💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 32💋

eiHO4LK40803-7f8e8d1e

இறுதி அத்தியாயம்🙏

 

வீட்டில் உள்ள அனைவருக்கும் கவலைதான் குழந்தையின் இழப்பில். லக்ஷதாவிற்கு இதயத்தில் சிகிச்சை முடிவடைந்து ஒரு மாதகாலம் ஆகியிருக்க குழந்தை இறந்த விடயத்தை மூடி மறைத்தனர். 

வைத்தியசாலையில் இருக்கும் பியானா அவசரமாக அழைப்பு விடுத்தாள். “சொல்லு பியூமா” என்றான் பயந்து குரலில்.

“சேய்யூ நம்ம பேபிய என் கையால தூக்குனேன்!” என்று பியானாவின் புத்துணர்ச்சியான குரலில் அவன் மெய்சிலிர்த்தான். 

“உண்மையா உன் கைல குடுத்துட்டாங்களா? இதுபோதும் பியூமா இதுபோதும்” 

“ஆமா சேய்யூ கொஞ்சநாள்ல வீட்டுக்கு போகலாம்னு சொன்னாங்க” 

“சரி பியூமா இது போதும் டா. பேபிய கவனாம பார்த்துகோடா வேற எதை பத்தியும் யோசிக்காத ஓகேவா?” 

“சரி சேய்யூ” 

அடுத்த இரண்டே நாளில் குழந்தையை பியானா இருக்கும் அறைக்கே கொடுத்துவிட்டனர்.

விஷயம் தெரிந்தவுடன் குழந்தையை பார்ப்பதற்கு ஓடோடி வந்தான் புறஞ்சேயன். அவன் வந்திருந்த நேரம் வைத்தியர் குழந்தையை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். 

பரிசோதிக்கும் வரை பொறுமையே இல்லை அவனுக்கு. குழந்தையை அருகில் சென்று பார்ப்பதில் ஆனந்ததோடு ஆவலும் அவன் மனம் முழுவதும் பரவியிருந்தது. 

வைத்தியர் சென்றவுடன் குழந்தை அருகில் உற்று நோக்கி பார்த்தவாறு இருந்தான். “சேனிடைசர் போட்டு குழந்தைய தூக்குறீங்களா சேய்” 

“வேணாம் வேணாம் பியூ, வீட்டுக்கு வந்தா பிறகு தூக்கிக்கிளாம். வெளிய இருந்து வாரவங்கக்கிட்ட குழந்தைய குடுக்காத. யாரா இருந்தாலும் சரி” 

“ஓகே சேய்யூ. சிங்கக்குட்டி டாடி வந்துருக்காங்க பாருங்க… பாருங்க” என்று குழந்தை எழுப்பினாள். 

“ஈஈ” என்று நகைத்துவிட்டு, “அவன் தூங்கட்டும் ரொம்ப டயர்டா இருக்கான் போல” என்று தந்தையின் குரலுக்கு ஒரு கண்ணை திறந்து டக்கென்று முடிகொண்டான் அந்த குட்டிக் கண்ணன். 

“உங்க குரல் நல்லா தெரியுது சேய்யூ” 

“ஆமா ஆமா, நான் சொன்னேன்தானே உன்ன மாதிரியே மூக்கு இருக்கு பார்த்தியா?” 

“போங்க சேய்” என்றாள் மகிழ்ச்சியுடன் பியானா. 

ஏனைய குழந்தைகளைவிட இவர்களின் நிறை குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாக இருந்தது அவர்களுக்கு. 

ராதிகாவின் குழந்தையையும் பியானா, புறஞ்சேயனின் பெயரில் தத்தெடுத்துடுத்துக்கொண்டனர். 

குழந்தையை கையில் கொடுத்து பத்து நாட்கள், மொத்தமாக நாற்பது நாட்கள் நரக வேதனையை அனுபவித்த பிறகு வீட்டிற்கு பியானாவையும் குழந்தைகளையும் புறஞ்சேயன் வந்தான். 

இரண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு வர லக்ஷதாவை தவிர அனைவரும் திகைத்து போய் பார்க்க புறஞ்சேயன் கண்ணை காண்பித்தான் அதிர்ச்சியாக வேண்டாம் என்பதைப் போல். 

