💙 இருளை ஈர்க்கும் ஒளி 💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு – 24

எனக்கு ஒன்றேன்றால் என் பெற்றவர் உடன்பிறந்தவர் கவலையூறுவது இயல்பு தான் ஆனால் நீ ஏன் இப்படி கலங்கி நிற்கிறாய்? உன் வாழ்க்கையில் நான் அத்தனை இன்றியமையாதவளா…..

அங்கே வரவேற்பறையில் ராஜைப் பற்றி விசாரித்து அவன் இருந்த அறைக்கு முன் வந்தார்கள் ஷ்யாம் மற்றும் தியா. வெளியே ராஜ் இருப்பதை பாத்து அவனிடம் விரைந்தனர்.

“என்ன ஆச்சுடா…”, என நண்பனின் கை பற்ற அவன் நிலையோ பரிதாபமா இருந்தது.

தியா அவள் அண்ணனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தாள். அவனுக்கு ஒன்றுமில்லை என்பது புரிந்தாலும் அவனின் தோற்றம் இவளைக் குழப்பியது.

‘அழுதிருப்பான் போல’, தியா நினைத்தாள்.

கண்கள் சிவந்து பார்க்கவே எதையோ பறிகொடுத்தவன் போல இருந்தான் அவன். மேல இவர்கள் பேசும் முன் மருத்துவர் வந்தார்.

ராஜ் அவர் என்ன சொல்லப்போகிறார் எனப் பார்க்க. மற்ற இருவரும் யாருக்கு என்ன பிரச்சனை என்று புரியாமல் மருத்துவரைப் பார்த்தனர்.

ராஜின் நிலை உணர்ந்தவர் அனுமான் எப்படி ராமரின் நிலை அறிந்து சீதை அங்கே தான் இருக்கிறாள், நான் அவளைப் பார்த்தேன் என்னும் பொருள் பட, ‘கண்டேன் சீதையை’ எனத் துவங்கி அதன் பின்பு இலங்கையில் நடந்ததைக் கூறினாரோ,

அதே போல் மருத்துவரும், “அவங்களுக்கு ஒன்னும் கவலைப்படுறா மாறி இல்ல நல்லா இருக்காங்க”, என்றார் எடுத்தவுடன்.

மருத்துவர்க்கு ராஜை முன்பே தெரியும் ஹாஸ்பிடல் சம்பந்தமாய் ஒரு கேசை ராஜ் தான் நடத்தினான். அவன் கம்பீரம், ஆளுமை அனைத்தும் அவரை கவர்ந்திருந்தது. 23 வயதில் ஏ.சி.பி பதவி ஏற்று அதில் நேர்மையாய் நடப்பவனைக் காண ஆச்சரியமாய் தான் இருந்தது அவருக்கு. ஆனால் இந்த சில மணி நேரத்தில் அவனின் கண்ணீர், அவரிடம் அவன் கெஞ்சிய விதம், என அவனின் பரிதவிப்பைக் கண்டவருக்கு அவனுக்கு அடிபட்டவர் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வைத்தது.

ராஜுக்கு ‘அப்பாடா’, என ஆக ஒரு பெருமூச்சை விட்டான்.

“ஆனா…” என மருத்துவர் இழுக்கவும் இவன் மீண்டும் விட்ட மூச்சை இழுக்க….

“அவங்க கைல எலும்பு முறிவு இருக்கு அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல ஒரு டூ மன்த்ல சரி ஆகிடும். அந்த கைய அவங்க அதிகமா ஸ்டைன் பண்ண கூடாது”.

“டாக்டர், தலையில் அடிபட்டு இருந்துச்சே அது ஒன்னும் பிரச்சனை இல்லையே”.

“இல்ல சார் அது மேலோட்டமான காயம் தான் அவங்க பயத்துல தான் மயங்கி இருக்காங்க மத்தபடி ஒன்னும் பிராப்ளம் இல்ல”

“நாங்க போய் பாக்கலாமா டாக்டர்”.

