💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-3f0118b9

ஈர்ப்பு – 6

“ ‘தற்கொலை’ என்னும் இருளை ‘தன்நம்பிக்கை, மனத் தைரியம், தெளிவான சிந்தனை, பொறுமை’ ஆகிய ஒளிகளைக் கொண்டு வெல்லலாம்”.

 

மறுநாள் காலை ஷ்யாமின் காரில் “ லைட்டிங் ஸ்டார்ஸ்” அனைவரும் அம்யுஸ்ட்மெண்ட் பார்க் நோக்கிப் புறப்பட்டனர்.

சென்னையின் பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டு பூங்கா அது. வாரயிறுதி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

இவர்கள் டிக்கெட்களை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர்.

அனைத்து ரைடுகளிலும் உற்சாகமாக விளையாட, காலைப்பொழுது கழிந்தது.

மதியநேரம் நெருங்க ஒரே ஒரு ரைடை முடித்துக்கொண்டு உணவருந்தலாம், என முடிவு செய்தனர்.

அந்த ரைடில் இரண்டு ரெண்டு பேராக ஏற வேண்டும்.

அருண் மித்து ஒன்றாக அமர, வர்ஷுவின் அருகில் அமர தியா செல்ல, அதற்குள் வேறு வழியிலிருந்து வந்த பெண் அமர்ந்துவிட்டாள். எனவே தியாவும் ஷ்யாமும் அருகருகே அமர்ந்தனர்.

அந்த ரைடு தலைகீழாகப் போகவே தியாவிற்கு என்னவோ செய்ய அருகிருந்த ஷ்யாமின் கைகளைப் பற்றிக்கொண்டாள். முதலில் ஒன்றும் புரியாதவன் அவள் இறுக்கமாகக் கண்கள் மூடி அமர்ந்திருக்கவும் அவள் நிலை உணர்ந்து அவள் பற்றிருந்த கைகளை அழுத்திக்கொடுத்து, “ஒன்னும் இல்லை தியா முடியப்போகுது”, என அவன் கூற, அவள் ஒன்னும் கூறினாள் இல்லை.

ரைடு முடிந்து வரும்போது அவளால் நன்றாக நடக்க முடியவில்லை. ஷ்யாம் அவளை கைதாங்கலாக அழைத்து வந்து அருகே இருந்த கல் இருக்கையில் அமர்த்தினான்.

அதற்குள் மற்றவர்கள் தியாவை நெருங்கினர். “என்ன ஆச்சி தியாம்மா”, என அருண் வினவ.

மித்துவும் வர்ஷுவும் அவள் கைப்பற்றி அருகில் அமர்ந்தனர்.

“தலைசுத்திடுச்சினு நினைக்கிறன்டா”, எனப் பதில் சொன்னான் ஷ்யாம்.

ஷ்யாம் அருகிருக்கும் கடையில் லெமன் ஜூஸ் வாங்கி வந்து தியாவிடம் நீட்ட, அதை வாங்க நீண்டவளின் கைகள் நடுங்குவதை பார்த்தவன் தன் தங்கையிடம் டம்ளரைத் தந்து அவளுக்குப் புகட்டச் சொன்னான்.

அவள் சற்று தெளிந்த பின் சாப்பிடச் சென்றனர்.

அனைவரும் எளிமையான உணவையே உண்டனர்.

தியாக்கு ஷ்யாம் உலர் பழங்கள் அதிகம் கலந்த பழ சாலட் மற்றும் ஜூஸ் வாங்கி வந்தான்.

“இந்தா தியா இத சாப்பிடு கொஞ்சம் தெம்பா இருக்கும்”.

“ம்…….”

“இப்போ எப்படி இருக்கு”.

“ம்…. பரவால்ல ஷ்யாம், பெட்டர்”.

“உனக்குப் பயமா இருந்தா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல” என்றான் அருண்.

“இல்லை அருண் அவள் ரைடுக்குலாம் பயந்ததில்ல நல்லா தான் விளையாடுவா இன்னைக்கு என்ன ஆச்சினு தெரியல”, என மித்து பதிலளித்தாள்.

ஷ்யாம் அனைவரையும் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகச் சொன்னான்.

“ஏன்?” என தியா வினவ.

“என்ன ஏன் வீட்டுக்கு போனா நீ ரெஸ்ட் எடுப்பல”.

“நான் நல்லா தான் இருக்கேன். நான் வேணா இனி ரைடுஸ் போகல, நீங்கப் போங்க நான் இங்க உக்காந்துக்குறேன். ப்ளீஸ் ஜாலியா இருக்கலாம்னு வந்துட்டு இப்படி பாதியில் போனா எனக்குக் கஷ்டமா இருக்கும்”.

“சரி, ஆனா யாரவது ஒருத்தர் கூட இருப்போம், சரியா”.

“ம்…சரி”.

மற்றவர் அடுத்த ரைடு போக, அருகே இருந்த இருக்கையில் தியா அமர்ந்தாள், அவளுடன் இருப்பதாகக் கூறி நின்றாள் வர்ஷு.

