😍உணர்வை உரசி பார்க்காதே! 25😍

20211124_190527-4acff9ad

🌹அத்தியாயம் 25

விகுஷ்கியின் மௌனம் மீத்யுகாவின் கோபத்தை அதிகரிக்க செய்தது. “ரீசன் சொல்ல முடியலனா நீங்க வெளிய போங்க.” 

“சொல்றேன் மீத்யுகா, என்னைய மாதிரி இந்த உலகத்துல அயோக்கியன் யாரும் இருக்க மாட்டாங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் என் ஃபோன்ல கேலரில இருக்க ஃபோட்டோஸ் பார்க்கலாம்ன்னு போனேன். 

இதை சொல்ல எனக்கே அசிங்கமா இருக்கு, கேவலமா இருக்கு, நான் எல்லாம் ஒரு மனுஷனே கெடையாது” அதை எவ்வாறு கூறுவது என்று சிக்கித் தவித்தான். அவன் விழைந்ததை எண்ணி வெட்கமுற்றான். 

“ரொம்ப அலட்டிக்காதீங்க சொல்லுங்க” என மீண்டும் விரக்தியான குரலில் அவள் மனதை திடப்படுத்திக் கூறினாள்.

“ஃபோட்டோஸ் பார்த்துட்டு இருக்கும் போது புதுசா வீடியோ இருந்துச்சு. என்னா டா என் ஃபோன்ல புதுசா வீடியோ இருக்கேன்னு ஆன் பண்ணி பார்த்தேன் மீத்யுகா. அதை என் வாயால எப்படி சொல்றதுன்னு தெரியல!” என்றவன் கண்கள் சோகத்தில் சிவந்து ஒரு துளி கண்ணீரை வெளியேற்றியது. 

“ஏழு மாசமா  ஒரு ஆம்பிளயும் வராத வீட்டுக்கு திடீர்னு ஒருத்தர் வந்தா பாக்குறவங்க எங்கள தப்பா பேசுவாங்க. சும்மாவே என் குழந்தைக்கு யாரு அப்பானு கேட்டுட்டு இருக்காங்க. என்னால திவ்யாக்கு எந்த ப்ராப்ளமும் வரக்கூடாது. ஓவரா பிகு பண்ணாம, சீக்கிரமா சொல்லுங்க, நீங்க சொல்லுறத சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு குழந்தைய பார்த்துக்கிற வேலை இருக்கு.” என்று வாசல் பக்கத்தை பார்த்தவாறு கூறினாள். 

“என்னோட ஃபோன் கெமரா ஆஃப் ஸ்கீறின்லயும் ரெக்கார்ட் ஆகும். என்னால சொல்ல முடியல நீயே பாரு!” என்று மண்டியிட்டவாறே கைபேசியை மீத்யுகாவிடம் கொடுத்தான். அவன் செய்த தவறை நினைத்து தலை குனிந்து ஒரு கையால் நெற்றியை தேய்த்துக்கொண்டிருந்தான். 

அவள் கணொளியை உயிர்ப்பித்தாள். அன்று விகுஷ்கி போதையில் மீத்யுகாவிடம் சல்லாபம் புரிய ஆரம்பிக்கும் காட்சிகள், விகுஷ்கி, மீத்யுகாவின் இடை வளைவுகளை கைப்பற்றி இதழ் முத்தமிடுவதை பார்த்தவளுக்கு முகம் சிவந்து மூக்கு புடைக்க ஆரம்பித்தது. மனதின் வலி விழி வழியே கண்ணீரானது. ஆடைகளை தளர்த்துவதை அவளால் பார்க்க முடியவில்லை. வேகமாக கைபேசியின் திரையை அணைத்துவிட்டு விகுஷ்கியிடம் கொடுத்துவிட்டாள். 

“இப்போ என்ன சொல்லப் போறீங்க, இந்த வீடியோவ பார்த்துதான் என்னோட கற்பு உண்மையானதுன்னு நம்புனீங்க!” 

