ஈர்ப்பு – 20
“என்னைச் சுற்றி கொள்ளை அழகுடன் இருக்கும் இயற்கை கூட பார்க்கவிடாமல் தடுக்கிறது உன்னிடம் இருந்து வரும் ஈர்ப்பு சக்தி”
எஸ்டேட் சென்று சிறிது நேர ஓய்வுக்குப் பின் மதிய உணவைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினர். அவர்கள் செல்லும் இடம் சூச்சிப்பாரா அருவி.
இந்த அருவியை அடைய ரோட்டில் இருந்து மலை ஏறி 2 கி.மீ நடக்க வேண்டும். ஒரு முப்பது நிமிட பயணம் அது. சாப்பிட்டுச் சென்றால் சரிவராது எனத் தான் உணவைக் கையில் எடுத்துக் கொண்டது.
சந்திரன் லட்சுமி தங்களுக்குக் களைப்பாக இருப்பதால் சிறியவர்களை மட்டும் சென்று வரச்சொல்லி அனுப்பினர்.
மித்து அருண் பின்புறம் அமர்ந்து கொண்டனர். தியாக்கு முன்புறம் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டே வருவது பிடிக்க அவள் அங்கேயே அமர்ந்து கொண்டாள். வர்ஷா இறுதியாய் வர நடு சீட்டில் மட்டுமே இடம் இருந்தது.
அதில் ராஜ் அமர்ந்திருக்க vஎப்படி அமர என இவள் யோசனையில் இருக்க அனைவர்க்கும் அது புரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
பின் ஷ்யாம் தான் “மித்து நீ முன்ன வந்து உட்கார் ராஜ் பின்னாடி அருண் கூட போய் உட்கார்டா”, எனக் கூறிக்கொண்டே மித்துக்கு சும்மா எனக் கண்காட்டினான்.
அதைக் கவனிக்காத அருண் “டேய் என்னடா”, எனப் பாவமாய் கேட்க,
அதை பார்த்த வர்ஷாக்கு ஒரு மாதிரி ஆனது ‘ச்ச நம்மளால அவங்க எதுக்கு தனியா உட்காரணும் இது பெரிய சீட் தானே அவர் அந்த மூளைல உட்காந்தா நாம இந்த மூளைல உட்கார வேண்டியது தான்’.
“இல்ல வேணாம் நீ அங்கேயே உட்கார் மித்து நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என அந்த சீட்லயே அமர்ந்தாள்.
‘ரொம்ப தான் அலுத்துக்குறா’ என ராஜ் எண்ணினாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
அவளின் செயலில் அனைவர் முகத்திலும் வெற்றிக்குறி.
சூச்சிப்பாரா அருவி (Soochipara Falls) வயநாட்டின் வெல்லாரிமலையில் உள்ள ஒரு மூன்றடுக்கு நீர்வீழ்ச்சியாகும். இதை செண்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். சூச்சி என்பது ஊசி என்றும் பாரா என்றால் பாறை என்றும் பொருள்படும் என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர். 200 மீட்டர் உயரமுள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி செங்குத்தான பாறையாய் நின்று மலையேற்றத்திற்குப் பயனாகிறது. அருவியிலிருந்து குதிக்கும் தண்ணீர் தமிழ்நாட்டிற்குரிய சேராம்பாடிக்கு அருகில் கேரளாவின் வெலரிமலைக் குன்றைக் கடந்து சூலிக்கா ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு சாலியார் ஆறு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது.
அவர்கள் அருவியை அடைந்தவுடன், நுழைவாயிலில் ஒரு பாதுகாப்பு சோதனைக்கு உட்பட்டனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப்பொருட்களை (பிளாஸ்டிக் ) அருவிக்குக் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. நுழைவாயிலில் தொடங்கி அருவி வரை செல்ல 30 நிமிடங்கள் பிடிக்கும்.
கீழ்லிருந்து மேல ஏற துவங்கினர் நம்ப லைட்டிங் ஸ்டார்ஸ்.
