😍உணர்வை உரசி பார்க்காதே! 03😍

eiZDGEW61792-ada5728a

🌼அத்தியாயம் 03

 

விகுஷ்கியை விட வயதில் சிறியவள் அவனை பெயர் கொண்டு அழைத்திட சினம் கொண்ட சிங்கமானான். “திமிரா பேசுனதும் மட்டுமில்லாம, என்னைய பேர் சொல்லி வேற கூப்பிடுறியா, உன்ன மாதிரி அடங்காபிடாரிய அடக்குறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்.” என்று இடக்கையை வளைத்து பிடித்து முறுக்கினான். 

அவனின் முரட்டு பிடியில் சிக்குண்ட எலியாய் போரடினாள். “புருஷனா இருந்தாலும் பொண்டாட்டி விருப்பமில்லாம தொடக்கூடாது. கைய எடுங்க!” 

“என்னது, பொண்டாட்டி விருப்மில்லாம தொடக்கூடாதா? நான் உன்ன ரொமான்ஸ் பண்ணவா தொட்டேன். ரொம்ப குதிக்காத. இப்போ கைய முறுக்குனேன். ஜாஸ்தியா பேசுனா கழுத்தையும் நெறிப்பேன்.” என்று அவளை மேலும் மேலும் கோபமூட்டுவது போல் வார்த்தைகளை அள்ளிக் குவித்தான். 

“கைய எடுங்க சொல்லிட்டேன். புருஷன்னு கூடப் பார்க்க மாட்டேன். உங்கள மாதிரி சொல்லிட்டே இருக்க மாட்டேன். செஞ்சுதான் காட்டுவேன்!” என்று அவனை மேன்மேலும் எச்சரித்து வெறுப்பேற்றினாள். 

“ஓ… செஞ்சுருவீங்களோ! ப்பா.. நான் பயந்தே போயிட்டேன். உன்னால என்ன டீ பண்ண முடியும். வெறும் வாய் சவுடால்தான் விடமுடியும்.” 

“டீ போட்டு பேசாதீங்க. எனக்கு சுத்தமாப் புடிக்காது. என் பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க. பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க. சொல்லிட்டேன்.” என்று மீண்டும் எச்சரித்தாள். 

“அப்படிதான் டீ பேசுவேன். என்ன டீ பண்ணுவ? எலிப்பொறில சிக்குன மாதிரி எங்கிட்ட சிக்கிட்டு எலிசபெத் மகாராணி மாதிரி பேசுறதா நெனைப்பா டீ உனக்கு!” வேண்டுமென்றே வார்த்தைக்கு வார்த்தை ‘டீ, டீ’ என்று பேச கோபத்தின் உச்சக்கட்டத்தில் அவள். 

அவளும் வேண்டுமென்று, “விகுஷ்கி கைய எடுங்க.” மீண்டும் அவன் நாமத்தை உச்சரித்தாள்.

“இருந்தாலும் உனக்கு இவ்ளோ கொழுப்பு ஆகாது டீ. ஒரு வயசுக்கு மூத்த ஆம்பளய பேர் சொல்லி கூப்பிடச் சொல்லி உங்கப்பன் சொல்லிக்குடுத்தானா?” அவனும் அவள் கையை விடுவதாகயில்லை. 

“அனாவசியமா எங்கப்பாவ இழுக்காதீங்க விகுஷ்கி. பேர் வச்சிருக்கிறது கூப்பிடுறதுக்குதானே! ரெண்டு வயசுதானே மூத்தவர் ரெண்டாயிரம் கிடையாதே! என்னைவிட வயசுக்கு முத்தவர அங்கிள்னுதான் கூப்பிடுவேன். வேணும்னா உங்களயும் அங்கிள்னு கூப்பிடவா?” சினம் கொண்ட சிங்கத்திடம் முல்லை மலர் கொடி மயங்குவதாகவுமில்லை. மண்டியிடுவதாகவுமில்லை. 

