💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு -15
வாழ்க்கை ஒரு புத்தகம்
ஒவ்வொரு நாளும் புது பக்கங்கள்….
அடுத்தப் பக்கம் நமக்காக என்ன திருப்பம் வைத்துள்ளதோ….
அது முன்பே தெரிந்தால் சுவாரஸ்யம் இருக்காது…
அதன் போக்கில் தெரிந்து அதற்கெற்ப வாழப் பழகிக்கொண்டால் என்றும் நலமே….
தியாக்கு அவன் இன்னும் தன்னை தனியாளாகவே நினைத்திருக்கிறானோ என்ற எண்ணம். இப்படி குடும்ப சூழல் இல்லாமல் இருப்பதால் தனக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அவனுள் இருப்பதாய் தோன்ற அதை கேட்டும் விட்டாள்.
தன் தங்கை இவ்வாறு கேட்பாள் என நினைக்காதவன் அது உண்மை என்பதால் அமைதியாய் அவளை பார்த்திருந்தான்.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் ராஜைப் போன்றோருக்குக் கிடைக்கும் சொந்தத்தைப் பொக்கிஷமாய் பாதுகாப்பர் அது பலருக்குப் புரிவதில்லை.
“அப்போ எங்கள நீ உன் சொந்தமா நினைக்கல இல்லண்ணா. அம்மா அப்பா தங்கச்சினு சொல்றதெல்லாம் சும்மா வாய் வார்த்தையா”.
“இல்லை தியாம்மா நான் அப்படி தான் நினைக்கிறன். ஆனா எனக்கு பொண்ணு குடுக்குறவங்க அதை புரிஞ்சிப்பாங்களா”.
அவன் சொல்ல வருவது அவளுக்குப் புரிந்தது. ‘உண்மை தானே இவர்களுக்குள் இருக்கும் இந்த பாசப் பிணைப்பை மற்றவர் புரிந்து கொள்வார்களா’.
அந்த இடத்தில் அமைதி சூழ்ந்திருந்தது.
‘ச்ச…இவன் தன் உடன்பிறந்தவனாகவே இருந்திருக்கக் கூடாதா…’,என அவள் மனம் குமுறியது.
அவர்களை அழைக்க வந்த லட்சுமி இவை அனைத்தையும் கேட்டு விட்டுச் சென்றதை இவர்கள் அறியமாட்டார்கள்.
லட்சுமியின் மனம் பாரமானது ராஜ் கூறுவது உண்மை தானே. ‘என்னதான் இவர்கள் ஒரு குடும்பம், எனக் கூறிக்கொண்டாலும் ராஜுக்கு மனைவியாய் வரப் போகிற பெண்ணும் அவள் வீட்டைச் சேர்ந்தவர்களும் இதைப் புரிந்துகொள்வது சாத்தியமா’.
அவரின் மனப் பாரத்தை ராமசந்திரனிடம் இறக்கினார்.
அவர் அதற்கு ஒரு வழி கூறினார். லட்சுமிக்கும் அதில் உடன்பாடு இருந்தது.
தியாவின் அன்னை கேட்டுவிட்டுச் சென்றது ஒரு பாதி தான். மறுபாதி பின்வருமாறு.
“அண்ணா நீ யாரையாச்சி லவ் பண்றியா”.
அவள் இவ்வாறு கேட்கவும் என்ன சொல்வதென்ன தெரியாமல் அமைதிக்காத்தான்.
அந்த அமைதியே அவன் மனதைப் படம்பிடித்துக் காட்டியது.
“யார் அண்ணா அது?”
“வர்ஷா…”
“வர்ஷுவா…”
“ம்…. ஆமா “, அவன் உணர்த்த அனைத்தும் தன் தங்கையிடம் கூறினான்.
“ஷ்யாம் என்ன நினைப்பான்? அவர்கள் பெரிய இடம் அவங்க இதுக்கு ஒத்துப்பாங்களா? அதுலாம் விடு வர்ஷா முதல ஒத்துக்குவாளா? இப்படி பல கேள்விகள் எனக்குள்ள”.
“அவங்க பெரிய இடம் தான் ஆனா அவங்கள பத்தி உனக்குத் தெரியாதா அண்ணா. அப்புறம் ஷ்யாம்…. அவர் நிச்சயம் இதுக்கு சந்தோசமா சம்மதிப்பார்”.
