💙இருளை ஈர்க்கும் ஒளி 💙
ஈர்ப்பு – 22
உன்னைத் தீண்டும் பொழுது மட்டுமே வெளிப்படுகிறது என் ஆண்மை.
நீ தீண்டும் பொழுது மட்டுமே தடுமாறுகிறது என் பெண்மை.
முருகன் மற்றும் வள்ளியிடம் விடை பெற்று அனைவரும் தங்கள் பயணத்தைத் துவங்கினர்.
அந்த பயணம் முழுவதும் ஷ்யாம் தியாவிடம் பேசிவிட நினைக்க அவளோ அவனைத் தவிர்த்துக் கொண்டே இருந்தாள்.
காரில், விமானத்தில் என அணைத்து இடத்திலும் அதே நிலைமை தொடர ஷ்யாம் தவித்துப் போனான்.
இப்படியே அவர்கள் பயணம் கழியச் சென்னை திரும்பினர்.
வீடு சேர்ந்த தியாவின் பேசிக்கு அழைப்பு வர யாரென எடுத்துப் பார்த்தாள்.
ஷ்யாம் என்ற பேர் மின்னவும் அழைப்பை ஏற்பதா வேண்டாமா என அவளுள் போராட்டம்.
அவளின் விரலோ அவளின் மனதைப் புரிந்து கொள்ளாமல் கால்லை அட்டென்ட் செய்திருந்தது.
இவள் அழைப்பை ஏற்றது தான் தாமதம் அந்த புறம் “தியா…. தியா…. தியா…. “, எனப் பல முறை இவளின் பேர் அவனின் குரலில் உச்சரிக்கப் பட்டது.
“தியா லைன்ல இருக்கத் தானே….”
“ம்….”
“தியா நான் உன்கிட்ட பேசணும்”
“ம்…. சொல்லுங்க”
“போன்ல இல்ல நேரல”
“இப்போ தானே வீட்டுக்கு வந்தோம். ஒரு டூ டேஸ் இருங்க நான் ஆபீஸ் வருவேன்ல அப்போ பேசிக்கலாம்”
“இரண்டு நாளா….”
அவனுக்கு இரண்டு நாட்கள் பொறுக்கும் அளவு பொறுமையில்லை இருந்தாலும் ‘அவள் ஆபீஸ் வரேன் என்றாளே’, அதுவே பெரிது என நினைத்தவன்.
“சரி”என பேசியை வைத்து விட்டான்.
அந்த இரண்டு நாட்கள் ஷ்யாம்க்கு இரண்டு யுகமாய் கழிய தியா அலுவலகம் வரும் நாளும் வந்தது.
அன்று காலை வேலையே எழுந்து தன் வழக்கமான ஜாகிங் முடித்து சீக்கிரமே கிளம்பிவிட்டான்.
அவன் அம்மா அவனுக்குத் தேநீர் கொண்டு வந்தவர் அவன் ஆபீஸ் கிளம்பத் தயாராய் இருக்கவும், “என்னடா இவளோ சீக்கிரம் ரெடி ஆகிட்ட”. என வினவ.
அப்போது தான் கடிகாரத்தைப் பார்த்தான், அது மணி ஆறு என இவனைக் குட்டியது.
“இல்லமா கொஞ்சம் வேல இருக்கு அதான் ரெடி ஆகிட்டா அதை முடிச்சதும் கிளம்பலாம்ல”.
“ஓ…. சரி இந்தா டீ குடிச்சிட்டு வேலைய பாரு”, எனக் கூறி சிறிது தூரம் சென்று மகனைத் திரும்பிப் பார்க்க அவனோ ஒரு வேலையும் செய்யாது கடிகாரத்தை முறைத்துப் பார்ப்பதை கண்டார்.
‘என்னாச்சி இவனுக்கு….’ என எண்ணிக் கொண்டே போனார்.
மணி 7:30 ஆகவும் வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டது இவளோ காலையில் யாரெனப் பார்க்கச் சென்றார் ராதா.
“வாங்க வாங்க …”, என வந்தவர்களை வரவேற்று அமர வைத்து ஷ்யாம் வர்ஷாவை இன்டெர்காமில் அழைத்தார்.
