💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு -13
“உன்னை முதல் முதலாய் ரசித்த போது எனக்குத் தெரியவில்லை…..
வாழ்க்கை முழுவதும் உன்னை மட்டுமே நான் விரும்பி ரசிக்கப் போகிறேன் என்று….”
கல்லூரி தேர்வின் முடிவுகள் வந்தது வழமை போல் நம்ப படிப்ஸ்கள் நல்ல பெர்ஸன்ட் எடுத்தனர். ஷ்யாம் மற்றும் அருண் தங்கள் படிப்பை முடித்திருக்க, பெண்கள் தங்கள் இறுதி ஆண்டிற்குள் கால் பதித்தனர்.
கே. ஆர் குழுமம் (ஷ்யாமின் ஆபீஸ்)…..
கிருஷ்ணமூர்த்தியின் சிம்ம குரல் அந்த அறையை நிரப்பிக்கொண்டிருந்தது. அந்த தொழில் ஆரம்பமான நாள் முதல் இப்போது வரை எவ்வாறு செல்கிறது, அதற்கு முக்கிய பங்களித்த போர்டு அஃப் டைரக்டர்ஸ் (chairman, MD, executive director, non executive director,CEO, CFO….) தொழிலாளர்கள், அவர்களைத் தொடர்ந்து அவர்கள் தலைமுறையும் அங்கே வேலை செய்துகொண்டிருப்பது போன்று அனைத்தையும் பேசியவர் தங்கள் தொழில் முன்னேற உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பின் ஷ்யாமை பார்க்க, அவரின் பார்வையை உணர்ந்தவன் எழுந்து அவர் அருகே வந்தான், “ஷ்யாம் நமக்கு புதியவர் இல்லை ஐந்து வருடமாய் விடுமுறைகளில் நம் நிறுவனத்துக்கு அவர் தொழில் பயில வந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான்”.
“இனி இவர் தான் நம் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர்”, என்றவுடன் அங்கே கைத்தட்டல் எழும்பியது அது அடங்கும் வரை அமைதி காத்தவர், “எனக்கு நீங்கள் கொடுத்த அதே ஒத்துழைப்பை அவருக்கும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி”.
அவர் உரை முடியவும் தன் மகனைப் பேச அழைத்தார்.
ஒலிவாங்கி முன் வந்து நின்றவனின் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது அழகாய் ஜெல் கொண்டு செட் செய்த தலைமுடி, நீல நிற ரேமோண்ட் கோட் சூட், கால்களில் ப்ரோன் நிற ஷூஸ். இவை அவன் கம்பீரத்தை அதிகப்படுத்தியது.
அவனின் தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களைக் கலைத்தது அவன் குரல், தன் தந்தையின் அதே சிம்ம குரல். “அனைவருக்கும் வணக்கம், அப்பா சொன்னது போல் உங்கள் யாருக்கும் நான் புதியவனில்லை, எனக்கும் நீங்கள் புதியவர்களில்லை ஆனால் எனக்குக் கொடுக்கப் பட்ட பதவி புதியது அதை நான் சிறப்பாய் நடத்த நீங்க உதவுவீர்கள் என்று நம்புகிறேன். நான் பொறுப்பேற்றதால் என் தந்தை வியாபாரத்தை விட்டு விலகி விடவில்லை அவர் தான் நம் நிறுவனத்தின் சேர்மன். அவ்வப்போது வந்து நம் அனைவரையும் வழிநடத்துவார். நம் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நிச்சயம் என் பங்கு பெரிதாய் இருக்கும் என்ற உறுதியோடும் என் தாய் தந்தையின் ஆசியோடும், உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இன்று என் முதல் நாள் பணியைப் துவங்கவிருக்கிறேன் நன்றி வணக்கம்”.
அவன் பேசி முடிக்கவும் சபையோரின் கைத்தட்டல் அடங்கச் சிறிது நேரம் ஆனது.