“மீத்யுகா நான் சொல்றத கொஞ்சம் கேளு!” என்று இறைஞ்சினான். 

“ஸ்கூல் பையன் மாதிரி சீன் போடாம எழும்பி நில்லுங்க” என்றாள், மெதுவாக எழுந்து நின்றான். 

“அந்த வீடியோவ பார்த்து நான் செத்துட்டேன் மீத்யுகா! எனக்கே அசிங்கமா இருக்கு உங்கிட்ட எவ்ளோ ச்சீப்பா நடந்துருக்கேன்.” என்று ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டிய அவமானத்தில் வெட்கினான். 

விகுஷ்கியின் வீட்டில், எப்போதாவது கைபேசியில் உள்ள புகைப்படங்களை பார்ப்பது வழக்கம் அதேபோல் பார்த்துக்கொண்டிருந்த போதே இந்த காணொளி அவன் கண்ணில் தென்பட்டது. 

அழுத்தி பார்த்தவனுக்கு, மீத்யுகா கூறிய காட்சி பிழைகள் அன்று அரங்கேறிய காட்சிகளாக கைபேசியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அவன் பிடரியில் யாரோ ஓங்கி அடித்ததுபோல் இருந்தது. 

‘மீத்யுகா எத்தன தடவை சொல்லிருப்பா, நீ கேட்டியா டா மடயனே!’ என்று உரக்க அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது. 

“குட்டி குட்டி ரொமன்ஸ் பண்ணி கிஸ் பண்ண, இன்னைக்கு அதே எவ்ளோ தூரம் கொண்டு வந்துருக்கு பார்த்தியா?” 

‘உனக்கும் அந்த நிவேத்துக்கும் என்ன டா வித்தியாசம்? அவன் சின்ன பொண்ண ரேப் பண்ணான்.

நீ உன் பொண்டாட்டியவே ரேப் பண்ணிருக்க, தூ…! கட்டுன பொண்டியாவே இருந்தாலும் அவ விருப்பம் இல்லாம நீ தொட்டா அதுக்கு பேர் ரேப்தான் டா, ச்சீ!’ என்று கண்ணாடியில் தெரியும் அவன் பிம்பத்தை பார்த்து எச்சில் துப்பினான். மீண்டும் அவன் மனசாட்சி, அவன் குற்ற உணர்வை குத்திவிட்டிருந்தது. 

அவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் செவியில் எதிரோலித்தது. அவனுடைய குழந்தை இல்லையென்று வழக்கில் வாதாடியது போல் உறுதியாய் மீத்யுகாவை எதிர்த்து நின்றது,  மீத்யுகாவின் போக்கை அவதூறாய் பேசியது, கர்ப்பிணிப்பெண் என்று பாராமல் கொச்சைப்படுத்தியது, 

நீதிமன்றத்திற்கு சென்று விகுஷ்கியின் குழந்தையென்று அவள் உறுதி செய்தபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவமதித்தது, பணத்தை எடுத்து அவள் முகத்தில் விட்டெறிந்தது என்று உடல் சித்திரவதையை காட்டிலும் மனதளவில் அவளை எவ்வளவு துன்புறுத்தியிருப்பான் என்று நினைக்கும் போது ஆண் என்ற பட்டத்தை அணிந்து கொள்ள தகுதி அற்றவன் ஆனானென்பதை விகுஷ்கி மனதளவில் புரிந்து கொண்டான். 

அந்தச் சிறுமியின் வழக்கை வாதாடுவதற்கு நீ ஒன்றும் உத்தமன் அல்ல, உத்தம வில்லன்! 

விகுஷ்கியின் குழந்தையை சுமந்துகொண்டு அவன் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க, மீத்யுகா கர்ப்பிணி பெண்ணுக்கு  கணவன் என்கிற முறையில் அன்பை வாரி வழங்காமல் வெறுப்பை அள்ளி தூற்றினானே! கண்ணாடி முன் நின்று அவன் முகத்தை அவனே வெரித்து பார்த்துக்கொண்டிருந்தான். 

