💙இருளை ஈர்க்கும் ஒளி 💙

IMG_20221110_104336

 

💙இருளை ஈர்க்கும் ஒளி 💙

 

ஈர்ப்பு – 25

 

என் அனுமதி இல்லாமல் வருகிறான்………

அப்பனே உன்னால் எனக்கு பல பிரச்சனைகள் தயவுசெய்து என்னிடம் வராதே போ என்றாலும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான்….. இவனை வைத்துக் கொண்டு நான் என்னதான் செய்ய…….

அப்படி யார் என்று பார்க்கிறீர்களா எல்லாம் என் முன்கோபம் தான்…..

 

ஏனோ திடீரென்று முழிப்பு வர, கண்ணை திறந்து பார்த்தாள் வர்ஷா. ஒருவன் கத்தியை ஓங்கிக் கொண்டு இவளை குத்த வர, அவளால் தடுக்க முடியாமல் இருந்தாள் இந்த நிலையில் தான் ராஜ் உள்ளே பார்த்தது.

படுக்கை கதவின் அருகேயே இருக்க, ஒரே பாய்ச்சலில் அந்த கயவனை பிடித்து அவன் கையில் இருந்த கத்தியை பிடுங்க, அது சிறிதாய் ராஜின் கையை பதம் பார்த்தது.

அதைக் கண்டுகொள்ளாமல் அவனை நொறுக்கினான் ராஜ். போலீஸ் அடி என்றாள் சும்மாவா ஒவ்வொரு அடியும் இடியென விழ, அவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து தப்ப முயல ராஜும் விடவில்லை எதிரே வந்த ஷ்யாமும் விடவில்லை.

தியா மற்றும் ஷியாம் இருவரும் டீ குடித்து முடித்து வர, அறையின் கிட்ட வரவும் யாரோ அடிக்கும் ஒலியும், யாரோ கத்தும் சத்தமும் கேட்டதில் விரைந்து வந்தார்கள்.

அப்போது அந்த கயவன் தப்ப முயல, இரு சிங்கங்களுக்கு இடையே மாட்டியது அந்த வெள்ளாடு.

தியா சென்று வர்ஷாவை பற்றிக்கொள்ள, ஷ்யாம் அவனை பிடித்துக்கொண்டே ராஜிடம் விவரம் அறிந்தான்.

ராஜ் சொன்னது தான் தாமதம் கையில் இருந்தவன் ஒரே குத்தில் தூர சென்று விழுந்தான்.

“யாரு தங்கச்சியை கொல்ல வந்த உனக்கு எவளோ தைரியம் ம்…..”, என அவன் விழுந்த இடம் சென்று மீண்டும் எட்டி மிதிக்க.

“டேய் டேய்  விடுடா நீ அடிக்கிற அடியில செத்துற போறான் அப்புறம் அவனை யார் அனுப்பினதுன்னு தெரியாமயே போயிடும்”

ஆம் அவனைப் பார்க்கும் போதே தெரிந்தது அவன் வெறும் அம்பு தான் என்று எய்தவன் யார் என அவன் வாய் மூலம் வரவழைக்க நண்பர்கள் இருவரும் முயல, அவனோ விடா கண்டனாய் இருந்தான்.

“ம்…”, என தலையாட்டி அவனை மீண்டும் எழுப்பி பிடித்துக் கொண்டான் ஷ்யாம்.

ராஜ் எஸ்.ஐக்கு போன் செய்து ரெண்டு காவலர்களுடன் வர சொல்லிவிட்டு. இவனை விசாரித்தான்.

“சொல்லு யாரு உன்ன அனுப்புனா”.

அவன் வாய் திறக்கவில்லை.

“இப்படியெல்லாம் கேட்ட பதில் சொல்லமாட்டான் இவனை……”, என மீண்டும் ஷ்யாம் அவனை தாக்க.