நாம் முன்பே பார்த்த மாதிரி இவர்கள் மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை, சோம்பு, மிளகு போன்று சமையலுக்கு தேவையான அணைத்து மசாலாப் பொருட்களையும் விளைவித்து கே. ஆர் மசாலா என்ற பெயரில் ஏற்றுமதி செய்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டீ மற்றும் காபி தோட்டங்களும் உண்டு அவைகளையும் கே. ஆர் பிராண்ட் என்ற பெயரில் ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்தியாவிலிருந்து மசாலா ஏற்றுமதி செய்வது இந்தியாவில் மிகவும் லாபகரமான வணிகங்களில் ஒன்றாகும்.
இந்திய நிறுவனம் உலகின் மிளகில் 30%, உலகின் இஞ்சியில் 36% மற்றும் மஞ்சளில் 90% பெருமளவில் உற்பத்தி செய்கிறது.
மசாலாப் பொருட்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கேரளா மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது, ஏனெனில் இந்த மாநிலம் ஏலக்காய் 55% மற்றும் இஞ்சி 25% உற்பத்தி செய்கிறது. மிளகாய் மற்றும் மஞ்சள் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது, மொத்த உற்பத்தியில் 50% மற்றும் 58% பங்களிக்கிறது. ராஜஸ்தான் கொத்தமல்லி, சீரகம் மற்றும் வெந்தயத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது மற்றும் புள்ளிவிவரங்கள் முறையே 3%, 56% மற்றும் 87% ஆகும்.
இவை அணைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு என்று விளைச்சல் நிலங்கள் உண்டு.
ஊட்டி, கொடைக்கானல், கேரளா போன்ற மலைப் பிரதேசங்களில் காபி தோட்டம், டீ எஸ்டெட்களும் உண்டு.
இவை அனைத்தையும் பார்க்க அந்தந்த இடங்களில் நம்பிக்கையான நபர்கள் இருக்கிறார்கள் அது இல்லாமல் இவர்களும் அவ்வப்போது சென்று மேற்பார்வை பார்ப்பர்.
அவனை எம்.டி அறைக்கு அழைத்துச் சென்று அந்த சைரில் அமர்த்தினர். இறைவனை வேண்டி அந்த இருக்கையில் அவன் அமர்ந்த பின் வாழ்த்து கூறி விடைபெற்றனர் அவன் தாய் தந்தை.
தன் தொலைப்பேசி சத்தம் கொடுக்கவும் எடுத்துப் பார்த்தான். தங்கள் லைட்டிங் ஸ்டார்ஸ் குரூப்பில் வந்த வாழ்த்து செய்திகள் தான் அது.
அருண் : பெஸ்ட் விஷேஸ் மச்சா…
வர்ஷு: ஆல் தே பெஸ்ட் அண்ணா.
ராஜ்: கங்கிராஸ் மச்சி கலக்கு.
மித்து: பெஸ்ட் ஒப் லக் அண்ணா.
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டே வந்தவனின் முகம் சோகத்தை அப்பிக்கொண்டது ஏனென்றால் அவன் எதிர்பார்த்த வாழ்த்தை காணவில்லை.
இன்டெர்க்காம் ஒலிக்க, அதை எடுத்து தன் கம்பீர குரலில், “யா ஷ்யாம் ஹியர்” என்றான்.
அந்த பக்கம், “சார் உங்களுக்கு ஒரு கொரியர் வந்து இருக்கு, உள்ள அனுப்பவா நீங்க தான். சைன் பண்ணனும்னு சொல்லறாங்க”.
“சரி அனுப்புங்க”. என்றுவிட்டு யார் அது கொரியர்லாம் அனுப்பினது, என்று யோசித்து கொண்டிருந்தவனைக் கலைத்தது கதவு தட்டப்படும் ஒலி.
“எஸ் கமின்”
“சார் உங்களுக்கு இந்த பொக்கே டைரக்ட்டா டெலிவரி பண்ண சொன்னாங்க அதான் உங்ககிட்ட சைன் வாங்கி கொடுக்கலாம்னு”, எனத் தயங்கித் தயங்கிப் பேசினார் அதைக் கொடுக்க வந்தவர்.
