💙இருளை ஈர்க்கும் ஒளி 💙

eiFC8EY29611-42ca9eae

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

 

ஈர்ப்பு -18

 

இறைவனின் அழகிய ஓவியமாம் இயற்கையில் மனம் லயித்து விட்டால் வேறெதுவும் நினைவில் நிற்காது

 

தியாவின் பிறந்தநாளுக்கு  இரண்டு நாள் முன்பு நண்பர்கள் காலையிலேயே விமானநிலையம் வந்திருந்தனர் அவர்கள் போகும் இடத்துக்கு நேர் விமானம் இல்லை. எனவே கோழிக்கோடு வரை விமானத்தில் சென்று, பின் காரில் அவர்கள் போகும் இடத்துக்குப்  பயணம் மேற்கொள்ள வேண்டும்.

 

காலையில் ஏழு மணிக்கு  விமானம். ஒன்பது மணிக்கு கோழிக்கோடு சென்றடைந்தனர்.

 

அவர்களுக்காக அங்கே கார் காத்திருந்தது. அதில்  தாங்கள் போகும் இடம் நோக்கிப் பயணித்தனர். மூன்று மணி நேர பயணதற்குப் பின் 

இவர்கள் கார் அந்த அழகிய பங்களாவிற்குள் சென்றது.

வெளியே காத்திருந்த முருகன் அவர்களை வரவேற்றான்.

“வாங்கச் சின்னையா எப்படி இருக்கீங்க, பாப்பா நீங்க எப்படி இருக்கீங்க”.

“நல்லா இருக்கோம் அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க” என வர்ஷு ஷ்யாம் இருவரும் கேட்டார்கள்.

“உங்க புண்ணியத்துல நல்ல இருக்கோம் “.

ஐயா அம்மாலாம் நல்ல இருக்காங்களா சின்னையா 

“ஐயோ! அண்ணா எத்திணி தடவச் சொல்லி இருக்கேன் சின்னையானு கூப்பிடாதீங்க”.

“பழகிடுச்சு சின்னையா”.

“பாரேன் மறுபடியுமா இது சரி படாது நான் கிளம்பிறேன்”.

“ஐயோ! என்ன தம்பி நீங்க வந்த உடனே கிளம்புறேன்னு உள்ள வாங்கத் தம்பி”.

“ம்ம்…இது பரவால்ல இப்படியே கூப்பிடுங்க”.

ஐவரும் உள்ளே செல்ல குளிருக்கு இதமாய் வள்ளியின் டீ கிடைத்தது.

கணவன் மனைவி இருவரும் ஏதோ தங்களுக்குள் விவாதித்துக் கொள்ள,

அதைக் கவனித்த ஷ்யாம் “என்ன அக்கா என்ன தான் நடக்குது அங்க…”

“இதுக்கு தான் வாய மூடச் சொன்னேன் கேட்டியா இப்போ பாரு தம்பி கேட்குது…”

“இதுல என்ன இருக்கு…நானே தம்பி கிட்ட கேட்குறேன்”

பின் ஷ்யாமிடம் “இவங்க இரண்டு பேரில் நம்ப பாப்பாக்கு பாத்த மாப்பிள்ளை யாரு தம்பி”.

வள்ளி இவ்வாறு கேட்கவும் வர்ஷுவின் முகம் மாற அதை கவனித்த ராஜ் ‘ஐயோ வந்த உடனேவா’ எனப் புலம்பினான்.

“உங்களுக்கு எப்படிக்கா தெரியும்”, என ஷ்யாம் நிலைமையைச் சகஜமாக்கக் கேட்டான்.

“அம்மா சொன்னாங்க தம்பி மாப்பிள்ளை வராரு நல்லா கவனிச்சிக்கோங்கனு”.

“ஓ! இதோ இவர் தான் நம்ப வீட்டு மாப்பிள்ளை”, என ராஜைச் சுட்டிக்காட்டினான்.

ராஜுக்கு தர்மசங்கடமானது இன்னும் வர்ஷு இதற்குச் சம்மதிக்காத நிலையில் இந்த பேசிகளை எப்படி எதிர்கொள்வதேன அவனுக்குப் புரியவில்லை வர்ஷு வேற அங்கே இருக்க அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டான்.

