💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 07💋

20210823_161826-60e94f18

            💋இதழ் சிறையில்                        உறைந்தேனடி (டா)💋 

அத்தியாயம் 07 

“நீங்க கால்ல மெட்டி போடல
அதத்தான் அப்டி கேக்குறான் பிரணவ்” என்று விளம்பினாள் நித்தி.

“அவன் கண்ணுலயிருந்து எதும் தப்ப முடியாதுண்ணா” என்றான் யுவா.

மாங்கல்யம் சூட்டியவன் மெட்டியிட மறந்ததேனோ, “மெட்டினா என்னது?” என்று வினவினாள் பியானா.

“இதோ… நாங்க போட்டுருக்கோம் இது தான் மெட்டி” என்று யுவாவும் நித்தியும் அவர்களது கால்களை காட்டினர்.

பியானா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “நல்ல நாள் பார்த்து வாங்கி போடனும் டா”
என்று விளம்பினான் புறஞ்சேயன்.

யுவாவின் வீட்டில் பொழுது போனதே தெரியவில்லை.
பிரணவ் செய்யும் சேட்டைகளை பார்த்தே பொழுது களிப்பாய் கழிந்தது.

*****

தம்பதியர்குரிய அறையில், “ஏன் சார், உங்க நேம் மட்டும் டிஃபரென்டா இருக்கு?” என்று கேட்டாள் பியானா.

“அதுவா…, அக்காவுக்கும் தம்பிக்கும் அப்பா பேரு வைச்சாங்க.
எனக்கு அப்பாய் பேரு வைச்சாங்க.
அதான் கொஞ்சம் வித்தியாசமாயிருக்கு”

“உங்க பேருக்கு என்ன மீனிங்?”

“புறஞ்சேயன் அப்டினா யாரையும் பற்றி புறங்கூறாதே, ஒருதவங்கள பத்தி அவங்க முன்னாடி மட்டும் பேசனும் முதுக்கு பின்னாடி பேசக்கூடாது. இதுதான் பொருள்”

“ஓகே சார், சார்… டாடிய பத்தி எதுவும் தகவல் தெரிஞ்சிதா?” என்று ஊசலாடுற்றாள்.

“ஆமா பியானா, அந்த விஷயமா போலீஸ் ஸ்டேஷன் போகனும் இன்ஸ்பெக்டர் உன்னை அழச்சிட்டு வர சென்னாரு, நாளைக்கு போகலாம்”

“சரி சார், பழைய வீட்ல கொஞ்சம் திங்க்ஸ் இருக்கு நானும் வேர்லினும் போய் அதெல்லாம் எடுத்துட்டு வாரோம்”

“ஓ.. அதுவா, ஆள் விட்டு எடுத்துட்டு வர சொல்லிருக்கேன்.
இன்னும் அரைமணி நேரத்துல வந்துரும்”

“ஓகே சார், அப்போ நான் சமைக்கபோறேன்”

“வெய்ட் வெய்ட், உங்க வீட்ல சமைக்கிற மாதிரி பீஸ்ஸா,பாஸ்தா இதெல்லாம் செய்யக்கூடாது. ரைஸ், சிக்கன் கிரேவி, ஃபிஷ் ஃப்ரை, சாம்பார் இந்த மாதிரிதான் இங்க சமைக்கனும்”

“ம்ம்ம்” என்று தலையை ஆட்டிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

செல்வமும் ரஞ்சனாவும் அவ்விடத்தில் இருக்க, “அம்மா என்ன சமைக்கனும் சொல்லுங்க? நான் பண்றேன்” என்று மெல்லிய குரலில் கேட்டாள் பியானா.

“யாருக்கு யார் அம்மா, என்னைய அம்மானு கூப்பிடுறதுக்கு என்ன தகுதி இருக்கு உனக்கு? ரஞ்சனா நீ உள்ள போ வேலைக்கு ஆள் வந்தாச்சு” அவர் கூறிய வார்த்தைகளில் பியானாவின் மனம் சுக்குநூறாக,
ரஞ்சனாவுக்கோ மற்றறமகிழ்ச்சி.

“என்ன செல்வோ கிச்சன்குள்ள சத்தமாயிருக்கு?” என்று வினவினார் பாட்டி.

“பேசிக்கிட்டு இருக்கோம் அத்தை”
‘இந்த கிளவியோட முடியல’

செல்வம் அனைத்து வேலைகளையும் போடத்து போட்டபடி அப்படியே வெளியேற,
பியானா என்ன சமைப்பது, எப்படி சமைப்பது என்றறியாமல் வலைஒளியில் இந்தியன் சமையல் குறிப்புகளை பார்த்து சமைப்போம் என்று முடிவெடுத்தாள்.

