😍உணர்வை உரசி பார்க்காதே! இறுதி அத்தியாயம் 27(அ)😍

🌹இறுதி அத்தியாயம் 27 (அ)

மீத்யுகாவின் குழந்தைக்கு இப்போ இரண்டு வயது, தாயிடம் விட்டு அவளது பணியை தொடர்கிறாள். இருந்ததைவிட மாணவிகள் ஆர்வமாகவும் உத்வேகத்துடனும் விளையாடி பல போட்டிகளில் கோடயத்தை சுபிகரித்தனர். 

மீத்யுகாவிற்கு மாணவிகளின் திறமைதான் மனதிற்கு மிகப்பெரிய ஆறுதலாய் அமைந்தது. ஒரு தனிப் பெண்ணாய் இருந்து, இந்த இரண்டு வருடத்தில் ஆண் துணையின்றி ஏழை மாணவர்களுக்காக இலவசமாக விளையாட்டு சங்கம் ஆரம்பித்திருந்தாள். 

இன்னும் மூன்று நாட்களில் சஷ்டிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  நாளையோடு விகுஷ்கியின் இரண்டு வருட சிறை தண்டனை முடிவடைந்து விடுதலை அளிக்கப்படுகிறது. 

மீத்யுகாவிற்கு எத்தனை ஆவல் இருக்கும்? எல்லாவற்றையும் மனதின் ஓரமாய் தேக்கி வைத்தாள். திருமண வேலைகள் முடிந்ததும் விகுஷ்கியை பாடாய் படுத்தலாமென்றும் திட்டமிட்டாள். 

“அம்மா டாடி நாக்கி வலாங்களா?” என்று சகஸ்ரீ அவள் மழலை குரலில் கேட்க, “ஆமா செல்லம் நாளைக்கி வாராங்க.” என்று குழந்தையின் கையில் இருக்கும் விகுஷ்கியின் படத்தை மீத்யுகா இரசித்துக்கொண்டிருந்தாள். 

இரவு நீண்டது மீத்யுகாவிற்கு உறக்கமில்லை.  மணிமுட்கள் வேகமாக ஓடி சீக்கிரமாக விடியாதா? விழிகள், அவன் வரும் வழியே பூத்துக் காத்திருந்தது. 

அவர்களின் திருமணம்நாள் நினைவு வேறு அவள் நினைவில்  வந்து துன்புறுத்தியது. கண் அயரும் வேளை சேவல் கூவியது அவ்வளவுதான்! விழி மடல்கள் உறங்கவில்லை, விழித்தக்கொண்டது. 

மீத்யுகா துய்மையாகிட்டு, ஒரு குடத்தில் நீரும், ஒரு செம்பில் பாலும், ஒரு கிண்ணத்தில் நல்லெண்னையும் எடுத்து வைத்தாள். அப்போது மணி ஆறுதான், விகுஷ்கி வருவதற்கு இன்னும் நான்கு மணி நேரம் உண்டு. 

மீத்யுகாவிற்கு, கல்யாண வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் எவற்றிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.  நிமிடத்திற்கு பத்து தரம் வாசலை பார்த்து பார்த்து இருந்தாள். 

“அண்ணி, என் கைய பார்த்து மெஹந்தி போடுங்க. அடிக்கடி வாசல எட்டி எட்டி பார்க்குறீங்க.” என்று லேசாக கடிந்துகொண்டாள். 

“உனக்கு உன் பிரச்சனை!” என்று மீத்யுகாவும் பதிலுக்கு செப்பினாள். 

“உங்க ஃபீலிங் புரியுது அண்ணி, இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணா வந்துருவான்ல. எல்லா ப்ராப்ளமும் சரி ஆகிரும்.” என்று மீத்யுகாவை சஷ்டி தேற்றினாள். 

“நீ வேண்ணா பாரு மறுபடியும் புதுசா வேற ஏதாவது ப்ராப்ளம தேடிட்டு வருவாரு உங்க அண்ணா.” 