‘நானே டைம் போலன்னு இருக்கேன் அம்மா வேற…. எதுக்கு கூப்பிட்டாங்க’, எனச் சலித்துக் கொண்டே வந்தவன் யாருக்காக இவ்வளவு நேரம் நெட்டி முறிந்தானோ அவளே அவர்கள் வீட்டின் சோபாவில் அமர்த்திருப்பதை வியப்பாய் பார்த்தான்.
ஆம் தியா தான் அவள் அன்னையுடன் வந்திருந்தாள்.
வர்ஷாவும் வர “ஹே வா தியா…. வாங்க ஆண்ட்டி…” என அந்த வீட்டின் பெண்ணாக அவர்களை வரவேற்றாள்.
“இன்னும் என்னடி ஆண்ட்டி அத்தைனே கூப்பிடு”, என அவள் அம்மா கூறவும் இவள் அமைதியானாள்.
லட்சுமி, “ உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடுடா ஒன்னும் பிரச்சனையில்லை”.
அவருக்கு தன் மகனின் கவிதை மூலம் இவள் இன்னும் இதற்குச் சம்மதிக்கவில்லை என்பது புரிந்திருக்க அவளுக்கு அவகாசம் கொடுக்க நினைத்தார் அவர், அதே நேரம் தன் மகனின் ஆசையை நிறைவேற்றவும் எண்ணம் கொண்டார்.
“அது சரி இப்போவே இவளுக்குச் செல்லம் கொடுக்குறீங்களா அண்ணி நீங்க”.
“அப்படியில்ல அண்ணி பிள்ளைக்கு எது விருப்பமோ அப்படியே இருக்கட்டும் விடுங்க”.
இருவரும் ஒருவரை ஒருவர் அண்ணி என்றுதான் முறை வைத்து அழைக்கத் துவங்கி இருந்தனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணன் வர “அண்ணா எப்படி இருக்கீங்க” என லட்சுமி அவரை நலம் விசாரித்தார் பதிலிக்கு அவரும் விசாரித்தார்.
பின் தாங்கள் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினார்.
“இன்னைக்கி தியா ப்ராஜெக்ட் விஷயமா நம்ப ஆபீஸ் வரா அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்”.
போன்லையே சொல்லலாம்னு முதலில் யோசித்தவர் பின் அது மரியாதையாய் இருக்காதுனு என நேரியிலேயே வந்தனர்.
“ஒ…இன்னைக்கு தானா அது ஷ்யாம் சொன்னான் தியாமா வரானு” என ராதா கூற.
“ஆல் தே பெஸ்ட் தியா” என அவளை வாழ்த்தினார் கிருஷ்ணன்.
“தேங்க்ஸ் அங்கிள்”.
“அங்கிள்லா…மாமானு உரிமையா சொல்லுமா”, எனவும் இவள் உருது விழிக்க.
“உன் அண்ணாக்கு மாமானா உனக்கும் மாமா தான்” என்றார் அவர்.
‘ஐயோ அப்பா அது மட்டுமா காரணம் இல்ல அவ உங்க எதிர்கால மருமகள் அப்போ அப்படி தான் கூப்பிடனும்’ என ஷ்யாம் மாணசீகமாய் தந்தையிடம் பேசினான்.
இவர்கள் எல்லாம் இந்த திருமணத்தில் இவ்வளவு உறுதியாய் இருப்பதைப் பார்த்த வர்ஷாக்கு ஒரு மாதிரியானது, ‘நான் பலரைக் கஷ்டப்படுத்துகிறேனோ’ என தனக்குளே கேட்டுக் கொண்டாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு லட்சுமி வீடு திரும்ப நினைக்க ராதாவோ அவரை விடுவதாய் இல்லை.
“ஷ்யாம் நீ உன் கூடவே தியாமாவை அழைச்சிட்டு போ”, எனக் கட்டளையிட.
அவன் அன்னைக்குக் கோவில் கட்டும் எண்ணம் வந்தது ஷ்யாம்கு.
“சரிமா…”, என அவன் கிளம்பப் போக,
“ஷ்யாம் டிபன் வேணாமா…தியா நீயும் வந்து உட்கார் சாப்பிட்டுப் போகலாம்”, என்றார் ராதா.