“ஒரு டென் மினிட்ஸ் இருங்க அவங்கள நார்மல் வார்டு மாத்திடுவோம் அப்புறம் பாருங்க”.

“இன்னைக்கி ஒரு நாள் மட்டும் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”.

“ஓகே டாக்டர் தேங் யூ சொ மச்”.

“நோ மென்ஷன் தட்ஸ் மை டியூட்டி”, என்று நகர்ந்துவிட்டார்

ஒன்றும் இல்லை என்றவுடன் அவன் சற்று ஆசுவாசமாக உணர்ந்தான்.

இன்னமும் ஷ்யாம் தியாக்கு ஒன்றும் புரியாமல் நின்றனர்.

அவர்கள் நிலையறிந்து அவன் நடந்ததைக் கூறினான்.

“என்ன வர்ஷாக்கா ஆக்சிடென்ட்”, என ஷ்யாம் எழந்து நிற்க.

“அதான் டாக்டர் பயப்பட ஒன்றும் இல்லைன்னு சொல்லிட்டாரே கவலைப்படாதீங்க”, என தியா ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போதே தாதி வந்து நோயாளியைப் பார்க்கலாம் என்று கூற அனைவரும் வர்ஷாவை பார்க்கச் சென்றனர்.

இவ்வளவு நேரம் அவளுக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பு, அவளை இப்போது நல்ல நினைவுடன் பார்த்த மகிழ்ச்சி என அனைத்தும் சேர ராஜ் ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொண்டான் அவன் கண்களில் கண்ணீர் அதில் அவளின் தோள்கள் நனைந்தது.

ஆண்கள் அழ கூடாதா என்ன அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு தானே.

வர்ஷாக்கு அவன் மனநிலை புரிந்தது அவனின் அழுகை அவளை பாதித்தது.

அப்போது தான் தன்னிலைக்கு வந்தவன் “சாரி”, என்றுவிட்டு நகர்ந்து விட்டான்.

தியா வர்ஷாவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு ஷ்யாமுக்கு கண்காட்டி தன் அண்ணனைத் தேடிச் சென்றாள்.

அண்ணனிடம் பேசி அவன் நிலை புரிந்து சமாதானம் செய்து அண்ணனும் தங்கையும் உள்ளே வந்த நேரம் ஷ்யாம் தன் தங்கையிடம் விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சி வர்ஷுமா எப்படி அக்சிடேன்ட் ஆச்சி”.

திடீரென சத்தம் கேட்டதும், ஓட்டுனர் டயர் வெடித்த செய்தி சொல்லி வண்டியை நிறுத்த முயற்சிக்கும் போது விபத்து நடந்தது, என அனைத்தையும் கூறினாள்.

இதை தியா மற்றும் ராஜும் கேட்டார்கள்.

ராஜின் போலீஸ் மூளைக்கு இது தற்செயலான விபத்தா என்ற சந்தேகம் வந்தது.

ஒரு வேலை இது திட்டமிடப்பட்டதாய் இருந்தால் இதை யார் செய்திருப்பார்கள்? வர்ஷாவை கொள்ளும் அளவு யாருக்கு அவள் மேல் இத்தகைய பகை உணர்வு?

*********

வீட்டில் அனைவருக்கும் செய்தி செல்லவே லைட்டிங் ஸ்டார்ஸ் மற்றும் அவர்கள் வீட்டு பெரியவர்கள் என அனைவரும் மருத்துவமனையில் கூடி இருந்தனர்.

அருண், மித்து அவர்கள் வீட்டின் பெரியவர்கள் அனைவரும் அவளை நலம் விசாரித்துச் சென்ற பின், ஷ்யாம் மற்றும் ராஜ் வீட்டைச் சேர்ந்தவர் மட்டும் அங்கே இருந்தனர்.

