- 🌹அத்தியாயம் 16
கோபத்தில் அவள் வாயை அடைப்பதற்காக அவன் செய்த காரியம், மீத்யுகாவை இழிவு படுத்தவில்லை. உற்சாகப்படுத்தி இன்னுமொரு இதழ் சிறையை ஏற்படுத்தியது.
அவள், விகுஷ்கியை இழுத்து வைத்து இதழ் இணைத்ததை விகுஷ்கியால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. மீத்யுகாவிற்கு இவ்வளவு தைரியம் இருக்குமென்று துளியளவும் எதிர்பாராதிருந்தான்.
“நான் உங்க பழைய கணக்க கழிச்சுட்டேன். திருப்பி தா திருப்பி தானு கேப்பீங்களே இப்போ தந்துட்டேன். இப்போ எதுக்கு வக்கீல் சார் தேவையில்லாம என்னைய கிஸ் பண்ணீங்க?” என்றிட, விகுஷ்கி எச்சில் விழுங்கினான். அவள் கேட்ட கேள்விக்கு கோபம் வரவில்லை. விழிகளின் வீரியம் குறைந்து தரைமீது வீழ்ந்தது.
“ஸாரி ஸாரி!” என்று வார்த்தைகளை பிதற்றினான்.
“எதுக்கு ஸாரி கேக்குறீங்க, இப்போ கிஸ் பண்ணதுக்கா இல்ல, அன்னைக்கி…” என்று குதர்க்கமாய் ராகமிழுத்தாள்.
“தெ… தெரியாம பண்ணிட்டேன். ஸாரி.” மீத்யுகாவின் கண்கள் செந்நிறம் பூண்டது.
“ஓ அப்போ, எதையுமே தெரிஞ்சே பண்ண மாட்டீங்க. தெரியாமலே பண்ணுவீங்க. அப்படி தானே! வக்கீல் சார்?”
“அதான் ஸாரி சொல்றேன்ல. ரொம்ப பேசாத.” என்று அவன் பான்ட்டில் இருக்கும் பணப்பையை திறந்து நான்கைந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவள் மீது வீசினான்.
“ரெண்டு மூனு வாட்டி உன்ன கிஸ் பண்ணேன். அதுக்குதான் இந்த காசு எடுத்துக்கோ. இதுக்கு அப்பறம் உன்னைய கிஸ் பண்ணவேமாட்டேன். போதுமா?” என்று சத்தமாகக் கூறினான்.
“நான் என்ன ப்ரோசிடியூட்டா, கிஸ் பண்ணதுக்கு பணம் தாரீங்க, அப்பறம் எதுக்கு இந்த தாலி, கட்டுன பொண்டாட்டிக்கு கிஸ் பண்ணீட்டு காசு குடுக்குறீங்களே! உங்களுக்கே கேவலமா இல்ல? எம்மேல பணத்த வீசுற மாதிரி எத்தன பேருக்கு வீசிறுப்பீங்க. கடவுளுக்குதான் தெரியும்!”
“என்ன டீ சொன்ன?” என்று பற்களை கடித்து கையை ஓங்க, அவன் கையை பற்றினாள்.
“எப்பயும் அடிவாங்கிட்டே இருப்பேன்னு நினைப்போ, அப்படி இருந்த இன்னையோட அந்த எண்ணத்த மாத்திருங்க வக்கீல் சார்!” என்று அவன் கையை பற்றியவாறே அவனுக்கு நான்கைந்து அறைகளை விட்டாள். அவன் சித்தம் கலங்குவது போல் இருந்தது.
அதன் பின், “என்ன டா ஒரு பொண்ணோட கை சாப்ட்டா இல்லேனு யோசிக்கிறீங்களா, பசங்கள அடிகிறது ஒண்ணும் எனக்கு புதுசு கெடயாது. நெட்பால தினமும் தொட்டு பார்க்குற கை. சோ உங்களுக்கு வலி கொஞ்சம் அதிகமாவே இருக்கும். இது எனக்கு தேவையில்லை. நீங்களே வச்சிக்கோங்க. அண்ட் மறக்காம ஒத்தடம் வைங்க. இல்லனா வீங்கிரும்.” என்றாள், ‘இதை நீங்களே வச்சிக்கோங்க’ என்று கூறும்போது அவன் விட்டெறிந்த பணத்தை அவனுக்கே மீண்டும் விட்டெறிந்தாள்.