“எப்படி சொல்ற”.
“அவரே சொன்னா உனக்கு ஓகேவா”.
உடனே ஷ்யாமிற்கு கால் செய்து வரச் சொன்னாள்.
“என்ன தியா இது, எதுக்கு அவனைக் கூப்பிட்ட”.
“நீ சும்மா இரு அண்ணா இன்னைக்கே இந்த பிரச்சனைய முடிச்சிடலாம்”.
சிறிது நேரத்தில் வந்தவன் ராஜைப் பார்த்து, “என்னடா இப்போ யார் காதலை சேர்க்கணுமாம் உன் தங்கச்சிக்கு”. என முன்பு மித்து அருண் விடயமாய் பேசியதை நினைவில் வைத்து விளையாட்டாய் கேட்க.
அது அவன் விடயம் என்பதால் வாயை திறக்கவில்லை அவன்.
அவன் வாளாவிருப்பதைப் பார்த்து தன் விளையாட்டைக் கைவிட்டு என்ன பிரச்சனை என தியாவிடம் விசாரிக்க.
“சொல்றேன் அதுக்கு முன்ன ஒரு வாக்கு கொடுங்க”.
“என்ன வாக்கு”.
“நான் சொல்ற விடயம் உங்களுக்கு ஓகேவோ இல்லையோ அண்ணா கூட எப்பவும் போலத் தான் இருக்கணும்”.
“அப்போ விடயம் உன் அண்ணனைப் பற்றித் தான்”.
தியா தலையசைத்து ஆமோதித்தாள்.
நண்பனின் முகத்தைப் பார்த்தான். அவன் அமைதியைத் துணையாய் கொண்டிருந்தான்.
“விடயத்தை சொல்லு”, என தியாவைக் கேட்டான்.
“நீங்க இன்னும் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே”.
“இங்க பார் தியா ராஜை என்னால் வெறுக்க முடியாது நீ சொல்வது எனக்கு பிடித்தமோ இல்லையோ அவனிடம் எப்போதும் போல் தான் இருப்பேன் ஓகே வா. இப்போ சொல்லு”.
அவன் பதிலில் திருப்தியடைந்தவளாக ராஜ் வர்ஷு விரும்புவதைக் கூறினாள்.
ஷ்யாம் தன் நண்பனைப் பார்க்க அவன் என்ன கூறப் போகிறானோ என்ற தவிப்பு அதில் தெரிந்தது.
மெல்ல அவன் அருகே சென்றான் “நீ இப்படி பண்ணுவேன்னு நான் கனவில் கூட நினைத்து பார்க்கலடா எவளோ தைரியம் உனக்கு”
அவ்வளவு தான் ராஜின் அடிபட்ட பார்வை தியாவைச் சந்தித்தது அதில் தியாவின் கண்கள் கலங்கி விட்டது.
“என்கிட்ட தானே நீ இதை முதலில் சொல்லியிருக்கணும். உன் தங்கச்சிகிட்ட சொல்லிட பாத்தியா”, என்றவுடன் ராஜ் தியா இருவரும் ஒருசேர ஷ்யாமை பார்க்க.
“என்ன பாக்குறீங்க, வர்ஷு பத்தி ரொம்ப கவலையா இருந்துச்சுடா இப்படி ஏமாந்துருக்காளே எப்படி தான் அவ கல்யாண வாழ்க்கையை எதிர்கொள்ள போறளோ. அவளுக்கு வருபவன் நல்லவனா இருந்த ஓகே இல்லனா என்ன பண்ணறது. நாம பார்த்துத் தான் கொடுப்போம் இருந்தாலும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குனு தெரியுமா”.
“இப்போ தான் நிம்மதியா இருக்கு உன்னைவிட நல்ல மாப்பிள்ளை யார் கிடைப்பா”, என அவனைக் கட்டிக்கொண்டான்.
அவன் இன்னமும் நடப்பதை ஒத்துக்கொள்ள முடியாமல் நிற்க.
“என்னடா நான் அப்படிப் பேசின உடனே ரொம்ப பயந்துட்டியா. இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடி இருப்பேன் உன் தங்கச்சி கண்ணில் தண்ணி வந்துடுச்சி அதான் நிறுத்திட்டேன்”.