“ஏன் அண்ணி அப்படியெல்லாம் நெனைக்கிறீங்க. நல்லதே நடக்கணும்ன்னு நெனைங்க அண்ணி.” 

“ஏதோ நீ சொல்ற சஷ்டி, நான் கேக்குறேன். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு!” என்றவளின் வாய் சுளிந்தது. வாழ வேண்டிய வயதில் அந்த வாழ்க்கையை வாழாமல் இழந்து விட்டோமோ? என்று விசனம் கொள்வது அவள் வழக்கத்தில் ஒன்றானது. 

“அண்ணி இதோ அண்ணா வந்துட்டாரு!” என்று மருதாணி அழிந்தாலும் பரவாயில்லையென்று எழுந்து சென்றாள் சஷ்டி. 

மீத்யுகா, தன்னவன் முகத்தை எப்படி பார்ப்பதென்ற தயக்கத்தில் மெதுவாக எழுந்துச் சென்றாள். 

“என்ன மா வெறுங்கையோட வந்து நிக்கிற, ஆரத்தி எடுக்கலயா?”  என்று நமசிவாயத்தின் கேள்வியில்  அன்னார்ந்து பார்த்தாள். 

உருவத்தில் ஒட்டு மொத்தமாக மாறியிருந்தான் விகுஷ்கி. மீசை தாடியை காணவில்லை. வெட்டப்பட்ட தலைமுடி, முகத்தை பார்த்தால் பவ்யமாய் இருந்தது.  அடுத்த நொடி ஓடிச்சென்று அவன் மார்பில் முகம் புதைத்திட ஆசை இருப்பினும் அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டாள். ஆனால் விழி நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளை அறியாமல் வழிந்துக்கொண்டே இருந்தது. 

“கொஞ்சம் இருங்க பா.” என்று கூறிவிட்டு, கதிரையை எடுத்து வந்து அதில் விகுஷ்கியை அமருமாரு கூறினாள். 

விகுஷ்கிக்கு மீத்யுகாவின் முகத்தை பார்ப்பதே கடினமாய் இருந்தது. அவன் செய்த குற்றத்தை நினைக்கும்போது தலை குனிந்து இருந்தான். அவளை கட்டியணைத்து அவளிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்பது போல் இருந்தது, ஆனால் சூழல் அவனுக்கு வசமாக இல்லை. 

கதிரையில் விகுஷ்கி அமர்ந்திருக்க, நல்லெண்ணெய் ஊற்றி அதன் பிறகு பாலை ஊற்றி, ஒரு குடம் தண்ணீரை ஊற்றினாள். கேடு அனைத்தும் ஒழிந்துச் செல்ல வேண்டுமென்பதற்க்காக, “இதுக்கு அப்பறம் இந்த மாதிரி நடக்கக்கூடாதுன்னு நெனச்சிட்டு இந்த டிரஸ்ஸ மாத்துங்க.” என்றாள் மீத்யுகா வேதனையான குரலில். 

அவள் கொடுத்த வேஷ்டியை அணிந்துகொண்டு நிற்க, ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றாள். 

உள்ளே கதவின் ஓரமாய் குட்டி சகஸ்ரீயை பார்த்தவனுக்கு அள்ளிக்கொஞ்சிட ஆசையில் இதழில் சிறுநகையை துளிரவிட்டு இரு கைகளை நீட்டினான். 

“அம்மா இவுங்க யாரு?” என்று மழலை குரலில் கேட்டாள்.  “இவங்கதான் டாடி, டாடிக்கிட்ட போம்மா.” என்று மகளை செல்லமாக கூற, சகஸ்ரீயின் முகம் மாறியது, “இவுங்க பேணாம். டாடி மாறி இல்ல.” என்று ஓடிச்சென்று சஷ்டியின் கால்களை கட்டிக்கொண்டாள்.

