Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12-9818b8b3

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு -16

 “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்”

என்பார்கள் அது சிலர் விடயத்தில் நடப்பதும் உண்டு

இறைவனே, நல்லவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர்களின் கஷ்டத்தை விலக்கப் பல நன்மைகள் அவர்களை அடையச் செய்வார்”

என்ன விடயம் ஏன் இங்க வந்திருக்கிறோம் எனப் புரியாமல் இருந்த அனைவருக்கும் பதிலாய் இருந்தது சந்திரன் ராஜ் கையில் கொடுத்த அந்த பத்திரம்.

அதை படித்தவன் கண்கள் கலங்க சந்திரன் லட்சுமியை பார்க்க, அவர்கள் முகத்தில் மகிழ்வுடன் இவனை பார்த்திருந்தனர்.

லைட்டிங் ஸ்டார்ஸ்க்கு சந்தோஷம் தாங்கவில்லை.

ஷ்யாம் மற்றும் அருண் ராஜை கட்டிக்கொண்டார்கள்.

பெரியவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, ஆனால் ராமசந்திரன் லட்சுமி தம்பதிகள் மேல் மரியாதை அதிகமானது உண்மை.

நடந்தது இது தான் ராஜேஷ்யை சட்டபூர்வமாக தங்கள் மகனாய் தத்தெடுத்திருந்தனர் அந்த காதல் தம்பதிகள்.

சார்-பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து வழிமுறைகளும் முடியவும், அனைவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கே சிறு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விருந்து முடித்து அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிந்தார்கள்.

“ராஜ் அந்த வீட்டை காலிப் பண்ணிட்டு இங்கையே வந்துடுப்பா”, என சந்திரன் கூற சந்தோஷமாய் தலையாட்டினான்.

பெரியவர்கள் பேச்சி எங்கேங்கோ சுற்றி பிள்ளைகளின் திருமணத்தில் வந்து நின்றது.

ஏற்கனவே தங்கை ஏகன்யாவிடம் அருணின் தந்தை ரகு பேசிவிட்டதால் அருண் மித்து திருமணத்தை பற்றிய பேச்சு வெளிப்படையாய் சபையில் பேசப்பட்டது.

அருண், “எனக்கு கொஞ்ச வருடம் டைம் வேணும் அப்போ தான் நான் வியாபாரத்தில் ஒரு நல்ல இடத்திற்கு வர முடியும் அப்புறம் கலயாணம் பத்தி பேசலாம்”, என்று கூற, பெரியவர்களுக்கும் அது சரியனப்பட்டது.

ஷ்யாம், “என்னடா சான்ஸ் கிடைச்ச மிஸ் பண்ண கூடாதுனு சொன்ன”.

“அது சும்மா விளையாட்டுக்கு மச்சி ரியல் லைப்ல ஒரு நல்ல இடத்துக்கு வந்த அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும். அப்போ தான் பேமிலி பெருசாகும் போது ஐ மீன் குழத்தை குட்டினு வரும் போது ஸ்மூத்தா மைண்டைன் பண்ண முடியும்”.

“டேய் இன்னும் பாலே வாங்கல அதுக்குள்ள டீ கேட்குதா”, என நண்பனை கிண்டல் செய்தாலும் அவனின் தெளிவான சிந்தனையை மெச்சிக்கொண்டான் ஷ்யாம்.

ரகு, வர்ஷாவின் திருமணத்தை பற்றி கிருஷ்ணனிடம் விசாரித்தார்.

“பாக்கணும் ரகு பிசினஸ் சர்க்கிலையே நிறைய பேர் கேட்குறாங்க, ஆனா எல்லாரும் இந்த கல்யாணத்த ஒரு பிசினஸ்சா பாக்குறதுனால எங்களுக்கு விருப்பமில்ல. வர்ஷு எங்க வீட்ல எல்லோருக்கும் செல்லம் அவளை ஒரு நல்ல இடத்துல கொடுக்கணும்னு எங்களுக்கு எண்ணம் பாக்கலாம்”.

இவ்வாறு பேச்சி போக யாரும் எதிர்ப் பார்க்காமல் சந்திரன் “ஏன் கிருஷ்ணா பேசாம உங்க பொண்ண எங்க பையனுக்கு கொடுக்குறீங்களா” எனக் கேட்டார்.

ராஜின் முகமோ சந்தோஷம், பயம், அதிர்ச்சி என கலவையான உணர்ச்சியை பிரதிபலிக்க.

வர்ஷு முகம் அதிர்ச்சியை அப்பிக்கொண்டது.