“நீ, மீத்யுகாக்கு எவ்ளோ பெரிய துரோகம் பண்ணிருக்க, நீ உயிரோட இருக்கலாமா?” என்று மனதில் ஒரு எண்ணம் தோன்ற, அவனுக்கு அவன் செய்த செயலை நினைத்து கோபம் வர, எதிரே அவன் பிம்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியை ஓங்கி குத்தினான். கண்ணாடி உடையவில்லை. ஆனால் கை வலித்தது. 

அவன் செய்த குற்றத்திற்கு மீண்டும் விடாமல் கண்ணாடியை ஓங்கி குத்த ஆரம்பித்தான். நான்கைந்து முறை குத்தினான். ஆறாவது முறை, “டேய் விகுஷ்கி!” என்று சரியாக அவன் முகத்தை குறிப்பார்த்து அனைத்து பலத்தையும் வைத்து ஓங்கி குத்தினான் விகுஷ்கி. அந்த அடியில் கண்ணாடி வெடிக்க ஆரம்பித்தது அப்போது அந்த வெடிப்பு கைவிரல்களை பதம் பார்க்க ஆரம்பித்து. உதிரம் உதிர ஆரம்பித்தது. 

பதினைந்து அடிகள் கடந்து செல்ல நிறுத்தி இருந்திருந்தான். சில்லு சில்லாய் நொருங்கியிருந்த கண்ணாடி துகள்கள் மேல் ஓங்கி அடிக்க விரல் முட்டுக்கள் சிதைவடைந்து இரத்தம் வழிந்தவாறு இருந்தது.  உயிர்போகும் உச்சக்கட்ட வலி, வலியில் கையை உதறினான். அம்மா என்று கதறி அழ தோன்றியது விகுஷ்கிக்கு, “உனக்கு தேவை டா, மீத்யுகாக்கு பண்ண பாவத்துக்கு இன்னும் உனக்கு தேவை டா” 

இப்போது மீத்யுகாவிடம் சென்று எப்படி பேசுவது அதை மீத்யுகா எப்படி எடுத்துக்கொள்வாள் என்று அவன் மனம் அவலப்பட்டது. நமசிவாயத்தின் முன்னால் வேறு கேவலப்படுத்திவிட்டானே! தந்தை முன் செய்யாத குற்றத்திற்கு வீண் பழி சுமந்து தலை குனிந்தாளே அப்போதும் மீத்யுகா மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று விகுஷ்கி எண்ணும்போது, அதற்கு மேலான மனநோயாளி மனநிலையில் விகுஷ்கி அல்லோலப்பட்டான். 

அவன் உயிரை விட்டால், மீத்யுகா இறுதி வரை செய்யாத குற்றத்திற்கு அவப்பெயரை சுமந்துக்கொண்டு இருக்க வேண்டுமென்று நமசிவாயத்திற்கு அழைப்பை விடுத்து அவனில் பிழை இருப்பதாக கூறி, அதை தற்போது உணர்ந்திருப்பதாகவும் கூறி நமசிவாயத்திடம் மன்னிப்பு கேட்டிருந்தான். 

கையில் இருக்கும் இரத்த காயத்தை மறைத்துவிட்டு நமசிவாயத்துடன் செல்ல ஆயத்தமானான். அதன் பிறகு நமசிவாயம் மகளுக்கு குழந்தை பிறந்திருக்கும் ஆவலில் விகுஷ்கியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார். இதுவரை நடந்ததை விகுஷ்கி நினைத்துப் பார்த்தான். ஆனால் எதுவுமே கூறவில்லை. 

விகுஷ்கியின் முகத்திற்கு நேராக சுடக்கிட்டு, “இங்க பாருங்க, அந்த சின்ன பொண்ணுக்கு நீதி வாங்கிக்கொடுத்திருக்கலாம். ஆனா, எனக்கு எந்த நீதியும் கெடைக்கல. இன்னையோட குழந்த பொறந்து ஒரு வாரம் ஆகுது. குழந்தைக்கு பார்த் சேர்டிபிக்கேட் எடுக்கல. அப்பாவோட பார்த் சேர்டிபிக்கேட் இல்லாம நான் படுறபாடு எனக்குதான் தெரியும்!” 