“நான் ஒன்னும் அழலையே…”
“ஆமா ஆமா உன் கண்ணுல தூசி விழுத்துடுச்சி இல்ல தியா”.
“பாரு அண்ணா”, என தன் அண்ணனைத் துணைக்கு இழுத்தாள்.
“டேய் ஏசிபி தங்கச்சிகிட்டயே வாலாட்றியா உள்ள தூக்கிப் போற்றுவேன்”.
“நான் உன் மச்சான்டா என்னை உள்ள போட்டா என் தங்கச்சிக்குப் பதில் சொல்லணும்”.
“ஐயோ இது ஒன்னு மாட்டுக்குச்சா உனக்கு இனி இத வைத்தே ஓட்டுவல”.
“கண்டிப்பா மச்சி அதுல உனக்கு சந்தேகமே வேணாம்”.
பின் விளையாட்டை கைவிட்டு “ஆனா அவ மனசு மாற நீ கொஞ்சம் கஷ்ட படனும் மச்சி”.
“பாத்துக்கலாம் விடுடா, மச்சா துணை இருந்தா ஈஸியா மலை ஏறிடலாம்”.
“முத என் தங்கச்சி மலை ஏறாம பாத்துக்கோ. அப்புறம் என்கூட ஜோடிப் போடு மலை ஏறலாம்”.
இப்படியாக ஒருவர் மற்றவரை வார என இனிதாய் பொழுது கழிந்தது.
பிறகு ஒரு நாள் ராஜிற்குச் சந்திரனிடமிருந்து ஒரு இடத்திற்கு வரச்சொல்லி கால் வந்தது. அவனும் ஏதோ அவசரம் என சென்று பார்க்க அங்கே அனைவரும் இருந்தனர். ஒன்றும் புரியாமல் சந்திரனிடம் சென்றான்.
லைட்டிங் ஸ்டார்ஸ் மற்றும் அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் கூடியிருந்த இடம் சார்-பதிவாளர் அலுவலகம்(registrar office).
“என்னடா இங்க வரச் சொல்லிருக்காக என்னவா இருக்கும்”, என அருண் வினவ.
“உனக்கும் மித்துகும் இப்போவே கல்யாணம் பண்ணலாம்னு பிளான்”.
“அப்படியாடா, முன்னையே சொல்லக் கூடாது”.
“ஏன் சொன்ன என்ன பண்ணிருப்ப”.
“டேய் மாப்பிள்ளையா லக்ஷனாமா ரெடியாக வேணாமா”.
“அதுலாம் இதுவே போதுமாம்”.
“அது எப்படி டா மாப்பிள்ளை கெட்டப் போடத் தான் கல்யாணம் பண்ண முடியும்”.
“கல்யாணத்துக்கு கெட்டப் முக்கியமா தாலி முக்கியமா”.
“கரெக்டா அதையாச்சி எடுத்துட்டு வந்திங்களா”.
“ஏன்டா ஒரு பேச்சிக்குச் சொன்ன உண்மையாவே ரெடி ஆகிட்ட”.
“எப்போ சான்ஸ் கிடைச்சாலும் ரெடியா இருக்கனும் மச்சி”.
“ரைட்டு விடு”.
“இப்போ என்ன விடயமா வந்திருக்கோன்னு சொல்லு”.
‘இன்னும் கொஞ்ச நேரமான உன்னைக்கே தெரிய போகுது”.
ஷ்யாம் சொன்ன சிறிது நேரம் முடித்தது அங்கே வந்த வேலை இனிதே முடிந்தது. பின் அனைவரும் வீடு சென்று விருந்துண்டு கழித்தனர்.
தியாக்கு சந்தோஷம் தாளவில்லை.
ஷ்யாமுக்குமே மகிழ்ச்சி தான்.
அன்று நடந்தது ராஜ் உட்பட அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவும், வர்ஷாவுக்கு பேரதிர்ச்சியாகவும் இருந்தது.
( அப்படி என்ன அதிர்ச்சி….. கண்டிப்பா அடுத்த எபில சொல்லிறேன்…அப்புறம் மறந்துட்டேன் பாருங்க….பை…. பை…)