“அப்புறம் டிரைவர் எப்படி இருக்காரு ராஜ்” என விசாரித்தார் கிருஷ்ணன்.

“நல்லா இருக்காரு மைல்டு இன்சுரி தான் நல்லவேளை சீட் பெல்ட் போட்டு இருந்தாரு இல்லன்னா ரொம்ப கஷ்டமாகி இருக்கும்”

“நல்ல வேலப்பா நீ அந்த பக்கம் போன” என்றார் ராஜிடம்.

வர்ஷாவின் படுக்கையில் ராதா ஒரு புறம் லட்சுமி ஒரு புறமென அமர்ந்திருந்தனர்.

ராதாவுக்கு பேச்சே வரவில்லை சிறு வயது முதல் பொத்தி பொத்தி வளர்த்த பெண் இதுவரை இப்படி ஹாஸ்பிடல் படுக்கையில் பார்க்காத நிலையில் இப்போது தலை மற்றும் கையில் கட்டுடன் அவளை பார்க்க மனம் கனத்திருந்தது.

லட்சுமியோ தன் மகனின் மனங் கவர்ந்தவள் அவள் , மகனின் முகத்தைத் தான் பார்த்தாரே அதில் ஜீவனே இல்லாமல் இருந்தான். கல்யாணம் எனப் பேசும் போது அவன் மனது இவருக்குத் தெரியாது.

வர்ஷாவின் வீட்டினர் இவர்களின் உறவை நன்கு புரிந்தவர்கள் வர்ஷாவோ அழகிலும் சரி குணத்திலும் சரி ராஜிக்கு ஏற்றவள். இப்படியான கோணங்களில் யோசித்துத் தான் ராஜிற்கு வர்ஷாவை கேட்டது.

அதன் பின் தான் ராஜின் காதல் பார்வை வர்ஷாவை வருடுவதும் அவள் அவனைத் தவிர்ப்பதையும் கவனித்தார்.

காலை அவர் ராதாவிடம் கூறிய விடயங்கள் வர்ஷாக்காக மட்டும் கூறியவை அல்ல. அது தான் ராஜின் உண்மை நிலை.

ராஜின் பிரியத்திற்கு உரியவள் என்பதாலே அவருக்கும் அவள் பாசத்திற்குரியவள் ஆகினாள்.

அவளை இப்படிப் பார்க்க அவருக்குமே கஷ்டமாய் தான் இருந்தது.

அனைத்து மகள்களும் தந்தைமார்களின் செல்லம் இது எழுதப்படாத விதி. அப்படித்தான் வர்ஷா கிருஷ்ணனுக்கு. தன் செல்ல மகளை இப்படி கையில் கட்டுடன் காணவும் அவர் மிகவும் வருந்தினார். கண்களாலேயே மகளின் கையை வருடிக் கொண்டிருந்தார் அந்த பாசத்தந்தை.

ஒரு தந்தையாய் அவர் நிலையறிந்து அவர் கரம் பற்றி ஆறுதல் படுத்தினார் சந்திரன்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அவர் தலையைப் பிடித்துக் கொண்டு சரியவும் அருகே இருந்த ராஜ் அவரைத் தாங்கிக் கொண்டான்.

ஷ்யாம் உடனே சென்று மருத்துவரை அழைத்து வந்தான்.

அவர் வந்து கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு “பிளட் பிரஷர் உங்களுக்கு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு கண்டிப்பா நீங்க ரெஸ்ட் எடுத்தே ஆகணும்”, என்று கூறிவிட்டுச் சென்றார்.

மகளின் இந்த சிறு விபத்தே அவரை பெரிதாய் பாதித்திருந்தது.

