💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா) 10💋

20210823_161826-82f28843

அத்தியாயம் 10

“பியூ நான் குளிச்சிட்டு வாரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான் புறஞ்சேயன். இன்றவன் உடைகளை மறக்காமல் குளியலறைக்குள் எடுத்து சென்றான்.

இவளோ, ‘கண்டிப்பா சார் ஏதாவது கிஃப்ட் வாங்கிருப்பாரு என்னவா இருக்கும். சாரோட பேக்ஸ்ஸ எடுத்து பார்க்கலாமா?.. வேணாம் அது நாகரீகம் இல்ல’ 

அவனும் குளித்து முடித்து வெளியே வர பெண்ணவளும் தூய்மையாகினாள். 

“சார் சர்ப்ரைஸ்னு எதும் குண்டை தூக்கி போட மாட்டிங்களே?” என்று மெதுவான குரலில் வினவினாள்  அவள்.

“இல்லயே, ஏன்? எதும் ஸ்பெஷலா சர்ப்ரைஸ் வேணுமா?” என்று அவன் உல்லாசமாக கேட்டான்.

“இல்ல சார் சும்மாதான் கேட்டேன்”  என்று நழுவிக்கொண்டாள்.

“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க, அப்டியே நம்ம வெளிய போய்ட்டு வரலாமா?”

“எங்க சார்?” 

“சும்மா காத்தாற ஒரு குட்டி வாக்”

“சரி” என்று கிளம்பியவள். அவள் முன்னே செல்ல, அவனோ அவளருகில் சென்று தன்னவள் கரத்தை தன் கரத்தோடு கோர்த்தான். அவள் அன்னார்ந்து அவன் முகத்தை பார்க்க,

“என்ன, உன் கைய புடிக்க உன் அப்பா வரனும் சொல்ல போறியா, அப்டி சொன்னாலும் விடமாட்டேன்” என்று இறுக பற்றினான்.

“எல்லாரும் பார்க்குறாங்க சார்” இதுவரை எந்த ஆணின் கையையும் இப்படி பிடித்ததில்லை அவள். 

“என்னடி, நாம கள்ளக்காதலா பண்றோம். ஊர் உலகம் பார்க்குதுன்ன பயப்படுறதுக்கு நம்ம காதல் நல்ல காதல்”

அப்படியே அருகில் சிறுவர் பூங்காவின் உள்ளே சென்று கதிரையில் அமர்ந்தனர்.

“உனக்கு என்ன பிடிக்கும், எங்கயிருந்த ஹோப்பியா இருப்ப?”

“என்ன பிடிக்கும் சொல்ல தெரியல எது கிடைச்சாலும்  எனக்கு பிடிச்சதா மாத்திப்பேன். சர்ச் போன கொஞ்சம் அமைதியா ஹோப்பியா ஃபீல் பண்ணுவேன்”

“ஓ.. நான் உனக்கு கிடைச்சதா சொல்லுறியா, கிடைச்சதா பிடிச்சதா மாத்திக்கனும்னு” அவனை தன்னவள் முறைத்தாள்.

 அப்பார்வையை மறுத்தவாறு புறஞ்சேயன் பேச்சை மாற்றினான் “சரி வா சர்ச் போகலாம்”

மைலாப்பூரில் இருக்கும் சாந்தோம் கதீட்ரல் தேவாலயத்தை நோக்கி பயணித்தனர். இரண்டு மணித்தியாலயப் பயணம் சீருந்தை சிறப்பாக செலுத்திக்கொண்டிருந்தான். காரிகைக்கு லேசாக கண்கள் அயரப்பார்த்தன. 

மகிழுந்தை செலுத்தியவாறே, “தூக்கும் வந்தா என் மேல சாஞ்சிக்கோ” தன்னவள் மீது அக்கறையுடன் கூறினான்.

முதலில் அஞ்சினாள். பின் அவள் கண்கள் நன்கு சொக்க இளங்காளையின் தோளில் மல்லிக்கொடியானாள் மடவாள். 

மன்னவனுக்கு மற்றறமகிழ்ச்சி மங்கையவள் தன் மீது தோள் சாய்ந்தது. தேவாலயத்தை அடைய தன்மீது சாய்ந்தவளை மெதுவாக தட்டி எழுப்பினான்.