“மீத்யுகா உன் கால வேணும்னா விழுறேன். நான் குழந்தைக்கு அப்பா அதையும் ஒத்துக்கிறேன்.  கோர்ட்டுல வேணும்னா கேஸ் போட்டு தண்டனை வாங்கிக்கொடு தூக்கு தண்டன குடுத்தா கூட நான் ஏத்துக்கிறேன். ஏன்னா உனக்கு நான் பண்ணது பச்சதுரோகம்!” 

“ஓ கால்ல விழுவீங்களா, எங்க விழுங்க பார்ப்போம்?” என்றாள் பெண்ணாதிக்கத்தில் மீத்யுகா. 

அவன் ஆணென்கிற ஆணாதிக்கத்தை விடுத்து,  அணங்கு ஆணை வணங்கிய காலம் சென்று இப்போது ஆண் அணங்கை வணங்கியது.

“நீங்க என் கால்ல விழுந்தாலும் என் மனசுல இருக்க ரணம் ஆறல விகுஷ்கி.” என்று முகத்தில் இருக்கும் கவலையை இறுக்கி பிடித்து விரக்தியாய் வைத்துக்கொண்டாள். 

“என்னை வெறுத்துறாத மீத்யுகா, நீயும் குழந்தையும் எனக்கு வேணும். இனி நீங்கதான் என்னோட வாழ்க்கை. நீங்க இல்லாம நான் இருக்க மாட்டேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடு நான் திருந்திட்டேன்னு ஃப்ரூப் பண்ண” என்று அணங்கிடம் அவன் ஆண்மையை விடுத்து கெஞ்சினான். அப்போது வேலன் விகுஷ்கி கைபேசிக்கு அழைத்திருந்தான், அதனை உடனே துண்டித்தான். 

“நான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்குறது வாழ்க்கை பிச்ச இல்ல. ஃபீலிங்க், நீங்க என் மேல வச்சிருக்க லவ்வோட ஃபீலிங்க். பட் அது உங்ககிட்ட இல்ல. நீங்க பண்ண தப்ப நெனைச்சி ஒரு குற்ற உணர்ச்சி. ஒரு பொண்ணு வாழ்க்கை மோசம் பண்ணிட்டோம்ன்னு ஒரு சிம்பத்தி, அனுதாபம் அவ்ளோதான்! வேற எந்த ஃபீலிங்கும் உங்களுக்கு கெடையாது.” மீத்யுகாவின் எதிர்ப்பார்ப்பு விகுஷ்கியிடம் உண்டு. ஆனால் அதை வெளிக்காட்டும் தருணத்தில் அவன் மனநிலையில் இல்லை.  குற்ற உணர்ச்சி அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது. 

மீண்டும் வேலன் அழைப்பு விடுத்தான். ஏதோ அவசரம் இருக்குமென்று எண்ணி, “மீத்யுகா ஒரு கால் வருது பேசலாமா?”  என்று பரிதாபப் பார்வையோடு கேட்டான். 

“ஓவரா சீன் போடாதீங்க” என்று கூறிவிட்டு வாசல் புறம் பார்த்தவாறு இருந்தாள். 

அழைப்பை அழுத்தி காதில் ஒற்றினான். வேலன் மூச்சை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டிருந்தான். “வேலா அப்பறமா பேசட்டுமா?” 

“சார், ஃபோன வச்சிராதீங்க!” என்று  ஜீவனற்று பலம் குறைந்த குரலில் பேசினான். 

“வேலா நீ இப்போ எங்க இருக்க?” பதற்றத்துடன் கேட்க, வேலன் அனைத்தையும் திக்கு திணறி மூச்சிறைக்க கூறினான். 