ராஜ் அவனை தடுத்து, “இதோ பாரு எங்ககிட்ட அடிபட்டு சாக போறியா இல்ல அப்ரூவரா  மாறி நிம்மதியா வாழ போறியா”

ம்ம்….. இப்போதும் பதில் இல்லை.

ரெண்டு காவலர்களும் வந்து இவனுக்கு சயூட் அடித்துவிட்டு, அவனை ஸ்டேஷன் அழைத்துக் கொண்டு போனார்கள்.

“என்னடா நடக்குது இங்க” ஷ்யாம் கத்தினான்.

“சொல்லற இரு”, என்றவன்.

அந்த ரூமில் இருந்த சாளரத்தை சாத்திவிட்டு வந்தான்.

அவன் அப்படி சாத்திய விதமே அந்த கயவன் அந்த புறம் இருந்து தான் வந்திருக்கிறான் என்பது புரிந்தது.

“நீ ஓகே தானே வர்ஷுமா ஒன்னும் பிரச்சனை இல்லையே”, என வர்ஷுவை வினவ.

“ஐ அம் ஆல்ரைட், உங்க கைல தான் ரத்தம் வருது போய் டாக்டரை பாருங்க ப்ளீஸ்”, என்றாள் அதை கவலையாய் பார்த்துக்கொண்டே.

மற்றவர் அப்போது தான் அதை கவனித்தனர்.

ராஜை அனுப்பிவிட்டு தங்கையிடம் வந்தான் ஷ்யாம்.

“அண்ணா”, என அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

“ஒண்ணுமில்லடா அதான் நாங்க இருக்கோம்ல பாத்துக்கலாம்”.

சிறிது நேரத்தில் ராஜ் கையில் கட்டுடன் வர, நடந்த அனைத்தையும் கூற துவங்கினான்.

ஷ்யாமின் சந்தேகம் சரியே, அவன் நினைத்ததை தான் ராஜும் கூறினான். வர்ஷாவின் கார் விபத்து தற்சயலாக நடந்தது இல்லை.

ஒரு விபத்து நடந்தால் அதை விசாரிப்பது போலீசாரின் கடமை அதன் அடிப்படையில் அந்த விபத்தை ஆராய அது திட்டமிட பட்டது போல் தோன்ற, இவனுக்கு இன்போர்ம் செய்தார்கள்.

ஏற்கவனே இவனுக்கு அந்த சந்தேகம் இருந்ததால், அதை பற்றி இன்னும் ஆராய்ந்தான்.

ஓட்டுனரை சென்று விசாரித்தான்.

இப்போது கூட அது சம்பந்தமாய் தான் போனில் பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் என்னென்னவோ ஆகிவிட்டது.

நல்லவேளை அவளுக்கு எதுவும் ஆகவில்லை அப்படி மட்டும் ஏதாவது உயிரானவளுக்கு ஆகியிருந்தால், அவன் தன்னை மன்னித்திருக்கவே மாட்டான்.

ஒன்று நிச்சயமாகிவிட்டது, வர்ஷாவை கொலை செய்ய யாரோ ஒருவர் தான் ஏற்பாடு பண்ணியிருக்கிறார் என்று? தியா சொன்னது போன்று  ரவி ஜெயிலில் இருக்கும் நிலையில் யார் இந்த வேலையை பார்த்திருப்பர்?

அன்று இரவு யாரும் அதற்குப் பிறகு தூங்கவில்லை. வர்ஷாவுக்குமே ‘தான் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் தன்னை ஏன் கொல்ல நினைக்கிறார்கள்’, என்று ஒரே குழப்பம். அவளுக்குமே ரவியின் மேல் தான் சந்தேகம் இருந்தது.

மறுநாள் காலை டிஸ்டார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றார்கள் ஆனால், இங்கு நடந்த எதையும் பெரியவர்களிடம் இப்பொழுது அவர்கள் கூறவில்லை. இன்னும் யார் என்றே கண்டுபிடிக்காத நிலையில் எதற்கு அவர்களை பயமுறுத்த வேண்டும் என்று நினைத்தவர்களாக அதை மறைத்திருந்தனர்.