போத்தலில் இருந்த நீரை கொண்டு முகத்தை அலசி தேவாலயத்தை நோக்கி நடந்தனர். 

“பியூ, சாந்தோம் அப்டினா ஜீசஸ்ஸோட இன்னொரு பேரா?” என்று வினவினான் புறா.

“இல்ல சார், ஜீசஸ்ட பன்னிரண்டு சீடர்கள்ல ஒருத்தர்தான் சந்தோம்” 

“சர்ச் எங்க இருக்குனு எல்லாம் தெரியும் ஆனால், உள்ள போனதே இல்ல இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என்ன பண்ணனும். எனக்கு சொல்லிக்குடு ” 

“கோவில்ல சாமி கும்பிடுற மாதிரிதான் சார்”

 

பிரித்தானிய பாணியில் இறுதியாக புனரமைக்கப்பட்டு கோதிக் முறையில் கட்டப்பட்ட சாந்தோம் தேவாலயம் இன்றும் அழகு குன்றாமல் பார்ப்போரின் கண்களை கவர்ந்தது. 

வாசலில் இருக்கும் ஒரு சிலையை பார்த்து, “இயேசப்பாக்கு அரோ..கரா..” என்று உச்சந்தலைக்கு மேல் இரு கைகளை கூப்பி புறஞ்சேயன் கோஷத்தை எழுப்ப கூடியிருந்தவர்கள் புறாவை பித்துபிடித்தவனாக எண்ண, பியானா அதிர்ந்தாள்.

அவனின் வாயை பொற்றி ஓரமாக இழுத்து வந்தாள்.

“கொஞ்சம் இரு மத்த சாமிக்கும் அரோகரா போட்டு வாரேன். இல்லன்னா கோவிச்சிப்பாங்க”

“என்ன சார், என் மானத்தை வாங்குறீங்க! இப்டி எல்லாம் சொல்லக்கூடாது” 

“நீதான் சொன்ன கோவில்ல கும்பிடுற மாதிரின்னு இப்ப ஏன் திட்டுற?” 

பிறகு தன்னவனுக்கு சிலுவையிட கற்றுக்கொடுத்தாள். 

தேவாலயத்தின்  உள்ளே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் உலக மக்களை நோயிலிருந்து காப்பாற்றம் நோக்கில் ஒழுங்கு முறையில்  கூட்டு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருக்க இவர்களும் அதில் கலந்து கொண்டனர். 

தேவாலயத்தின் அருட்தந்தை(ஃபாதர்)  திருவிவிலியத்தை(பைபில்) திறந்து ஒரு வாசகத்தை படித்தார். 

“வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” வாசகம் கூறி முடிய, அதன் பொருளையும் விளக்கினார்.

 “(மத். 11:28) என்று இயேசு உன்னை அன்போடு அழைக்கிறார். நீ இயேசுவிடம் வரும்போது உன் பாவங்களை மன்னித்து, விடமுடியாத பாவப் பழக்கங்களிலிருந்து உன்னை விடுவித்து, மெய் சமாதானத்தை உனக்கு தருவார். உன் தீராத நோயைக் குணமாக்கி சுகப்படுத்துவார். உன் தேவைகளை சந்தித்து உன் கண்ணீரைத்  துடைப்பார்”

அங்கிருந்த அனைவருக்கும் உயிர் கொல்லி நோய் கொரோனா தொற்றிலிருந்து உலகமே விடுபடும் என்ற எண்ணம் மனதில் தோன்ற தம்பதியருக்கு பியானாவின் தந்தை கிடைப்பார் என்ற நம்பிக்கையும் சேர்ந்து மனதில் ஆழப்பதிந்தது.

பிரார்த்தனை முடிய அப்படியே கூட்டம் கலைய ஆரம்பித்தது. “சார் வரிசையா இருக்க சிலையெல்லாம் கும்பிடுவோம் சார். பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்” என்று மீண்டும் சிலுவை இட்டு காண்பித்தாள்.