“இல்ல நான் சாப்பிட்டேன் ஆண்ட் …..” எனக் கூறிக் கொண்டே வந்தவள் அவரின் முறைப்பில் அத்தை என வாக்கியத்தை முடித்தாள்.
“ ம்…தட்ஸ் குட். சரி அத்தைனு சொன்னதால விடுறேன் பட் கண்டிப்பா டீ குடிக்கணும் இரு கொண்டுவரேன்”.
“ஷ்யாம் நீ உட்காந்து சாப்பிடு நான் தியாக்கு டீ எடுத்துட்டு வரேன்”.
“சரிமா”, அவர் வருவதற்குள் இவன் சாப்பிடத் துவங்கினான்.
லட்சுமி தியாவிடம் “தியா தம்பி தட்டை பார்த்து பரிமாறு” எனவும்,
அவன் தட்டில் சாம்பார் தீரவும் சரியாய் இருக்க அவளே அவனுக்குப் பரிமாறினாள்.
‘ஆஹா இன்னைக்கி யார் முகத்தில் முழித்தேன்’, என்ற ஆராய்ச்சியில் இருந்தான் ஷ்யாம். அவங்கள் முகத்தில் தான் இனி என்றும் முழிக்கும் எண்ணம் அவனுக்கு வந்ததில் ஆச்சர்யம் என்ன.
அவளுக்கு டீ வரவும் அருந்தினாள். லட்சுமிகும் சேர்த்து தான்.
பின் தியா ஷ்யாம் இருவரும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
கார் சிறிது தூரம் சென்று நின்றது.
‘என்ன ஆச்சி எதாவது ரிப்பேரா’ என எண்ணிக்கொண்டே ஷ்யாமை பார்க்க அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அங்கே பலத்த மௌனம் நிலவியது.
அதை தியா தான் கலைத்தாள்.
“ ஏன் இங்க நிறுத்தி இருக்கீங்க”.
“உன் கிட்டப் பேசத் தான்”.
“சொல்லுங்க”.
“நீ ஏன் என்னை அவொய்ட் பண்ண”.
அவள் அமைதி காத்தாள்.
“சொல்லு தியா….. என் மேல கோபமா…”.
கோபமா…. அவளின் நிலையே வேறு….. அதை எப்படிப் புரிய வைப்பது அவனுக்கு.
‘இல்லை’ என அவள் தலையாட்டி மறுத்தாள்.
“இல்லையா, அப்புறம் ஏன் இந்த விலகல்”.
“அது……வந்து….”, என அவள் தயங்க.
“என் கிட்ட ஏன் தியா தயங்குற….”
அவளுக்கும் பகிரத் தோன்றியது…
“ஷ்யாம்…நீங்க அன்னைக்கு டேர் செய்ய என்னைப் பாக்கும் போது ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டா மாதிரி அசையாம ஏன் நின்னேன்? நீங்க என்னை…… என்னை கிஸ் பண்ண வந்திங்க தானே நான் ஏன் விலகாமல் அப்படியே நின்னேன்?…..அப்புறம் அன்னைக்கு நம்ப விழுதொம்ல அதுக்கு அப்புறம் உங்களை பேஸ் பண்ண ஒரு மாதிரி இருந்துச்சி….” அது……. என்ன உணர்வென்று அறிய முற்பட்டாள் பாவை அவள்.
‘பெண்மைக்கே உரியப் பாதுகாப்பு உணர்வு என்னைத் தவறாய் பார்த்தாளோ என்னை நெருக்க முயற்சிதாளோ அதை உணர்ந்து தள்ளி விலகிக் கொள்ளும் அவள் ஏன் அன்று அவன் முத்தமிட போறிங்கனு தெரிந்தும் விலக்கலை’ அவள் மனம் சிந்தித்தது.
“அடுத்த நாள் கீழே விழுந்ததும் பயத்தில் தெரியாதது, பயம் தெளிந்த பின் உங்க அருகாமை உங்க தொடுதல் என்னை பாதிக்கிறதுனு புரிய அதன் காரணம் அறியாமல் குற்றவுணர்ச்சியே மேலோங்கி இருந்தது எனக்கு. இந்த குழப்பத்தில் உங்ககிட்ட என்ன பேச அதான் இந்த விலகல்”. ஏனோ அவனிடம் அனைத்தையும் கூற தோன்றியது அவளுக்கு.