உயிரை எடுக்க நினைக்கும் அளவிற்கு வர்ஷூவின் மேல் இத்தனை வன்மம் யாருக்கு? ஒரு விபத்திலிருந்து தப்பித்து அதிலிருந்தே இன்னும் மீள முடியாமல் தவிக்கும் வர்ஷுவிற்கு, அடுத்த தாக்குதல் மனதை பதைபதைக்க வைத்தது, இதன் பின்னனியை அறிவானா ராஜ் அவனின் உயிரானவளுகாக?

**********

தியா அடிக்கடி வர்ஷாவை பார்க்க வந்து கொண்டு தான் இருந்தாள்.

அப்படி இருக்கையில், ஒரு நாள் ‘தான் இன்று ஆபீஸ் வரவில்லை’ என்று ஷ்யாமிடம் கூறிவிட்டு ஷ்யாம் வீடு சென்றிருந்தாள்.

தியாவும் வர்ஷுவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசுகையில் வர்ஷு ராஜை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

“அப்புறம் உன் அண்ணா எப்படி இருக்காங்க”.

“பார்றா அம்மையாருக்கு என்ன திடீர்னு என் அண்ணன் மேல இவ்வளவு கரிசனம்”.

“ரொம்ப தாண்டி பண்றீங்க அண்ணனும் தங்கச்சியும் என்னடா நம்ம மேல இவ்வளவு இதுவா இருக்காரு சரி…. கேட்போம்னு பார்த்தா ரொம்ப பண்ற”.

“எதுவா இருக்காரு மா?”

“அடி போடி”.

“என்னடி பண்ற வெட்கமா தயவு செஞ்சு சொல்லிட்டு செய், ரொம்ப பயமா இருக்கு”.

அதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள் அவள்.

பின் விளையாட்டை கைவிட்டு உண்மையாகவே வர்ஷா தன் அண்ணனை புரிந்து கொண்டாளா என்பதை அவளிடம் வினவ.

“உண்மையா தான் அவரோட காதல் என்ன ரொம்பவே வியக்க வைக்குது எப்படி ஒருத்தரால இப்படி காதல் பண்ண முடியும் நான் இன்னும்  ஒத்துக்க கூட இல்ல ஆனா அதுக்குள்ள என்ன ப்ரொடெக்ட் பண்ண இவ்ளோ கஷ்டப்படுறாரு”.

பின் அவளின் மனதை திறந்து முழுவதையும் தியாவிடம் கொட்டினாள்.

பேச்சு, கலகலப்பு, கிண்டல் என்று தோழிகளுக்குள் சென்று கொண்டிருந்தது.

“உனக்கு அண்ணா பத்தி என்ன தெரியும்? அவன் ஒன்னும் உன்ன மட்டும் லவ் பண்ணல இன்னொருத்தவங்களையும் ரொம்ப லவ் பண்றான்”.

வர்ஷா எதுவுமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை தோழி ஏதோ கிண்டல் செய்கிறாள் என்பது அவளுக்கு புரிந்தது.

ஆனால் தியாவின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை சரியாக அவள் இந்த வார்த்தைகளை உதிர்த்திருக்கும் பொழுது அது ஷ்யாமின் காதுகளில் எட்டி விட்டது.

வீட்டிற்கு நன்றாகவே செக்யூரிட்டி போட்டு இருந்தார்கள் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் உள்ளே வந்துவிட முடியாது, இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணி விட்டதால் அவன் வழக்கம் போல கம்பெனிக்கு சென்று கொண்டு தான் இருந்தான்.

இன்று ஒரு முக்கிய மீட்டிங் உள்ளது அதற்கான ஒரு பைலை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டான். அதை எடுப்பதற்காக வந்தவன், தியா பேசிய வார்த்தைகளை கேட்டான்.

