💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 25💋

eiHO4LK40803-e477ae20

அத்தியாயம் 25

புறஞ்சேயன் பெங்களூரிற்கு சென்றநாளிலிருந்து பியானாவின் பதற்றத்திற்கு அளவே இல்லை. 

அவன் அழைப்பு விடுப்பதும் இல்லை அவள் அழைப்பு விடுத்தால், அதை  அழுத்திப் பேசவும் மாட்டான். ஆதலால் வினயிக்கு அழைப்பை விடுத்து பேசிக்கொள்வாள். 

அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியவில்லை. தான் பேசிய வார்த்தைகள் இப்போது தவறென எண்ணி பிரயோஜனம் அளிக்கவில்லை. எண்ணில்லா குறுஞ்செய்திகளை அனுப்பிருந்தாள் தன்னவன் படிப்பான் என்கிற நம்பிக்கையில்தான்.

அவர்களது அறையில் புறஞ்சேயனின் படம் சுவரில் மாட்டி இருந்தது அதைப் பேச ஆரம்பித்தாள். ”சாரி சேய்யூ, உங்கள ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன்ல, உங்களோட பேசாம இருக்க முடியல சேய்யூ, ரொம்ப மிஸ் பண்ணுறேன். 

மிஸ் யூ புருசா. ஆனா நீங்க எனக்குக் கொடுக்குற பனிஷ்மண்ட் ரொம்ப பெரிசு. சென்னை வந்து பேசாம விட்டீங்க. அவ்ளோதான்! நான் ஏதாவது பண்ணிருவேன்” பசலை நோயின் பாதிப்பு அதிகமாகவே படர்ந்திருந்தது பியானாவின் மனதில். 

“ஒரு வாரமா பார்க்காம பேசாம இருக்க முடியுதுல்ல, பட் என்னால அப்படி இருக்க முடியல சேய்யூ” அவளை அறியாமலே கண் கலங்கியது. 

அதுமட்டுமின்றி தந்தைக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படக் கூடாது என்றும், தந்தை விடயமாகச் சென்ற கணவனுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று மனமுருக பிரார்த்தனை செய்து சிலுவையிட்டாள்.  

வேர்லினும் பியானாவும் தந்தையை பார்ப்பதற்கு புறப்பட்டனர். 

***

பெங்களூரில், “ஏன்டா, பியானா எத்தன வாட்டிக் கால் பண்றா எடுத்துதான் பேசேன். பாவம் டா” என்றான் வினய்.

“அவ என்ன சொன்னானு தெரியுமா? கட்டுன புருசனே வேணாமாம். மனசே ஒரு மாதிரி இருக்குடா. உருகி உருகி லவ் பண்றதனால இப்படி பேசுறாளா தெரியலடா, அப்பா கிடைச்சோனே நான் கூட வேணாங்கிற மாதிரி பேசுறா. அப்போ அவங்க அப்பா மேல எவ்ளோ பாசமும் மரியாதையும் வச்சியிருப்பா. 

அடுத்த பிறவினு இருந்தா அவ எனக்குப் புள்ளையா பொறக்குனும் டா. அவ ஒட்டு மொத்த அன்பும் எனக்கு மட்டுமே கிடைக்கனும். கொஞ்சநாளைக்கு இப்படிதான் இருப்பேன் மச்சான் அப்போதான் என்னோட ஃபீலிங்க்ஸ் புரியும்” என்றான் புறஞ்சேயன்.

“ரொம்ப ஷெல்ஃபிஷா இருக்காத,  நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணு பொறந்தா என்ன பண்ணுவ?” 

“இதுகூட நல்லாயிருக்கே” 

“டேய்! நம்ம தேடி வந்தவன் இவன்தானே?” என்று கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி காட்டினான் வினய்.உடனே பத்திரிக்கையில் இருக்கும் படத்தை உற்று நோக்கினர் இருவரும். 

“இவன் செத்துட்டானு போஸ்டர் ஒட்டி இருக்கு ஆனா, அப்பா உயிரோட இருப்பானு சொன்னாரே! ஒரே குழப்பமா இருக்கு மச்சான்” 

****

கீழ்பாக்கத்தில், “டாடி இப்போ உடம்பு எப்படி இருக்கு?”