“ஏதோ பேச வந்தீங்களே அதை இப்போ சொல்லுங்க வக்கீல் சார்?”
“பழிக்கு பழி வாங்கிட்டல!”
“ஓ அதை சொல்லதான் கூப்பிட்டீங்களா? உங்கள மாதிரி புத்தியெல்லாம் எனகில்ல சார்.”
“சஷ்டி, நம்ம கல்யாணம் எப்போ, எப்படி நடந்துச்சுனு கேக்குறா, உன்ன பக்கத்துல வச்சிக்கிட்டு எல்லாம் விளக்காம சொல்லணும். அப்பறம் சஷ்டியே உன்னைய வெளிய துரத்துவா, அப்போ இருக்கு டீ உனக்கு.”
“என் அக்கா பண்ண தப்ப நான் சரிப்படுத்திட்டேன். எங்கூட வாழுற வழிய பாருங்க. சஷ்டி கிட்ட நானும் பேசணும். நானும் வக்கீலோட பொண்ணுதான், மறந்துறாதீங்க.” என்று கூறிவிட்டு, அடுத்த அறையில் புடவையை மாற்றி விட்டு கோவிலுக்கு கிளம்பினாள்.
***
இருவரின் கூடலுக்கு பிறகு, விகுஷ்கி அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க, மீத்யுகாவிற்கு பித்து பிடிப்பதுபோல் இருந்தது.
வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு வந்தவள் கைபேசியில் திவிக்கு அழைப்பு விடுத்தாள். அவளுடன் தனியாக பேச வேண்டுமென்று கூறி அவர் வழக்கமாக தனிமையை நாடும் பூங்காவிற்கு வருமாறு கூறினாள்.
“என்ன மீயூ, ஹேப்பி ஆர் சாட் நியூஸ். ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த மாதிரி தனியே பேசணும்னு கூப்பிடுற என்ன கலர் டிரஸ், அதையாவது சொல்லு, நானே கண்டுபுடிக்கிறேன்.”
“நீ நேர்லயே பாரு திவி, சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு வந்துருவேன்.” அழைப்பை துண்டித்துவிட்டு, கறுப்பு வர்ண புடவையை அணிந்து சென்றாள்.
பூங்காவில், “ஏய் மீயூ! என்ன ப்ளாக் டிரஸ், சாட் நியூஸா டீ, என்ன டீ ஆச்சு?” பதற்றத்துடன் வினவினாள் திவி. நற்செய்தி எதுவும் இருக்கும் அவள் நீல வர்ண ஆடை அணிந்து கொண்டு வருவாள் என்று திவ்யா நினைத்திருந்தாள்.
பெண் பார்க்க வந்ததிலிருந்து, திருமணத்திற்கு பிறகு முதலிரவில் இருந்து அனைத்தையும் மீத்யுகா திவியிடம் கூறினாள்.
“நீ என்ன லூசா இப்படி அடி வாங்கிட்டு வந்து நிக்கிற, கன்னத்த பாரு பிங்க் கலர்ல இருக்கு. சஷ்டி செத்துட்டானு அடிவாங்குன ஓகே, அவ உயிரோட இருக்கானு தெரிஞ்சதும் அந்த அடிய திருப்பி குடுத்துட்டு வர வேண்டியதானே! இப்படி வந்திருக்க நீ பழைய மீத்யுகாவே கெடயாது.”
“நாங்க புருஷன் பொண்டாட்டி ஆகிட்டோம். பட் அவரு அதை நம்ப மாட்டிங்கிறாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. இப்போ இதை சஷ்டி கிட்ட சொல்லணும். நான் சகி கிட்ட பேசி, சகிய சஷ்டி கிட்ட மன்னிப்பு கேக்க வரைக்கும். எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு.”
“முதல்ல நீ திருப்பி கொடுக்க வேண்டியத திருப்பி குடு அடியையும் சேர்த்து குடு. அப்பறம் உனக்கு வேறய தெம்பு வரும்.” என்று திவ்யா கூறிய வார்த்தைகள் இப்போ நினைவிற்கு வந்தது.