சகஸ்ரீ தந்தை இல்லையென்று கூறும்போது  விகுஷ்கியின் முகம் கவலைக்கிடமானது. “அண்ணா சகஸ்ரீக்கு உன்னோட ஃபோட்டோதான் காட்டி இருக்கோம். இப்போ நீ க்ளீன் சேவ் பண்ணிருக்க, அதான் பயப்படுறா, கொஞ்சநாள் ஆனா சரியாகிடும்.” என்றிட, தலையை மட்டும் அசைத்தான் விகுஷ்கி. 

முன்பு போல் சகஜமாய் யாரிடமும் பேசவோ அவர்களின் முகத்தை பார்க்கவோ விகுஷ்கியால் முடியவில்லை. 

அதன் பின் விகுஷ்கி நீள் சாய்வு இருக்கையில் அமர்ந்திருக்க, சஷ்டி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அதன் பின் வஜ்ரன் வந்து சேர, வஜ்வரனுடன் தங்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தான். 

மீத்யுகா உணவு தயார் செய்து வைத்து அனைவரையும் அழைக்க, விகுஷ்கி பிறகு உண்பதாக கூறி தட்டிக்கழித்தான். 

அனைவரும் உண்டு அவர் அவர் வேலையில் முழ்கி இருக்க, மீத்யுகா சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று, “மீத்யுகா பசிக்குது சாப்பாடு வக்கிறீயா?” என்று மென்மை கலந்து புன்னகை துளிராத இதழோடு கேட்டான். 

மீத்யுகா திரும்பி பார்க்க, அவன் முகம் அவளருகில் தெரிய பயத்தில் ஒரு நிமிடம் தலையை சரக்கறை அலமாரியில்(பென்ட்றி கப்போர்ட்) இடித்துக்கொண்டாள். 

“ஏய் ஏய் பார்த்து மா, கவனம்! ரொம்ப வலிக்குதா மா” என்று அவனுடைய கண்களை சிறுதாக்கி, மீத்யுகாவின் பின் தலையை தடவியவாறே அன்போடு கேட்டான். 

அவன் செய்கையில் மலைத்துப்போனவள் அன்பான வார்த்தைகள் செவிக்குள் சென்று அவ்வழியே மூளையை அடைந்து அங்கிருந்து வேகமாக இதயத்திற்குள் புகுந்து கொண்டது. 

மீத்யுகாவிற்கு மயக்கமே வருவதுபோல் ஓர் உணர்வு!  அந்த அளவில் இருந்தது அவனுடைய பராமரிப்பு. 

“உன்னதான் கேக்குறேன் ரொம்ப வலிக்குதா?” என்று அவளுடைய கண்களை பார்த்து கேட்டு, ‘மீத்யுகாவ எப்படி கூப்பிடுறதுன்னு கூட தெரியலயே!’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டான். 

மீத்யுகா, ஆவென்று வாயை திறந்து, மூடி, காற்றை விழுங்கி கண்களை இமைத்து இல்லையென்று மறுத்து தலையை அசைத்தாள். 

“நீங்க டைனிங்க் டேபிள்ல இருங்க. நான் சாப்பாடு எடுத்துட்டு வாரேன்.” என்ற பெண்மை, அவன் முகத்தில் வளர்த்திருந்த கட்டுக்காவல் அனைத்தும் அகற்றி அழகை அளவில்லாமல் வெளிக்காட்டிட, ஏக்கம் கொண்ட பார்வை அவள் கண்களில் தாக்கம் புரிந்து இனக்கவர்ச்சியை ஏற்படுத்த, தலை குனிந்து கூறினாள். 

உணவுத் தட்டுகளை எடுத்துக்கொண்டு திரும்ப, அவன் உணவு அருந்தும் மேசையில் இல்லாமல், சமையலறையின் தரையில் அமர்ந்திருந்தான். “ஏன் இங்க உக்காந்து இருக்கீங்க?” என்று இரு புருவங்களை உயர்த்தி கேட்டாள். 