பின் ஷ்யாம் தன் தாயிடம் “அம்மா டாக்டர் தான் வர்ஷாவுக்கு ஒன்னும் பயப்பட இல்லைன்னு சொல்லிட்டாரே அவளை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க அப்பாவ கூட்டிட்டு வீட்டுக்கு போங்க அவருக்கு டேப்லெட் கொடுத்து அவரை படுக்க வையுங்க நாளைக்கு வர்ஷாவை டிஸ்டாச் பண்ணிடுவாங்க நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறோம்”.

அவருக்கும் மகன் கூறுவது சரியெனப்பட தன் கணவரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

ராஜ் லட்சுமியிடம் “மா நீங்களும் கிளம்புங்கம்மா நாங்க மூணு பேரும் இங்க பாத்துக்குறோம்”.

“சரிப்பா”, என அவரும் கிளம்பி விட்டார்.

மருத்துவமனையில் ராஜ், ஷ்யாம் மற்றும் தியா மட்டும் இருந்தனர்.

தியாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஷ்யாமும் ராஜும் வெளியே சென்றனர்.

இருவருக்குமே இந்த விபத்து மனவருத்தத்தைக் கொடுத்திருந்தது.

ஷ்யாம்கு தங்கை என்றால் உயிர் ஆனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் கையில் மட்டுமே பாதிப்பு இருக்கத் தங்கை நலம் என்றதும் தன்னை தேற்றிக்கொண்டான்.

இதில் அதிகம் பாதிக்கப் பட்டது ராஜ் தான். டாக்டர் அவளுக்கு ஒன்றும் இல்லை எனச் சொல்லும் நொடி வரை மனம் பட்ட வலி வேதனை சொல்லில் அடங்காதது.

அதை ஷ்யாமும் உணர்ந்தே இருந்தான் வெளியே வந்த பின் ராஜின் கரம் பற்றச் சிறிதும் தாமதமின்றி அவனைக் கட்டிக்கொண்டு கதறினான்.

“ரொம்ப பயந்துட்டேன்டா எங்க இவளையும் ஹாஸ்பிடல்ல அப்பா அம்மாவை தொலைச்சா மாதிரி தொலைச்சிடுவனோனு. அவ இல்லாம எனக்கு என்னடா இருக்கு. அவளுக்கு ஒன்னுனா நான் அவளோ தான் மச்சி”.

“ஒண்ணுமில்லடா இப்போ வர்ஷு நல்ல இருக்கா சரியா”.

“ம்…”

அவ்வளவு நேரம் படுத்தே இருந்தவள் தியாவிடம் கூறி அப்போது தான் அவளை வெளியே அழைத்துச் செல்ல கூறினாள்.

மருத்துவர் செக்கப்கு வரும் போதே அவள் எப்போதும் போல் இருக்கலாம் கையை மட்டும் ஸ்ட்ரைன் பண்ணக் கூடாது எனச் சொல்லிச் செல்ல இவளும் தோழியை மெதுவாய் அழைத்துக் கொண்டு வந்தாள்.

அப்போது தான் நண்பர்களின் இந்த உரையாடல் நடக்கவே அனைத்தையும் தோழிகள் இருவரும் கேட்டனர்.

வர்ஷா மேலே தொடர்ந்து செல்லாமல் திரும்பி தன் படுக்கைக்கே சென்று விட்டாள்.

ஒரு புறம் தியாக்கு வர்ஷா இதைக் கேட்டது நல்லது என்று தான் பட்டது. அப்படியாவது அவள் தன் அண்ணனின் மனதைப் புரிந்து கொள்வாள் என.

தியாவின் நினைப்பு சரி தான் வர்ஷா யோசிக்கத் துவங்கி இருந்தாள்.

ஆம்புலன்ஸில் ஏற்றும் போதே இவளுக்குச் சிறிது நினைவு வந்தது அப்போது ராஜ் அவள் கரம் பற்றி “என்கிட்ட திரும்பி வந்துடு வர்ஷுமா இன்னொரு உயிருக்கு உயிரானவங்க இழப்ப என்னால தாங்க முடியாது ”, என உயிரைத் தேக்கிக் கதறிய குரல் இன்னும் அவள் காதில் பாய்கிறது.

