💙இருளை ஈர்க்கும் ஒளி💙
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
💙இருளை ஈர்க்கும் ஒளி 💙
ஈர்ப்பு-10
“பிறக்கும் போதே இறப்பும் முடிவாகிவிட்டது, அது எப்போது என்பது தான் பிரபஞ்ச ரகசியம். அதற்குள் நாம் வாழும் வாழ்க்கையை அர்த்தமானதாய் அமைப்பது தான் நம் கடமை”.
ராஜை அழைத்துச் சென்றது அவன் தந்தையின் நண்பரான ஒரு காவல் அதிகாரி.
ராஜிற்கு ஒன்றும் புரியவில்லை, “எங்க அங்கிள் போறோம்”.
அந்த பதினைந்து வயது (ஆம் அவனுக்கு 15 வயது தன் பொதுவாக 14 வயதில் தான் ஒன்பதாம் வகுப்பு படிப்பர் ஆனால் தன் தந்தையின் தொடர் மாற்றத்தினால் அவனை ஐந்து வயதில் தான் பள்ளியில் சேர்த்தனர்) அந்த சிறுவனைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது அவருக்கு. கடவுளை நிந்தித்தார் இந்த வயதில் எதற்கு அவனுக்கு இந்த கஷ்டம்.
“அப்பாக்கு கொஞ்சம் முடியலை அதான் ஹாஸ்பிட்டல இருக்கார். போய் பாக்கலாமா”.
“என்ன ஆச்சி அங்கிள் அப்பாக்கு”.
“ஒன்னும் இல்லை கண்ணா சின்ன அடி தான்”.
அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை.
*********
ஹாஸ்பிடலில்……
இவன் தாத்தா முத்துசாமி கதறிக் கொண்டிருந்தார். “நான் இருக்கும் போதே உன்ன இப்படிப் பாக்க வைச்சிட்டானே அந்த ஆண்டவன், உனக்கு பதிலா என்னை கூட்டிட்டுப் போய் இருக்கக் கூடாதா”.
தன் தந்தையை பெற்றவரின் கதறளில் அவனுக்குப் புரிந்தது தன் தந்தை இந்த மண்ணுலக வாழ்க்கையை முடித்து விண்ணுலகம் சென்றுவிட்டாரென அதிர்ச்சியில் உறைந்து விட்டவனை கட்டிக்கொண்டு கதறினார் அவன் தாத்தா.
உள்ளே சென்று பார்த்தவனுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தன் கணவனை பிரியமுடியாமல் இறப்பிலும் அவருடன் கைகோர்த்திருந்தார் அவன் அன்னை லட்சுமி.
ஒரே நேரத்தில் தாய் தந்தை இருவரையும் கார் விபத்தில் இழந்து நிராதரவாய் நின்றான். கடைசி காரியங்கள் தன் தாத்தா மற்றும் தந்தையின் நண்பர் கூறிய படி செய்தான்.
அவன் உடன் பயில்பவர்கள் துக்கம் விசாரிக்க வந்தனர் அதில் ஷ்யாம் மற்றும் அருணும் அடக்கம்.
அவன் தாத்தா அவனைத் திருநெல்வேலிக்கு அழைக்க, அவனோ தன் தாய் தந்தை கடைசியாய் இருந்த சென்னையிலேயே இருப்பதாய் கூற அவனைத் தனியாய் விடமுடியாமல் அவரும் இங்கே வந்து சேர்ந்தார்.
அவருக்கொன்று இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று அவர்களுக்கு ஒரு வீட்டை வாங்கினார். மீதி இருந்த பணத்தை ஏற்கனவே சேகரன் தன் மகளுக்காக வைத்திருந்த சேமிப்பு கணக்கில் போட்டார்.
ராஜ் தன் தாய் தந்தை இழந்து ஒரு வாரம் ஆகியிருந்தது, இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை.
ஒரு நாள் ஷ்யாம் மற்றும் அருண் அவனைக் காண வந்தனர் திடீரென அவர்கள் வரவும் இவனுக்கு எதுவும் புரியவில்லை.
ஷ்யாம் அருண் இருவருக்கும் ராஜின் பெற்றோர் செய்தி கேள்விப்பட்டுக் கஷ்டப்பட்டனர் அவர்கள் பெற்றோரிடம் கூறி இறப்பிற்கும் சென்று வந்தனர். தொடர்ந்து ஒரு வாரம் அவன் லீவு என அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது கூறவும் ஒரு மாதிரியானது. சரி அவனைச் சென்று பார்ப்போம் என வந்திருந்தனர்.