“ரெண்டு வருஷமா இப்படிதானே சாப்பிட்டேன். உங்கூட கொஞ்சம் பேசணும், அங்க உக்காந்தா எல்லாரும் இருப்பாங்க, பேச முடியாது.” என்றுதும் அவனுடன் தரையில் அமர்ந்து பரிமாரினாள்.

“நீ சாப்பிட்டியா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்க, “பசிக்கல,  அப்பறமா சாப்பிடுறேன்.” என்று விழிகளை தாழ்த்தியவாறு கூறினாள். 

விகுஷ்கி சாதத்தை பிசைந்து முதல் கைப்பிடியை அவள் வாய் அருகே எடுத்துச் செல்ல, அன்னார்ந்து பார்த்த மீத்யுகா, “எனக்கு பசிக்கல நீங்க சாப்பிடுங்க.” 

“நான் ஊட்டுறது புடிக்கலையா, என்னைய புடிக்கலையா?” அவன் வெளிப்படையாக கேட்க, மீத்யுகா எதை கூறுவது, எப்படி கூறுவது என்று தெரியாமல் சிக்கித்தவித்தாள். 

“எனக்கு சாப்ட புடிக்கல, இன்னைக்கி ஊட்டி விடுவீங்க. நாளைக்கி ஊட்டி விடுவீங்க. நாளான்னைக்கு ஏதாவது கேஸ் வரும். வாதாட போவீங்க. தண்டனை வாங்கிக் குடுப்பீங்க. குற்றவாளி தப்பிச்சிட்டா, அவன தேடிக்கண்டு புடிச்சு நீங்களே கொலை பண்ணுவீங்க, அப்பறம்!  மறுபடியும் ரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை அனுபவிச்சிட்டு வருவீங்க. இந்த வாழ்க்கை எனக்கு இனி வேணாம். 

மத்தவங்களுக்காக இவ்வளவு தூரம் யோசிக்கிறீங்க. என்னையும் பாப்பாவையும் யோசிச்சு பார்த்தீங்களா? இந்த ரெண்டு வருஷமா எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்கு மட்டுதான் தெரியும்.” என்று கூறிய மீத்யுகாவின் விழிகள் விசனத்தில் வீழ்ந்து விழிநீரை சிந்த ஆரம்பித்தது. 

மீத்யுகாவின் கையை ஆறுதலாக பற்றினான். “நீ சொல்றது எனக்கு புரியுது. ஆனா அந்த சின்ன பொண்ணோட வாழ்க்கைய யோசிச்சியா? அநியாயமா உயிர விட்டுட்டா! அந்த இடத்துல சஷ்டிய, இல்ல நம்ம பாப்பாவயோ உன்னால நெனைச்சி பார்க்க முடியுமா சொல்லு? 

நான் ஜெயிலுக்கு போகாம பணம் கட்டிருப்பேன். பணம் எனக்கு பெரிய விசயம் இல்ல. லாயர் நானே தப்பு பண்ணிட்டு பணத்தை கட்டி வெளிய வந்தா, பெரிய பெரிய குற்றவாளியெல்லாம் ஜெயில்ல இருக்க மாட்டாங்க. வெளியதான் இருப்பாங்க. அதுமட்டுமில்ல, நான் உனக்கு பண்ண பாவத்துக்கு கொஞ்சம் அனுபவிக்கணும்ன்னு நெனைச்சேன்.  

இதுக்கு அப்புறம் உன்ன எந்த விதத்துலயும் கஷ்டப்படுத்த மாட்டேன். ரெண்டு வருஷம் வாழாத வாழ்க்கைய இதுக்கு அப்புறம் வாழலாம். உன்னையும் பாப்பாவையும் விட்டு எங்கயும் போகமாட்டேன். உங்கிட்ட கேக்காம தனியா எந்த முடிவயும் எடுக்க மாட்டேன். ப்ராமிஸ்!” என்று விகுஷ்கி மனம் உருகக் கூறினான். 