மருத்துவமனை வரும் போதெல்லாம் நன்றாகவே நினைவு வந்து விட அவன் டாக்டரிடம் கெஞ்சியதும் கதறியதும் இப்போது நினைத்தாலும் சிலிர்க்கின்றது.

இப்போது அவள் அண்ணனிடம் அவன் கூறிய வார்த்தைகள் அவள் நெஞ்சில் புகுந்து அவளை என்னவோ செய்தது.

‘நான் உங்க லைப்ல அவளோ முக்கியமா ராஜ்’, தனக்குளே கேட்டுக் கொண்டாள்.

இதழில் குறுநகை குடிகொண்டது அதன் அர்த்தம் என்ன ராஜின் காதல் பெண்ணவளை அசைத்து விட்டதோ.

இந்த காதல் தான் ஒருவரை எப்படி ஆட்டிபடைக்கிறது. அங்கே ஒருத்திக்குக் கண்கள் வழி காதல் செல்ல இவளுக்குக் காதுகளின் வழி செல்லுமோ இல்ல சென்று விட்டதோ அதை அவளே அறிவாள்.

இரவு………

வர்ஷா மருந்தின் உதவியால் உறக்கத்தைத் தழுவி இருக்க மற்றவர் அவளைத் தொந்தரவு பண்ணாமல் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர்.

ராஜிக்கு போன் வர அவன் எழுந்து வெளியே சென்றான்.

தியா உறக்கத்தின் விளைவால் உறங்கி உறங்கி அவள் தலை கீழே சரிந்து கொண்டே இருக்க அதைக் கவனித்த ஷ்யாமால் அதைப் பொறுக்க முடியவில்லை ஒரு முறை அவள் தலை கீழே சரியும்போது அப்படியே தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

தியா ஆழ்ந்த உறக்கத்தினால் தோளிலிருந்து அப்படியே சரிந்து அவன் மடியில் படுத்துக்கொண்டாள். ஷ்யாமின் மகிழ்ச்சியின் அளவை கேட்கவா வேண்டும்.

காதலில் அனைத்தும் கலந்திருக்கும் செல்ல சீண்டல்களில் பெண்ணை கிறங்கடித்தவன், இப்போது தாயாய் மாறி அவளை மடி தாங்குகிறான்.

வெளிய பேசச் சென்று திரும்பி வந்தவனின் கண்கள் இந்த காட்சியை ஆச்சரியமாய் பார்த்தது.

தூங்குகின்றவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அத்தனை மென்மை. அந்த மென்மையை கைகளிலும் கொண்டு வந்து அவள் தலையை மிக மிருதுவாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

நண்பனின் முக மென்மை அவன் மனதைப் படம் போட்டுக் காட்ட ராஜ் அவனையே பார்த்தான்.

இவனும் அதே நேரம் நிமிரத் தன்னையே ஒரு மார்க்கமாய் பார்க்கும் நண்பனைப் பார்த்தான்.

‘என்னடா இது’, என ராஜ் புருவம் உயர்த்த.

வெக்க சிரிப்பு சிரித்தவனை மீண்டும் ஆச்சரியமாய் பார்த்தான்.

ஆண்களின் வெக்கம் மிக அழகானது. ஆண் கம்பீரமாகத்தான் இருக்க வேண்டும், ஆண் அழுதல் கூடாது, ஆணுக்கு வெட்கம் அழகல்ல. வெட்கம் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது இதுதானே நம் சமுதாய வழக்கம். அந்த சமுதாய வரையறைக்குள் வாழ்ந்து வரும் நமக்கு எப்பொழுதாவது வெளிப்படும் இந்த உண்மை உணர்வுகள் அழகு தானே.

