😍உணர்வை உரசி பார்க்காதே! இறுதி அத்தியாயம் 27(ஆ)😍

eiXXP6Q62891-095508c7

🌹இறுதி அத்தியாயம் 27(ஆ)

மீத்யுகா கூறிய ஒரு வார்த்தைக்காக, விகுஷ்கி   எப்படியாவது காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று உறுதியாய் இருந்தான். 

கைபேசியில், வலைத்தளங்களில்   தகவல்களை வழங்கும் பிரபலமான தேடுதல் பொறி கூகிள், கூகிளில் காதலிப்பது எப்படி என்று கதைகளையும் விமர்சனங்களையும் தேடி படித்தும் அவனுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஆதலால் கடை கடையாய் ஏறி இறங்கி நான்கைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தான்.  

அதை எப்படி படித்தான் தெரியுமா? இந்திய தண்டனை சட்டப்புத்தகத்திற்குள் வைத்து படித்துக்கொண்டிருந்தான்.  மீத்யுகா காலையில் அவசரமாக விளையாட்டு சங்கத்திற்கு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். 

அவன் வந்த ஒரு மாதத்தில் இதுவரை அவனுடைய அலுவலகத்திற்கு செல்லவில்லை. சகஸ்ரீ இப்போதெல்லாம் விகுஷ்கியுடன் சேர்ந்துகொண்டாள்.  குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் போது சில காலத்தை வீணடித்து விட்டோமோ என்று உணர்ந்தான். மீத்யுகாவோடு சற்று சகஜமாக பேச பயிற்சிப்பெற்றிருந்தான். 

மீத்யுகா, தலையை சீவிக்கொண்டே, “விகுஷ்கி நீங்க ஆஃபீஸ் போகலயா?” என்று கேட்டாள். 

“ஆஃபீஸ் இனி வேலன் பொறுப்புலதான், நான் இன்சிடியூட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் கேர்ள்ஸுக்கு” என்று அவன் யோசனையை கூற, மீத்யுகா குழம்பிப்போனாள். 

தலை சீவுவதையும் நிறுத்திவிட்டு வாயை பிளந்தாள். “என்ன ஆரம்பிக்க போறீங்க கேர்ள்ஸுக்கு?” 

“லாயர்ஸ் இன்சிடியூட் ஆரம்பிக்கலான்னு இருக்கேன்.  கஷ்டப்படுற பொண்ணுகளுக்கு மட்டும் க்ரிமினல் லாயர் செக்ஷன் டிரைனிங்க குடுக்கலாம்ன்னு இருக்கேன். அப்போ லாயர் விகுஷ்கி கிட்ட மட்டும் இல்ல, எந்த பொண்ணும் அவங்க பிரச்சனைய சொல்ல முன்வருவாங்க, துணிச்சல் வரும். ஆணாதிக்கம் கண்டிப்பா குறையும்.” என்று இயல்பாகத்தான் கூறினான். 

மீத்யுகாவிற்கு கோபம் வந்தது. அவள் எதிர்ப்பார்த்தது வேறு அவன் கூறியது வேறு, ஒரு மாத காலமாக குடும்பத்திற்கு நேரம் ஓதுக்கி இருந்தானென்று அவள் நினைத்தால், பெண்களுக்காக தனியார்துறை சட்டக்கல்வி நிறுவனம் ஆரம்பிப்பதற்குதான் சிந்தனை செய்திருந்தானா என்றே கோபம் கொண்டாள். வேகமாக அவன் அருகில் சென்று, அவன் கையில் இருக்கும் புத்தகத்தை பிடிங்கி எறிய, “ஏய் ஏய், அதை வீசாத!” என்று பதறினான் விகுஷ்கி.

புத்தகத்தை எறிய, அதற்குள் இருந்து காதல் ஜோடியின் முகப்பு இட்ட புத்தகம் வெளியே விழ, அருகில் சென்று கையில் எடுத்தாள். “காதலிக்க கற்றுக்கொள்?” தலைப்பை படித்து விட்டு ஒரு மார்க்கமாய் விகுஷ்கியை பார்க்க, விகுஷ்கி தலையில் கையை வைத்தான். 

“இதத்தான் விழுந்து விழுந்து படிச்சீங்களா?” என்று முகத்தை சுளித்துக்கொண்டு  கேட்டாள். 

