்யூ சீக்கிரம் சர்ட்ட போடுங்க. இப்படி பார்த்தா, ஊர் கண்ணெல்லாம் உங்க மேலதான் இருக்கும்” என்றவளும் அக்கறையோடுதான் கூறினாள். 

“எம்பொண்டாட்டி! இப்படி பார்க்கும் போது மத்தவன் கண்ணெல்லாம் உன்மேலதான்டீ மேயும்” என்று அவள் காதில், அவளிருக்கும் கோலத்தை விவரித்தான். 

ஒரு நிமிடம் முழிகளால் முழிக்க, தன்னைதானே குனிந்து பார்த்தாள்.

நீரில் நனைந்த உடை உடலோடு ஒட்டி உடற்பாகங்களை செதுக்கியது போல் தோற்றமளித்தது.  

“இதுக்குதான் சொல்லுறேன். என் சர்ட்ட போட்டுக்கோ” 

அதன் பிறகு மறுவார்த்தை கூறாமல் தன்னவனின் சட்டையை அணிந்து கொண்டாள். அவள் இடை வரை அவன் ஆடை தொங்கியது. 

அப்படியே வேகநடையிட்டு வீட்டையடைந்தனர். இவர்களை பார்த்த காமாட்சி பாட்டி சிரித்தோய்ந்தார். 

“என்னையா ஆத்துல குளிச்சுட்டு வாரீங்களா?” 

“ஆமா பாட்டி” என்று அசடுவழிந்தான். 

“ஹாஹா, நடத்துங்க நடத்துங்க. அம்மாடி சாப்பாடு செஞ்சி வச்சுருக்கேன். எடுத்து வச்சு சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு அவருடைய வீட்டிற்கு சென்றார் காமாட்சி பாட்டி. 

நனைந்திருந்த இருவரும் வேறு உடை மாற்றி துவட்டிக்கொண்டனர். 

ஆற்றில் விளையாடியதால் நன்கு பசியை தூண்டியது. “சேய்யூ பசிக்குது சாப்பிடுவோமா?” 

“சாப்பிடுவோமே, இன்னைக்கு முழுசா சாப்பிடபோறேன்” என்று ஒருவிதமான பார்வையோடு கூறினான்.  

எச்சில் விழுங்கியவள், “நான் சாப்பாட சொன்னேன்” 

“அப்படியா?  நான் உன்னதான் சொன்னேன்” அவன் வெளிப்படையாகக்கூறி நாக்கை சுழற்றினான். 

அவளோ பேச்சின்றி தடுமாற, “வா சாப்பிடலாம்” அவனே கையை பற்றி இழுத்து அமரவைத்தவன். ஆசையோடு அமுதை புகட்டி அவனும் உண்டான். 

மேசையில் இருக்கும் பாத்திரத்தை திறந்தாள். “இது என்ன சேய்யூ மஞ்சள் கலர் காஃபியா?” 

“ஓ, பாட்டி என்னோடு மைண்ட கேச் பண்ணி பாதம் பால் செஞ்சி வச்சுருக்காங்க, ஸ்வீட் பாட்டி! பியூமா, புடவை கட்டிட்டு பால் எடுத்துட்டு வா” கிசுகிசுப்போடு கூறிவிட்டு அறையை நோக்கி நகர்ந்தான். 

அவளும் பட்டு புடவையை கட்டி சிறிதாய் ஒப்பனை மேற்கொண்டாள். ஒப்பனை செய்து பழக்கமில்லை.  இன்றுதான் முதல் முறையாய் ஒப்பனை செய்ய ஆசை வந்தது. 

அன்னநடையிட்டு அறையின் வாசலில் தயக்கத்தோடும் வெட்கத்தோடும் நிற்க, 

“வெல்கம் மை ஏஞ்சல்!” என்று சத்தமாகவும் கிளுகிளுப்பாகம் கூறி அவளை அறைக்குள் அழைத்து வந்தான். 

