அத்தியாயம் 28(அ)
குழந்தை கலைக்க சொன்னதை காதாரக் கேட்டவன், “ஏன்மா, ஏன்மா, ஏன்மா என்ன பெத்தீங்க. கருவுலையே கலைச்சு இருக்கலாமே!” என்று கத்த ஆரம்பித்தான். அவன் கத்தும் சத்தம் கேட்டு லக்ஷதாவும் பாட்டியும் வந்தனர்.
“சேய் நாங்க வேற டாபிக் பேசிட்டு இருந்தோம். நீங்க சத்தம் போடாதீங்க”
“அதான் காது குளிர கேட்டேனே, என் புள்ளைங்கள கலைக்க சொன்னத! இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது. என் பொண்டாட்டி புள்ளைய அழிக்கனும்னு நினைக்கிற அம்மா எனக்குத் தேவையில்ல”
“நேத்து வந்தவளுக்காகப் பெத்த அம்மாவ வேணாம் சொல்லுறீயா?”
“இதே நான் ரஞ்சனாவ கல்யாணம் பண்ணிருந்தா இப்படி பேசுவீங்களா?” உடுத்தும் ஆடைகளை எடுக்க ஆரம்பித்தான். பியானாவின் கர்ப்பகாலப்பதிவேடு கோப்புக்களை எடுத்து வைத்தான்.
“வேர்லின் நீயும் கிளம்பு” என்று கூற அவளும் தயாராகினாள்.
“கொஞ்சம் பொறுமையா இரு புறா. அப்பா வந்ததும் இவள துரத்தலாம்” என்று சமாதனப்படுத்த முயன்றார் பாட்டி.
“ஏன்மா இப்படி இருக்கீங்க. புள்ளத்தாச்சி பொண்ண நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” என்றாள் லக்ஷதா
“உனக்காக நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ” என்றார் செல்வம்.
“நீங்க ஒன்னும் பண்ணாம இருங்க அது போதும். டேய் தம்பி அப்பா வந்ததுக்கு அப்பறம் பேசிக்கிலாம் இரு டா” என்று தாயின் புறம் வைதுவிட்டு தம்பியின் புறம் கெஞ்ச ஆரம்பித்தாள் லக்ஷதா.
“புறா, இந்நேரத்துக்கு எங்கடா போவ சொன்னா கேளு” என்று லக்ஷதா பியானாவின் நிலையை எண்ணி கூறினாள்.
“இல்லகா நான் என்னோட சொந்த வீட்டுக்கே போறேன். சொந்த வீட்ட வச்சிக்கிட்டு நான் எதுக்கு இங்க இருக்கனும். தனியா இருந்தா என் பொண்டாட்டிய கைல வச்சி தாங்குவேன்” என்று சிறுவயதிலிருந்து வளர்ந்த வீட்டைவிட்டு வெளியேறினான்.
“கோபத்துல எடுக்குற முடிவு சில சமயம் தப்பா இருக்கும் சேய்”
“நான் சரியான முடிவுதான் எடுத்திருக்கேன். நீ பேசாம வா” என்று கூறிவிட்டு வண்டியைச் செலுத்த ஆரம்பித்தான்.
“நீங்க எடுத்த முடிவுக்கு நான்தான் காரணம்னு சொல்லுவாங்க. அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டீங்குது?”
“அக்கி” என்று அழைத்த வேர்லின் சைகையில் ‘வாய பொத்து’ எனக் காண்பித்தாள்.
“நடந்ததெல்லாம் ஆண்டவனுக்கு தெரியும்” என்று கூறிவிட்டு, வண்டியை நேராக வினயின் வீட்டிற்கு விட்டான். அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறையின் காரணமாக வினய் வீட்டில்தான் இருந்தான்.
வாசலிலிருந்து பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தவன், புறஞ்சேயனின் சீருந்தின் சத்தம் கேட்டுப் பத்திரிக்கையை மடித்து வைத்தான்.
“வாடா மச்சி, வாம்மா, வா வேர்லின்” என்று இன்புற வரவேற்றான்.
புறஞ்சேயன் வாசலிலேயே நின்றுக்கொண்டு பியானாவையும் வேர்லினையும் வீட்டிற்குள் அனுப்பி வைத்தான். வினயை தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறிமுடித்தான்.