அந்த பெரிய நிறுவனத்தினுள் நுழைந்தது முதல் எத்தனை செக்கிங், அனைத்தையும் முடித்து வந்தால், தான் காண வேண்டியவர் கம்பெனி எம்.டி என்றவுடன் சிறு நடுக்கம் தான்.
“கொடுங்க”,என வாங்கிய அந்த வெள்ளைக் காகிதம் சுற்றிய இளைஞ்சிவப்பு ரோஜாக்கள் அவளை நினைவு படுத்த ஆவலாக அதிலிருந்த அட்டையை பிரித்துப் பார்த்தான்.
அவன் நினைத்தது சரியே அது அவள் அனுப்பியது தான்.
அந்த கார்டில் இருந்த செய்தி பின்வருமாறு,
வாழ்த்துக்கள் ஷ்யாம்
“தரம், நேர்மை, வாக்குத்தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைப்பிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்“
(எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா நம்பப் பதிவுகளின் முகப்பில் நான் எழுதும் என் கிறுக்கல்கள் தான்)
உங்களிடம் இது மூன்றும் இருக்கிறது அதனால் கண்டிப்பாக உங்கள் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்க போகிறது. வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
தியா
அந்த ரோஜாவை தீண்டியவன் இதழில் நிலைத்தது குறுநகை.
“சார்”, என எதிரே இருப்பவர் அழைக்கவும் தன் நினைவு கலைந்து, அவர் கேட்ட இடத்தில் சைன் போட்டு அவருக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டான்.
“அதுயெல்லாம் எதுவும் வேணாம் சார்”.
“பரவால்ல சொல்லுங்க எதாவது உதவி வேணுமா”.
அவர் தயங்கவும், அவன் அவரை சொல்லுமாறு ஊக்க படுத்தினான்.
அவர் மெல்ல தன் மகள் படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதாகவும் எதாவது வேலை கிடைக்குமா என்றும் கேட்டார்.
அவன் இருந்த மகிழ்ச்சிக்கு உடனே அவர் மகளை வந்து பார்க்க சொன்னான்.
“எங்க கம்பனி வேலைக்கு வேண்டிய தகுதி அவங்களுக்கு இருந்தா நிச்சயமா சேத்துக்குறேன்”.
“ரொம்ப நன்றி சார்”.
“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் இதைச் சரியான நேரத்துல என் கைல சேர்த்ததுக்கு”.
“அது என் வேலை சார், சரி வரேன் சார்”.
“சரி”.
அவர் போகவும் அந்த பொக்கேவை கையிலெடுத்து பொக்கேவிலிருந்த இளஞ்சிவப்பு ரோஜாக்களை மென்மையாய் வருடினான், அவனுக்கு அன்று அலைகளில் விளையாடிய தியாவின் தோற்றத்தை நினைவு படுத்தியது அந்த ரோஜாக்கள், கண்மூடி அந்த நினைவில் லயித்திருந்தான்.
ச்ச…அன்னைக்கு என்ன என்னாலேயே கண்ட்ரோல் பண்ணமுடியல நானும் தான் என்ன பண்ண அவ என்னை ரொம்ப வீக் ஆக்குகிறாள், உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லடா ஷ்யாம் அவ பாசமலர் வேற கூடயே இருந்தான். நல்ல வேலை அவன் அண்ணங்கார என்னை கவனிக்கல்ல இல்லை உள்ள தூக்கிப் போட்டிருப்பான் அந்த ஐபிஸ் ஆபீஸ்சர் என்று வாய்விட்டே புலம்பினான். “நான் யாரையும் இப்படி சைட்டடிச்சது இல்லை”, எனத் தன் பின்னந்தலையை அழுத்தி கோதியவன்…. போதும் தியா கொஞ்சம் நேரம் என்னை வேல செய்ய விடு என மானசிகமாய் அவளிடம் பேசிவிட்டு தன் வேளையில் கவனமானான்.