“சரி வேலா! பயப்படாத, எப்படியாவது நீ நம்ம ஆபிஸுக்கு வந்துரு” என்று கூறிவிட்டு, “மீத்யுகா நான் அவசரமா வெளிய போகணும், நம்ம குழந்தைய ஒரு வாட்டி பாக்குறேனே ப்ளீஸ்!” 

“என் குழந்தைய நீங்க பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்ல.” மீத்யுகா பிடித்த பிடியிலிருந்து விடுவதாகயில்லை. 

“ப்ளீஸ் மீத்யுகா குழந்தைய ஒரு வாட்டி பார்க்குறேன். அட்லிஸ்ட் என்ன குழந்தேன்னு சொல்லு அது போதும்.” 

தனயன் படும் துயரை சஷ்டியால் பார்க்க முடியவில்லை. “கேர்ள் பேபி ணா” என்று உளறினாள். அதற்கு மீத்யுகா சஷ்டியை முறைக்க, “ஸாரி அண்ணி” என்று சஷ்டி தன்னுடைய விழிகளை தாழ்த்திக்கொண்டாள். 

“என்னைய மன்னிச்சிரு மீத்யுகா,  கடைசி வரைக்கும் எனக்கு நீ மட்டும்தான். சஷ்டிய, குழந்தைய நல்லா பார்த்துக்க, நீயும் கவனமா இரு, நான் இப்போ போறேன் திரும்பி வருவேனான்னு தெரியல. போறேன் மீத்யுகா!” அவன் உருகிய குரலில் கூறியும் மீத்யுகா உணர்ச்சி அற்று இருந்தாள். 

“அண்ணா என்ன ணா சொல்ற?” என்று கூறும் போதே சஷ்டியின் குரல் இறுக்கமானது.

“அண்ணிய பார்த்துக்க” என்று கூறிவிட்டு, திவ்யாவின் புறம் திரும்பி, “நீங்க யார்ன்னு எனக்கு தெரியாதுங்க, ஆனா உங்களுக்கு நன்றி கடன் பட்டுருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்ங்க!” என்று கூற, திவ்யா செய்வதறியாது முழித்தாள். 

 ஒரு புறம் கை வலித்திட கையை உதறிவிட்டு, வேகநடையிட்டு வாசல் வரை சென்று அதன் பிறகு ஓடிச்சென்றான். 

அதன் பிறகு மீத்யுகாவின் உணர்வுகள் கங்கை நதியானது.  ஒரு புறமாய் திரும்பி சுவற்றில் தலையை சாய்த்து அழ ஆரம்பித்தாள். 

“இப்போ எதுக்கு நீ அழுற, விகுஷ்கி வேணும் வேணும்ன்னு பாசத்துக்கு ஏங்கிட்டு இருந்த, இப்போ விகுஷ்கியே வந்து அவர் செஞ்சது தப்புன்னு ஒத்துக்கும்போது. ஏன் டீ நீ வெறுக்குற?” 

மீத்யுகா விம்மி விம்மி அழுதுகொண்டே இருந்தாள். “அண்ணி ப்ளீஸ் அண்ணாவ ஏத்துக்கோங்க” 

“நானும் சஷ்டியும் மாறி மாறி பேசுறோம் நீ என்ன டீ சும்மா இருக்க?” என்று திவ்யாவுக்கு சற்று கோபமானது. 

“என் நிலைம உங்களுக்கு புரியாது! பத்துமாசம் குழந்தைக்கு அப்பா யார்ன்னு கேட்டாங்க, அதுக்கு பதில் சொல்ல எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கேன். விகுஷ்கிக்கு என் மேல லவ் வரல. அந்த வீடியோ எப்படி சூட் ஆகிச்சுன்னு தெரியல  கடவுளுக்கு நன்றி, அந்த வீடியோ  இல்லன விகுஷ்கிக்கு என்மேல நம்பிக்கை வந்துருக்காது. 

விகுஷ்கியால ஒரு பொண்ணு வாழ்க்கை மோசம் போயிருச்சேன்னுதான் இன்னைக்கு வந்து மன்னிப்பு கேட்டு வாழலாம்ன்னு சொல்றாரு குற்ற உணர்ச்சி குத்திக்காட்டுது அதுதான் வேற எதுமே கெடையாது. 