மித்து அருண் இருவரும் வழக்கம் போல் தனியே கழன்று கொள்ள தியாவுடன் செல்லலாம் என நினைத்து அவளை நெருங்கப் போக அப்போது தான் தன் அண்ணன் முகத்தை கவனித்தாள்.
தியாவை கண்களால் பருகிக் கொண்டே அவள் அருகில் நடந்தான் ஷ்யாம்.
‘ரைட்டு விடு தனியாவே போவோம்’.
இவள் பின்னே தனியே வந்து கொண்டிருந்தான் ராஜ்.
அதைக் கவனித்தவளுக்கு ஏனோ அவனைத் தனியே விட மனம் வராமல் அவனுடன் இணைந்து நடந்தாள்.
இதை எதிர்பார்க்காத ராஜின் முகம் மிகவும் பளிச்சிட்டது. எனினும் எதுவும் பேசவில்லை ‘அவள் அருகே வருவதே பெரிது இதில் எதாவது பேசி அதையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது’, என வாயை மூடிக்கொண்டே வந்தான்.
வர்ஷாக்கு ‘எவளோ நேரம் இப்படியே அமைதியாய் செல்ல’, என அலுப்பு தட்டியது ஏற்கனவே மலை ஏற கஷ்டமாய் இருந்தது ஏதோ பேசிக் கொண்டே சென்றாலாவது களைப்பு தெரியாமல் இருக்கும் என்றால் இவனோ அமைதியாய் வர அவளே பேச்சி கொடுத்தாள்.
“உங்க வேலை எப்படி போகுது”.
அவன் சுற்றி முற்றிப் பார்த்தான்.
“என்ன பாக்குறீங்க”.
“இல்ல யார்கிட்ட பேசுறேன்னு பாக்குறேன்”.
“உங்ககிட்ட தான் கேட்டேன்”.
“இல்ல நீ தான் என்கிட்ட பேச மாட்டியே அதான் கண்பியூஸ் ஆகிட்டேன்”.
“பேச கூடாதென்று இல்ல….பேசுனா தப்பா நினைச்சிப்பிங்களோனு தான்”.
“என்னனு”.
“அது….. வந்து…”.
“நீ என்னை லவ் பண்றேன்னா”.
அவள் மெதுவாய் ‘ஆம்’ எனத் தலையாட்டினாள்.
“இங்க பார் வர்ஷு நீ என்கிட்ட பேசின உடனே நீ என்ன லவ் பண்றனு நினைக்க நான் டீன் ஏஜ் பையன் இல்ல புரிதா”.
“ம்…”
அதன் பின் அவர்கள் நன்றாகவே பேசிக் கொண்டு மலை ஏறினர்.
“ஆமா ராஜ் நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே”.
“ம்ம்…கேள்”.
“இல்ல நீங்க என்ன சின்ன வயசில் தான் பாத்திங்க அப்புறம் பாக்கவேயில்லை…”
“அப்புறம் எப்படி எனக்கு உன்ன பிடித்து இருக்குனு கேட்க போறியா”.
“ஆமா….”
“அது சொன்ன உனக்கு புரியுமானு தெரியல வர்ஷு. நான் அம்மா செல்லம் எப்பவும் அம்மாகூட தான் இருப்பேன்”.
“அம்மா அப்பா போன அப்புறம் என்ன தான் தாத்தா என்ன நல்லா பாத்துக்கிட்டாலும் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணென்”.
“நைட் படுக்கும் போது bஅம்மாகிட்ட மானசீகமா பேசிட்டு தான் படுப்பேன்”.
“அப்படித்தான் அன்னைக்கு உன்ன பாத்துட்டு வந்த அப்புறம் அம்மாகிட்ட அன்னைக்கு நடந்ததை ஷேர் பண்ணிட்டு படுத்தேன். கண்ண மூடுனா உள்ள நீ வந்து நிக்கிற எனக்கு ஒன்னும் புரியல எப்பவும் அம்மா முகம் தானே வரும் இன்னக்கி என்ன இப்படினு ஒரு மாதிரி இருந்துச்சி”.