மடை திருந்த வெள்ளமாய் அவள் வாய்மொழியாகவே அவளின் மனநிலையை அவனுக்கு உரைந்தாள்.
இவனுக்கு அவள் மனது புரிந்தது. அவளுக்கும் தன் மேல் ஒரு ஈர்ப்பு உள்ளது அதை அறியாத கோதை குழப்பத்தில் இருக்கிறாள். தன்னை அவள் தவிர்க்கக் காரணமும் அதுவே எனப் புரிய அவன் இதழ் புன்னகையில் விரிந்தது.
அவளோ இன்னும் தெளியாத முகத்துடன் இருக்க அவள் முகவாயைப் பிடித்து தன் புறம் திருப்பினான்.
“எனக்கு உன்னோட நிலை புரிந்து நானும் இதைக் கடந்து தான் வந்தேன் தியாம்மா. ஒரு நாள் உனக்கே அதோட அர்த்தம் புரியும் இப்போ ரொம்ப போட்டு குழப்பிக்கொள்ளாத சரியா”.
“ம்….”.
“சரி ஆபீஸ் போவோமா”.
தன் மனம் தெளியவில்லை என்றாலும் அதிலே உழன்று கொண்டிருக்க விரும்பாமல் அருகில் இருந்தவனின் உற்சாகம் இவளையும் தொற்றிக்கொள்ள மற்றவற்றைப் புறம் தள்ளி ஆபீஸ் நோக்கி பயணமானாள்.
*************
அலுவலகத்தில்…..
காரை விட்டு இறங்கவும் முதலில் செக்யூரிட்டி ஆபிஸில் இவளுக்கான கெஸ்ட் ஐடியை வாங்கி தந்தான். இது கம்பெனி மற்றும் தியாவின் பாதுகாப்புக்காகத் தயார் செய்தது.
இவர்கள் எம்.டி அறைக்குள் நுழையவும் அங்கே இவர்களுக்காக மேனேஜர் காத்துக்கொண்டிருந்தார்.
மேனேஜர் ரங்கநாதன் ஷ்யாமுடைய தந்தையின் நண்பர். அவர் தொழில் தொடங்கியது முதல் கூடவே இருப்பவர். அவர் மீது ஷ்யாம்கு மரியாதை ஆதிகம்.
ஷ்யாம் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்தான்.
“தியாக்கு நம்ப அக்கௌன்ட் பைல்லாம் எடுத்துக் கொடுங்க”.
“தியாம்மா முதல எல்லா வருடத்தோட கணக்கு வழக்கு பாரு உனக்கு ஒரு ஐடியா வரும். அங்கிள் உனக்கு உதவிப் பண்ணுவார். நான் பிரீயா இருக்கும் நானும் உதவிப் பண்ணறேன் ஓகே வா”.
“ம்….”
“சரி நீ அங்கிள் கூட ரூம்க்கு போ எனக்குக் கொஞ்சம் ஒர்க்ஸ் இருக்கு அது முடிச்சிட்டு வரேன்”.
சரியென அவள் ரங்கநாதனுடன் சென்றாள்.
“அங்கிள் என் பேரு தியா”.
“அதான் தம்பி சொல்லுச்சே மா”.
“ஐயோ அங்கிள் அது அவர் சொன்னது நான் என்னை பத்தி சொல்லும்ல கேளுங்க”.
அவருக்கு குழந்தை இல்லை இவளின் பேச்சில் கவரப்பட்டு அவரும் அவளுக்கு தன் காதை கொடுத்தார்.
தன் குடும்ப உறுப்பினர்கள் பற்றிக் துவங்கி “நான் இப்போ பி.காம் பைனல் இயர் ஸ்டுடென்ட். என்னோட ப்ராஜெக்ட் பைனான்ஸ் அனாலிசிஸ்(finacial analysis)”, என்பது வரை பட படவெனப் பேசினாள்.
அவருக்கு இவளை மிகவும் பிடித்து விட்டது.
பின் ஷ்யாம் கூறிய கோபுகளைப் பெற்றுக் கொண்டவள். ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டு அவையுடன் ஒன்றினாள்.