அந்த வீடியோ மட்டும் இல்லேன்னா இன்னைக்கு வரைக்கும் சகஸ்ரீ விகுஷ்கியோட குழந்தை ஆகி இருக்காதே! வீடியோவ பார்த்து அவர் பண்ண தப்ப உணர்ந்தாரு  ஆனா என்னைய பொண்டாட்டியா உணரலயே! மன்னிப்பு கேட்ட உடனே நான் ஏத்தக்க கூடாது.  நான் பட்ட கஷ்டமெல்லாம் அவர் கொஞ்சமாவது படணும். அப்போத்தான் என் அருமை புரியும்.” 

“அப்போ விகுஷ்கிய ஏத்துப்பியா டீ?” என்று திவ்யா விசனத்தோடு வினவினாள். 

“அது அவர் கைலதான் இருக்கு” என்று கண்களை துடைத்து சாதுவானாள் மீத்யுகா. 

விகுஷ்கி திரும்பி வருவான் என்று மூவரும் காத்திருந்தனர். அதில் பலன் இல்லை. அவன் தொலைபேசிக்கு அழைத்து அவனை தொடர்புகொள்ள முடியவில்லை. வேலனுக்கும அழைப்பு செல்லவில்லை. 

சஷ்டிக்குதான் பயம் சற்று அதிகமானது. மூன்று நாட்களாகியும் அண்ணன் எங்கு இருக்கிறான் என்ன செய்கிறான் என்ற எண்ண மனதில் அலை மோதியது. 

மீத்யுகாவின் தொலைப்பேசியில் அழைத்தும், அழைப்பு செல்லவில்லை. “குற்ற உணர்ச்சில உங்க அண்ணா எதும் பண்ணிருப்பாரா?” என்று மீத்யுகாவின் குரல் கூனிக்குறுகியது. 

“ஹா! அந்த மனுஷன் மன்னிப்பு கேட்கும்போது ஏத்துக்கல. இப்போ அதை நெனைச்சி வருத்தப்படுறியா?” என்று கேட்டாள் திவ்யா. 

“இல்ல அண்ணி, என் அண்ணா அப்படி பண்ணமாட்டான்.” என்று உறுதியாய் கூறினாள். 

எதிர்பாரா விதமாக மூவருடைய தொலைப்பேசியிலும் ஒரே நேரத்தில் வலைஒளியின் பகிரப்பட்ட காணொளியின் அறிவிப்பு வந்து சேர்ந்தது.  மூவரும் உடனே அதை அழுத்தி உட்சென்றனர். 

நிவேத் தற்கொலை, வக்கீல் விகுஷ்கி காவல்துறையில் சரணடைந்தார் என்ற தலைப்பில் காணொளி பகிரப்பட்டிருந்தது. சஷ்டி பதற்றத்துடன் அழுத்தினாள்.

கானொளி பதியப்படும் முன்னர் என்ன நடந்தது. வேலன், விகுஷ்கிக்கு அவசரமாக அழைப்பு விடுத்ததே நிவேத் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்ததை கூறினான். அதன் பிறகு நிவேத் விகுஷ்கியை தேட கண்ணில் பட்டது வேலன், வேலனிடம் விகுஷ்கி எங்கிருக்கிறான் என்று கேட்க, வேலன் பிடித்தான் ஓட்டம்  விகுஷ்கியின் அலுவலகத்தில் வந்து விகுஷ்கி கூறியது போல் வேலன் ஒளிந்துவிட்டு அலுவலக கதவை திறந்து வைத்தான்.

விகுஷ்கியின் திட்டத்தின் படி நிவேத் உள்ளே நுழைய வேலன் நிவேத்திற்கு தெரியாமல் கதவை மூடிவிட்டான். 

