😍உணர்வை உரசி பார்க்காதே! 05😍

IMG-20211108-WA0067-a4a8b4ad

🌹அத்தியாயம் 05

 

மாயோனிடம் மயங்காத பிரமை பிடித்து தலைவிரிக்  கோலமாய்  நின்றுகொண்டிருந்த மாதுவை பார்த்து, “சுச் சுச் சுச்…” என்று உச்சுக்கொட்டி, “ஐயோ பாவம்! இதுக்குதான் முதல்லே சொன்னேன். நீதான் கேக்க மாட்டீங்கிற, இதுக்கு அப்பறமாவது எங்கிட்ட இந்த சவாலெல்லாம் விடாத, ஓகேவா, நான் வேணும்னா இந்த ப்ளட்ட துடைச்சு விடவா?” என்று அவளை மேலும் மேலும் வார்த்தைகளால் கேலி செய்து கேவலப்படுத்தினான். 

பெண்ணவள் கோபத்தின் உச்ச கட்டத்தில் அவள் உச்சந்தலை  சூடேறி இருந்தது. நேற்று இடுப்பை பார்த்து பயந்தவனுக்கு, இன்று உதட்டில் முத்தமிடும் அளவிற்கு எப்போது மிடுக்கன் ஆனான். மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் முத்தமிடும் அதிகாரத்தையும் உரிமையையும் எந்த சட்டம் வழங்கியது அவனுக்கு. 

“என்ன பேச வரலையா?” மீண்டும் வார்த்தைகளால் துன்புறுத்தினான். 

“…” பாவையின் மொழி பாவத்திலும் மௌனமானது. அவளை அறியாமல் கண் கலங்க செய்தது.

கீழ்தரமாக இப்படி ஒரு காரியத்தை வேறு எவரும் செய்திருந்தால், ஐவிரல்கள் விரிந்து கன்னம் சிவந்திருக்குமே! உற்றவன்  என்பதால் ஊமையாகிவிட்டால் போலும். புரிதலின்றி இதழ் இணைத்தது பிடிக்கவில்லை அவளுக்கு.

அவன் வேறு எதுவும் வித்தை காட்டுவான். அதை திருப்பி செய்து காட்டடிடலாமென்றே ஒப்புக்கொண்டாள். முதல் முத்தமே  இதழ் முத்தமாய் இருக்க மொத்தமாய் மாட்டிக்கொண்டாளே அவள், அவனிடத்தே! 

அவன் இப்படி காட்டுமிராண்டி தனமாய் நடந்து கொண்டதை நினைக்க அவளகம் ஏற்கவில்லை. மேன்மேலும் அவனுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்ற ஊக்கத்தை வலுவூட்டியது. 

விகுஷ்கியோ இதழ் முத்த இனிமையை இரசித்ததைவிட, அவள் முத்ததை மறுத்து வேண்டாமென்று துடித்ததை அணு அணுவாய் இரசித்தான். உதட்டில் உதிரம் பெருக்கெடுத்ததும் முத்தம் கொடுத்து சித்திரவதை செய்தோம் என்கிற புதுவித புளகிதம் அவனுக்கு, அவளை வீழ்த்தியது போல்.

“ஏய், என்ன டீ பேசாம இருக்க, மாயக்காரி மாயக்கண்ணீர் விட்டா, அப்படியே விட்டுருவேணு பார்க்குறியா, இப்போ லஞ்சுக்கு வந்தேன். சாப்பிட்டு ஆஃபிஸ்  போறேன். வந்து வச்சுக்கிறேன்.”  அவன் கூறுவதெல்லாம் அவள் செவிக்குள் செல்லவில்லை.

“பேபி, நான் வர்ட்டா!” என்று இனிமையான குரலில் ஒற்றை விரலை வாயில் வைத்து நகைந்துவிட்டுச் சென்றான். 

நான்கு சுவரும் அவளை சுற்றுவது போல் ஓர் உணர்வு, ‘நீ இப்படிதான் ஒரு ஆண் கிட்ட அடங்கிப்போவியா? இது உன்னோடு கேரக்டர் லிஸ்டுலயே இல்லயே! கல்யாணமாகி அடுத்தநாளே நீ ஏன் இப்படி மாறிவிட்டா?’ மனசாட்சி அவளிடம் பல வினாக்களை தொடுத்தது. 