“உங்க மேல முழுசா நம்பிக்க வரல.  எதையும் சொல்லாதீங்க செஞ்சிக்காட்டுங்க, நம்பிக்கை வருதான்னு பார்க்கலாம்.” 

“ஓகே, நீ இப்போ ஆ காமி” என்று தன்னவளுக்கு உணவை புகட்டினான். மீத்யுகாவால் மறுக்க முடியவில்லை அவனுடைய அன்பின் வெளிக்காட்டலை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். 

“மிஸ் யூ” என்று விகுஷ்கி, மீத்யுகாவிற்கு கூற, “ஃபர்ஸ்ட் எப்படி லவ் பண்ணணும்ன்னு கத்துக்கோங்க.” என்று தீவிரமாக தன்மையான குரலில் கூறினாள் மீத்யுகா.

அடுத்த அடுத்த நாட்களில் விகுஷ்கியும் மீத்யுகாவும் தனியே பேசும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. உறங்கும் வேலையில் மீத்யுகா களைப்பில் வருவதனால் விகுஷ்கி தொந்தரவு செய்வதில்லை. விகுஷ்கியும் சஷ்டியின் திருமண வேலைகளில் மூழ்கி சற்று அலுப்பை உணர்ந்திருந்தான்.  மெத்தையின் நடுவில் சகஸ்ரீ உறங்க, இருவரும் குழந்தையை தழுவிக்கொண்டு உறங்குவர். 

சஷ்டியின் முதல் காதல் கைகூடவில்லை என்றாலும், வஜ்ரன், சஷ்டியை புரிந்து கொண்ட பின் இருவரும் திருமண பந்தத்தில்  இணைந்து கொண்டனர். 

சஷ்டியின் ஆசைப்படி விகுஷ்கி வந்த பின்னரே திருமணம் செய்தாக வேண்டுமென்று ஒற்றை காலில் பிடிவாதம் பிடித்திருந்தாள். 

அதே போல் சஷ்டியின் கழுத்தில் வஜ்ரன் மங்கள நாணை ஏற்றிய பின்னர் முதன் முதலில் விகுஷ்கி, மீத்யுகாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டாள். 

விகுஷ்கிக்கு, மீத்யுகாவை எண்ணி பெருமிதமாய் இருந்தது. அவன் செய்த குற்றத்தை பொருட்படுத்தாமல் அவனுடைய தங்கையின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தமையை நினைத்து உவகை அமிழ்ந்தான். 

இளம் தம்பதியருக்கான இரவு ஏற்பாடுகளை விகுஷ்கி தயார் செய்திருந்தான். வஜ்ரன் உள்ளே நுழைய, வஜ்ரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வெளியேறினான். 

வஜ்ரன், நிலவின் விருந்துக்காக காத்திருந்தான். சஷ்டியின் வருகை, வஜ்ரனின் விழி மடல் இமைக்க மறந்த நொடியானது. இருவரும் பால் அருந்திவிட்டு, திருமணத்திற்கு முன்ன நடந்ததை பேசிக்கொண்டிருந்தனர். நேரம் சென்றது தெரியவில்லை. “ஏய் அம்முகுட்டி மணி ஒண்ணாச்சு, லைட்ட அணைக்கட்டா?” என்று வஜ்ரன் வினவ, சஷ்டி வெட்கத்தில், “ச்சீ போங்க வஜ்ரன்!” என்று சஷ்டியின் பெண்மை சிணுங்கிக்கொண்டது. 

“ஏய் நான் ரூம் லைட்ட அணைக்கட்டானு கேட்டேன்.” என்று வஜ்ரன் சஷ்டியை கிண்டலடித்து அறையின் ஒளியை அணைத்து அவர்களுடைய வாழ்க்கை ஒளியை ஏற்றினான். 

இங்கு விகுஷ்கியும் மீத்யுகாவும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தனர். இவர்களின் இல்லறம் எப்போது சிறக்கும்? 

***

உணர்வுகள் தொடரும்…