அவனும் தோழிகள் முன்பு என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதை கேட்கவில்லை அவன் கேட்டது எல்லாமே தியா தன் அண்ணன் வேறு யாரையோ காதலிக்கிறான் என்று தியா கூறியது மட்டுமே.

அவளுமே வார்த்தைகளை மிகவும் சீரியஸாக உதிர்த்து இருந்தாள்.

ஏற்கனவே தன் தங்கை இன்னும் ராஜை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் அவளை சுற்றி இப்பொழுது பல சிக்கல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவளை இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்திருக்கிறான் ஒருவன். இந்நிலையில் இவள் ஏன் இவ்வாறு பேசுகிறாள் என்று கோபம் கொண்டான். ‘இதனால் தன் தங்கை கஷ்டப்படுவாள் ராஜை தவறாக நினைப்பாள்’ என்ற எண்ணம் மட்டுமே அவனுள் சுழன்று கொண்டிருந்தது.

இவனின் முன்கோபம் பற்றி ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். கோபம் என்று ஒன்று வந்து விட்டால் இவனுக்கு நல்லது எது? கெட்டது எது? தன் பிரியத்திற்குரியவள், இது எதுவுமே கண்ணில் படாது, அவனுக்கு தெரிந்ததெல்லாம் கோபம்,கோபம்,கோபம் மட்டுமே. ‘தியா ஏன் அப்படி கூற போகிறாள்?’ என்பது கூட யோசித்துப் பாராமல் விறு விறு என்று உள்ளே சென்றான்.

வர்ஷா ஏற்கனவே உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு இருந்தாள். எனவே ‘அவள் எதிரில் எதுவும் கேட்க வேண்டாம்’ என தியாவை எதிரே இருந்த தன் அறைக்கு அழைத்துச் சென்றவன்.

“அறிவிருக்கா உனக்கு அவ கிட்ட போய் என்ன பேசிக்கிட்டு இருக்க? அப்போ அவனை நீ உண்மையான அண்ணனா நினைக்கவே இல்ல, இதே உன் கூட பிறந்தவனா இருந்தா அந்த மாதிரி பேசி இருப்பியா? எதுக்கு தேவை இல்லாம வர்ஷா கிட்ட வந்து ராஜைப் பத்தி இப்படி தப்பா பேசிகிட்டு இருக்க? உனக்கு என்ன தெரியும் அவன பத்தி பேச வந்துட்ட”, என சரமாரியாய் அவள் மேல் வசை மாரியை பொழிய.

‘உன்னிடம் ஒன்று பேச வேண்டும்’ என்று தான் வர்ஷாவின் அறையில் இருந்து அவளை வெளியே கூட்டி வந்தான். வெளிய வந்த மறு நிமிடமே, அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவன் அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டு இப்படி ஏன் திட்டிக் கொண்டிருக்கிறான் என்று முதலில் புரியாமல் இருந்தவள். ‘ராஜை பற்றி தான் கூறியதை தான் இவன் தவறாய் புரிந்து கொண்டு பேசுகிறான்’ என்பது இப்பொழுது தான் விளங்கியது அவளுக்கு.

இவளுக்குமே ஏக கோபம்.

“நிறுத்துங்க ஷ்யாம், முதல்ல நாங்க என்ன பேசினோம் ஏது பேசினோம்னு ஏதாச்சும் உங்களுக்கு தெரியுமா?” என்றாள் அழுத்தத்துடன்.

இவ்வளவு நேரம் எகிறிக் கொண்டிருந்தவன் இவள் இப்படி கேட்கவும், சற்று வாயை மூடிக்கொண்டு அவளை பார்த்திருந்தான்.

“ராஜை எங்க அப்பா அம்மா தத்து எடுத்த பிறகு நான் அண்ணனா பாக்க ஆரம்பிக்கல எப்ப முதல் முதல்ல பார்த்தனோ அப்போ இருந்து ஒரு கூட பிறந்த அண்ணனா தான் ட்ரீட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்ப உண்மையாவே அவன் என் கூட பிறந்த அண்ணன் தான். நீங்க பாட்டுல என்னென்னமோ பேசுறீங்க”.