பின் தியாவை மெதுவாய் கீழே படுக்க வைத்துக் குறுக்கி இருந்த அவள் கால்களை நேராக்கிவிட்டு நண்பனிடம் வந்தான்.

நண்பனை எப்பொழுதும் கம்பீரமாகவே பார்த்து விட்டான் இவன், அதிலும் பெண்கள் விஷயத்தில் எப்பொழுதுமே எட்டி நிற்பவன் அவன். இவனுக்கு வராத ப்ரோபோசல் இல்லை ஆனால் ஒருவரையும் இவன் திரும்பிப் பார்த்ததில்லை.

ராஜ் கூட அவனிடம் கேட்டதுண்டு “ஏண்டா உனக்குக் காதல் பிடிக்காதா” என்று.

“காதல் பிடிக்குமா பிடிக்காதானு தெரியல ஆனால் இதுவரை நான் காதலிக்கிற மாதிரி யாரையும் பார்த்ததில்லை”, என்ற பதில் தான் அவனிடம் வந்தது.

“ஏண்டா உனக்கு ப்ரொபோஸ் பண்ண பொண்ணுங்க யார் மேலயும் உனக்கு அப்படி ஒரு உணர்வு வரலையா”.

‘இல்லை’ என்று இடம் வலமாகத் தலையாட்டினான்.

‘ஏன்?”

“முதல்ல ஒரு பொண்ண நாம பாக்குறோம்னாலே ஏதோ ஒரு விதத்துல அவ நம்மள ஈர்த்து இருக்கணும். அவள தினமும் பார்த்தா தானு இல்ல பாக்கவே முடியலனாலும் நினைப்பு தானாவே எனக்கு வரணும். அப்படி ஒரு பொண்ணு கிடைச்சா முகத்துல தானா அவளை பார்க்கும் போது ஒரு மென்மை வரும். அதுக்கு அப்புறம் அவ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைக்கவே முடியாத மாதிரி பீல் வரணும் இப்படி எல்லாம் நான் யாரையும் பார்த்து இதுவரையிலும் பீல் பண்ணல”.

ஏனோ ராஜிற்கு காலேஜ் டேசில் பேசின அந்த விஷயம் இப்பொழுது நினைவுக்கு வந்தது.

இருவரும் வெளியே வராண்டாவில் பெண்களின் குரல் கேட்கும் அருகிலேயே அமர்ந்து கொண்டனர்.

ராஜ் தான் பேச்சைத் துவங்கினான்.

“என்னடா நடக்குது இங்க இது எப்பருந்து எப்பயோ ஒரு தடவை சொன்னியே முகத்துல மென்மைக்குடி வரும்னு இப்ப வந்த மாதிரி தெரியுது”.

“ஆமாண்டா, பல வருசமா ஓடுதுடா நாலாம் உனக்கு சீனியர் தெரியுமா……. அதை புரிஞ்சிக்க தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என அவனுக்கு தியா மீது இருக்கும் ஈர்ப்பு பின் அது காதல் தான் என அவன் உணர்ந்தது அனைத்தையும் ராஜிடம் கூறினான்.

“பார்ரா இப்படி ஒரு விஷயம் ஓடுறது எனக்கு தெரியாம போச்சி”.

“ஆமா முதல்ல நீ எக்ஸாம், ட்ரைனிங்னு பிசியா இருந்த அதுக்கப்புறம் உன் காதல பிசி அப்பறம் எங்க இருந்துடா உனக்கு புரியும். ஆமாண்டா உனக்கு இது ஓகே தானே”.

“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு தியாமாக்கு பிடிச்சா போதும்”.

“அவளுக்கு பிடிக்கும்டா அவளுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு ஆனா அவ இன்னும் அதை உணரல..”.

“ம்…. உண்மை தான் தியாக்கு உன்ன பிடிக்கும். நாங்க பேசும் போது உன்ன பத்தி தான் அதிகமா பேச்சி வரும்”.