ஆரத்தி எடுத்து வரவேற்றார் முத்தாயி பாட்டி. ராதிகாவின் குழந்தையும் ஆண் குழந்தை என்பதால், “தம்பி உனக்கு, ஒரு பொண்ணு ஒரு பையன்தானே சொன்னாங்க” 

“இல்லக்கா ரெண்டுமே பையன்தான். நான்தான் மாத்தி சொல்லிட்டேன்” 

“ஓ, சரி சரி” 

“அக்கா நீயும் பியானாவும் குழந்தங்கள எடுத்துட்டு ரூமுக்கு போங்க” அவர்கள் இருவரும் உள்ளே செல்ல, செல்வம் வீட்டு வாசலில் வந்து நின்றார்

“மத்த குழந்தய தத்தெடுத்துட்டு வந்தோம். அக்காக்கு குழந்த தவறுன விஷயம் தெரியவே வேணாம். அப்பறம் அக்காவோட ராசி சரி இல்ல அவங்களே சொல்லுவாங்க” அனைவரும் அதை புரிந்துகொண்டனர். 

“அண்ணா, அம்மா வந்துருக்காங்க” என்றான் யுவா. 

“அப்பா தயவு செஞ்சு அவங்கள வீட்டுக்குள்ள வர வேணாம்னு சொல்லுங்க” என்று உரக்க புகழ்முரசனின் புறம் திரும்பி கூறினான். 

சத்தம் கேட்டு லக்ஷதாவை குழந்தைகளை பார்க்குமாறு கூறிவிட்டு பியானா மட்டும் வெளியே வந்தாள். 

“என்ன சேய் சத்தம் போடுறீங்க?”

“நம்ம பொண்ண கலைச்சிருவேனு சொன்னவங்க வந்திருக்காங்க” என்று பற்களை கடித்தவாறு மெதுவாக கூறினான். 

“வாயமூடுங்க சேய்” என்று அவனிடம் கூறிவிட்டு, “உள்ள வாங்கத்தை” என்று தன்மையோடுதான் அழைத்தாள். 

“இல்லமா இதுக்கு அப்பறம் உங்கள தொல்ல பண்ண மாட்டேனு சொல்லிட்டுப் போகதான் வந்தேன்” 

“சேய் அத்தை பாவம் உள்ள கூப்பிடுங்க” 

“நீ சும்மா இரு பியூ” 

“சேய் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பொறந்து மூனுநாள் குழந்தையவே… அப்போ முப்பது வருஷ குழந்தய அத்தை எப்படி பிரிஞ்சு இருப்பாங்க. நம்ம குழந்தைய தூக்கவே இல்ல. எனக்கு எவ்ளோ ஏக்கமா இருக்கு, தொட்டு தூக்கி சாப்பாடெல்லாம் ஊட்டிவிட்ட அத்தைக்கு எவ்ளோ ஏக்கம் இருக்கும். முப்பது வருஷம் அவங்க வளர்த்துட்டு திடீர்னு ஊர் பேர் தெரியாத நான் உங்கள சொந்தமாக்கும் போது அவங்களால ஏத்துக்க முடியல அவ்ளோதான். போங்க சேய் அம்மாவ கூட்டிட்டு வாங்க” என்று அவனை வாசல் புறம் தள்ளிவிட்டாள். 

மனைவியிடம் தாய்மையை உணர்ந்தவன் தன் தாயிடம் அவன் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கோர, தாயும் மகனிடம் மன்னிப்பு கோர, தன் கையோடு தாயை அழைத்து வந்தான்.

அதன் பின் உடை மாற்றுவதற்கு புறஞ்சேயன் அறைக்குள் செல்ல, லக்ஷதா ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். 

குளித்துவிட்டு உடை மாற்றிவிட்டு வெளி வர, பியானா குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தாள். அதுவரை பொறுத்திருவந்தான். 

குழந்தையை சிறுது நேரம் தோளில் போட்ட பிறகு ஒரு பக்கமாக திருப்பி உறங்க வைத்த பின், அவளுடைய கால்களை நன்கு நீட்டி கண்களை மூடி இரு கைகளையும் கட்டி அமர்ந்திருந்தாள். 