“இப்போ பரவாயில்லை மா. நீங்க எப்போ கல்யாணம் பண்ணீங்க?”  ஒரு தந்தையாய் வினவினார்.

“அது வந்து டாடி!” என்று சுருக்கமாகச் சிரிப்போடும் கூறினாள் வேர்லின். 

“ம்ம், பையன் பார்க்க நல்லாதான் இருக்கான். எப்படியோ இதுக்கப்பறம் சந்தோசமா இருந்தா போதும்” என்றார் ஜான். 

“நாங்க இல்லாம ரொம்ப மிஸ் பண்ணீங்களா டாடி?” என்று வினா தொடுத்தாள் பியானா.

“ஒன்னா ரெண்டா சொல்லுறதுக்கு நிறைய இருக்கு. உங்க வயசு பசங்கல பார்த்தா அவ்ளோ ஆசையாவும் ஏக்கமாவும் இருக்கும். 

யாராவது டாடினு கூப்பிட்டா உடனே திரும்பிப் பார்ப்பேன். உங்க சின்ன வயசு போட்டோவ பார்த்து அழுவேன். உனக்காவது புரியும் பியானா. வேர்லின நினைச்சுதான் ரொம்ப கவலையா இருக்கும். உங்ககூட நானும் இருந்தா உங்களுக்கு எதும் பிரச்சனை வரும்னுதான் பிரிஞ்சே இருந்தேன். 

வேர்லினோட கல்யாணத்தை சரி என் கண்ணால பார்த்துட்டா போதும்” 

“நோ நோ டாடி, நான் நிறைய படிக்கனும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ் டாடி. அக்கி என்னைய ரொம்ப நல்லாவே பார்த்துக்கிட்டா டாடி. நான் பார்த்த மம்மி டாடி எல்லாம் அக்கிதான்” என்றாள் வேர்லின். 

“தன்வி ரொம்ப பொறுப்பான பொண்ணுனு எனக்குத் தெரியும். உன்னைய நல்லாவே பார்த்துக்குவானும் தெரியும்” 

“டாடி எங்களுக்கு ஒரு ஆசை, ஏத்துப்பீங்கிளா” 

“என்னாடா?” என்றார் ஜான் அன்போடு. 

இருவரும் ஒரே நேரத்தில் தந்தையின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தனர். அத்தனை அன்பு அந்த முத்ததில். “சின்ன வயசுல ஸ்கூல் போகும்போது அவங்க அவங்க அப்பாவோ அம்மாவோதான் கூட்டிட்டு வருவாங்க. ஸ்கூல்ல விட்டுப் போகும்போது முத்தம் குடுப்பாங்க டாடி. பார்க்கும்போது ஆசையா இருக்கும் டாடி. நீங்க இல்லேனு ஏக்கமா இருக்கும் டாடி” என்று பியானா உருகிய குரலில் கூறும் போதே கண்களில் நீர்த்துளிகள் சிந்த ஆரம்பித்தது. 

உடனே இருவரையும் கட்டியணைத்தார் ஜான். இருவருக்கும் அன்பு முத்தம் நெற்றியில் கொடுத்தார். 

சிறுவயதில் இருந்த அத்தனை ஏக்கமும் தந்தையின் அன்பு முத்ததில் அவர் கண்ணீரிலும் அடங்கிப்போனது. எத்தனை வயது கடந்தாலும் அப்பாக்களுக்கு மகள்கள் இளவரசிகள்தான். 

“உங்களத்தான் அப்படி எல்லாம் பார்க்க முடியல, என் பேரபசங்களுக்காவது இதெல்லாம் பண்ற கொடுப்பினை எனக்குக் கிடைக்கனும்” என்றார் ஜான். 

பெங்களூரிலிருந்து புறஞ்சேயன் அழைப்பை விடுத்தான். வேர்லினின் தொலைபேசிக்கு, “வந்த வேலை முடிஞ்சுது. சென்னைக்கு கிளம்பிட்டோம்” என்று துண்டித்தான். 

“அக்கி, மாம்ஸ் சென்னைக்கு கிளம்பிட்டாங்க” என்று வேர்லின் கூற, பியானாவின் முகத்தில் புன்னகை பூத்தாலும் ஒருவித சலனம் மனைவி என்கிற ரீதியில் அவளுக்கு அழைப்பை விடுத்து கூறியிருக்கலாம் என்று. 