அதற்கு விகுஷ்கியோ சிரிப்போட அசடுவழிந்தான். மீத்யுகாவிற்கு சிரிப்போடு முறைப்பு வந்தது.

“உன் சிரிப்பு கவிதையென்றால் உன் முறைப்பு கவிதையில் எழுத்துப்பிழை – சிரிப்போடு சிறு முறைப்பு முகத்தில் சிதறிக்கிடக்கும் வெட்கத்துளி ரோஜா பூவில் பனித்துளியோடு முள் இருப்பது போல்!”  என்று விகுஷ்கி கவிதை கூறிவிட்டு அவள் முகத்தை நோக்கினான். 

பெண்மை வெட்கத்தில் சிவந்த ரோஜாவானால் அவ்வேளை, விகுஷ்கி மனதில் இருக்கும் காதலை உணர்ந்த தருணமது, இத்தனை நாட்கள் இதற்குதானே ஏங்கினாள்! 

“குட்டி ஷாப்பிங்க் போலாமா?” என்று புருவங்களை உயர்த்தி ஒரு கிளுகிளுப்புடன் கேட்டான். 

உற்றவன் முதல் முறை அன்போடு  அழைப்பதால் அதனை மீத்யுகாவால் மறுக்க முடியவில்லை. திவ்யாவிற்கு அழைப்பு விடுத்து தாமதமாக வருவதாக கூறினாள். “போகலாம், சகஸ்ரீய சீக்கிரம் ரெடி பண்றேன்.” என்று நகர்வதற்குள், “ச்ச், சகஸ்ரீய இன்னும் ஒரு நாளைக்கி அழச்சிட்டு போவோம். இன்னைக்கி நீயும் நானும் மட்டும் போயிட்டு வரலாமே? ப்ளீஸ்!” என்று மீத்யுகாவிடம் இறைஞ்சினான். 

சிறு தயக்கத்துடன், “ஓகே”  என்றாள். 

“ஏன் பட்டு என்மேல இன்னும் நம்பிக்கை வரலயா, இன்னும் நீ எங்கிட்ட எதிர்ப்பார்க்குறியா? நான் இன்னும் கொஞ்சநாள் வெய்ட் பண்றேன், பரவாயில்ல!” என்று விகுஷ்கியின் முகம் சோர்வடைய, “நம்ம ஷாப்பிங் போகலாம் விகுஷ்கி.” என்று தயங்காமல் கூறினாள். 

குழந்தையை தாயிடம் விட்டு இருவரும் வெளியே கிளம்பினர்.  மகிழுந்தை சீறாக செலுத்திக்கொண்டு வந்தான். “மீத்யுகா, கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத, முக்கியமா கோவப்படாத?” என்று விகுஷ்கி தயங்கினான். 

“கேளுங்க பட் எனக்கு கோவம் வராத மாதிரி கேளுங்க.” என்றாள் சாதுவாய், “உனக்கு என்ன கலர் புடிக்கும். எனக்கு இதெல்லாம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிறேன்.” என்று சிறு பதற்றத்துடன் கேட்டான். 

“ப்ளூ கலர் புடிக்கும்.” என்று இயல்பாய் கூறினாள். விகுஷ்கி நிம்மதி அடைந்தான். 

பிரபலமான பேரங்காடியில் வண்டியை நிறுத்தினான்.  “உனக்கு புடிச்சதெல்லாம் வாங்கிக்க, இந்த வாட்டி எல்லாம் நொட் பண்ணிக்கிறேன். நெக்ஸ்ட் டைம் நானே எல்லாம் வாங்கித்தாரேன்.” என்று விகுஷ்கி கூற, மீத்யுகா உள்ளுக்குள் சிரித்து வெளியே முகத்தை சாதாரணமாக வைத்து ஆட்டினாள். 

இருவரும் மகிழ்ச்சியோடு கடை கடையாய் ஏறி இறங்க ஆரம்பித்தனர். மீத்யுகாவிற்கு பிடித்தமான அனைத்தையும்  ஒவ்வொன்றாக தேர்ந்தெடுப்பதை கண்ணால் அளவெடுத்து இரசித்துக்கொண்டிருந்தான். 

“இது எனக்கு நல்லா இருக்குமா விகுஷ்கி?” என்று மீத்யுகா கேட்க,  அவள் அழகில் இலயித்து எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கென்று கூறினான். 