அவர் பேக்டரி வேலை சிறிது இருப்பதாய் கூறி இவளுக்கு டவுட் இருந்தால் அதைக் குறித்து வைக்கச் சொல்லி நகர்ந்தார்.
தியாக்கு எம்.டி அறை அருகே ஒரு சிறு அறையில் தான் இடம்மைத்து இருந்தார்கள்.
கோப்புகள் பாதுகாப்பாய் இருப்பதற்காகவே ஒரு தனி அறை அமைக்கப் பெற்று அதற்கு அக்ஸஸ் டோர் பொறுத்தப் பட்டிருந்தது.
கம்பெனியில் சிலருக்கு மட்டுமே அந்த அறையின் ஆக்சிஸ் உண்டு ரங்கநாதனின் ஆக்சிஸ் கார்டை அவள் தற்காலிகமாய் உபயோகித்தாள்.
மிளகு, மஞ்சள், மிளகாய், மல்லி என அணைத்து மசாலாப் பொருட்களுக்கும் தனித் தனி கோப்புகள் இருக்க அனைத்தைத்தும் தேடித் தேடி பார்த்தா வேண்டியதாய் போனது. அணைத்து கோப்புகளைத்தும் மாறி மாறி திறந்து பார்த்தாள்.
ஒரு கட்டத்தில் மேசை வசதியாய் இல்லை எனக் கீழே அமர்ந்துவிட்டாள்.
பின் ஒரு வருடத்தின் விளைச்சல் எவ்வளவு? அதில் தரம் பார்த்த பின் கிடைத்தது எவ்வளவு? அதை எவ்வளவு ஏற்றும தி செய்தனர்? எவ்வளவு இங்கேயே விற்றனர்? விளைச்சல் செலவு அந்த குறிப்பிட்ட பொருள் மூலம் வந்த லாபம் என அனைத்தையும் பார்த்து பிரித்து அந்த அணைத்து காகிதங்களையும் ஒரே கோப்பில் மாற்றி அமைத்து அந்த கோப்பில் அது எந்த வருடத்திற்கானது என்பதைக் குறித்தாள். அதற்கே பல மணி நேரம் கழிந்திருக்கக் கீழே அமர்ந்து கால் மறுத்தது.
************
ஷ்யாம் இரண்டு மூன்று நாளாக ஊரில் இல்லாமல் போகவும் அப்போது நடந்த காரியங்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தான் எனவே நேரம் போனதே தெரியவில்லை.
வேலை முடியவும் மணியைப் பார்க்க அது 2:45 என்றது.
‘ஐயோ இவளோ நேரம் ஆச்சே தியா சாப்பிடலானு தெரியலையே’ என எண்ணியவன் அவன் அறையின் அருகே இருந்த கோப்புகள் அறைக்குச் சென்றான்.
அவனின் ஆக்சிஸ் கார்டு பயன்படுத்தி உள்ளே சென்று கோப்புகளின் குவியலுக்கு நடுவே கொலு விற்றிருக்கும் அவனவளை கண்டவன் “என்ன தியா இது” என்றான் பதட்டம் மேலிட எங்கே அவள் விழுந்து விட்டாளோ என.
“இல்ல மேசையில் இவளோ பைலை வைக்க இடம் போதலை அதான் எல்லாத்தையும் எடுத்துட்டு கீழ உட்கர்துட்டேன்”, என்றாள் அவள்.
“அது சரி”, அவளைப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
“ஷ்யாம் இங்க பாருங்க இந்த பைல் நான் ரெடி பண்ணேன் எல்லாமே தனி தனியா பாக்க கஷ்டமா இருக்கு”, என அவள் நிலையிலிருந்து மாறாமல் பைலை அவனிடம் நீட்டினாள்”.
அதை வாங்கி பார்த்தவன் அவளை மெச்சுதலாய் பார்த்தான்.
“செம தியா குட் ஜாப், நானுமே இப்படி இருந்த நல்லா இருக்கும்னு யோசிச்சி இருக்கேன் நீ பண்ணிட்ட”, என அவளைப் பாராட்டினான்.
“தேங்க்ஸ் ஷ்யாம் உங்களுக்கு இது ஓகேனா நான் மத்தத்தையும் சேஞ்சு பண்ணிறேன்”.