“கொஞ்சநாளைக்கு பொறுத்துக்கோங்க டாடி, வேற வீடு எடுத்துப் போயிடலாம்” என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறினாள். 

மனமின்றி தந்தையிடமிருந்து  விடைப்பெற்றனர். வீட்டிற்கு வந்து புறஞ்சேயனுக்கு பிடித்த உணவுயெல்லாம் தயார் செய்தாள்.

ஒருவாரத்திற்கு பிறகு தன்னவனை பார்க்கப் போகிறோம் என்கிற அவா.

புறஞ்சேயனின் சீருந்தின் சத்தம் கேட்டு வாசலிற்கு ஓடிவந்தாள் பியானா. 

அவள் நிற்பதை கண்டுகொள்ளாமல் அவளைக் கடந்து சென்று அறையின் குளியலறைக்கு சென்றான். 

கணவனைப் பார்க்கச் செந்தாமரையென விரிந்த முகம், அவன் பாராமுகத்தால் வெண்தாமரையென அவள் முகம் கூம்பியது. 

எதைப் பேசுவது, என்ன பேசுவது? என்று அறியாமல் தயக்கம் வந்து நிற்கப் பேசினால் திட்டிவிடுவான் என்கிற பயத்தில் சிக்கிதவித்தாள். 

உணவெல்லாம் அறைக்கு எடுத்து வந்து உண்பதற்கு ஆயத்தமாக வைத்திருந்தாள். 

அவன் குளியலை முடித்துவிட்டு வரும்வரை காத்திருந்தாள். அவனும் வந்தான். 

வந்தவன் நேரே உணவு உண்ண அமர்ந்தான். “சேய்யூ, போன இடத்துல உங்களுக்கு எதும் ப்ராப்ளமா, போன விஷயம் என்னாச்சு?”  

“அதான பார்த்தேன் என்னைய பத்தி எங்க அக்கறையா விசாரிக்கப் போற, இப்போ சாப்பிடட்டுமா, பேசட்டுமா?”

படபடவென்று, “சாப்பிடுங்க, சாப்பிடுங்க” கூறினாள். 

உணவருந்தி முடிய, வேர்லினுக்கு அழைப்பை விடுத்து அவர்களது அறைக்கு அழைத்தான். 

வேர்லினும், “எக்ஸ்கீயூஸ்மி மே ஐ கம் இன்?” என்று கிண்டலடித்தவாறு உள்ளே வந்தாள். 

உள்ளே நுழைந்தவள், “மாம்ஸ் என்ன விஷயம்?” 

“போன இடத்துல டேவிட்டோட கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரதான் பார்த்தோம்!” 

“என்ன மாம்ஸ் சொல்லுறீங்க?” 

“ஆமாம் அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒட்டுன போஸ்ட்டர் ரொம்ப அடிவாங்கி எழுத்தெல்லாம் அழிஞ்சு கண்டுப்பிடிக்கவே கஷ்டமா போச்சு” 

“அப்போ அவன் எப்படி செத்தான்?” என்று  கேட்டாள் பியானா. 

“அதுதான் விசித்திரமே! அப்பா கத்தியால குத்தினதாலதான் அவன் செத்திருக்கான். கத்தியால குத்தி ரொம்ப நேரத்துக்கு அப்பறம் ஆஸ்பிடல் போயிருக்காங்க. பொழைக்கல” 

“இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னா மாம்ஸ்?” என்று கேட்டாள் வேர்லின். 

“அவனோட பங்களாவ தேடிப்போனேன். தூரத்து சொந்தம்னு சொல்லி அவங்கட அடியாளுங்கக்கிட்ட விசாரிச்சிட்டு வந்தோம். வீட்ட கண்டுப்பிடிக்கவே ஒருவாரம் ஆகிருச்சு” என்றான். 

தலையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டாள். தந்தை கூறியது அவன் உயிரோடு இருப்பான் என்று ஆனால் அவன் அப்போதே இறந்து விட்டானே! ‘அப்போ டாடி நிம்மதியா வெளிய வர முடியாதா?’ பல யோசனையில் குழம்பிப் போயிருந்தாள். 

