😍உணர்வை உரசி பார்க்காதே! 19😍

20211124_190527-71b0a281

🌹அத்தியாயம் 19

மீத்யுகா மீண்டும் விருந்தினர் அறைக்கு சென்றாள். திவ்யாவுக்கு அழைப்பு விடுத்தாள். 

“திவி” என்றாள் ஏக்கத்தோடு. 

“அவரு வந்துட்டாரா, என்ன சொன்னாரு ஒத்துக்கிட்டாரா?” 

“இல்ல திவி. அவரோட குழந்த இல்லேனு சொல்லிட்டாரு. எனக்கு அழுக அழுகையா வருது திவி. இந்த மாதிரி சூழ்நிலை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது திவி.” 

“ஏய் மீயூ அப்படியெல்லாம் பேசாத, ரெண்டு பேரும் லவ் பண்ணி எல்லாத்தையும் முடிச்சுட்டு, பசங்க கழட்டிவிட்டு போயிருவாங்க. பட் உனக்கு அப்படி நடக்கல. நீ உன் வயித்துல வளரது அவரோட குழந்தனு ப்ரூஃப் பண்ணாலே போதும். அப்பறம் பாரு அவரே உங்கிட்ட ஸாரி சொல்லுவாரு.” 

“ரெண்டும் ஒண்ணுதான் திவி, பேபி ஃபார்ம் ஆகிருச்சு, இப்போ அதுக்காகவே ஹஸ்பன்ட் வேணும்கிற மாதிரி இருக்கு. புருஷன் இல்ல என்னைய விட்டுட்டு போயிட்டான். அப்படினாகூட பரவாயில்ல. ஆனா, இது அவரோட குழந்தையே இல்லேனு சொல்லுறாரே, அதுதானே இப்போ ப்ராப்ளம். நீ சொல்ற மாதிரி ஸாரி கேக்குறதெல்லாம் நடக்கணும்னு நான் கனவுதான் காணணும் திவி.” 

” கனவில்ல நிஜமா நடக்கதான் போகுது. பாரு மீயூ கூடிய சீக்கிரம் நடக்கதான் போகுது. பீ பாசிட்டிவ் மீயூ.” 

“நீ சொல்ற திவி, நான் கேட்டுட்டு இருக்கேன். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். நான் சஷ்டி கிட்ட பேசிட்டு வாரேன் திவி.” என்று கூற, “ஓகே மீயூ, போய் சாப்பிடு அதுக்கு அப்பறம் சஷ்டி கிட்ட போய் பேசலாம். சரியா?” 

”சரி டீ.” என்று திவ்யாவை அழைப்பை துண்டித்தாள். 

சைவ உணவை இன்று உண்பதற்கு ஆசையாய் இருந்தது. மீத்யுகாவும் விரும்பி உண்டாள். சஷ்டி கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க, “என்ன பண்ற சஷ்டி?” என்று சாதாரணமாகக் கேட்டாள் மீத்யுகா. 

“சும்மாதான் அண்ணி போர் அடிக்குது.” 

சஷ்டியின் கண்களை பார்த்த மீத்யுகா, “நீ பொய் சொல்ற, உன் கண்ணுல பொய் தெரியுது. கார்த்திக்க நெனைச்சிட்டு இருக்க, கரக்ட்டா?” 

சஷ்டி,  இமைகளை தாழ்த்தி, மெலிதாக மேலும் கீழும் தலையை அசைத்து ஆமென்று விசனம் தெரிவித்தாள். “எப்படி அண்ணி கண்டுபுடிச்சீங்க?” 

“உன்னை பத்தி எனக்கு தெரியாத சஷ்டிமா.” என்று மீத்யுகா கூற, உடனே சஷ்டி, மீத்யுகாவை கட்டிக்கொண்டாள். “ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி, அவன நெனைக்காம இருக்க முடியல, இப்போ இன்னொருத்திக்கு சொந்தமாகிட்டான்.” 