இறுதியாக உணவகத்தில், “உனக்கு இப்போ சாப்பிட என்ன வேணும் சொல்லு?” 

அதற்கு ஒரு பட்டியலே கொடுத்தாள் மீத்யுகா, “ச்சீஸ் பார்கர், சிக்கன் பிஸ்ஸா, ப்ரௌவுன் சிக்ஸ்டீ ஃபைவ், ப்ரட் சான்விச், ஸ்வீட் பார்ப்கார்ன், மேங்கோ ஸாஃப்ட் டிரிங்க், ஒன் ப்ரௌனி, ப்ளுபெரி யோகட் ஐஸ்கிரீம்.” என்று கூறிவிட்டு விகுஷ்கியின் முகத்தை பார்த்தாள்.

“அவ்ளோதானே? நோட் பண்ணிட்டேன். வெய்ட் பண்ணு வாங்கிட்டு வாரேன்.” என முகம் சளைக்காமல் உணவை ஒழுங்குபடுத்தச் சென்றான். 

விகுஷ்கி அங்கிருந்து செல்ல, கன்னத்தில் கையை வைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  அவன் சென்று அரைமணி நேரம் கழித்து மீத்யுகா கூறிய அனைத்தையும் கையில் ஏந்திக்கொண்டு வந்தான். 

“தேங்க் யூ.” என்று அவனுடைய கையில் இருந்த தட்டு ஒவ்வொன்றையும் எடுத்து மேசையில் வைத்து உண்ண ஆரம்பித்தாள். 

சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தாள். “அக்சுவலி  நான் சாப்பாட்டு ராமீ, ரொம்ப நாளைக்கு அப்பறம் இதெல்லாம் சாப்பிடுறேன்.  ப்ப்பா வேற லெவல்!” என்று கூறுவதையெல்லாம் விகுஷ்கி இரசித்துக்கொண்டிருந்தான். 

மீத்யுகா ஐஸ்கிரீம் உண்ணும்போது விகுஷ்கிதான் அதிகமாக உருகினான் அவள் அழகில்! எல்லாவற்றையும் உண்ட திருப்தியில், “கிளம்பலாமா?” என்று கேட்டாள். 

“போகலாம்.” என்று மீத்யுகா வாங்கிய பொதிகளை மகிழுந்தில் எடுத்து வைத்தான்.”ஸ்போர்ட்ஸ்  க்ளப் போனா சரிதானே?” என்று கேட்க, “இல்ல வீட்டுக்கே போகலாம், ரொம்ப டயர்டா இருக்கு.” என்று கொட்டாவியை விட்டு மகிழுந்தின் கதவோரம் சாய்ந்தாள். 

சிறுது நேரத்தில் மீத்யுகா நன்று உறங்கிப்போனாள். நெளிவு சுழிவான பாதை என்பதனால் திரும்பி தூங்குவதற்கு முயன்றபோது அவன் தோளில் மீத்யுகாவின் தலை தஞ்சமடைந்தது. 

வீடு வந்து விட்டதென்று மீத்யுகாவை எழுப்பினான், “ஏய் மீத்யுகா வீட்டுக்கு வந்தாச்சு எழும்பு.” என்று மூன்று முறைக்கு மேல் எழுப்பிவிட்டான் ஆனால் அவள் எழும்பிய பாடேயில்லை. 

அதற்கு மேல் எழுப்புவதற்கு மனமின்றி மெதுவாக சாய்த்து வைத்து அவள் புறம் இருக்கும் கதவை திறந்து மெதுவாக தூக்கிகொண்டு வீட்டிற்குள்ளே நுழைந்தான். 

பாட்டியும், உமேஷ்வரியும் நாசுக்காய் திரும்பிக்கொண்டனர். இடையில் மீத்யுகா முழித்துக்கொண்டாள். படபடவென கண்களை இமைத்து, “கீழ விடுங்க நானே நடக்குறேன்.” என்ற மீத்யுகா, நீரை விட்டு வெளியே வந்த மீனை போல் துடித்தாள். 

“ரூம் வந்துருச்சு, நீ தூங்கு நான் மெதுவா பெட்ல வக்கிறேன்.” என கூறி காலால் கதவை உதைத்து திறந்து மீத்யுகாவை கட்டிலில் மேல மெதுவாக வைத்தான். 