அவளை அவன் ரசிப்பது எதனால்? இதோ இப்போது கூட அவள் வாழ்த்து வரவில்லை என்றதும் கவலை கொண்டவன் அவள் அனுப்பிய பொக்கே பார்த்து மகிழ்தானே…. அதை ஒழுங்காய் ஆராய்ந்திருந்தால் அவன் மனது அவனுக்குப் புரிந்திருக்கும்.
அவளை எப்போது அவன் முதல் முதலாய் பார்த்தானோ அப்போதிலிருந்தே அவள் மேல் ஒரு வித ஈர்ப்பு வந்திருந்தது. பிறகு தான் அவளிடம் பழகும் வாய்ப்பு அமைந்தது. அந்த ஈர்ப்பு மட்டும் அவனுக்கு மாறவே இல்லை அதை அவன் ஏன் என்று ஆராய முற்படவுமில்லை.
அவள் தன்னை நட்பாய் பார்க்கத் தான் இவ்வாறு பார்ப்பது தவறோ எனப் பல தடவை சிந்தித்திருக்கிறான் ஆனால் அதை மாற்ற அவன் செய்த முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராய் போனது தான் பரிதாபம். வயது கோளாறு நாள் ஆகஆக சரி ஆகிவிடும் என்றே நம்பினான். எப்போது அவன் உள்ளம் அவனுக்குப் புரியும்? எப்போது அவள் அவனுக்கானவள் என்பதை உணர்வான் ? இந்த கேள்விகளுக்கான பதில் காலத்திடம் தான் உள்ளது.
போலீஸ் ஸ்டேஷனில்……
அங்கே ராஜை நினைத்து ஷ்யாம் புலம்பியதை விட அதிகமாக புலம்பிக்கொண்டிருந்தான் ராஜ்.
அன்று இரவு ராஜின் மூடியிருந்த கண்ணுக்குள் வந்த உருவம் வர்ஷு தான்.
அவள் ஒன்றும் அவனுக்கு புதியவளில்லை. அவன் பள்ளிப் பருவத்தில் ஷ்யாம் வீட்டிற்குச் சென்றிருக்கிறான், அப்போது அவனுக்கு 17 வயது வர்ஷுக்கு 13 வயது. அவன் கண்ணிற்கு அவள் சிறுமியாகத் தான் தெரிந்தாள். அதன் பின் கல்லூரி படிக்கும் போது தான் யு.பி.ஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராவதிலேயே குறியாய் இருந்தானே அவளை அவன் பார்க்கவே இல்லை ஷ்யாம் அவள் பற்றி பேசியத்தோடுச் சரி.
அன்று காபி ஷாப்பில் தான் பல வருடம் கழித்து குமரியாய் அவளைக் கண்டான். காரியத்தில் கருத்தாய் இருந்ததினால் அவள் இவனைக் கவரவில்லை, அப்படி தான் இவன் நினைத்தான். ஆம் நினைக்க மட்டுமே செய்தான் அது பொய் என்பது அவனுக்கு அன்றிரவு வீடு சென்ற பின் தான் தெரிந்தது.
உறங்கச் சென்றவனின் மூடிய கண்முன் அவள் தோற்றம் வரவும் திடுக்கிட்டான்.
அவள் தன் நண்பனின் தங்கை, ஒரு இக்கட்டில் அவளுக்கு உதவினோம் அன்று அவள் காரியமாய் திரிந்ததினால் அவள் உருவம் தோன்றி இருக்கிறது வேறு ஒன்றும் இல்லை, என மிகச் சரியாய்(!!?) தவறாகக் கணித்தான். இவை அனைத்தும் நேற்று பீச் சென்ற போது யோசித்தது. அந்த யோசனையில் அவளை அவன் முழுவதும் தவிர்த்தான்.
தன் நண்பனுக்கு இப்படியெல்லாம் தான் யோசிக்கிறோம் என்று தெரிந்தால் என்ன நினைப்பான் எனப் புலம்பினான்.