யார் இந்த விகுஷ்கி? இராமவம்சத்தின் இஷ்வாகு, விகுக்ஷி என்கிற இரு அரசர்களின் பெயரை வைத்தே விகுஷ்கி என்கிற பெயர் உருவாக்கப்பட்டது. இரு வேந்தர்களின் ஒரு உருவத்திலா?உருவம் மட்டும் அல்ல இருவரின் மூளையும் ஒருவனுக்குள் சேர்த்துக் கொண்டது.

விகுஷ்கி சென்று பார்க்கும்போது  வேலன், நிவேத்தின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கதிரையில் கட்டி வைத்திருந்தான். 

உள்ளே சென்ற விகுஷ்கி, “வேலா வெல்டன்! நீ கிளம்பு இதுக்கு மேல இங்க இருக்க வேணாம்.” என்று விகுஷ்கி கூற, வேலன் முதலில் தயங்கினான். 

“சார் உங்க கை வேற இப்படி இருக்கு! நான் எப்படி கிளம்புவேன்?” 

“டாக்டர் கிட்ட போய் நான் கட்டுப்போட்டுப்பேன். நீ உடனே கிளம்பு வேலா!” என்று உறுதியாய் கூற, வேலன் மனமின்றி சென்றான். அதன் பிறகு வரும் காட்சிகள் கானொணியில் பதியப்பட்டவை.

நிவேத்தை கதிரையில் வைத்து கட்டி மிளகாய் பொடி பூசப்பட்ட கண்களோடு அவன் கதற, “அந்த சின்ன பொண்ணுக்கு எப்படி இருந்து இருக்கும். இப்போ நீ அனுபவிடா, என்று கொதிக்கும் நீரை அவன் முகத்தில் ஊற்றினான்.

அதன் பிறகு நிவேத்தை போதை ஏற்றுவதற்கு சில பல போதை வஸ்துக்களை ஊசியின் மூலம்  உடலில் செலுத்தினான். 

இரண்டு நாட்களாக அன்னந்தண்ணீர் இல்லாமல் ஊசிகளையும் ஏற்றி அவ்வப்போது கன்னத்தில் அறைகளையும் கொடுத்தான்.  

மூன்றாம் நாள், விகுஷ்கி போதை மருந்துகளை ஏற்றாமல், நிவேத்தை போதை மருந்துக்காக காக்க வைத்திருந்தான். 

போதை வெறிக்கு காத்திருந்தவன் போல் அலறினான். கதறி கதறி துடித்தான். “எனக்கு அந்த மருந்த என் கைல ஏத்து என்னால இருக்க முடியல. செத்துறலாம் போல இருக்கு. ப்ளீஸ் எனக்கு அந்த மருந்து வேணும்” என்று விகுஷ்கியிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான். 

நிவேத் சில வார்த்தைகள் தவறாக கூட பேசி இருந்தான். விகுஷ்கி அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. 

“நான் சொல்லுறத கேட்டா உனக்கு இந்த மருந்த ஏத்துவேன்.” என கூறிவிட்டு விகுஷ்கி மருந்தை கைகளில் எடுத்து உன் உயிர் நாடியை துண்டித்துவிடு இதை உனக்கு ஏற்றுக்கிறேன் என்றான். 

போதை இல்லாத நிவேத் அதை மறுத்தான்.  போதையை ஏற்றும் ஆவல் வேறு அதிகமாய் இருந்தது  மனமெங்கும் துடிதுடிப்பாய் இருந்தது. 

மூளை நரம்பெங்கும் போதை வெறி பிடித்து நடுங்க ஆரம்பித்தது. “டேய் விகுஷ்கி! என்னால முடியலடா அதை ஏத்து டா” என்று அலறினான். இன்னுங்கொஞ்சம் சென்றால் கட்டு வைத்திருக்கும் கதிரையை உடைத்து விட்டு வரும் அளவிற்கு அவனுடைய வெறி அதிகமாகிக்கொண்டே சென்றது. 

“நான் சொன்னத நீ பண்ணா உனக்கு இதை ஏத்துவேன். அவ்ளோதான், அதுக்கு மேல உன் விருப்பம்!” என்று விகுஷ்கி கைகளை தளர்த்தி காண்பித்தான். 