கட்டிலின் கீழ் மண்டியிட்டு தன்னவளின் கால்களை இரு கைகளால் பற்றி அவன் முகத்தை புதைத்தான். நாற்பது நாட்களுக்கு பிறகு அவன் கண்ட முதல் சொர்க்கம் அவள் காலடி. 

அவன் செய்கையில் திடுக்கிட்டு எழுந்தவள், “என்ன சேய்யூ பண்றீங்க. முதல்ல எழும்புங்க” 

“உன்னையும் பேபிஸயும் பிரிஞ்சு இருக்கவே முடிய பியூமா. ரொம்ப கஷ்டபட்டுட்டேன் டா” என்று அவன் கண்கள் கலங்க ஆரம்பிக்க, உடனே தன் மார்போடு தன்னவனை இழுத்தணைத்தாள். அவன் கண்ட இரண்டாவது சொர்க்கம் அது. 

“ஏன் சேய்யூ, குடிச்சா கவலை எல்லாம் போயிருமா?” என்று அவன் சரக்கு போத்தலை பார்த்து கேட்டாள். 

“சாரி டா மா, இதுக்கு அப்பறம் குடிக்க மாட்டேன்” 

“இல்ல சேய்யூ. உண்மையாதான் கேக்குறேன். குடிச்சா கவலை எல்லாம் போயிருமா. அப்போ எனக்கும் கொஞ்சம் குடுங்களேன்” என்று இளகிய குரலில் கேட்டாள். 

“அதான் சொல்றேன்ல குடிக்க மாட்டேனு, விடு டா” 

“என்னால முடியல சேய். நம்ம பொண்ண நினைக்கும் போது…” என்றவள் குரல் அடைக்க விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். 

“நீ இப்படியே அழுதுட்டு இருந்த சிங்கக்குட்டிய எழுப்பி விட்டுருவேன்” என்று அவளை சமாதப்படுத்த ஆரம்பித்தான். 

அழுகை சற்று அடங்க, “சேய்யூ, நம்ம பொண்ணுக்கு என்ன பேர் வச்சீங்க” ஆசையுடனும் தயக்கத்துடனும் கேட்டாள். 

“ஜீசஸ் மரியாள், ஜீசஸ் மறுபடியும் உயிர்தெழுந்து வந்தாங்கதானே. அதான் நம்ம பொண்ணும் அந்த மாதிரி வருவா” என்று அவன் கூற, ஒரு தந்தையாய் அவனுக்கும் இருக்கும் ஏக்கத்தையும் பாசத்தையும் உணர்ந்தாள். 

“சிங்கக்குட்டிக்கு யேஸ்கிந்த்னு பேர் வைக்கலாமா?” என்றவள் கேட்க, 

“உன் விருப்பம் போல வைக்கலாம்டா” என்று மகிழ்வோடு கூறினான். 

கொரோனாவின் ஆதிக்கத்தில் குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து கடினமென்றாலும் வேறு வழியில்லை. பரிசோதனைக்கும் வரும் சில இரட்டை குழந்தைகளை பார்த்தால் இருவருக்கும் மனம் ஏங்கும். ஆனால் பொறாமை கொள்ளாது.

ராதிகாவின் குழந்தையை லக்ஷதாவிடமே கொடுத்துவிட்டனர். அக்குழந்தைக்கு வித்தேஷ் என்று பெயர் சூட்டினர்.

ஏனைய குழந்தைகளை விட இவர்களின் குழந்தை நிறை குறைவாக இருப்பதுடன், தவழ்ந்தது, அமர்ந்தது, நடப்பது எல்லாம் தாமதமாகவே நிகழந்தது. எவற்றையும் பெரிதாக பொருட்படுத்தவில்லை இருவரும். 

குழந்தைகளின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடாமல் ஆசிரமத்திற்கு சென்று சிறப்பாக கொண்டாடினர். அடுத்த இரண்டு நாட்களில் பியானா பிறந்தநாளும் வந்து சேர்ந்தது. 

கணவன் கொடுக்கும் பரிசுக்கு ஆவலாக காத்திருந்தாள் பாவை.  இரவு படுக்கைக்கு வந்தும் பரிசு வந்தபாடு இல்லை. 