“இப்போ எப்படி இருக்குடி”.

“பரவால்ல வர்ஷு, கொஞ்சம் வெய்யில் அதான் இப்படியாச்சுனு நினைக்கிறன்”.

“ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேண்டி, தனியா இருப்பியா ஒன்னும் பிரச்சனை இல்லையே”.

“அதுலாம் ஒன்னும் இல்லைடி நீ போய்ட்டு வா”.

இப்படியாக தனியாய் வர்ஷு ரெஸ்ட் ரூம் சென்று திரும்பும் வழியில் “வர்ஷா” என்று கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்ப, அங்கே இருந்த உருவத்தைப் பார்த்து மிரண்டாள்.

அவளின் பயத்தைக் கண்டுகொண்ட உருவம் “என்ன என்னைய சுத்தமா மறந்துட்ட போல, ரொம்ப ஜாலியா இருக்கியே”.

இவள் சுற்றிமுற்றி யாராவது வருவார்களா, எனப் பார்க்க. அவள் நேரம் அப்போது பார்த்து யாருமே வரவில்லை.

“என்ன உன் ஆளுங்க யாராவது வராங்களான்னு பாக்குறியா. இப்போதைக்கு வரமாட்டாங்க. சரி நான் கேட்டது என்ன ஆச்சி?. நீ கேட்ட டைம் முடியப்போகுது, எனக்கு என்னவோ நீ என்னை ஏமாத்துறயோன்னு தோனுது”.

அவள் கைகால்கள் நடுங்க நின்றாள்.

யாரோ வரும் அரவம் கேட்ட அந்த உருவம் அவசரமாக, “சீக்கிரம் நான் சொன்னது ரெடி பண்ணு இல்லை நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்”, எனக் கூறி வேகமாக அங்கிருந்து சென்றது.

தியா தான் வர்ஷுவை தேடி வந்தாள்.

“என்னடி ஆச்சி இவளோ நேரம் இங்க என்ன பண்ற”.

முயன்று தன் குரலை இயல்பாக்கி, “ஒன்னும் இல்லைடி அதோ அந்த ரைடை பாத்துட்டு இருதேன்”.

“சரி வா, அங்க போய் உட்காரலாம்”.

“ம்……”

மீண்டும் இருவரும் அவர்கள் முன்பு அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தனர்.

தியா ஏதேதோ பேச, வர்ஷு சற்று முன்பு நடந்த நிகழ்வையே நினைத்திருந்தாள்.

தன் நினைப்பிலேயே உழன்று கொண்டிருந்தவளை உலுக்கினாள் தியா.

“என்னடி ஆச்சி உனக்கு, அப்படி என்ன யோசனை”.

“ஒன்னும் இல்லடி, என்றவள் சுற்றிமுற்றி தன் பார்வையைச் சுழல விட்டாள்”.

“யாரடி தேடுற”.

“ஆஹ்…….நம்ப ஆளுங்க வராங்களான்னு பாக்குறேன்”.

“அப்படியா, நான் கூட உங்கிட்ட அங்க பேசிட்டு இருந்தாங்களே அவங்கள தான் தேடுறியோன்னு நினைச்சேன்”.

விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷு.

“தியா……”

“நான் பார்த்தேன்டி பார்த்தது மட்டும் இல்லை பேசுனத்தையும் கேட்டேன்”.

அந்த ரெஸ்ட் ரூம்க்கு ரெண்டு பக்க வாசல். இவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே ஒன்று இருந்தது அதன் பின்புறம் ஒன்று, வர்ஷு அருகே இருக்கும் வழியைக் கவனிக்காமல் போக தியாவும் கண்மூடி இருந்ததினால் அவள் எந்த வழி போனாள் எனப் பார்க்கவில்லை, அருகே இருந்த வழியே உள்ளே சென்றிருந்தாள் தியா.

உள்ளிருந்த தியா வர்ஷாவை அழைக்கத் துவங்கும் முன் யாரோ அவளை அழைக்கவும் வர்ஷு சென்ற வழியே வெளியேற வந்தவள் அடுத்துக் கேட்ட வார்த்தைகளில் அப்படியே நின்றாள்.

அனைத்தையும் கேட்டவள் இதற்கு மேல் வர்ஷுவை அங்கே நிற்க விடக்கூடாது, என அவள் வந்த வழியே சென்று அப்போது தான் வருவதுபோல் வேண்டும் என்றே கால்களை அழுத்தி சத்தம் போட்டு கொண்டு வந்தாள்.

வர்ஷுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.

“வர்ஷு நம்ப வெளியே இருக்கோம் இப்படி அழாதே ப்ளீஸ். இந்தா முதல முகத்தைக் கழுவு”.

குளுமையான தண்ணீர் முகத்தில் படச் சற்று தெளிந்து தியாவிடம் தன் மனம் திறக்க வர அதற்குத் தடையாய் வந்தான் ஷ்யாம்.

“தியா….அண்ணாகிட்ட எதுவும் சொல்லாதே ப்ளீஸ்”.