ஜெபத்தின் திருப்தி இருவருக்குமே பரிபூரணமாக இருந்தது. பல நாட்களுக்கு பிறகு பியானா தனது வாழ்வில் நடந்தவற்றை கர்த்தரிடம் கூறியது மனதிற்கு பெரும் நிம்மதியும் அமைதியுமாய் இருந்தது. தேவாலயத்தை விட்டு வெளியே வர மனமில்லாமல் இருவரும் விடுதியை அடைந்தனர்.

“தேங்க் யூ சார், ரொம்ப நாளைக்கு அப்றம் மனசு நிம்மதியா இருக்கு”

“நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும் இன்னைக்கு பிரேயர் நல்லா இருந்துச்சு, ஆன்லைன்ல பீஸ்ஸா ஆர்டர் பண்ணிருக்கேன்”

“ம்ம்ம்” 

ஒழுங்குபடுத்திய உணவு நேரத்திற்கு வந்து சேர்ந்தது.  ஊணை உண்டு சற்று நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் இருக்க, ‘இது சரி வராது’ என்று “பியூமா மணி பத்தாச்சு தூங்கலாம்” 

தன்னவள் முதுகை காட்டியவாறு திரும்பிருக்க, மணவாளனோ நுண்ணிடையின் மேனியை இரசித்துக்கொண்டிருந்தான்.

இதற்கு மேல் இரசித்தால் ஆகாதென்று போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டான். ஒரே மஞ்சத்தில் தனித்தனியே துஞ்சினர்.

புதியநாளை பரப்பிக்கொண்டு பகலவன் வந்தான். புறா சீக்கிரமாக விழித்து தூய்மையாகி தன்னவளையும் எழுப்பினான். அவளது காலை கடமைகளும் முடிய இருவருமாய் சேர்ந்து குளம்பி அருந்திக்கொண்டிருந்தனர். அறையின் கதவு தட்டப்பட்டது.

“நான் காஃபி குடிச்சுட்டு இருக்கேன். நீ போய் கதவ திற”

“அப்போ நான் காஃபி குடிக்கலயா?”

“ப்ளீஸ் பியூமா” என்று தன்னவன் இறைஞ்ச அவள் சென்று கதவை திறந்தாள். 

 “மேட்ரே..!” இத்தாலியிலிருந்து அருட்தாயின்(மதர்) வருகை அவளுக்கு பேரதிர்ச்சிதான்.

இவள் வந்தாரை வரவேற்காமல் திடீர் வரவிற்கு காரணம் வினவிக்கொண்டிருக்க, 

“வெல்கம் மதர்” என்று வரவேற்றான் புறா வரவேற்றான். 

அருட்தாயை கட்டியணைத்து அழுதாள் பியானா. அவர்களின் அரவணைப்பையும் பியானா அவர்கள் மீது வைத்த அன்பும் மரியாதையும் இதிலிருந்து நன்கே தெரிந்தது. 

அருட்தாய் பியானாவிற்கு ஆறுதல் அளித்தார். இத்தாலியன் மொழி புறஞ்சேயனுக்கு புரியது என்பதால் ஆங்கிலத்தில் உரையை தொடர்ந்தனர்.

“ஹேப்பி மேரேஜ் லைஃப் மை சில்ரன்ஸ்” இருவரின் நெற்றியில் சிலுவையிட்டார்.

பியானவிற்கு அருட்தாய் அவர்களுடன் இருப்பது விருப்பம் ஆனால் அவர்கள் இந்தியாவிற்கு வந்த நோக்கம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பிரசங்கம் நடத்துவதே பிரசங்கம் முடிந்த இரவே இத்தாலிக்கு திரும்பியாக வேண்டும் ஆசிரமத்தின் பொறுப்பாளரும் பாதுகாவலரும் இவரே ஆதாலால். வேலைக்கு பணியாட்கள் உண்டு இருப்பினும் திருப்பியின்மை.

புறஞ்சேயன் மூவருக்கும் காலை உணவை ஏற்பாடு செய்திருந்தான்.

அவர்களுடன் இருக்கும் நொடிகள் தெய்வீகம்தான். இரண்டு மணி நேரத்தில் இனிதே விடைப்பெற்றார் அருட்தாய்.