“வாங்க”, என அழைத்தான். அதற்கு மேல் என்ன பேசவென தெரியவில்லை.
ஷ்யாம் தான் தயக்கம் நீங்கிப் பேசினான் “எப்போ ஸ்கூல்க்கு வர மாதிரி இருக்க”.
“தெரியலை”.
“இப்படியே வீட்ல இருந்தால் கஷ்டமா தான் இருக்கும் ஸ்கூலுக்கு வா படிப்பில் கவனம் செலுத்து, கொஞ்சம் பெட்டெரா இருக்கும் உங்க அம்மா அப்பாவும் அதைத் தான் ஆசைப்படுவாங்க”.
ம்…..
அவன் தாத்தா இவர்களுக்குச் சாப்பிட எடுத்து வந்தவர் அவர்கள் பேசுவதைப் பார்த்து “ஆமா ராஜ், நானும் அதைத் தான் சொல்லுறேன் கேட்குறீயா நீ ?, நீ ஸ்கூலுக்கு போனா மாறுதலா இருக்கும்”.
இனி தன்னால் நடந்ததை மாற்ற முடியாது. எனவே இவர்கள் கூறுவது போல் படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்தான்.
அவன் மீண்டும் பள்ளி வந்த பின் அவனுடன் ஷ்யாம் அருண் நன்றாகப் பழகினர் மூவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டது. இப்படியே நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் ஷ்யாம் அருண் இருவரும் வணிக நோக்கில் பிபிஏ எடுக்க இவனுக்குச் சிறுவயதிலிருந்தே தன் தந்தையை பார்த்து வளர்ந்ததால் காவல்துறை அதிகாரியாக லட்சியம் கொண்டான் . எனவே பிஏ பொலிடிகல் சயின்ஸ்(political science) எடுத்தான் அது மட்டும் அல்ல யு.பி.ஸ்.சி (UPSC) தேர்வுக்கும் தயாரானான்.
பல சோதனைகளைச் சந்தித்தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தன் தாத்தாவையும் இழந்தான்.
பேரனுக்காக எப்படியோ நான்கரை ஆண்டை கடத்தியவர் அதற்கு மேல் தன் ஒரே மகனைப் பிரிந்திருக்க முடியாமல் அவனிடம் சென்றுவிட்டார்.
நண்பர்கள் என்னும் படகைக் கொண்டு அக்கவலை கடலை கடந்தான். அதன் பின் அவன் முழு கவனமும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதிலேயே இருந்தது.
யு.பி.ஸ்.சி(Upsc) தேர்வுக்குக் குறைந்தபட்ச வயது 21. தன் இளங்கலை படிப்பை முடித்து இரண்டு மாதத்தில் யு.பி.ஸ்.சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்று வருடக் கடுமையான உழைப்பால் முதல் தடவையே தேர்ச்சி பெற்று ஐ.பி.ஸ்(IPS) தேர்ந்தெடுத்து, தன் அடிப்படை கோர்ஸ் 3 மாதங்கள் (LBSNAA) முசோரியில் முடித்தான். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நேஷனல் போலீஸ் அகடமியில் (SVPNPA) 11 மாதம் முதல் கட்டப் பயிற்சியை முடித்த பிறகு, அவனது இரண்டாம் கட்டப் பயிற்சியாய் அவன் கெடரில் உள்ள சென்னையில் 6 மாதம் மாவட்ட செயல்முறை பயிற்சிக்காக வந்துள்ளான். இதில் செயல்முறை பயிற்சியாய் சில கேஸ்களையும் பார்க்கச் சொல்வார். ஆறு மாதப் பயிற்சி முடியவும் பொதுவாக ஏ.சி.பி பதவி கிடைக்கும். அவனின் கீழ் சில காவல் நிலையங்கள் விடப்படும்.
அவன் பயிற்சியிலிருந்த நாட்களில் நண்பர்களிடம் சரியாய் பேச முடியவில்லை. பெரும்பாலும் நலம் விசாரிப்புகள் மட்டுமே இருக்கும்.
(இது தான் நண்பர்களே ராஜின் கதை)
நண்பர்கள் ராஜ் வீட்டில் பேசும் போதே அவன் முன்பே மார்பிங் போட்டோஸ் தயார் செய்யப் போவதுப் பற்றி வர்ஷாவிடம் கூறியதால் அவன் தொலைப்பேசி ஹாக் செய்யும் முடிவிலிருந்தனர்.