“பண்ணு தியாமா”
ம்…
“அதுலாம் சரி நீ சாப்பியா இல்லையா”
“ஐயோ மறந்துட்டேன்”
“சரியா போச்சு போ, சரி வா போய் சாப்பிடலாம்”.
சரியென எழப்போனவள் கால் மறுத்ததால் விழப் போனாள்.
அவளை கை பிடித்து நிறுத்திப் போன நேரம் சரியாய் அவள் கை மேலே ஷேல்பை பிடிக்கத் தூக்கி இருக்க அவனின் கரம் அவள் இடையில் அழுந்த படிந்தது.
அதில் அவள் விழித் தானாய் விரிய. அந்த விழிகளில் மூழ்கி இன்னும் இன்னும் உள்ளே சென்று கொண்டிருந்தான் அவன்.
அவள் நெளியவும் தன்னிலை அடைந்து கைகளை எடுத்தவன், “சாரி நான் கை பிடிக்கத் தான் வந்தேன்”.
“ம்…. “என நகர முயன்றாவளின் கால் இன்னும் சரியாகாததினால் மீண்டும் தடுமாற இம்முறை அவள் கரம் பற்றி அருகே இருந்த நாற்காலியில் அமர்த்தினான் ஷ்யாம்.
அவன் கீழே அமர்ந்து அவள் கால் தொட அதில் பதறி “என்ன பண்றீங்க நீங்க…..” எனக் காலை நகர்த்த,
அவள் கால்களை நகர்த்த முடியாமல் இருக்கமாய் பற்றி, “கொஞ்சம் இரு தியாமா”, என அவன் மென்மையாய் கூற.
அந்த குரல் அவளைக் கட்டிப்போட்டது. அசையாமல் இருந்தாள்.
அவன் மென்மையாய் அவள் பாதங்களைப் பிடித்து விட்டான்.அதில் அக்கறையே மேலோங்கி இருந்தது.
பெண்களை அடக்கியாள நினைக்கும் சில ஆண்கள் மத்தியில் இப்படியும் இருக்கிறானே என்ற வியப்பு அவளுக்கு.
காரியமே கண்ணாய் இருப்பவனை முதல் முறை ரசனையாய் பார்த்தாள்.
அகன்ற நுதல், அடர்ந்த புருவம், அரம் போல் கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, எவ்வித பழக்கமும் இல்லாததால் செழித்திருந்த உதடுகள், ஜாகிங்,ஸ்விம்மிங், எக்சசைஸ் என முறுக்கேறிய புஜக்கள் கட்டுக்கோப்பான உடல் என அவனை ஆராய்ச்சி பொருளாக்கினாள் அவள்.
அவன் நல்ல உயரம் ஆனால் தரையில் அவளுக்காய் தன் நீண்ட கால்களை மடக்கி தன் தொடையில் அந்த அணங்கின் செம்பாதத்தை தாங்கியிருந்தான். அவன் கைகளில் இவள் கால்கள் ஏதோ சிறுபிள்ளை கால் போல் தெரிந்தது.
இவ்வளவு நேரம் அவள் கால்களையே பார்த்தவன் ‘இப்போ எப்படி இருக்கு’, எனக் கேட்கலாம் என்று அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ அவன் இப்படி திடீரென பார்ப்பான் என எதிர்பார்க்காதவள் திரு திருவென முழித்தாள்.
அவளின் பார்வையே அவ்வளவு நேரம் பெண் அவனைத் தான் ரசனையாய் பார்த்திருக்கிறாள் என இவனுக்கு உணர்ந்த அவன் மனம் உவகையில் மகிழ்ந்தது. எனினும் அவளைச் சங்கடப்படுத்த விருப்பாமல் “இப்போ எப்படி இருக்கு” என இயல்பாய் கேட்டான்.
இவளும் “ம்…பரவால்ல” எனச் சகஜமானாள்.
“சரி வா சாப்பிடலாம் மணி இப்பவே மூணாச்சி” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
(ஆபீஸ்ல முதல் நாளே அமர்க்களமாய் போச்சி இனி வர நாட்கள் இப்படியே இருக்குமா இல்ல இதற்கு நேர்மாறாய் போகுமா…. இனி வர எபிகளில் பார்க்கலாம்)
Leave a Reply