“எங்க பாப்பாக்கு நீங்க ஏத்தவர் தான்” என வள்ளி கூற.

“இந்தா பிள்ள இப்படியா பேசுவ” எனக் கண்டித்த முருகனைத் தடுத்தான் ஷ்யாம்.

“அவங்க ஒன்னும் தப்பா சொல்லலையே…”.

பின் வள்ளி சமையலறை நோக்கிச் செல்ல.வர்ஷு மித்துவை அழைத்து கொண்டு தங்கள் அறை நோக்கிச் சென்றாள்.

“டேய் வர்ஷு எதிர்க்க இப்படி  பேசிட்டு போறாங்கலேடா”.

“என்ன மச்சி வர்ஷாக்கு ரொம்ப பயப்புடுற போல” என அருண் கலாய்க்க.

“உனக்கு என்னடா ஒரு பிரச்சனையும் இல்லாம மித்து ஒத்துக்கிட்டா எனக்கு அப்படியா”.

நண்பனின் பாவனையில் சிரித்து, பின் நினைவு வந்தாற்போல் “ஆமா அன்னைக்கு மேல என்ன பேசுனீங்க? வர்ஷா என்ன தான் சொல்றா”.

அன்று நடந்ததை ராஜ் கூற “அவளுக்குக் கொஞ்சம் டைம் குடுடா எல்லாம் சரியாகிடும்”.

“அதுனால தாண்டா நான் அவளை ஏதும் டிஸ்டர்ப் பண்ணல”.

“ம்…,  சரி வாங்கடா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுப்போம் சாப்பாடு தயாரான வள்ளி அக்கா சொல்லுவாங்க”.

*********

“அம்மா இந்த டிரஸ்க்கு பேண்ட் எங்க…அம்மா இந்த டிரஸ்க்கு ஷால பாத்திகளா….. “, என தியா வழமை போல் பொருட்கள் அடுக்க தன்  அன்னையை ஒரு வழி பண்ணிக் கொண்டுருந்தாள்.

“இதுக்கு தான் உருப்படியா  அடுக்கி வைக்கணும்னு சொல்றது கேட்டா தானே கப்போர்ட திறந்தாலே பத்து துணி கீழ விழுது”, என அவளைத் திட்டிக் கொண்டே  துணிமணி அடுக்கினார்.

“அண்ணா இன்னைக்கி எத்திணி மணிக்கு வருவாங்க”.

“அவன் எங்க இங்க இருக்கான் வரத்துக்கு ஊருக்கு தானே போய் இருக்கான்”.

“எப்போ எந்த ஊருக்குமா போனாங்க என்கிட்ட எதுவும் சொல்லலை”.

‘ஐயோ வாய விட்டுட்டேனே…’ “அது.. வந்து… ஏதோ அவசர வேலைனு காஞ்சிபுரம் போனான் உன்கிட்ட சொல்லச் சொன்னான் மறந்துட்டேன்”, எனச் சமாளித்தார்.

“அப்படியா”, என ராஜுக்குக் கால் செய்ய போனவளைத் தடுத்தார்.

“அண்ணா ரொம்ப பிஸிமா இப்போ கால் பண்ணாதே அவனே வேலை முடிச்சிட்டு கால் பண்ணுவான்”.

“சரிமா”.

“சரி மீதி துணிய எடுத்து வை நான் போய் சமையலை பாக்குறேன்”,  என அங்கிருந்து தப்பித்து ஓடினார். ராஜுக்குக் காஞ்சிபுரம் பற்றிக் கூறவும் மறக்கவில்லை அவர்.

சிறிது நேரம் கழித்து ராஜேஷ் கால் செய்து காஞ்சிபுரத்தில் இருந்து பேசுவது போல் பேசினான்.

“நைட் வேலை இருக்கு சோ என்னால வர முடியாது நீங்க கிளம்பி போங்க நான் உன் பர்த்டே அனைக்கி கண்டிப்பா அங்க இருப்பேன்”, என தங்கைக்குச் சந்தேகம் வராதது போல் பேசி வைத்தான்.