அருணுக்கு டெக்னாலஜி ரொம்ப பிடிக்கும் பல கோர்ஸ் முடித்து இருக்கிறான் அதிலும் ஹாக்கிங் மேல் தனி பிரியம், இவனின் இந்த திறமையைப் பயன்படுத்தி ரவியின் பேசியை ஹாக் செய்தனர் முன்பே ஏதேனும் செய்தால் ஆள் தப்பி விடுவான் எனக் காபி ஷாப் வந்த பின் அவன் பேசியை ஹாக் செய்து அனைத்து தரவுகளையும் அழிக்கலாம் என முடிவெடுத்து அதன் படி நடந்தனர்.
ரவி அவன் தொலைப்பேசியைப் பார்த்தபோது அதில் எந்த போட்டோஸ்சும் இல்லை போட்டோஸ் மட்டும் அல்ல எந்த தரவும் இல்லை. அவன் தொலைப்பேசியை வாங்கும் போது எப்படி இருந்ததோ அதே போல் காலியாய் பல்லைக் காட்டியது.
ஒன்றும் புரியாமல் பேசியை எனக்கென்னவோ செய்து பார்த்தான் ஆனால் அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ‘ஐயோ! அப்போவே அந்த கட்டைல போறவன் சிஸ்டம்ல ஏதோ பேக்கப் எடுக்கச் சொன்னானே கேட்டேனா?, போய்ட்டு வந்து பாத்துக்கலாம்னு சொல்லிட்டேனே’, எனத் தன்னையே மனதில் தாளித்தான்.
“என்ன சார் இன்னும் உங்களுக்கு பத்து லட்சம் வேண்டுமா”, என ஏளனமாய் கேட்டவனைப் பார்த்தான் ரவி.
“யார் நீங்க என் பேசியை என்ன பண்ணீங்க” மரியாதை தானாய் வந்தது.
“ஐயோ சார்! நான் என்ன பண்ணேன் இப்போத்தானே நான் உள்ள வந்தேன். உங்க தொலைப்பேசியைத் தொடக் கூட இல்லையே அப்புறம் எப்படி”.
அது தானே இவனுக்கும் மண்டை காய்கிறது, இவர்களின் பொடி வைத்த பேச்சு அது இவர்களின் செயல் தான் எனப் பறைசாற்ற ஆனால் தன் தொலைப்பேசி தன் கையில் தான் இருந்தது அப்புறம் எப்படி எனக் குழம்பினேன். ‘இதுக்கு தான் எனக்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னு சொன்னேன் அவன் டெக்னாலஜி சம்பந்தமோ நான் பாத்துக்குறேனு சொன்னான் இப்போ என்ன ஆச்சினு புரியலையே’, என மீண்டும் அந்த கட்டையில் போறவனைத் திட்டித்தீர்த்தான்.
(பையபுள்ளைக்கு டெக்னாலஜி சரியா தெரியல போல)
அதன் பின் ராஜ் தான் யாரென்பதைக் கூறவும் தப்ப நினைக்க, அதன் பின் தான் ராஜ் அங்கு வந்த இரு போலீசாரை அழைத்து அவனைக் கைது செய்து மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் படி கூறியது.
இனி…..
ராஜ் ஷ்யாமிடம், “கவலைப்படாதே மச்சி உனக்கும் சேர்த்து அவனை நான் ஸ்டேஷன்ல போய் கவனிச்சிக்கிறேன்”.
ஷ்யாம் சிறியதாய் புன்னகைத்தான்.
அனைவரும் அங்கிருந்து கிளம்ப, வர்ஷா ராஜிற்கு நன்றி தெரிவித்தாள்.
ராஜ், “அதுலாம் எதுவும் வேண்டாம் இனி ஜாக்கிரதையா இரு போதும்”.
ம்…கண்டிப்போ.
நண்பர்கள் அவரவர் வண்டியில் கிளம்பினார்.
அனைவரும் வீடு நோக்கிச் செல்ல ராஜ் மட்டும் ஸ்டேஷன் நோக்கி தன் வண்டியில் சென்றான்.
ஸ்படஷனில்……
நண்பர்களுக்கு அவன் வேறு எங்கணும் பேக்கப் வைத்திருப்பானோ என்ற சந்தேகம் இருந்தது.
அதைத் தெரிந்து கொள்ள ரவியை வெளுத்து வாங்கினான் ராஜ். அடிதாங்க முடியாமல் வேறு பேக்கப் இல்லை என்ற உண்மையைக் கூறினான்.
இப்போது தான் நிம்மதியானான் அவன். நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.
(நம்பலைட்டிங்ஸ்டோர்ஸ் ஆறு பேரோடமுழுமையாகிடுச்சுஇனி இவங்களோடநட்பு, பாசம் மற்றும் நேசம் பத்தி தான்பாக்கப்போறோம்…)