விருக்கென்று எழுந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். மழைக்குழாயின் நீர்துளிகள் அவள் முகத்தை நனைக்க கண்ணீர்துளிகள் காணாமல் போனது. இத்தோடு இன்றைய நாளுக்கான மூன்றாவது குளியலானது.

விகுஷ்கியோ பகல் உணவை மகிழ்வோடு அருந்திவிட்டு அவனது தொழிலுக்கு சென்றிருந்தான். 

***

விகுஷ்கியின் வழக்கறிஞர் அலுவலகத்தில், “என்ன வேலா, டோக்கன் போட்டு முடிஞ்சுதா?”

“போட்டாச்சு சார், மூனே மூனே கேஸ்தான் வந்துருக்கு.” 

“சரி நான் கேஸ்ஸ பார்க்குறேன். கார்ல சாப்பாடு வச்சுருக்கேன். எடுத்து சாப்பிட்டு வா.” என்று கூறி மகிழுந்தின் சாவியை வேலனின் கையில் கொடுத்தான் விகுஷ்கி. 

வழக்கு தொடர்பாக பேசுவதற்கு ஒவ்வொருத்தராக உள்ளே எடுத்தான். முதல் வழக்கு இளம்தம்பதியினரின் விவாகரத்து, “சார் இவள கல்யாணம் பண்ணதுல இருந்து எனக்கு நிம்மதியே இல்ல. எப்போ பாரு காசு காசுனு இருக்க, 

எங்க வீட்டு ஆளுங்கள மதிக்கிறதே கிடையாது. அதுதான் விவாகரத்து பண்ணலாம்னு வந்துருக்கேன். குழந்தைய எங்கிட்ட குடுத்துருங்க.” என விவாகரத்திற்கு பரிந்துரை செய்த ஆணின் மனைவியின் முகத்தை பார்த்தான் விகுஷ்கி.

அவளோ பரித்தாபமாய் கண்ணீர் விட்டபடி ஒரு குழந்தையை கையில் வைத்திருக்க, “நீ என்னமா சொல்லுற?” என்று அப்பெண்ணை பார்த்து வினவினான்.

“சார் இந்த மனுஷன் சொல்லுறதெல்லாம் பொய். குழந்தைக்கு பால் பவுடர் வாங்க காசு கேட்டா குத்தமா, மாமியர் வீட்ல என் புருஷன மதிக்காட்டி நான் எப்படி அவங்க வீட்டாளுங்கள மதிப்பேன். இதெல்லாம் இந்த மனுஷனுக்கு புரிய மாட்டீங்குது. விவாகரத்து ஆனாலும் பரவாயில்ல. குழந்தைய நானே பார்த்துப்பேன்.” என்று அப்பெண் கூறினாள்.

“இல்ல சார். குழந்த எனக்குதான் வேணும். அவள நம்பி குடுக்க முடியாது.” என்று விகுஷ்கியின் முன்பே கோபமாக பேசினான்.

“இல்ல சார். புருஷனும் குழந்தையும்தான் என் உலகமே ரெண்டு பேருமே இல்லாம நான் எதுக்கு வாழணும்?” 

“பார்த்தியா உன் பொண்டாட்டி என் சொல்லுறான்னு, விவாகரத்து வேணாம். ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்க.” என்று அறிவுரை கூறினான். 

“அதெல்லாம் முடியாது சார். எனக்கு என் குழந்த வேணும். விவாகரத்தும் வேணும். சரிபாதியா பிச்சாவது குழந்தைய குடுங்க.” என்று அந்த ஆண் கூறினான். 

குழந்தை என்றால் அதிகப்பிரியம் விகுஷ்கிக்கு, வீட்டில் குழந்தைகள் அதிகமாக இருந்தால் லட்சுமி காடாட்சமாய் எண்ணுவான். 

குழந்தையை பிரித்து  கேட்டது விகுஷ்கிக்கு ஆத்திரத்தை வரவலைத்தது. ஓங்கி ஓர் அறை அறைந்தான். அவன் ஐவிரல்களும் பதியும் அளவில், “நான் பொறுத்து பொறுத்து போறேன். ஓவர பேசுற ராஸ்கல், என்னது குழந்தைய பிச்சு தரணுமா அதென்ன கடைல விக்கிற பொம்மையா? உன் குழந்த, உன் குழந்தனு சொல்லுற, உன் பொண்டாட்டி இல்லாம பெத்தியா, இல்ல வானத்துல இருந்து குதிச்சுதா? ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சு  ஒரு குழந்த பிறக்கும் வரைக்கும் நல்லம், அப்பறம் சரியில்ல. 