“என்னாடா சொல்லுற! நம்ம அம்மாவா இப்படி பண்ணாங்க?”
“ஆமா டா, என் காதால கேட்டுட்டேன். இதுக்கு மேல அங்க இருக்குறது பியானா கத்திமேல நடக்குற மாதிரி. அதுதான் மெரினா பீச் பக்கம் வாடகைக்கு குடுத்த வீட்டுக்கு அட்வான்ஸ் ரிட்டன் பண்ணிட்டு நாங்க அங்க போகலாம்னு இருக்கோம். அதுவரைக்கும் உங்க வீட்ல இருக்கேன் மாச்சான்”
“என்னடா உங்க வீடு, நம்ம வீட்ல இருப்போம் சொல்லு”
“நன்றி டா”
“டேய் புறா, வாய மூடிக்கிட்டு போயிட்டு தங்கச்சிய கவனி” என்று கூறவும் வீட்டினுள் நுழைந்தனர்.
வீட்டின் உள்ளே வந்தவனுக்கு சங்கடமாய் இருந்தது. தன் வீட்டைத் தவிர வேறு வீட்டில் தங்கியதே இல்லை.
அவனது சொந்தவீட்டில் இருப்பவர்களுக்கு முன்பணத்தை கொடுத்து வேறு வீடு பார்க்குமாறு தாழ்மையாகக் கூறியிருந்தான்.
வினயின் தாய் விசாலம், வர்தவர்களை நன்றாகவே கவனிக்க ஆரம்பித்தார்.
பலநாட்களாக நடந்த கொடுமைகளை எண்ணி எரிந்துகொண்டு இருந்தான் புறஞ்சேயன். “ஏன் பியூமா எங்கிட்ட சொல்லல?”
“கூட்டுக்கும்பத்துல இதெல்லாம் நடக்குற சின்ன சின்னப் பிரச்சனை சேய்யூ. பெருசு பண்ணாதீங்க”
“எது, குழந்தைய கலைக்க சொன்னதா?” என்று அதட்டலாகக் கேட்டான்.
உடனே பியானா வயிற்றில் கையை வைத்து மூச்சிறைக்க ஆரம்பித்தாள்.
“சாரிமா, சத்தமா பேசிட்டேன்ல” என்று அவள் வயிற்றில் கையை வைத்துத் தலையை வருடினான்.
“எதுலயும் அலட்சியமா இருக்காத”
“ஓகே சேய்யூ”
***
இங்கோ புகழ்முரசன் வீட்டிற்கு வர கலவரம் களைக்கட்டியது.
செல்வத்தைத் திட்டாத வார்த்தைகளே இல்லை. யுவாவை துரத்தியது போதாமல் புறாவையும் துரத்தியது மனம் தீப்பிழம்பானது.
“ஏன்தான் உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணேனோ தெரியல? எம்புள்ளைங்கள வாழவிடாமலே ஆக்கிட்ட!” என்று புகழிற்கு ஆத்திரம் தலைக்கேறியது.
“நான் மட்டும் யாருக்காகப் பேசுறேன். எம்புளைகளுக்காதான் பேசுறேன்” என்று சீறினார் செல்வம்.
“ஆமா ஆமா, நல்லா பேசுன. மூத்த பொண்ணுக்கு குழந்த இல்லனு மருகளோட கர்ப்பத்த கலைக்க சொல்லுற கேடுகெட்ட மாமியார்தான் நீ! அதே மாதிரி நீ கர்ப்பமா இருக்கும்போது எங்கம்மா இப்படிதான் சொன்னாங்களா?”
“நல்லா கேளுப்பா!” என்று இன்னும் ஏற்றிவிட்டார் பாட்டி.
“எங்கம்மா உன்ன எப்படி தாங்குனாங்க. உன்னைய அப்படி தாங்கச் சொல்லல. வாய வச்சிக்கிட்டு இருக்கத்தான் சொல்லுறேன். புள்ளத்தாச்சிப் பொண்ணோட மனசு எவ்வளவு துடிச்சுருக்கும். ச்சே!”
தினமும் அவரது அலுவலக வேலையை முடித்து விட்டுப் புகழ்முரசன் வந்தால் நிம்மதியாய் மூச்சு விட முடியாது. செல்வத்தின் கடும் வார்த்தைகளில் சிக்கித்தவிப்பார்.