“ம்…. சரி”.

“இந்தா தியா சாக்லேட் கையில் வெச்சிக்க ஒரு மாதிரி இருந்தா சாப்பிடு”, என அவளிடம் கொடுத்தான்.

“ஆமா உனக்கு என்ன ஆச்சி வர்ஷு டல்லா இருக்க”.

“ஒண்ணுமில்ல அண்ணா”.

“ஒண்ணுமில்ல ஷ்யாம் காலையில் இருந்து விளையாட்டே இருதோம்ல அதான் களைப்பா இருக்கு போல”.

வர்ஷுவும் ‘ஆம்’ என தலையாட்ட.

“சரி அப்போ கிளம்பலாம், இரு அவங்களை போய் கூட்டிட்டு வரேன்”.

“இல்லைணா நான் தியா கூட இங்கேயே உட்கார்ரேன் நீ போய் அவங்க கூட விளையாடு”.

“அவங்களும் போகலாம்னு தான் சொல்றாங்க. சரி பேசாம அங்க வந்து ஸ்விம்மிங் ஃபுல் பக்கம் உட்காருங்க உங்களை பாத்துப்போம்”.

“சரிண்ணா”.

அங்கே போய் அமர்ந்ததும் ஷ்யாம் நீந்த செல்ல, தனிமையில் அனைத்தையும் தியாவிடம் கூறினாள் வர்ஷு.

“எனக்கு என்ன பண்றதுனே தெரியல தியா செத்துடலாம் போல இருக்குடி” எனக் கூறியவள் தன் கன்னம் ஏறியவும் தான் தியா தன்னை அடித்திருக்கிறாள் என்பது புரிந்தது வர்ஷுக்கு.

“என்ன பேசுற வர்ஷு நீ… எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இருக்கும் அதை யோசிக்காமல்…. என்ன பேச்சி இது. அப்பா, அம்மா அண்ணாவலாம் யோசித்து பார். இது ஒன்னும் அவளோ பெரிய விஷயம் இல்லை விடு பாத்துக்கலாம்”.

மேற்கொண்டு தோழிகள் பேச முடியாமல் மற்றவர்கள் வர, அங்கிருந்து கிளம்பினர்.

போகும்போது இருந்த உற்சாகம் இப்போது அந்த மகிழுந்தில் இல்லை..

தியா வீட்டில் அவள் அன்னை மருந்துடன் காத்திருந்தார். அவள் வந்தவுடன் காபி கொடுத்து மாத்திரையைப் போட வைத்தார்.

அனைவருக்கும் எப்போதும் போல் லட்சு ஆன்ட்டியின் காபி கிடைத்தது.

“எப்படி ஆண்ட்டி சரியா மாத்திரையோடு வெயிட் பண்ணீங்க”, என அருண் வினவ.

“இன்னைக்கி வெய்யில் அதிகமா இருக்கும் போதே தெரியும் இவ இப்படி தான் வருவானு. அவளுக்கு மைக்ரேன்(migraine) இருக்கே. மாத்திரையை கைல வெச்சிக்க சொன்னா கேட்கறதே இல்லை”.

“சரி விடு லட்சு, புள்ள எவ்ளோ களப்பா தெரியுது இப்போ போய் பிள்ளையை திட்டிட்டு”.

“உங்க பொண்ண ஒன்னும் சொல்லக் கூடாதே வந்துடுவிங்களே”.

தியாவின் உடம்பை பார்த்துக் கொள்ளச் சொல்லி, பெரியவர்களிடம் விடைபெற்றுச் சென்றனர் மற்றவர்கள்.

வர்ஷு தியாவைப் பார்க்க, ‘கவலைப்படாதே நான் பார்த்துக்குறேன்’ எனச் செய்கை செய்யச் சரி எனத் தலையை ஆட்டினாள்.

“போ தியாம்மா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு அம்மா இரவுணவு ரெடி பண்ணிட்டு கூப்பிடுவாங்க”.

சரியன தன் அறைக்குச் சென்றவளின் நினைப்பு முழுக்க வர்ஷுவே நிறைந்திருந்தாள்.

வெகு நேரம் யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் பேசியை எடுத்து ஒரு நம்பருக்கு, “முக்கிய விஷயம் பேச வேண்டும் என் வீட்டின் அருகே இருக்கும் கோவிலில் நாளை காலை 11 மணிக்குக் காத்திருக்கிறேன் கண்டிப்பாக வரவும்”, என மெசேஜ் செய்தாள்.

அந்த புறமிருந்து “சரி” எனப் பதில் வரவும் அவள் அன்னை சாப்பிட அழைக்கவும் சரியாக இருந்தது.

இரவு உணவு முடிந்து, நாளை காலை என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும், என முடிவு செய்து படுத்தாள் தியா.

(தியா யாரை மீட் பண்ண போறா…வர்ஷாக்கு என்ன பிரச்சனை…இந்த கேள்விக்கான பதிலை அடுத்த எபில பாக்கலாம்)