‘நீ சொன்ன மாதிரி பண்ணிட்டேன் திவி. எனக்கு இன்னும் தைரியம் வந்துட்டு அடுத்தது சஷ்டி கிட்ட பேசுறேன்.’ என்று விகுஷ்கியின் பழைய கணக்கையும், அடியையும் கொடுத்துவிட்டு, திவ்யாவிடம் பேசியதை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தாள்.
கோவிலுக்குள் நுழைந்து கடவுளிடம் அன்று அவள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு நன்றி செலுத்திக்கொண்டிருந்தாள். “ரொம்ப நன்றி முருகா, சஷ்டிய நல்லபடியா திருப்பி குடுத்துட்ட, வச்ச நேர்த்தியெல்லாம் கூடிய சீக்கிரம் செஞ்சிறேன். அப்படியே என் புருருஷஷஷனா வெய்ட்டா கவனிக்கணும்.
அதையும் நீயே பார்த்து பண்ணீரு. அவன் புத்திக்கு எட்டுற மாதிரி எதாவது பண்ணு, ஓகே. பழிவாங்குற குணம் விகுஷ்கிய விட்டு போகணும். அக்காக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கணும். சஷ்டிக்கு நல்ல வரன் அமையணும். இதெல்லாம் நடக்கும். நீ நடத்தி வைக்கணும்.” என்று ஐந்துகரத்தான் தம்பியிடம் ஆயிரம் வேண்டுதல்களை வைத்தாள்.
மன அமைதிக்காக சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.
வீட்டுக்குச் சென்றால், கோவிலில் கிடைத்த அமைதியெல்லாம் கலைந்து போவது போல் இருந்தது.
“அண்ணா, அண்ணி எப்போ வருவாங்க?” என்று பல முறை கேட்டுவிட்டாள் சஷ்டி.
“உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கேன். அதெல்லாம் சரியா இருக்கானு பாரு முதல்ல.”
மீத்யுகா வாசலின் ஒரு ஓரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். மீத்யுகா அமைதியாக உள்ளே நுழைந்தாள். விகுஷ்கி, மீத்யுகாவை பார்த்தவுடன், “இதோ வந்துட்டா அவ.” என்று கண்ஜாடை காண்பித்தான்.
“இவங்கதான் அண்ணியா? செம்ம க்யூட்டா இருக்காங்க.” என்று கூறிவிட்டு ஆசையாக அவள் அருகில் சென்றாள்.
“அண்ணி!” என்றவள் கண்களில் அன்பு தெரிந்தது.
கோவில் வீபூதியை சஷ்டியின் நெற்றியில் பூசிவிட்டு, சஷ்டியை பார்த்து மெலிதாய் ஒரு புன்னகையை அவள் இதழில் தவழவிட்டாள். “கொஞ்சம் இரு சஷ்டி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாரேன்.”
“ஓகே அண்ணி.” என்று சிரித்துக் கொண்டே விளம்பினாள்.
மீத்யுகா அறைக்குள் சென்று உடையை மாற்றிக்கொண்டே, சஷ்டியுடன் எப்படிப் பேச வேண்டும். என்னென்ன பேச வேண்டுமென்று திட்டமிட்டுக்கொண்டாள்.
கீழ மெதுவாக இறங்கி வந்தாள். சஷ்டியின் அருகில் அமர்ந்து கொண்டாள். “சஷ்டி சாப்பிட்டு மாத்திரை போட்டியா?” அக்கரையுடன் கேட்டாள் மீத்யுகா. விகுஷ்கி குதர்க்கமாய் அவள் முகத்தை பார்த்தான்.
“ஆமா அண்ணி, சாப்ட்டேன். அண்ணா வாய் திறந்து எதுமே சொல்ல மாட்டிங்கிறான். நீங்களாவது சொல்லுங்க அண்ணி.
அண்ணாவ எங்க பார்த்தீங்க. யாரு ப்ரோபோஸ் பண்ணது. எல்லாம் சொல்லுங்க. பார்க்கதான் கொடுத்து வைக்கல. கேட்டாவது சந்தோசப்பட்டுகிறனே!” என்றாள் சஷ்டி.
“என்ன விகுஷ்கி நீங்க சொல்றீங்களா, இல்ல நான் சொல்லட்டுமா?” என்று இறுமாப்பாய் கேட்டாள்.
‘நீ என்னத்த சொல்றது நானே சொல்றேன்.’ என்பதுபோல் ஜாடை செய்து விட்டு அவன் உரையை தொடர்ந்தான்.