“எக்காரணம் கொண்டும் நான் புறாவ வீட்டுக்குக் கூட்டிட்டு வரமாட்டேன். அவன் அங்கயாவது நிம்மதியா இருக்கட்டும்” என்றவர் கூறிமுடிக்க, புறஞ்சேயன் அலைபேசியில் அழைத்திருந்தான்.
“அப்பா, பியானாக்கு அஞ்சாவது மாசம் சீரு வினய் வீட்ல செய்யுறோம். நீங்க, அப்பாய், அக்கா வாங்க. தயவு செஞ்சு அம்மாவ மட்டும் கூட்டிட்டு வராதீங்க” தமிழ் பஞ்சாங்கத்தின் கணக்கில் ஐந்தாம் மாதசீர் நடத்துவதற்கு முடிவெடுத்திருந்தனர்.
“சரிப்பா நாங்க கிளம்பி வாரோம்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு, முத்தாயி பாட்டியையும் லக்ஷதாவையும் புறப்படச்சொன்னார்.
அப்படியே அவன் தம்பி யுவனஸ்வனையும் அழைத்திருந்தான்.
****
பியானாவின் வயிறும் ஆறுமாதக்கணக்கில் வளர்ந்திருந்தது. ஆனால் குழந்தைகளுக்குப் பதினைந்து வாரங்கள்தான்.
விசாலம், பியானாவை கல்யாண புடவையைக் கட்டச்சொல்ல புறஞ்சேயனை பார்த்து முறைத்திருந்தாள் பியானா.
பின்பு தங்க வர்ண கரையுடன் கூடிய சிவப்பு வர்ண புடவையைக் கட்டினாள்.
புடவை கட்டிய பியானா வெளியே வர அவளையும், வயிற்றை தள்ளியவாறு நடப்பதையும் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தான் புறஞ்சேயன்.
அவள் நடப்பதை போல் இவனும் நடந்து காண்பிக்க அவளிடம் குட்டு வாங்கியதுதான் மிச்சம்.
“டேய்! ரொமான்ஸ் பண்ணது போதும். அப்பா, பாட்டி, அக்கா எல்லாரும் வந்துட்டாங்க. நல்ல நேரமும் ஆரம்பிச்சுட்டு சீக்கிரம் வாங்க டா” என்று கூறிவிட்டு வீட்டில் மண்டபத்திற்கு சென்றான்.
பியானா கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்தான். வருகை தந்த மூவருரையும் பார்த்துப் பியானாவின் அகம் மகிழ்ந்திருந்தது.
அவளுக்குப் பிடிக்குமோ என்கிற சந்தேகத்தில் சில இனிப்புப் பண்டங்களும் காரவைகைகளும் அவசரமாகச் செய்து வந்தனர் பாட்டியும் லக்ஷதாவும். அப்படியே யுவா, நித்தி, பிரணவும் வருகை தந்திருந்தனர்.
சுபநேரத்தில் பியானாவிற்கு நலுங்கு வைக்க ஆரம்பித்தார் முத்தாயி பாட்டி. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கு பியானா எழ, “வேணாம் மா. குழந்தைங்கள நல்லபடியா பெத்துக்குடுத்தா போதும். நம்ம குலதெய்வம் எப்பவும் உனக்கு உன் கூடவே இருக்கும்” என்று மகிழ்வோடு வாழ்த்தினார் பாட்டி.
பின்பு விசாலம், லக்ஷதா, நித்தியெனத் தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் வைக்க வேர்லினும் நலுங்கு வைக்க இறுதியாகப் புறஞ்சேயன் நலுங்கு வைத்து முடித்தான்.
அனைவருக்கும் அவளுக்கு இனிப்பை ஊட்டிவிட மனமும் தித்திப்பில் ஆழ்ந்தது. தாய் இல்லை, தந்தை அருகில் இருந்தும் பார்க்க முடியவில்லை என்ற கவலையும் சேர்ந்து ஒட்டிக்கொண்டது அவள் முகத்தில்.
வினய் வீட்டில் நலுங்கு வைப்பது அத்தனை கவலை முத்தாயி பாட்டிக்கு அவர்களின் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கொடுப்பினை இல்லை என்று.