“வர்ஷாவை நினைச்சு அண்ணா எவ்ளோ பீல் பண்றானு எனக்கு தான் தெரியும், அப்படி இருக்கும்போது நானே அண்ணன பத்தி வர்ஷா கிட்ட ஏன் தப்பு தப்பா சொல்லி அவங்கள லவ் பண்ண விடாம தடுக்க போறேன் ம்”, அவள் அவனை பார்த்து அழுத்தமாய் வினவ.

“அப்படியே இவரு தான் பெரிய பாசமலர் சிவாஜி மாதிரி பேசிகிட்டு. நீங்க சிவாஜினா நான் நம்ம வீட்டு பிள்ளைல 🎼எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்🎼னு பாடுற ஐஸ்வர்யா ராஜேஷாக்கும் புரியுதா”.

அவ்வளவு நேரம் தான் தவறு செய்து விட்டோமென அவள் முகத்தை பார்க்காமல் இருந்தவன், இப்படி படத்தை பற்றி பேசவும் அவளுக்கு கோவம் இல்லையோ என முகம் பார்த்தான். அவள் கண்களோ இதோ கண்ணீரை உதிர்த்து விடுவேன், என அவளின் நிலையை பறைசாற்ற அவனுக்கு மிகவும் கஷ்டமானது.

“முதல்ல கையை விடுங்க ரொம்ப வலிக்குது” என்றாள் பாவமாக.

அப்பொழுதுதான் அவ்வளவு நேரமும் அவள் கையை இறுக்கி பிடித்துக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

அவன் விட்டதும் அவள் கையை பார்க்க, அந்த ரோஜா நிற கைகள் அவன் இறுக்கிப் பிடித்திருந்ததால்  நன்றாக சிவந்து அவன் கைத்தடும் பதிந்து இருந்தது. அதைப் பார்க்கவும் அவனுக்கு என்னவோ போலானது.

“உங்களுக்கு இந்த விஷயத்தை எக்ஸ்ப்ளைன் பண்ணனும்னு அவசியம் இல்ல தான், இருந்தாலும் உங்க தங்கச்சி மேலயும் உங்க நண்பன் மேலயும் ரொம்ப பாசமா இருக்கீங்களே அதனால சொல்றேன் கேளுங்க”.

“ஆல்ரெடி உங்க தங்கச்சிக்கு என் அண்ணன் மேல காதல் வந்துருச்சு. அவளை காப்பாத்த என் அண்ணன் கதறுனது அவ காதுல நல்லா விழுந்துடுச்சு அதுல மேடம் டோட்டல் பிளாட்”.

“நான் என்ன சொல்ல வந்தேன்னா, என் அண்ணன் உன்னை மட்டும் லவ் பண்ணல இன்னொருத்தரரையும் லவ் பண்றாரு அது யாருன்னா அவரோட காக்கி சட்டையை சோ நீ உஷாரா இருனு”.

“அவளே நான் சொல்லும்போது சிரிச்சுட்டு தான் இருந்தா ஏன்னா அவளுக்கே தெரியும். நான் அவளை கலாய்க்கிறேன்னு”.

இப்பொழுது தான் அவனுக்கு முழு விவரமும் புரிந்தது. தன்மீதே அவனுக்கு கோபம். எத்தனை தடவை இந்த முன்கோபத்தால் அவன் முன்பு அவதி பட்டிருக்கிறான். ஆனால் இந்த விடயத்தின் முன் அது எல்லாமே மிகவும் சிறிதாகிப் போனது.

ராஜ் பல தடவை அவனுக்கு உரைத்திருக்கிறான். ‘உன்னுடைய இந்த கோபம் தான் உனக்கு வாழ்க்கையில் பெரிய மைனஸ் பாயிண்ட்’ என்று.

