💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 22💋

20210815_113000-bd436f96

அத்தியாயம் 22

புறஞ்சேயனை எழுப்ப எழுப்ப நன்கு உறங்கிக்கொண்டிருந்தான்.  “சேய்யூ எழுந்துறீங்க” 

முடியாதப்பட்சத்தில், “யோவ் எழுப்புயா” என்று எழுந்து நின்று அவனை உதைத்தாள். 

“ஹா, வலிக்குது பியூமா” முனங்களோடு எழுந்து அமர்ந்தவன், அவள் கையைப்பற்றி இழுத்து அவன் மடியில் அமரச் செய்தவன் கட்டியணைத்தான். 

“விடுங்க சேய்யூ, சீக்கிரம் குளிச்சுட்டு சென்னை கிளம்பனும்!” அவன் விடுவதாகயில்லை. 

“என்னாது, சென்னை கிளம்பனுமா? நேத்துதான் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சுது அதுகுள்ள ஏன்டீ அவசரம், பத்துநாள் கழிச்சு சென்னை போகலாம்” மஞ்சள் மணம் மாறினாலும் மாறும் இவன் மஞ்சம் மனம் மாறவில்லையே, அவளை கொஞ்சியவாறே கூறினான். 

“பத்துநாள் இல்ல சேய்யூ, பத்து நிமிசத்துல சென்னைக்கு கிளம்புறோம் அவ்ளோதான்!” 

“மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிருச்சோ, ஏன் பியூ நைட் ரொம்ப கஷ்டபடுத்திட்டேனோ?” என்றவன் கேட்கும் விதமே வேறு.

“ஐய்யோ சேய்யூ! ஏன் உங்க வேதாளம் முருங்க மரம் மட்டும்தான் ஏறுமா, கார்ல ஏறி சென்னைகெல்லாம் போகாதா? லூசுமாதிரி பேசாம குளிச்சுட்டு கிளம்புங்க” என்றவள் மனம் பதறியது. யாருக்கு என்ன நேர்ந்ததோ! 

“பியூமா ஒன்ஸ் மோர், ப்ளீஸ்” என கண்களை சிறிதாக்கி அவளிடம் இறைஞ்சி கேட்டான். 

“என்னாது ஒன்ஸ் மோரா, நோ மோர்ஸ்! முதல்ல என்னை விடுங்க சேய். நிலைமை தெரியாம விளையாடாதீங்க!” அவள் குரலின் வீரியம் உணர்ந்தவன் அணைத்தவளை விடுத்தான். 

“ஓகே பியூமா கூல், உனக்கு என்னதான் ப்ராப்ளம். ஃபர்ஸ்ட் அதை சொல்லு”

“வேர்லின் கால் பண்ணினா, ஒரு எமர்ஜன்சி சீக்கிரம் வாங்கனு சொன்னா, என்ன ஏதுனு ஒன்னுமே சொல்லல, அதான் பயமாயிருக்கு சேய் சீக்கிரம் போலாம்” 

“ஏன், ஏன் யாருக்கு என்னாச்சு?” அவனுக்கும் பதற்றமானது. 

“ஒரு எமர்ஜன்சி சீக்கிரம் வாங்கனு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டா” 

“சரி சீக்கிரம் கிளம்புவோம். சரி நீ பயப்படாத யாருக்கும் எதும் ஆகியிருக்காது” என்று கூறிவிட்டு காக்கை குளியல் குளித்து கிளம்பினர். 

காமாட்சி பாட்டி, அவர்கள்  சமைத்த உணவை பொதி செய்து கொடுக்க, பாட்டிக்கு மனமார பணம் கொடுத்தான். அரக்க பரக்க சென்னையை நோக்கி சீருந்தை வேகமாக செலுத்த ஆரம்பித்தான் புறஞ்சேயன். “அக்காக்கு போன் போட்டு, நார்மலா பேசு, என்ன சொல்லுறாங்கனு பாரு பியூ” என்று வாகனத்தை செலுத்திக்கொண்டே கூறினான்.

சரியென தலையயை ஆட்டி அழைப்பை விடுத்தாள். லக்ஷதா அழைப்பை எடுக்கும் வரை பியானாவின் மனம் படபடத்தது. லக்ஷதாவும் அழைப்பை அழுத்தி, “ஹெலோ! பியானா ஹனிமூன் எல்லாம் எப்படி போகுது” என குதூகலமாய் லக்ஷதா பேச, வீட்டில் இருக்கும் அனைவரும் சுகம் என உணர்ந்துகொண்டாள். 