ஆண்கள் என்றாலே ஐந்தடி தள்ளி நிற்பவள், நாணேற்றியவனே நாரகாசூரனாய் கண்ணில் புலம்பட, அவனை அடக்கியாக வேண்டுமென்றும் எண்ணினாள். 

“உன்ன இவ்ளோ நேரம் பேசவிட்டுருக்க கூடாது.” மேலும் அவள் கையை முறுக்கினான்.

“கைய எடுங்க விகுஷ்கி பின்விளைவுகள் மோசமா இருக்கும்.” 

“ஆஃப்ட்ரோல் ஒரு பொண்ணா என்னாதான் டீ பண்ணுவ? என்னாதான் டீ பண்ண முடியும். என்ன சும்மா மிரட்டி பூச்சாண்டி காட்டுறியா?” 

பொதுவாக பெண் என்பவள் ஆணுக்கு கீழ் அடங்கி இருக்க வேண்டும். அதுவும் திருமணத்திற்கு பிறகு ஆணுக்கு அடிமையாய் வாழ வேண்டும். இப்படிதான் இவளும் இருப்பால் என்று இவன் தவறாக எடை போட்டது இப்போது தவறாகிபோனதே! அவன் நினைப்பெல்லாம் ஆத்திரம் மூட்டியதன் விளைவு இப்படியெல்லாம் பேச வைத்தது. 

சற்று தைரியம் குறைந்த பெண்ணாக இருந்தால் அவன் கூறும் வார்த்தைகளை கேட்டு என்ன செய்திருப்பாள்?

அவனிடம் கெஞ்சி, அழுது, மன்றாடி, அவன் காலில் விழுந்து போராடி, ‘ஐய்யோ அப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க என் கண் கண்ட தெய்வம். எங்க அப்பா ரொம்ப நல்லவரு நீங்க நினைக்குற மாதிரி இல்ல. உங்களுக்கு ஏத்தா மாதிரி நடந்துப்பேன். நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்’ என்று மீத்யுகா கூறியிருந்தால்,  அவனின் ஆணென்ற ஆணவ மிடுக்கு மிளிர்ந்திருக்கும் அவ்விடத்தில், அவன் எண்ணியவாறு அப்படி நடக்கவில்லையே இப்போது!

‘ஆஃப்ட்ரோல்’ என்கிற வார்த்தை சராசரி பெண்னென்று அவன் அவளை துட்ச்சமாய் நினைப்பதை எண்ண, பெண்மைக்கு ஆவேசம் எழ  பெண் புலியென பாய்ந்தாள் அவனிடத்தே!

“ஆஃப்ட்ரோல் ஒரு பொண்ணா இப்படிதான் டா பண்ணுவேன்!” என்று செம்பிலிருக்கும் பாலை அவன் முகத்தில் வேகமாக ஊற்றி பாலாபிஷேகம் செய்தாள்.  

பாதாம் சேர்த்த இளஞ்சூட்டு பால் முகத்தில்பட அவன் பிடிலிருந்த இடக்கையை விட்டவன் அவள் வலக்கையிலிருந்த பால் செம்பை மறந்தானே! 

முகத்தை துடைத்து விட்டு, “ஏன் டீ உனக்கு எவ்ளோ திமிரிருந்தா பால என் மூஞ்சில ஊத்துவ?” என்ற ஆவேசத்தில் அவளை அறைவதற்கு கையை ஓங்கினான். 

இடது கையை நீட்டி உதறி விட்டவள், “ஆத்துக்காரரே! வெய்ட் வெய்ட், உங்க லாப்டப்ப சத்தப் பாருங்கோளேன்.” என்று அவனை கேலிச் செய்தாள், அவன் பிடியில் விடபட அவன் முகத்தில் பாலை ஊற்றிய அகம்பாவத்தோடு. 

அவள் கூறியதற்கினங்க திரும்பி மடிக்கணினியை பார்த்தவனுக்கு இதயம் லப்டப் லப்டப்பென வேகமாக துடித்தது.