“சார், உங்களுக்கு முதலே தெரியுமா மதர் வாரது?”

“ஆமா, உனக்கு தான் கால் பண்ணீருக்காங்க நீ எடுக்கல சோ எனக்கு எடுத்து சொன்னாங்க.  உனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேனு தான் சொல்லல, நம்ம வீடு இருக்க சிட்டுவேஷன்ல மதர் வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காது. அதுதான் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணேன். நம்ம ஃபர்ஸ்ட் வீக் அனிவர்சரி செலபிரேட் மதர் கூடதான் உனக்கு புடிச்சிருக்கா?”

“தேங்க் யூ சார், மதர் ரொம்ப நல்லவங்க ஆசிரமத்துல இருக்க குழந்தைங்க சாப்பிட கொஞ்சம் லேட் ஆனாலும் துடிச்சிபோயிருவாங்க. ஒரு பொண்ணு எவ்ளோ தைரியமா இருக்கனும்னு அவங்ககிட்ட தான் கத்துகிட்டேன். தேங்க் யூ சோ மச் சார்”

“வெல்.. தேங்க்ஸ்ஸ கட்டிப்பிடிச்சு ஐ லவ் யூனு கூட சொல்லாமே!”

“ஐ..”

“சொல்லு.. சொல்லு!”

“ஐ லைக் யூ சார்” 

“பரவாயில்ல எனக்கு இதுவே பெரிசுதான். பட், ஐ லவ் யூ”

விடுதி அறையை விட்டு வெளியேறினர்.

****

வீட்டின் அடுக்களைக்குள்  ரஞ்சனாவோ, “என்ன அத்தை அவங்க ஹனிமூன் போய்டாங்க. நீங்க எதுமே சொல்லல” 

“நான் என்னம்மா பண்ணுறது?” விரக்தியில் கூறினார் செல்வம்.

“விட்டா குழந்தை பிறந்ததும் கொஞ்சுவீங்க போல?”

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த பாட்டி, “இது நல்ல கொடுமையா இருக்கே, அவன் வீட்ல நிம்மதி இல்லேனுதான் ஹனிமூன் போயிருக்கான். அது உனக்கு பிடிக்கலயா? கல்யாணம் ஆன குழந்தை பிறக்குறது சகஜம் தானே!” என்று ரஞ்சனாவை அதட்டினார் பாட்டி.

“நானும் அத்தை ஆயிரம் பேசுவோம். இதெல்லாம் நீங்க ஒட்டு கேக்குறீங்களா அப்பாய். அதுதான் பெரியவங்களுக்கு அழகா?” என்று தன் தரப்பை கூறினாள் ரஞ்சு.

செல்வம் செய்வதறியாது முழித்தார்.

“ஏன்டி, நீ என் பேரனுக்கு கெடுதல் செய்ய நினைப்ப இதெல்லாம் நான் கண்டுக்காம இருக்கனுமா, இங்க பாரு செல்வோ உன் அண்ணன் பொண்ணு ஒழுங்கா இருந்தா இங்க இருக்கலாம். இல்லன்னா நானே துரத்திவிடுற மாதிரி ஆகிரும்” என்று வசைபாடிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.

“கொஞ்சநாளைக்கு வாயமூடிக்கிட்டு இருமா” என்றார் ரஞ்சனாவை பார்த்து கூறினார் செல்வம்.

****

இன்று அலுவலகத்திற்கு தம்பதியரின் வருகை தாமதமே.

 வாசலில் இருந்த வினய், “புறாகூட சேர்ந்து பியானாவும் லேட்டா வரா பழகிட்டா, வீட்டு பக்கம் இருந்து வராம வேற பக்கமா வாரீங்க ஏன்டா?” என்று வினய் வினவ பியானா அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டாள். 

“ரூம்ல போயா பேசலாம் டா” என்றான் புறா.

“நீ போடா, ஸ்டொக் வருது. நான் பார்த்துட்டு வாரேன். 