“கசகசனு இருக்கும் புடவைய மாத்திட்டு வாம்மா” என்றார் விசாலம்.
அவள் மட்டும் அறைக்குள் செல்ல, ஜாகெட்டில் இருக்கும் ஊசியைக் கழட்ட முடியவில்லை. அதனால் யாரையேனும் உதவிக்கு அழைக்க, பெண்கள் அனைவரும் வேலை செய்து கொண்டு இருக்க புறஞ்சேயன்தான் அறைக்குள் சென்றான்.
“சேய்யூ இந்தப் பின்ன கழட்டி விடுங்களேன்” என்று முதுகுப்புறத்தை திருப்பிக் காட்டியாவாறு இருந்தாள்.
அவனும் பக்குவமாய் ஊசியைக் கழட்டி விட்டான். புடவையை மெதுவாக அவிழ்த்தவள் வாயைச் சரி செய்தபடி வேறு ஆடையை எடுத்தாள்.
“ஏன் பியூமா வாயப்போட்டு குதப்பிக்கிட்டு இருக்க?”
“நிறைய இனிப்பு சாப்பிட்டேனா, வாய் ஒட்டிப்பிடிக்குது. ஒரு மாதிரியா இருக்கு”
“நான் வேணும்னா குறைக்கட்டுமா?” என்று தினுசாகக் கேட்டான் அவன்.
“உங்க வேலைய பார்த்துட்டு போறீங்களா?” என்று பொய்யாய் கடிந்து கூறினாள்.
“பிரியாணிதான் சாப்பிடக் கூடாது. குஸ்க்காவும் சாப்பிட்டுக் கூடாதுன்னா நான் பாவம் இல்லயா?” என்று கெஞ்சியவாறே அவள் இதழ்களைச் சிறை செய்தான்.
வளர்ந்த வயிற்றை தாண்டி இவன் உயரமாய் இருக்க இவள் குள்ளமாய் இருக்க முத்ததிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை பெண்ணவளால்.
சிறை செய்த இதழ்களை விடுத்து அவனைக் குனிய செய்து அவள் கைகளை அவன் கழுத்தில் மாலையாய் இட்டு மீண்டும் பெண்மையே அவன் இதழ்களைச் சிறை செய்தாள்.
என் ஆர்மோன்களை
ஆட வைக்கும் வித்தகனே
என்னுள் புதையல் தேடும்
புறஞ்சேயா – முத்தித்தில் சித்தம்
கலங்க வைத்த முத்தகன்
இவன்தான் – உன் வன்னிதழ்
சிறையில் உறைந்தேனடா
முழுவதுமாய் தோற்றுவிட்டது
என் பெண்மை உன்
ஆண்மையில்.
இதழ் சிறை முடிவடைய, வேகமாக ஆடை அணிந்து அறையை விட்டு வெளியே வந்தனர்.
பியானாவுக்கு பிடித்தமான பிஸ்ஸாவும் பாஸ்தாவும் செய்து வைத்திருந்தாள் வேர்லின். அதனை மகிழ்வோடு உண்டாள்.
சீர் செய்த வீட்டில் இருக்க வேண்டாமென்று, மெரினாவில் இருக்கும் வீட்டிற்கே செல்லத் தயாராகினர். மாலை ஆறுமணி, நல்லநேரத்தில் கிளம்பச்சொன்னார் பாட்டி.
“அப்படியே நாங்களும் உங்க கூடவே வந்துறோம் பா” என்று பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு முத்தாயி பாட்டி.
“அப்பாய் நீங்களும் அக்காவும் வாங்க” என்று புறா கூற.
“அப்போ நான் வர வேணாமா?” என்று கவலையோடு கேட்டார் புகழ்.
“வேணாம்பா, அம்மா வீட்ல தனியா இருப்பாருங்க” என்று கூறி விட்டு,
பியானாவை பக்குவமாய் பார்த்ததற்கு வினயின் தாய் விசாலத்திற்கு நன்றி கூறி விடைப்பெற்றனர்.
யுவாவின் குடும்பத்தையும் லக்ஷதா, பாட்டி, வேர்லின், பியானா இவர்களை மாத்திரம் சீருந்தில் அழைத்துச் சென்றான் மெரினாவிற்கு.