மன்னவனுக்கு அபிஷேகம் செய்திருந்த பால் அவன் முகத்தை தாண்டி மடிக்கணினியிலும் பட்டிருந்தது. “கிராதகி என் லாப்டப்ப என்னடீ பண்ண?” என்று கூறிக்கொண்டு மடிக்கணினியை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். 

மடிக்கணனியிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்தது. தற்காலிகமாக மடிக்கணினியை நிறுத்துமாறு, உடனே மடிக்கணினியை அணைத்தான். 

“ஆத்துக்காரரே இன்னைக்கு உங்களுக்கு லக்குதான் போங்க, பாதாமில்க் ஃபேஷியல்லோட சரியா போச்சு. சப்போஸ், என் கைல புளிகுழம்பு, கறிகுழம்பு, மீன்குழம்பா இருந்துதிருந்தா பேஸ்ட்டா கோல்டு குழம்பு பேஷியல் பண்ணிருப்பேன்.” 

பிராமணன் என்பதால் மீன் விற்பதை கண்டால் ஒதுங்கி கொள்வான். புலால் வாடை பிடிக்காது என்பதால், அப்படி இருக்க மீன் குழம்பை முகத்தில் ஊற்றினால் எப்படி இருக்குமென்று நினைக்கும்போதே அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. “உவே… உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம், லாப்டாப் சரி செய்யணும் பணம் தா டீ.” 

“தாரேன் தாரேன். முதல்ல நீங்க என் கைக்கு தைலம் போட்டு நீவி விடுங்க. அப்பறம் பணம் தாரேன். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா இருக்கும்.” அவன்தானே முதலில் தவறு செய்தான். ஆதலால் சர்வசாதாரணமாய் அப்படிக் கூறினாள். 

“லாப்டாப்ப சர்வீசுக்கு குடுத்துட்டு வந்து கவனிச்சுக்கிறேன் டீ உன்ன!” 

மடிக்கணினியில் இருக்கும் வழக்குகள் தொடர்பான இரகசிய தகவல்கள், முக்கியமான புகைபடங்கள், சொத்து தொடர்பான சில கோப்புகள் அழிந்துவிடுமென்கிற பயத்தில்   அவசரமாக வெளியே ஓடினான். 

அவள் கழுத்தில் மாலை சூட்டிய மன்னனை எண்ணி தன்பாட்டில் குழற ஆரம்பித்தாள். “எத்தனை நாவல் படிச்சிருப்பேன், ரொமான்டிக் ஹீரோவா கிடைப்பானு பார்த்தா, ஆண்டி ஹீரோவா கிடைச்சிருக்கானே! பொண்ணு பார்க்க வராம இருக்கும்போதே நாங்கொஞ்சம் உஷார் ஆகிருக்கணும். கல்யாணத்துக்கு லேட்டா வந்து பூச்சாண்டி காட்டுறது.

கொஞ்சம் முடியும் தாடியும் மீசையும் வளர்த்துட்டு என் வீட்டாளுங்கல என் முன்னாடியே அதட்டி மிரட்டி தேவையில்லாம பேசுனா, நான் அடங்கி போவேனு பார்க்குறியா? அது மட்டும் நடக்கவே நடக்காது. என் காலயே சுத்தி சுத்தி வர வைக்கல என்பேரு மீத்யுகா இல்ல!” தனக்குள் தானே சபதம் செய்வதை போல் குழறினாள். 

மணியோ இரவு பதினொன்று கடைகள் எல்லாம் மூடியிருக்க, மடிக்கணினியை சரி செய்ய முடியாமல்போக கோபத்தோடு வீடு திரும்பினான். 