“அப்படி என்னடா என்னை பத்தி பேசுவீங்க…”

“நான் நம்ப ஸ்கூல் டேஸ் அப்புறம் காலேஜ் டேஸ் பத்தி பேசும் போது உன்ன பத்தியும் அதிகமா கேட்பா….”

“காலேஜ்ல உனக்கு வந்த ப்ரோபோசல் பத்தி கூட சொல்லிருக்கேன்டா”.

“ஆமா அதுலாம் நீ பேசும் போது அவ என்ன ரியாக்ட் பண்ணா”.

“ப்ரொபோசல் பத்தி பேசும் போதும் நீ என்ன பதில் சொன்னேன்னு கேட்பா….”

“ஓ மேடம் எதுக்கு அதை தெரிஞ்சிக்க ஆசை படுறாங்க”

“ஆமாடா அவ ஏன் உன் விடயத்துல இவளோ ஆர்வம் காட்டுனானு இப்போ டவுட் வருது மச்சி”.

“அட போடா உன் தங்கச்சிக்கே அது டவுட்டா தான் இருக்கும்”.

“என்ன டவுட்” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் தியா.

இவர்கள் இருவரும் திரு திருவென முழிக்க, “என்ன ஆச்சி ஏன் இப்படி ஆடு திருடுனா மாதிரி முழிக்கிறீங்க”.

“நீ எப்போ வந்த”, ஷ்யாம் தான் கேட்டான்.

“இப்போ தான் வந்தேன் ஏன்”.

“இப்போ தானா அப்போ ஓகே”.

“என்ன ஓகே”..

“ஒன்னும் இல்ல வர்ஷாக்கு சீக்கிரமா சரியக்கிடுமானு டவுட்”.

“அதுல என்ன டவுட் டாக்டர் தான் இன்னும் டூ மன்த்ல சரி ஆகிடும்னு சொன்னாரே”.

“ஆமாம்ல கரெக்ட் தான். சரி நீ தூங்கிட்டு தானே இருந்த ஏன் எழுந்துட்ட”.

“அதுவா எனக்கு தலகாணி இல்லாமல் தூக்கம் வராது கொஞ்சம் முன்னால் தலகாணி இருந்தா மாதிரி இருந்துச்சு இப்ப பார்த்தா காணோம்”

“அந்த தலகாணி எழுந்து வெளிய வந்துடுச்சி தியாமா” என்றான் அதுவரை அவர்களின் உரையாடலை கவனித்திருந்த ராஜ்.

“என்ன?”

‘டேய் சும்மா இருடா’, என நண்பனுக்குச் செய்கை காட்டிவிட்டு, “உன் அண்ணா உளறுறான் தியாமா. அதை விடு உனக்கு டீ காபி ஏதாவது வேணுமா”.

பாதியில் தூக்கம் கலையக் கொஞ்சம் தலை வலித்தத. அவளுக்கும் சூடாய் எதாவது குடித்தால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, ‘வேண்டுமென’, தலையாட்டினாள்.

“ஆனா வர்ஷு….” என்று அவள் இழுக்க.

“அதான் உன் அண்ணா இருக்கானே அவன் அவளை நல்லா பார்த்துப்பான்”, என அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்துச் சொல்ல.

“உங்களுக்கு எப்போ பாரு அண்ணனைக் கிண்டல் பண்றதே வேலையா போச்சி”, எனக் கூறினாள்.

“ஆமா தியாமா இனி நான் அவனை கலாய்க்க வேண்டியது தான்”, என ஷ்யாமை பார்த்துக் கொண்டே கூற.

“என்ன கலாய்க்க போற”, என அண்ணனிடம் வினவ

“அது ஒன்னும் இல்ல நீ வா நம்பப் போய் சூடா டீ குடிச்சிட்டு உன் அண்ணாக்கும் வாங்கிட்டு வரலாம்”.

“ம்…”, என அவளும் ஷ்யாமுடன் நடைகட்டி விட்டாள்.