“கீழ்பாக்கம் கிளம்புவோம்” என்று பியானா கூறிய அடுத்த நொடியே கிளம்பினர். 

கீழ்பாக்கம் மருத்துவமனையில், தந்தையிடம் நடந்தவற்றை எல்லாம் கூறி, “டாடி, இப்போ நீங்க எடுக்குற முடிவுலதான் இருக்கு” 

உடனே புறஞ்சேயன், “அப்பா நீங்க எதும் யோசிக்காதீங்க. உங்கள வெளியுலகத்துக்கு எப்படி கொண்டுவரனும் எனக்குத் தெரியும். 

உங்க நேம மாத்திரலாம் ஆதார் கார்ட் எல்லாம் மாத்திரலாம்” 

“எதுக்கு டாடி போலியான பேர்ல சுத்தனும். அப்படி வெளிய வந்தா ஒவ்வொரு நிமிஷமும் பயந்து பயந்து வாழனும். 

டாடி ஒன்னு புரிஞ்சுக்கோங்க.  கர்த்தர் யாரோட உயிரையும் எடுக்குற உரிமைய மனுஷங்களுக்கு குடுக்கல.

நீதினு ஒன்னு இருக்கு. நீங்க நினைச்சமாதிரி உங்க கையிலதான் அவன செத்துருக்கான். சோ, போலீஸ்ல சரணடஞ்சிருங்க. இதுதான் நல்ல முடிவுனு தோணுது டாடி” என்று மனதை திடப்படுத்திக் கூறினாள் பியானா.

புறஞ்சேயனுக்கு ஆத்திரமானது, “மறுபடியும் அப்பாவ பிரிஞ்சு இருக்க போறியா?” என்று அதட்டலாகக் கேட்டான். 

“இல்லபா, தன்வி சொல்லுறதுதான் சரி. நான் இத்தனநாளா ஜானா வாழல. இதுக்கப்பறமாவது ஜானா வாழனும்னு ஆசைப்படுறேன். நாலுவருஷமோ அஞ்சுவருஷமோ தண்டனை கிடைக்கும். பிறகு வந்து என் பொண்ணுங்ககூட சந்தோசமா வாழுறேன். இன்னொருத்தர் பேர்ல 

வேற ஐடி கார்ட்ல பொய்யான வாழ்க்கை, சுதந்திரம் இல்லாம பயந்து பயந்து வாழ வேணாம். என் பொண்ணுங்கள பார்த்துக்க நீ இருக்கும்போது நான் எதுக்கும் கவலை படமாட்டேன்” 

ஜான் எடுத்த முடிவிற்கு அதற்கு மேல் புறஞ்சேயனும் மறுப்பு தெரிவிக்கவில்லை. 

மருத்துவமனையில் நடந்தவற்றை எல்லாம் கூறாமல், தந்தைக்கு நினைவு திரும்பியதாகக் கூறி அங்கிருந்து வைத்தியர், கண்காணிப்பாளர் மற்றும் வேலை பார்க்கும் அனைவரிடமும் நன்றி கூறிவிட்டு விடைப்பெற்றனர். 

நேராகக் காவல்நிலையத்திற்கு வாகனத்தைச் செலுத்தினான் புறஞ்சேயன். 

காவல் நிலையத்திற்குள் சென்று பியானாவின் சிறிய குடும்பம் சீர்குலைந்த கசப்பான சம்பவம் முதல், ஜான் செய்த கொலைவரை ஒளிவு மறைவு இல்லாமல் கூற, காவல்துறையதிகாரி ஜானை சிறை செய்தார். 

“இதுக்கு மேல எங்க லாயர் வந்து பார்த்துப்பாரு” என்றான் புறஞ்சேயன். 

“இங்க ரொம்ப நேரம் இருக்கக் கூடாது கிளம்புங்க” என்றார் காவல்துறையதிகாரி. 

“டாடி சீக்கிரமா வெளிய வந்துடலாம். 

வீ மிஸ் யூ டாடி” என்று இருமகள்களும் கூறிவிட்டு வீட்டை வந்தடைந்தனர். 

நாட்கள் ஓட ஆரம்பித்தது நரகமாய் ஒருவாரம் சென்றிருக்க, தனக்கு மாதவிலக்கு வரவில்லை என்கிற ஞாபகம் வரப் புறஞ்சேயன் அருகில் சென்று ஆசையாய், “சேய்யூ, எனக்கு இன்னும் பிரீயட்ஸ் வரல” என்று கூறினாள். 