உன்ன நாலு பேரு மதிக்கிற மாதிரி நீ நடந்துக்கிட்டா, உன் பொண்டாட்டி ஏன் மத்தவங்கள மதிக்காம இருக்க போறா? உன் பொண்டாட்டியோட தனிக்குடுத்தனம் போயி வாழுற வழிய பாரு. விவாகரத்து விஷயமா வேற லாயர் கிட்டவோ இல்ல, கோர்ட்டு பக்கமோ பார்த்தேன், தொலைச்சுருவேன்!” என்று விழிகளை உருட்டி விரல்களால் அதட்டி வார்த்தைகளால் மிரட்டினான்.

“ரொம்ப நன்றி சார்” என்று அப்பெண் கையெடுத்து கும்பிட, குழந்தையை முத்தமிட்டு ஐந்நூறு ரூபாய் பணத்தை கையில் கொடுத்தான். 

“குழந்தைய கவனமா பார்த்துக்கோ மா.” என்று கூறி, பிரிந்து வந்த ஜோடியை ஒரு சேர அனுப்பி வைத்தான். 

வழக்கை நீதிமன்றத்தில் வாதாடினார் லாபமுண்டு. சேர்த்து வைத்ததில் என்ன லாபம்? எல்லாம் ஒரு மனதிநேயோ மனிதாபிமானமோ அல்ல. அப்பெண்ணை பார்ப்பதற்கு அவனது தங்கை சஷ்டி போலிருந்ததுதான் உண்மை. 

வேலன் உணவருந்தி முடிய  அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

“என்ன வேலா அடுத்த கேஸ காணோம்.” 

“நீங்க போட்ட போடுக்கு அப்படியே போயிட்டாங்க சார்.” 

“ஓ.. அப்போ அடுத்த ரெண்டு கேஸும் விவாகரத்துதானா?” 

“ஆமா சார்.” என்று கூறிவிட்டு, வேறு வேலைகள்  இல்லாமல்போக அப்படியே பத்திரிகை படிக்க ஆரம்பித்தான் வேலன். 

வேலன் பத்திரிகை படிப்பது வழக்கம், பத்திரிகையில் என்ன செய்தி இருக்கிறதென்று கேட்டு அறிந்து கொள்வது விகுஷ்கியின் வழக்கம்.

“என்ன வேல, இன்னைக்கு தலைப்பு செய்தி?” என்றான்.

“முரண்டு பிடித்து மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த கணவன். அதற்கு தண்டனை, கணவன் உறங்கும் போது வாயில் ஃபெவிகுயில் கம்மை ஊற்றிய மனைவி.” 

“ஐய்யோ! இப்படி எல்லாம் பண்ணுவாங்களா?” அவன் திடுக்கிட்டு, தனக்கும் இப்படி நடக்குமோ! என்று விளம்பினான்.

“இதென்ன சார் சின்ன விஷயம்.  அம்மிக்கல்ல தூக்கி போடுறாங்க. அரலி விதை சட்னி அறைச்சு குடுக்குறாங்க. இதவிடவா அது பெரிய விஷயம்! பிகிலு படம் எப்போ வந்துச்சோ, அப்போ இருந்து பொண்ணுங்க எல்லாம் சிங்கப்பொண்ணுங்கதான் சார்.” 

“ஆமா ஆமா, படத்த பார்த்து பலசாலியா இருக்க வேண்டிய ஆம்பளங்க, பொண்ணுங்களுக்கு அடங்கி போயிறாங்க.” 

“படம்னு இல்ல சார். எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு தைரியம் இருக்கும் சார். அதை தட்டிவிட்டா போதும். அவ்ளோதான் நம்மலையே பிரிச்சு மேஞ்சுருவாங்க.” வேலன் கூறுவதெல்லாம் யதார்த்தநிலைகள்தான் ஆனால் விகுஷ்கிக்கு பீதியை கிளப்பியது.

“அப்படிங்கிற!” அவன் விழிகள் இரண்டும் பயத்தில் இமைக்க, வாயை சுற்றியிருக்கும் வியர்வையை துடைத்தான். 

“அட போங்க சார்! என்னா சார் பெரிய முத்தம், எங்க வீட்டு பக்கம் ஒரு பொண்ண அவ விருப்பமில்லாம பலாத்காரமா ஒருத்தன் மொத்தமாவே முடிச்சுட்டான். அதுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு தெரியுமா?” வேலன் கூறும் கதையை ஏதோ விறுவிறுப்பான தொடர்கதை போல் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான் விகுஷ்கி.