“அன்னைக்கு மட்டும் இல்ல அதுக்கு அப்புறம் தினமும் இப்படி தான். உன்ன பாக்கும் போது இவள் எனக்கானவள்னு பீல் ஆச்சு”.
“அப்படி இருக்கும் போது தான் நானே எதிர்பாக்கம நம்பக் கல்யாண பேச்சி வந்தது அப்போ எவளோ சந்தோஷப் பட்டேன் தெரியுமா”, என்னும் போது அவன் முகம் அத்தனை மகிழ்ச்சியை காட்டியது. ஆனா உடனேயே அது துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்தது. அது ஏன் என்று அவன் பின்னே கூறிய செய்தியில் புரிந்தது “எனக்கு தெரியும் உனக்கு இதில் விருப்பம் இருக்காதுன்னு”.
“நான் உங்கிட்ட சும்மா சொல்லல உண்மையாகவே டூ இயர்ஸ் கழித்து உனக்கு பிடிக்கலைனா நான் கல்யாணத்தை நிறுத்திடுவேன் நீ அதைப் பற்றி கவலைப் படாதே”, என அவன் நீளமாய் பேசி முடிக்கவும் அருவியை நெருங்கவும் சரியாய் இருந்தது.
அவன் மற்றவருடன் சேர்த்துக்கொள்ள இவள் அவனையே பார்த்திருந்தாள்.
‘என்னை பிடிக்குமாம் ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்திவிடுவாராம் என்ன மாதிரி காதல் இது’.
(பாருமா புள்ள உனக்குன்னு எவளோ பாக்குது)
ஷ்யாம் தியாவுடன் கழியும் இந்த தருணங்கள் இப்படியே நீளக் கூடாதா என மனதில் வேண்டுதல் வைத்து கொண்டிருந்தான்.
அவனுக்கு மனம் ஒரு நிலையாய் இல்லை தன் மனதின் மகாராணி தன் அருகே இருந்தாலும் ஒட்டி உறவாட முடியா நிலை. பிடித்த அணைத்து உணவையும் கண் முன்னே அடுக்கி விட்டு நம் கைகளைக் கட்டிவிட்டால் எப்படி இருக்கும் அப்படி தான் அவனும் இருந்தான்.
அருவியை நெருங்கியவுடன் அனைவரும் ஒன்றாய் சுற்றி அமர்ந்தனர்.
அருவியின் சாரல் அவர்கள் முகத்தை நனைத்தது.
தியாவின் மேல் படிந்த பார்வையை விலக்க தோணவில்லை ஷ்யாம்க்கு. ஒரு கட்டத்தில் அவனையும் அறியாமல் அவளை அழைத்தும் விட்டான் “தியா”.
அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவன் தன்நிலை மாறாமல் இருக்க “என்ன ஷ்யாம்” என அவளே கேட்டாள்.
அவள் ஏதோ தன்னிடம் பேசுகிறாள் என்பது புரிந்தாலும் காதில் ஏறவில்லை.
பின் வர்ஷா தன் அண்ணனின் நிலையிணர்ந்து அவனை நிகழ்காலத்துக்கு கூட்டி வந்து அவன் ஏன் அவளை கூப்பிட்டான் என வினவ.
“அது…வந்து…. ஒன்னுமில்ல தியா இது செம சிடுவேஷன் அதான் ஒரு பாட்டு பாட சொல்லலாம்னு”, என ஏதோ கொட்டி கிளறிச் சமாளித்தான்.
மற்றவரும் அவளைப் பாடச் சொல்ல…அவளுக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் தோன்றிய பாடலை பாடத் துவங்கினாள்.