“ஏய், என்ன இது சின்ன புள்ள தனமா?” என்று மீத்யுகா, சஷ்டியின் கூந்தலை வருடிக்கொடுத்து, “சஷ்டி மா, நீ இந்த விஷயத்த டேக் இட் ஈஸியா எடுத்துக்கணும். ஏன்னா, நீ கோமால இருக்கேனு தெரிஞ்சதும், 

அவன் உனக்காக வெய்ட் பண்ணல, இன்னுமொரு வாழ்க்கைய தேடிப்போய்ட்டான். நீ ரொம்ப லக்கி சஷ்டி, இதுவே கல்யாணத்துக்கு அப்பறம் இந்த மாதிரி ஆகி உன்னைய விட்டுட்டு போயிருந்தா உன் லைஃப் என்னாகும்?” 

சஷ்டி, மீத்யுகா சொல்வதெல்லாம் சரியென உணர்ந்தாள். இருப்பினும்  அவளது உண்மையான காதலை அவளால் மறக்க முடியவில்லை. 

மீத்யுகா வார்த்தைக்கிணங்க காதல் தந்த வலிகளை நினைப்பதை குறைக்கலாமென்று எண்ணிருந்தாள். அதனால், “அப்போ என் அண்ணங்கிட்ட நீங்க மாட்டிக்கிட்டீங்கனு சொல்லுறீங்களா?” என்று குறும்புத்தனத்தோடு வினா தொடுத்தாள். 

“ம்ம் கண்டிப்பா.” என்று மீத்யுகா கூறும் தொனி தீவிரமாயிருந்தது. 

“அண்ணி சீரியஸ்ஸா பேசுறீங்களா? அண்ணா அவ்ளோ மோசமா நடந்துக்கிறானா?” 

“ஆமா, உங்க அண்ணன் குணம் இந்த மாதிரி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன் சஷ்டி.” என்று விரக்தியான குரலில் கூறினாள். 

சஷ்டி மீத்யுகாவின் கையை பற்றினாள். “அண்ணி, அண்ணா உங்ககிட்ட ஏன் இப்படி ரூடா நடந்துகிறானு எனக்கு புரியுது. பட் உங்களையும் அண்ணாவையும் எப்படியாவது சேர்த்து வச்சிருவேனு நம்பிக்க இருக்கு அண்ணி. அண்ணாவ விட்டு போயிராதீங்க. அண்ணாவ எப்படியாவது சரிப்படுத்திறேன். அண்ணாக்கு பழிவாங்குற எண்ணம் இப்போ இல்ல அண்ணி.” என்று சஷ்டி, மீத்யுகாவை சமாதானப்படுத்தினாள்.  

“நீ, உன் அண்ணாவ எத்தன நாள்ல சரிபடுத்துவ, நான் எத்தன வருஷம் வேணாலும் வெய்ட் பண்ணுவேன். பட் பேபி வெய்ட் பண்ணாது.” என்று சோகமாக கூறினாள். 

“என்ன அண்ணி சொல்றீங்க, எனக்கு புரியல?” குழந்தையை பற்றி ஏதோ கூறுவதை உணர்ந்தாள். ஆனால் குழந்தையை பற்றி இப்போது ஏன் மீத்யுகா பேசுகிறாள் என்றுதான் புரியவில்லை. 

சஷ்டியின் கையை மீத்யுகாவின் வயிற்றில் வைத்தாள் மீத்யுகா. “கன்சிவா இருக்கேன் சஷ்டி.” என்று கூறும்போது மீத்யுகாவின் கண்களிலிருந்து நீர் முத்து முத்தாக கொட்டியது. 

அதிர்ச்சி அடைந்த சஷ்டி, “என்ன அண்ணி சொல்றீங்க, சந்தோஷமான விஷயம் இதை அண்ணாக்கிட்ட சொன்னீங்களா, அண்ணா கண்டிப்பா புரிஞ்சிப்பான். அவன் குழந்தனு ஏத்தாப்பான்.” என்று உறுதியாக கூறினாள். 

“அதுதான் இல்ல சஷ்டி, இது அவரோட குழந்த இல்லேனு சொல்லிட்டாரு. முதல் முறை அம்மா ஆனதக்கூட சந்தோஷமா அனுபவிக்க முடியாத பாவியாகிட்டேன்.”  

“நீங்க கன்சிவானதுல நான் ஹேப்பியா இருக்கேன். நீங்க எதுக்கும் பீல் பண்ணாதீங்க அண்ணி.” என்று கூறிவிட்டு, சமையலறைக்குள் சென்று சக்கரையை  எடுத்து மீத்யுகாவிற்கு புகட்டினாள். 