“அப்பறம் என்னாச்சு?” 

“அந்த பொண்ணு, அந்த பையன் கழுத்துல தாலி கட்டிருச்சு சார்! இதுதான் இப்போ ஃபேஷன். பொண்ணுங்கதான் பசங்க கழுத்துல தாலி கட்டுவாங்க.” 

பரபரப்பான தகவல்களை வேலன் விளம்பிக் கொண்டிருக்க, விகுஷ்கிக்கு, மீத்யுகா தாலி கட்டினால் எப்படி இருக்குமென்று, அவனே அதை நினைத்துப் பார்க்கும் கேவலம். 

அவனை எரிச்சலூட்டும் விதமாய்  நான்கைந்து கேள்விகளை தொடுத்தான். “சார், அக்கா சூப்பர்!” என்று கண்களை அகல விரித்து கூறினான் வேலன்.

“யாரு, எந்த அக்கா?” உண்மையாகவே வேலன் மீத்யுகாவை சுட்டிக்காட்டுவது  புரியவில்லை விகுஷ்கிக்கு.

“அதான் சார் உங்க வைஃப்.” 

“அவ உனக்கு அக்காவா? இருக்கட்டும் இருக்கட்டும்.” என்று சளைப்பில் கூறினான்.

“சார் ஹனிமூனுக்கு எங்கயும் போகலயா?” என்று குறுகுறுப்பான பார்வையுடன் வினவினான்.

வேலனின் வினாவிற்கு தன்மையாக சிரித்தான். அதில் தேனிலவு செல்கிறார்களா, இல்லையா? என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருந்தது வேலனுக்கு. அதற்கு மேல் வேலன் ஏதும் வினவினால் அழகில்லையென்று அத்தோடு விட்டான். 

அவன் கைபேசியில் பாராளுமன்ற உறுப்பினர் இராஜயோகியனின் அழைப்பு, அழைப்பை பேசி அடுத்த நிமிடமே, “வேல, நீ ஆஃபிஸ பார்த்துட்டு இரு, நான் யோகி சார் வீட்டுக்கு போயிட்டு வாரேன்.” 

“என்ன சார், எப்போ பாரு அவர் வீட்டு நீங்க போறீங்க. அவர் இங்க வரமாட்டாரா?” தலைக்கு மேல் பணத்திமிரு ஏறி இருப்பதால், பாராளுமன்ற உறுப்பினர் இராஜயோகியனை கண்டாலே  வேலனுக்கு பிடிக்காது.

“லீகலான கேஸ் மட்டும்தானே நான் எடுக்குறேன். எட்டு வருஷமா  அவங்க ஃபேமிலி ப்ரோபடிஸ் எல்லாம் நான்தானே மெயிண்டன் பண்றேன். சோ கூப்பிடும்போது போயிதான் ஆகணும்.” 

“அட போங்க சார்!” 

“சரி நீ ஆஃபீஸ பாரு, நான் சீக்கிரம் வந்துரேன்.” என்று வேகமாக கிளம்பினான். 

***

“சார் வரச் சொன்னீங்க?” 

“ஆமா விகுஷ்கி, என்னோடு பிஸினஸ்ஸ என் பையன் பேருக்கு மாத்தணும். இருபதாம் தேதி நிறைஞ்ச பௌர்ணமி, நாள் நல்லாயிருக்கு அன்னைக்கே மாத்திரலாம்.” 

“சரி சார் பத்திரம் ரெடி பண்ணிறேன் அதுக்குள்ள, இப்போ கிளம்புறேன் சார்.”

“இருப்பா காஃபி குளிச்சுட்டு போகலாம்.” 

“ம்ம்ம்” குளம்பியை கொண்டு வந்த சிறுமியை பார்த்தவனுக்கு மனதில் ஒரு நெருடல், “இந்த பாப்பா யாரு சார்?” 

அச் சிறுமியின் முகத்தில் ஏதோ ஒரு ஏக்கத்தின் வெளிபாட்டை உணர்ந்தான்.

“வைஃப் வீட்டு ரிலேடிவ்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் இராஜயோகியன் கூறும் விதமே விகுஷ்கிக்கு பிடிமானமாக இல்லை. 