மறுநாள் காலை  விமானத்தில் கோழிக்கோடு சென்றடைந்தனர்.

கோழிக்கோட்டில்  காத்திருந்த காரில் பயணம் துவங்கியது.

தியா மிகவும் குதூகலமாக இருந்தாள். காணும் இடம் எங்கும் பச்சை பசேரென கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது.

பார்க்கும் இடமெல்லாம் இறைவனால்  ரசித்து ரசித்து வரையப் பட்ட ஓவியமாய் அவள் கண்ணைக் கவர்ந்தது. ஈரக் காற்று உடலைத் தழுவிச் சென்றது இதமாய் இருந்தது.

நீர்வீழ்ச்சியைக் கண்டபோது காரை நிறுத்தி சிறிது நேரம் அதன் அழகைப் பருகி விட்டே சென்றனர்.

இவ்வாறு பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி வெகு நேரம் கழித்தே வயநாடு வந்து சேர்ந்தனர்.

வயநாடு (வயல்நாடு) மாவட்டம் கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாகப் பழைய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர் ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இங்கே கே.ஆர் குழுமத்தின் டீ எஸ்டேட் உள்ளது. அந்த எஸ்டேட் ஒட்டியே மலை மேல் அவர்களின் பங்களாவும் உள்ளது.

இந்த பங்களா கேரள கட்டிடக் கலையில் உருவானது. ஓட்டு கூரையோடு உள்ள நாலுகட்டு வீடு என்று கூறப்படும் வீடு. இது பொதுவாக ஒரு செவ்வக அமைப்பாகும், அங்கு நான்கு அரங்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, வானத்திற்குத் திறந்திருக்கும் மத்திய முற்றம் இருக்கும். பக்கவாட்டில் உள்ள நான்கு மண்டபங்களுக்கு வடக்கினி (வடக்குத் தொகுதி), பாடிஞ்சாத்தினி (மேற்குத் தொகுதி), கிழக்கினி (கிழக்குத் தொகுதி) மற்றும் தெக்கினி(தெற்குத் தொகுதி) என்று பெயர்.

இவ்வாறு இரண்டு அடுக்குகள் கொண்ட நாலுகட்டு பங்களா அது. அதைச் சுற்றிப் பல செடி கொடிகள் கொண்ட பெரிய தோட்டமும் உண்டு.

“எப்பா என்ன அழகு” என தியா அங்கேயே நின்றுவிட்டாள்.

இயற்கை அழகை ரசிப்பவளைச் சாளரத்தின் வழியே ரசித்திருந்தான் ஷ்யாம்.

அவள் வந்த வண்டி கேட்டில் நுழைந்தது முதல் அவன் கண்கள் அவளைக் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது.

“வழக்கம் போலத் தோட்டதைப் பாத்த உடனே நின்னுட்டாளா…”, என அவன் வாய் முணுமுணுத்தது.

‘இப்படி தான் அங்க அங்க வண்டியை நிறுத்த சொல்லி இருப்பா அதான் மூன்று மணி நேரத்தில் வர வேண்டியது நான்கு மணி நேரம் கழித்து வந்திருக்கா, எங்க அவளுக்காக நான் ஒருத்தன் காத்துட்டு இருக்கிறது அவளுக்குப் புரிஞ்சா தானே’.

“அப்பா இந்த இடம் எவளோ அழகா ரம்மியமா இருக்கில்ல”

“ஆமாமா”.

இவர்களையும் முருகனும் வள்ளியும் வந்து வரவேற்று உபசரித்தனர்.

“யே புள்ள வந்திருக்கிறது யாரு தெரியுமில்ல நம்ப வர்ஷா பாப்பாவோட வருங்கால மாமியார் மாமனார் அப்புறம் நாத்தனார்”.

“ஓ! அப்படியா”.

அப்படி தான் அப்புறம் மேல அவங்களாம் இருக்கறது மாப்பிள்ளை ஐயா தங்கச்சிக்குத் தெரியாது பாத்து நடந்துக்கோ.

“அதுவும் அப்படியா, அப்போ அவங்களுக்கு நைட் சாப்பாடு”.