அந்த மாதானுபங்கி என்ன கூறி இருக்கிறார்.

“யாகாவா  ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு “

                 குறள்  :  127

ஒருதன் எத அடக்கினாலும் அடக்கலனாலும் அட்லீஸ்ட் அவன் நாக்கையாச்சு அடக்கி வைக்கணும்னு சொல்றாரு. நாம கேட்கிறோமா?

இப்போ ஷ்யாம் வார்த்தைகளை கொட்டி விட்டான் இனி அதை அள்ள முடியுமா?

தியாக்கு அழுகை தாங்கவில்லை இதுவரை அவளை இப்படி யாரும் கத்தியது இல்லை.

ராஜ்ஜின் வரவிற்கு முன் அவள் வீட்டின் ஒரே மகள் அன்னை தந்தை இருவருக்கும் செல்லம். ராஜ் வந்த பிறகோ மூவரும் அவளுக்கு செல்லம் கொடுத்தனர்.

மித்து மற்றும் வர்ஷாக்கு, இவள் என்றாள் மிகவும் பிடிக்கும்.

அவளோ ஏன் இதோ இப்போது அவளை திட்டினானே அவனே அவளை தாங்கியவன் தானே.

அவனிடம் தன் அழுகையை காட்ட விரும்பவில்லை அவள். ஏற்கனவே அவனிடம் தான் மயங்கி விடுகிறோம் இதில் அழுது வேறு தொலைக்க வேண்டுமா? அழுகையை மறைக்க தான் ஏதேதோ பேசினாள்.

“இல்ல தியா…..நான்………சாரி தியாம்மா….”

“ஒன்னும் தேவையில்லை…..” என விறு விறுயென கதவின் புறம் திரும்பினாள். அங்கே இருந்த டேபிளில் கால் விரல் இடித்து விட, வலி உயிர் போக “அம்மா”, என கத்தி விட்டாள் தியா.

“ஐயோ! தியாம்மா பார்த்து” என விரைந்தவன் அவள் கால்களை ஆராய்ந்தான்.

நகம் பெயர்ந்து அதில் சிறிதாய் உதிரம் எட்டிப் பார்த்தது.

அவன் சிறிதும் யோசிக்காமல் தன் கை குட்டையை எடுத்து அவள் உதிரத்தை துடைத்து விட்டு, அவளை இரண்டு நிமிடம் அமர சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவனின் செய்கை இவளை மிகவும் யோசிக்க வைத்தது, ‘இவ்வளவு நேரம் அவளை திட்டு திட்டு என்று திட்டியது என்ன? இப்பொழுது அவளுக்கு ஒன்று என்றவுடன் இப்படி பதறி துடிப்பது என்ன?’

அவ்வளவு நேரம் தான் ஒரு ஆடவனின் அறையில் தனித்து இருக்கிறோம் என்பதை யோசிக்காதவள், அப்பொழுதுதான் அந்த அறையை சுற்றி முற்றி பார்த்தாள்.

நல்ல பெரிதான அறை, அறை நடுவே கிங் சைஸ் மெத்தை. அதன் அருகே பெட்சைடு டேபிளில் ரெண்டு போட்டோ பிரம்மஸ் அதில் ஒன்றில் இவன் இருந்தான் மற்றொன்று மறுபுறம் திரும்பி இருக்கவே இவளாள் அதை பார்க்க முடியவில்லை. பெட் எதிரில் ஒரு பெரிய எல்.இ.டி டிவி

சற்று தள்ளி அறையின் மறுகோடியில் ரெண்டு சோஃபாக்கள். பெட்டின் வலப்புறதில் ஒரு ரூமின் கதவு இருந்தது.

இப்படியாக அவள் ரூமை அலசிக் கொண்டிருக்கும் போது, அவன் கையில் முதல் உதவி பெட்டியுடன் வந்தான்.