ஷ்யாம் ராஜைத் திரும்பிப் பார்த்து ‘உதை’ என விரல் ஆட்டிவிட்டுச் சென்றான்.

கேன்டீனில் டீ வாங்கிக் கொண்டு வெளிய மரங்கள் இருந்த பகுதிக்கு வந்தார்கள்.

இரவு நேரம் வானில் அழகிய ஓவியமாய் அந்திகாவலன் (நிலா) தன் ஒளி கிரகணங்களை இவர்கள் மேல் பாய்ச்ச, குளிர் காற்று உடலைத் தீண்டியது அந்த நிமிடமே மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஆனால் அவர்கள் மனது தங்கள் பாசமலர்கள் பற்றி எண்ணிக் கொண்டிருக்க அந்த ஏகாந்தம் இவர்களைப் பாதிக்கவில்லை.

ஷ்யாம் தான் பேச்சைத் துவங்கினான்.

“வர்ஷு இப்படி இருக்கறத பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு தியாம்மா”.

“புரியுது ஷ்யாம் எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்”.

 “எனக்கு அப்படி தோணல”.

“ஏன்?”

“இது எதிர்ச்சியா நடந்த விபத்தா படல”.

“என்ன? எப்படி சொல்லறீங்க”.

“கார் எப்பவும் மாச மாசம் சர்வீஸ் போயிட்டு பக்காவா இருக்கும். இதோ இந்த மாசம் கூட நேத்து தான் சர்வீஸ்க்கு போயிட்டு வந்துச்சு அப்புறம் எப்படி டயர் வெடிக்கும்? யாரோ பிளான் பண்ணி பண்ணா மாதிரி தோணுது”.

அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க இவளுக்கு ஏன் வர்ஷாவை சுற்றி இந்த ஆபத்து என்ற கேள்வி எழுந்தது?

“யாரு பண்ணதுனு நினைக்கிறீங்க”.

“ம்…தெரியல , ஆனா ஒரு கெஸ் இருக்கு”.

“யாரு ரவியா”.

“ஆமா”.

“ஆனா அவன் தான் ஜெயில்ல இருக்கானே அப்புறம் எப்படி?”.

“ம்…. உண்மை தான் ஏன் ஆள் வெச்சி பண்ணிருக்கலாம்ல”.

“ம்….”

தியா மற்றும் ஷ்யாம் செல்லவும் ராஜ் தன் தொலைப்பேசியை எடுத்து முன்பு கால் வந்த நம்பருக்குக் கால் செய்து பேசினான்.

அவனுக்கு இந்த விபத்தைப் பற்றி சந்தேகம் இருந்தது

எனவே அதைப் பற்றி ஒரு நம்பிக்கையான காவலரை விசாரிக்கச் சொல்லி இருந்தான். அதைக் குறித்துத் தான் பேசினான்.

அவன் பேசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி வர்ஷுவின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டுதான் இருந்தான். முக்கியமான பேச்சில் கவனமாய் இருந்தவன் சிறிது நேரம் கழித்துப் பார்க்கக் கையில் கத்தியுடன் ஒருவன் வர்ஷாவின் அருகே நிற்க அவளோ ஒற்றைக் கையால் அதைத் தடுக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள்.

யார் அந்த நபர் வர்ஷாவின் அருகே நிற்பது அதுவும் கையில் கத்தியுடன்? ஷ்யாம் நினைத்தது போல் ரவியா அல்லது அவன் கூட்டாளி யாருமா?

அந்த நபரிடமிருந்து ராஜ் தன்னவளை காப்பானா?

கார் விபத்தில் கையில் எலும்பு முறிவுடன் தப்பியவள் இந்த கத்தியிடமிருந்தும் தப்புவாளா?

(போன எபிக்கு லைக் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏அடுத்த எபில சந்திக்கலாம்…பை…. பை…)