“நீ எடுத்து வை நான் மேல போய் குடுத்துட்டு வரேன்”.

“சரிங்க”.

தியாக்கு அந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது அதிலும் அந்த பங்களா முற்றத்துடன் அவளை மிகவும் கவர்ந்தது.

அவள் தாய் தந்தை ஓய்வெடுக்க அறைக்குச் செல்ல, இவள் தன்னை கவர்ந்த அந்த முற்றத்திற்குச் சென்றாள்.

அருண் அவன் கம்பெனி வேலைகள் பார்க்க வேண்டும் என்பதால் தனி அறையில் இருந்தான். ராஜும் தனியே தங்கிக் கொண்டான். எனவே தான் ஷ்யாம் தியாவை அவன் அறை சாளரத்தில் இருந்து சுதந்திரமாய் பார்க்க முடிந்தது. அவன் அறையில் மூன்று சாளரங்கள் உண்டு ஒன்று வாசல் பார்த்தது மற்றொன்று தோட்டம் பார்த்தது மூன்றாவது முற்றம் பார்த்தது.

தியா வந்தது முதல் மூன்று புறமும் நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறான்.

சிறிது நேரம் வரவேற்பறையில், பின் தான் எடுத்து வந்ததை அவர்களுக்கென ஒதுக்கப் பட்ட அறையில் வைப்பது என ஆள் கண்ணில் படாமல் தவித்தான். இப்போது தான் அவன் தேவதை அவன் கண்களுக்கு விருந்தாய் அந்த முற்றத்தில் காட்சியளித்தாள்.

முற்றத்தின் ஓரம் ஒரு மர ஊஞ்சல் என்னிடம் வா வா என தியாவை அழைக்க அதனிடம் சென்றாள். யானைகள் தங்கள் தும்பிக்கையை ஒன்றோடு ஒன்று பிணைத்தார் போலிருந்த சங்கிலியைத் தடவிப் பார்த்து அதில் ஏறி அமர்ந்தாள்.

மனம் லேசாக மெல்லக் காலை ஊந்தி தள்ளினாள். காதில் ஹெட் செட்டில் அந்த சூழலுக்கு ஏற்ப ஒரு பழைய பாடலை ஓட விட்டாள்.

அவளையே கவனித்திருந்தவன் அந்த ஊஞ்சலாய் தான் மாறக் கூடாதா என்ற ஏக்கத்துடன் அவளையே பார்த்திருந்தான். காற்றில் அலைப்பாயும் அவள் கூந்தலில் விரல் கோத ஆசை கொண்டான். எப்போதும் போல் அவளின் கால் கொலுசு கிங்கிணி நாதமாய் இசை பாடி அவனை தன் புறம் திருப்ப அதில் கவனம் பதித்திருந்த நேரம் அவன் காதுகளில் விழுந்தது அந்த பாடல் அதுவும் அவளின் குரலில்

🎼எங்கிருந்தாலும்

உன்னை நான் அறிவேன்

உன்னை என்னையல்லால்

வேறு யார் அறிவார்……🎼

 

ஒரு நிமிடம் அவனுக்குப் பக்கென ஆனது. ‘என்னடா இது, நம்பலை பாத்துட்டாளா’,  அவனின் யோசனையை கலைத்தது அவளின் குரல்  அதில் மேலும் குழம்பினான்.

🎼மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

அழகர் மலை அழகா

இந்த சிலை அழகா என்று

மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன…..🎼

 

இப்போது திரைசீலை பின்னால் ஒளிந்து மெல்ல  மெல்ல அதை விளக்கி அவளை உற்றுப் பார்க்க அவள் இமை மூடி பாடலில் ஆழ்ந்து பாடியது தெரிந்தது. அதன் பின் தன் குழப்பத்தை விடுத்துப் பாடலில் கவனமானான்.

‘நீ இவளோ இனிமையா பாடுவியா’ மானசிகமாய் அவளுடன் பேசினான்.

 

இப்போது மீண்டும் அதே  வரிகள் வந்தது.