மீத்யுகா விழித்திருப்பதை பார்த்து, “கண்ண மூடி தூங்கு, கண்ண மூடு.” என்றவுடன் கண்களை மூடினாள் மீத்யுகா. மீத்யுகாவின் காதின் அருகில் சென்று, “ஐ லவ் யூ டீ பட்டு!” என்று உமிழ்ந்த குரலில் கூறி, அவள் பிறை நுதலில் ஒரு இதழ் ஒற்றை வைத்தான். பின்பு போர்வையை எடுத்து கை வரை போத்தினான். 

மீத்யுகாவிற்கு மெய் சிலிர்க்க வைத்தது அந்த காமமில்லா நுதல் முத்தம். கண் விழித்துப்பார்த்தால், விகுஷ்கி அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தான். தன்னைதானே கிள்ளிப் பார்த்துவிட்டு உவகையோடு உறங்கினாள் அவள். 

***

இருவருக்குமான தனியறையில் மீத்யுகா மடிசாரி அணிந்திருக்க, விகுஷ்கி பட்டு வேஷ்டி சட்டை அணிந்து காத்திருக்க, மீத்யுகா ஒரு செம்பு பாலுடன் உள்ளே நுழைந்தாள். 

“ஏன் இப்படி முகமெல்லாம் வேர்த்து கொற்றது?” என்று மீத்யுகா அக்கறையோடு கேட்டாள்.

“நேக்கு தெரியல!” என்று கண்ணிமைகளை படபடவென இமைத்தான். 

“அச்சச்சோ ஏன் இப்படி கையெல்லாம் படப்படனு நடுங்றது?” என்று மீத்யுகா கேட்டாள்.

“நேக்கு தெரியல!” 

“உக்காருங்க” 

நருக்குன்னு கிள்ளுனவன் யாரு, யாரு?

சுருக்குன்னு குத்துனவன் யாரு, யாரு?

லபக்குன்னு கடிச்சவன் யாரு, யாரு?

மடக்குன்னு ஒடிச்சவன்

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே குழந்தையை போல் ஒரு அம்மான்ஜி ராஜா

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே குழந்தையை போல் ஒரு அம்மான்ஜி ராஜா

யாரம்மா, அது யாரம்மா?

யாரம்மா, அது யாரம்மா?

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி

அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி

யாரம்மா, அது யாரம்மா?

யாரம்மா, அது யாரம்மா?

“ஏய் மீத்யுகா எங்க போற, போகாத!” என்று கை மீத்யுகாவின் கையை பிடிக்க முயல, காற்றுதான் அகப்பட்டது கை அகப்படவில்லை. 

கண் விழித்த போது தெரிந்துகொண்டான் சொப்பனமென்று, அதற்கு அவன் உணர்வுகள் அர்ப்பணம். 

“எல்லாம் கனவா? அதெல்லாம் இப்பவே வேணாம் கொஞ்சநாள் போகட்டும்.” என்று மனதை தேற்றிக்கொண்டான். இருவருக்கும் காமம் இல்லாத காதல் சிறுது காலம் தேவைப்பட்டது. 

மூன்று மாததிற்கு பிறகு, திவ்யா இருந்த வாடகை வீட்டை சொந்தமாக்கி, விகுஷ்கியின் சொந்த வீட்டை வாடகைக்கு குடுத்தான். திருமணம் செய்து மூன்று வருட நிறைவையொட்டி  வீட்டிலே சிறிய அளவில் விழாவாக செய்திடலாமென்று வீட்டார் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திவ்யா ஓர் அழகிய வெதுப்பியை ஒழுங்குபடுத்தினாள். சஷ்டியும் வஜ்ரனும் சேர்ந்து இருவருக்கும் ஆடை தெரிவு செய்தனர். மதிய விருந்தை நமசிவாயம் பொறுப்பெடுத்தார். 

விழா சிறிய அளவில் இருந்தாலும் சிறப்பாய் இருந்தது. மீத்யுகாவை இரசிக்க விகுஷ்கி மறக்கவில்லை. 