அதற்கு அவனோ, “அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?” என்று இவளிடம் வினா தொடுத்துவிட்டு,

“நான் ஆபீஸுக்கு சீக்கிரம் கிளம்புறேன். நீ கேப் புடிச்சு வா” என்று கூறிவிட்டு கிளம்பியிருந்தான். 

‘அதுக்கு நான் என்ன பண்ணட்டுமானு கேக்குறீங்களா சேய்யூ, இப்படி எல்லாம் ஆக நீங்கதான் காரணம். விஷயம் தெரிஞ்சதும் கெஞ்சுவீங்கல. அப்போ வச்சிக்கிறேன்” 

ஆசையான அத்தருணத்தை கணவனுடன் சேர்த்து வெளிக்காட்ட முடியாமல் விழி வழியே நீர் வழிய ஆனந்தமா இல்லை கவலையா என்று தெரியவில்லை அவளுக்கு.

கருதரித்திருப்பதை உறுதி செய்ய சிறுநீரக பரிசோதனை கருவியைக் கொண்டு உறுதி செய்தாள். 

இரண்டு சிவப்பு வர்ண கோடுகளைப் பார்த்து வயிற்றை மென்மையாக வருடிக் கைவிரல்களால் அள்ளி முத்தம் கொடுத்தாள். “நானும் அம்மா ஆகப் போறேன்” என்று அவளை அறியாமல் ஆனந்த நீர் வெளியேறியது. 

முதலில் அவனிடம்தான் கூறுவேன் என்று வேறுயாரிடமும் கூறாமல் இருந்தாள். 

தலை சுற்றும் தலை வலியும் அவளைப் பாடாய்படுத்தியது. புறஞ்சேயனின் முன் உணவு உண்ணமாட்டாள். உண்டபின் ஏற்படும் குமட்டலில் அவன் கண்டுபிடித்து விடுவான் என்று பதுங்கியிருந்தே உண்பாள். 

கடகடவென்று பதினைந்து நாட்கள் ஓடியது. அவள் கழுத்தில் மூன்று முடிச்சு  இடவே, அவள் துயர் துடைக்க, அவள் சுகதுக்கங்களை பங்கிடப் பூமியில் புறஞ்சேயனாய் அவதரித்த திருநாளாம், இன்று அவன் பிறந்தநாள்.

காலையிலேயே எழுந்து பாயசம் செய்தாள். அவன் எழுந்து முதலில் கண் விழித்தது பியானாவின் முகத்தில்தான். பியானா வாழ்த்தைத் தெரிவிக்க மறுக்காமல் வாங்கிக்கொண்டான். 

தனது கையால் வெதுப்பியை செய்ய வேண்டுமென்று அலுவலகம் செல்லாமல் விடுமுறை எடுத்தாள். 

அவன் அலுவலகம் செல்லும் வரை காத்திருந்து கோவிலுக்குச் சென்று 

அவன் நீடுடிவாழ வேண்டும் என்றும், பிறக்கப்போகும் குழந்தையும் இடர்களின்றி பிறக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துவிட்டு தன்னவனின் பெயரில் அர்ச்சித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். 

இதுவரை அவனுக்கென்று எதுவும் வாங்கியதில்லை. அதனால் பரிசொன்றை வாங்கினாள். அவனுக்குப் பிடிக்குமோ என்கிற பயமில்லை. அதை ஏற்றுக்கொள்வானா என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது. 

வெதுப்பி செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தாள். பகல் உண்டு விட்டுச் சற்று நேரம் அமர்ந்திருக்க வயிற்றை பிரட்டிக்கொண்டு வந்தது. உடனே குளியலறைக்குள் செல்ல உண்டதெல்லாம் வெளியேறியது. 

களைத்து போய்ச் சற்று நேரம் அமர்ந்துவிட்டு வெதுப்பி செய்வதற்கு ஆயத்தமானாள். 

முட்டை மணமும் பிடிக்காமல் போக, எப்படியாவது வெதுப்பி செய்தே ஆக வேண்டும் என்று முகக்கவசம் அணிந்தாள். 