காய்கறிகளை நறுக்கி உலையை வடித்து, கோழித்துண்டுகளை மசாலாயிட்டு மூடிவைத்தாள்.
வலைஒளியில் பார்த்தாற்போல்
சாம்பார் சாதம் செய்துவிட்டு இத்தாலியன் முறையில் கோழித்துண்டுகளை பொறித்தெடுத்தாள். அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான். சமையல் வேலைகள் முடிய பாத்திரங்களை கழுவி சமையலறை முழுவதையும் சுத்தம் செய்தாள்.
பழைய வீட்டின் சாமான்களும் வந்து சேர்ந்தது. அவற்றையும் சுத்தப்படுத்தி அடுக்கி வைத்தாள்.

“அக்கி, நீ மட்டும் ஏன் தனியா வேலை செய்ற என்னையும் கூப்பிட்டு இருக்கலாம்தானே”

“நீ படிச்சிட்டுயிருப்ப குட்டி அதுதான் டிஸ்டர்ப் பண்ணல”

“இத்தாலியன் ஃபுட்ஸ் செஞ்சியா அக்கி?”

“சிக்கன் மட்டும் இத்தாலியன் டிஷ், மத்தது ரெண்டும் இந்தியன் டிஷ் டா”

“சரி பரவாயில்ல”

அப்படியே இருவரும் பாட்டியுடன் சலசலப்பில் இறங்க, “அம்மாடி இங்கேயே இருக்க புறா தனியாதானே ரூம்ல இருக்கான். அவனுக்கு ஒத்தாசயா அவன்கூட இருக்கலாம்தானே” பியானாவிடம் விளம்பினார் பாட்டி.

“அவங்க தூங்குறாங்க அப்பாய்”

“போ… போய் எழுப்பி சாப்பாட குடு இதெல்லாம் இதுக்கப்றம் நீதான் பார்த்து பார்த்து செய்யனும்”

“சரி அப்பாய்” என்று அவர்கள் அறைக்கு கையில் உணவோடு சென்றாள். தன்னவனோ நீராடிக்கொண்டிருக்க, மடவாள் அறைக்கு வந்ததை மன்னவன் அறியாமல் குளியறையில் குத்தட்டாம்.

உணவை மூடிவைத்துவிட்டு அவனின் வருகைக்கு காத்திருந்தாள். காத்திருந்த கண்கள் லேசாக அயர்ந்தன.

குளியலை முடிக்கும் முன் இருந்தே பாடல் பாட ஆரம்பித்தவன். வெளியே வந்தும் பாடலை விடுவதாகயில்லை.

ஹே விழும் இதயம் ஏந்திப்பிடி
ஹே அதில் கனவை அள்ளிக்குடி
ஹே குறுஞ்சிறகு கோடி விரி
வா என் இதழில் ஏறிச் சிரி
கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா… என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா… என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களைக்
கொய்கிறாய்…….

என்றவன் பாடும் குரல் கேட்டு உறக்கம் கலைந்தவள். “சாசாசார்…” என்று அவள் கண்களை இருகைகளால் மூடினாள். சத்தம் கேட்டு அவளை திரும்பி பார்த்தான் அவன்.

கேசத்திலிருந்து நீர் சொட்ட சொட்ட
மிடுக்கு பொருந்திய வெற்று மார்புடன் இடுப்பில் கட்டப்பட்டிருந்த ஒற்றை துண்டு அத்தோடு அவள் அருகில் சென்று அவன் கேசத்தை கைகளால் ஆட்டி அவள் மேல் நீர் தெளித்தான்.

அவள் மேனியில் மின்மினிப்பூச்சியை ஓடவிட்டது போல் ஓர் உணர்வு “ஏன்டீ இப்டி சீன் போடுற ரொம்ப பண்ணாத கையயெடு”

“யார், நானா ரொம்ப பண்ணுறேன்?
எந்த ஆம்பிளயும் ஏன், எங்க அப்பாவகூட இப்டி பார்த்ததில்ல,
நீங்க வரும் போது கதவ தட்டிட்டு வந்திருக்கலாம்” என்று முகத்தில் கையை வைத்தவாறு கூறினாள்.