மகிழ்ச்சியான அவ்வேளை சஷ்டி, “அண்ணி கூடிய சீக்கிரமா இன்னொரு கேர்ள் பேபி ரெடி பண்ணுங்க, உங்க மருமகனுக்கு!”  என்று வெட்கத்துடன் நற்செய்தியை கூற, அங்கிருந்த அனைவரும் மனமுழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். 

“சஷ்டி மா, கன்சிவா இருக்கியா? சூப்பர்!” என்று மீத்யுகாவை நெட்டி முறித்தாள். “வஜ்ரா சஷ்டியா நல்லா பார்த்துக்கோ, அவ இன்னும் சின்னப்பொண்ணுதான்.” என்று மீதாயுகா அக்கறையுடன் கூறுவதில் விகுஷ்கி பெருமிதமடைந்தான். 

வெதுப்பியை வெட்டி அனைவருக்கும் பகிர, விகுஷ்கி மீத்யுகாவின் முகத்தில் அனைவரின் முன்னிலையில் வெதுப்பியின் களிம்பை பூசிவிட்டான். மீத்யுகா சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. பதிலுக்கு மீத்யுகாவும் விகுஷ்கிக்கு களிம்பை பூசிவிட்டாள். உள்ளம் முழுவதும் உவகையில் உலா வந்தது இருவருக்கும். 

முகத்தை கழுவுவதற்காக அவர்களின் அறைக்கு வந்தனர்.  முகம் கழுவும் தொட்டியின் அருகில் செல்ல(வாஷ் பேசின்), “பட்டு, நான் உனக்கு ஃபேஸ் வாஷ் பண்ணி விடவா?” என்று உதடுகளில் லேசாக உதிரும் சிரிப்புடன் ஒரு மார்க்கமாய் கேட்டான். 

“இல்ல நானே வாஷ் பண்ணிக்கிறேன்.” என்று அவள் குனிய, அவள் இடையைப் பற்றி நிமிர்த்தினான். “நீ வாஷ் பண்ணிக்கத்தான், நான் கிரீம் பூசிவிட்டேனா, நான் இருக்கும்போது நீ எதுக்கு வீணா கஷ்டப்படுற?” என்று அருகில் சென்று அவள் முகத்தில் இருக்கும் களிம்பை அவன் இதழ் கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தான். 

இதழில் இருப்பதை எடுப்பத்தற்கு தயங்கினான். “ஏன் விகுஷ்கி லிப் லாக் பண்ண தெரியாதா?” என்று அவன் கிறங்கும் அளவில் உமிழ்ந்த குரலில் வினவினாள். 

‘இல்லயே எனக்கு தெரியாதே!’ என்று அப்பாவிப் போல் உதட்டை பிதுக்கி முகபாவம் செய்தான். 

“அப்போ நான் கத்துதரட்டா?” 

இரு கண்களை அகல விரித்து ஆனந்தத்தோடு சரியென்று தலையை ஆட்டினான். அவன் முகத்தை இரு கைகளால் பற்றி அவன் உதட்டோடு உதட்டை பொருத்தினாள். மீதி வேலையை விகுஷ்கி தொடர்ந்தான். இரண்டு  வருடத்திற்கு பிறகு இருவரின் புரிந்துணர்வோடு இதழ் யுத்தம் நீண்டது. 

விகுஷ்கி அவள் இதழ்களை விடுத்து அவள் முகத்தை பார்க்க, வெட்கத்தில் தலை குனிந்து இருந்தாள் அவள். 

இருவரையும் காணவில்லையென்று உலவு பார்க்க சகஸ்ரீயை அனுப்பி வைத்திருந்தனர். கையில் ஒரு பொம்மையுடன் வாயில் மிட்டாயை சப்பிக்கொண்டிருந்தாள். 

“அம்மா, டாடி இங்க என்ன பண்ணீங்க, கீழ சஸ்ஸி அத்தை கேட்டாங்க.” என்று மழலை மொழியில் அழகாகக் கேட்டாள்.

“அது ஒண்ணுமில்லடா ஸ்ரீ குட்டி, உங்ககூட விளையாட குட்டி தம்பி வேணுமா, இல்ல குட்டி தங்கச்சி வேணுமான்னு ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். ஸ்ரீ குட்டிக்கு தம்பி வேணுமா தங்கச்சி வேணுமா, உங்க கூட விளையாட?” என்று கூறி மீத்யுகாவை பார்த்து கண்ணடித்தான். 