அவள் கட்டிலில் நன்கு உறங்கிக்கொண்டிருக்க, “நான் இங்க அலையோ அலைன்னு அலஞ்சிட்டு வாரேன். நீ தூங்குறியா? அதுவும் என் கட்டில்ல. இரு டீ உனக்கு நல்ல வேலை செய்றேன்.” என்று கூறிவிட்டு, கட்டில் அருகில் சென்று உறக்கத்தில் இருப்பவளின் கைகளை பற்றி கீழே இழுத்துப்போட்டான்.  

இழுத்துப்போட்ட வேகத்தில் பதறியடித்து எழும்பினாள் மீத்யுகா. 

“ஏன் வக்கீல் சார், இப்படி இழுத்துப் போட்டீங்க. பாலாபிஷேகம் பத்தலயா?” என்று தூக்கக் கலக்கத்திலும் கோபமாக பேசினாள்.

“இது என் கட்டில், நீ தூங்கக்கூடாது. நான் மட்டும்தான் தூங்குவேன்.” என்று உருமினான். 

“அப்போ எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுனீங்க?” 

“ஏய் ஏய், என்னைய எதிர்த்து எதிர்த்து பேசாத, நான் சொல்லுறத கேட்டு நட.” சிறு விடயத்தை கூட விடமால் பழிவாங்குவதே குறியாய் இருந்தான் அவன். 

“நான் என்ன பூம் பூம் மாடா, நீங்க சொல்லுறதெல்லாம் கேட்டு தலையாட்டா? கேள்வி கேட்டா எதிர்த்து பேசுறதா அர்த்தமா? நீங்க உங்க கையால எனக்கு தொட்டு தாலி கட்டிடீங்க. எனக்கு முழு உரிமையும் இருக்கு இந்த கட்டில்ல தூங்க.” 

“உன் பக்கத்துல மனுஷன் தூங்குவானா டீ?” 

“ஏன், அப்போ நீங்க மனுஷன் இல்லயா? ஒரு வேலை இப்படி இருக்குமோ, என் பக்கத்துல தூங்க பயப்படுறீங்களோ?” அவனை எக்கு தப்பாக சிக்க வைக்க எண்ணினாள். 

அவன் பேசும் வார்த்தைகளுக்கு அவளும் வாயின் நுனியிலேயே பதில்களை வைத்து கொள்வாள். 

“ஏன் ஏன், நான் எதுக்கு உன்ன பார்த்து பயப்படுடணும்?” ஆணவத்துடன் படபடத்த குரலில் கேட்டான் அவன். 

“அப்படியே நான் உங்க பக்கத்துல படுத்தா, நீங்க என் அழகுல மயங்கி…” என்று காதல் குரலில் கூறி முடிக்காமலேயே இடுப்பில் கையை வைத்து நலின தோற்றத்தில் நின்று ஒற்றை கண்ஜாடையில் அவனை பார்த்தாள். 

அவள் நிற்கும் தோற்றத்தை பார்த்தவன், மெய்யாகவே அவள் அழகில் இவன் மயங்கிவிடுவானோ என்ற பயம் தோன்ற “அழகா, நீயா? அபிஷ்டு அபிஷ்டு!” என பேச்சை மாற்றி, “நீ எல்லாம் ஒரு பொண்ணா, கொஞ்சமாவது வெக்கம் கூச்சம் இல்லயா உனக்கு, ஒரு ஆண் கிட்ட இப்படிதான் பேசுவியா இதத்தான் உங்கப்பன் சொல்லி குடுத்தானா?” 

‘யப்பா, ஒரு நிமிசத்துல அவ இடுப்ப காட்டி மயக்கப் பார்த்தாளே! விகுஷ்கி இதுக்கெல்லாம் உன் மனச மசிய விட்டுராதடா.’ என்றது அவன் மனம். 

“யோவ் வக்கீலு! நான் மட்டும்தானே உங்கிட்ட பேசுறேன். எதுக்கு அப்பாவ இழுக்குற? உங்கம்மா ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லி குடுக்கலயா?” 