“இன்னைக்கே ஒரு முடிவு கட்டிருவோம் அண்ணி. இப்பவே அண்ணாவ கூட்டிட்டு கீழ வாரேன்.” என்று கூறிவிட்டு அவனது அறைக்கு சென்று பலவந்தமாய் கீழே அழைத்து வந்தாள். 

மீத்யுகாவிற்கு துளியளவும் அவன் மீது நம்பிக்கையில்லை. அவன் புரிந்து கொள்வானென்று. சஷ்டியோ, சக்கரையை எடுத்து விகுஷ்கியின் வாயில் திணிக்க, “போதும் போதும் சஷ்டிமா, எதுக்கு இவ்ளோ சக்கர?” என்று கேட்டான். 

சஷ்டிக்கோ கோபம் தலைகேறியது. இருப்பினும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தாள். மீத்யுகா, சஷ்டி என்ன செய்ய போகிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தாள். 

“என்ன ணா இப்படி கேக்குற, நீ அப்பா ஆக போறல்ல அதான்.” என்று குதர்க்கமாக கூறினாள். 

மீத்யுகாவை முறைத்துப் பார்த்தான் விகுஷ்கி. விஷயம் லட்சுமியின் காதை சென்றடைந்தது. “அவ வயித்துல வளர்ர குழந்தைக்கு நான் அப்பா கெடயாது சஷ்டி மா, அந்த குழந்தைக்கு நான் பொறுப்பு கெடயாது.” 

“அப்போ யார் ணா பொறுப்பு?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி னாள்.

“அதை அவகிட்டதான் கேக்கணும் மா. எனக்கு தெரியாது?” என்று ஆணவத்தோடுக் கூறினான்.

“எனக்காக உன் மனச மாத்திக்கிட்டு அண்ணிகூட வாழுறேனுதானே சொன்ன, இப்போ அது என்னாச்சு?” 

“இப்பவும் அதேதான் சொல்றேன். என் மனச மாத்திக்கிட்டு வாழ டிரை பண்றேன். அவள மட்டும் ஏத்துக்குறேன். அந்த கருமத்த கலச்சிட்டு வர சொல்லு?” என்றதும் இருவருக்குமே சினம் சின்னாபின்னமாக தோன்றியது. 

“ஸ்டாப் இட் விகுஷ்கி, அன்னைக்கு என்னன்னா என் அக்கா குழந்தைய இறந்து போகணும்னு சாபம் விட்டீங்க. இன்னைக்கு  என்னன்னா உங்க குழந்தையவே கலைக்க சொல்றீங்களே, இது எந்த விதத்துல நியாயம், உங்களெல்லாம் சராசரி மனுஷன் லிஸ்டுல கூட சேர்க்க முடியாது.” என்று கோபமாக கொந்தளித்தாள் மீத்யுகா. 

“அண்ணா நீ வக்கீல்தானே. ஒரு கருவை கலைக்கிறது சட்டப்படி குற்றம்னு உனக்கு தெரியாதா, இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா? அண்ணி வயித்துல வளரது உன்னோட குழந்ததான் ணா. இல்லேனா அண்ணி ஏன் இப்படி உங்கிட்ட கெஞ்சப்போறாங்க? 

அண்ணியோட அக்கா பண்ண பாவத்துக்கு அண்ணிய போட்டு பாடா படுத்திட்ட, இப்போ நீ பண்ண பாவத்துக்கு இந்த சின்ன உசுரு பொறக்காமலே சாகணுமா, அந்த சின்ன உசுரு என்ன பாவம் பண்ணிச்சி ணா? குழந்த அதுவா கலஞ்சாலோ,  இல்ல அண்ணி கலச்சாலோ, உன்னைய என் அண்ணேனு கூட பார்க்க மாட்டேன். ஒரு கரு கலைய நீ காரணமா இருந்தேனு உன் மேல கேஸ் போட வேண்டிவரும்?” என்று உரத்த குரலில் தீவிரமாக எச்சரித்தாள் சஷ்டி. 

விகுஷ்கிக்கு இது பேரதிர்ச்சிதான் தங்கை முதல் முறை அவனை எதிர்த்து பேசுவது, அதுவும் இவ்வளவு தூரம் அதட்டலாக பேசுவது விகுஷ்கியை உடல் சிலிர்க்க வைத்தது. அதிரடியாக மீத்யுகாவின் புறம் திரும்பினான். 