பிரம்மாண்டமான பெரிய வீடுதான் அதுவும். கடல்மண்ணின் வாசத்தோடு சொந்த வீட்டில் வாசம் செய்யத் தயாராகினர் தம்பதியினர்.
மாலை பொழுது கடற்கரையின் அழகு மங்கியிருக்க காலைப் பொழுதில் இரசிக்கலாம் என்று வீட்டிற்குள் சென்றிருந்தனர் அனைவரும்.
கடற்கரையின் உப்பு கலந்த காற்று பியானாவின் வாயில் உமிழ்நீரை சுரக்கக் செய்தது.
“என்ன பியூமா, கருவாடு சாப்பிடனும் போல இருக்கா?” என்று அவன் வினவினான்.
“ம்” என்று ஆசையோடு தலையை அசைத்தாள்.
“நாளைக்கு வாங்கித்தாரேன்” என்று அவள் கன்னம் தட்டினான்.
நல்லநாளில் பால் காய்ச்சிடலாம் என்று அனைவரும் தங்களுக்கென்று ஓர் அறையைத் தேர்ந்தெடுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.
“நாளைக்கு கோர்ட்டுக்கு நானும் வரட்டுமா?” என்று தயக்கமாகக் கேட்டாள் அவள். தந்தையின் வழக்கு தொடரவிருப்பதால்,
கண்டிப்புடன் மறுத்துவிட்டான். “ப்ரெக்னன்ட் இருந்துக்கிட்டு கோர்ட்டுக்கு வர வேணாம். மார்னிங்க யுவா எல்லாரையும் பீச்சுக்கு அழச்சிட்டு போவான். நானும் வேர்லினும் கோர்ட்டுக்கு போயிட்டு வாரோம் ஓகே”
வருத்ததுடன், “ம்” என்றவள் மனமெல்லாம் தந்தையின் நிலையை எண்ணி சிக்கித்தவித்தது.
காலை எழுந்து சீக்கிரமாகவே நீதிமன்றத்திற்கு கிளம்பினர் புறஞ்சேயன் வேர்லினும்.
முத்தாயி பாட்டி நல்லநாள் என்று பாலை காய்ச்சி சுவாமிக்குப் படைத்தார்.
பாட்டியின் குரல் கேட்டு எழுந்த பியானா, “பால் குடிச்சிட்டு தூங்குமா. குழந்தைங்க பாவம் பசில இருக்கும்”
“பிரஷ் பண்ணிட்டு வாரேன் பாட்டி”
“மெதுவா, மெதுவா எழுந்துரி” என்று பியானாவின் கையைப் பிடித்தார்.
காலைகடன்களை முடித்து விட்டு உணவருந்தி அமர்ந்திருக்க, யுவா அனைவரையும் கடற்கரைக்குச் சென்றான்.
பிரணவின் சேட்டைகள்தான் அதிகம். பியானாவை படுத்தி எடுத்தான். ஓடியாடும்போது பயம் பிரணவ் பியானாவின் மீது விழுந்திடுவானென்று.
“அண்ணி, அண்ணா இங்க இல்லனு எதும் வேணும்னா கேக்காம இருக்காதீங்க. எங்கிட்ட கேளுங்க” என்றான் யுவா. அவள் மனமெல்லாம் நீதிமன்றத்தில் என்ன நடக்குமென்று ஓடிக்கொண்டிருந்தது.
வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அசையும்போது லக்ஷதாவின் கையைப் பற்றித் தொட்டுணரச் செய்தாள் பியானா.
கடற்கரையில் இருக்கும் ரோட்டுக்கடை உணவகங்கள் ஏராளம். உண்பதற்கு தராளமாக மனமும் மணமும் இருக்க, கொரோனாவின் அச்சுறுத்தல்களால் தவிர்த்துவிட்டனர்.
“ப்ரேஷ் மீனா வாங்கிட்டுப் போயி சமைச்சி சாப்பிடலாம்” என்று அனைவரின் மனதை சமாதனப்படுத்தினார் பாட்டி.
நீதிமன்றத்திலிருந்து புறஞ்சேயனும் வேர்லினும் வெளிய வந்திருக்க, பியானாவின் மனம் மட்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வராமல் தந்தைக்கு கிடைத்த தீர்ப்பிதற்க்காகக் காத்திருந்தது அவள் மனம்.
***