“ஏன்டீ, யாராவது பாத்ரூம்ல இருந்து வரும்போது கதவ தட்டிட்டு வருவாங்களா? சரி சரி அதான் என்னைய பார்த்துட்டியே விடு கட்டுன புருசன இப்டி பார்த்தா உங்க கர்த்தர் ஒன்னும் தண்டிக்கமாட்டாரு
கொஞ்ச நேரம் பாத்ரூம்ல இரு நான் டிரஸ் சேஞ்ச் பண்றேன்”

கைகளை எடுத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.

‘யப்பப்பா, சார சமாளிக்கிறதுக்கு நான் தினமும் ரெண்டு முட்டை குடிக்கனும் போல’

அவன் உடைமாற்றி முடிய அவளை வெளியே அழைத்தான். “நீ ரூமுக்குள் வந்தேன்னு எனக்கு சொல்லிருக்கலாம்தானே”

“டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். அப்டியே உட்கார்ந்தேன் தூக்கம் போயிருச்சி… அதவிடுங்க சார். சாப்பாடு கொண்டுவந்துருக்கேன் சாப்பிடுங்க”

“மேல எடுத்துட்டு வந்துட்டியா தேங்க் யூ”

உணவை திறந்து நாற்காலியை மேசையின் அருகில் வைத்து கோப்பையில் நீர் ஊற்றி வைத்தாள்.

“நீதான் சமைச்சியா!? சும்மா சொல்லக்கூடாது. இந்தியன் ஃபுட்ஸ் கூட நல்லாயிருக்கு, சிக்கன் சூப்பர் யார் சொல்லிக்குடுத்தா?”

“யூ டியூப்ல பார்த்து பண்னேன் சார்”

“யூ டியூப் வாழ்க” என்று ஆகாரம் அருந்தி முடித்தான்.

“உங்க அப்பா பிக்க இப்போ இருக்கிற மாதிரி ரெடி பண்ணனும்
கொஞ்சம் நரைமுடி வந்த எப்டி இருக்கும் அந்தமாதிரி”

“சரி சார்”

அவன் கூறியது போல் அவனது மடிக்கணணியில் படத்தை தொகுத்து காண்பித்தான் தன்னவளிடம், அவளும் சரி என்று கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள்.

“ஏய், நான் உன்ன தன்வினு கூப்பிடவா?” என்று புளகிதமாய் கேட்டான் அவன்.

“வேணாம் சார், டாடி தன்வினுதான் கூப்பிடுவாங்க” என்றவளின் முகத்தில் துயர் தவழந்தது.

“பியானா… கூப்பிடுறதுக்கு ரொம்ப பெரிசா இருக்கு சோ… பியூனு கூப்பிடுறேன்”

“உங்க விருப்பம்”

“எனக்கு நிறைய விருப்பம் இருக்குதான்… இருந்தும் என்ன பண்ண?”

இவள் அதை கண்டுகொள்ளாமல்
அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துவிட்டு கீழே நகர்ந்தாள்.

*****

காலையிலேயே வேர்லினை கல்லூரியில் இறக்கிவிட்டு காவல்துறைக்கு கிளம்பினர். “இவர்தான் இன்ஸ்பெக்டர் அவங்க என்ன கேட்டாலும் சரியா பதில் சொல்லு” என்றான் புறஞ்சேயன்.

காவல்துறை உயர் அதிகாரியுடன் ஒரு மணிநேரத்தை கடந்து கலந்துரையாடலில் ஈடுபட்டாள் அவள். அவள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை மீண்டும் கூற அவளை அறியாமல் நயனங்கள் நீர் சிந்தியது.

“ஏய் இது என்ன சின்னப்பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்க” என்றவன் கண்களை துடைத்துவிட்டான்.

அப்படியே அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். அங்கோ தம்பதியர் துளியளவும் எதிர்பாரா அமோகமான வரவேற்பு வாசலிலேயே பலூன்கள் கட்டி இருவரும் உள்ளே நுழையும் போது
முழுவதுமான ரோஜோ மலர் செண்டு அதை புதுமணத்தம்பதிகளுக்கு கொடுத்தான் வினய்.

“வெல்கம் யங் கப்பில்” என்று வரவேற்றான் வினய்.

பெரிதொரு மலர்மாலையை இருவருக்குமாய் சூட்டினாள் க்றிஸ்யா. “கங்கிராஜுலேஷன் டு போத் ஆஃப் யூ ஹேப்பி மேரேஜ் லைஃப்”

இருவருக்கும் இது அதிர்ச்சிதான்
புறஞ்சேயன் வாழ்த்தை தெரிவித்த எல்லோருக்கும் நன்றி கூறிக்கொண்டிருந்தான். பியானாவின் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை.