🎼மலையன்னை தருகின்ற
தாய்ப்பால் போல் வழியுது வழியுது
வெள்ளை அருவி அருவியை முழுவதும்
பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா…
வானம் திறந்திருக்கு
பாருங்கள் எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூாியன் சூாியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா🎼
“செம தியா இந்த சூழ்நிலைக்கு ஏத்தப் பாட்டு” என அனைவரும் பாராட்டினர்.
“ம்…இங்க வந்து இந்த அருவிய பாத்த உடனே என் மனசுல வந்த பாட்டு இது”.
தன் ரசனைக்குரியவளின் ரசனையில் சொக்கி தான் போனான் மன்னவன்.
பின் நண்பர்கள் பேசி சிரித்து எனப் பொழுதுகள் ரம்மியமாய் கழிந்தது.
நேரம் ஆகவே கிளம்பினர் போகும் போது எப்படிச் சென்றனரோ அதே போல் வரும் போதும் ஜோடியாய் வந்தார்கள்.
“ரொம்ப தேங்க்ஸ் ஷ்யாம் திஸ் இஸ் மை பெஸ்ட் பர்த்டே எவர்” என தியா ஷ்யாமிடம் கூற.
‘இதுலாம் என்ன திருமணத்துக்கு அப்புறம் பார் எல்லாமே இன்னும் சிறப்பா இருக்கும்’ மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது அவனால்.
“எல்லாம் சேர்ந்து பண்ணது தான்”
“இல்ல இந்த பிளான் முழுக்க உங்க ஐடியா தானாமே அண்ணா சொன்னான்”.
‘தேங்க்ஸ் மச்சி’ என தன் நண்பனுக்கு மானசீகமாய் நன்றி உரைக்கவும் மறக்கவில்லை அவன்.
பின் தன் பாக்கெட்டில் வைத்திருந்த பரிசு பொருளை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தியா”.
நன்றி கூறி அதைப் பெற்றுக்கொண்டாள்.
“பிரித்து பார்”, என இவர்கள் மட்டும் பின் தங்கி விட்டார்கள்.
அவள் அந்த கிபிட் காகிதத்துக்கு வலிக்குமோ எனப் பொறுமையாய் கிழியாமல் பிரித்தாள்.
உள்ளே இருந்த சிறிய வெல்வேட் பெட்டி அது நகை என பறைசாற்ற ஷ்யாமை பார்த்தாள்.
“எனது இது”.
“பிரித்து பார்த்தா உனக்கே தெரிய போகுது”.
அந்த பெட்டியைத் திறக்க அதிலிருந்த பொருளைப் பார்த்து “எதுக்கு இவளோ விலை அதிகமா” என அவள் கேட்க.
‘இது அதிகமா நல்ல வேல நான் உனக்கென்று வாங்கினதா கொடுக்கல்ல’.
அவன் வாங்கியதே வேறு அதைக் கொடுத்தாள் அவள் என்ன நினைப்பாள் எதற்கு அவளோ காஸ்டலி எனக் கேட்பாளோ எனத் தான் அவன் இதை எக்ஸ்ட்ராவாக வாங்கியது.
சரி அந்த பரிசுப் பொருளைப் பற்றிப் பார்ப்போம். அது ஒரு அழகிய மோதிரம் தங்கத்தில் ரோஜா பூவும் அதை இன்னும் அழகாய் காட்ட அதன் நடுவே ஒரு வைரக்கல்லும் பதித்திருந்தது. அந்த ரோஜாவின் இரு புறமும் இலைகள் போல் வளைத்து அதிலும் நெடுக்க ஏழேட்டு வைரகற்கள் பதித்து மிகவும் அழகாய் இருந்தது.
“பிடித்திருக்கா”, குரலில் காதலை தேக்கி அவன் கேட்க.
அவன் குரலின் மாறுதலை உணராதவள். “ம்…செமயா இருக்கு ஆனா ஏன்…..”.
“காஸ்டலினு கேட்க போறியா. போதும் தியா காது வலிக்குது”.
இடுப்பில் கை வைத்து இவனை முறைத்தாள்.
‘ஐயோ முறைக்கிறேன் பேர்வழியென்று இப்படி அழகா பார்த்து கொல்கிறாளே’.