தியா ஷ்யாம் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அவர் அப்படி கேட்பார் என எதிர்பார்க்கதவர்கள் கிருஷ்ணனையும் சந்திரணையும் மாறிமாறிப் பார்த்தனர்.

கிருஷ்ணன் தன் மனைவியின் முகத்தை பார்த்தார்.

அவர் சம்மதம் எனக் கூற, உடனே தன் மகனை பார்த்தார் அவனும் சம்மதமாய் தலையாட்டினான். அவரின் பார்வை கடைசியாய் தன் மகள் மீது படிந்தது.

அவளோ சுற்றி நடப்பதை உணராது அதிர்ச்சில் இருக்க அவர் அதை அணைத்து பெண்களுக்கும் இருக்கும் தயக்கம் என நினைத்தார்.

பின் சந்திரணை பார்த்து எங்களுக்கு சம்மதம் என்றார்.

தன் தந்தை இவ்வாறு ஒத்துக்கொள்வார் என எதிர்பார்க்கதவள் ராஜை திரும்பி பார்த்தாள்.

அந்த பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனை பாதிக்க அவளிடம் தனியாய் பேச வேண்டும் என்றான்.

பெரியவர்களும் அவர்கள் நிலை புரிந்தே இருந்தது இப்படி திடீரென திருமண பேச்சி நடக்குமென அவர்கள் எதிர்பார்திருக்க மாட்டார்கள் அல்லவா. எனவே இருவரும் தனியாய் பேச அனுப்பினர்.

இருவரும் மாடி நோக்கிச் செல்ல தியா ஷ்யாம் அருகே வந்து மெதுவாய் அவனுக்கு மட்டும் கேட்குமாறு “வர்ஷு சொதப்பிட மாட்டாளே” என வினவினாள்.

“கண்டிப்பா சொதப்புவா. உன் அண்ணா தான் அவளை சரிகட்டணும்”.

“ஆமா தியா உங்க அப்பா அம்மா கிட்ட இது பத்தி பேசுனியா என்ன”.

“இல்லையே”.

“அப்புறம் எப்படி”.

“அதுதானே எனக்கும் புரியல பட் நல்ல விஷயம் தானே”.

“உண்மை தான்”.

தனியே பேச சென்றவர்கள் என்ன பேசினர், வர்ஷு இந்த திருமணத்திற்கு சம்மதிப்பாளா?

மேலே சென்று வெகு நேரம் ஆகியும் அங்கே அமைதியே சூழ்ந்திருந்தது. அதைக் கலைத்தது ராஜ் தான்.

“இப்படி திடிர்னு ஒரு பேச்சு வரும்னு நான் நினைக்கல”.

“ம்…. எனக்கு புரியுது”.

“இப்போ என்ன பண்ணலாம்”.

“உங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க”.

“என்ன பேச”.

“உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு சொல்லுங்க”.

“வாட்?”

“உங்களுக்கு இதுல விருப்பம் இல்ல தானே”.

“அப்படினு நான் சொன்னேனா”.

அவன் இவ்வாறு கூறவும் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் சுத்தி வளைக்க விரும்பல எனக்கு உன்ன புடிச்சிருக்கு. இப்போ இந்த பேச்சி வந்ததுனால இல்ல முன்னையே”.

அவள் அவன் கூறுவதை அதிர்ந்து போய் பார்த்திருந்தாள்.

அவளுக்கு அவன் புதியவனில்லை சிறு வயதில் அவள் வீட்டுக்கு வருவான். அவள் அண்ணன் எப்போது பார் அவனுடன் தான் இருப்பான். அது இவளுக்குப் பொறாமையாக இருந்தது.

அதுவரை தன்னிடம் அதிக நேரம் செலவழித்த தன் அண்ணன் ஏன் இப்போது இப்படி இருக்கிறான்? அனைத்திற்கும் அவள் குற்றம் சாட்டியது ராஜைத் தான். அவளுக்கு அப்போது விவரம் தெரியவில்லை, எனவே காரணமே இல்லாமல் ராஜை வெறுத்தாள்.

விவரம் தெரியும் போது அவனுக்காக வருத்தப்பட்டாள் அவனின் இழப்பு எவ்வளவு பெரிது என்பதை உணர்ந்தாள் அதிலிருந்து அவனை மீட்கவே தன் அண்ணன் அவனிடம் நேரம் செலவழித்தான் என்பதும் புரிந்தது.

பின் அவன் கல்லூரி காலங்களில் ஷ்யாம் வீட்டிற்கு வராததால் அவனை மறந்து விட்டாள்.

ஷ்யாமும் ஏனோ அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என அவளிடம் அவனைப் பற்றி பேசியதில்லை.