புன்னகைத்த பியானா ஓரிரு நிமிடம் சுமூகாமாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

“வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்க. யாருக்கும் எந்த ப்ராப்ளமும் இல்ல சேய்” என்றவள்  வேர்லினுக்கு ஏதோ அசம்பாவிதமென்று மனம் அல்லோலப்பட்டது. 

“பியூ என்ன யோசனை?” அவள் முகவாட்டத்தை வைத்து வினா தொடுத்தான். 

“வேர்லினுக்கு என்ன ஆச்சோனு மனசு பதறுது சேய்யூ” 

“நான் ஒன்னு சொல்லுவேன் நீ பதறாத ஓகே” என்றவன் கூறும் விடயத்திற்கு அவள் பயப்படுவாள் என்பது உறுதிதான். 

“சொல்லுங்க சேய்யூ” என் கூறுப் போதே அவள் முகம் சோர்வடைந்தது. 

“வேர்லின், பேசிகலி போல்ட். எந்த ப்ராப்ளம் வந்தாலும் பேஸ் பண்ணக்கூடிய எல்லா தைரியமும் இருக்கு. அப்படியிருக்கும் போது அவ அவசரமா கால் பண்ணிருக்கானா அதுக்கு ஒரு காரணம் கண்டிப்பா இருக்கும். அது நம்ம அப்பாவாதான் இருக்கும்!” என்று பொறுமையாக எடுத்துரைத்தான். 

பியானாவின் மனம் தூக்கிவாரிப்போட்டது. “என்ன சேய் சொல்லுறீங்க?” என்றவள் பிரம்மிப்பில் வினவினாள். 

“ஆமா பியூமா, நம்ம அப்பாக்கு ஏதோ ஒரு ப்ராப்ளம். அதுதான் வேர்லின் பயத்துல உனக்கு கால் பண்ணிட்டா, வேர்லினுக்கு பர்ஸ்னலா எந்த ப்ராப்ளமும் இல்ல ஒகே, இப்போ வேர்லினுக்கு மறுபடியும் டிரை பண்ணி பாரு” 

சீருந்தில் செயற்கை காற்று இருந்தும் முகத்தில் முத்து முத்தாய் வியர்த்த விர்யவைத்துளிகள் அவள் சலனத்தை எடுத்துக்காட்ட, வேர்லினுக்கு அழைப்பை விடுத்தாள். முதல் அழைப்பிற்கு பதில் வரவில்லை. 

“வேர்லின் எடுக்கல சேய்” 

“மறுபடியும் டிரை பண்ணி பாரு” 

மீண்டும் அழைப்பை விடுத்தாள், தாமதமாக அழைப்பை அழுத்தி காதில் ஒற்றினாள் வேர்லின். 

“ஹெலே வேர்லின்! யாருக்கு என்னாச்சு, நீ எங்க இருக்க, எப்படி இருக்க?” என்று வினாக்களை பியானா தொடுக்க, 

தமக்கையின் கேள்விகளுக்கு பதில் கூறுமளவு வேர்லினுக்கு நேரமில்லை. “அக்கி கீழ்பாக்கம் வந்துரு வீட்டுக்கு போகாத” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள். 

“வேர்லின் கட் பண்ணிட்டா சேய், நேரா கீழ்பாக்கம் வர சொன்னா” 

“ஓகே பியூமா, கீழ்பாக்கம் போகலாம்” என்றவன் சாதுவாகதான் கூறினான். 

இடிமுழங்க மேகங்கள் முட்டிக்கொள்ள வான்மழை தூவியது அவள் கண்கள். 

‘எத்தன வருஷம் கழிச்சு உங்கள பார்க்குறேன் டாடி, ஏன் டாடி என்னாச்சு உங்களுக்கு, நமக்கு மட்டும் ஏன் டாடி இப்படி எல்லாம் நடக்குது’ என மனதில் புழுங்கிக்கொண்டாள். 

“சேய், கொஞ்சம் வேகமாக போங்க” அவள் மனதில் பதற்றத்தின் அலைகள் ஓடியது.  