முறைத்தது போதும் நம்பல தேட போறாங்க வா.
ம்…
காரில் அமர்ந்ததே உணவை முடித்து எஸ்டேட் சென்றனர்.
இரவு தூக்கம் இல்லாதது, இன்று முழுவதும் அலைந்தது, என அனைவரும் களைப்பாய் இருக்க வள்ளியின் தேநீர் பருகி அவரவர் அறை நோக்கிச் சென்றனர்.
சிறிது நேர ஓய்வுக்குப் பின் மாலை முற்றத்தின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள் தியா.
அப்போது தான் தூக்கம் கலைந்து எழுத ஷ்யாம் கீழே வந்தான்.
“வாங்க ஷ்யாம் நீங்களும் ஊஞ்சல உட்காருக”, என அழைத்தது தான் தாமதம்.
நொடியும் தாமதிக்காது அமர்ந்தான். பக்கவாட்டில் தெரியும் தன்னவளின் உருவத்தை ரசித்துக் கொண்டே பேசினான்.
“ஏன் தியா எப்படி நீ இவளோ நல்லா பாடுற கர்நாட்டிக் மியூசிக் கத்துக்கிட்டியா”.
“ம்…ஆமா என்னோட குரு யார் தெரியுமா?”
“யாரு?”
“அம்மா தான்…அம்மா முறையா கத்துக் கிட்டவங்க நான் சும்மா சின்ன வயசில் அம்மா பாடும் போது கூட பாடி பாடி வந்த குரல் தான்”.
“ஓ……. செம…..”
இவர்கள் பேசுவதை மேலே மித்துவும் வர்ஷாவும் பார்த்தனர்.
“என்னடி உன் அண்ணா போற ஸ்பீட பாத்தா நம்ப கேங்கில் அவங்களுக்கு தன் முதல கல்யாணம் ஆகும் போல”.
“அப்படி ஒன்னு நடந்தா சந்தோஷம் தானே”.
“ம்…ஆமா நீயும் உன் அண்ணனும் ஒரே வீட்டில் கல்யாணம் பண்ணனும்னு இருக்கு போல”.
மித்து கூறியது இவளுக்கு யோசனையை தூண்டியது.
பின் அனைவரும் ஹாலில் ஒன்றுகூடினர்.
“இப்படி இந்த பங்களா பேச்சும் சிரிப்புமா இருந்து எவளோ நாள் ஆச்சி”,என முருகன் வள்ளி கூற.
“என்ன பண்ண எல்லாரும் பிஸி இப்படி ஒண்ணா வெளிய வரதே கஷ்டமா இருக்கு”.
“என்னவோ தம்பி இங்க சுத்தி பாக்க வரவங்க கூட எப்போ பார் இந்த தொலைப்பேசியும் கையுமா தான் இருக்காங்க மனுசன் மூஞ்சை பார்த்து யார் பேசுறா”.
உண்மை தானே எவளோக்கு எவளோ டெக்னாலஜி வளருதோ அவளோக் அவளோ நம்ப அதையே நாடி இருக்கிறோம் இப்பொழுதெல்லாம் எத்தனை குடும்பங்கள் ஒன்றாய் இப்படி நேரம் கழிக்கிறார்கள். எதாவது கேட்டாள் கூட தொலைப்பேசியைப் பார்த்து கொண்டே பதில் கூற வேண்டியது.
மாதம் ஒரு முறை இப்படி எங்காவது சென்று தேவைக்கு மட்டும் பேசியைப் பயன்படுத்தி நேரம் செலவழித்துப் பாருங்கள். நிச்சயம் அந்த நேரம் உங்களுக்குப் பொக்கிஷமாய் அமையும்.
“ட்ருத் ஆர் டேர் (truth or dare) விளையாடலாமா”, அருண் தான் கேட்டான்.
சரியன அனைவரும் ஒத்துக்கொள்ளவும் விளையாட்டு துவங்கியது.