“பொண்ணா அடக்க ஒடுக்கமா நடந்துக்க, உங்க ஊர்ல இருக்க மாதிரி இங்க இருக்கலாம்னு நினைக்காத. நாளைக்கு ஒரு பெரிய லாயர் வீட்டுக்கு டின்னர் போகணும்.  அவுக, இவுகனு பேசி என் மாணத்த வாங்கிறாத” 

“ஹா… நான் எப்போ அப்படி பேசினேன். எங்க வீட்டல எங்க பாட்டி மட்டுதான் அப்படி பேசுவாங்க. நாங்க யாரும் அப்படி பேசமாட்டோம். முதல்ல எனக்கு ஒரு புருஷனா ஒழுங்கா நடந்துக்குங்க அப்பறம் டின்னர் போகலாம்.” 

“இங்க பாரு நான் வாரேனு சொல்லிட்டேன்!” 

“அப்போ நீங்க மட்டும் போயிட்டு வாங்க.” 

“உன்னைய எப்படி கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும்” என்று எகத்தாளமாய் கூறினான். 

“நாளைக்கு கதையா நாளைக்கு பார்க்கலாம். எனக்கு இப்போ தூக்கம் வருது தூங்கப் போறேன். அதும் இந்த கட்டில்லதான்” எங்கேங்கோ சென்ற பேச்சு மீண்டும் கட்டிலுக்கோ வந்ததடைந்தது. 

“மரியாதையா கீழ் ரூம்ல போய் தூங்கு.” 

“நான் தனியா தூங்க பயம் பேய் வரும். அதனால இங்கயே தூங்குறேன்.” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து வெகுளித்தனமாய் கூறினாள்.  அவனுக்கோ அது வீம்புரையாய் தெரிந்தது. 

“நீயே பெரிய பேய், மத்த பேயெல்லாம் உன்ன பார்த்து பயந்து கிட்ட வராது”

“ஆமா ஆமா எம்பக்கத்துல இவ்ளோ பெரிய ஆணவப் பேய் இருக்கும் மத்த பேயெல்லாம் வராது. மறுபடியும் சொல்றேன். நான் தூங்க போறேன். ஆனா நீங்க என் அழகுக்கு பயந்து என் பக்கத்துல தூங்க பயப்படுறீங்கனு மட்டும் விளங்குது.” 

“அழகாம் பெரிய அழகு! ஒரு வருஷத்துல உன்ன உங்க வீட்டுக்கே வாழாவெட்டியா திருப்பி அனுப்புறேன் டீ.” 

அவளும் கட்டிலில் படுத்தவாறே, “அதே ஒரு வருஷத்துல உங்க கூட ஒரு குழந்தைய பெத்துக்காட்டுறேன்! குட் நைட்.” 

“நீ தலைகீழ நின்னு தண்ணீ குடிச்சாலும் அது மட்டும் நடக்காது.” 

‘பார்க்கலாம் வக்கீல் சார். நம்ம கைல எதுவுமே இல்ல ஆண்டவன் கைலதான்.’ என்று மனதில் எண்ணினாள்.

மீத்யுகா கட்டிலின் சுவற்றின் புறம் திரும்பி படுத்திருக்க, விகுஷ்கி கீழ் இருக்கும் அறையில் தூங்கலாமென்று ஒர் அடி முன்வைக்க, ‘இல்ல இல்ல, இவ அழகுக்கு பயந்து கீழ் ரூம்ல தூங்குனதாகிரும். இங்கவே தூங்குவோம்.” என்று கட்டிலின் ஓரத்தில் ஒட்டி ஒடுங்கி அவள் மேல் கால் கை படாதவாறு அவன் உடலை மெத்தையில் பொருத்திக்கொண்டான். 

அவள் புறம் அவன் திரும்பி இருக்க, காற்றில் புடவை விலகி லேசாக இடை தெரிய, ‘நமக்கு எதுக்கு வம்பு, அவ இடுப்ப பார்த்ததா வேற புகார் சொல்லுவா’ என்று மற்ற புறம் திரும்பி படுத்தான். 

                           ***