சகஸ்ரீ பற்கள் தெரிய சிரித்துவிட்டு, “லூது டாடி எனக்கு ஆருமே வேணா, நான் பொம்மிகுட்டியோட விளாடுவேன். தம்பி டங்கச்சி வந்து என் பொம்மிய எடுத்துரு வாங்க. டாடிக்கு ஒண்ணும் தெயல.” என்று கூறி கலகலவென சிரித்தாள். 

“சும்மா சொல்லக்கூடாது. நல்லத சொல்லிக்குடுத்து வளர்த்திருக்க!” என்று போலியாய் மீத்யுகாவிடம் கடிந்துகொண்டான். 

ஆறுமாதத்திற்கு பிறகு, சகஸ்ரீயை சிறுவர் பள்ளியில் சேர்த்திருந்தனர். விகுஷ்கி சட்டக்கல்லூரி ஆரம்பிப்பதற்கான பணிகளில் ஈடுப்பட்டிருந்தான். சஷ்டிக்கு வளைகாப்பு முடிந்திருந்தது. சகிஷ்ணவியுடன் வழக்கம் போல் கைபேசியில் பேசிக்கொள்வாள் மீத்யுகா. தற்போது மீண்டும் கருவுற்றிருந்தாள் சகிஷ்ணவி. 

பரவை முனியம்மா பாட்டிக்கு உடல் நல குறைப்பாடு ஏற்பட்ட, சென்னையில் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் மதுரையில் இருக்கும் வைத்தியரை நாடியே ஆகவேண்டும் என்ற நிபந்தனை. ஆதலால் உமேஷ்வரி, பாட்டி, நமசிவாயம் கிளம்ப, சகஸ்ரீ சேர்ந்து கிளம்பினாள். 

திவ்யா விளையாட்டு சங்கத்திற்கு புறப்பட்டாள். மீத்யுகாவிற்கு மாதவிலக்கு காரணமாக செல்லவில்லை. மேசையில் உள்ள திண்டின்(திண்டு மாதவிலக்கிற்கு பயன்படுத்தும் பொருள்) சுற்றுரையை பார்த்து, அவள் வேதனையை உணர்ந்தவன் அருகில் சென்று உறங்குபவளின் தலையை வருடி முத்தமிட்டான். 

அவளுக்காக சந்தைக்குச் சென்று காய்கறிகள் மற்றும்  அசைவத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வந்தான். காய்கறிகளை சமைப்பதுகூட  இலகுவாய் இருந்தாலும் ஆட்டுகாலை சுத்தம் செய்வது விகுஷ்கியின் குடலை பிரட்டியது.  பிராமணனாய் இருந்து மீத்யுகாவிற்காக என்னவெல்லாம் செய்கிறான்! 

கஷ்டப்பட்டு உணவு சமைத்து முடிய, மெதுவாக அவளை எழுப்ப, “அப்பறமா சாப்பிடுறேன் ரொம்ப பெயினா இருக்கு.” என்று அப்படியே உறங்கப்பார்த்தாள். விகுஷ்கி விடவில்லை. “உனக்கா கஷ்டப்பட்டு சமைச்சிருக்கேன். கொஞ்சமா சாப்பிட்டு தூங்கு.” என்று பிடித்து அமர வைத்து அமுதை புகட்டினான். 

“ஆட்டுக்கால்பாயா எப்படி சமைச்சீங்க சூப்பரா இருக்கு. உப்பு மட்டும் கொஞ்ச கம்மி. அடுத்த வாட்டி கரெக்ட்டா இருக்கான்னு பாருங்க.” என்று கிண்லடித்தாள். 

“உனக்கு சரியான குசும்பு பட்டு” 

“தேங்க்ஸ் விகுஷ்கி!” 

“எதுக்கு?” 

“எனக்காக நான்வெஜ் சமைச்சதுக்கு!” என்று கூற, அவள் நெற்றியில் முத்தமிட்டு, “ரெஸ்ட் எடு.” என்று கூறிவிட்டு சமையலறைக்குள் சென்று பாத்திரம் கழுவ, சமையல் கட்டை துடைக்கயென மீதம் இருந்த வேலைகளை செய்தான்.  இரண்டு மூன்று நாட்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டான். 