 

🎼மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

அழகர் மலை அழகா

இந்த சிலை அழகா என்று

மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன…..🎼

 

‘அதுல என்ன உனக்குச்  சந்தேகம் இதோ என் கண்ணுக்கு முன் தெரியுற உயிருள்ள சிலை தான் அழகு’.

பாடல் முடியவும் கண்கள்  திறந்து சுற்றி முற்றிப் பார்த்து உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் போகவும் இவன்  தனக்குப் பிடித்த பொம்மையைப் பிடுங்கிக் கொண்ட குழந்தையாய் முழித்து நின்றான்.

இரவு உணவை முடித்து தியா உறங்கவும் சந்திரன் ராஜுக்குக் கால் செய்தார். 

ராஜ் மற்றவர்களுக்குத் தகவல் கொடுக்கவும் அனைவரும் கீழே கூடினர்.

“லட்சு ஆண்ட்டி நீங்க தியா கூட ரூம்லயே இருங்க அவ வெளிய வராம பாத்துக்கோங்க”, என அவரை அனுப்பிவிட்டு அவர்கள் தியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தயார் செய்தனர். அணைத்து ஏற்பாடுகளும் முடியவும் தியாவை அழைத்து வரச் சொன்னான் ஷ்யாம்.

அவரும் அவளை எழுப்பி முகம் அலம்பி அணைத்துச் சென்றார்.

“என்னமா இது இந்த நேரத்தில் இப்படி பண்ணறீங்க”, என அலுத்துக் கொண்டே  வந்தவள் இருண்ட அறையைக் கண்டு அமைதியானாள்….

“அம்மா என்னமா ஆச்சி  கரண்ட் போச்சா என்ன எனக்கு இருட்டுனா பயம்னு தெரியாதா எங்கமா போன…அம்மா…அம்மா”,  என்றவளின் குரல் அறை முழுதும் பரவிய வெளிச்சத்தில் அப்படியே நின்றது.

 

அங்கிருப்பவர்களைப் பார்த்து அசடுவழிந்தாள் அவள்.

அவளின் பாவனையில்  அனைவரும் சிரிக்க ஷ்யாம் மட்டும் ‘பாவம் ரொம்ப பயத்துட்டா’ என அவளுக்காகப் பாவப்பட்டான்.

பின் கொண்டாட்டம் இனிதே துவங்கியது அவளுக்கான பிரத்தியேக கேக் தயாராகி இருந்தது. அதை வெட்டி அனைவருக்கும் ஊட்டினாள் அதில் ஷ்யாமும் அடக்கம் அவன் நிலை சொல்லவா வேண்டும்.

அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அவள் வாழ்க்கையில் குடும்பம் மற்றும் நண்பர்கள் கூட்டம் இரண்டுமே முக்கியம்.

அப்படி இருக்க இப்படி அவளுக்கு நெருக்கமானவர்கள் ஒன்றாக கூடி களிப்பது மகிழ்ச்சியின் உச்சமாய் இருந்தது.

கேக் செமயா இருக்கு டேஸ்ட்டும் அள்ளுது.

“அள்ளாதா பின்ன அண்ணா உனக்காக பார்த்து பாத்து அவனே பண்ணது”, என வர்ஷா கூறவும் ஷ்யாமை பார்த்தாள்.

“நீங்களே பண்ணிங்களா”

ஆச்சிரியத்தில் விரிந்த அந்த கண்களை பார்த்து கொண்டே ஆம் எனத் தலையாட்டினான்.

“கேக்லாம் வெட்டியாச்சி சரி எல்லாம் போய் காலகாலத்துல தூங்கலாம் வாங்க” என்ற அருணை தடுத்த ஷ்யாம்,

“டேய் இன்னும் செலிப்ரஷன் முடியலடா” என்றான்.

“இன்னும் என்னடா”.

“எல்லாம் தோட்டத்துக்கு வாங்க மீதி செலிப்ரஷன் அங்க தான்”.

“அங்க என்னடா இருக்கு”.

“வந்து பாத்தா தெரியப்போகுது”.

அங்கு சென்று பார்த்த தியாவிற்கு துள்ளல் தாங்கவில்லை.

(நாமலும் அடுத்த எபில  அங்க போய் பாக்கலாம் வாங்க…இப்போ பை பை)