“சீக்கிரம் போயிடலாம் டா. இன்னும் ஹாஃப் எண்ட் ஹவர்ல சென்னை அங்க இருந்து இன்னும் கொஞ்ச தூரம் போனா கீழ்பாக்கம்” 

“சரி” என்று கூறிவிட்டு சீருந்தின் ஜன்னலோரம் தலையை சாய்த்தவாறு பிரார்த்தனை மேற்கொண்டாள். 

அதிவேகமாக சீருந்தை செலுத்தி, கீழ்பாக்கம் வந்தடைந்தனர். சீருந்தை விட்டு இறங்கியவள் புறஞ்சேயனை அழைக்காமல் தன்னந்தனியே ஓடினாள். அவள் பின்னே அவனும் ஓடினான். 

சிகிச்சை நடைபெறும் அறையில் வாசலில் வேர்லின் நின்றுக்கொண்டிருக்க, “வேர்லின், வேர்லின் டாடாக்கு என்னாச்சு?” என்று வேர்லினை குலுக்கினாள் பியானா. 

“டாடிக்கு ஃபிக்ஸ்  வந்துட்டு அக்கி. அதான் உன்ன உடனே வரசொன்னேன்” என்று வேர்லின் தயக்கத்துடனும் சலனமாக கூறினாள்.

“டாடிக்கு ஃபிக்ஸா! ஏன், எப்படி வந்துச்சு?” என்று பியானா வியந்தாள்.  

“அது வந்து அக்கி” என்றவள் தடுமாறினாள். 

“சுத்திவளைக்காம விஷயத்த சொல்லு வேர்லின்” 

“டாடி பழசெல்லாம் மறந்துட்டாங்கனு, புடவை கட்டி சவரி முடிச்ச வச்சி வந்தேன்” 

“ஏன் வேர்லின் உனக்கு இந்த தேவையில்லாத வேலை, டாடிய கொஞ்சம் பார்த்துக்கோனு சொன்னது தப்பாப்போச்சு” என்று அவள் தலையில் அடித்துக்கொண்டாள். 

“நீதானே சொன்ன நான் அம்மா மாதிரி இருப்பேனு, அதான் டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்” 

“வேர்லின்,டோன்ட் பி சில்லி!” என்று சத்தமாக கத்தினாள் பியானா. 

“நானும் பைத்தியமில்ல, டாடியும் பைத்தியமில்ல. என்னைய அப்படி பார்த்ததும், கீதா கீதானு கத்துனாரு” 

“என்ன சொல்லுற வேர்லின்?” 

“ஆமா அக்கி, கட்டுன பொண்டாட்டிய ஞாபகம் இருக்குனா, ஏன் பெத்த புள்ளைங்கள ஞாபகமில்ல?” 

புறஞ்சேயன், வேர்லின் கூறும் விடயங்களை சற்று ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தான். 

“பியூமா, வேர்லின் சொல்லுறது கொஞ்சம் கேளு” 

“நீங்க சும்மா இருங்க சேய், உங்களுக்கு ஒன்னும் தெரியாது.

வேர்லின், நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது, நீ பண்ணது தப்பு. டாடி எத்தன வருஷத்துக்கு அப்புறம் கிடச்சியிருக்காரு அதை கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா?” 

“அக்கி, டாடிக்கு பழைய ஞாபகம் வரணும்தான் இப்படி பண்ணேன். 

எனக்கு தப்பாவே தெரியல. டாக்டர் வந்து சொல்லுவாரு அப்போ கேட்டுக்கோ நான் பண்ணது தப்பா இல்லயானு” என்று வேர்லின் கோபப்படாமல் தன்மையாக எடுத்துகூறினாள். 

அதற்கு மேல் வேறு எதுவும் பேசவில்லை பியானா. சிகிச்சை அறையை பார்த்தவள், தந்தைக்கு மின்சார அதிர்வு கொடுப்பதை பார்த்து மனதால் நொந்து கண்ணீர் விட்டாள். 

தந்தையை பார்க்க முடியாமல் கதிரையில் நிம்மதியற்று அமர்ந்து கொண்டாள். 

வைத்தியர் வெளியே வந்ததும், வேர்லின் வைத்தியரின் அருகில் செல்ல பியானாவும் சென்றாள். 

“டாக்டர், டாடி எப்படி இருக்காங்க” என்றாள் வேர்லின். 