“சேய் என்னோட கிஃப்ட் எங்க?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள். 

“ஓ பர்த்டே கிஃப்ட்டா, உனக்கு என்ன வேணும் சொல்லு பியூமா, வாங்கி தாரேன்” 

“எனக்கு ஒய்ட் கலர் டெடி பியர் வேணும்” 

“சரி கண்ண மூடி கைய நீட்டு தாரேன்” என்க. அவளும் ஆசையோடு கண்களை மூடி கைகளை நீட்டிக்கொண்டிருந்தாள். 

அவர்களது ஒரு வயதும் மூன்று மாதமும் நிரம்பி இருக்கும் யேஸ்கிந்தை கையில் அள்ளி கொடுத்தான். 

கண்விழித்துப் பார்த்தவள் குழந்தையை கட்டிலில் கிடத்தி, “என்னைய பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்குல” என்று கடிந்து கொண்டாள்.

“நான் கொடுத்த டெடி பியருக்கு ஒன்னேகால் வயசு ஆகிட்டு. இதை விட அழகான டெடி பியர் வாங்கித் தர முடியுமா சொல்லு?” 

“ஒன்னும் தேவையில்ல போயா!” என்று முனகியவாறு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

திரும்பியவள் அப்படியே இருக்க, கழுத்தணியொன்றால் அவள் சங்கு கழுத்தை அலங்கரித்தான். 

“புடிச்சுருக்கா மை பியூர் கோல்ட்?” 

“இந்த தங்கத்த விட எனக்கு இந்த தங்கதைதான் புடிச்சிருக்கு” என்று தன்னவனை சுட்டிக்காட்டி அவன் மீது சாய்ந்தாள். 

“சாய்ஞ்சுகிட்டு இருக்க, அவன் எழுந்து வாரான்” என்று கூற, அவனை விடுத்து குழந்தையை தூக்கினாள். 

அதன் பின்னரான காலங்களில் அலுவலக வேலைகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர் இருவரும்.

யேஸ்கிந்தை லக்ஷதாவிடம் விட்டு அலுவலகம் சென்று வருவாள். அவனும் பிரணவுடனும் வித்தேஷுடன் விளையாடுவதால் நேரம் போவதே தெரியாது.

அலுவலகத்தில், “பியூமா ஒரு குட் நியூஸ்” 

“நியூ ஆர்டர் வந்துருக்கா” 

“இல்ல, கம்பெனிக்கு வொர்க்கஸுக்கு யூனிஃபார்ம் ரெடி. ஈஈ” என்று பல்லை காட்டினான். 

பியானாவோ, “தூ!” என்று விட்டு, “நான் கம்பெனிக்கு வந்தே ஒன்ற வருஷம் ஆசிருச்சு” 

“என்ன புறா, சாரல் பலமா தெறிக்குது” என்று வினய் குறுக்கிட க்றிஸ்யா பின்னாடி வந்தாள்.

“உனக்கும் ஒரு நாளைக்கு தெறிக்கும் டா. நீ கல்யாணமே பண்ண மாட்டியா, ஒரு லவ் கூடவா வரல?” 

“வந்துச்சு வந்துச்சு ஒரே ஒரு லவ். ஒரு நாள்ல போயிருச்சு” என்றான் சலிப்புடன் கூறினான் வினய்.

“என்ன மச்சான்?” 

“ஆமா டா, நேத்து காலைல ஓகே பண்ணேன்டா. வாட்ஸாப்ல ஸ்டேடஸ் பார்க்கலனு ஈவினிங் ப்ரேக் அப் பண்ணிட்டா டா” 

“என்னாது, நான் வேணும்னா அந்த பொண்ணுக்கிட்ட பேசட்டுமா?” என்று அக்கறையுடன்தான் கேட்டான் புறஞ்சேயன். 

“நீங்க வந்து வக்காலத்து வாங்குற அளவுக்கு இந்த மூஞ்சு வர்த் இல்ல சார்” என்று கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள் க்றிஸ்யா.

க்றிஸ்யா அப்படிக்கூற பியானாவும் புறஞ்சேயனும் சிரித்தோய்ந்தனர். வினய் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டான். 