அவனை வெகு காலம் கழித்து அன்று காபி ஷாப்பில் தான் கண்டாள்.

முதலில் அடையாளம் தெரியவில்லை பின்பு தான் கண்டுகொண்டாள்.

இப்போது இவர் என்ன கூறுகிறார் தன்னை முன்பே பிடித்தது என்றா.

இவ்வளவு நேரம் மனதோடு பேசியவள் இப்போது வாய் திறந்தாள் “எனக்கு….” என்றதோடு சரி அதற்கு மேல் எப்படிச் சொல்ல எனத் தயங்க.

அவளுக்கு அந்த கஷ்டத்தைக் கொடுக்காமல் அவனே, “உனக்கு….. இதில் விருப்பமில்லை அது தானே சொல்ல வர” என முடித்தான்.

அவள் அமைதி காத்தாள்.

“வாய தொறந்து பேசு இல்ல நான் போய் சீக்கிரம் தேதி குறிக்க சொல்றேன்”.

“இல்ல வேணாம்”..

ம்…அப்படி வா வழிக்கு இப்போ பேசுனியா, என மனதில் நினைத்து, “சரி இப்போ என்ன தான் பண்ணலாம்ற”.

“உங்களுக்கு என்னைப் பத்தி தெரியும். அப்படியிருந்தும் இப்படி பேசுறது நல்லாயில்ல”.

“என்ன தெரியும்”.

“அந்த ரவி…..” என அவள் இழுக்க.

அவள் ரவியின் பேரை எடுக்கவும் அவனுக்கு கோவம் தலைகால் புரியாமல் ஏறியது. அவள் இக்கட்டு அவனுக்குத் தெரியாதா என்ன எனக் காண்டானவன். “என்ன அவன் வெளிய வந்ததும் அவனுக்கு வாழ்க்கை தர போறியா”.

“ச்ச…என்ன பேசுறீங்க”.

“பின்ன அது எந்த சூழல்ல எப்படி நடந்ததென்று எனக்குத் தெரியும் இது ஒரு விடயமென்று பேசிகிட்டு”.

அவன் கோவத்தில் இவளுக்கு என்ன பேசவேன தெரியவில்லை.

அவளின் பாவனையில் இவனுக்கு கோவம் குறைந்து பாவமானது.

“சரி நீ மேல படிக்கணும்னு சொல்லி இரண்டு வருஷம் தள்ளிப் போடலாம் அப்புறமும் உனக்கு விருப்பமில்லனா நான் எப்படியாட்சி இந்த கல்யாணத்த நிறுந்திடுறேன் இது உனக்கு சம்மதமா”.

அவள் சம்மதம் கூறுவதை தவிர வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை. எனவே சரியென தலையாட்டினாள்.

“வெரி குட். சரி வா நான் போய் எல்லார்கிட்டயும் பேசுறேன்”.

ம்…. என அவனை பின் தொடர்ந்தாள்.

வெளிய வந்தவன் என்ன கூற போகிறான் என அனைவரும் ஆவலாய் பார்க்க.

அவன், “வர்ஷா மேல படிக்க ஆசைபடுறா சோ அவ படிக்கட்டும் அப்புறம் இந்த கல்யாணத்த பத்தி பேசிக்கலாம்”, என்றான்.

“பரவால்ல மாப்பிள்ளை இப்போவே என் பொண்ணு ஆசைய நிறைவேத்துறீங்க எங்களுக்கு சந்தோஷம் தான்”, என ராதா கூற கிருஷ்ணணும் அதை ஆமோதித்தார்.

“உங்களுக்கு இதில் சம்மதமா சந்திரன்”.

“பையனே சொல்லிட்டான் அப்புறம் எங்களுக்கு என்ன பிரச்சனை அப்படி தானே லட்சு”.

“ஆமாங்க வர்ஷுமா படிக்கட்டும் அப்புறம் கல்யாணத்தை வைச்சிக்கலாம்”.

இளசுகள் அனைவருக்கும் புரிந்தது இது அவன் வர்ஷுகாக எடுத்த முடிவென்று.

இரண்டு வருடத்தில் வர்ஷாவின் மனம் மாறுமா….

(அது எப்படி நம்ப ஐபிஸ் ஆபிஸிர் விட்ருவான் பாப்போம்)

******************

ஷ்யாம் வீட்டில்….

அனைவரும் வீடு சேர்த்த பின் முதலில் அவரவர் அறை சென்று ரெப்பிரேஷ் ஆகி வந்தனர். பின் ராதா தேநீருடன் வர ஒவ்வொருவராக ஹாலில் ஆஜரானார்கள்.