“டேய் மச்சான் என்னோட ஸ்மால் கிஃப்ட் இங்கே மாத்திக்கோங்க டா” என்று இரண்டு தங்க மோதிரங்களை பரிசளித்தான் வினய்.

அவள் இடக்கரத்தை மென்மையாய் பற்றி முகத்தில் புன்சிரிப்புடன் மோதிரமிட்டான். அவன் வலக்கரத்தை அவள் இழுக்க இழுக்க வலுக்கட்டாயமாய் இறுக்கி வைத்துக்கொண்டான்.

‘ப்ளீஸ் சார்’ என்று அவள் கண்களை சுருக்கி உதட்டை குவித்து கெஞ்ச, அவன் கரத்தை தளர்த்தினான். அவளும் தன்னவனுக்கு மோதிரத்தை அணிவித்தாள்.

“பியானா என்னால முடிஞ்ச குட்டி கிஃப்ட்” என்று வட்டவடிவ வெண்நிற வெதுப்பியில் தம்பதியர் நிற்கும் பொம்மை அதை மேசையின் மீது வைத்து “ரெண்டு பேரும் சேர்ந்து கட் பண்ணுங்க” என்றாள் க்றிஸ்யா.

அவள் கத்தியை எடுக்க அவன் தன்னவள் கையை பிடிக்க அங்கிருக்கும் அனைவரின் கரகோஷத்துடன் இருவரும்
வெதுப்பியை வெட்டினர். புறஞ்சேயன் தன்னவளுக்கு ஊட்ட
பியானாவும் தன்னவளுக்கு ஊட்டினாள். கண்ணன் சீண்டலாக பாவையை பார்க்க, அனைவரும் சுற்றி நிற்க பாவை அப்பார்வையை மறுக்கமுடியவில்லை.

தலைமையக அறையில், “என்ன மச்சான், திடீர்னு ஏதோ பண்ணுற எதுவும் சொல்லாம?” என்றான் புறஞ்சேயன்.

“என்னது நான் சொல்லலயா? ஸ்டாஃப்ஸ் எல்லாருமா என்னைய படுத்தி எடுத்துட்டாங்க. சார் ஏன் கையவெட்டுனாரு, எப்டி கல்யாணம் நடந்துச்சு இதெல்லாம் சொல்லி சர்ப்ரைஸ் பண்ணுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரிச்சு,
அப்றம் வீட்டில என்னாச்சு?” என்று கேட்டான் வினய்.

புறஞ்சேயன் வினயிடம் நடந்தவற்றை கூறிக்கொண்டிருந்தான்.

இங்கோ க்றிஸ்யா, பியானாவுக்கும் புறஞ்சேயனுக்கும் திடீரென திருமணம் நடத்தது ஏன், எப்படி என்று வினவிக்கொண்டிருந்தாள்.

இன்று அலுவலகம் முழுவதும் இவர்களது திருமணத்தை பற்றித்தான்
சலப்பிக்கொண்டிருந்தனர்.

அலுவலக வேலையை சீக்கிரமே முடித்து மருத்துவமனைக்கு சென்று கையிலிருந்த கட்டை பிரித்து புதிதாகக் கட்டிட்டான். காயமும் தையல் இட்டயிடமும் கொஞ்சம் காய்ந்திருந்தது.

“இப்போ நம்ம எங்க போறோம்னு சொல்லு?” என்று கேட்டான் புறஞ்சேயன்.

“மணி ஏழு இந்நேரத்துல வீட்டுக்குதான் போகபோறோம். ஏன், சார் ரொம்ப பில்டப் பண்றீங்க” என்று அலுத்துக்கொண்டாள் அவள்.

“இல்லயே, வீட்டுக்கு போகலயே
உனக்கொரு சர்ப்ரைஸ்!”

“சர்ப்ரைஸ்ஸா, என்னசார் திடீர்னு!”

“போயே பார்க்கலாம்”

“இல்ல சார் இப்பவே சொல்லுங்க, என் மண்டயே வெடிச்சுரும் சர்ப்ரைஸ் எல்லாம் வேணாம் சார்”

“ஆர் யூ ஷுவர்?”

“யேஸ்”

“என்னோட ஃபர்ஸ்ட் வைஃப பார்க்க போறோம்” அசால்ட்டாக கூறினான் புறஞ்சேயன்.

ஒரு நிமிடம் அவளிதயம் ஸ்தம்பித்து சுவாசிக்க மறந்து மூச்சடைத்து கண்களின் நோக்கு வர்ணம் அவனை வெறித்து பார்த்தபடி…. அவனோ சாதுவாயிருந்தான்.