 

அறையின் அலங்காரத்தை பார்த்து வாயை பிளந்தாள். வெண்பட்டு விரிக்கையை கட்டில் விரித்து, ரோஜாபூவின் செவ்விதழ்களை கட்டில் மேல் தூவி, கரடி மொம்மை ஒன்று அதன் கையில் ஒற்றை ரோஜாவுடன் அவளுக்காய் காத்திருக்க, தீடிரென அறையின் மின்விளக்கை அணைத்தான். 

படபடவென்று இதயமும் அவளிமைகளும் துடித்தது. 

எதிர்பாராதவிதமாய் மின்விளக்கை அணைத்ததால், ஒரு நிமிடம் அவள் கண்களை கட்டி வைத்து அவிழ்த்தான். 

 

கண்களை மெதுவாக திறந்தவள், செம்மஞ்சள் நிற ஒளியில் சிவப்பு நிற உடலில் லேசான காற்றிற்கு அசைவு கொடுக்கும் மெழுகுவர்த்திகளின் சுடர். பத்து பதினைந்து மெழுவர்த்திகளை அறை சுற்றி ஏற்றி வைத்திருந்தான். 

கீழே மண்டியிட்டு ஒற்றை ரோஜாவை கையில் வைத்து காத்திருந்த கரடி பொம்மையை ஏந்தியவாறு, “ஐ லவ் யூ டீ பொண்டாட்டி” அப்பொம்மையை பரிசளித்தான். 

அவள் கேள்விகள் தொடுக்க வாயை திறக்க, அவன் ஒற்றை விரலை வாயை மூடி, “இன்னைக்கு எதும் பேசக்கூடாது. நைட்டு ஃபுல்லா பிராக்டிகல்தான்” 

“நான் சொன்ன மாதிரி அப்பாவ தேடி கண்டுப்பிடிச்சு கொடுத்தேன்ல” என்றவன் கூற ஆமாம் என்று தலையையாட்டி,  நானும் நாணம் கொள்ளும் நேரம் என தலை குனிந்திருந்தாள். 

“அப்போ நீ சொன்ன மாதிரி” சீண்டும் குரலில் ராகமிழுத்து, இருகைகளை விரித்து நின்றான். தயக்கமாக இருந்தாலும் பெண்ணவள் தன்னவனிடம் முழுவதுமாய் அவளை  ஒப்படைத்தாள். 

வெட்கமும் ஆடையும் வேண்டாம் என தளர்த்திட, தயக்கமும் வாலிப ஏக்கம் கலந்திருக்க, நிரம்ப இஷ்டமும் கொஞ்சம் கஷ்டம் சுகமான அவஸ்தைகளோடு இதழ் முத்த இனிமையோடு புணர்ந்தனர். 

விடியாத இரவு, இரவியன்(சூரியன்) வந்த பின்தான் கண் அயர்ந்தனர். 

அவள் உறக்கம் கலைக்கும் வகையில் கைபேசியில் அழைப்பொன்று வர உடலெல்லாம் முறித்துக்கொண்டு எழுந்தவள், இரவில் நடந்ததை எண்ணி அவள் மனம் வெஃகியதோடு தன்னவன் நெற்றியில் ஆழப்பதிய ஒரு முத்தம் கொடுத்தாள். 

அழைப்பில் வேர்லின், அழைப்பை அழுத்தி காதில் வைத்தாள். “அக்கி அக்கி” என்ற வேர்லினுக்கு மூச்சு வாங்கியது. 

“என்ன குட்டி, என்னாச்சு?” அவள் மனதில் சிறு பதற்றம் நிலவியது.

“டிஸ்டர்ப் பண்ணுறேனு தப்பான நினைக்காத, எமர்ஜன்சி சீக்கிரம் சென்னைக்கு கிளம்பிவா” என்று கூறிவிட்டு வேர்லின் அழைப்பை துண்டித்தாள். 

“வேர்லின் வெய்ட் வெய்ட்!” என்று கூறிவிட்டு கைபேசியை பார்த்தாள்.

அழைப்பு துண்டித்து இருப்பதால் மீண்டும் முயற்சிக்க, வேர்லின் எடுப்பதாக இல்லை.

பதற்றத்தோடு புறஞ்சேயனை எழுப்பினாள். 

****