“இப்போ உனக்கு சந்தோஷமா, என் தங்கச்சிய உன் பக்கம் இழுத்து, என்னையவே எதிர்த்து பேச வச்சிட்டல.” 

“நான் யாரையும் என் பக்கம் இழுக்கல. சஷ்டி ஒண்ணும் குழந்த இல்ல. நியாயம் எந்த பக்கம் இருக்குனு தெரிஞ்சிதான் அவ எனக்கு எதிரா பேசல.” 

“அண்ணா, அண்ணி உன் குழந்தையதான் சுமக்குறாங்க. தயவு செஞ்சி புரிஞ்சி ஏத்துக்கோ. அப்படி இல்லனா தயவு செஞ்சி எங்கூட பேசாத.” என்று கையை எடுத்து கும்பிட்டாள் சஷ்டி. 

“நேத்து வந்தவ உன்னைய காப்பாத்திட்டானு சின்னத்துல இருந்து வளர்த்த நான் உனக்கு தேவையில்லாம போயிட்டேனா சஷ்டி.” என்று கூறும்போது விகுஷ்கி முழுவதுமாய் தங்கை பாசத்தில் தோற்றுப்போன உணர்வில் இதயத்தில் இருந்து பாய்ச்சும் உதிரத்துளிகள் அனைத்தும் உறைந்து போனது. 

“சஷ்டி மா, உனக்காகதான் அவள ஏத்துக்கிறேனு சொன்னேன். ஆனா அவ பண்ற வேலையே உனக்கு புரிய மாட்டீங்குது. இன்னொருத்தன் புள்ளைக்கு நான் எப்படி சஷ்டிமா அப்பா ஆக முடியும்?” 

“அண்ணிக்கு நீ குடுக்க வேண்டியது லவ், பிச்ச கெடயாது. அவங்க ஒண்ணும் உங்கிட்ட வாழ்க்கை பிச்சை கேக்கல. நீ பண்ண வேலைக்கு நியாயம் கேட்டு நிக்கிறாங்க.

கார்த்திக்கும் எனக்கு கல்யாணம் ஆகிருச்சுனு வச்சிக்கோ, கார்த்திக் டிரிங்க்ஸ் பண்ணிட்டு வந்து இந்த மாதிரி எல்லாம் ஆகிட்டு, நெக்ஸ்ட் மந்த் நான் கன்சிவா இருக்கேனு சொல்லும் போது கார்த்திக் அதை ஏத்துக்கலனா. நீ என்ன பண்ணுவ?”

விகுல்கியால் சஷ்டியின் அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. தலை கவிழ்ந்தான்.  

“என் வயித்துல வளருரது உங்க புள்ளனு ஒரு நாளைக்கு நீங்களே சொல்லுவீங்க. கோர்ட்ல கேஸ் போடப் போறேன். டீஎன்ஏ டெஸ்ட் எடுத்தா இது யாரு குழந்தனு தெரிஞ்சிரும். இதுக்கு மேல கோர்ட்ல வந்து உங்க நியாயத்தை பேசுங்க வக்கீல் சார்.” என்று மனம் வருந்தி கூறினாள் மீத்யுகா. சமையலறை வாசலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த லட்சுமிக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. 

“உனக்கு கோடி புண்ணியம். கோர்ட்ல கேஸ போடு. அப்போ தெரியும் உன் வாண்டவாளம், நீ எப்படிப்பட்டவனு!” என்று அவன் செய்தது தவறென்று அறியாமல்  வீரவசனம் பேசினான்.

“அண்ணி நீங்க சும்மா இருங்க இவன் கூடப் பேசாதீங்க.  காலைல ஆஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு, கோர்ட்டுக்கு போய் கேஸ் போடலாம்.”  என்றிட, அதற்கு மீத்யுகா சரியென்று தலையை அசைத்தாள். 

சஷ்டி கூறிய வார்த்தைகளை தாங்க முடியாமல் வாசல் கதவை வேகமாக இழுத்து சாற்றி விட்டு மகிழுந்தை வேகமாக கிளப்பிக்கொண்டு வெளியேச் சென்றான். 