சம்பாஷனை முடிய கிளம்பி வீட்டு வாசலின் அருகே சென்று சிறுமியை திரும்பிப் பார்த்தான்.

ஏக்கத்தை இறுக்கி பிடித்து ஆழ்மனதில் குழுறல்கள் கலங்கியிருந்த கண்கள் வழியே தெரிய, இராஜயோகியனின் பார்வைக்கு அடங்கி உள்ளே சென்றாள் அந்தச் சிறுமி.

அதற்கு மேல் நிற்காமல் மகிழுந்தில் ஏறி செலுத்த ஆரம்பித்தான். 

அவனது அலுவலகத்தில், ” என்ன சார், அந்த ஆளுக்கு என்ன செய்யணுமாம்?” 

“அவர் பிஸினஸ்ஸ அவர் பையன் பேருக்கு மாத்தணுமாம். பத்தரத்த நீயே ரெடி பண்ணிரு வேலா.” 

“சரி சார்.” 

மணி நான்கை கடக்க, வழக்கு தொடர்பாக யாரும் வரவில்லையென்று வேலனிடம் அலுவலகத்தை மூடுமாறு சொல்லிவிட்டு  வீட்டிற்கு கிளம்பினான். 

வீட்டிலே, மீத்யுகா அறையை விட்டு வெளியே வராமல் உணவும் அருந்தாமல் இருக்க, வீட்டிற்கு வருகை தந்த விகுஷ்கி வேண்டுமென்று சீண்ட ஆரம்பித்தான். 

மலைத்து போயிருந்த பெண்மையை பார்த்தவனுக்கு,  “ரொம்ப ஸ்டோங்கா குடுத்துட்டேனோ?”

அவன் நக்கல் நய்யாண்டி எல்லாம் அவளுக்கு புரியாமல் இல்லை. சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்.

“சிங்கப்பெண் ரேஞ்சுக்கு பேசுன,  எலி பொந்துக்குள்ள அடஞ்சி இருக்க மாதிரி நீ ரூமுக்குள் அடஞ்சி இருக்க?” அவன் பேசும் தோரணையில் ஏளனம்.

“எலி அடங்குனதா நினைச்சி உங்க தப்பு, புலி பதுங்குனதா நினைக்காதது உங்க முட்டாள்தனம்.” 

“ஓ… அப்போ நீ புலிப்பெண்ணோ?” 

“ஒரு பொண்ணுக்கிட்ட கீழ்தரமா நடந்துக்கிற நீங்க, ஒரு பொண்ண யாரும் தெரியாம பார்த்துட்டு வாரீங்க. உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. ஒரு ஆம்பளயானு?”

“ஏய்! என்ன டீ சொல்ற, அப்போ என்னைய ஃபோலோ பண்றியா?” 

“ஆமா, நீங்க ஒருத்திய வச்சுருக்கீங்க. அதும் ஆஸ்பிடல்ல. அவ இருக்கும்போது என்னைய எப்படி பிடிக்கும்?” 

“என்ன டீ வாய் ரொம்ப நீளுது?” என்று அவள் கழுத்தை பற்றினாள். 

“ஒரு பொண்ணுக்கிட்ட வீரத்த காட்டுற நீ, ஆம்பளயா?” அவள் கைகளிலிருந்து விடுபட முயற்சித்தாள்.

“ரொம்ப எகுறாத, அந்த பொண்ணு யாருனு தெரிஞ்சா வாய மூடிருவ”

“அதான் தெரிஞ்சுருச்சே! என்ன கேட்ட என்ன கேட்ட, முத்தத்த திரும்பி தரணுமா? உன்ன மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் எனகில்ல. பட் கண்டிப்பா ஒரு நாள் மொத்தமா திரும்பி தருவேன்.”

அவள் பேசும் சத்ததில் கோபமடைந்தவன் பற்றியிருந்த கழுத்தோடு சுவற்றில் சாற்றி கழுத்தை பற்றி அப்படியே அவளை தூக்கினான். 

கால்கள் துடிக்க துடிக்க கழுத்து இறுக இறுக மூச்சு முட்டுவதை உணர்ந்தவள் அவன் கைகள் பற்றி, கால்களால் அவனை எட்டி உதைத்தாள். அவள் உதைக்க, அவள் கழுத்திலிருந்த கையை விடுத்த கீழே விழுந்தான். அவளும் கீழே விழுந்தாள்.       

***

 உணர்வுகள் தொடரும்…