அப்போதுதான் புரிந்தது பியானாவுக்கும் புறஞ்சேயனுக்கும், வினயும் க்றிஸ்யாவும் காதலிப்பது. 

“டேய் மேகி இங்க இருக்கா, மைதிலி எங்கடா?” என்று துடுக்காய் வினயிக்கு வினா தொடுத்தான். 

“ஏன்டா ஏன்டா, நீ வேற” 

“போ போ, போய் க்றிஸ்யாவ சமாதானம் பண்ணு. அப்போதான் மேகி நூடுல்ஸாவது அவிச்சு கொட்டுவா” 

வினயும், “க்றிஸ்மா, என் ஆசை ஹிப்பி நூடுல்ஸே!” என்று அவள் பின் ஓடினான்.

“அப்பாடி! வினய் ரூட்டு க்ளியர்” என்று பெருமூச்சை விட்டான் புறஞ்சேயன். 

ஒரு வருடம் கடந்திருக்க, ஜானின் நன்னடத்தை காரணமாக சீக்கிரமாகவே விடுதலை செய்திருந்தனர். 

அளவில்லா மகிழ்ச்சி ஆழ்ந்தனர் புறஞ்சேயன், பியானா மற்றும் வேர்லின். பிள்ளைகள் அனைவரையும் ஜானே முன்பள்ளிக்கு அழைத்து செல்வார்.

வேர்லினும் இப்போதைக்கு திருமணம் வேண்டாமென்று தட்டிக்கழித்தாள். 

யுவாவுக்கும் நித்திக்கும் பிரணவுக்கு பிறகு தஸ்வந்த் பிறந்திருக்க, பிரணவ்தான் அவனுக்கு கீழ் இருக்கும் மூவரையும் வழிநடத்துவான். 

“ஆமா ஆமா, அம்மா அப்படிதான் புளிய கரைச்சு ஊத்துவாங்க. அப்பறம் மொளகாப்பொடி போடனும்” என்று பிரணவ் கூற, 

வீட்டின் மண்டபத்தில் இருக்கும் பெரிய மீன் தொட்டிக்கு அருகில் நாற்காலி வைத்து ஏறி, சமையல்கட்டில் இருக்கும் புளியையும் மிளகாய் பொடியையும் எடுத்து வந்து, யேஸ்கிந்த புளியை கரைத்து ஊற்ற, வித்தேஷ் மிளகாய் பொடியை தூவ, தஸ்வந்த் கைத்தட்ட, பிரணவ் மீன் குழம்பு வைப்பதற்கு வழிநடத்தினான். 

மீன்களோ தலைகீழாக நீந்த, அதை கண்ட லக்ஷதா மீன்களை அவசரமாக வேறு வாளிக்கு மாத்தினாள். 

“இதுக்குதான் சொல்லுறேன். அடுத்தது பேத்தி வந்துட்டா இந்த பொடிசுங்க எல்லாத்தை அடக்கிருவா, பியானா அடுத்த குழந்தைய தள்ளிபோடாம பெத்துக்கிட்டா சரி” என்று புலம்பினார் பாட்டி. 

பியானாவிற்கும் பெண்குழந்தை ஏக்கமிருக்க புறஞ்சேயனிடம் வெளிப்படையாகவே கேட்டாள். “சேய்யூ நம்ம அடுத்த குழந்த எப்போ பெத்துக்கிறது?” 

“நாளைக்கு பார்க்கலாம். ஸ்ரெச்ட் மார்க் போக கிரீம் வாங்கிட்டு வந்துருக்கேன். நானும் பார்த்துட்டு இருக்கேன். ஸ்ரெச்ட் மார்க் குறையவே மாட்டிங்குது” என்றான் சாதுவாக புறஞ்சேயன். 

அடி வயிற்றில் மட்டும் இல்லாமல் தொப்புளுக்கு மேலிருந்து வரிவரியாக இருக்க, அதை பார்க்கும் போதெல்லாம் புறஞ்சேயனுக்கு சலனமாய் இருக்கும். 