அன்று  இரவு, மீத்யுகா இரவு உடையோடு கட்டிலில் சாய்ந்திருக்க, அவை விகுஷ்கியின் கண்களை ஈர்த்தது. முழங்கால் வரை இருந்த உடை வாழைத்தண்டு போல் இருந்த கால்களை வெளிக்காட்டியது. மறுபுறம் விகுஷ்கி வாலிப நரம்பு கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருந்தது. 

மீத்யுகா கைபேசியை தொந்தரவு செய்ய, விகுஷ்கி அவனுடைய கால்களை பட்டும் படாமல் அவள் மேல போட்டான். மீத்யுகா என்னவென்று புருவங்களை உயர்த்தி வினவினாள். 

அதற்கு விகுஷ்கி, உதட்டை ஒன்றாக குவித்து முத்தம் வேண்டுமென்று சைகையில் கேட்க, பெண்மையின் முகம் சிவக்க ஆரம்பித்தது. 

“பட்டு உனக்கு ஒகேவா?” என்று வெளிப்படையாக கேட்டான். அவனிடம் மௌனமாய் பெண்மை பேச, “உனக்கு புடிக்கலனா வேணாம்!” என்று இன்னும் அருகில் வந்து அணைத்திருந்தான். ‘ப்ளீஸ் ஓகே சொல்லு’ என் அவன் கண்கள் கெஞ்சியது. மீத்யுகா வெட்கத்தில் எப்படி சரியென்று கூறுவாள்? 

“ஐ லவ் யூ விகு.” என்று மெல்லிய குரலில் கூற, விகுஷ்கியின் காதில் தேன் பாய்ந்தது. “ஐ லவ் யூ டூ பட்டுக்குட்டி.” என்று பதிலுக்கு அவனும் கூறி, அவள் கூறிய வார்த்தைகளை அனுமதியாய் ஏற்றுக்கொண்டு, பட்டும் பாடாமல் வைத்த கால் அவள் மீது பாய்ந்தேறியது. பாய்ந்தவேகம் பாவை பாவம். 

உடலும் உணர்வும் உரசிப்பார்க்க நிதானத்தில் நிர் வானம் தேட  நீருக்கு எச்சில் உண்டு நிலவுக்கு நெற்றியில் பொட்டும் உண்டு  காமத்தின் பார்வையில் அங்கங்கள் தங்கங்களாய் ஜொலித்திட இரவில் விளக்கு வேண்டாம் இனியும் இருவர் விலகியிருக்க வேண்டாமென்று முடிவு செய்தனர்.

அவன் முகத்தை அவள் கழுத்தில் புதைக்க ஆரம்பித்தான். மலரை விட அவளுடைய இரட்டை முழு நிலவின்  வாசனையை கண்டு  மயங்கிப்போனான்.  சைவ முத்தம் வேண்டாம் அசைவ முத்தம் கேட்டு  நின்ற இதழ், ‘சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப்போக மாட்டேன் சாகசத்தக் காட்டு செத்துப்போக மாட்டேன்.” 

இடை இடையே விரல் தீண்ட, இடை வரை இதழ் தூண்ட, இலக்கணப் பிழையற்ற மெல்லினத்தில் அவள் முணங்கிட இடையினத்தை நான் பிசைந்திட வல்லினத்தில் ஓர் ஆட்டம் அவள் இடுப்பில்  கொல்லைபோன இன்பம்    

வரம்பை மீறிய நம்ரபுகள் நடனமாடிய போது ஆளுமை செய்தான் ஆழம் தொட்டு இறுதிவரை- காமம் முடிந்தது காதல் தொடர்ந்தது காலாவதியின்றி!

மொத்தத்தில் சொக்க வைத்த சொக்கநாதனிடம் மீனாட்சியானாள். இல்லறம் நல்லறமானது! இனியும் நாம் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். வாங்க மக்களே கதவை சாற்றி வைத்து வெளியே செல்வோம். 

பெண்ணைக் கற்றுக்கொள் முதலில் உன்னை ஆள்வாள் பிறகு வீட்டை ஆள்வாள். நாள் கழித்து நாட்டை ஆள்வாள் உலகை ஆள்வதற்கே பெண்பிறவி அடங்கிபோவதற்கல்ல!

மாதராய் பிறந்திட மாதவம் செய்வோம். 

🌹சுபம்🌹

🙏