“உன் அண்ணி யாருன்னு தெரிஞ்சா அப்படியே அசந்துருவ சஷ்டிமா, அதுவும் அவ அக்கா யாருனு தெரிஞ்சா உனக்கு மயக்கமே வந்துரும்மா”
“ரொம்ப சீன் போடமா சொல்லு ணா.”
“சஷ்டிமா நீ டென்ஷன் ஆகாத ஓகே. உன்னைய ஆக்சிடன்ட் பண்ணவங்க பேர் சகிஷ்ணவி, அவங்களோட தங்கச்சிதான் உன் அண்ணி மீத்யுகா!”
சஷ்டி திருதிருவென முழிக்க, ஒரு நிமிடம் விபத்து நடந்தது நினைவிற்கு வந்து மீண்டது. மீத்யுகா விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
“அப்பறம் ஏன் இப்படி பண்றேனு யோசிக்கிறியா சஷ்டிமா?” என்று அவன் கேட்க, சஷ்டி, ‘ஆம்’ என்று தலையை அசைத்தாள்.
“ஆக்சிடன்ட் பண்ணிட்டு அவ பாட்டுக்கு போயிட்டா, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இருக்கலயே. அடுத்த நாளாவது வந்து உன்ன தேடி பார்த்தாளா, அவங்க வீட்லயும் சொல்லாம அப்படியே மூடி மறச்சிட்டா சகிஷ்ணவி.”
“அதுக்கும் நீ அண்ணிய கல்யாணம் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம் ணா?” லட்சுமி சமையலறையில் இருந்து அனைத்தையும் கேட்க ஆரம்பித்தார்.
“இருக்குமா இருக்கு. என் தங்கச்சி வாழ்க்கை பாலா போகணும். அவ தங்கச்சி வாழ்க்கை மட்டும் செழிப்பா இருக்கணுமா? உன் வாழ்க்கையை செதச்சிட்டு அவ இப்போ வரைக்கும் சந்தோஷமா இருக்கா என்னால அதை பொருக்க முடியல, வயிறு பத்தி எரியுது!” என்று கடுப்போடு கூறினான்.
“சஷ்டி இது நியாயமானு நீயே சொல்லு? எங்க அப்பாவும் லாயர்தான் அவர்கிட்டவே பேசி இருக்கலாம். உங்க அண்ணா அப்படி பண்ணாம என்னைய கல்யாணம் பண்ணி கொடுமை பண்றாரு.” என்று மீத்யுகாவின் குரல் ஒலித்தது.
சஷ்டிக்கு, தனது அண்ணன் ஒரு பெண்ணை கொடுமை செய்கிறான் என்று சஷ்டியை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விடயம்.
விகுஷ்கியோ மீத்யுகாவை பேசவிடாமல், “எல்லாம் நியாயம்தான் டீ நீ வாய மூடு”
“அண்ணி சொல்றது உண்மையா ணா?” என்று சஷ்டி கவலையுடன் கேட்டாள்.
“ஆமா மா, கொடுமை பண்றதுக்காகதான் அவள கல்யாணம் பண்ணேன்.” பெண் பார்க்க சென்றதில் இருந்து திருமணத்திற்கு தாமதமாய் சென்றது வரை ஒன்று விடாமல் கூறினான்.
“அவ ஒண்ணும் லேசு பட்டவ இல்ல. அடிச்சா திருப்பி அடிப்பா, கடிச்சா திருப்பி கடிப்பா” என்றான் சஷ்டியிடம்.
“சொல்லுறத தெளிவா சொல்லுங்க வக்கீல் சார். கிஸ் அடிச்சா திருப்பி கிஸ் அடிப்பேன். கன்னத்துல அடிச்சா திருப்பி அடிப்பேன். இப்படி தெளிவா சொல்லுங்க.”
“ஆமா ஆமா இப்போ தெளிவா ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுகோ, சஷ்டி மா நீ வந்ததுக்கு அப்பறம் இவள வீட்ட விட்டு துரத்துறதா ப்ளான். எப்போ தூரத்தலாம்னு நீயே சொல்லு?”
உடன் பிறந்த அண்ணனா? உயிர் கொடுத்த அண்ணி?
***
உணர்வுகள் தொடரும்…