ராஜைப் பற்றிய பேசு தான் போய்க் கொண்டிருந்தது.

“சந்திரன் அண்ணாவும் லட்சுமியும் ரொம்ப நல்ல மாதிரினு தெரியும்…ஆன இப்படி ராஜேஷ்சை சட்டபூர்வமா தத்தேடுப்பாங்கனு எதிர்பாக்கல”.

“உண்மை தான் ராதா எனக்கும் அதே யோசனை தான். ஆனா அத விட பெரிய ஷாக் ராஜிற்கு நம்ப வர்ஷுவ கேட்டது தான்”.

“எனக்குமே அது ஷாக் தான். நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு யோசிச்சிட்டே இருந்தேன்”.

“அம்மாவும் பையனும் சரினு தலையாடவே ஒத்துக்கிட்டேன்”.

“நம்பிட்டோம்க..…இல்லடா ஷ்யாம்”.

“அதுதானே உங்களுக்கு ஓகே இல்லனா எங்கள திரும்பி பார்த்தே இருக்க மாட்டீங்க… என்னப்பா சரி தானே”.

அவர் சிரித்தார். அந்த சிரிப்பே அது உண்மை தான் எனப் பறைசாற்றியது.

“ராஜ் நல்ல பையன் நமக்கு ரொம்ப வருஷமா பழக்கம். அவன் கஷ்டத்தெல்லாம் தாண்டி சொந்த முயற்சியில் ஏசிபி ஆகிருக்கான சும்மாவா. அவனுக்கு நம்ப வர்ஷாவ கொடுக்க கசக்குமா என்ன”.

“உண்மைங்க அது மட்டும் இல்ல இப்போ அவன் லட்சுமி சந்திரன் அண்ணாவோட பையன். நம்ப பொண்ண செல்லமா வளத்துட்டோமே போற இடத்துல எப்பவும் ஒரு கவலை இருக்கும். இப்போ அத்தில்லை கண்டிப்பா நல்ல இருப்பா. லட்சுமி மாதிரி மாமியார் அமைய கொடுத்து வைக்கணும் இவளை அவங்க மகளா பாத்துப்பாங்க”, என்றார் ராதா.

“ராஜும் ரொம்ப நல்ல மாதிரிமா வர்ஷுவ தங்கமா பாத்துப்பான்”, என நண்பனுக்கு வக்காலத்து வாங்கினான் ஷ்யாம்.

“அது தான் தெரியுதே. இவ மேல படிக்கணும்னு சொன்ன உடனே அவரும் நம்பகிட்ட பேசுனாரே”.

“யாரம்ம சொல்றீங்க”.

“ராஜை தான்”.

“மரியாதை ரொம்ப ஜாஸ்தியா இருக்கே”.

“பின்ன மாப்பிள்ளையா வர போறவர மரியாதை இல்லாமையா பேச முடியும்”.

இப்படியாக அப்பா, அம்மா, அண்ணா என அனைவரும் தன் திருமணத்தைப் பற்றிப் பேச இவளோ யாருக்கு வந்த விருந்தோ என அமைதியாய் தேநீரைப் பருகி முடித்து தன் அறைக்குச் சென்று விட்டாள்.

ஷ்யாம்க்கு தங்கையின் மனநிலை புரிந்தது. தான் இப்போது அவளிடம் எது பேசினாலும் அது அவளை கட்டாயப் படுத்துவது போல் இருக்கும். அதை அவன் விரும்பவில்லை. ராஜ் அவளுக்குப் பொருத்தமானவன் என்பதை அவளே ஒரு நாள் புரிந்து கொள்வாள் என அமைதிக்காத்தான்.

அறைக்கு வந்தவளுக்குள் பல கேள்விகள் அதைப் புறந்தள்ளிவிட்டு ராஜ் தன்னிடம் பேசிய விதத்தை நினைத்துப் பார்த்தாள். பின் இறுதியாய் அவன் கொடுத்த இரண்டு வருட டைம் நினைவு வர, “ஆமா கண்டிப்பா டூ இயர்ஸ் அப்புறம் நான் வேணாம்னு சொன்னா கல்யாணத்தை நிறுத்திருவார் தானே?”, என தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

(அதுக்குள்ள என்னமா அவசரம் அத ரெண்டு வருஷம் கழிச்சி யோசிக்கலாமே…….என்னடா ரெண்டு வருஷமானு பயப்புடாதீங்க நம்ப கதைல ஆல்ரெடி டக்குனு ரெண்டு வருஷத்தை கடந்த்துட்டோம்ல அப்படி தான் இதுவும்…. ஓகே அடுத்த எபில மீட் பண்ணலாம்…பை…. பை….)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!