இதய வடிவ வெதுப்பியின் உள்ளே பரிசுப்பெட்டியை வைத்து மேலே களிம்பை பூசினாள். சிவப்பு வர்ண வெதுப்பிக்கு வெள்ளை வர்ண இரண்டு அங்குல இதய வடிவத்தை வெட்டி எடுத்தாள் பின்பு ஒரு அங்கு வெள்ளை வர்ண இதயத்தை வெட்டி எடுத்து அலங்காரம் செய்தாள். 

அதாவது பெரிய இதயம், தாய் தந்தை எனவும் சிறிய இதயம் குழந்தை எனவும் வடிவமைத்தாள். 

அதையெல்லாம் விட முக்கியமான பரிசை ஹார்ட் வடிவில் டயமண்ட் வெட்டிட்ட  இன்றைய நாகரீக வெதுப்பி அதற்குள் வைத்து அதையும் தயார்ப்படுத்தினாள். 

வேலை எல்லாம் முடித்திருக்க அவன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. 

குளியல் வேலைகளை முடிக்க, வேர்லினை விட்டுப் புறஞ்சேயனை கீழ அழைத்து வரச்சொன்னாள். 

“ஹேப்பி பர்த் டே மை டியர்” என்று அனைவரின் முன் வெதுப்பியை வெட்டுமாறு கூறினாள்.

அனைவரும் பாட்டுபாடி கைதட்ட வெதுப்பியை வெட்டினான். முதலில் மனைவிக்கு ஊட்டி விட்டான். பின்பு ஒவ்வொருவருக்காக வெதுப்பியை வெட்ட ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. 

அதைப் பற்றி இழுத்தான் ஒரு சிறிய பெட்டியில் ‘லவ்’ என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட தங்கமோதிரம். வெதுப்பியின் அலங்காரம் எதையும் கவனிக்கவில்லை அவன்.

அவன் எதிர்பாரா ஒன்றுதான். அளவுக்கடந்த மகிழ்ச்சி அவள் கொடுத்த இன்ப அதிர்ச்சி. இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் சாதுவாக இருந்தான்.

“தேங்க்ஸ் பியூ” என்றான் புன்னகைத்தவாறு அவரவர் அறைகளுக்குச் செல்ல, 

அவளும் அவள் செய்த மற்றைய வெதுப்பியை எடுத்துச் சென்றாள். 

அதை அவன் முன் நீட்ட, “இப்போதான் கீழ கேக் கட் பண்ணேன். இது என்ன கேக் டிசைனே புதுசா இருக்கு” 

“இது ஸ்பெஷல் பர்ஸ்னல் கிஃப்ட். இது பினாடா கேக் நியூ ட்ரெண்டிங்க்” தாழ்ந்த குரலில் கூறினாள்.

“ஓ, சரி கத்திய குடு கட் பண்றேன்” 

“இல்ல இதை உடைக்கனும்” 

“என்னாது கேக்க உடைக்கனுமா?” 

பலகையிலான சுத்தியலை அவன் கையில் கொடுத்து உடைக்க சொன்னாள். அதேவாறு சுத்தியலால் தட்டித் தட்டி உடைத்தான். 

வெள்ளைநிற காகிதம் வெளியே தெரிய, அதைக் கையில் எடுத்தான்.

‘ரத்ததால ஐ லவ் யூனு எழுதியிருப்பாளோ?’ மனதில் எண்ணிவிட்டு பயத்தோடு மெதுவாகத் திறந்தான். 

கருத்தரிப்பு பரிசோதனைக்கான சான்றிதழ் என்ற தலைப்பு ஆங்கிலத்தில் இருக்க, கண்களை அகலவிரித்து படிக்க ஆரம்பித்தான். 

“மிஸஸ். புறஞ்சேயன் பியானா தன்வி” என்று நீண்ட இடைவெளி விட்டு, “பாசிடிவ்” இருதய துடிப்பு அதிகரிக்க பரிசோதனை சான்றிதழை ஓரமாக வைத்தான்.

“பியூயூமா” என்று அதிர்ச்சியும் ஆசையும் கலந்து ராகமிழுத்தான். உடனே கட்டியணைத்து, முகம் முழுவது முத்த மழையில் ஆழ்த்தினான். 

 

***