“பரதேசிப் பயலே முடியலன்னு சொன்னா உனக்கு புரியாதா? இங்க பாரு என் உடம்பெல்லாம் நடுங்குது, பாரு பாரு” 

விகுஷ்கி அதை காதில் கூட வாங்கவில்லை. இரண்டு மணி நேரம் போதையின் ஆவல் தாங்க முடியாமல், “டேய் நீ என்ன சொன்னாலும் கேக்குறேன். கட்ட அவுத்து விடு.” 

“ஓ அப்போ நான் சொன்ன செஞ்சிருவ, கட்டு அவுத்த பிறகு நீ பண்ணலனா?” 

“அந்த ஊசி மேல சத்தியமா பண்ணுவேன்.” என்று நிவேத் திடமாய் கூறினான். 

விகுஷ்கி மெதுவாக கட்டை அவிழ்த்து விட்டான். மூன்று நாட்கள் கொலை பட்டினி ஆனால் அவன் உணவை கேட்கவே இல்லை. கதிரையிலிருந்து எழுந்துக்கொள்ள முடியாமல் கால்கள் இரண்டும் பின்னே தட்டுதடுக்கி எழுந்து நின்றான். 

“இந்தா கேச் பண்ணு” என்று அவன் மீது கத்தியை எறிந்தான். 

மனதளவில் நிவேத்திற்கு பயம். ஆனால், போதை மருந்தின் தாக்கம் அவன் உடலில் அதிகமாக இருந்தது. “இந்த மருந்து வேணும்னா சீக்கிரம் நான் சொன்னத செய்!” என்று சிரிஞ்ச்சை விரல்களால் தட்டிக் காண்பித்தான். 

நிவேத் அதன் பிறகு வேகமாக ஆடையை அகற்றி கையில் இருந்த கத்தியால் அவன் உயிர் நாடியை துண்டித்துக்கொண்டான். இந்த காட்சி மட்டும் காணொளியில் பதியப்படவில்லை. மறைக்கப்பட்டு நிவேத்தின் கதறல் சத்தம் மட்டும் கேட்டது. 

சரியான வலியின் அனுபவம் என்றால் என்ன என்பதையும் விகுஷ்கி நிவேத்திற்கு சரியாக கற்ப்பித்திருந்தான். “இனி உன்னால எந்த பொண்ணுக்கும் கலங்கம் இல்ல டா!” என்று விகுஷ்கியின் தீவிரமான குரல் கேட்டத்தோடு, விகுஷ்கி காவல் நிலையத்தில் சரணடைவதாகக் கூற, கானொளி முடிவடைந்தது. 

“அண்ணா!” என்று கதறினாள் சஷ்டி. 

மீத்யுகா, “மறுபடியும் தப்பு பண்ணிட்டீங்களே விகுஷ்கி!” என்று மீத்யுகா, அந்த சிறுமிக்காக செய்த இந்த காரியத்தை பெருமையாய் நினைப்பதா, அல்லது எழுற்ச்சி பெறாத வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்காக காத்திருந்த கனவுகளை நினைத்து கவலை கொள்வதாயென்று மனக்குழப்பத்தில், எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.

திவ்யா இருவரின் தோள்களைப் பற்றி ஆறுதல் படுத்த முயன்றாள். என்னதான் கவலை இருந்தாலும்  சிறுமியை சீர்கேடு படுத்தியவன் இந்த நிமிடம் உலகில் இல்லையென்று எண்ணும்போது மூவரின் மனதில் இன்பமும் நிம்மதியும் நிலவியது. 

இனி மீத்யுகாவின் கனவுகள் மெய்படுமா, அல்லது பகல் கனவு போல் பிரிந்தே இருப்பார்களா?

அன்பைக் கொண்டு 

அனைவரையும் 

நீ வெல்ல நினைத்தால்!

உன்னிடம் தோற்றுப்போக 

அனைவரும் விரும்புவார்கள்.

***