💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-f7f5f3dc

ஈர்ப்பு – 2

“ ‘அறியாமை’ என்னும் இருளை,  ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”.

அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை.

நண்பன் பதில் பேசாமல் இருக்கவும் அவன் தோள் தொட,

“அங்! என்னடா” என்றவனின் பார்வை அந்த பெண்களின் மேலேயே இருந்தது.

“அப்போ சாயந்தரம் நீ வரத்தானே” என்ற நண்பனின் கேள்வியில் திருதிருத்தான்.

“எங்கடா”

“அடப்பாவி! நான் சொன்னதா கேட்கவேயில்லை”.

அவன் பார்வை எங்கே போகிறது என்று பார்த்தவன் அங்கிருந்த பெண்களைக் கவனிக்கவும்”என்னடா சைட்டா”.

” ச்சே! இல்லடா தெரிஞ்சவங்கடா”

“அப்படியா! எவளோ தெரிந்தவங்க”, எனக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த பெண்களில் ஒருத்தி அவர்கள் புறம் திரும்பி கையாடினாள்.

“பாத்தியா, என்னை பாத்து கையாடும் அளவுக்கு தெரிந்தவங்க”, என நண்பனுக்குப் பதில் உரைத்து அவளைப் பார்த்து பதிலுக்கு கையாட்டினான்.

“எப்படி இருக்கீங்க? வீட்டில் அத்தை மாமாலாம் சௌக்கியமா? “அவள் அருகில் வந்து வினவ.

“எல்லாரும் நலம்”, எனப் புன்னகைத்தவன் அவர்கள் குடும்பத்தின் நலம் கேட்டான்.

“இங்க தான் அப்ளை பன்றியா என்ன கோர்ஸ்?”

“பி. காம், நீங்க?”.

“எம். பி. எ”.

“ஒரே கல்லூரி தானே அடிக்கடி பாக்கலாம், சரி என் தோழி காத்திருக்கிறாள் பை”, என்று நகர்ந்து விட்டாள்.

அவள் நகர்ந்த மறுநோடி “என்னடா அவங்க அத்தை மாமா பத்தி உங்கிட்ட விசாரிக்கிறாங்க!”.

“என் அம்மா அப்பா பத்தி என்கிட்ட தானே கேட்கணும்”.

“ஓ!அப்படியா”,  எனச் சாதாரணமாகக் கேட்டு பின் சுதாரித்து, “என்ன உன் அப்பா அம்மா அவங்க அத்தை மாமாவா??”

ஆமாடா, “நேத்து ஒரு உறவுக்கார திருமணத்துக்குப் போன இல்ல அங்கே தான் இவளைப் பார்த்தேன்” என தன் கதையைக் கூறினான் அருண்.

பல வருடங்கள் கழித்து ஒரு உறவினர் திருமணத்துக்கு சென்றிருந்தான் அருண். அங்கே வயதின் காரணமாக ஒரு பெண்ணை மும்முரமாக சைட் அடித்துக்கொண்டிருந்தான்.

பிறகு தான் தெரிய வந்தது அது அவன் ஒன்றுவிட்ட அத்தை பெண் என்பது.

அருணின் அப்பா ரகுவின் காதல் திருமணத்தால் பிரிந்த குடும்பம் பல வருடங்கள் கழித்து இந்த திருமணத்தில் சந்தித்து இணைந்தனர் காரணம் அவர்களை எதிர்த்த தந்தைமார்கள் சமீபத்தில் தான் சிவபதம் அடைந்தார்கள்.

“ஓ!அப்போ உன் அத்தை பெத்த ரத்தினமும் நீயும் ஒரே காலேஜா….. என்ஜாய் பண்ணுடா”, என தன் நண்பனைக் கிண்டலடித்தான் ஷ்யாம்.

அருண், ஷ்யாம் இருவரும் பள்ளி நண்பர்கள். ஜாகிங், ஜிம் என இருவரும் தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர்.