“வேர்லின் நீங்க பண்ணது க்ரேட் ஜாப், டாடி ஓகே. பழைய ஞாபகம் கொஞ்சம் வந்துருக்கு. ஓவர் டீப்ரஷனா இருக்காரு கொஞ்சம் கொஞ்சமா சரிபடுத்தனும்” என்று கூறிவிட்டு நகர்ந்தார். 

“இப்போ புரியுதா அக்கி, நான் ஏன் அம்மா மாதிரி வேஷம் போட்டேனு” 

பியானா தலையை ‘ஆம்’ என்று அசைத்தாள். 

வைத்தியர் நகர்ந்தவுடன் விரைந்து அறையை அடைந்தனர். “டாடி உங்களுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்துட்டுனு சொல்லுறாங்க. என்னைய தெரியுதா டாடி, இது வேர்லின், தெரியுதா டாடி?” என தந்தையின் மடி மீது வீழ்ந்து அழுது கொஞ்சினாள் பியானா. 

“என்னோட சங்கீதா எங்க?” என்று அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு கேள்வியை ஜான் கேட்க, மூவரும் திகைத்துப்போய் நின்றனர். 

“டாடி அம்மாவ ஞாபகம் இருக்கு உங்களுக்கு,  எங்களயும் ஞாபகப்படுத்த டிரை பண்ணுங்க” என்றாள் வேர்லின்.

“எனக்கு வேற யாரையும் ஞாபகம் இல்ல” என்று சட்டென்று கூறினார் ஜான். 

‘நம்பிட்டேன்’ என்று மனதில் எண்ணினான் புறஞ்சேயன். 

“டாடி, ஒரு அவசரமும் இல்ல. நீங்க பொறுமையா யோசிச்சு பாருங்க. நான் வெய்ட் பண்றேன் டாடி” 

“கொஞ்சநாள் ஆனா சரியாகிடும் அக்கி” என்று பியானாவை தேற்றினாள் வேர்லின். 

“நான் என்னோட சங்கீதாவ பார்க்கனும்” என்று ஜான் கூறுவதை கேட்டு பியானா மற்றும் வேர்லினின் கண்கள் கலங்கியது. 

பியானா, தாய் இறந்ததை கூற முனைந்தாள். உடனே புறஞ்சேயன் வாயை மூடினான். “அங்கிள், ஆன்ட்டி நல்லா இருக்காங்க. நாளைக்கு ஆன்ட்டிய பார்க்க நான் கூட்டிட்டுப் போறேன்.

இது உங்க மூத்த பொண்ணு பியானா தன்வி, இது உங்க ரெண்டாவது பொண்ணு வேர்லின் அன்வி, நான் உங்க மூத்த பொண்ணோட புருசன்” என்று நினைவு மீண்டவருக்கு அறிமுகம் கொடுத்தான்.  

“சேய்! நீங்க டாடிக்கிட்ட என்ன பேசுறீங்க. அதுவும் அம்மாவ பத்தி என்ன பேசுறீங்கனு தெரிஞ்சிதான் பேசுறீங்களா?” என்று கோபமாக கேட்டாள் பியானா. 

“தெரிஞ்சுதான் பேசுறேன்”

‘நாளைக்கு உங்க அம்மாவ காட்டதான் போறேன். உங்க அப்பா இத்தன நாள் ஏன் இப்படி இருக்கனும். நீங்க ரெண்டு பேரும் இத்தன நாள் பட்ட கஷ்டத்துக்கு உங்களுக்கு பலனும், உங்கப்பா இப்படி இருக்கதுக்கு எனக்கு பதில் கிடைக்கும்’ என்று பியானாவை பார்த்து விரக்தியாய் புன்னகை வீசினான். 

பியானாவை வெளியே வேர்லின் அழைத்து வந்தாள். “அக்கி லூசு மாதிரி உளம்பாத, இப்போ போய் அம்மா இறந்துட்டாங்கனு சொன்ன அவ்ளோதான்! டாடிக்கு என்ன வேணாலும் ஆகும். கொஞ்சநாளைக்கு உன் வாயமூடிக்கிட்டு இரு அது போதும். மீதிய நானும் மாம்ஸும் பார்த்துப்போம்” 

வேர்லின் கூறுவதை கேட்டவள். மரப்பொம்மையாய் தலையை ஆட்டினாள். 

புறஞ்சேயன் இனி எங்கிருந்து சங்கீதாவை அழைத்து வருவான்.

சங்கீதா இல்லையென்றால் ஜானின் நிலை மோசமாகிவிடுமே! 

***