“இல்ல சேய். நம்ம ரெட்டை குழந்த பொறந்ததுக்கு வேற எந்த சாட்சியுமே இல்ல. அது அப்படியே இருக்கட்டும்” என்றாள் வயிற்றில் கையை வைத்தவாறு

அவள் விருப்பம் போல் அதை விட்டுவிட்டான். 

அடுத்தநாள், “நம்ம எங்க போறோம்?” என்று பியானா கேட்க, 

மௌனித்தவன், ஆசிரம வாசலில் சீருந்தை நிறுத்திவிட்டு, “உள்ள போய் பேசலாம்” 

“குழந்த வேணும்னு கேட்டல. இது எல்லாமே நம்ம குழந்ததான். உன் மனசுக்கு புடிச்ச குழந்தய நம்ம கூட்டிட்டு போகலாம்” என்று புறஞ்சேயன் கூற திகைத்துப்போய் பார்த்தாள் அவள். 

இப்படி எல்லாம் தன்னவன் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் செய்கையில் அவளகம் மகிழ்ந்தது. 

எல்லாக் குழந்தைகளையும் அள்ளிக்கொண்டு செல்ல ஆசைதான் இருப்பினும், அவர்களுக்கு ஒப்பாய் அழகான ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்தனர். அவர்களின் ஜீசஸ் மரியாளே கிடைத்தது போல் ஓர் உணர்வு.

வீட்டில் முதலில் மறுத்தாலும் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 

இரு குழந்தைகளையும் உறங்க வைத்துவிட்டு அவள் உறங்காமல் இருக்க, “ஏன்டா நீ தூங்காம இருக்க?” 

“ஓபனா கேக்குறேன் சேய்யூ. இன்னும் ஒரு குழந்தய என்னால பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்களா? நீங்க ஏன் என்னைய விட்டு விலகியே இருக்கீங்க” என்று அவள் சலனமாய் கோபித்துக்கொண்டாள். 

“ஏய் பியூமா, அப்படி எல்லாம் இல்லடா” என்று கூறி மூச்சை இழுத்தான். 

“பொண்டாட்டி இப்படி பார்க்கும் போது கூட ஜிவ்னுதான் இருக்க. மாமன அப்படியே சுண்டி இழுக்குது உன் அழகு. டெலிவரி டைம் ரொம்ப கஷ்டப்பட்டல. மனசே நொந்து போச்சு. அதுவும் உனக்கு ஸ்டிச் பண்றத பார்த்துட்டேனா என்னைய நானே வெறுத்துட்டேன். ஆம்பிளங்க சந்தோசத்துக்காக பொண்ணுங்கதான் எவ்ளோ கஷ்டப்பட்டுறாங்க. 

அதுமட்டுமில்ல டாக்டரும் ஒன் இயருக்கு தள்ளியே இருக்க சொன்னாங்க அதான் டா. பொண்டாட்டி மேல இன்ட்ரஸ்ட் குறைஞ்ச புருசன் இருக்கான். நீ கேள்விபட்டுருக்க, நீ டிரஸ் மாத்தும்போது நான் கண்ண மூடிப்பேன் தெரியுமா? பட், இப்போ நான் சும்மாதான் இருந்தேன். நீ இருக்க விடமாட்டீங்கிற. இப்போ என்ன பண்ணலாம்?” என்று கூறியவாறு தன்னவள் இதழ்களை உற்று நோக்கி பார்த்தவாறு இருக்க இதழ்களை சிறை செய்ய ஆரம்பித்தான். 

இதழ் சிறை சிறப்பாக தொடர தன்னவளை முழுவதுமாய் சிறை செய்து ஆக்கிரமித்தான்.

 

இதழ் மோகத்தில் இணைந்து 

உன் மேனி முழுவதும் 

என் மேனியால் மேய்ந்து

என் நாடி நாளம் எல்லாம் 

புடைந்து உன்னை பிச்சு தின்ன 

பிச்சை கேட்டு உன் பின் நாடி 

வரும் இவ்வடியேன்- உன்

திருவிதழ் கொடுத்து

இன்பரசத்தை கம்பரசமாய் மாற்றி

விட்டாய் இதழ் சிறையில்

உறைந்தேனடி 

உன்னுள் நான் விதைத்தேனடி 

என் ஆண்மையை முழுவதுமாய் 

 

🌺சுபம்🌺