வழக்கம் போல சுவாமி படத்தை பார்த்து வணங்கி விட்டு தன் பணியில் அமர்ந்தான் புறா. வினய் இறக்குமதி பொருட்களை சரிபார்த்து முடித்தான். பிறகு வழமைக்கு மாறாக தலைமையக அறையின் கதவு தட்டி, “மே ஐ கம் இன் சார்”

வினயின் குரலை கேட்டு, “ஏன்டா கதவ தட்டிட்டு உள்ள வர?”

“எனக்கும் இங்கிதமெல்லாம் தெரியும் மச்சான். நீங்க இப்போதான் கல்யாணம் பண்ணிருக்கீங்க அப்டி இப்டினு இருப்பீங்க. நானே பாவப்பட்ட  விர்ஜின் பையன் ஏடாகூடாம எதும் பார்த்துட்டா, எதுக்கு பொல்லாப்புனு தான் கதவ தட்டுனேன்” என்று அங்கலாய்த்தான் வினய்.

“இது பெட் ரூம் இல்ல ஆபீஸ் ரூம்டா, அது சரி நீ உண்மையாவே நீ விர்ஜின் பையனா எனக்கு டவுட்டா இருக்கு. எதுக்கும் ஒருக்கா டாக்டர் கிட்ட செக் பண்ணலாமா?” என்று சிலாகித்தான் புறா.

“டேய் டேய்!” பியானா இருக்கிறாள் என்று கண்ணை காண்பித்தான் வினய்.

“இல்ல மச்சி, நீ விர்ஜினா இல்ல பாச்சுலரானு செக் பண்ணலாம்னு சொல்ல வந்தேன்” சிரிப்புதாளாமல் பியானா கோப்புகளை முகத்தில் வைத்தவாறு க்றிஸ்யாவின் மேசைக்கு சென்றாள்.

“என்னடா தங்கச்சி முன்னாடி மானத்த வாங்குற” 

“நீயா வந்து பல்பு வாங்கிக்கிட்ட”

“சரிடா நான் சொல்ல வந்த விஷயமே வேற லேக்கல்ல நியூ ஆர்டர் வந்துருக்கு நாளை மீட்டிங் போடலாமா?” 

“நாளைக்கு வேணாம் டா வெள்ளிக்கிழமை வைச்சுக்கலாம்”

“சரிடா, பியானாட அப்பாவ பத்தி எங்கம்மா கிட்ட சென்னேன் டா. எங்க வீட்டுப்பக்கம் ஒரு முனீஸ்வரர் கோவில் இருக்கு அங்க பூ போட்டு பார்த்தா அவங்க அப்பா இருக்காரு இல்லையானு தெரிஞ்சிரும்னு சொன்னாங்க. பியானாக்கு விருப்பமான போய் பாரு டா”

”இதெல்லாம் அவ நம்புவாளானு தெரியலடா, நீ கொஞ்சம் சொல்லி பாரேன்” 

“சரி டா லேட்டாகி சொல்லுறேன்”

புறஞ்சேயன் வினயிடம் முதல் நாள் நடந்ததை முழுவதுமாய் கூற, “ஏன்டா? புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் வேற வேலையே இல்லயா எப்போ பாரு கைய வெட்டிக்க வேண்டியதான் ச்சே”

“நீயும் ஒரு நாளைக்கு கல்யாணம் பண்ணீட்டு எங்கிட்ட வந்து புலம்புவ டா அப்போ இருக்கு”

“பார்க்கலாம் டா”

வினய் கூறியது போல் மதிய உணவு வேளை முடிந்து தேனீர் வேளையில் புறஞ்சேயனிடம் கூறியதெல்லாம் பியானாவிடம் கூறினான். பியானா புறஞ்சேயனின் முகத்தை பார்த்தாள்.

“நீதான் முடிவு சொல்லனும் உனக்கு விருப்பம்னா அழைச்சிட்டு போவேன்”

“அப்பா கிடைப்பாருன்னா எங்க வேணாலும் போகலாம்” அவள் கண்களில் ஏக்கம். 

கோவிலுக்கு கிளம்பினர். என்ன முடிவு கிடைக்குமோ, தந்தை கிடைப்பதாக இருந்தால் அவர்களின் இல்லறம் சிறக்கும். 

*****