அனைவரும் சுற்றி அமர நடுவில் ஒரு பாட்டில் வைத்து சுற்றினான் அருண்.
அது ராஜைப் பார்த்து நின்றது.
“மச்சி ட்ருத் ஆர் டேர்”.
“ட்ருத்”.
“நீ யாருகாவது ப்ரொபோஸ் பண்ணி ரிஜெக்ட் பண்ணி இருக்காங்களா?”
“வாழ்க்கையில் ஒரே தடவத் தான் ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன் இன்னும் அதுக்கான பதில் எனக்கு தெரியல”, என வர்ஷாவை பார்த்துக் கொண்டே கூறினான்.
மற்றவர்களுக்கும் அது புரியவே மேலும் நோண்டவில்லை.
இப்போது மீண்டும் பாட்டில் சுற்றப்பட இப்போது அது இம்முறை தியாவின் புறம் நின்றது.
“ட்ருத் ஆர் டேர்”.
“ட்ருத்”.
“உனக்கு வந்த ப்ரொபோஸ்சஸ் பத்தி சொல்லு”.
எப்போதும் போல் தியாவை முந்திக்கொண்டு மித்து பதிலளித்தாள்.
“அது நிறைய இருக்கே நீ எதை கேட்குற”.
“ஏ முந்திரிக்கொட்டை நீ சும்மா இரு”.
“முதல் முதல வந்த ப்ரொபோசல் பத்தி சொல்லு”.
“அப்போ நாங்க செவேந்த்(seventh) படிச்சிட்டு இருந்தோம்”.
“என்ன செவேந்த்தா”, எனக் கேட்டது நம்ப ஷ்யாம் தான்.
“ஆமா..”
“அப்போ பாய்ஸ் கேர்ள்ஸ்லாம் ஒண்ணா நடத்தணும்னு எங்கள கலந்து உட்கார வைச்சாங்க அதில என் பக்கத்தில் ஒரு பையன் உட்காந்தான். அவனை என்னை வெச்சி கிண்டல் பண்ணிட்டே இருந்தாங்க நான் அதை கண்டுக்கல”.
“ஒரு நாள் என்கிட்ட அவன் பிரின்ட் வந்து அந்த பையன் பேரச் சொல்லி அவன் உன்ன லவ் பண்றணாம்னு சொல்ல நான் அவன்கிட்டயே போய் கேட்டேன்”.
“அவனும் கூலா ஆமான்றான் வந்துச்சே எனக்கு கோவம்”.
“அப்புறம் என்னாச்சி”, ஆர்வமாய் கேட்டாள் வர்ஷா.
“இவ கடுப்பாக்கி பாவம் அந்த பையன பிரின்சிபால் கிட்ட சொல்லிடா”, எனப் பதில் சொன்னார் சந்திரன்.
“அடிப்பாவி என்ன பண்ணி வெச்சி இருக்க”, என அருண் கேட்க.
“வேற என்ன அண்ணா பண்ண சொல்றீங்க”.
“கரெக்டா தான் செஞ்சி இருக்க தியா” எனப் பாராட்டினான் ராஜ். “இனி எதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லு”.
“சரி அண்ணா”.
‘நம்ப பாடு கிண்டாட்டம் தான் போல என’ தனக்குள் புலம்பினான் ஷ்யாம்.
பின் மீண்டும் விளையாட்டு துவங்க இம்முறை அந்த பாட்டில் ஷ்யாமை பார்த்தது.
அவனைப் பார்த்து அருண் கேட்ட கேள்வியில் அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
(அப்படி என்ன கேட்டான் அருண் அது அடுத்த எபியில் பாக்கலாம்.சீக்கிரம் கேரளா முடிக்கலாம்னு பாத்த என்னவோ அங்க இருந்து வர மனசே வரல…நெஸ்ட் எபி மட்டும் கேரளால இருந்துட்டு திருப்ப சென்னைக்கு போடலாம்…ஓகேவா…பை….. பை….)