சஷ்டியோ மீத்யுகாவை பார்த்து பரிதாபத்தோடு, “அண்ணாக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன் அண்ணி. ஸாரி அண்ணி.” என்று சஷ்டி மீத்யுகாவிடம் வருத்தம் தெரிவித்தாள். 

திவியாவிற்கு அழைப்பை விடுத்து நடந்தவற்றை கூறி, மாணவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்க வருகை தர முடியாது என்பதையும் தெரிவித்துக்கொண்டாள். 

மறுநாள், வழக்கமான நேரத்திற்கு எழுந்து வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை அணுகி, வைத்தியரின் கருத்துக்களையும் மாத்திரைகளையும் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து அப்படியே மீத்யுகாவிற்கு தெரிந்த ஒரு வழக்கறிஞரை பார்க்க சென்றனர். 

நமசிவாயத்தின் நெருங்கிய தோழரான சக்திவேல் அவர்களின் மகன், வழக்கறிஞர் வஜ்ரனை பார்வையிட, சஷ்டியும் மீத்யுகாவும் அனுமதி வாங்கி காத்திருந்துதான் உள்ளே நுழைந்தனர்.

வழக்கறிஞர் மீத்யுகாவை பார்த்தவுடனே, “ஏய் மீயூ, என்ன இந்த பக்கம் திடீர் விஜயம்?” 

“ஒரு முக்கியமான விஷயம்! எனக்கு வேற யார்க்கிட்டவும் போக புடிக்கல. அண்ட் நம்பிக்கையும் இல்ல வஜ்ரா.”  

“ஓகே ஓகே! வந்து உக்காரு, நீ எப்படி இருக்க, உனக்கு மேரேஜ் ஆகிருச்சுனு கேள்வி பட்டேன். இவங்க யாரு?” என்று அடுக்கடுக்காய் வினாக்களை தொடுத்துக்கொண்டே சென்றான் வக்கீல் வஜ்ரன். 

“ஆமா வஜ்ரா மேரேஜ் ஆகிருச்சு, உங்க அப்பாக்கூட வந்தாங்களே,  

இது என் ஹஸ்பன்ட்டோட தங்கச்சி, நாங்க இங்க வந்த விஷயம் எங்க அப்பாக்கும், உங்க அப்பாக்கும் தெரியக்கூடாது.” 

“மேட்டர் சீரியஸ்ஸா மீயூ?” என்றவன் முகம் தீவிரமானது.

“ஆமா வஜ்ரா” என்று கூறிவிட்டு திருமணத்திலிருந்து நடந்த அனைத்தையும் கூறினாள்.  சஷ்டியும் தனது வருத்ததை தெரிவித்தாள். 

“வக்கீல் விகுஷ்கி இப்படி பட்டவருனு வெளிய சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க.” 

“எனக்கு பர்ஸ்னலா கேஸ் போடணும்.” என்று மீத்யுகா, வக்கீல் வஜ்ரனிடம் கோரினாள். 

“சின்ன புள்ளைங்க கேஸ் மட்டும்தான் யாருமே இல்லமா வக்கீலும் ஜர்ஜும் இருந்து பண்ணுவாங்க. நீ நெனைக்கிற மாதிரி கஷ்டம் மீயூ.” 

“வஜ்ரா ப்ளீஸ்! எனக்காக டிரை பண்ணு?” என்று இறைஞ்சினாள். 

“டிரை டூ மை பேஸ்ட்” என்றான் வஜ்ரன்.

மீத்யுகாவிற்காக, தனிப்பட்ட முறையில் வழக்கை தொடர வேண்டுமென்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தான். முதலில் மறுத்தனர். பின்பு வஜ்ரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

இண்டு நாட்களுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின்படி மரபணு பரிசோதனைக்காக இருவரின் இரத்த மாதிரியும் செவிலியர் பெற்றுக்கொண்டனர். 

விடிந்தால் வழக்கு தொடரும். வெல்வது யார்? 

அடுக்கு அடுக்காய் காரணங்களை சொல்லி நம்மை கடந்து செல்ல துடிப்பவர்களிடம், விளக்கங்களை கேட்காமல் விலகிச் செல்லது உத்தமம்.

***

உணர்வுகள் தொடரும்…