ஷ்யாம் வீட்டின் மூத்த மகன், நல்ல உயரம், கூர்மையான கண்கள், ஆண்மைக்குரிய அடர்ந்த மீசை, இருக்கிறதா இல்லையா என்று தெரியாத தாடி, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்ல பையன் படிப்பிலும் கெட்டிக்காரன்.

ஷ்யாமின் அப்பா கிருஷ்ணமூர்த்தி சொந்த தொழில் நடத்தி வருகிறார்.

மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை, சோம்பு, மிளகு போன்றவற்றை விளைவித்து கே. ஆர் பிராண்ட் என்ற பெயரில் ஏற்றுமதி செய்கிறார்.

அது மட்டும் இல்லாமல் டீ மற்றும் காபி தோட்டங்களும் உண்டு அவைகளையும் ஏற்றுமதி செய்கிறார். தன் மனைவி ராதாவையும் அணைத்து தொழில்களிலும் பங்காளராக சேர்த்துத்துள்ளார்.

ஷ்யாமின் அன்னை ராதா மிகவும் திறமைசாலி. வெறும் பேருக்காக இல்லாமல் தொழிலில் என்ன என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பார்.

அவர்கள் குடும்பத்தின் கடைக்குட்டி வர்ஷா.

வர்ஷாவும் இவர்கள் யூனிவர்சிட்டியில் தான் பி. காம் அப்ளை செய்திருக்கிறாள்.

இவர்கள் ஐவரும் யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்து கல்லுரியில் கால் பதித்தனர்.

தியாவிற்கும் மித்துவிற்கும் குதூகலம் தாங்க முடியவில்லை. முன் தினம் தான் இடம் கிடைத்ததிற்கான கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு வந்தனர் இருவரும்.

முதல் நாள் வகுப்பில் மித்துவின் தூக்கத்தைக் களைத்தபடி பாடத்தைக் கவனித்திருந்தாள் தியா.

அதை அவர்கள் அருகிலிருந்த வர்ஷா பார்த்துச் சிரித்தாள்.

அவளுக்கு நெருங்கிய தோழிகள் யாரும் இல்லை, அவள் பணக்கார வீட்டுப் பெண் கண்டிப்பா திமிராதான் இருப்பாள் எனச் சிலர் ஒதுக்கினர், அவள் பணத்தைப் பார்த்துப் பழகியவர்களை இவள் ஒதுக்கினாள்.

ஏனோ தியா மித்துவை பார்த்தவுடன் அவளுக்குப் பிடித்துவிட்டது. அவளும் தியாவுடன் சேர்ந்து மித்துவை எழுப்பி பேராசிரியரிடம் திட்டுவாங்காமல் பார்த்துக்கொண்டாள்.

பிறகு இடைவெளியில் இவர்களுடன் பேச்சி கொடுத்து இணைந்தாள். அதன் பின் மூவரும் ஒன்றாகவே திரிந்தனர்.

இப்படியே முதல் ஆறு மாதம் செல்ல தியா, மித்து மற்றும் வர்ஷா மூவரும் மிகவும் நெருங்கியிருந்தனர்.

முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து மதிப்பெண்களும் வெளியாகியிருந்தது. தியா தான் வகுப்பில் முதலாவது, மற்ற இருவரும் நல்ல பெர்ஸன்ட் எடுத்திருந்தனர்.

ஷ்யாம் அருண் இருவரும் 90% மேல் எடுத்திருந்தனர்.

அருண் படிப்பின்னூடே தன் காதல் பயிரையும் வளர்த்து வந்தான். இவர்களின் வகுப்பறைக்கு நேர் மேல் முதல் தளத்திலிருந்தது பி. காம் முதலாம் ஆண்டு வகுப்பறை.

அணைத்து இடைவேளையிலும் தோழிகள் மூவரும் இருக்கும் இடத்தில் இவனையும் காணலாம்.

அதில் அவன் சாமர்த்தியம் என்னவென்றால் அவன் இவ்வாறு வருவது மூன்று தோழிகளுக்குமே தெரியாது.

(அருண் அப்படி யாரை தான் காதலிக்கிறான்?)