(ச்ச…. படிப்பு, வேலைனா கெத்தா இருக்குறவனுங்க ஏன் பொண்ணுங்க விடயத்துல இப்படி மக்கா இருக்கானுங்க…. எப்படிடா உங்களுக்குலாம் காதல், கல்யாணம், குழந்தை குட்டிலாம் வரும்…ம்… உங்களை வெச்சிட்டு என்ன பண்ண…)
இவர்களின் எண்ணங்களின் நாயகிகளோ கல்லூரி கேன்டீன்யில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆமா தியா அண்ணாக்கு அனுப்பின பொக்கேவ அவர் பாத்துட்டாங்களா.
ம்…இப்போ தான் தேங்க்ஸ் மெசேஜ் வந்துச்சி.
உனக்கு ஏன் பொக்கே அனுப்பணும்னு தோணுச்சு.
அவர்க்கு இது ரொம்ப முக்கிய நாள், ஏதாவது ப்ரெசென்ட் பண்ணலாம்னு தோணுச்சு என்ன பண்ணலாம்னு ஐடியாவே இல்லை. அப்போ பொக்கே ஷாப் கண்ணில் பட்டது, பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பிடிச்சிச்சி அதான் உடனே முடிவு பண்ணி அவர் கைக்கு போறா மாதிரி பண்ணிட்டேன் அவரும் ஹாப்பி.
ஷ்யாம் வீடு……
மாலை ஷ்யாம் வீட்டில் அமர்ந்து ஆஃபிஸிலிருந்து எடுத்து வந்திருந்த கோப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கே வந்தாள் வர்ஷு. இப்போது தான் கொஞ்சக் கொஞ்சமாக அனைத்தையும் மறக்க முயன்று கொண்டிருந்தாள். அதற்கு உதவுவது போல் ஷ்யாமும் தன் தங்கையுடன் தினமும் சிறிது நேரம் பேசுவதைப் பழக்கமாக்கி இருந்தான்.
அதைப் போல் இன்றும் அண்ணனும் தங்கையும் மாடியில் இருக்கும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.
வர்ஷு தங்கள் மூவருக்குள் கல்லூரியில் நடந்த உரையாடல்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்.
தியா உனக்கு அனுப்பின பொக்கே எப்படி இருதுச்சி.
செமயா இருந்துச்சி வர்ஷுமா.
அவ எப்பவும் இப்படி தான் எல்லார்க்கும் தனியா சிறப்பா பண்ணி ஸ்கோர் பண்ணிறாள்.
இந்த வாக்கியத்தில் ஷ்யாமின் முகம் சோர்ந்து விட்டது. உண்மை தானே அவள் அனைவரிடமும் இப்படி தான் இருப்பாள். நான் ஒன்னும் ஸ்பெஷல் இல்லையே.
(அவளுக்கு நீ ஏன் ஸ்பெஷல்லா இருக்ககும்னு நினைக்கிற கொஞ்சம் யோசிச்சி பாரேன்)
அப்புறம் என்ன ஆச்சி தெரியுமா மித்து தியாகிட்ட ஒரு கேள்வி கேட்டா.
அவன் அமைதியாய் இருப்பதை பார்த்தவள், அண்ணா…. என அழைக்க.
ம்….
மித்து என்ன கேட்டனு கேளு.
என்ன கேட்டா.
தியா அருண் அண்ணாவை, அப்புறம் அந்த போலீஸ் அவரலாம் என்னனு கூப்பிடுவா.
இவளோ வளர்ந்தும் இன்னும் உனக்கு ராஜ் மேல இருக்க கோவம் போகலையா. அது என்ன அந்த போலீஸ் ம்…
அண்ணா இப்போ எதுக்கு அந்த கதை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு.
அண்ணானு கூப்டுவா, இதுலாம் ஒரு கேள்வியா.
ஐயோ அண்ணா! உன்ன ஏன் அப்படி கூப்பிடலன்றது தான் அந்த கேள்வி.
சற்று முன் அவனுக்கு வந்த சோர்வு எங்கோ காணாமல் போனது. மிகவும் ஆவலாய் “அதுக்கு தியா என்ன சொன்னா?”. எனக் கேட்டான்.
( தியா என்ன சொல்லிருப்பா? அதை அடுத்த எபில பாக்கலாம்…இப்போ…பை….பை..)