அவளின் காலடியில் உட்காந்து அவள் கால்களை தன் மடி தாங்கி பஞ்சில் ஆன்ட்டிசெப்டிக் லிக்விட் தோய்து காயத்தை துடைத்தான்.

காயத்தில் வைக்கவும் அது தீயாய் எரிந்தது, கண்கள் மூடி அவன் தோள்களை இறுக்கி பற்றிக் கொண்டாள். மருந்தை போட்டுவிட்டு கைகளை சானிடய்ஸ்ர் கொண்டு துடைத்து நிமிர, அவளோ தன்னிலை மாறாமல் அப்படியே அவன் தோள் பற்றி கண் மூடிய நிலையிலேயே இருந்தாள்.

அதுவரை காயத்திலேயே கவனமாய் இருந்தவன் இப்போது அவளை பார்த்தான். தன் அறையில் தன் மனக்கவர்ந்தவள் அதுவும் தன் தோளை பற்றி இருப்பதை பார்க்க மற்றதெல்லாம் மறந்து அந்த நொடியை ரசித்தான்.

அவளும் மெதுவாய் கண் திறக்க அவளையே பார்திருந்தவனின் கண்களில் தன் பார்வையையும் கலக்க விட்டாள் இவள். இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி நின்றது.

அவனின் பார்வை மாற, அதில் மிரண்டவள் தன் பார்வையை திருப்பிக் கொண்டு எழ முயல, அவன் விடவில்லை.

‘என்ன?’ என்று அவன் முகம் பார்க்க. அவனோ “கோவமா தியா”, மெதுவாய் கேட்டான்.

அப்போதுதான் பெண்ணுக்கு தன்னை அவன் திட்டியதே நினைவு வந்தது.

‘ஆம்’ என தலையாட்டினாள்,  “பின்ன என்ன எதுனு தெரியாம கத்துனா அதுவும் அண்ணாவ வெச்சி…அதுவும் நீங்களே..”, அதற்கு மேல் அவள் பேசவில்லை.

ஆனால் இவனுக்கு புரிந்தது அவளை பற்றி நன்றாய் அறிந்தும் கூட இப்படி மடத்தனமாய் பேசிவிட்டோமே என குமைந்தான்.

தியாவின் இயல்பு அவளை அவன் மீது அதிகமாக கோபப்பட விடவில்லை. ஆனால் அவளுள் அவனின் இந்த செயல் பதிந்தது.

“சாரி தியாம்மா…. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு”, என அவன் கேட்க.

இவள் சிரித்து விட்டு, “சரி பரவால போங்க எதோ கால பிடிச்சி மன்னிப்பு கேட்கறதுனால மன்னிச்சுறேன்”, எனக் கூற.

அப்போதுதான் தான் இன்னும் அவள் கால்களை பற்றி இருப்பதை பார்த்து அவனுமே சிரித்தான்.

“இதுல என்ன இருக்கு உன் கால பிடிக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” எனக் கூறி அவள் சற்றும் எதிர்பார்க்காமல் அவளின் வாழைத்தண்டு காலில் தன் அடுத்த முத்திரையை பதித்து இது ஆன்கில் கிஸ் (ankle kiss) என்றான்.

பின் அவள் கைகளையும் மெதுவாய் எடுத்து, அவன் விரல் தடம் படிந்திருந்த இடம்   மிருதுவாய் வருடி அதில் தன் அடுத்த முத்திரை பதித்தான்.

இவளிற்குள் அன்று வந்த அதே சிலிர்ப்பு. அவளின் ரோஜா முகம் நன்றாய் சிவந்து அவள் நிலையை கூற.

அதில் மயங்கியவன் அவள் சற்றும் எதிர்பார்க்காத கேள்வியை கேட்டான்.

அதில் அவள் திருதிருத்தாள்.

அப்படி அவன் என்ன கேட்டான்?

 

(போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல🙏…. அடுத்த எபில சந்திக்கலாம்…. பை…. பை…)